• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 30

நிதனிபிரபு

Administrator
Staff member
பார்வை 30

உள்ளம் என்ற ஒன்றை உன்னிடத்தில் தந்தேன்…
தந்த உள்ளம் பத்திரமா தெரிந்துகொள்ள வந்தேன்…
என்னைப் பற்றி நீதான் எண்ணியது தவறு…
என்னைவிட உந்தன் உள்ளம் என்னுடைய உயிரு…
இரு உயிர்கள் என்பதே கிடையாது…
இதில் உனது எனது எனப் பிரிவேது…
வசீகரனும் மதுமதியும் வீட்டின் பக்கவாட்டில் இருந்த தோட்டத்துக்குள் மெதுவாக நடந்துசென்றனர். மாலை காற்று சற்று குளிர்ச்சியுடன் வீசியது. நடுவில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சல் மெதுவாக அசைந்தது.

அதன் சங்கிலியைப் பிடித்தபடி மதுமதி நின்றாள். அருகில் இருந்த கல் இருக்கையில் வசீகரன் அமர்ந்து, அவளை பார்த்து மெதுவாக,“சிட் மது” என்றான்.

அவள் விழியை உயர்த்திப் பார்த்து, “இல்ல, நான் இப்படியே இருக்கேன்” என்றாள்.

அவள் குரலில் இருந்த தயக்கத்தை அவனால் உணரமுடிந்தது.

“ஏன்?” என்று மெதுவாக கேட்டான்.

அவள் பதில் சொல்லவில்லை. அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

சில நொடிகள் அமைதியாக அவளை பார்த்தவன் அந்த அமைதியை உடைத்து,

“எனக்கு உன்கிட்ட ஒன்னு மட்டும் தெளிவுபடுத்தணும் மது…” என்று தொடங்கியவன் சற்றே ஆழ்ந்த மூச்சை இழுத்துக்கொண்டான்.

“நான் இப்பவும்… எப்பவும்… உன்னை மட்டும் தான் காதலிக்கிறேன். காதலிப்பேன். ஆனா அதுக்காக உன்னை நான் ஒருபோதும் கட்டாயப்படுத்த மாட்டேன்…”



“இது நான் எதுவும் திட்டமிட்டு பண்ணல அதை நீ நம்பனும் . அம்மாவுக்கு நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சு மது. உன் மேல அவங்களுக்கும் அபிப்ராயம் இருந்திருக்கும் போல. அதனால தான் உடனே இந்த மீட்-அப் அரேஞ்ச் பண்ணிட்டாங்க. நான் உனக்கு டைம் குடுக்க தான் நினைத்தேன்,” என்றான்.

அவன் சொல்லிக்கொண்டிருக்க, அவள் ஏதோ சொல்லத் தயங்குவது போல உணர்ந்தவன் .

“ஹும்… சொல்லு. என்னமோ சொல்லணும்னு நினைக்கிற. சொல்லு இல்ல கேளு,” என்றான் அவன்.

அவளுக்கு அவனை திருமணம் செய்ய சம்மதம் தான், இருந்தாலும் மனதில் இருந்த விடையில்லா கேள்விகளுக்கு அவனிடமே பதில் தேடினாள். அவனை இப்படியே ஏற்றுக்கொள்ள நினைத்தாலும் மீண்டும் அவர்களுக்குள் மனக்கசப்பு வரக்கூடாது என்ற எண்ணத்தில் அவனை கேட்டாள்.

அவள் மெதுவாக மூச்சை இழுத்துக்கொண்டு,
“நீங்க சொன்ன காரணம்… இன்னும் அப்படியே தான் இருக்கு வசீ… அப்புறம் எதுக்கு ஓகே சொன்னீங்க?” என்றாள்.

அவளின் கேள்வியில்,அவனுக்கு இது முடியவே முடியாதா “மீண்டும் இதே விஷயமா…” என்று நினைத்தான்.

“மது… மது… இதுக்காக அன்னைக்கே நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டேன். திரும்பவும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கத் தயாரா இருக்கேன். உன் கால்ல விழணுமா? சொல்லு, செய்யறேன்,” என்றான்.

