• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என் மன்னவன் நீ தானோ - 30 (இறுதி அத்தியாயம்)

STN - 78

New member
Staff member
என் மன்னவன் நீ தானோ

அத்தியாயம் - 30 (இறுதி அத்தியாயம்)



அகிலன் வந்ததும் எல்லோருமாகச் சேர்ந்து சாப்பிட்டனர். சாப்பிட்டு முடிந்ததும் சௌமியுடன் சேர்ந்து எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு “நான் தூங்கப்போறன்… நீங்களும் தூங்குங்க…” என்ற பத்மா தனது அறைக்கு சென்றுவிட்டார்.

“சௌமி..வா..” என்ற அகிலனும் அவளை அழைத்துக் கொண்டு தனது அறைக்குச் சென்றான். அறைக்குள் வந்ததும் சௌமி குளியலறைக்கு சென்று, உடை மாற்றி வரவும் அகிலன் குளியலறைக்குச் சென்றான். அவன் வருவதற்குள் அவசரஅவசரமாக கட்டிலின் ஓர் ஓரத்தில் உடலை குறுக்கிக் கொண்டு படுத்தவள் தூங்குவது போல பாவனை காட்டினாள்.



குளியலறையில் இருந்து வெளியே வந்தவன் அவள் படுத்துவிட்தைப் பார்த்துக்கொண்டே அறையை பூட்டி, விளக்கை அணைத்து, இரவு விளக்கை ஒளிரவிட்டு வந்து அவளருகில் படுத்தவன் அவளின் மீது கையைப் போட, கோபத்துடன் அவனின் கையை படுவேகமாக தட்டிவிட்டாள் சௌமி.



அவளின் செய்கையை எண்ணி சிரித்தவாறு, அவளை இறுக அணைத்து தன் பக்கம் திருப்பினான். அவள், அவன் பக்கம் திரும்ப விரும்பாமல் திமிறினாள். அவளின் ஒரு வித வேகத்தையும் கோபத்தையும் உணர்ந்தவன் “சௌமி…?” என்றான் கேள்வியாக.



“கையை எடுங்க…” என்றாள் குரலை உயர்த்தி.



“ஸ்… மெல்ல…, அம்மா நித்திரை சௌமி” என்றான் மெதுவாக.



அவள் மீண்டும் அவனின் கையை அகற்ற முயல, அவனின் உல்லாசமான மனநிலையை அவள் குழப்புகிறாள் என்ற கடுப்புடன் அவளை விட்டு விலகியவன் “என்ன சௌமி?” எனக் கேட்டான்.



“.......”



சற்று நேரம் அவளின் முதுகை வெறித்துப் பார்த்தவன், கட்டிலில் இருந்து எழுந்து தலையணையை முதுகில் வைத்து கட்டிலில் வசதியாக சாய்ந்து அமர்ந்து “சௌமி என்னை பார்..” என்றான் அதிகாரமாக.



“.....”



அவள் அசையாமல் படுத்திருக்க, அவன், அவளைத் தன்னை நோக்கித் திருப்பினான். “என்னை விடுங்கோ எண்டு சொன்னனான்...” என கடிந்தவளுக்கு, அவனது வலிமையான பிடியில் வலித்தது.



“என்ன பிரச்சினை உனக்கு..” என சினந்தான்.



“நீங்கள் தான் பிரச்சனை…” என்றாள் அவளும் அதே கோபத்துடன்.



“நானா..? நான் என்ன செய்தனான்..?” என கேட்டான்.



“என்ன செய்யேல்ல…?” என்றாள் கொதிப்புடன்.



“எனக்கு விளங்கேல்லை……” என்றான் ஆயாசத்துடன்.



“........” அமைதியாக இருந்தாள்.



“சௌமி…?” என்றவனுக்கு மிகுந்த எரிச்சல்.



அவனின் குரலில் இருந்த எரிச்சலை கண்டவள் “நான் ஆண்டியோட தூங்கப்போறன்…” என்றவாறு கட்டிலில் இருந்து எழும்பினாள்.



“சௌமி..” என அதட்டியபடி, எழும்பிய அவளைத் தூக்கி தனக்கு அருகில் இருத்தி, அவளின் தோளில் தனது கையை போட்டு இறுக்கி அணைத்தான்.



