• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கண்ணாமூச்சி 16

STN - 35

Member
கண்ணாமூச்சி 16:

சுசியின் வழக்கை தற்கொலை என முடித்திட, தமிழ்செல்வனின் மனம் அனுமதிக்கவில்லை. எத்தனையோ, தற்கொலை கேஸ்கள் வந்திருக்கின்றன தான், ஆனால் சுசியின் விசயத்தில் ஏதோ ஒரு‌ மர்மம் உள்ளது போல், அவன்‌ உள்மனம் அரற்றிக் கொண்டே இருக்க, அதன் பேச்சிற்கு தலைசாய்த்து, சுசியின் கேஸை விசாரிக்க ஆரம்பித்திருந்தான்.

அவள்‌ தற்கொலை செய்யப்பட்டதுக்கு சொல்லப்பட்ட இரு காரணங்கள், ஒன்று கடன் தொல்லை, மற்றொன்று வேலைப்பளு.‌ ஆக, முதலில் அவன்‌ சென்றது சுசி வேலைப் பார்த்த “சுபம்” பட்டு ஜவுளிக்கடைக்கு தான்.

கோவையில் பிரசித்துப் பெற்றது இந்த ஜவுளிக்கடை. விசாரணைக்காக அங்கு‌ சென்றவனை வரவேற்றது, அந்த கடையின் முதலாளியின் பெண்.

சுசியை பற்றிய விசயத்தை கூறியவன், வேலைப்பளு காரணத்தையும் கூற,

“இது பொய் சார், இங்கே அவ்ளோ வேலை கொடுக்கறதில்லை, அதோட நாள்முழுக்க நிக்கிறதும் கிடையாது, அவுங்களுக்குன்னு‌ தனி சேர் இருக்கு. விசேச நாட்கள்ல மட்டும்தான், ஓவர் டைம் அதுக்கும் அமெளண்ட் கொடுத்திடுவோம்.” அப்பெண் கூறியதை கவனமெடுத்துக் கேட்டவன்,

“சிசிடிவி இருக்கு தானே, செக் பண்ணனும்.” என்றபடி அவளை‌ ஆராய,

“சூர் சார், கண்டிப்பா பாக்கலாம் வாங்க” என‌ அவர்களை அழைத்துச் செல்ல, அப்பெண்ணின் பதட்டமில்லா, நிதானத்தை குறித்துக் கொண்டான்.

சுசி இறப்பதற்கு முன்னிருந்த புட்டேஜ்களை‌ காட்ட சொல்லி பார்த்தான், அதில் அப்பெண் கூறியது போல் வேலைப்பளு அதிகம் இல்லாமலே இருந்தது.‌ அதோடு, ஆட்கள் அருகே இருக்கும்போது, சுசி சிரித்து பேசுவதும், ஆட்கள் இல்லாத சமயத்தில், அவள் முகம் கசங்கிபோய் இருந்ததோடு, அடிக்கடி அவள் போன் பேசுவதும் தெரிய, அனைத்தையும் குறித்துக் கொண்டவனிற்கு, வேலைப்பளு காரணம் பொய்யென்று புரிந்தது.

அந்த புட்டேஜ்களை கேட்டு வாங்கிக் கொண்டு புறப்பட்டவனின் விழிகள், சற்று அதிகமாகவே அப்பெண்ணின் மீது பதிந்து பின் விலகின.

அடுத்ததாக, கடன்தொல்லை உண்மையா என விசாரிக்க ஆரம்பித்தவன், சுசியின் தூரத்து உறவுகளை பிடித்து அவளது அம்மா வீட்டு முகவரியை வாங்கியிருந்தான்.

சாதாரண உடையிலயே சென்று மேலோட்டமாய் விசாரித்ததில், தற்கொலை செய்யுமளவிற்கு கடன் இல்லை என்பதும் தெரியவர, சுசியின் மரணத்திற்கு வேறு காரணங்கள் உள்ளது என அவன் மனம் அடித்து கூறியது.

சுசியின் செல்பேன் கைப்பற்றபட்டிருக்க, அடுத்ததாக மேலதிகாரிகளிடம் அனுமதி வாங்கி அதை அவன் திறந்து ஆராய, பல செய்திகள் அழிக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு நம்பருக்கு மட்டுமே, அதிகம்‌ போன் செய்யப்பட்டிருந்ததில், விசாரிக்க அந்த எண் ஐஸ்வர்யா என கண்டுபிடிக்கப்பட்டிருந்தது‌.

