• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஒரு பார்வையிலே என்னை வீழத்திவிட்டாய் - 7

நிதனிபிரபு

Administrator
Staff member
பார்வை 7

அடுத்த நாள் சனிக்கிழமை, வசீகரன் வீட்டில் அனைவருமாக இரவு உணவருந்த அமர்ந்திருந்தனர்.

எப்போதும் வார இறுதி நாட்களில் மீனாட்சியம்மாள் தனக்குத் தெரிந்த அத்தனை வகையறாக்களையும் சமைத்திடுவார். அன்று நால்வருமாக டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தனர்.

“வருண் கண்ணா, நல்லா சாப்பிடு. உனக்கு பிடிச்ச மஷ்ரூம் கிரேவியும் சப்பாத்தியும் செஞ்சிருக்கேன். வசீ, உனக்கு இட்லி, கார சட்னி, பூண்டு சட்னி எல்லாம் வச்சிருக்கேன்,” என்றார்.

சின்ன மகனிடம்,
“ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு உனக்கு நாக்கு செத்து போயிருக்கும்,” என்றார் அக்கறையுடன்.

“உண்மையிலேயே ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சா? இல்ல அம்மா சமையல்ல நாக்கு செத்துப் போச்சா?” என்றார் கிண்டலாக.சொக்கலிங்கம்

வசீகரன் உடனே தாயைப் கண்டவன் அவரின் முக சுணக்கத்தினை பொறுக்க முடியாதவனாக ,
“என்னப்பா நீங்க …என்ன இருந்தாலும் அம்மாவோட கைபக்குவம் போல வருமா?” என்றான்.

“அட… இன்னொன்னையும் விட்டுட்டியேடா,” என்றார்.

மூத்தவன் கேள்வியாக நோக்க,
“அன்பு, பாசம்… அதையும் கலந்து தானே தறா ,” என்றார் பெரிய சிரிப்புடன்.

“இந்த சிறிப்புக்கொன்றும் குறைச்சல் இல்லை,” என்ற கணவனை பார்த்தவர் முகத்தை திருப்ப ,
“வேற எதுக்கு குறைச்சல் இருக்குன்னு கேளடா மகனே,” என்றார் சொக்கலிங்கம்.

“ஐயோடா… இன்னைக்கு என்ன வச்சு உங்க ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டீங்களா? ஆள விடுங்க சாமி,” என்று எழுந்து செல்ல முயன்ற வரூணை,

“சரி சரி, சாப்பிடு. இதை வச்சு சாப்பிடுறதிலிருந்து தப்பிக்கலாம்னு பாக்குறியா?” என்றார் தாய் கண்டிப்புடன்.

“அம்மா, உங்க சமையல் சான்ஸே இல்லமா. எப்படிமா இட்லியை இப்படி மல்லிகைப்பூ போல செய்றீங்க? எங்க ஹாஸ்டல்ல இட்லின்னு பேர்ல கல்லு மாதிரி இருக்கும். ஓங்கி அடிச்சா டன் வெயிட்டா மாதிரி தூக்கிப் போட்டு யார்மேலயாவது பட்டுச்சுன்னா கொலை கேஸ்ல உள்ள போட்டுடுவாங்க,” சப்பா முடியல என்றவனை மூவரும் புன்னகையுடன் பார்த்தனர்.

எல்லோரும் உரையாடியபடி உணவருந்திக் கொண்டிருந்தபோது, வசீகரன் மட்டும் யோசனையோடு உணவைக் கொறித்துக் கொண்டிருந்தான்.

“என்ன வசீ, ஏதாவது பிராப்ளமா?” என்றார் சொக்கலிங்கம்.

“நத்திங் டாட்,” என்றான்.

“அப்புறம் என்ன, சாப்பிடாமல் யோசித்துக் கொண்டே இருக்கிறாய்?” என்றார்.

“அது சண்டே… கருணை இல்லத்துக்கு போகலாம்னு இருக்கேன் பா. அந்த இல்லத்தோட நிர்வாகி சதாசிவம் சாரிடம் நேற்று பேசினேன். அங்குள்ள குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்றார். அதற்காக டொனேஷன் கலெக்ட் பண்ணுவது பற்றி ஆலோசிக்க வரச் சொன்னார். கன்ஸ்ட்ரக்ஷன் ஒர்க் நாம பார்த்துக்கலாம். ஆனால் மெட்டீரியல் செலவுக்கான டொனேஷன் மட்டும் தான். அதையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னேன். ஆனா அவர் வேண்டாம் என்கிறார்,” என்றான்.

மகனை ஓரக்கண்ணால் பார்த்த சொக்கலிங்கம், “உன் விருப்பப்படி செய்,” என்றவரது குரல் வெறுமையாக இருந்தது. அந்த மாற்றத்தை உணர்ந்த வசீகரன், அவரை நிமிர்ந்து பார்த்தான். அவரின் முகம் இறுகி இருந்தது.

அவர் எழுந்து சென்றதும், “என்னடா வசீ, அந்த இல்லத்தைப் பற்றி பேசினாலே அவர் டென்ஷன் ஆகிடுவார் என்று உனக்கு தெரியாதா? அவர் இந்த மாதிரி இல்லங்களுக்கு உதவாதவரா? அந்த இல்லம் என்றாலே, நீ திருமணத்துக்கு சம்மதிக்காத காரணம் தான் அவருக்கு ஞாபகத்துக்கு வரும். அதான் நீ தவறா எடுத்துக்காத,” என்றார் அம்மா.

“அதனால்தான் அம்மா, எப்படி கேட்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்,” என்றான்.

“சரி, கவலைப்படாதே. உனக்கு தான் அவரைப் பற்றி தெரியுமே. நீ சதாசிவம் சார் கிட்ட பேசி, இன்னும் ஏதாவது தேவை இருந்தாலும் விசாரிச்சு, முடிந்தவரை அவங்களுக்கு செய்து கொடு. இன்னும் தெளியாமல் இருந்த மகனின் முகத்தை பார்த்தவர், அப்பாவை நான் பார்த்துக்கிறேன். நீ கவலைப்படாதே,” என்றார்.

முகம் மலர்ந்த வசீ, “சரிமா,” என்று பெருமூச்சுடன் திரும்பி நடக்கப் போனான்.

“வசீ, ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். நம்ம மது கூட இந்த வாரம் கருணை இல்லம் போவேனு சொன்னா தம்பி. நல்ல பொண்ணு,” என்றார் ; முகத்தில் புன்னகை மாறாமல்.

அவரை புன்னகையுடன் பார்த்தவன், “அவளை ரொம்ப பிடிக்கும் போல,” என்றான்.

“ஆமாம் டா. அவ என் ஃப்ரெண்ட் பரிமளா மகள். முதலே பிடிக்கும்; இப்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. நல்ல லட்சணமான, அன்பான பொண்ணு. பிடிக்காம இருந்ததான் ஆச்சரியம்,” என்றார் .

அவர் மகனுக்கும் அவளை தான் பிடிக்கும். அவளை மட்டும் தான் பிடிக்கும், எந்த அளவுக்கு பிடிக்குமோ, அதே அளவுக்கு அவளின் மீது கோவம் கொண்டு அவளை விட்டு பிரிந்ததும் , அவளை தவிர யாரையும் பிடிக்காமல் தான் திருமணத்தை தவிர்க்கிறான் என்பதும் அவர் அறியாதது.

அவர் சொன்ன வார்த்தைகள் அவன் மனதை தாக்கின. அவள் நினைவில் மூழ்கத்துடித்த மனதை அடக்கியவன் ஒரு பெருமூச்சுடன் கண்களை மூடித் திறந்தான்.

தான் செய்த மடத்தனத்தை எண்ணி முகம் இறுக, அதற்கு மேல் அன்னையின் முன் தன் உணர்வுகளை அடக்க முடியாது என்று தோன்றியது.

“சரிமா, போய் தூங்குங்க. நேரமாச்சு,” என்றவாறு தனது அறை நோக்கி திரும்பி நடந்தான்.

அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தார் தாய். திருமணம் வேண்டாம் என்று மகன் கூறிய நாளிலிருந்து கணவர் அவன் மீது கோபமாக உள்ளார். அதுவும் திருமணம் வேண்டாம் என்றவனிடம் வாழ்க்கை வாழ பிடிப்பு வேண்டாமா என்று கேட்க்க போய் அவன் அவர்களின் தலையில் குண்டை தூக்கி போட்டான். குறிப்பாக, அந்த குழந்தையை முன்வைத்து திருமணம் வேண்டாம் என்று கூறியதிலிருந்து கோபம் இன்னும் அதிகமானது. வயதும் போய்க்கொண்டிருக்கிறது. எப்படியாவது மகனை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்று எண்ணினார்.

மகனின் வாழ்க்கையை நினைத்து கவலை மேலிட, சமையலறைக்குச் சென்று கணவருக்காக ஒரு டம்ளரில் பாலை காய்ச்சி எடுத்துக் கொண்டு அவர்களது அறைக்கு சென்றார்.

“என்னடி, உன் மகன் என்ன சொல்றான்? கல்யாணம் செய்ய மாட்டேன், அந்த குழந்தையே போதும், அவளுக்காகவே வாழ்வேன் அப்படின்னு இன்னும் உளறிட்டு இருந்தான்னா, நான் பொறுமையா இருக்க மாட்டேன்,” என்றார் கோபமாக.

“அந்த குழந்தையை தத்தெடுக்க வேண்டாம்னு சொல்லல. ஆனா கல்யாணம் பண்ணிட்டு என்ன வேணா பண்ண சொல்லு உன் மகனை. கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் சட்டபூர்வமா குழந்தையை கூட தத்தெடுக்க முடியும். கல்யாணத்துல என்ன பிரச்சனை அவனுக்கு?” என்றார்; கோபம் குறைந்த குரலில் சற்று அங்கலாய்ப்புடன்.

அவரை பார்த்து புன்னகைத்த மனைவி, “விடுங்க, பார்த்துக்கலாம். அவனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு. சொன்னா புரிஞ்சுக்குவான். இப்ப தான் புது விஷயம் சொல்லியிருக்கீங்க. குழந்தையை தத்தெடுக்கவாவது கல்யாணத்துக்கு ஒத்துக்குவான்; இல்லன்னா ஒத்துக்க வைக்கலாம்,” என்றார் நம்பிக்கையுடன்.அவரது மனத்திலும் இந்த இரு நாட்களாக ஒரு எண்ணம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது அதனால் அவரும் முடிவுடன் தான் இருந்தார் .

தனது அறையை அடைந்த வசீகரனுக்கு மனம் நிலைகொள்ளவில்லை. அவள் நினைவுகளை தவிர்க்க முயன்றான்; ஆனால் முடியவில்லை. இதுவரை அவளை நேரில் பார்க்காத வரை அவ்வளவு தாக்கம் இல்லை. இப்போது முடியவில்லை. கண்களை மூடி கட்டிலில் படுத்தவனின் எண்ணங்கள் பின்னோக்கி நகர்ந்தன.

அதே சமயம் மதுமதியும் அதே நினைவில் உழன்றுகொண்டிருந்தாள். முழு நீண்ட நான்கு வருடங்கள் என்ன செய்தும் அவளால் அந்த நினைவுகளை கடக்க முடியவில்லை. நேற்று அவனை பார்த்ததிலிருந்து மீண்டும் அதே நினைவு. இன்றைய நாள்—இந்த நான்கு வருடங்களாக ஒவ்வொரு வருடமும் அவள் கடக்க நினைத்தும் கடக்க முடியாமல் தத்தளிக்கும் நாள்.

அவர்கள் பிரிந்து இன்றுடன் நான்கு வருடங்கள் முடிந்தாலும், ஒருவர்மீது ஒருவர் கொண்ட காதல் இன்னும் மாறவில்லை. அதேபோல், அவள் மீது அவனுக்குள்ள கோபமும், அவன் மீது அவளுக்குள்ள கோவமும் அப்படியே தான் இருந்தது—இருப்பதாக அவள் நினைத்தாள். அவன் அவளுக்காக உருகுவது, அவன் மட்டுமே அறிவான்.

என்னை அதுக்குள் மறந்துவிட்டீர்களா, அல்லது முழுதாக வெறுத்துவிட்டீர்களா? என்னால் அப்படி இருக்க முடியலையே.எப்படி உங்களால் யாரோ போல் என்னை உங்களால் பார்க்க முடிந்தது என்று நினைத்தாள்.எனக்கு உங்கள் மீது உள்ள காதல் உங்களுக்கு என்மேல் இல்லையா என்று நினைத்தவள் மனம் ஏனோ வலித்தது. அன்று போல் இன்றும் அவளது மனம் வலிக்கிறது. பார்த்தும் எந்த உணர்வும் காட்டாமல், யாரோ போல் சென்றவனை அவளால் நிந்திக்காமல் இருக்க முடியவில்லை.

ஆறி இருந்த மனக்காயம், அவன் நினைவுகளால் மீண்டும் திறக்கப்பட்டு இன்னும் வலிக்கிறதா என்று அவளை சோதித்து பார்த்தது . அவளை பார்க்க வென்று, அவன் அவள் கல்லூரிக்கு வந்த நாள். அவளை பார்க்க தான் வந்தான் என்பது பின் நாட்களில் அவன் சொன்னபோது, அவள் அன்று அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அப்படி இருந்தவன் எப்படி இப்படி ஆனான்? அவனின் மீதான வருத்தங்கள், கோபங்கள் இருந்த போதிலும், கூடவே காதலும் அல்லவா இருக்கிறது ? அவனின் நினைவுகளில் ஐந்து வருடங்களுக்கு முன்பு அவளது எண்ணங்கள் பயணித்தது.

அன்று கல்லூரி முடிந்து, மதுமதியும் அவளது தோழிகளும் வந்து கொண்டிருந்தனர். கல்லூரி வாசலில் வசீகரனும் மித்ரனும் நின்று கொண்டிருந்தனர். அதை முதலில் பார்த்த கீதா, "மது அங்க பார்த்தையா?அது நம்ம பேஸ்கட் பால் ஹீரோவா?" என்று சொன்னதும், மதுமதி சட்டென்று அவ்விடம் பார்த்தாள். அங்கே வசீகரன் தனது நண்பனுடன் நின்றிருந்தான் . அவர்களது வகுப்பு தோழி பிரியா, "ஹாய்" என்று அவர்களை பார்த்து கையசைத்தாள். அவர்கள் அருகில் செல்ல, கீதாவோ பிரியா சொன்னது , "இவங்கதா போல?" என்றாள்.

மதுமதி கீதாவை புரியாமல் பார்த்தாள். அதாண்டி பிரியாவோட, "மாமா பையன் அந்த காலேஜ் தான் பேஸ்கட் பால் பிளேயரும். கல்சுரல்ஸ் க்கு அவ வர முடியாமல் போனதுக்கு அவ எவ்வளவு பீல் பண்ணினா!" என்று சொன்னவள்....... பேரு கூட என்று யோசிக்க , “அந்த சில நொடிகளில் இதயம் தாறுமாறாக துடிக்க தொடங்கியது மதுமதிக்கு” மூச்சை பிடித்தவாறு நின்றவள் .....

ஹ .. நியாபகம் வந்திடுச்சு , மித்ரன்னு ஏதோ சொன்னா என்று கீதா சொன்னவுடன் தான் , மூச்சே வந்தது அவளுக்கு ஏன் என்றும் தெரியவில்லை, இது என்ன உணர்வென்றும் புரியவில்லை.அவளின் மனது அவளுக்கே புரியாத புதிராக, புதிதாக இருந்தது .
 
Last edited by a moderator:

Gowri Karthikeyan

Active member
சித்துவை பார்த்து அவன் பொறாமை படறதும்.....இவ அவ பிரெண்ட் ஓட மாமா பையனா இருந்துருவோனோனு பயந்து போறதும்.....

லவ் தானே ஜெர்சி🤭🤭🤭🤣🤣🤣🤣
 
Top Bottom