அத்தியாயம் 28
கடற்கரைச் சாலையின் ஒரு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெகதீஸ்வரனின் வாகனத்திற்குள் அசாத்திய அமைதி.
கை காயத்திற்கு மருந்திட்டு கட்டுப்போட்ட சக்தி, நிலைத்த வழிகளோடு சாலையையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
மாலை மயங்கி இரவும் சூழ ஆரம்பித்தது. விளக்குகளின் வெளிச்சத்தில் தன் அருகே அமர்ந்திருந்த பெண்ணை பார்த்தான் ஜெகதீஸ்வரன். ஒன்றும் பேசாமல் காரைக் கிளப்பினான்.
கேள்வியாக அவன் முகத்தை சக்தி ஏறிட்டுப் பார்க்க, ஒற்றை கையால் வாகனத்தை இயக்கியவன், பதில் ஏதும் பேசவில்லை.
“வலிக்குமே… ஹாஸ்பிடல் போகலாமா?” மெலிந்து போன குரலில் சக்தி கேட்க, திரும்பி அவன் பார்த்த பார்வையில் இதழ்கள் தானாக மூடிக்கொண்டன.
சில நிமிடங்கள் கழித்து, “இது ஹாஸ்டல் போற வழியில்லை...” என்று மீண்டும் சக்தியே பேச்சினை ஆரம்பிக்க,
“ஹாஸ்டல் போறேன்னு நான் சொல்லலையே…” பதில் வந்தது ஜெகதீஸ்வரனிடம் இருந்து.
அரை மணி நேரம் கழித்து அந்த பயணம் முடிவுற்றது சென்னையின் அழகிய கடற்கரையில். வண்டியை நிறுத்தியவன் அவளை திரும்பி பார்க்க எதுவும் பேசாமல் இறங்கினாள்.
அவள் இறங்கியதும் வாகனத்தை பூட்டியவன் முன்னே நடக்க ஆரம்பிக்க பின் தொடர்ந்தாள் சக்தி.
என்றும் இல்லாத வேகத்தோடு அங்கு இருப்பவர்களை தள்ளிவிடும் வண்ணம் இருந்தது கடல் காற்று. நடக்க முடியாமல் தடுமாறியவள் கையை பிடித்தவன் அழுத்தமான காலடி வைத்து நடக்க அவன் காலடியை பின் தொடர்ந்தாள் சக்தி.
அலைகளின் நர்த்தனம் அன்று அதிகமாக தான் இருந்தது, அவர்களின் மனதை போல. எனவே அலைகளுக்கு அருகே செல்லாமல் சற்று இடைவெளி விட்டு அவளை அமர வைத்தவன் அருகில் அமர்ந்தான்.
நீண்ட நெடிய நிமிடங்கள் அமைதியாக கழிய வாய் திறந்தான் ஜெகதீஸ்வரன்.
“என்ன முடிவு பண்ணி இருக்க?” ஜெகதீஸ்வரன் கேட்க, விழித்துப் பார்த்தாள் சக்தி.
"என்ன முடிவு?" மெதுவான குரலில் சக்தி கேட்க,
"நீ தான் சொல்லணும். ஏதோ புத்திசாலித்தனமா முடிவு பண்ணி இருக்கியே?" பற்களை கடித்துக் கொண்டு ஜெகதீஸ்வரன் கேட்க, தலை கவிழ்ந்தது சக்திக்கு.
"சொல்லுடி.." பற்களை கடித்துக் கொண்டு ஜெகதீஸ்வரன் கேட்க,
"நீங்க என்னதான் சொன்னாலும் சரியா வரும்னு தோணல… நான் உங்களுக்கு வேண்டாம். அந்த அம்மா அவங்க பையனுக்கு என்னை கல்யாணம் பேசலாமான்னு நெனச்சது கூட வெளியே தெரியக்கூடாதுன்னு சொன்னாங்க… ஒருவேளை உங்க வீட்ல ஒத்துக்கிட்டாலும், கல்யாணத்துக்கு பின்னாடி... என்னை கல்யாணம் பண்ணதுனால உங்களுக்கு மரியாதை கிடைக்காம போயிடுச்சுன்னா… உங்களுக்கு நான் வேண்டாம்…
பேசுறது ஈஸியா இருக்கும். ஆனா அந்த நிமிஷங்களை கடக்கிறது ரொம்ப கஷ்டம் ஜெகன். உங்களுக்கு அந்த கஷ்டம் வேண்டாம்.
எனக்கு பழகிடுச்சு… ஆசைப்பட்டது கிடைக்காம போய்… வலிச்சு… அழுது… எல்லாம் பழகிடுச்சு. ஒதுக்கி வச்சு மரியாதை இல்லாம நடத்தி எல்லாமே… எல்லாமே பழகிடுச்சு…
என்னை கல்யாணம் பண்றதுனால உங்களுக்கும் அந்த கஷ்டம் வேண்டாம். உங்களுக்கு நான் வேண்டாம்.” என்று மனம் போன போக்கில் கடலை வெறித்தபடி சக்தி பேசிக்கொண்டே இருக்க,
சில நொடிகள் பதில் இல்லை.