அழிக்கப்பட்டிருந்த குறுஞ்செய்திகள் அனைத்தும் மீண்டும் பேக்அப் செய்யப்பட்டிருந்தது. அதில் ஐஸ்வர்யா எண்ணிற்கு மட்டுமே அதிக மெசேஜ்கள் சென்றிருந்தன. கடைசியாய் சுசி இறப்பதற்கு முன், அவளிடம் பேசியிருப்பதும் மொத்தமாய் எடுக்கப்பட்டிருந்தது.

அதிகளவு வாய்ஸ்நோட்டுகளே இடம்பெற்றிருந்தன. ஆரம்பத்தில் சாதாரணமாய் கேட்க ஆரம்பித்தவனுக்கு, பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வர, சற்றே‌ ஆடித்தான் போனான்.

அத்தனை கொச்சனையான பேச்சுகள்! ஆண்மகனான அவனிற்கே கூசிற்று சிலதை கேட்கும்பொழுது. இதில் அவன் கண்டுபிடித்த இன்னொரு விசயம், அனைத்தும் ஐஸ்வர்யா பேசியது மட்டுமே, சில இடங்களில் சுசி பயந்து போயும் பேசியிருக்கிறாள், பல இடங்களில் இவளே ஆரம்பித்தும் வைத்திருக்கிறாள், இன்னும் சில இடங்களில் சுசியை கெஞ்ச வைத்தும் இருக்கிறாள்.

சில குறிப்பிட்ட வருடங்கள் மட்டுமே இந்த வாய்ஸ் நோட்டுகள் இருந்திருக்கின்றன, அடுத்த ஒரு வருடத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லாமல் மீண்டும் ஆரம்பித்திருந்தன. அதில் முழுதும் சுசியின் பயமும், அழுகையும் மட்டுமே இடம்பெற்றிருக்க, ஒரு இடத்தில் பிரணியின் பேரும் அடிபட அனைத்தையும் குறித்துக் கொண்டான்.

அடுத்து அவனது சந்தேக வட்டத்தில் விழுந்தது பிரணிதான்.‌ நிச்சயம் சுசியை பற்றிய உண்மை எதுவோ, அவளிற்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது என ஆணித்தரமாய் நம்பினான்.

இன்னொன்று, ஓரளவு வாய்ஸ்நோட்டுகளை வைத்து சுசிக்கும், ஐஸ்வர்யாவிற்குமான உறவு புரிந்தது. சுசியும் விருப்பட்டே‌ அதை ஆதரித்தது போல்தான் தெரிகிறது, பின் ஏன் இந்த தற்கொலை? அதற்கான விடை பிரணியிடம் மட்டுமே உண்டு என்பதை உணர்ந்தவன், அவளை காண சென்றான்.

சிறிதுநேரத்தில் ராகவனின் இல்லத்தை அடைந்திருந்தவனை,

“வாங்க சார்.”ராகவன் வரவேற்பாய் அழைக்க தலையசைத்தவன், ராகவனின் பின்னே மேலே சென்றான்.

“எனக்கு சுத்தி வளைச்சு பேச விருப்பமில்லை ராகவன், உங்க வொய்ப்க்கிட்ட விசாரிக்கணும்.” என்றவன் பிரணிதாவை பார்க்க, தன்னைப் போல் அவன் பார்வையில் முன் வந்திருந்தாள்.

“அந்த பொண்ணு சுசிலா, ஐஸ்வர்யா பத்தி ஏதும் சொல்லிருக்காங்களா?” என, ஆரம்பமே திகைத்துப் போனவள்,

“இல்லை!” தன்னெஞ்சரிய பொய் கூறினாள்.

“ஓஹ், இதுக்கு முன்ன சுசியோட தங்கியிருந்த ரூம்மேட் பத்தி உங்களுக்கு தெரியாது? அப்பிடித்தானே?” என, இல்லை என தலையசைத்தாள்.

“ஆனா, அங்க இருக்கிற அட்டெண்ட்டர் சுசியோட பழைய ரூம் மேட் பத்தி உங்ககிட்ட சொல்லிருந்ததா, சொன்னாங்களே, அப்போ அது பொய்யா?” என்றிட அதிர்த்துப் போனவள்,

“அது….அது எப்பவோ சொன்னாங்க.”

“எப்போ சொன்னாங்க?”

“மறந்…மறந்துட்டேன் சார்.”

“இன்னும் எவ்ளோ‌ நேரம் உண்மைய மறைப்பீங்க பிரணிதா.” என்றவன் கேட்டிட,

“சார்!” அதிர்ந்து அவள் பார்க்க,

“எங்களை அவ்ளோ முட்டாள்னு நினைச்சீங்களா? சுசி எழுதி வச்ச லெட்டரை வச்சி கேஸ்ஸை க்ளோஸ் பண்றதுக்கு?” பிரணிதாவை உறுத்து விழிக்க, அவளோ பயத்தில் ராகவனை பார்த்திட,

இப்போதாவது உண்மையை கூறிவிடு என்ற கணவனின் விழி மொழியில் மேலும் பயந்துப் போனவள்,

“நான் எதையும் மறைக்கலை‌ சார்.”

“சுசியோட போனை நாங்க ஓபன் பண்ணிட்டோம்.” என்றபடி அவளை பார்க்க, முத்து முத்தாய் வியர்வைகள் அவள் முகத்தில்,

ஆச்சர்யாமா இருக்குல மிஷஸ்.பிரணிதா ராகவன். உங்களுக்கு ஐஸ்வர்யா யாருன்னே தெரியாது, ஆனா ஐஸ்வர்யா சுசியோட கான்வர்சேசன்ல உங்க பேர் வந்திருக்கு.” என்றவனின் நக்கலில் அதிர்ந்துப் போனாள். நிச்சயம் இதனை அவள் எதிர்பார்த்திடவில்லை.

“இப்போவாவது உண்மை என்னன்னு சொல்றீங்களா? இல்லை இன்னும் பல சுசிலாக்கள், அந்த ஐஸ்வர்யாகிட்ட மாட்டி சாகுறவரை வேடிக்கை பாப்பீங்களா?” என,

“சுசியை மாதிரி இன்னும் பல பேரு அந்த ஐஸ்வர்யாகிட்ட மாட்டுனா பரவாயில்லையா?” என்ற ராகவனின் வார்த்தைகள் நினைவு வந்து நெஞ்சத்தை அறுக்க, மெல்ல கணவனை காண, இறுகிப் போனவனின், விழிகள் அவளை காண மறுத்தன.

“நீங்க எனக்கு ஒத்துழைக்கலனா கண்டிப்பா, ஸ்டேசன் போக வேண்டியது வரும்.” என தமிழ்ச்செல்வனின் மிரட்டலில், பயந்துப் போனவள் இதற்கு மேல் உண்மையை மறைப்பது அபத்தம் என உணர்ந்து, ராகவனிடம் திரும்பியவள்,

“லெட்டர்!” என‌ கை நீட்டிட, தனது போன்கேஷில் இருந்ததை எடுத்து தர,

“இது, எனக்கு சுசி எழுதுன லெட்டர்.” என்றபடி அவனிடம் கொடுக்க, கவனமாய் வாங்கிப் படித்தவனின் முகம் எல்லையில்லா கோபத்தை சுமந்திருந்தது.

“என்ன காரியம் பண்ணிருக்கீங்க? எவ்ளோ பெரிய உண்மையை மறைச்சிருக்கீங்க தெரியுமா? படிச்சவங்க தானே நீங்க? அறிவில்லை?
இதை மறைச்சதுக்காவே உங்க மேல என்னால கேஸ் போட முடியும்.” என கோபம் கொண்டு அவன் கத்திட, பயந்து போனவள் வேகமாய் ராகவனை நெருங்கி நிற்க,

“எதுக்காக மறைச்சீங்க இதை? அப்போ உங்களுக்கும் சுசி இறந்ததுல பங்கு இருக்கா, அவளை நீங்களும் சேர்ந்து தான் டார்ச்சர் பண்ணி சாக வச்சீங்களா?” என அடுக்கடுக்காய் குற்றங்களை கூறியவன்,

“இதுல உங்களுக்கும் பங்கிருக்கா? மிஸ்டர்.ராகவன். உங்க வொய்ப் பண்ண குற்றத்துக்கு நீங்களும் துணை போயிருக்கீங்க, ரெண்டுபேருமே‌ இதுல அக்யூஸ்ட்தான், எவிடேன்ஸ்ஸை அழிக்க நினைச்சீங்கன்னு, உங்களை தூக்கி உள்ள வைக்க முடியும்? வைக்கவா?” என்றவன் ராகவனையும் வெளுத்து வாங்கிட, செய்யாத குற்றத்திற்காக அத்தனை பேச்சை வாங்கி கொண்டு இறுகிப் போய் நின்றவனை கண்டு பிரணிதாவிற்கு அழுகை வர,

“சார், இதுல என் ஹஸ்பெண்ட்டுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை, எல்லாத்துக்கும் காரணம் நான் தான் சார், நான் சுசிக்கு பண்ண சத்தியம் தான் காரணம்..” என‌ தொடங்கியவள் ஒன்றுவிடாமல் அனைத்தையும் கூறியிருந்தாள்.