அவள் விழியை உயர்த்திப் பார்த்து, “எப்படி வசீ? உயிரும் உணர்வும் இருந்த மனசை காயப்படுத்திட்டு, இப்ப மன்னிப்பு கேட்டா சரியாகிடுமா? கால்ல விழுந்தா அந்த மனசுக்கு மீண்டும் உயிர் வந்திடுமா என்ன ? ஆமா அதென்ன கால்ல வேணாலும் விழுறேன் , அப்படின்னா என்ன அர்த்தம்?,ஆண்பிள்ளை கால்ல விழுந்தா கேவலம்னு நினைக்கிறீங்களா? அப்படி செய்தா என்னை அப்படி பேசினது இல்லாம போய்விடுமா என்ன? நீங்க அதை பண்ணினா உயர்ந்தவங்க தி கிரேட் இல்ல. எப்படி உங்களால இப்படி யோசிக்க முடியுது ?” என்றாள். உங்களுக்குள்ளயும் ஒரு மேல் சௌவினிஸ்ட் இருக்கான். இல்லையா. இல்லைனா உங்களால என்னை அப்படி பேசியிருக்க முடியுமா. படபடவென பேசியவள் பேச்சில் அவன் வாயடைத்து பார்த்தான். .

“அய்யோ மது, நான் அப்படி சொல்ல வரல…”

“வேற எப்படி?” என்றாள் அவள்.

“கால்ல விழுறது என்ன தியாகமா? எனக்கு இருக்கிற பாவம் போதாதா? நீங்க என் காலில விழுந்து அதையும் நான் சுமக்கணுமா?”

“உங்களை ஏற்றுக்கொள்ளவும் முடியாம, தூக்கி எறியவும் முடியாம, ஏற்க்கனவே சுமக்க முடியாத பாரத்தை என் மனசுல சுமந்துகிட்டு இருக்கேன்…” என்றவள் அருகிலிருந்த இருக்கையில் சோர்ந்து அமர்ந்தாள்.

அவனும் அவள் அருகில் மண்டியிட்டு அமர்ந்து, “மது, இங்க பாரு…” என்று அவளது முகத்தை கைகளில் தாங்கினான்.

“உனக்கு எப்படி புரிய வைக்கறதுன்னு எனக்கு தெரியலடி. சரி, என்ன பண்ணலாம்? நீயே சொல்லு. உன்னை விட்டு போறத தவிர எதையும் உனக்காக செய்யறேன். ஆனா எதற்க்காகவும் உன்னை விட்டுக்கொடுக்க முடியாது உனக்கு புரியுதா? . இதெல்லாம் இப்ப வேண்டாம்னா சொல்லு, உனக்காக இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கிறேன்,” என்றான்.

அவள் மீண்டும், “உங்க கோவம்…” என்று தொடங்க,

“சும்மா அதையே சொல்லாத. மது, இனி கோவப்பட மாட்டேன்னா மாட்டேன் அவ்வளவுதான் போதுமா?. அன்னைக்கு நீ பொய் சொன்னது தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது, அதுவும் யாருக்காகவோ என்கிட்ட பொய் சொல்லுவாளா அப்படின்னு, அந்த கோவம் தான் உன்னை அப்படி பேச வச்சுது.நான் அன்னைக்கு பேசியத எப்பவும் நியாய படுத்த முடியாது தான் ,ஆன என்னால இப்ப சாரி மட்டும் தான் கேக்க முடியும் . நான் அப்படி பேசியிருக்க கூடாது தான். என்னோட தப்பை முழுசா நான் உணர்ந்திட்டேன் அதுக்கு நான் குடுத்த விலையும் அதிகம். ரொம்ப . சாரி டி…” என்றான்.

“இனியும் நீ இல்லாம நான்… என்னால வாழ முடியாதுடி .... நான் உள்ளுக்குள்ள செத்தி ” என்று அவன் சொல்லி முடிக்கும் முன், அவள் அவன் வாயை அவள் விரல் கொண்டு மூடினாள்.

“அப்படி சொல்லாதே என்பது போல் …” மறுப்பாக தலையசைத்தாள். அவனது வார்த்தைகள் அவளையும் வலிக்க செய்தது..

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவளது விரல்களை தன் கைக்கொண்டு அப்படியே அழுத்தி பிடித்தவன் அவளது மெனபஞ்சு வீரங்களில் மீசை முடி உரச மெதுவாக முத்தமிட்டான்.

அவள் சட்டென கையை உருவிகொள்ள , அவளை உணர்ந்தவனாக சிறு புன்னகையுடன் அவளது கையை மெதுவாக விட்டவன்..

“உனக்கு இந்த கல்யாணதில் விருப்பமா மது?” என்றான் அவன்.

அவள் சம்மதமாக தலையசைத்தாள்.

ம்ம்கூம்.. இது போதாது “வாயை திறந்து சொல்லு…” என்றான்.