அவள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஜெகதீஸ்வரனின் தாடை இறுகியது.
காயப்பட்ட கையில் விரல்களை நெரிக்க ஏற்பட்ட வலியைக் கூட அவன் உணரவில்லை.
அவன் கோபம் பலராமன் மீது இல்லை.
தன்னை தானே குறைத்து மதிப்பிட்டு அமர்ந்திருந்த பெண்ணின் மீது.
ஒரு முடிவோடு நிமிர்ந்தவன்,
“சரி… உன்ன நான் கல்யாணம் பண்ணிக்கல. வேற நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கிறேன். சொசைட்டில எனக்கான எதுவும் குறையாம பார்த்துக்கிறேன். நீ என்ன பண்ண போற?” என்று கேட்டான் நிதானமாக.
“நான் என்ன பண்ணனும்?” புரியாமல் அவள் கேட்க,
“உன்னோட பியூச்சர் பிளான் என்னம்மா?”
“ஃபியூச்சர் பிளான்…” தலை கவிழ்ந்து யோசித்தவள்,
“யோசிக்கணும். எதுவா இருந்தாலும் உங்களோட லைஃப்ல என்னால பிரச்சனை வராது…” என்று அவள் முற்றும் துறந்த தவ யோகி போல சொல்ல,
“வர்ற ஆத்திரத்துக்கு அடிச்சு மூஞ்ச பேத்துடலாமான்னு வருது. ஆனா லவ் பண்ணி தொலைச்சுட்டேன். அதனால பேசாம இருக்கேன்.” பற்களை கடித்துக் கொண்டு வார்த்தைகளை கடித்து துப்பியவன் கண்ணிமைக்கும் நேரத்தில் எழுந்து அவளையும் எழுப்பிக் கொண்டு விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தான்.
“ஜெகன்…” பாவமாக சக்தி அழைக்க,
“பேசாம வாடி. பப்ளிக் பிளேஸ்னு கூட பார்க்க மாட்டேன்…” என்றவன் அவள் முகத்தைக் கூட பார்க்காமல் முன்னோக்கி நடந்து கொண்டிருந்தான்.
காருக்கு அருகே வந்தவன் கதவினைத் திறந்து அவளைப் பின் இருக்கையில் தள்ளியவன் சுற்றி வந்து அவள் அருகே அமர்ந்தான்.
“நெனச்சேன் டி… இப்படித்தான் கிறுக்குத்தனமா எதையாவது யோசிப்பன்னு நினைச்சேன்.
கொஞ்சம் கூட மாத்தாம யோசிச்சு வைக்கிற இல்ல.
தெரியாம தான் கேட்கிறேன் எனக்கு என்ன 18 வயசு, உனக்கு என்ன 16 வயசா? இப்பதான் வாழ்க்கையில மொத தடவையா பொண்ண பாக்குறேனா, இல்ல நீ தான் மொத மொத அல்லி ராஜ்ஜியத்தை விட்டு வெளியே வந்து என்னை பாக்குறியா?
எல்லாத்தையும் மறந்துட்டு காதல்ல தொபுக்கடீர்னு விழுந்து மூச்சு முட்டி சாவுறதுக்கு…
எனக்கு தெரியாதா நீ யாருன்னு? உன்னோட பேக்ரவுண்ட் என்னென்னு தெரியாமத்தான் ப்ரொபோஸ் பண்ணுனேனா? என்ன மாதிரி பிரச்சனைகள் வரும்னு தெரியாமத்தான் நீயும் அக்செப்ட் பண்ணியா?
அப்போ இருந்த தெளிவும் தைரியமும் கான்ஃபிடென்சும் எங்கடி போச்சு?
ஒருவேளை இந்த கல்யாணத்துக்கு வரும் போது மூளையைக் கழட்டி வெளியே வச்சிட்டு வந்தியா?
நல்லவேளை உன் பேச்சைக் கேட்டு ஹாஸ்டல்ல விடாம வந்தேன். அப்படி மட்டும் விட்டுட்டு வந்திருந்தா இந்நேரம் கிளம்பி தன் காணாத தேசத்திற்கு போயிருப்பல்ல… சொல்லாம கொள்ளாம…” என்று பற்களை கடித்து வார்த்தைகளை துப்ப அதிர்ந்து விழித்தாள் சக்தி.
“நெனச்சேன் டி… நீ பாக்குற பார்வையிலையே கன்பார்ம் ஆயிடுச்சு… படிச்சு படிச்சு கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கேன். திரும்ப பைத்தியம் மாதிரி உளர்ற…
என்னடி நினைச்சுட்டு இருக்க… என்னை பாத்தா இஷ்டத்துக்கு பொண்ணுங்க பின்னாடி சுத்துற லோஃபர் மாதிரி தெரியுதா உனக்கு?