“என் ஹஸ்பெண்ட் அன்னைக்கே இந்த லெட்டரை உங்க கிட்ட கொடுக்கத்தான் சொன்னாரு. ஆனா, என்னாலதான்…” முகத்தை மூடி அழுதவள்,

“நான்தான் அவரை மிரட்டி, கொடுக்க விடாம தடுத்தேன்.” என்றவள் அழுகுரலில் கூறிட,

“படிச்சவங்கதானங்க நீங்க? இது தப்புன்னு உங்களுக்கு தோணலையா?”

“தப்புன்னு தெரியும் சார், ஆனா சுசிக்கு நான் கொடுத்த சத்தியம், அவளை கலங்கப்படுத்திடக் கூடாதுன்னு தான் சார் மறைச்சிட்டேன்.”

“இறந்து போன சுசிக்காக யோசிக்கிற நீங்க, இன்னும் எத்தனையோ பேர் அந்த ஐஸ்வர்யா கிட்ட மாட்டியிருந்து இருக்கலாம். யாராவது வந்து நம்மளை காப்பாத்திட மாட்டாங்களான்னு காத்திட்டு இருக்கலாம். செத்துப்போன சுசியோட பேரை காப்பாத்துறதுக்காக, பல பேரை தெரிஞ்சே சாகவிட சொல்லுறீங்களா?” அவளிடம் இரைந்தவன்,

“உங்க மேல தப்பில்லைனாலும், நீங்க அமைதியா இருந்திருக்க கூடாது ராகவன், நீங்க நினைச்சிருந்தா இந்த லெட்டர் என்கிட்ட வந்து கொடுத்திருக்கலாம், நிறைய வழியும் இருந்திருக்கு.”

“தப்புதான் சார், என் வொய்ப்வோட பயம் என்னை பயமுறுத்திடுச்சு. ஆனா, நிச்சயம் இதை உங்ககிட்ட இருந்து மறைக்கனும்ன்றது என்னோட எண்ணம் கிடையாது. எங்க கல்யாண முடியதான் வெய்ட் பண்ணிட்டு இருந்தேன். நிச்சயம் நாளைக்கே உங்களை வந்து மீட் பண்ணனும்னு தான் இருந்தேன்.”

அவனின் கூற்றை ஆமோதித்த தமிழ்செல்வனிற்கு, பிரணியின் மீது கோபம் தீரவில்லை.

“சுசியை பத்தின விசயம் உங்களுக்கு தெரியும் போதே, நீங்க தைரியமா எங்ககிட்ட வந்திருந்தீங்கன்னா, நிச்சயம் சுசியோட இறப்பு நடந்திருக்காது பிரணிதா.

தேவையில்லாம சுசிக்கு பண்ண சத்தியத்தால, ஒரு உயிர் போனது தான் மிச்சம். அதுவும் இதுல சுசியோட விருப்பம் இல்லாம இங்க ஃபோர்ஸ் பண்ணபட்டிருக்கு. இது ரொம்ப பெரிய குற்றம்.

அட்லீஸ்ட் இப்போவது இந்த லெட்டரை கொடுத்தீங்களே, இல்லைன்னா நீங்களும் ஒரு குற்றவாளியா மாறியிருப்பீங்க, இதுல சம்பந்தமே இல்லாம உங்க ஹஸ்பெண்ட்டும், குடும்பமும் தான் பாதிக்கப்பட்டிருப்பாங்க.

இனியாவது, கொஞ்சம் யோசிச்சு, எந்த சத்தியம்னாலும் பண்ணுங்க. இதை கொடுத்ததோட உங்க வேலை முடியலை, ஐஸ்வர்யாவை கண்டுபிடிக்கிற வரை, நீங்க விக்டிம் தான்.” என்றவன் அவளை காண,

“சாரி சார்.” என்றவளிற்கு அடுத்து பேச முடியவில்லை அழுகையில். தான் செய்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை நன்கு உணர்ந்திருந்தாள். இதில் சம்பந்தமே இல்லாது, ராகவனும் குற்றவாளி ஆக்கப்பட்டதை தான் அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை.

ராகவனிடம் ஒரு தலையசைப்புடன் தமிழ்செல்வன் கிளம்பியிருந்தான்.

“ராகவா!” என‌ வேகமாய் அவனிடம் அவள் திரும்பிட, சட்டென அவளிடமிருந்து விலகி நின்று, அவளை முறைத்தவனின் முகம் கோபத்தில் இறுகிப் போயிருந்தது.

