• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு காதல் கனா காண்போம் - 11

STN - 91

New member
“பூட்டி கிடந்த மனங்கள் திறந்து, கூக்குரலிடும் ஓசை கேட்குதடி கண்ணம்மா.

மையில் பிறந்த தீப்பொறி பற்ற வைத்த கங்கு பற்றி எரியுதடி.

நேசச் செடியில் பூத்த மொட்டு மலரும் நாள் தொலைவில்லை.

கண்ட கனா கை சேரும். கனாக்கள் காணும் இமைகளை விதி சேர்க்கும்.” என்று இறுதியாக அவள் எழுதிய வார இதழில் வெளி வந்த கட்டுரைக்கு பதில் கவிதையாக இந்த கவிதை பதிப்பிக்கப்பட்டிருந்தது.

அதை வாசித்ததுமே யாஸ்மின் புரிந்து கொண்டாள், அது தன்னவன் தனக்காய் தூது அனுப்பி இருக்கும் செய்தி என்று.

‘அப்படியெனில் தன்னவன் கைகளுக்கு தன் எழுத்துக்கள் சென்று சேர்ந்து விட்டதா?’ என்று துள்ளி குதித்த பெண் மனம் மீண்டும் மீண்டும் அந்த கவிதைகளிலேயே விழுந்து மூழ்கியது.

எங்கோ ஒரு மூலையில் கடல் கடந்து தன்னவன், தனக்காக அனுப்பி இருக்கும் செய்தி, யாஸ்மினின் பாலை வன மனதிற்கு தண்ணீரை வாரி இறைத்தது.

அவன் செய்திக்கு பதில் செய்தியாய்,

“இருளில் ஏங்கும் இதயங்கள் விடியலை காணும் நாள் தான் எப்போதோ…” என்று தன் அடுத்த கட்டுரையின் கீழ் பகுதியில் குறிப்பிட்டு எழுதி இருந்தாள்.

அதற்கு பதிலாய் இளங்கோவன் எழுதி அனுப்ப, என்று அவர்கள் செய்தி பரிமாற்றங்கள் அந்த வார இதழில் தொடர்ந்தது.

அன்று தொட்டு யாஸ்மின் இளங்கோவன் இருவரது காதல் மொழிகளும் யாருக்கும் புரியாது கட்டுரைகளிலும் பதில் கவிதைகளிலும் தான் உயிர் பெற்றது.

ஒவ்வொரு வார ஞாயிற்றுக்கிழமையும் வெளிவரும் வார இதழில், தன்னவள் தனக்காக அனுப்பும் செய்தியும் நம்பிக்கையும், இங்கு காளை அவனுக்கு யானை பலம் கொடுக்கும் என்றால் பதிலுக்கு இளங்கோவன் எழுதும் கவிதை அங்கு அவளின் பேனா மெயின் வீரியத்தை மேலும் சுண்டி எழுப்பும்.

இப்படி இவர்கள் காதலும் தொடர, ஆங்கிலேயர்களின் கொடிய அடக்குமுறைகளும் தலை தூக்கத் தொடங்கியது.

அவசர அவசரமாக கூட்டப்பட்ட ஆங்கிலேயர்களின் பொதுக்கூட்டத்தில், இப்படி நாடெங்கிலும் வெடிக்கும் போராட்டத்தை அடக்கும் வழிகள் கொடூரமாக நிர்ணயிக்கப்பட்டது.

“ஒவ்வொரு ஊர்லயும் இருக்க அதிகாரிகள் அந்தந்த மக்களை அடக்குவதற்கு எந்த மாதிரி வேணா உங்க அதிகாரத்தை பயன்படுத்துங்க.

ஆனா நிச்சயமா இந்தியாவை இவங்க கைல விட்டுட்டு நம்மளால போக முடியாது.

இந்த மண்ணுல இருக்க சக்தியும் இவங்க உழைப்புக்கு இருக்க சக்தியும் நம்ம நாட்டுக்கு கடத்திட்டு போறதுல தான் நம்ம மதிப்பும் மரியாதையும் இருக்கு.

அடிமைப்பட்டு கிடக்கிறவங்க திரும்ப அடிமை ஆக்குறது ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்ல.

ஆண்கள் பெண்கள்னு பாக்காதீங்க. நம்ம பாதியில குறுக்க வேற யாரா இருந்தாலும் அவங்க இருக்க இடம் தெரியாம அழிச்சிடுங்க.