எவனோ ஒருத்தன் உன் முன்ன நின்னு கூட பேச தைரியம் இல்லாம முதுகுக்கு பின்னாடி நின்னு பேசின விஷயத்தை கேட்டு முட்டாள் தனமா யோசிப்பியா?
அந்த அளவுக்கு பலவீனமா இருக்கா உன் மனசு, இல்ல, என்னோட காதல் உன்னை பலவீனம் ஆக்கிடுச்சா?
பிரச்சனை வந்தா சேர்ந்து பேஸ் பண்ணனும்…இத்தனை வருஷம் அதைத்தானே பண்ணுன… இன்னைக்கு என்ன புதுசா விலகி ஓட பார்க்கிற?
எவ்வளவு பெரிய பிரச்சினையா இருந்தாலும் எதிர்த்து நின்னு அத சமாளிச்சு நிக்குற என்னோட சக்தி இல்ல நீ… நான் பார்த்து அட்மையர் பண்ண அந்த ஸ்ட்ராங்கான பொண்ணு நீ கிடையாது.
அம்மா அப்பா யாருன்னு தெரியாம போனதுக்கு என்னோட தப்பு என்ன இருக்குன்னு கேட்ட அந்த சக்தியை தான் எனக்கு புடிச்சது…
லவ் பண்றேன்னு சொல்லி வந்து நின்னவன்க கிட்ட இதுதான் நான். என்னோட பேக்ரவுண்ட் இதுதான்னு தைரியமா சொல்லி அவனுங்க புத்திய கண்டுபிடிச்சு செருப்பால அடிச்சு அனுப்புன சக்தி நீ இல்ல…
இந்த சக்தி எனக்கு வேண்டாம். உனக்கு என்ன செய்யணும்னு தோணுதோ செய்…” என்று விட்டு திரும்பி அவன் அமர்ந்து கொள்ள,
தான் சொல்லும் போது வலிக்காத வார்த்தைகள் அவன் வேண்டாம் என்று சொல்லிய நொடி உயிரை பிடுங்கி எறிவது போல வலித்தது சக்திக்கு.
கண்ணீர் கரையுடைக்க, “ஜெகன்…” என்று அழைத்தவளை திரும்பிப் பார்த்தவனின் கண்களில் துளி கரிசனம் இல்லை. இரும்பாக இருந்தான் ஜெகதீஸ்வரன்.
“நான் வேண்டாமா?” பாவம் போல அவள் கேட்க,
“ஆமா வேண்டாம். எனக்கு இந்த சக்தி புடிக்கல…” முகத்தில் அடித்தது போல பதில் வந்தது ஜெகதீஸ்வரனிடம் இருந்து.
“ஜெகன்…” மீண்டும் பாவமாக அவள் கேட்க பதில் இல்லை அவனிடம்.
“ஜெகன்…” மீண்டும் சக்தி அழைக்க,
“கால் மீ சார்…” அழுத்தம் திருத்தமான குரலில் அவன் தங்கள் உறவின் நிலையை சொல்லிவிட, இத்தனை நேரம் கெஞ்சிக் கொண்டிருந்த பெண்ணின் மனம் வீம்பு கொள்ள ஆரம்பித்தது.
“என்னது சாரா?” கண்களில் வழிந்த கண்ணீர் துணி கொண்டு துடைத்தது போல நின்று போயிருக்க லேசாக கோபம் படர ஆரம்பித்தது.
“ஆமா சார் தான்…”
“ஜெகன்…”
“மிஸ்டர் ஜெகதீஸ்வரன் கூட சொல்லலாம். ஆனா ஜெகன் சொல்லக்கூடாது.”
“ஜெகன்…”
“என்னோட ஒய்ஃப் மட்டும் தான் என்னை பெயர் சொல்லி கூப்பிட முடியும்… நீங்க என்ன என்னோட வைஃபா?” ஒட்டாத குரலில் அவன் பேச, லேசாக முளைத்த கோபம் கிளை விட்டு ஆலமரமாக படர ஆரம்பித்தது.
“ஜெகன்…” அழுத்தமாக அவள் கூப்பிட அந்த குரலை உணர்ந்தாலும்,
“ஹலோ மிஸ் சக்தி… பேர் சொல்லி கூப்பிடக்கூடாது… ஐ அம் யுவர் பாஸ். யு ஆர் மை ஸ்டாஃப்… நீங்க சொன்னது போல உங்களுக்கும் எனக்குமான ரிலேஷன்ஷிப் அவ்வளவுதான். டோன்ட் கிராஸ் யுவர் லிமிட்…” என்று அதிகார குரலில் அவன் சொல்ல அவ்வளவுதான்… சக்தியின் ருத்ர தாண்டவம் ஆரம்பமானது.