அவனது இந்த பிடிவாதம் பிடித்தது, இத்தனை வருடம் அவளுக்கான அவனது பிடிவாதம். , இந்த பிடிவாதம் தனக்கானது என்று எண்ணி அவளுக்கு உள்ளுக்குள் ஒருவித இதம் பரவியது.அந்த இதம் தரும் சுகத்துடன் அவனுக்கு பதிலிருத்தாள்

அவள் மெதுவாக, “உங்களுக்கு தண்டனையை நீங்க கேட்ட மாதிரி கூட இருந்தே தரலாம்னு இருக்கேன், மிஸ்டர் அங்கிரி பேட்…” என்றாள் புன்னகையுடன்.

அவனும் ஒரு மலர்ந்த புன்னகையுடன்,“அப்படியா மை ஸ்வீட் டெம்ப்டேஷன்…” என்றான்.

“போலாமா மது? வந்து ரொம்ப நேரம் ஆகுது…”என்றான்

அவளும் சரியென்று அவனுடன் நடந்தாள்.

இருவரும் உள்ளே செல்ல, அனைவரும் அவர்களின் பதிலுக்காக காத்திருந்தனர். அவர்களின் முகபாவனையே பதிலைச் சொல்லிவிட்டது.

மதுமதி முதலில் மீனாட்சியை பார்த்தபடி , “எனக்கு சம்மதம் அத்தை…” என்று சொல்லிவிட்டு சட்டென பூத்த வெக்கத்துடன் விரைந்து அறைக்குள் நுழைந்தாள்

“எனக்கும் சம்மதம் மா…” என்றவனுக்கும் முகம் சூடாவதை தடுக்க முடியவில்லை. அவனின் இதழ்களில் மிதமிஞ்சிய புன்னகை. .

“மாமா நீங்க பிளஷ் ஆகுறீங்க!” என்றாள் வித்யா.

“வித்தி சும்மா இரு…” என்றவன் புன்னகையை அடக்க முயன்று தோற்றான். .

“எனக்கும் அந்த ரகசியத்தை சொன்னா நானும் சிரிப்பேன்” என்று வருணும் உடன் சேர்ந்துகொள்ள, வசீகரன் இருவரையும் முறைக்க முயன்றான்.

பெரியவர்கள் அவர்களது பதிலில் புன்னகையுடன், “சரி பரிமாளா, எங்க குடும்ப ஜோசியர்கிட்ட கேட்டுட்டு ஒரு நல்ல நாள் பார்த்துட்டு பூவை வைக்க வர்றோம். அன்னைக்கு மற்றதைப் பேசிக்கலாம்” என்றனர்.

கணேசமூர்த்தி மட்டும் ஒரு தயக்கத்துடன் இருந்தார். அதைப் பார்த்த லிங்கம், “என்ன மூர்த்தி, ஏதாவது சொல்லணுமா?” என்று கேட்டார்.

“அது மச்சான், நீங்க பெரிய இடம். அதுக்கு தக்கன செய்ய என்னால…” என்று ஆரம்பிக்க,
“மூர்த்தி, மது என் மருமகள் இல்ல, மகள். அதைப் புரிஞ்சுக்க. எதையும் யோசிக்காத. உனக்கு என்ன முடியுமோ அதை செய். என்னைக் கேட்டா நான் எதுவும் வேண்டாம்னுதான் சொல்லுவேன். ஆனா அது உன்னை குறைவா நினைச்சதா இருக்கும்னு தான் இதையும் சொல்லறேன்” என்றவர் பேச்சில் கணேசமூர்த்தியின் தயக்கம் கலைந்தது.

அறைக்குள் சென்ற மதுவுக்கு “இது நிஜமா?” என்று கையை கிள்ளிக்கிள்ளி பார்த்தாள்.
மதுவுடன் பேசலாம் என்று வந்த வித்யா, அதை பார்த்ததும் புன்னகை பூத்து, “அக்கா, நிஜம்தான் நீங்க கனவு எல்லாம் காணல” என்றாள்.

அவளது திடீர் வரவில் மதுமதி முதலில் திகைத்து, “வாங்க” என்றாள் தட்டுத்தடுமாறி.
“மரியாதை எல்லாம் வேண்டாம். நான் உங்களை விட வயதில் சின்னவள் தான்” என்று மதுமதியின் கையை பிடித்துக் கொண்டாள்.

அவளது இயல்பான பேச்சில் மதுமதியும் புன்னகையுடன் பார்த்தாள்.
“என் பெயர் வித்யா. நான் வசீ மாமாவோட தாய்மாமா பொண்ணு. அவர் என்னோட தாய்மாமா பையன்” என்று சொல்ல,
அவள் சொல்லியதில் மதுமதி விழித்தாள்.

“என்னக்கா புரியலையா?” என்றவளிடம், “ஆமாம்” என்று மது தலையசைத்தாள்.
“எங்க அம்மாவுடைய அண்ணா லிங்கம் மாமா, எங்க அப்பாவுடைய தங்கை மீனா அத்தை… இப்பவாவது புரியுதா?” என்றவளுக்கு மென் புன்னகையுடன் “ஆமாம்” என்று தலையசைத்தாள்.

“நீங்க ரொம்ப பேச மாட்டீங்களா? ஆனா நான் எல்லாருடனும் நல்லா பேசுவேன். பேசலைன்னா எனக்கு அன்றைக்கு தூக்கம் வராது!” என்று படபடவென்று பேசும் அவளை மதுமதிக்கு மிகவும் பிடித்திருந்தது.

வரவேற்பறையில் சித்தார்த்துடன் வசீகரன் பேசிக்கொண்டிருக்க, வருணும் முகுந்தனும் பேசலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தனர்.

பிறகு வருண்தான் ஆரம்பித்தான்: “சொல்லு முகுந்த், நீ என்ன படிக்குற?” என்று பேச்சை தொடங்க, அவன் பதில் சொல்ல, இருவரும் நன்றாக பேச ஆரம்பித்தனர்.

மதுவும் வித்யாவும் பேசிக்கொண்டிருக்க, அங்கே மீனாட்சி அம்மாளும் லலிதாவும் அவளிடம் புறப்படுவதற்காக சொல்ல வந்தனர்.
“என்ன சொல்லறா, எங்க வீட்டு வாயாடி!” என்று தன் அண்ணன் மகளின் கன்னத்தை பிடித்து கிள்ளினார் மீனாட்சி.

“அய்யோ அத்தை, விடுங்க… வலிக்குது!” என்று அவள் செல்லம் கொஞ்ச, பார்த்திருந்த மதுவுக்கு புன்னகை அரும்பியது. அவளை திருஷ்டி சுற்றி நெற்றி முறிக்க, இதைப் பார்த்திருந்த லலிதா, “ஊரில இல்லாத மருமகள், போயும் போயும் இந்த வீட்டு பெண்!” என்று உதட்டை சுளித்துக் கொண்டார்.

உடனே லலிதா, “எந்த ஊரிலும் நடக்காத அதிசயமா இருக்கு! மருமகள் வந்து வழியனுப்பணும்; இங்க தலைகீழா நடக்குது!” என்று ஆரம்பிக்க, மதுமதியின் முகம் வாடிவிட்டது.

“லலிதா, நீ சும்மா இருக்க மாட்டியா?” என்று அவரை அடக்கிய மீனாட்சி,
“நான் என் மருமகளை நானாகத்தான் பார்க்க வந்தேன். அதுக்கு எந்த முறையும் கிடையாது. நீ எதுவும் நினைக்காத மது… அவ அப்படித்தான், எங்க என்ன பேசணும்னு தெரியாது” என்று சூழ்நிலையை இயல்பாக்க முனைந்தார்.

லலிதா முகத்தைத் திருப்பிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.

“சரி மது, நாங்க புறப்படுறோம்” என்றவர் அறையைவிட்டு வெளியே வர, அவளும் வித்யாவுடன் வழியனுப்ப வெளியே வந்தாள்.

எல்லோரும் விடைபெற்று கிளம்ப, வசீகரனின் பார்வை மதுமதியையே சிறைபிடித்திருந்தது.
அவளும் அவனது அந்த சிறையிலிருந்து மீள விரும்பாமல் தெரிந்தே தொலைந்தாள்.

“ம்கும்…” என்று வசீகரனின் அருகில் இருந்த சித்தார்த் குரலை செரும, இருவரும் உணர்வுக்கு வந்தனர்.

வசீகரன் விழியாலேயே விடைபெற, அவளும் விழியாலேயே விடை கொடுத்தாள்.

பிறகு வசீகரன் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்ப, மதுமதியின் வீட்டினருக்கும் மனதில் ஒருவித திருப்தியான உணர்வு ஏற்பட்டது.

“எல்லாம் நன்றாக நடக்க வேண்டும்” என்று பரிமளம் கடவுளிடம் வேண்டுதல் வைத்துக்கொண்டார்.
 
Last edited by a moderator:

Gowri Karthikeyan

Active member
Nice..... ஏதோ தப்பு பண்ணிட்டான் ....விடேன் மது.....இப்படி எல்லாம் பார்த்தா நாட்டில், வீட்டில் பலர் வாழ முடியாது
 

Gowri Karthikeyan

Active member
அப்படி பார்த்தா....நீயும் தான் பொய் சொன்ன அப்படின்னு அவனும் இல்ல சும்மா சொல்லி காட்டிட்டே இருந்தா உனக்கு நல்லா இருக்குமா
 
Top Bottom