“ராகவா..” என மீண்டும் அவள்‌ பேச முயன்று‌‌ கைப்பிடிக்க, அவள்‌ கையை தட்டி விட்டவன்,

“இப்போ உனக்கு சந்தோசமா? அந்த இன்ஸ்பெக்டர் முன்னாடி வாய் திறக்க முடியாம, அவமானப்பட்டு நின்னதுல, உனக்கு குளுகுளுன்னு இருக்குமே.”

“ராகவா ப்ளீஸ், சாரி..” என்றவள்‌ பேச முயல,

“வாயை தொறந்தின்னா அவ்ளோதான்டி, பேசாமா போய்டு பாத்துக்க.” என திட்டியவன், அங்கிருந்து சென்றிருந்தான்.

குடும்பத்தினரிடம் மேலோட்டமாக மட்டும், பிரணிதா பயத்தில் லெட்டரை கொடுக்காமல் விட்டு விட்டாள் என‌ மட்டும் கூறப்பட்டிருந்தது. அதில் அனைவருக்கும் அதிர்ச்சிதான், இருந்தும் பிரணியை அதிகமாக எதுவும் கேட்காது, மேலோட்டமாய் அவளை கண்டத்திருந்தனர்.

பிரணிதா எவ்வளவு முயற்சித்தும், அவளால் ராகவனிடம் பேச முடியவில்லை. அவள் முகத்தை கூட பார்க்க மறுத்தான்.

அவனின் இந்த அதீத கோபத்தில் கலங்கிப் போனாள் பெண்ணவள். நிச்சயம் இத்தனை பெரிய பிரச்சனையை அவள்‌ யோசித்திருக்கவில்லை.

இரவு வரை, அவள் கண்ணில் சிக்காமல் அவளை எட்ட நிறுத்தியே வைத்திருந்தான். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவனை, அவள் நெருங்கிடும் போதெல்லாம், ஒற்றை முறைப்பில் அவளை‌ நிறுத்திவிடுபவனின் கடுமையில், உள்ளுக்குள்‌ பெரிதும் அடி வாங்கினாள்.

நேரங்கள் மின்னலென மறைந்து, இரவு வந்திருந்தது. மணமக்கள் இருவரையும் உணவு உண்ண அமர வைத்திருக்க, ராகவன் வேகமாய் உண்டவன், அறைக்கு சென்று விட்டிருந்தான்.

பிரணிதாவிற்கு அவனது கோபத்தில், சாப்பாடு சுத்தமாக இறங்கவில்லை.‌ கலங்கும் விழிகளை மறைத்தவள், கொஞ்சமாய் உணவை எடுத்துக் கொண்டாள். ராகவன் முன்னவே அறைக்கு சென்றிருக்க, அவனது அறை வாசலில் நின்றவளுக்கு சிறிது பயமாக தான் இருந்தது.

இருந்தும், தைரியத்தை வரவழைத்து கொண்டு அறையினுள் சென்றவள், அவனைத் தேட, கட்டிலில் அமர்ந்து போனில் தலையை விட்டிருந்தவனின் அருகே சென்று நின்றாள்.

அவளது வருகையை உணர்ந்தும் அவன் நிமிராமல் இருக்க, சில நிமிடங்கள் நின்றவள்,

“ராகவ் மாமா.” என்றழைக்க, பதிலில்லை அவனிடம்.

“மாமா ப்ளீஸ், நான் செஞ்சது தப்புதான். இவ்வளோ பெரிய பிரச்சினை ஆகும்னு நான் நினைக்கலை. என்னை மன்னிச்சிடு ராகவா ப்ளீஸ். செய்யாத தப்புக்கு அந்த இன்ஸ்பெக்டர் உங்களை பேசுனதே எனக்கு கில்ட்டியா இருக்கு.‌ நீங்களும் பேசாம இருந்து அதை அதிகப்படுத்தாதீங்க.

இனி, இப்புடி யோசிக்காம முட்டாள்தனமான எதுவும் பண்ண மாட்டேன் ராகவா. என்மேல கோபமா இருக்கன்னு தெரியுது, ஆனா ப்ளீஸ் கோபப்படாதீங்க, நான் தப்புதான் ப்ளீஸ் சாரி.” என்றவள் கலங்கிய விழகளுடனே பேச, அவள் பேசும் வரை காத்திருந்தவன், அடுத்த நிமிடம் கையை கொண்டு கண்களை மூடி படுத்துக் கொண்டான்.

அதில் முகத்தில் அறை வாங்கியது போல் உணர்ந்தவள், பெருகிய கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு, அவனிற்கு மறுபுறம் சென்று படுத்துக் கொண்டாள்.