“லிமிட்? யாருக்கு? எனக்கு லிமிட்டா? கிராஸ் பண்ண கூடாதா?” என்று பற்களை கடித்துக் கொண்டு கேட்டவளின் கண்களில் மனைவிகளுக்கே உரிய கோபம் தெரிந்தது.
“இதுக்கு பேரு தான் பசங்க புத்தியா? எதுடா சாக்கு கழட்டிவிட்டு போகலாம்னு சுத்துர புத்தியா…
மனசு உடைஞ்சு போய் என்னென்னமோ பேசினா சமாதானப்படுத்தணும்…” அவள் சொல்ல சட்டென்று திரும்பி அவன் பார்த்த பார்வையில்,
“ஆ.. ஆங்… ஒரு தடவ சமாதானப்படுத்தினா சரி ஆயிடுமா? ஏன் நாலஞ்சு தடவை சமாதானப்படுத்தினா தலையில இருக்க கிரீடம் இறங்கிடுமா? இதுதான் சாக்குனு ஓட பாக்கறீங்க…
இந்த சக்திக்கே லிமிட்டா? ஜெகன்னு கூப்பிடக் கூடாதாமா… சாரோட வைஃப் தான் கூப்பிடனுமோ… அப்ப நான் யாரு?”
என்று அவள் கேட்க வந்த சிரிப்பினை இதழ்களுக்குள் அடக்கி கொண்டவன் அசையாமல் அவளை பார்க்க,
“சொல்லுங்க சார்… சொல்லுங்க… அப்ப நான் யாரு?” சட்டையை பிடித்துக் கொண்டு அவள் கேட்க, கீழ் குனிந்து அவள் கைகளை பார்த்தான்.
அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லாதவளோ, அவன் முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தவள்,
“சொல்லுடா… அப்ப நான் யாரு?” என்று ஆரம்பிக்க,
அவள் கண்களை ஊடுருவி பார்த்தவன், “நீ தான் சொல்லணும்.” என்றான் அழுத்தமான குரலில்.
“ஏன் சார் சொன்னா வாய் சுளிக்கிகுமா? என்னோட வெய்ஃப் மட்டும்தான் இப்படி கூப்பிடனும் சொல்ல தெரிஞ்சுச்சு இல்ல.. அப்போ நான் யாருன்னு சொல்ல முடியாதோ?
அரை மணி நேரத்துக்கு முன்னாடி பக்கம் பக்கமா டயலாக் அடிச்ச… சக்தி… சக்தி தான் உன்னோட அடையாளம். அதுக்கு மேல வேணும்னா சக்தி ஜெகதீஸ்வரன் அப்படின்னு சொன்னல்ல… திரும்ப நாலு தடவை சொன்னா என்ன குறைஞ்சு போயிடுவியா…” அவள் கேட்க,
"நீ லூசு மாதிரி யோசிச்சிட்டு எதையாவது செய்வ. இல்ல பேசுவ… அதுக்கு நான் உனக்கு எக்ஸ்பிளநேஷன் கொடுக்கணுமா? அதெல்லாம் முடியாது…”
“ஏன் முடியாது?”
“நான் ஜெகதீஸ்வரன் டி.”
“ஊருக்கே ராஜாவா இருந்தாலும் வீட்டில புருஷன் மட்டும் தான். சோ இந்த கெத்து காட்டுற வேலை எல்லாம் இங்க வேணாம்…
நீ ஜெகதீஸ்வரன்னா… நான் சக்தி ஜெகதீஸ்வரன்… இந்த சக்தி கிட்ட இறங்கி போறதில்ல ஒன்னும் குடி மூழுகி போயிடாது…” என்று அவன் சொல்ல வருவது புரிந்தாலும் வீஞ்சிக்கொண்டு அவள் இருக்க, ஆழமாக பார்த்து வைத்தான் ஜெகதீஸ்வரன்.
நிமிடங்களை தாண்டி நீடித்த அந்த பார்வையில் அவன் மார்பில் சாய்ந்து கொண்டு, “ரொம்ப லூசு மாதிரி யோசிச்சுட்டேன்ல… சாரி… இனி இப்படி யோசிக்கக்கூட மாட்டேன்… சாரி பா…” என்று சொல்ல, அத்தனை நேரம் அவளை அணைக்காமல் துடித்துக் கொண்டிருந்த அவனது கரங்கள் அவளை இருகணைத்து தன்னோடு சேர்த்துக் கொண்டது.
சில நிமிடங்கள் அமைதியாய் அந்த இதத்தை அனுபவித்தனர்.
“பசிக்குது…” வயிற்றில் கை வைத்து சக்தி சொல்ல,
அவள் நெற்றியோடு நெற்றி முட்டியவன், “போகலாம்…’ என்று கூறி இறங்கி ஓட்டுனர் இருக்கைக்கு சென்றான்.
அவனைத் தொடர்ந்து இறங்கி தன்னிடத்திற்கு வந்த சக்தியை ஆழ்ந்து பார்க்க ஜெகதீஸ்வரன், “ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங் சக்தி... நம்மள அடிச்சு சாய்க்கணும்னு நினைக்கிறவங்களுக்கு வாங்க அடிச்சுக்கோங்க அப்படின்னு தலையை குனிஞ்சிட்டு நிக்கக்கூடாது சக்தி. நம்ம வாழ்க்கை ரொம்ப பெருசு. இதுபோல நிறைய ஆட்கள் வரத்தான் செய்வாங்க. எல்லாத்தையும் லெஃப்ட் ஹேண்டில டீல் பண்ணிட்டு போய்க்கிட்டே இருக்கணுமே தவிர்த்து அத மனசுக்குள்ள எடுத்தகிறதோ யோசிக்கிறதோ… நம்ம லைஃப்க்கு நல்லது கிடையாது.
இந்த வாழ்க்கை முழுசுக்கும்… சக்திக்கு ஜெகதீஸ்வரன் தான் ஜெகதீஸ்வரனுக்கு சக்தி மட்டும் தான்.” என்று சொல்ல, சமர்த்தாக தலையசைத்தாள் பெண்.
வாகனத்தை இயக்கி சாலையில் கலக்க, சில நிமிடங்கள் கழித்து கலகலத்து சிரித்தாள் சக்தி.
“என்ன?” என்று கேள்வியாக புருவங்களை தூக்கி ஜெகதீஸ்வரன் கேட்க,
“இல்ல கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நாம ரெண்டு பேரும் பேசினத யோசிச்சு பார்த்தேன். சிரிப்பு வந்துருச்சு…
தாரணி… ஆகாஷ் ப்ரோ கூட சண்டை போடும் பொழுது என்ன இது இப்படி சின்ன புள்ளத்தனமா சண்டை போட்டுட்டு இருக்கா அப்படின்னு தோணும்…
இப்போ நாம ரெண்டு பேரும் பேசினது அதைவிட சின்ன புள்ளத்தனமா இருக்கு…” என்று சொல்லி புன்னகைத்தவள்,
“ஆனா ரொம்ப அழகா இருக்கு…” என்றும் சேர்த்து சொல்ல,
“இருக்காதா பின்ன?” என்றான் ஜெகதீஸ்வரன்.
“நெஜமாப்பா… ரொம்ப அழுத்தமா இப்படி தான் பேசணும் இந்த வார்த்தைகள் எல்லாம் பேசக்கூடாது அப்படின்னு ஏதோ சம்திங் ரொம்ப மெச்சூர்டா பிஹேவ் பண்ணனும் அப்படின்னு இருந்த எல்லாமே ஒடஞ்சு நான் நானா உங்ககிட்ட இருந்த இந்த நிமிஷம் நெஜமாவே அழகா இருந்தது…
நிறைய படத்துல… ரோட்ல போறப்ப… புக்ஸ்ல… படிச்ச… பார்த்த… ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் போல சண்டை எல்லாம் போட்டு இருக்கோம்…” என்று அவள் சிரிக்க,
“ம்ம்… டா எல்லாம் போட்டு சண்டை போட்டீங்க மேடம்.” என்றவன் இதழ்களிலும் அழகிய புன்னகை.
“சண்டைல கிழியாத சட்டை எங்கே இருக்கு ஜி? அதெல்லாம் கண்டுக்கப்படாது. மண்டை உடையல்லையே அதை நினைச்சு சந்தோஷப்பட்டுக்கணும்.” என்று அவள் அட்டகாசமாக சிரிக்க, உணவகத்தின் வாசலை காரை நிறுத்தினான் ஜெகதீஸ்வரன்.
சந்தோஷமாக இருவரும் உணவினை உண்டு முடித்து சக்தியை அவளது விடுதியில் இறக்கிவிட்டு வீடு வந்து சேர்ந்த ஜெகதீஸ்வரனை எதிர்நோக்கி கூடியிருந்தது அவனது மொத்த குடும்பமும்.
வரவேற்பு அறையில் உள்ளே நுழைந்த ஜெகதீஸ்வரனை ஆவலாக பார்த்தார் புவனேஸ்வரி.
"வா கண்ணா..." என்று அன்போடு அழைத்தவரை பார்த்து புன்னகைத்த ஜெகதீஸ்வரனை பார்த்த சர்வேஸ்வரன் முகம் அஷ்ட கோணலானது.
அருகில் அமர்ந்திருந்த மகாலட்சுமி, "இப்ப எதுக்கு ஜிஞ்சர் ஈட்டிங் மங்கி போல முகத்தை வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று தெரிஞ்சுக்கலாமா?” சர்வேஸ்வரன் காதுக்குள் கிசுகிசுக்க,
"இப்போ இந்த மாநாடு எதுக்கு நடக்குது?" அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் பதில் கேள்வி கேட்டான் சர்வேஸ்வரன்.