இவங்கள வளர விட்டுகிட்டு போறது நமக்கு நல்லதில்லை. இந்த மக்கள் தனித்தனியே சிதறி கிடக்கிற வரைக்கும் தான் நமக்கு நல்லது. தனித்தனியா போராட்டங்கள் ஒன்னா சேர்ந்துட்டாங்கனா நம்ம திட்டம் மொத்த மண்ணோட போயிடும்.” என்று அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஒவ்வொரு பகுதியிலிருந்து வந்த அதிகாரிகளும் அவர்கள் ஊர்களில் நடக்கும் கலவரங்களையும் போராட்டங்களையும் விவரித்தனர்.

இதில் முதன்மை ஆங்கிலேய அதிகாரி பிரிட்டிஷ் ஜெனரல் ஆஃப் இந்தியா, டேவிட் விக்டரை குறிப்பிட்டு, “உங்க பொறுப்புல இருக்க பகுதியிலிருந்து தான் ஏதோ ஒரு வார இதழில் கட்டுரைகளா மக்களை தூண்டுற மாதிரி எழுதிக்கிட்டு இருக்காங்க.

நம்மளை எதிர்த்து நேரடியா நிக்கிற யாரா இருந்தாலும் நம்ம துப்பாக்கிய வச்சு அவங்கள சுட்டு தள்ளலாம்.

ஆனா கண்ணுக்கு தெரியாது எதிரிகளை வளர விடுறது ரொம்ப ஆபத்து.

இதுக்கு பின்னாடி யார் இருக்காங்கனு கண்டுபிடிச்சு மொத்தமா இந்த எழுத்து போராட்டத்தை நிறுத்த பாருங்க டேவிட்.” என்று கடுமையாக கூறினார்.

அத்தனை பேர் முன்னிலையில் தன் பகுதியில் இப்படி ஒரு போராட்டம் நடக்கிறது என்று முதன்மை அதிகாரி கூறியதில் டேவிட்டிற்கு சற்று அவமானமாக இருந்தது.

அவனுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் மிருகம் யாஸ்மினின் எழுத்துக்களால் தட்டி எழுப்பப்பட்டது.

இதுவரை டேவிட்டும் எத்தனையோ முறை இந்த கவிதைகளை எழுதுவது யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவே செய்துவிட்டான்.

ஆயினும் ஒரே இதழில் அல்லாமல் மாற்றி மாற்றி வேறு வேறு இதழ்களில் வெளிவரும், அவள் கட்டுரைகளால் அவ்வளவு எளிதில் அவளை அடையாளம் காண முடியவில்லை டேவிட்டால்.

யாரும் கூறாமலேயே மனிதர்களை கடித்து குதறும் இந்த மிருகம், தற்போது கடிவாளம் கட்டிவிட்டால்என்ன செய்யுமோ?

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஆங்கிலேயர்களின் அவசரக் கூட்டத்தின் விளைவாக ஆங்காங்கே போராடும் போராட்டங்கள் கலவரங்கள் யாவும் உடனடியாக வன்முறையை கையாண்டு முடக்கப்பட்டது.

பல்வேறு தேசிய தலைவர்களும் போராட்டக்காரர்களும் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெண்கள் என்றும் பார்க்காமல் சிறையில் அடைத்து வைத்து போராட்டத்தை தங்கள் கொண்டுவர முயன்றனர் ஆங்கிலேயர்கள்.

இதையெல்லாம் கேள்வியுற்ற ஒவ்வொரு விடுதலை இயக்கங்களும் வெகுண்டெழுந்து அவர்களுக்கு எதிராக நின்றது.

அதில் தமிழகத்தில் இருக்கும் தீரேந்திரனின் தலைமையிலான இளைஞர்கள் விடுதலை இயக்கமும் ஒன்று.

ஒரே போன்ற சீருடையில் வரிசையாக நிற்கவைக்கப்பட்டு இருந்த தங்கள் இயக்கத்தின் போராளிகளின் முன்பு கைகளை பின்னால் கட்டி திடமாக நின்றிருந்தான் தீரேந்திரன்.

“வருஷகணக்கா கேள்வி கேட்க பயந்து வீட்டுக்குள்ள முடங்கி கிடந்த மக்களை வீதிக்கு கொண்டு வந்து போராட வச்சோம்.

நம்ம மக்கள ஒன்னு சேர்க்கவே நமக்கு இவ்வளவு நாட்கள் ஆகியிருக்கு. ஒற்றுமையா ஒன்று கூடி ஒரே நாடு வேணும்னு போராட்டம் நடக்குது.