கணவனின் கோபத்தை குறைக்க வழி தெரியாது, மேலும் அழுகை வர, இதழ்களை கடித்து கட்டுப்படுத்தியவள், வெட்கத்தை விட்டு,

“ராகவா!” என மீண்டும் அழைத்திட,
பட்டென அவன் எழுந்தமர்ந்த வேகத்தில், இவளும் வேகமாய் எழுந்திட,

அருகிலிருந்த தண்ணீரை அவன் குடிப்பதற்காக எடுத்திட, வேகமாய் வந்தவள், தான் எடுத்து வந்திருந்த பாலை அவனிடம் நீட்ட, வாங்காது இருந்தவனை கண்டு,

“ராகவா ப்ளீஸ்!” என்றதில், அவள் முகம் பார்க்காது வாங்கி ஒரே மடக்கில் குடித்தவன், மீண்டும் படுத்துக் கொள்ள,
பிரணிதா நகராது, அவனையே பார்த்த வண்ணம் இருந்ததில், லைட்டை அணைத்து விட்டிருந்தான்.

‘இதற்கு மேலுமா அவன் கோபத்தை அறியாமல் இருக்க முடியும்?’ தன்னையே நொந்துக் கொண்டவள், அவளிடத்தில் வந்துப் படுத்துக் கொண்டாள்.

இத்தனை மோசமாய் இந்நாள் முடியும் என சுத்தமாய் அவள் நினைக்கவில்லை. எத்தனை ஆசையாய், எதிர்ப்பார்ப்புமாய் எதிர்பார்த்த நாள் இது.

அத்தனை எதிர்பார்ப்பும் இன்று ஒன்றுமில்லாமல் போயிருந்தது. எல்லாம் அவளால், அவள் செய்த தவறினாள்! அவள் முகத்தை கூட பார்க்க மறுக்கிறான் அவள் கணவன்.

எத்தனை இனிமையான நிகழ்வு இது, அதை அவளே கெடுத்துக் கொண்டாள் என நினைக்கையிலே, பெரும் கேவலம் ஒன்று வெடிக்க தயாராக, அதனை சிரமப்பட்டு அடக்கியவளுக்கு,

ராகவனின் கோபமும், அவனின் இன்றைய முகம் கூட பார்க்காதா செயலும், அவளது கேவலை வெடிக்க செய்ய முயல, அடுத்த நிமிடம் அவளது கேவல், ராகவனின் இதழ்களுக்குள் சத்தமில்லாமல் வெடித்திருந்தது.

நடப்பதை புரியாமல் விழித்தவளுக்கு, சிறிது நேரம் கழித்து உணர்வு வர, சற்றுமுன் நடந்ததை ரீவைண்ட் செய்திட,

அழுகை வெடிக்க முயன்ற நொடி, அவளது இடுப்பை அழுந்த பற்றி ஒரே புரண்டலில் தனது பக்கம் திரும்பியிருந்தவன், அவள் இதழ்களுக்குள் நிறைந்திருந்தான்.

உணர்வு வந்த நொடி, அவனின் தோளில் சராமாரியாக அடித்து அவள் விலக முயல, கன்னத்தையும், கழுத்தையும் அழுந்த பற்றியிருந்த அவனது விரல்கள், அதற்கு தடையிட்டன.

அடித்தடித்து ஒரு கட்டத்தில் ஓய்ந்தவள், பின் அவனின் விருப்பத்திற்கே விட்டவளின் கைகள், அவன் கழுத்தை சுற்றி தனக்கு இன்னும், நெருக்கமாய் இழுத்துக் கொண்டன.

வெகுநேரம் நீடித்த இதழ் யுத்தத்தில், அவனிற்கு மூச்சு வாங்கிய பிறகே, அவளில் இருந்து பிரிந்தவன், அவள் முகத்தோடு முகம் புதைத்துக் கொள்ள, அவனின் விரல்கள், அவள் பச்சைக்கல் ஜிமிக்கியை தான் வருடியது.

“இவ்ளோ நேரம், எப்புடி பயமுறுத்திட்ட ராகவா நீ? கோபமாதானே இருந்த, இப்போ என்ன?” என்றதும் அவளில் இருந்து சற்று விலகி,

“அப்போ நான் கோவமாவே இருக்கட்டுமா?” என்றவனின் முறைப்பில் மீண்டும் அவள் விழிகள்‌ கலங்கிட,

“மூச்! கண்ணுல இருந்து தண்ணி இறங்கிச்சு அவ்ளோதான் பாத்துக்க.
செய்றதையும் செஞ்சிட்டு அழுகை வேற வருதா உனக்கு?

அன்னைக்கு எத்தனை தடவை சொன்னேன், என் பேச்சை கேட்டிருந்தா, இன்னைக்கு அந்த இன்ஸ்பெக்டர் முன்னாடி, நான் தலைகுனிச்சு நின்னுருப்பேனாடி?

நீயும்தானே இருந்த, என்னையும் சேர்த்து தானே அக்யூஸ்ட் லிஸ்ட்ல வச்சாரு. ஏதோ அந்த இன்ஸ்பெக்டர் நல்லவிதமா இருக்க போயி, இதோட விட்டுருங்காங்க,

இல்லைன்னா என் ஆகிருக்கும், அவர் சொன்ன மாதிரி எவிடேன்ஸ்ஸை அழிக்க பார்த்தோம்னு உள்ள தூக்கி வச்சிருப்பாங்க.

நம்ம வாழ்க்கைய ஆரம்பிக்கிறதுக்குள்ள, இதெல்லாம் தேவையாடி நமக்கு.” என்றவனின் அதட்டலில்,

“சாரிங்க, இதுல உங்களையும் சேர்ப்பாங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்ல. சுசிக்கு பண்ணி கொடுத்த ப்ராமிஸ்காக மட்டும்தான் நான் இதை மறைக்க நினைச்சேன் தவிர, வேறு எந்த எண்ணமும் எனக்கு இல்லை.”

“நீ பண்ணிக் கொடுத்த சத்தியத்துக்கு கட்டுப்பட்டு, இன்னும் எத்தனையோ பேர் அந்த ஐஸ்வர்யா கிட்ட மாட்டி செத்துருந்தாங்கன்னா, உனக்கு சந்தோசமா இருந்திருக்குமா?”

“ம்ஹீம், இல்லை.”

“அந்த குற்றவுணர்ச்சியே உன்னை இயல்பா இருக்க விடாம பண்ணிருக்கும்தானே யுகா, அதுக்கு இது பரவாயில்லை, நீ சத்தியத்தை மீறிட்டதான் இல்லைன்னு சொல்லலை, அதால ஒரு நல்லதுதான் நடந்துருக்கு.

சோ, நீ கொடுத்த வாக்கை காப்பாத்த முடியலையேன்னு கவலைப்படாதே யுகா. அந்த லெட்டர் நம்மக்கிட்ட இருந்திருந்தா, இன்னும் பெரிய பிரச்சினை ஆகியிருக்கும். நான் சொல்றது உனக்கு புரியுது தானே?”

“ம்ம்ம் புரியுது ராகவா. என் நல்லதுக்குதான் நீயும் சொல்ற.” என்றவள் அவனை அணைத்துக் கொள்ள,

அவள் தலையை இதமாய் வருடிவிட்டு, அமைதியாய் இருந்தவனுக்கு, அவளது நெருக்கம், அவஸ்தையை கூட்டிட,

“யுகா!” என ஜிமிக்கியில் முத்தமிட்டு அழைக்க,

“ம்ம்ம்” என,

“உன்னோட அழுகை, குற்றவுணர்ச்சி எல்லாம் போய்டுச்சா?”

“எதுக்கு கேட்குறீங்க?”

“இந்த நேரத்தை வேஸ்ட் பண்ணலாமுன்னு தான்.” என்றவனின் இதழ்கள் அவள் முகம் எங்கும் வலம் வர, விரல்கள் அவள் உடலில் எல்லா இடமும் பயணித்தது.

“வேஸ்ட் பண்ணுவீங்களா? எப்புடி?” சிறு சிரிப்புடன் அவள் கேட்டிட,

“எல்லாரும் பேசியே நேரத்தை வீணாக்குவாங்க, நம்ம பேசாமலே வேஸ்ட் பண்ணுவோம்.” அவளிடம் நெருக்கத்தை கூட்டிய படியே அவன் கேட்க,
பதில் எதுவும் பேசாமல் அவள் அவனுள் புதைந்திட,

“சொல்லு யுகா?”

“****”

“இந்த நேரத்தை வேஸ்ட் பண்ணலாமா?”

“ம்ம்ம்!” என்றவளின் மெல்லிய முணங்களையும் வெளியே வர விடாது, நேரத்தை வீணாக்க ஆரம்பித்திருந்தான்.

இருவரது காதலும், உரிமையும் அதிகளவு அங்கே ஆட்சி செய்தது. அவள் கழுத்தில் அழுந்த பதிந்த அவனது இதழ்கள், அவளை வேறு ஒரு உலகிற்கு அழைத்து செல்ல, விரும்பியே சென்றாள்.

மென்மையாய் அவளை ஆராதிக்க ஆரம்பித்தவனின் மென்மை தொலைந்து வன்மையாகும் சமயங்களில் எல்லாம்,

“ராகவா!” என்றவளின் அதட்டல் அவனை கட்டுப்படுத்திட முயல, அதற்கு பயனில்லாமல் போனது.

அவளது சிணுங்கல்களை எல்லாம் தனக்குள் அழகாய் உள்வாங்கி கொண்டவன், அவள் மேல் பித்தாகி கிடந்தான்.

“யுகா!” என்றவனின் அழைப்பு பெரும் தாபத்திலும், மோகத்திலும் வெளிவர,

“ராகவா!” என்றவளின் சிணுங்கல் மொழி மேலும் அவனை போதையாக்கியது.

அத்தனை வேகம் அவனிடம்! வேகத்தில் நிறுத்தி, நிதானமாய் அணுஅணுவாய் அவளை ரசித்தே ஆட்கொண்டான். இதழ்களும், விரல்களும் பெண்ணவளை துவண்டு போகும் வேலையை செவ்வனே செய்திட,

“ராகவா!” என்றவளிற்கு வேறு‌ வார்ர்த்தைகள் மறந்துவிட்டது போலும்.

அந்த ராகவனையும் சில நேரம் வெளியே வர விடாது, அவனது இதழ்களுக்குள்ளே தொலைந்துப் போக செய்திருந்தான்.

அழகாய் அவளை தனக்குள் உள்வாங்கி, தன்னை அவளிற்கு கொடுத்து, சின்ன சின்ன சீண்டல்கள் செய்து, அவளை சீண்டி வெட்கமடைய செய்து, சிணுங்க வைத்து,


முழுதாய் அவளுள் தன்னை நிறைத்துக் கொண்டவனின், முகம் அவள் கழுத்துவளைவில் ஆழப் புதைந்துக் கொண்டு ஆசுவாசமடைய, அவளது இடை அவன் கரத்தால், வளைத்து நெறிக்கப்பட்டது.

பலநாள் ஏக்கங்கள், ஆசைகளை எல்லாம் அந்த ஒற்றை இரவில் தீர்ந்துக்‌ கொண்டவன், அவளை முத்தமிட்டே களைப்படைய செய்திட, இரவின் நிசப்தத்தில் அவளது சிணுங்கல் மொழிகள் இசையாய் மாறிப் முடியாமல் நீண்டு கொண்டே போனது.

இரவின் அயர்ச்சியில் விடிந்தபின்னும் இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

பிரணியின் செல்போன் விடாது அலாரத்தை ஒலித்ததில், இருவரது உறக்கமும் கலைந்தது. விழிகளை மலரத்தியவர்களுக்கு முதலில் தென்பட்டது அவர்களது நெருக்கம் தான்.

இருவரின் நெருக்கநிலை கண்டு, ராகவனிற்கு சிறிது வெட்கம் பிறந்திட, அதனை மறைக்கும் பொருட்டு, மேலும் அவள் கழுத்துவளைவில் முகத்தை புதைத்திட, அதில் கூசி சிலிர்த்தவள்,

“ராகவா!” என்றபடி அவனது முடியை பற்றி இழுத்து, எழுப்பிட, அவள் கழுத்துவளைவில் ஒரு முத்தத்தை பதித்துவிட்டு, சிரிப்புடன் நிமிர்ந்தவன் அவளை பார்த்து கண்சிமிட்டி, இருவரது நெருக்க நிலையையும், விழிகளால் சுட்டிகாட்ட,

அதில் வெட்கத்தில் சிவந்துப்போய், அவன் மார்பிலே முகத்தை மறைத்து கொண்டவளின், கூந்தலில் முகம் புதைத்துக் கொண்டவனிற்கு அவளது வாசனை கிறக்கத்தை கொடுத்ததில், அவளுள் மூழ்க தொடங்கி, அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறிய
வனின் செய்கைக்கு விருப்பட்டே இழைந்து, இசை மீட்டினாள் ராகவனின் யுகபிரணிதா.

பின், எழுந்து இருவரும் குளித்து, தயாராகி கீழே வர குடும்பத்தினர் அவர்களை தங்கள் வசப்படுத்திக் கொண்டனர். அடுத்தடுத்து மணமக்களுக்கான சில வேலைகள்‌ சொல்லப்பட, அதில் பிசியாகினர் இருவரும்.









 
Top Bottom