"லூசாப்பா நீ? இவ்வளவு நேரம் சப்பாத்தி முழுங்கும் போது அம்மா சொல்லிக்கிட்டு தானே இருந்தாங்க… அத கேட்டயா கேட்கலையா?” வம்பு வளர்த்தாள் மகாலட்சுமி.
சட்டென்று திரும்பி சர்வேஸ்வரன் பார்த்த பார்வையில், "எதுக்கு இப்போ அனபெல் பொம்மை மாதிரி திரும்பி பாக்குற? முறைக்காத ப்ரோ… அண்ணா கல்யாணத்துக்கு பார்த்ததுல ஒரு இடம் எல்லாருக்கும் புடிச்சிருக்கு. அதை சொல்றதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க… அதுக்கும் உங்க மூஞ்சி இப்படி மாறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு ப்ரோ?" என்று படபடத்தாள் மகாலட்சுமி.
"சம்பந்தம் இருக்கா இல்லையான்னு வெயிட் பண்ணா தெரிஞ்சுடும்..."
"வெயிட் பண்ணா…"
"வெயிட் பண்ணு... வெயிட் பண்ணி பாரு..."
என்று அண்ணனும் தங்கையும் வழக்கடித்துக் கொண்டிருக்க, புவனேஸ்வரி மகனை சாப்பிட அழைத்துக் கொண்டு இருந்தார்.
"கல்யாணத்துக்கு போன நீயே சாப்பிடாம வந்த. பாதில போன ப்ரோ எங்க சாப்பிட்டு இருப்பாரு?" மீண்டும் மகாலட்சுமி சர்வேஸ்வரனின் காதை கடிக்க,
"அதுதான் சொல்றேன் இல்ல கொஞ்சம் வெயிட் பண்ணிப் பாருன்னு…"
"ரொம்ப ஓவரா தான் பில்டப் கொடுக்குற…"
"முக்கியமான விஷயம் பேசணும் இங்க வந்து உட்காரு ஜெகா…" பாட்டி அழைத்து இருக்க, தாயின் முகத்தை பார்த்தபடியே பாட்டியின் அருகே சென்ற அமர்ந்தான் ஜெகதீஸ்வரன்.
"சொல்லுங்க பாட்டி." என்று இயல்பான குரலில் அவன் கேட்க,
"ஒரு சம்பந்தம் வந்திருக்கு ஜெகா… வர புதன்கிழமை பொண்ணு பார்க்க போகலாம்னு உங்க அம்மா யோசிச்சு வச்சிருக்கா… உனக்கு வசதி படுமா?" வரலட்சுமி இயல்பான குரலில் விஷயத்தைச் சொல்லி கேட்டு இருந்தார்.
சில நிமிடங்கள் அமைதியாக இருந்த ஜெகதீஸ்வரன் முடிவுக்கு வந்தவனாக,
"பொண்ணு பாக்க போக வேண்டிய தேவை இல்ல பாட்டி." என்றான் அழுத்தமான குரலில்.
"என்ன சொல்ற ஜெகா?" கண்கள் இரண்டும் கூர்மை பெற ஜெகதீஸ்வரனின் கண்களை ஆழ்ந்து பார்த்தபடி வரலட்சுமி கேட்க,
"நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதுதான்." என்றான் அவர் கண்களை அவனும் ஆழ்ந்து பார்த்தபடி.
வரலட்சுமி திரும்பி சர்வேஸ்வரனையும் மகாலட்சுமியையும் பார்த்த பார்வையில் சத்தம் காட்டாமல் எழுந்தவர்கள் தங்கள் அறை நோக்கி சென்றனர்.
சர்வேஸ்வரன் அறைக்குள் நுழைந்த மகாலட்சுமி, "முக்கியமான நேரத்துல அடிச்சு தொரத்தி விட்டுட்டாங்க... இதெல்லாம் அநியாயம் தெரியுமா... நாம என்ன எல்கேஜி ஸ்டூடண்டா?" என்று குமுறிக் கொண்டு வந்தவள்,
அப்பொழுதுதான் ஞாபகம் வந்தவளாக, "அடப்பாவி அண்ணா உனக்கு எப்ப தெரியும்?" என்று கேட்க,
"கொஞ்ச நாளா டவுட்டா இருந்துச்சு இன்னைக்கு பக்காவா கன்ஃபார்ம் ஆயிடுச்சு…"
"அன்னைக்கு சொன்னியே அதுவா?"
"அதேதான்…"
"அப்போ நம்ப அண்ணி பேரு?"
"சக்தி…"
"சக்தி! சக்தி ஜெகதீஸ்வரன்... அடிபொலி! செமையா இருக்கு… ஆள் எப்படி இருப்பாங்க நீ பார்த்து இருக்கியா?