அவள், அவனிடம் இருந்து விடுபட முயன்றபடி “கையை எடுங்க…” என்றாள் வெறுப்புடன்.



“உனக்கு பிடிக்காத எதுவும் நடக்காது சௌமி… கொஞ்ச நேரம் அமைதியா இரு..” எனக்கடிந்தவன், “உனக்கும் பிடிச்சு தான் எல்லாம் நடந்தது…, இப்ப என்ன பிகு பண்ணுறாய்…?” என்று காரத்துடன் கேட்டான்.



அவனின் அந்த கேள்வியில், மீண்டும் இதை கதைக்கிறான் என்று நினைக்கையில் நெஞ்சம் துடிக்க, அவமானத்திலும் ஆத்திரத்திலும் உடல் நடுங்க கண்களில் இருந்து நீர் வடிந்தது. அவளின் கண்ணீரை பார்த்து அதிர்ந்தவன், அவளுக்குப் பிடிக்காததை கதைத்து விட்டதை உணர்ந்து, நாக்கை கடித்தான். அவளின் அந்த வேதனை அவனுக்கும் உண்மையில் மிகுந்த கஷ்டத்தை அளித்தது “சொறி செல்லம்…” என்றவன், “உன்னை வருத்த வேண்டும் எண்டு நான் எதையும் கதைக்கேல்லம்மா…, நீ கேட்டதுக்கு பதில் சொன்னனான்…, நீயும் சினந்ததில எனக்கும் எரிச்சல் வந்திட்டுது..” என தன் நிலையை விளக்கி அவளின் கண்ணீரை துடைத்து, தலையில் ஆதுரத்துடன் முத்தமிட்டான்.



முத்தம் தொடர்ந்தது… முத்தத்தின் மூலம் அவன், அவளின் கண்ணீரை கட்டுப்படுத்தினான்!



அவன் மேலும் முன்னேற அவனிடமிருந்து விலகி “எனக்கு இப்ப பிடிக்கேல்ல…, என்னை விடுங்க” என்றாள் உள்ளம் குமுற.



“ஏன் குட்டி...” எனக் கரகரத்த குரலில் கேட்டவன் அவனாக இல்லை.



“தெரியேல்ல…” என்றாள் அவள் வெகு அலட்சியத்துடன்.



அந்த அலட்சியத்தில் அவள் மீதான மயக்கத்தில் இருந்து மீண்டவன், “சௌமி… எனக்கு சரியான காரணம் வேணும்…” என்றான் காட்டத்துடன்.



“உங்கட மனதில இவ்வளவு குறைகளையும் வச்சிருக்கிறீங்க எண்டு எனக்கு இப்பத்தான் தெரிஞ்சுது” என்றாள்.



“ஓகே… அதனால…?” என்றான் கேள்வியாக.



“என்ன அதனால? அது தான் என்னை விடுங்க எண்டுறன்…” என்றாள் ரோஷத்துடன்.



“ஓ…., என்ன குறைகள் இருக்கு அதையும் சொல்லு கேட்பம்…” என்றான் அவன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு.



“நீங்கள் கேக்குறதுக்கு நான் இஞ்ச என்ன கதையா சொல்லுறன்…?” என்றாள் ஒரு வித வேகத்துடன்.



“சௌமி..” என அதட்டினான்.



“இப்ப கொஞ்சம் முதல் உங்கட அம்மாட்ட வாசிச்சீங்களே குறை பட்டியல்…?” என்றாள் நக்கலாக.



அதை கேட்டவன் “நான் என்ன நடந்தது எண்டு தான் சொன்னனான்…, அதுவும் அம்மா திரும்ப திரும்ப அடிச்சிட்டன் எண்டு சொன்னதால தான் நானும் கதைக்க வேண்டி வந்தது.., நீ இஞ்ச வந்து அம்மாவுக்கு எல்லாத்தையும் சொன்னதால தான்…” என்றான்.



“அப்ப எல்லாத்துக்கும் நான்தான் காரணம் என்ன..?” எனக் கேட்டாள் துயரத்துடன்.



“சௌமி நான் அந்த அர்த்தத்துல சொல்லேல்லம்மா…” என்றான் அவசரமாக.



