இளங்கோவன் யாஸ்மின் வீட்டிற்கு சென்று அவளை பெண் கேட்டு சென்றதில் அவள் தாய்க்கும் தந்தைக்கும் அத்தனை கோபம்.
யாஸ்மின் தந்தை காதர் இளங்கோவனின் தந்தை அன்பழகனை சந்தித்து, அவர் மகன் தன்னிடம் வந்து பெண் கேட்டதை பற்றி கூறி பொதுவெளியில் சண்டையிட்டு சென்றிருந்தார்.
அதிலும் ‘தங்கள் சமயம் என்ன? எங்கள் சமயம் என்ன? எங்கனமும் இந்த புதிய உறவிற்கு நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.’ என்று அவர் கூறி சென்றிருந்தது அன்பழகனுக்கு அத்தனை அவமானமாக தோன்றியது.
வீட்டிற்கு விறு விறுவென்று வந்தவர், அங்கு தன் அறையில் அமர்ந்திருக்கும் மகனிடம் சென்று, அவன் தோளிலேயே ‘பலார் பலார்’ என்று அடித்தார்.
திடீரென கணவன் வந்து மகனே அடிக்கவும் ஒன்றும் புரியாத இளங்கோவனின் தாய் பாரிஜாதம், இருவருக்கும் இடையில் வந்து, “ஏங்க தோளுக்கு மேல வளர்ந்த பையன எதுக்கு இப்படி போட்டு அடிக்கிறீங்க?” என்று பரிந்து கொண்டு வந்தார்.
“எதுக்கு அடிக்கிறேனா?
உன் மகன் என்ன காரியம் பண்ணி வச்சிருக்கான் தெரியுமா?
என் கூட வேலை பாக்குற காதர் பொண்ண காதலிச்சு, அவங்க வீட்டுக்கு போய் பொண்ணு கேட்டு வந்திருக்கான்.
அந்த ஆளு என்ன ஊரு பாக்க நடுத்தெருவில வச்சு, என்ன பையன வளத்தி வச்சிருக்க? பொட்ட புள்ளைய பார்த்ததும் பல்ல இளிச்சுட்டு வந்து நிக்கிறானு நாக்க புடுங்குற மாதிரி கேட்கிறான்.
ஏன் டா உனக்கு காதலிக்க வேற பொண்ணா கிடைக்கல? நேத்து வரைக்கும் என்ன மரியாதையா பார்த்து பார்த்து பேசினவன், இன்னைக்கு கேவலமா காரி துப்பிட்டு போறான்.
என் பேர கெட்டு அழிக்கவே வந்து பொறந்து இருக்கான். இங்க பாரு இளங்கோ, ஒழுங்கு மரியாதையா நான் பாக்குற பொண்ண கட்டிக்கிட்டு குடும்ப நடத்துற வேலைய பாரு.
நாளைக்கே அந்த பொண்ணுக்கு கல்யாணம் நடக்கும் போது தேவை இல்லாம போய் பிரச்சனை பண்ணிக்கிட்டு நின்ன, ஊர்க்காரங்க வாய்க்கு நான் நாண்டுகிட்டு தான் சாகணும்.
காதல்னு அந்த காதர் பொண்ணு பின்னாடி சுத்துறதோ இல்ல போராட்டம்னு கிளம்பி போறதோனு ஏதாவது வேலை வச்சுக்கிட்ட, அப்புறம் எனக்கு நீ மகனும் இல்ல. உனக்கு நான் அப்பனும் இல்லை.” என்று உச்ச ஸ்தானத்தில் கத்திவிட்டு வெளியில் சென்றார்.
அவர் சென்றதும் கல்லாய் நின்றிருந்த மகனின் அருகில் சென்ற பாரிஜாதம், “டேய் அப்பா என்ன டா சொல்லிட்டு போறாரு? நீ அந்த பொண்ணு காதலிக்கிறாயா இளங்கோ?” என்று கேட்டார்.
கண்களை மூடி திறந்த இளங்கோவன், “ஆமா மா. யாஸ்மின் ரொம்ப நல்ல பொண்ணு. உங்களுக்கு நிச்சயமா அவள பிடிக்கும். நாங்க ரெண்டு பேரும் உயிருக்கு உயிரா காதலிக்கிறோம்.” என்றான்.
“இதெல்லாம் சரிப்பட்டு வரும்னு நினைக்கிறியா இளங்கோ? அவங்க சமூகத்திலும் சரி, நம்ம சமூகத்திலும் சரி உங்க உறவ அங்கீகரிக்க மாட்டாங்க.
முதல்ல அவங்க வீட்ல உன்ன மாப்பிள்ளையா ஏத்துக்குவாங்கன்னு நினைக்கிறியா? வாய்ப்பே இல்லை.
இப்ப கூட பொண்ணு மானமும் சேர்ந்து தான் போகுதுனு தெரிஞ்சும், நடு ரோட்டில வைச்சு உங்க அப்பா கிட்ட சண்டை போட்டுட்டு போயிருக்காங்க.
அதையும் மீறி அந்த பொண்ண நீ கூட்டிட்டு வந்தாலும், உங்க அப்பா என்ன பிள்ளையே இல்லைன்னு தலை முழுகிருவாரு.
இப்படி குடும்பம் ஊரு உறவுனு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்திட முடியுமா?
பத்து வருஷம் குழந்தை இல்லாம வரம் வாங்கி வேண்டி பெத்த பையன் டா நீ.
இப்படி தேவையில்லாத வழியில போய் ஏண்டா எங்க நிம்மதியை கெடுக்கிற?” என்று கேட்டபடி கண்ணீர் சிந்தினார் பாரிஜாதம்.
இத்தனை நடந்தும் இளங்கோவின் மூளைக்குள் அப்படி என்ன தான் ஓடிக்கொண்டிருக்கிறதோ.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மறுபடியும் அந்த சிறிய அறைக்குள் அடைப்பட்டு கிடந்த பாவை அவள், ‘யாரை நினைத்து அழ?
எதை நினைத்து வருந்த?’ என்று புரியாமலே நொந்து போய் கிடந்தாள்.
ஒருபுறம் இத்தனை ஆண்டுகளாய் பெற்று வளர்த்த பெற்றோர், தன் செயலில் அதீத கோபம் கொண்டு தன்னை இப்படி பூட்டி வைத்திருக்கின்றனர்.
மறுபுறம் அவன் பிடிவாதம் லட்சியம் அனைத்தையும் தனக்காக ஒதுக்கி வைத்து விட்டு வந்து, தன்னைப் பெண் கேட்டு அவமானப்பட்டு சென்ற தன்னவன்.
இருவரில் யார் பக்கம் நிற்பது என்று குழம்பி போய் அவள் நிற்கிறாள்.
அவள் தாய் பாத்திமா ஆத்திரத்தில் அவளை காய்ந்த மூங்கில் குச்சியை வைத்து அடித்து, உடல் முழுவதும் காயம் செய்து வைத்திருப்பதை கூட அவளால் உணர முடியவில்லை. எப்படி உணர முடியும்? மனதின் ரணம் அதை விட மேலாக அவளை கொன்று கொண்டிருந்தது.
“ஏங்க அந்த பையனோட அப்பாவை பார்த்து பேசிட்டீங்களா? திரும்ப நம்ம பொண்ணு பக்கம் வந்து பிரச்சனை எதுவும் பண்ண மாட்டானே?” என்று வெளியில் சென்று வந்த தன் கணவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார் பாத்திமா.
“பேசிட்டேன். நல்லா நாக்க புடுங்குற மாதிரி கேட்டு விட்டுட்டு தான் வந்து இருக்கேன். இதுக்கு மேலயும் அவன் பையன் நம்ம பொண்ணு பக்கம் வந்தானா, அவனுக்கு வெக்கம் ரோஷம் மானம் சூடு சொரணைனு எதுவுமே இல்லன்னு தான் அர்த்தம்.” என்று கோபமாக கூறினார்.
“அதெல்லாம் இருந்திருந்தா நம்ம பொண்ணு பின்னாடி வந்திருப்பானா?” என்று கூறினார் பாத்திமா.
அந்த மரக்கதவிற்கு மறுபுறம் இருந்து இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த யாஸ்மினுக்கு நெஞ்சம் பதபதைத்தது.
அவளை மேலும் கலங்கடிக்கவே அவள் தாய் அடுத்து, “போதுங்க. இவளை நம்ம வைச்சிருந்து பட்ட அவமானம் எல்லாம் போதும்.
நெட்டையோ குட்டையோ, குருடனோ செவிடனோ எவனாவது ஒருத்தனுக்கு இவள கொடுத்து மொத்தமா தல முழுகுனா தான் நமக்கு நிம்மதி.” என்றார்.
அது எப்படி பிள்ளைகள் என்றால் பெற்றோரின் விருப்பத்திற்காக மட்டுமே அசைந்தாடும் கைப்பாவையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களது மனதில் வேறூன்றி இருக்கிறது என்று புரியவில்லை.
இவர்கள் சொல்படி கேட்டு அனைத்தும் செய்தால் ஒழுக்கமானவள், அதே அவள் மனதின் சொல் கேட்டு ஏதேனும் செய்துவிட்டால் அவள் ஒழுக்கம் கெட்டவள் என்ற முத்திரை.
மனைவியின் சொல்லில் காதருக்கும் அதுதான் சரி என்று தோன்றியது.
ஆயினும் ஊர் முழுவதும் யாஸ்மின் படித்தவள். வெளியில் சென்று வந்தவள் என்று தெரிந்த பின்னர் அவளை மணந்து செல்ல யாரும் அதிகமாக முன் வரவில்லை.
வந்த ஒரு சிலரும் அவள் அழகிற்காகவும் பணத்திற்காகவும் மட்டுமே வந்தனர். அவர்களையும் ஏதேதோ காரணங்கள் கூறி விரட்டியடித்து விட்டாயிற்று.
தற்போது உடனடியாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றாலும் அவசரப்பட்டு அன்பழகனை ஊர் பொதுவெளியில் வைத்து பேசிய பேச்சில் நிச்சயம் இந்நேரம் விடையும் காட்டு தீயாய் பரவி இருக்கும்.
இதற்குப் பின் ‘யார் தன் மகளை மணந்து செல்வார்?’ என்ற கேள்வியிலேயே அவர் முடங்கி விட்டார்.
‘யாஸ்மின் இப்படி ஒரு காரியத்தை செய்வாள்’ என்று அவர் கனவிலும் நினைத்து பார்த்திருக்கவில்லை.
குனிந்த தலை நிமிராது, முகத்தை மறைத்து, கண்ணியமாக சென்று வந்த மகள், இன்று இப்படி ஒரு காரியம் செய்து வந்ததை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த இடத்தில் சற்று நிதானித்திருந்தால் காதருக்கும் யாஸ்மின் மனம் புரிந்திருக்கும்.
ஆனால் அன்று, “மகள் மகள்னு தலைல தூக்கி வச்சு ஆடுற இல்ல? இவ தான் உன் மானத்த கப்பல் ஏத்த போறா.” என்று தமக்கை கூறிவிட்டு சென்ற சொற்கள் காதில் ஒலித்தது.
கண்ணுக்கு எதிரே ரத்தமும் சதையுமாக உயிரோடு இருக்கும் மகளை விடவும், கண்ணுக்குத் தெரியாத வரட்டு கௌரவமும் மானமும் தான் அவருக்கு முக்கியமாய் போய்விட்டது போலும்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
“எப்படியாவது யாஸ்மினை பார்த்து ஆகணும் டா” என்று அந்த நள்ளிரவு வேளையில் புலம்பியபடி அமர்ந்திருந்த நண்பனை முறைத்துப் பார்த்தான் அழகுவேல்.
“ஏன் டா நேத்து அந்த பொண்ணு வந்து அத்தனை உன்கிட்ட பேசியும் முடியவே முடியாதுனு உறுதியாக தானே இருந்த?
கடைசியா அந்த பொண்ணு கோச்சுட்டு போச்சு. அப்ப கூட கல்லு மாதிரி தான டா உட்கார்ந்து இருந்த?
அப்புறம் எப்படி இன்னைக்கு காலைல நேரா அவ வீட்டுக்கே போய் இருக்க? அதுவும் பொண்ணு கேட்டிருக்க.” என்று நண்பனிடம் தன் சந்தேகத்தை கேட்டுக் கொண்டிருந்தான்.
“உண்மை தான். யாஸ்மின் என்கிட்ட காதலா லட்சியமானு கேட்கிற வரைக்கும் என் மனசு முழுக்க எப்படியாவது அந்த இயக்கத்தில் சேரணும்கிற வெறி மட்டும் தான் இருந்துச்சு.
ஆனா யோசிச்சு பார்த்தேன் டா. படபடக்குற கண்ணால, என்ன பிடிச்சிருந்தாலும் தூர நின்னு எனக்கே தெரியாம பார்த்துட்டு நகர்ந்து போய்டுவா.
அவகிட்ட நான் போய் என் காதலை சொல்லும் போது முடியவே முடியாதுன்னு சொல்லிட்டு போனவ டா.
நான் தான் அவளுக்கு விடாம நம்பிக்கை கொடுத்தேன். என்ன ஆனாலும் சரி இந்த காதல் கை கூடுறதுக்கு எந்த எல்லைக்கும் போவேன்னு அவளுக்கு சத்தியம் பண்ணி கொடுத்தேன்.
அத நம்பி தான் வேணும் காதலிச்சா. ஆனா எப்ப அவளே என் காதல் செத்துப் போச்சுன்னு சொல்லிட்டு போனாளோ, அப்பவே மனசு எல்லாம் ஒரே உருத்தலா இருந்துச்சு.
நீயும் காயல்ல என்ன விட்டுட்டு போன கொஞ்ச நேரத்திலேயே முடிவு பண்ணிட்டேன்.
என் லட்சியத்துக்கு முன்னாடி எனக்கு என் காதல் தான் முக்கியம்னு நினைச்சேன். அதான் விடியுற வரை அவ அப்பா கிட்ட பேச காத்திருந்தேன்.
இந்த மாதிரி பிரச்சினை எல்லாம் வரும்னு நான் முன்னாடியே நினைச்சது தான். ஆனா இப்ப என்னோட பிரச்சனையே அது இல்ல.
கொஞ்ச நாள் நான் இங்கு இருந்து அவ அப்பாகிட்ட பேசி சம்மதிக்க வச்சிட்டேன்னா எங்க கல்யாணம் நடந்துரும். ஆனா அதுவரைக்கும் எனக்கு நேரம் இல்ல டா அழகு.” என்று தன் மனதில் இருக்கும் குழப்பத்தை உன் நண்பனிடம் கூறினான் இளங்கோவன்.
அவன் கூறியதை கேட்ட அழகுவேல், “எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல டா மாப்ள. ரெண்டுல எது முக்கியம்னு நீ தான் முடிவு பண்ணனும்.
இப்ப இவ்வளவு பிரச்சனை பண்ணிட்டு போயிருக்க அந்த பொண்ணோட அப்பா சும்மா இருப்பாருனு நினைக்கிறியா?
அடுத்து இந்த பொண்ணு என்ன வேணும்னாலும் பண்ணலாம் டா. இந்த சமயத்துல நீ இங்கு இருக்கனும். அந்த பொண்ணுக்கு துணையா நிக்கணும். நீ கொடுத்த வாக்க காப்பாத்தணும்.” என்று இளங்கோவின் மனதை மாற்ற பார்த்தான் அழகுவேல்.
“டேய் பேசாம நான் சொல்றத கேளு. அந்த பொண்ணு நிச்சயம் உனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வரும்.
இன்னைக்கு இருக்க ரெண்டு பேரோட அப்பா அம்மாவோட கோபமும், நாளைக்கு நீங்க நல்லா பண்ற வாழ்க்கையை பார்த்து சரியாகும்.
ஆனா வாழ்க்கை போனா திரும்ப வராது.
அந்த பொண்ண கூட்டிட்டு நீ வேற ஏதாவது ஊருக்கு போய் பிழைக்கிற வழிய பாரு டா.
உனக்காக அந்த பொண்ணு நான் கூட்டிட்டு வரேன்.” என்ற நண்பனை ஏறிட்டுப் பார்த்தான் இளங்கோவன்.
“நீ கூப்பிட்டதும் அவ வந்துருவான்னு நினைச்சியா? அவளுக்கு என் காதல் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அவங்க அப்பா அம்மாவோட பாசமும் முக்கியம்.
என்ன நடந்தாலும் எதிர்த்து நின்னு கேரலாம்னு சொல்லுவாளே தவிர, நிச்சயம் ஓடி போறதுக்கு ஒத்துக்க மாட்டா.” என்று தன்னவளை பற்றி அறிந்தவனாய் கூறினான் இளங்கோவன்.
“அப்ப அந்த பொண்ண இப்படியே விட்டுட்டு நீ இயக்கத்தில் சேர போறியா?” என்று கேட்டான் அழகுவேல்.
“விட்டுட்டு தான் போக போறேன். ஆனா மொத்தமா இல்ல. எனக்கு இப்பவும் நம்பிக்கை இருக்கு. நான் திரும்பி வர வரைக்கும் என்னுடைய யாஸ்மின் எனக்காக காத்திருப்பா.” என்று தீர்க்கமாக கூறியவனை கண்டு பைத்தியம் என்றுதான் நினைக்க தோன்றியது அழகுவேலுக்கு.
“நிச்சயம் இருப்பா இன்னொருத்தன் பொண்டாட்டியா. இப்படி நீ ஆசைப்பட்ட பொண்ண விட்டுட்டு. உன் வாழ்க்கையவே விட்டுட்டு ஓரளவுக்கு உனக்குள்ள போராடுற வெறி இறங்கி போச்சுல்ல?
நல்லது நீ கிளம்பி போ. இங்க அந்த பொண்ணு இருந்தா என்ன செத்தா உனக்கு என்ன?” என்று நண்பனிடம் கோபம் கொண்டு சென்ற அழகுவேலுக்கு, தன் நல்வாழ்வில் தான் அத்தனை கவலை என்று இளங்கோவனுக்கும் புரிந்தது.
இருப்பினும் எந்த நம்பிக்கையில் அவளை விட்டு செல்ல முடிவெடுத்து இருக்கிறான்?
அதிலும் அவன் திரும்பி வர மாதங்கள் ஆகலாம். ஏன் வருடங்கள் கூட ஆகலாம்.
அதுவரை யாஸ்மினை அவள் வீட்டில் திருமணம் செய்து வைக்காமல் வைத்திருப்பார்கள் என்ற எண்ணம் அவன் குருட்டு நம்பிக்கையாகவே தெரிந்தது.
காதல் என்ற வார்த்தையே ஏதோ பெரிய குற்ற சொல்லாய் பார்த்த அந்த காலத்தில், இனம் புரியா நம்பிக்கையை முன் வைத்து இளங்கோவன் எடுத்திருக்கும் இந்த முடிவு இருவரது வாழ்வையும் எப்படி மாற்றப் போகிறது…..
-கனா 🤎

Author: STN - 91
Article Title: ஒரு காதல் கனா காண்போம் - 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.