“நம்ம ஆபீஸ்ல தான் ஒர்க் பண்றா மகா…” என்று அவன் சொல்ல, சட்டென்று முறைத்தாள் மகாலட்சுமி.
“என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் சக்தி. ரொம்ப நாள் சண்டை போட்டு இப்போதான் நீ வா போன்னு பேச ஆரம்பிச்சேன். இப்ப திரும்ப அண்ணி கூப்பிடனும் எல்லாம் என் நேரம்…” என்று தன் போக்கில் சர்வேஸ்வரன் புலம்ப,
“அடச்சை புலம்புறத நிறுத்து ப்ரோ… அண்ணி போட்டோ காட்டு…” என்று கேட்டாள் மகாலட்சுமி.
தனது கைபேசியில் சக்தியின் புகைப்படத்தை சர்வேஸ்வரன் காட்ட, “செம்ம அழகு இல்ல. கண்ண பாரேன்... அண்ணாக்கு சரியான ஜோடி…” என்று மகாலட்சுமி சந்தோஷமாக சொல்ல, கீழே பிரளயம் உருவாகிக் கொண்டிருந்தது.
“யாரது?” வரலட்சுமி இறுகிய குரலில் கேட்க,
“சக்தி…” சொல்லும் பொழுதே மென்மையாக மாறியது ஜெகதீஸ்வரன் குரல்.
அதைக் குறித்துக் கொண்டது பெரியவர்களின் மூவரின் மனமும்.
“எப்படி?” அடுத்த கேள்வி தந்தையிடமிருந்து வர,
“நம்ம ஆபீஸ்ல சீனியர் ஆர்க்கிடெக்ட்…” பதில் சொன்னான் தனயன்.
“நம்ம ஹெட் ஆஃபீஸ்க்கு வந்திருக்க பொண்ணா? லாஸ்ட் வீக் வந்த க்ளைண்ட்ஸ் எல்லாரும் அப்ரிஷியேட் பண்ணிட்டு போன அந்த சக்தியா?” தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதை லோகேஸ்வரன் கேட்க, ஆமாம் என்பதாக அசைந்தது ஜெகதீஸ்வரன் தலை.
அதற்கு மேல் லோகேஸ்வரனுக்கு கேள்விகள் எதுவும் இல்லை. தகுதியான திறமை வாய்ந்த பெண் அவள் என்பது அவருக்கும் தான் தெரியுமே…
ஆனால் அவளது பின்புலம் என்று அவன் யோசித்த நொடி, அதையே கேள்விகளாக மாற்றி கேட்டிருந்தார் வரலட்சுமி.
“அம்மா அப்பா என்ன பண்றாங்க?
கூடப்பிறந்தவங்க எத்தனை பேரு?
குடும்பம் எங்க இருக்கு?
நம்ம இனமா?”
அடுத்தடுத்த கேள்விகள் கூர் ஈட்டியாய் அவனை நோக்கி பாய்ந்து வர,
“ஆஷ்ரமத்துல வளர்ந்த பொண்ணு.” ஒரே வாக்கியத்தில் அனைத்தையும் பொடி பொடியாக நொறுக்கி இருந்தான் ஜெகதீஸ்வரன்.
சில நிமிடங்கள் அசாத்திய அமைதி மையம் கொண்டது.
புவனேஸ்வரியின் கண்கள் கணவனை கேள்வியாக நோக்க, கண்மூடி திறந்து சமாதானம் செய்தார் லோகேஸ்வரன்.
அதற்கு அடுத்து நடந்த வார்த்தை போர் மொத்தமும் பாட்டிக்கும் பேரனுக்கும் இடையே மட்டுமே…
"அப்பா?"
"தெரியாது."
"அம்மா?"
"தெரியாது."
"சொந்தக்காரங்க யாராவது?"
"கிடையாது…"
சில நிமிடங்கள் தேவைப்பட்டது வரலட்சுமி அடுத்த கேள்வியை கேட்பதற்கு.
"வேற என்ன தான் தெரியும் அந்த பொண்ண பத்தி?"
"நீங்க கேட்டதை தவிர்த்து மத்த எல்லாமே தெரியும்."
"அந்த பொண்ணு வேணாம்னா?"
"கல்யாண பேச்சு இனி இல்ல…"
"ஜெகா…"
"சொல்லுங்க பாட்டி…"
"காதலிக்கிறதும் கல்யாணம் பண்ணிக்கிறதும் தனிப்பட்ட உன்னோட விருப்பம் தான்…
ஆனா…"
சிறிது இடைவெளி விட்டவர் தன் மகன் மருமகள் பேரன் என மூவரையும் ஒரு நொடி தீர்க்கமாக பார்த்தவர்,
"உங்க அப்பாவ பெத்தவென்ற முறையில இந்தக் குடும்பத்துக்கு மூத்தவளா நான் யோசிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு…
நீ மட்டுமே இந்த வீட்டோட வாரிசு கிடையாது. உனக்கு அடுத்து ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. அதிலும் ஒருத்தி இந்த வீட்டோட மகாலட்சுமி… அவங்களையும் நான் யோசிக்கணும்…” என்று சொல்லி அவர் நிறுத்த, ஒரு வார்த்தை பேசவில்லை ஜெகதீஸ்வரன்.