“அப்ப நான் என்ன அர்த்தத்தை எடுக்கிறது..” என கேட்டவளின் குரலில் கோபம் இருந்தது.



“என்ர சௌமி குட்டிக்கு கோபம் நல்லா வருகுது…” என அவளை இறுக அணைத்து முன் நெற்றியில் முத்தமிட்டான்.



“என்னை விடுங்க அகில்…” என அவள், அவனிடம் இருந்து விலகினாள்.



“சரி சரி” என்று கைகளை தளர்த்திய அவனுக்கு, அவளின் மெல்லிய கோபமும், அதை வெளிப்படுத்திய செயல்களும் சுவாரஸ்யத்தை கொடுத்தது.



அதை ரசித்தவாறு “சௌமி…” என அழைத்து “போன சனிக்கிழமை நீ அங்க இருந்து கிளம்பிய அண்டைக்கும் அடுத்த நாளும் நான் பல தடவை போன் பண்ணியும் நீ ஆன்ஸர் பண்ணேல்ல…, நான் மெசேஜ் பண்ணியும் நீ ரிப்ளை பண்ண இல்ல… ‘வந்து சேர்ந்துவிட்டேன்’ எண்டு, நீ தான் எனக்கு தகவல் சொல்லி இருக்கோணும்…., நீ அதையும் செய்யேல்ல…” என்றான் குற்றம் சாட்டும் தொனியில்.



“பஸில மற்றாக்களுக்கு டிஸ்டர்பன்ஸ் இருக்கக்கூடாது எண்டதுக்காக போனை சைலண்ட் மோடுல போட்டு காண்ட் பாக்கில வைச்சிருந்தனான்…, இஞ்ச வந்தப்பிறகு அம்மாப்பா கேட்கிற கேள்விகளை சமாளிச்சு பதில் சொல்லணும் எண்ட சிந்தனை தான் இருந்தது, அதால போனைப்பார்கேல்ல…” என்றாள் அவள்.



“கோவித்துக்கொண்டு தனியா கிளம்பி போனனீ போக்குவரத்தில ஒரு பிரச்சனையும் இல்லாமல் போய் சேர வேணும் எண்டு நானும் யோசிப்பன் எண்டு நீ ஏன் நினைக்கல்ல…?” கேட்டான் அவன்.



“......”



“நீ கிளம்பின அண்டைக்கு, நீ வெளிக்கிடும் போது நான் தடுத்தும் நீ என்ர சொல் கேளாமல் போறாய் எண்டது என்னை நீ அவமதிச்சது போல இருந்தது, அது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது…, அதுல உன்னை பஸ் ஏத்தி விட வேணும் எண்டு நான் யோசிக்கேல்ல…, பிறகு கொஞ்ச நேரத்துல தான் நீ தனியா போறாய்.. எப்பிடி போவாய்.. எண்ட நினைப்பு வந்து நான் காரை எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்த போது அங்க பஸ் இல்லை.. அது வெளிக்கிட்டுது. ‘நீ பஸ்ல ஏறிட்டியா…? உன்ர ப்ரண்ட் வந்தவாவா…?’ என்று அறிய நான் பல தடவை போன் பண்ணினனான்...” என்றவன் “ஒரு பிழையை திரும்ப திரும்ப செய்யுறாய்...” என கூறியவனுக்கு இப்போதும் அன்றைய படபடப்பின் தாக்கம் குறையவில்லை.



“சொறி அகில்…” என்ற அவளுக்கு அவனின் மனநிலை புரிந்தது.



“இனி ஒரு தரம் என்ர போனுக்கு நீ ஆன்ஸர் பண்ணேல்ல நடக்குறதே வேற…” என்றான் மிகுந்த கண்டிப்புடன்.



“.........” அவள் அமைதியாக இருந்தாள்.



“அண்டைக்கு நான் அவ்வளவு சொல்லியும் கேளாமல் ஏன் வெளிக்கிட்டனீ…?” எனக் கோபத்துடன் விசாரித்தான்.



“.........” அவனது குரலிலும் உடல் மொழியிலும் தெரிந்த கோபத்தில் அவள் முகம் கலங்கி, உடல் அதிர்ந்தது.



அதில் அவன் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு “சொல்லு சௌமி…” என்றான்.



அவன், அவளின் பதிலுக்கு காத்திருப்பதை கண்டவள் “உங்கட அடாவடித்தனங்கள் எனக்குப்படிக்கேல்ல… உங்களுக்கு இப்பிடி கடும் கோபம் வரும் எண்டு நான் நினைக்கல்ல…, உண்மையிலே அது எனக்குப் பயமா இருந்தது…., அதோட நீங்கள் உங்கட அம்மான்ர வற்புறுத்தலுக்காக என்னை கட்டினாலும் என்னையும் உங்களுக்கு பிடிக்கும் எண்டு நான் நினைச்சனான்… பிறகு ஒரு சில சந்தர்ப்பத்துல உங்களுக்கு என்னை பிடிக்கேல்ல எண்டு எனக்கு விளங்கிச்சு… அதால தான் என்னை ஒதுக்கி வச்சிருக்கிறீங்க எண்டு நினைச்சன்…, அவ்வளவு நாளும் பாராமுகமாக இருந்த நீங்க, அண்டைக்கு…. அதுவும்… அது… என்னை சமாதானப் படுத்துவதற்கோ அல்லது இரக்கப்பட்டோ நடந்த மாதிரி இருந்தது…, அது தொடர்ந்தால் என்னாலும் உங்களை மறுக்க முடியாது… அந்த வாழ்க்கை எனக்கு பிடிக்க இல்லை அதுதான்… ” என்றாள் கலங்கிய குரலில்.



“ம்…?” என்றான் சிந்தனையுடன்.



“உயிரை உருக்கும் காதலுடன் மனம் ஒருமித்து வாழ வேணும் எண்டு தான் நான் விரும்பினனான்.. ஆனால் அது இருக்க இல்லை… அது எனக்கு சரியான ஏமாற்றமாயிருந்தது…” என்றவள், “எனக்கு அம்மா அப்பாவையும் பாக்கணும் போல இருந்தது. அது தான் கிளம்பி வந்தனான்” என்றாள் மெதுவாக.



“எனக்கு கொஞ்சம் கோபத்தை கண்ட்ரோல் பண்ண தெரியேல்ல…, சொறி குட்டி…, நான் இனி கோபத்தை குறைக்க ட்ரை பண்ணுறன்” என்றவன், “அம்மான்ர விருப்பத்துக்காக நான் உன்னை கட்டேல்ல சௌமி…. எனக்கும் உன்னை பிடித்ததால தான் கட்டினனான் .” என அவளைப் பார்த்தான். அவளும் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து விழி அகல அவனைப்பார்த்தாள். தனது இதழ்கள் மூலம் அவளின் இதழ்களுக்கு தனது நேசத்தை கடத்திவிட்டு “எனக்கு விருப்பம் இல்லை எண்டு அம்மாட்ட நான் சொல்லி இருந்தால், அம்மா என்னை கட்டாயப்படுத்தி இருக்க மாட்டா. அம்மாக்கும் என்ர மனம் தெரிஞ்சு தான் இதை முன் எடுத்தவா” என்று அவளைப் பார்த்தவன் “மழை அன்று, பல வருடங்களுக்குப் பிறகு, உன்னை பார்த்த போது, சிறு குழந்தையாக இருந்தவள், இவ்வளவு உயரமாக வளர்ந்து மனதை மயக்கும் அழகுடன் இருந்ததில் எனக்கு வியப்பு தான் ஏற்பட்டது. பின்னரும் அந்த குழந்தை பருவமும் அந்த நேரத்தில் செய்த குறும்புகளும் தான் ஞாபகத்தில இருந்தது. அதாலையும் வேற ஒரு யோசனையில் இருந்ததாலும் தான் அண்டைக்கு நீ வீட்டை வந்த போது, உன்னை சட்டென ஞாபகத்துக்கு வர இல்லை. இருந்தாலும் உன்ர அழகு என்னை கவர்ந்தது. அழகான பொருட்களை ரசிப்பது போல உன்னையும் ரசிச்சு இருக்கிறன். உன்னோட பழகும் போதும் கதைக்கும் போது மனசுல ஒரு உற்சாகம் ஏற்படும்…, எவ்வளவு ரயர்ட்டாக இருந்தாலும் உன்னை கண்டால் ஒரு எனர்ஜி ஏற்படும்…, ஆயிரம் கதைகள் சொல்லும் உன்ர கண்களையும் மனதை கொள்ளை கொள்ளும் சிரிப்பையும் பார்க்கிறதுக்கு என்ர கண்களுக்கு அவ்வளவு ஆசை சௌமி” என அவனை ஈர்த்த பல விஷயங்களை கூறி அவளின் விழிகளிலும் இதழ்களிலும் தனது இதழ்களை ஆழப் பதித்தான்.



அவன் கூறுபவற்றை பிரமிப்புடனும் உவகையுடனும் கேட்டுக் கொண்டிருந்தவள், அவனின் முத்தத்தில் உடல் நெகிழ அவன் மீது சாய்ந்தவள் அவனுக்கு தானும் பதில் முத்தம் கொடுத்து தனது மகிழ்வை வெளிப்படுத்தினாள்.



அவள் கொடுத்த முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தவன் “உன்ர கெட்டித்தனம், திறமை என்பவற்றைப் பார்த்தும் நான் வியந்திருக்கிறன்… உன்ர குணமும் என்னை கவர்ந்திருக்கிறது… உன்ர நட்பும் எனக்கு பிடித்திருந்தது. உன்னில எனக்கு அன்பு இருந்தது… ஆனால் அதை நான் காதல் என உணராதது மட்டுமல்ல, அதை நான் விரும்பவும் இல்லை. நீ உன்ர விருப்பத்தை சொன்ன போது, இதால இரண்டு குடும்பத்துக்கும் இடையில் மனகசப்பு ஏற்பட்டு விடுமோ என்ற தயக்கம் இருந்தது… நீண்ட காலமாக சகோதரிகள் போல பழகிய அம்மாக்கும் ஆண்டிக்கும் இடையில் மனவேற்றுமை உருவாகினால் அது எல்லோருக்கும் கஷ்டத்தை கொடுக்கும். அதோடு என்னை ஒருத்தர் மறுக்கும் நிலையில் என்னை நிற்பாட்டுறதுல எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை சௌமி… இதால தான் நான் மறுத்தனான், உன்னை பிடிக்காமல் அல்ல…” என்றான்.



பெரு மகிழ்ச்சியுடன் அவனின் நெஞ்சில் சாய்ந்திருந்தவள் “ஏன் நீங்கள் நெகட்டிவாக யோசிச்சனீங்க..?” எனக்கேட்டாள் கொஞ்சும் குரலில்.



“இது நெகட்டிவ் திங்கிங் எண்டு நான் நினைக்க இல்லை.. இந்த திருமணத்தால இரண்டு குடும்பமும் இன்னும் நெருக்கமாகா விட்டாலும் பரவாயில்லை.. இரண்டு குடும்பங்களுக்கும் இடையில விரிசல் உண்டாவதை நான் விரும்பேல்ல…” என அவளைப் பார்த்தான்.



“....” அவன் நெஞ்சில் சாய்ந்திருந்து அவன் கூறுபவற்றை கேட்பதில் அவளுக்கு அத்தனை இன்பம்!



“நான் உன்னை தவிர்க்க தொடங்கிய பிறகு, எனக்குமே உன்னை பார்க்காமல், உன்னோட கதைக்காமல் இருக்க கஷ்டமாகத்தான் இருந்தது. இதால நீ படிப்பை விட்டுவிடாமல் அதில கான்சன்ட்ரேட் பண்ண வேணும் எண்டதால தான் நான் உன்னை தவிர்த்தனான்” என கூறியவன், “நான் சொல்வதை கேட்காததும், மற்றவர்களைப் பற்றி யோசிக்காமல் உன்ர விருப்பத்தை மட்டுமே நினைச்சதாலும் எனக்கு உன்னில கடும் கோபம் ஏற்பட்டது. உன்ர பிடிவாதத்தால் வெறுப்புதான் ஏற்பட்டது, இவ்வளவு வீம்பு உனக்கு இருக்கக் கூடாது எண்டு நினைச்சு தான், ஒதுங்கி இருந்தனான். ஆனாலும் என்னால கனநாள் அப்படி இருக்க முடியேல்ல சௌமி…” என தான் பட்ட அவஸ்தைகளை கூறியவனின் கரங்கள் அவளை வருடியது. அதைக்கேட்ட அவள் வெட்கி முகம் சிவந்தாள்.



“நான் உன்ர வீட்டை வந்த முதல் நாள் உன்ர அம்மாப்பா என்னை ஒரு மரியாதைக்கு தன்னும் ‘வா’ எண்டு சொல்லேல்ல.. என்னோட கதைக்கேல்ல…, அவை சந்தோஷமாக இருக்க இல்லை…, என்னில் ஒரு வித கோபமாகத்தான் இருந்தவை…, பிறகு அவைக்கு என்னைப் பற்றி விளங்கி இருக்கும்…” என்றான் கசந்த முறுவலுடன்.



அவனின் வேதனை புரிந்தவள் “சொறி அகில்…” எனக்கூறி அவனின் நெஞ்சில் தனது இதழை ஆழப்பதித்தாள்.



அவளின் அந்த முத்தம், தான் அன்று அடைந்த அவமதிப்பை ஒன்றும் இல்லாமல் செய்வது போல் இருக்க “எனக்கு அவையின்ர நிலை விளங்கும்.. நான் அவையளை குறை சொல்லேல்ல…, இதால தான் நான் மறுத்தனான் எண்டு தான் சொல்லுறன்…” என்றான் அகிலன்.



“......” அவள் மனம் நெகிழ்ந்திருந்தது.



“அண்டைக்கு நடந்தது.. உன்னில இரக்கப்பட்டோ அல்லது பரிதாபப்பட்டோ இல்லை…, நீ சாப்பிட்டியா, தூங்கினியா, என்ன செய்றாய் எண்டு நான் உன்னை எப்பவும் கவனித்து கொண்டு இருக்கிறனான், அண்டைக்கு நீ அழுது கொண்டு சாப்பிடாமல் இருக்க, வழமை போல என்னால உன்னிடம் ஒதுக்கம் காண்பிக்க ஏலாது, அதால உன்னட்டை நெருங்கி வந்தனான்.. விலகி இருந்த போது என்ர உணர்வுகளை கட்டுப்படுத்துற என்னால, நெருங்கி இருந்த போது கட்டுப்படுத்த ஏலாமல் இருந்தது சௌமி.. அண்டைக்கு.. மிக மிக ஆசைப்பட்டு இஷ்டப்பட்டு தான் எல்லாம் நடந்தது” என கண் சிமிட்டியவனின் புன்சிரிப்பில் மயங்கினாள் அவள்.



கூச்சத்துடன் “ம்…” என்றவளின் மனம் உருகி கரைந்து போயிருந்தது.



“என்ர மனம் எப்பவோ உன்ர காலடியில் விழுந்திட்டுது.., நீ உன்ர விருப்பத்தை திரும்ப திரும்ப சொன்ன பிறகு, என்னால உன்னை வெறும் ப்ரண்டா பார்க்க முடியேல்ல.. மனதுக்கு மிக மிக நெருக்கமானவளாகத்தான் உன்னை நினைச்சனான்… ஆனால் பல காரணங்களால் அதை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை.. உன்னை நினைச்சாலே மனதிலும் உடலிலும் இனிமையான உணர்வுகள் பரவும் சௌமி.. என்ர காதலை உனக்கு சொல்லி புரியவைக்க எனக்குத் தெரியாது… எனது செயல்களினால் அதை நீ உணர்ந்து கொள்வாய்” என கூறி அவளை மிகுந்த நேசத்துடன் இறுக அணைத்தான்.



“என்ர அகி…” என்று அவள் கடலளவு காதலுடன் அவனுக்குள் புதைந்தாள்.



அவனின் வலிமைமிக்க கரங்களுக்குள் அடங்கிய சௌமி எதிர்பார்த்தது போல் அவளின் அகிலனுக்கும் அவள் மீது அளவில்லா அன்பு இருப்பதை அறிந்ததும் அவளுக்கு மிகுந்த ஆனந்தம்!



என்றென்றும் எல்லையில்லாத காதலுடன் அவர்களின் இல்லறம் மிகுந்த சிறப்புடன் அமையட்டும்!!



முற்றும்.
 
Last edited:
Top Bottom