ஆனா இவங்கள எப்படி அடக்கணும்னு தெரியாது கோழைகள் அடக்கு முறைய கையில எடுத்திருக்காங்க.

யார் என்னனு பாக்காம போராட்டம் பண்ணாலே கைது பண்ணி சிறையில அடைக்கிறது, பொது வெளில கூட்டம் போடக்கூடாதுன்னு அடிச்சு விரட்டுறது, நம்ம கிராமப்புற கலைகள் எதுவும் நடக்க கூடாதுன்னு கட்டுப்பாடு விதிக்கிறது, சுதந்திரத்திற்கு ஆதரவா செயல்படுற செய்தி நிறுவனங்கள அளிக்கிறதுனு நம்மள அடக்குறாங்க.

ஆளுக்கு ஒரு மூலையில தனித்தனி இயக்கங்களா நம்ம பிரிஞ்சு இருந்து போராடினா, அவங்க கிட்ட இருக்க நவீன ஆயுதத்தையும் புத்தியையும் வச்சு நம்மள அடக்கி குனிய வச்சுருவாங்க.

இதே சிதறி கிடக்கிற இயக்கங்கள் ஒன்றாய் சேர்ந்து மாபெரும் சக்தியா அவங்கள எதிர்த்தா?...” என்று நிறுத்தினான் தீரேந்திரன்.

“இத்தனை நாள் நமக்குன்னு ஒரு கொள்கை நியாயம்னு தனி வழில போராடிகிட்டு இருந்த நம்ம இயக்கத்தை இன்னொரு இயக்கத்து கூட சேர்க்க போறேன்னு சொல்றீங்களா?

அப்ப இந்த இயக்கத்துக்காக நாங்க போட்ட உழைப்பு? உயிரை பணையம வச்சு போராடின போராட்டம். இது எல்லாம் இன்னொரு இயக்கத்தோட இணைய தானா?” என்று அந்தக் கூட்டத்தினில் கோபமாக கேட்டிருந்தான் இளங்கோவன்.

அவனை கூர்மையாக பார்த்த தீரேந்திரன், “நம்ம நாட்டுல இந்த சுதந்திரப் போராட்டம் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு விதத்துல நடக்குது.

சிலர் எழுத்துக்கள் வழியா, சிலர் பாடல்கள் வழியா, சிலர் அகிம்சை வழியா, சிலர் வன்முறை வெளியான ஒவ்வொரு பக்கம் அவங்க அவங்களுக்கு தெரிஞ்ச வகையில முயற்சி பண்றாங்க.

இந்த நிலைமையில் நம்ம பண்ற போராட்டம் மட்டும் தான் சுதந்திரத்திற்கான போராட்டம் உன்னால சொல்ல முடியுமா?

முடியாது. அவங்க அவங்க கொள்கைப்படி அவங்கவங்க போராடுறாங்க.

ஒவ்வொரு வகைப் போராட்டத்திலும் இழப்புகள் இருக்கு, வழி இருக்கு மறைக்கப்பட்ட பல விஷயங்கள் இருக்கு.

நமக்கு பிடிச்சிருக்க இந்த வழியில நம்ம போராடுறோம். இப்ப நம்ம போராட்டத்தோட இறுதிக்கட்டத்தில இருக்கோம்.

இந்த நேரத்துல நம்ம நாட்டு மக்களோட ஒற்றுமை தான் கடைசி ஆயுதம்.

நம்மள பிரிச்சி வச்சிருக்க இந்த சாதி, மதம், கொள்கை, நம்பிக்கை, நல்லவன் கெட்டவன்னு அத்தனை தடைகளையும் உடைச்சு, ‘நம்ம எல்லாரும் இந்தியர்கள்’ அப்படிங்கிற ஒரே கோடுல நின்னா மட்டும் தான், நம்ம ஆசைப்படுற சுதந்திரம் முழுமையா நமக்கு கிடைக்கும்.

மொழிவாரியா, நிலவாரியா, சமய வாரியா பிரிஞ்சு இருக்க நம்ம அத்தனை இயக்கங்களும் ஒரே இயக்கமா மாறனும். ராணுவமா மாறனும். ஒரே படை. ஆங்கிலேயர்கள கப்பலேத்தி அவங்க நாட்டுக்கு அனுப்பி விடுற ஒரே கொள்கையில அத்தனை பேரும் செயல்படனும்.

வட இந்தியால உருவாகி இருக்க இந்த இந்திய ராணுவ இயக்கத்தில இருந்து நம்மள மாதிரி ஒவ்வொரு சின்ன சின்ன இயக்கத்துக்கும் அழைப்பு வந்திருக்கு.

வெளிநாட்டிலிருந்து வந்த நவீன ஆயுதங்கள் அந்த ராணுவத்துக்கு கையில இருக்கு.

அவங்க வச்சிருக்க அதே துப்பாக்கிய வெச்சு நம்மளும் திருப்பி சுட முடியும்.

நம்ம கொள்கைகள் ராணுவத்தோட கொள்கைகள் கிட்ட இருந்து வேறுபட்டு இருக்கலாம். ஆனா நம்ம எல்லாரோட ஒரே தீர்மானம் இந்தியாவோட சுதந்திரம். என் கூட வரவங்க வரலாம்.” என்று கூறினான்.

இந்த இயக்கத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு நாட்டின் அரசாங்கத்தை எதிர்க்க முடியாது என்று நிதர்சனம் இளங்கோவனுக்கும் புரிந்தது.

நவீன வகையான ஆயுதங்கள் நவீன யுத்த யுக்திகள் என்று அனைத்தும் இருக்கும் ராணுவத்துடன் சேர்வது தான் இந்த போராட்டத்தை வெற்றியடைய செய்யும் ஒரே வழி என்று தீரேந்திரன் உரைத்து சென்றதில் அங்கிருந்த அனைவருக்கும் அதுவே சரியானப்பட்டது.

அதேசமயம் தற்போது நடக்கும் இந்த அடக்கு முறையில் தன்னவளின் எழுத்துக்களால் அவளுக்கு ஏதேனும் நடந்து விடுமோ என்று காதல் கொண்ட மனம் அச்சப்படவும் மறக்கவில்லை.

ஒருவேளை அவன் அச்சம் விதியின் தாக்கத்தால் உண்மையாக நடந்திடவும் வாய்ப்பு இருக்கிறது.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

நெடுவயல்.

சொகுசு பங்களாவில் ஆங்கிலேய அரசாங்கத்தின் பொதுக்கூட்டம் முடிந்து வந்து அமர்ந்திருந்தான் டேவிட் விக்டர்.

தேயிலைகளை வைத்து நவீனமாக தயாரிக்கப்பட்ட சுருட்டை இழுத்து ஊதிக் கொண்டிருந்தவனின் அருகில் வந்து நின்றான் அவனின் உதவியாளன்.

அவனை கூர்மையாக பார்த்த டேவிட், தன்முன் மேசையில் வைக்கப்பட்டிருந்த செய்தித்தாள்களை எடுத்து அவன் முகத்திலேயே விட்டு எறிந்தான்.

“டேக் திஸ். ஐ வாண்ட் டு நோ ஹூ வாஸ் பிஹைண்டு திஸ் பிளடி வேர்ட்ஸ்.” என்று ‘இந்த இதழ்களில் வெளிவந்திருக்கும் கட்டுரைகளை எழுதியது யார்?’ என்று எனக்கு கண்டுபிடித்து சொல் என்று ஆணையிட்டான்.

வியர்வை படிய அவனை அச்சத்துடன் பார்த்த அவன் உதவியாளனோ, ஒரு இந்தியன்.

“சர். நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணினோம் ஆனால் இதெல்லாம் எழுதுறது யாரு அவங்களோட அடையாளம் என்னன்னு கண்டுபிடிக்க முடியல.” என்று அவனுக்கு புரியும் வகையில் ஆங்கிலத்தில் கூறினான்.

அவன் உயரமாக காலை வைத்திருந்த அந்த மரம் ஏசையை உதைத்து தள்ளிய டேவிட் விக்டர், வேகமாக எழுந்து வந்து அந்த உதவியாளனின் கழுத்தை இறுக்கி பிடித்தான்.

“இந்த எழுத்துகளால் தான் இன்னைக்கு நான் அசிங்கப்பட்டு வந்து இருக்கேன். நீ என்ன வேணா பண்ணிக்கோ ஆனா எனக்கு இதை எழுதினது யாருன்னு தெரிஞ்சே ஆகணும்.

ஒருவேளை கண்டுபிடிக்க முடியவில்லைனா உன் உடம்புல உயிர் இருக்காது.” என்று மிரட்டிய டேவிட், யாரை கொள்ளவும் அஞ்ச மாட்டான் என்று தெரியாதா அந்தவனுக்கும்.

டேவிட் இன் அந்த ரத்த சிவப்பான கண்களே மரண பயத்தை அவனுள் விதைத்து விட்டது.

எனில் யாஸ்மினின் நிலை?

-கனா 🤎



 
Top Bottom