புவனேஸ்வரி ஏதோ சொல்ல வாய் எடுக்க, மனைவியின் கையைப் பற்றி தடுத்து பார்வையால் சமாதானம் செய்தார் லோகேஸ்வரன்.
அதையும் கவனித்துக் கொண்டிருந்த பாட்டியையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் அமைதியாக.
"ஒரு பொண்ண பத்தி அவளோட பேர தவிர்த்து வேற எதுவுமே தெரியாம அந்த பொண்ண எப்படி இந்த குடும்பத்தோட மூத்த மருமகளா நான் கொண்டு வர முடியும்?"
அமைதியாக கேட்டார் வரலட்சுமி.
"எனக்கு அவளை தெரியும்."
அதே அமைதியான குரலில் ஆனால் அழுத்தமாக சொன்னான் ஜெகதீஸ்வரன்.
"உனக்கு தெரியும் ஜெகா. ஆனா எனக்கு தெரியாது."
அழுத்தமாக வந்தது வரலட்சுமியின் வார்த்தைகள்.
“உனக்கு அவளோட மனசு தெரியும்.”
“எனக்கு அவளோட வாழ்க்கை தெரியாது.”
“உனக்கு அவளோட குணம் தெரியும்.”
“எனக்கு அவளோட பின்னணி தெரியாது.”
“இந்த இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு ஜெகா.”
அசைக்க முடியாத குரலில் அவர் சொல்ல, அவன் அமைதியாக இருந்தான்.
“நான் இந்த கல்யாணத்துக்கு சரின்னு சொல்லல.”
“தப்புன்னும் சொல்லல.
உனக்கு அந்த பொண்ணு புடிச்சி இருக்கலாம். அது உன்னோட மனசு…
ஆனா இந்த குடும்பத்துக்கு மூத்த மருமகளா யாரு வரணும்னு முடிவு எடுக்குறது என்னோட பொறுப்பு. ”
“அதனால…”
வரலட்சுமியின் பார்வை கூர்மையானது.
“அந்த பொண்ண நீ தேர்ந்தெடுத்திருக்க…
அதனால நான் அந்த பொண்ண பாக்குறேன்…
அவ்வளவுதான்.
அதுக்கு மேல இப்போ எதையும் சொல்ல முடியாது…
இந்த விஷயத்துல குடும்பத்தோட சம்மதமும் உனக்கு வேணும்னு நினைக்கிறேன்…”
வரலட்சுமி இறுக்கமான குரலில் சொல்ல, அவரை ஆழ்ந்து பார்த்த ஜெகதீஸ்வரன் மெதுவாக தலையசைத்தான்.
அறை முழுவதும் அமைதியாக இருந்தது. வீசிச் சென்ற இளம் தென்றலின் சத்தம் கூட இரைச்சலாக கேட்டது அங்கே.
வரலட்சுமி எழுந்து நின்றார்.
“ஜெகா...”
“பாட்டி...”
“நாளைக்கு அந்த பொண்ணுக்கு தகவல் சொல்லு.
நான் பார்க்கணும்.”
சொல்லிவிட்டு தன் அறை நோக்கி நடந்தார். பாதியில் நின்றவர் திரும்பி பார்த்தார்.
“ஜெகா.”
“பாட்டி.”
“ஒரு விஷயம் மட்டும் ஞாபகம் வச்சுக்கோ.”
“காதல் வர்றது சில நிமிஷத்தில…”
“நம்பிக்கை வர்றதுக்கு பல வருஷம் ஆகும்.”
“நீ அவளை காதலிச்சிருக்க… காதலுக்கு எல்லா நேரமும் கண் இருக்கிறது இல்லை…
உன்னோட காதலுக்கு கண் இருக்கா இல்லையான்னு நாங்க தெரிஞ்சுக்கணும்.”
அவ்வளவுதான். சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்று விட்டார்.
மகனை நெருங்கி வந்த புவனேஸ்வரி மகனின் தலையை ஆதுரமாக கோதிவிட்டு தன் கணவனை பின் தொடர்ந்து சென்றார்.
அங்கேயே அமர்ந்திருந்த ஜெகதீஸ்வரனுக்கு அனைத்தும் விளங்கியது,
இது சம்மதம் இல்லை… அதே நேரத்தில் நிராகரிப்பும் இல்லை என்று.
மறுநாளுக்கான உதயம்…
காதல் உள்ளங்களை கனிய செய்யுமா?
மன சுணக்கம் கொண்ட உள்ளங்களை தணியச் செய்யுமா?

Last edited: