• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 14

நிதனிபிரபு

Administrator
Staff member
பார்வை 14

அவனின் அந்த வார்த்தைகள் மழைக் காற்றில் கரையாமல் ,அவள் மனதில் மலை போல நிமிர்ந்து நின்றது அவன் மீதான நம்பிக்கையாய் பதிந்தது.

அவளோ .. வாய் திறந்து பதில் எதுவும் பேசவில்லை!. ஆனால் அவளது கண்கள் சொல்லிவிட்டன—
கண்களில் பூத்த கண்ணீருடன், “ஆம்” என்று தலை அசைத்தாள்.

“அப்ப சொல்லு…” என்று அவன் கேள்வியாகப் பார்த்தான்.

“என்ன பார்க்கற? ஓகே தானே… ஐ மீன் லவ் பண்ணலாம் தானே…” என்று அவனை எதிர்பார்ப்புடன் பார்ப்பதைத் தொடர்ந்தாள்.

அவன் கண்களில் காதல் பொங்க, அவள் மீண்டும் “ஆம்” என்று தலை அசைத்தாள்.

அவள், அவன் காதல் ததும்பும் கண்களை பார்த்துக்கொண்டே, அவன் கையை அழுத்தமாக பற்றினாள். அவன் அவளை சிறு முறுவலுடன் பார்த்தான்;

அவளும் அவனைப் பார்த்து, பின்னர் அருவியை நோக்கி திரும்பினாள் . இருவரும் சற்று நேரம் இதயம் அமைதியுற , அருவியைப் பார்த்தபடி நின்றனர்;

ஒருவரின் காதலை மற்றவருக்கு, கைகளின் விரல் சூட்டின் வழியே கடத்திக் கொண்டிருந்தனர். அப்போது இளமழை தூறல் விழுந்தது. இருவரும் அந்த இளமழை சாரலில் நனைந்தபடியே, கைகளை இறுகப் பற்றியவாறு, காரை நோக்கி நடந்து சென்றனர்.

அன்று இரவு பிரியாவின் வீட்டில் உறவுகள் அனைவரும் கூடி இருக்க
கல்யாண வீடு களைக்கட்டியது .
பெண்கள் அனைவரும் கையில் மருதாணி இட்டு கொண்டிருந்தனர். பிரியாவின் தோழிகள் மற்றும் அவளுடைய தமக்கையின் தோழிகள் , சிற்றாப்பா மக்கள், பெரியப்பா மக்கள், அத்தை மற்றும் மாமன் மக்கள்—என்று வீடு சிறியவர்களின் கேலி பேச்சுகளும், கிண்டலுமாக ,ஆர்பாட்டமாக இருந்தது . உள்ளூர் என்பதால் அனைவரும் குடும்ப சகிதமாக கலந்து கொண்டனர்.
பெரியவர்களில் பெண்கள் தாம்பூல பை போடுவதும், சமையலுக்கு உதவுவதும், பூக்கள் தொடுப்பதும் போன்ற பணிகளில் ஈடுபட்டனர். ஆண்கள் மண்டபத்திற்கும், வீட்டிற்குமாக கல்யாண வேலைகளில் மும்முரமாக இருந்தனர். மித்ரன், வசீகரன் உட்பட இளையவர்கள் பேச்சுலர் பார்ட்டி கொண்டாடி கொண்டிருந்தனர்.

வசீ, பிரியா மட்டும் இப்போது என்ன பார்த்தாளோ, “கொண்டே புடுவா டா” என்று சொன்னவனை வசீகரன் பிடிதிருக்க , அவன் மேலும் தொடர்ந்தான் அப்பிடியே “பொத்தினப்புல யாரின் கண்களிலும் படாம என்னை கூட்டிட்டு போய் படுக்க வச்சிடு டா” என் செல்லம் என்ற மிதரனை கைதாங்கக் கூட்டிக் கொண்டு வந்தான்.

“இது உனக்கு தேவையா டா? ரெண்டு ரவுண்ட்க்கு மேல போகாதன்னு சொன்னேன்ல கேட்டையா?” என்று வசீகரன் கேட்டுகொண்டிருக்க ,
“டேய் நீ, உன் அட்வைஸ் கொஞ்சம் நிறுத்து. இன்னைக்கு கூட நான் சந்தோஷமா இருக்க கூடாதடா? இதெல்லாம் இல்லாம எப்படி தான் நீ இருக்கையோ? என்னால எல்லாம் முடியாது டா. வாழ்க்கைன்னா அனுபவிக்கனும் டா,” என்று மிதரனை முறைத்தான்.

“அப்படியா சார்? நீங்க தான் தைரியமான ஆளாச்சே. எங்க எப்படியெல்லாம் சந்தோஷத்த அனுபவிக்கிறீங்கன்னு பிரியாகிட்ட சொல்லுங்க பார்ப்போம்,” என்றதும்,

என்னது அவகிட்டையா .. அவகிட்ட மனுஷன் பேசுவான என்று மித்ரன் கூறியதும் . “அப்படியா சார்? கொஞ்சம் இங்க பார்த்து சொல்லுங்க பார்ப்போம்,” என்று திருப்ப, மாப்பிளை வீட்டில் ஏதோ எடுக்க வந்தவர்கள் இவர்களைப் பார்த்து நின்றனர்.

மித்ரன் பேசியதை கேட்ட பிரியா அங்கே விழிகளை உருட்டியவாறு காளியாக நின்றாள். அதை பார்த்த மித்ரன் திருதிருத்தான்.

அடப்பாவி இப்படி என்னை வசமா இந்த பஜாரிக்கிட்ட மாட்டிவிட்டுடையே என்று வசீகரனை அப்பாவியாக பார்த்தான்.

எங்க ,இப்ப பேசு என்றவாறு வசீகரன் பார்க்க. போடா நீயெல்லாம் நல்லா வருவடா என்று சொன்னவன்

பிரியாவிடம் சிறு பையனாக பயத்துடன் நின்றான் .

பிரியாவுடன் வந்த மது சிரிப்பை அடக்கியவாறு நிக்க இங்கே வசீகரனோ பிரியாவுடன் பச்சை வண்ண பட்டு புடவையில் வந்தவளையே விழிகளால் கபளீகரம் செய்து கொண்டிருந்தான் அதைக் கண்ட மதுமதி, அவன் விழிகளில் கொட்டிய ரசனையை எதிர்கொள்ள முடியாமல் பார்வையை தழைத்துக்கொண்டாள் .கன்னக்குழி சிவந்தாள். ஒற்றை வெக்கத்தில் அவனை வாரி சுருட்டிகொண்டாள் .

மித்ரன் சமாளிப்பாக,
“பிரியா குட்டி, எப்ப செல்லம் வந்த? என்னன்னு அத்தான் கிட்ட சொல்லி இருந்தா நானே வந்திருப்பேன். இந்த இருட்டுல தனியா ஏன் டா வந்த?”?” என்று ஐஸ் வைத்தான். பிரியா திரும்பி அவனைப் பார்த்தாள். அந்த பார்வையில் கோபமும் கவலையும் கலந்திருந்தது.

“போதும் அத்தான்! வந்ததால்தான் உன் பவுசு தெரிஞ்சுது. உன்னை இப்படி குடிக்காதன்னு எவ்வளவு சொல்லறது அத்தான்? என்ன சொன்ன? என்ன சொன்ன?என்கிட்ட மனுஷன் பேசுவானா? இனி உன்கிட்ட பேசிட்டா பார்த்துக்கோ!” என்று எடுக்க வந்த பொருளை எடுத்துவிட்டு கோபமாக விலகிச் சென்றாள்.

“பிரியா, ப்ளீஸ் டி செல்லம்… அத்தான் இனி இப்படி செய்ய மாட்டேன்…” என்றவனை சட்டை செய்யாமல் ,மதுவை இழுத்துக்கொண்டு அங்கிருந்து விரைந்து சென்றாள்.

மித்ரன் அப்பாவியாக பார்த்து நின்றான். வசீகரன் நமட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தான்.
“காலைல உன் லவ்வுக்கு உதவி செய்ய மாட்டேன்னு சொன்னதுக்கு நல்லா வச்சு செஞ்சுட்ட டா ! அவ இருக்கான்னு சொல்ல மாட்டியடா?” என்றதும்,
“சொன்னது கேக்கலைன்னா இப்படி தான்,” என்றவனை இப்போது மித்ரன் முறைத்தான்.

“சும்மா சும்மா முறைக்காம வாடா,” என்று அவனை அவன் அறைக்கு அழைத்து வந்தான்.

அடுத்த நாள் அதிகாலை

பெண் அழைப்புக்காக மாப்பிள்ளை வீட்டார் வந்திருந்தனர். விளக்கு முன் மணமகளை அமர வைத்து, மாலை அணிவித்து, பால் பழம் கொடுத்து மரியாதையுடன் மண்டபத்திற்கு அழைத்து செல்லும் பழமையான வழக்கம் வீட்டை பண்டிகை நிறமாக்கியது.

அங்கே பிரியாவைக் கண்ட மித்ரன் சமாதானமாக பேச முயன்றான்.

அவள் அவனை முறைத்துக்கொண்டு நின்றாள். அவன் அவளிடம் பார்வையாலேயே கெஞ்சினான். அவள் சற்றும் அசயவில்லை . பெண் அழைப்பு முடித்து பரீத்தியை மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.

அதேபோல், மாப்பிள்ளை அழைப்புக்கு மணமகனை மேளதாள முழக்கத்துடன் மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்.

மரூன் நிற சட்டை மற்றும் வேஷ்டியில் மண்டபத்திற்குள் நுழைந்த வசீகரனின் கண்ணில் பட்டது — பட்டு புடவை சரசரக்க நடந்து வந்த மதுமதி தான். மதுமதியும் அவளது தோழிகளும் கலகலப்பாக பேசிக்கொண்டு வந்தனர். வசீகரன் அவளை பார்த்த கணம், அவளும் அவனைத்தான் பார்த்தாள். ஒரு நொடி. இருவருக்கும் சட்டென்று பேச்சற்று போனது. அந்த ஒரு நொடி இருவரையும் சுற்றிய உலகம் அமைதியாக நின்றது போல இருந்தது.

விழிகள் ஒன்றோடொன்று பேசின .

அரக்கு கரையிட்ட மாம்பழ வண்ணப் பட்டில் அவள் தேவதை போலிருக்க அவனால் பார்வையை விலக்க முடியவில்லை. விழியெடுக்காமல் பார்த்தபடி நின்றான். அவன் பார்வையின் தீவிரம் தாங்க முடியாமல் அவள் விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள்.

“மது… மது… மது…” கீதாவின் விளிப்பில் தான் தன்னிலை மீண்டாள்.
“என்ன கீத்து?”

“என்ன ஆச்சு? திடீர்னு ஃப்ரீஸ் ஆகிட்டே?”


“இல்ல… ஒன்னும் இல்ல…” என்று தடுமாறினாள்.

அவள் விழிகளை பின்பற்றிய கீதா புரிந்து கொண்டு மென் சிரிப்புடன்,
“இருக்கு இருக்கு… எல்லாம் இருக்கு… நான் பாத்துட்டேன்!” என்றாள்.

“சும்மா இரு டா…” என்ற மது கன்னம் சிவந்தாள்

கீதாவின் சிரிப்பு இன்னும் விரிந்தது.

இங்கே வசீகரனின் நிலையும் அதற்கு சற்றும் குறையாமல் இருந்தது.
“அச்சோ… இன்னைக்கு என்ன இவ இவ்வளவு அழகா இருக்கா…”

அவன் பார்வை இன்று காதலன் என்ற உரிமையில் சற்று எல்லை மீறி அவளின் வளைவுகளில் பயணித்தது.அவளை முழுதாக கண்களால் தழுவி நின்றான்.

“டேய் போதுண்டா! முடியல, நிறுத்திக்கோ. நீ வேணும்னா இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே நின்னு காதல் கடலில் நீச்சல் அடி.“ இன்னும் கொஞ்ச நேரம் நான் இங்க நின்னா எங்க அப்பா என்னை தொங்கவிட்டிடுவாறு , வேலையெல்லாம் யாருடா பார்க்கிறது? கொஞ்சம் தள்ளு, நானாவது போறேன்,” என்று மித்ரன் சொல்ல நகர,

சட்டென்று அவனை பிடித்து நிறுத்தியவன்,
“இருடா! சும்மா ரொம்பத்தான் ஓட்டுற. நீ பண்ணாத , நான் உன்ன பண்ணுறேன். எது நீ பண்ணதும், நான் பண்ணதும் ஒன்னா? உனக்கே கொஞ்சம் ஓவரா இல்ல? எப்பயிலிருந்து டா இப்படி ஆன? நீ இப்படி எல்லாம் இல்லையே!”

என்றவனைனின் தலையை தனது வலதுகையால் நகர்த்தி மீண்டும் அவளைத் பார்க்க முயல , அவள் அங்கிருந்து நகர்ந்து இருந்தாள்.

“டேய்! எங்கடா அவ? உன்னோட பேச்சுல அவளை மிஸ் பண்ணிட்டேன்!”

“மிஸ் எல்லாம் பண்ணல மச்சி… அங்க தான் நிக்குது தங்கச்சி…”

“எங்கே?” என்றவனின் விழிகள், அதன் பின் வந்த ஒவ்வொரு நொடியிலும் அவளைத் தொடர்ந்துகொண்டே இருந்தன. அவள் எங்கு சென்றாலும், அவனின் பார்வை அவளை விட்டு விலகவில்லை. அவள் நடந்த திசைதோறும் அவன் விழிமணிகள் அவளைப் பின்தொடர்ந்தன.

“ஏட்டி பிரியா, அந்த தாம்பூல பை மணமகள் அறையில இருக்கு. எடுத்தாந்து தா, டி…” என்று பிரியாவின் ஆச்சி கூறினாள்.

“இருங்க ஆச்சி, நான் எடுத்துக்கொண்டு வரேன். பிரியா இங்க இருக்கிறவங்களை கவனிக்கட்டும்,” என்று சொல்லிவிட்டு மதுமதி மணமகள் அறை நோக்கி நடந்தாள்.

அவளின் அழகில் விழிகள் மயங்கி, அவளைத் தொடர்ந்துகொண்டிருந்த பார்வையின் உரிமையாளனும் — அவளின் பின்னால் நகர்ந்தான்.

அவள் அறைக்குள் நுழைந்து, தாம்பூலப் பைகளை எண்ணிக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் சத்தமின்றி அறைக்குள் நுழைந்தவன் மெதுவாக கதவை அடைத்தான்.

கதவு மூடும் சத்தத்தில் திரும்பியவளின் விழிகள் ஒரு கணம் பதறி விரிந்தன.

“வசி… என்ன செய்றீங்க?” என்றவள் கதவு நோக்கி நகர முயன்றாள்.

ஆனால் அவளைத் தடுத்த வலிமையான கரங்கள் அவளின் கைகளைப் பற்றிக் கொண்டன. அடுத்த நொடி, அவளை தன் பக்கம் இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

ஒரு கணம், அந்த திடீர் அணைப்பில் மதுமதிக்கு மூச்சே முட்டியது.

“ப்ளீஸ்… விடுங்க… நான் போகணும்…” என்றாள் அவள் பதட்டத்துடன்.

அவளை மெதுவாக திருப்பி தன்னருகில் நிறுத்தியவன், மென்மையான குரலில்,
“ப்ளீஸ் மது… கொஞ்ச நேரம் அமைதியா நில்லு. நான் எதுவும் செய்ய மாட்டேன்…” என்றான்.

அவன் குரலில் இருந்த மாற்றம் — அவளின் இதயத் துடிப்பை இன்னும் வேகப்படுத்தியது.
 
Last edited by a moderator:

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom