கண்ணாமூச்சி 2:
தனக்கு தேவையான துணிகளை பெட்டியில் அடுக்கி கொண்டிருந்தாள் பிரணிதா. இன்றைய இரவு டிரெயினில் கோயம்புத்தூர்க்கு செல்கிறாள். நேற்றோடு அவள் கையாண்டு கொண்டிருந்த ப்ரோஜக்ட்டை எல்லாம், முடித்து சஞ்சயிடம் ஒப்படைத்திருந்தாள்.
“ஹல்லோ கேட்குதா? ம்ஹீம் இல்லை, இல்லை நல்லாத் தெரியுதா சின்னகுட்டி.” அழைப்பேசியை கையில் வைத்திருந்தப்படி அவள் முன்னயும், பின்னரும் வீடியோ காலில் பேசியபடி நடந்துக் கொண்டிருந்தார் பவுனம்மாள்.
அவரை ஒரு பொருட்டாக கூட மதிக்காது, தனது வேலையை கவனித்துக் கொண்டிருந்தாள் பிரணிதா.
‘அவளிற்கு தெரியாத என்ன யார் திரையில் இருக்கிறார்கள் என்று? இதோ இப்போது கூட அவளைத்தான் காட்டிய வண்ணம் நடந்துக் கொண்டிருக்கிறார்’ என்பதும் அவள் அறிந்ததே.
இன்று? நேற்றா? இது தொடர்கிறது? அவள் கோபப்படுவதற்கு. அவள் இங்கு வந்த காலம் முதலே இது வாடிக்கைதான். ஆரம்பத்தில் கோபத்தில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து அழுதவள், நாளடைவில் பழகி கொண்டாள்.
அவள் கோபப்பட்டு மட்டும் என்ன ஆகிவிட போகிறது? பவுனம்மாள் அமைதியாக இருப்பவரா என்ன? அவள் இங்கு வந்த காலம் முதல், இப்போது அவள் உள்ளவரை அனைத்து புகைப்படங்களும், அங்கே இருப்பவர்களுக்கு தவறாது சென்று விடும். அங்கே இருப்பவர்களின் புகைப்படங்களையும் இவளிற்கு காட்ட அத்தனை முயற்சியையும் எடுத்தார் பவுனம்மாள், இதோ இப்போது வெளியே ஹாலில் கூட புகைப்படம் மாட்டப்பட்டிருக்குமே!
இருந்தும் அதனை கண்டும் காணாதது போல் கடக்க பழகி கொண்டாள்.
துணிகளை வைத்துக் கொண்டிருந்தவளுக்கு, உள்ளுணர்வு உறுத்த ஆரம்பித்திருந்தது.
‘அவன் பார்த்துக் கொண்டிருப்பானே!’ என்று. அதற்கு மேல் அவளால் இயல்பாய் இருக்க முடியாது போக,
சட்டென எழுந்து வெளியே சென்றிருந்தாள்.
பவுனை வெளியே போக சொல்லியிருக்கலாம்தான், ஆனால் அவளது குரலை கேட்கதான் அவர்கள் ஆர்வமாக, மகிழ்ச்சியாக காத்திருக்கின்றனரே! அந்த மகிழ்ச்சியை அவர்களுக்கு கொடுக்க விரும்பவில்லை அவள். ஏதோ அவளால் முடிந்த சிறு தண்டனை, அதில் தன்னை திருப்திபடுத்திக் கொள்கிறாள்.
இரவு உணவினை முடித்துவிட்டு, அனைவரும் ரயில்நிலையம் சென்றனர். நேற்றே தக்கலில் புக் செய்திருந்தாள். தோரயமாக நாளை காலை ரயில் சென்றுவிடும் கோயம்புத்தூருக்கு.
“அங்கே, பி.ஜில சொல்லிட்டதானே பிரணி?”
“சொல்லிட்டேன் மாமா, காலையில வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்னு.”
“ஸ்டேசன் ரீச்சனாதும் கால் பண்ணு, அங்கிருந்து பி.ஜிக்கு போக ஒரு மணி நேரம் மேல் ஆகும் போல, விசாரிச்சு ஆட்டோ இல்லைன்னா கேஃப் புக் பண்ணிடு.”
“சரிங்க மாமா!”
“கடல் போல அங்க வீடு இருக்க, ஹாஸ்டல்ல தங்குறாளாம்.” பவுனம்மாள் அனைவருக்கும் கேட்கும்படியே முணுமுணுக்க,
“கடல் போல வீட்டுல, அந்த குடும்பத்து ஆட்களுக்கு மட்டும்தான் இடம் அம்மாச்சி. மத்தவங்களுக்கு கிடையாது.” நறுக்கென பதில் வந்தது பிரணிதாவிடம் இருந்து.
“நீ போனா வேண்டாம்னா சொல்ல போறாங்க?”
“ஏற்கனவே வேண்டாம்னு சொல்லித்தானோ துரத்தி விட்டாங்க, மறந்திட்டீங்களா என்ன?” கசப்புடன் வார்த்தைகள் வெளிவர,
“அது உன்னோட வீம்பு…”! என்றவரை,
“அத்தை, போதும். கிளம்பு போது அவளை நிம்மதியா போக விடுங்க.” திலகாவின் பேச்சில் அவரை முறைத்தார் பவுனம்மாள்.
“ஆகாஷ், விளையாட்டை எல்லாம் தூக்கி பரண்ல போட்டுட்டு, ஒழுங்கா படிக்கனும். டியூசனுக்கு மட்டம் போடக் கூடாது, இந்த வருசம் டென்த் ஞாபகம் இருக்குல்ல.”
“சரி பிரணி, நீயி அப்பப்ப போன் போடு” என்றவனின் குரல் அழுகையில் கரைய தயராக,
“பிரணி லீவுக்கு இங்க வந்திடனும், இல்லைன்னா நான் உன்னை பார்க்க வருவேன்.” ஷர்மிதா அவளை அணைத்து பிடித்து அழுதிருந்தாள்.
“கண்டிப்பா வந்திடுறேன்டா ஷர்மி, சேட்டை பண்ணாம, அம்மாச்சிக்கிட்ட வம்பிழுக்காம இருக்கனும் இரண்டு பேரும் சரியா.” என ஆறுதல்படுத்த,
தலையை சிலுப்பிக் கொண்டு பவுனம்மாளை முறைத்துப் பார்த்தான் ஆகாஷ் முடியாது என்பதை போல்.
ரயில் கிளம்புவதற்கான அறிவிப்பு வந்துவிட, அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பியவளின் தொண்டை அடைத்தது. நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்று தான் முதல் பிரிவு அவர்களுக்குள். விழிகள் லேசாய் உடைப்பெடுக்க, தான் கலங்குவதை கண்டால் குடும்பமே கலங்கும் என நினைத்து, தன்னை அடக்கி கொண்டவள், தலையசைத்து விடைபெற்றவள், அருகில் இருந்த ஆகாஷின் தலையை கோதிவிட,
“பிரணி!” என அழுகையுடன் அவளை கட்டியணைத்திருந்தான் ஆகாஷ்.
கைக்குள்ளே வளர்ந்து, எந்நேரமும் அவள் பின்னரே வால்பிடித்து திரிந்தவனை பிரிவதை நினைத்து அவள் மனம் கலங்கிற்று.
‘மூன்று மாதங்கள் மட்டுமே!’ என தன்னையே திடப்படுத்திக் கொண்டவள், அவனையும் சரிசெய்து ரயிலேறியிருந்தாள்.
அதுவரை அவளிற்கு காட்டாது தங்களது கண்ணீரை அடக்கி வைத்திருந்த பெரியவர்களின் கண்கள் தானாய் கலங்கியது.
பேத்தியின் பிரிவு பவுனம்மாளை மிகவும் தாக்கிட, இருந்தும் அவளது நலத்திற்காக அதனை தாங்கி கொண்டவருக்கு, விழிகள் உடைப்பெடுத்தது.
**************
கிணத்துக்கடவு கோயம்புத்தூருக்கும், பொள்ளாச்சிக்கும் இடைப்பட்ட ஊர். இருபது நிமிட இடைவெளி மட்டுமே இரண்டு ஊர்களுக்கும்.
கிராமமும், பசுமையும் அதே சமயம் நகர தோற்றத்தையும் கொண்டிருக்கும் ஊர் அது.
அந்த கிணத்துக்கடவில் “கொப்பரை மில்லுக்காரர் வீடு” என அழைக்கப்படும் மாணிக்கத்தின் வீடு பரபரப்பாய் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
“ராசுக்குட்டி, ட்ரெயின் எங்கன வந்திட்டு இருக்குன்னு அய்யனுக்கு பாத்து சொல்லுடா.” சாமியறையில் இருந்து குரல் கொடுத்தவாறு வந்தார் மாணிக்கம். நல்ல திடகாத்திரமான உடல், நெற்றியிலும் கழுத்திலும் விபூதி பூசப்பட்டிருந்தது.
“ராசு” என அழைக்கப்பட்ட நிரஞ்சன்,
“அப்பா, நேத்து நைட்ல இருந்து இதையேத்தான்ப்பா கேட்குறீங்க, இன்னும் வர்ற நேரமிருக்குப்பா. ட்ரெயின் பத்துமணிகிட்ட தான்ப்பா வரும். இப்பதான் மணி அஞ்சாகப் போகுது, இப்பவே ஏன்ப்பா, எழுப்பி உட்கார வச்சிருக்கீங்க.” என அழும் குரலில் பேசியவனை கண்டு சிரித்து வைத்தாள் அவனது இரட்டையான யாழினி.
“உனக்கென்னடி சிரிப்பு?” அவள் தலையில் ஓங்கி கொட்ட,
“போடா, எருமை” பதிலுக்கு கொட்டிவிட்டு அவள் ஓடியிருக்க,
“ராசு, ஒரு தரம் பாருடா செல்லம்ல” வாஞ்சையாய் அவன் தலையை தடவி மாணிக்கம் கூறிட,
“ ********* ஊர் கிட்ட வந்துட்டு இருக்குப்பா. இன்னும் நேரமிருக்கு நான் தூங்குறேன் ப்பா.” என்றபடி அமர்ந்திருந்த சோபாவிலயே படுத்து விட்டான். நேற்றைய இரவிருந்து அவனை பாடாய் படுத்திக் கொண்டிருந்தார் மாணிக்கம்.
பொழுதே லேசாக இருள் பிரிய தொடங்கிய சமயம், வந்தனர் கவிதாவும், விமலாவும் மாணிக்கத்தின் உடன் பிறப்புக்கள்.
“அண்ணே!” என்றழைத்தப்படி வந்தவர்களை கண்டவர்,
“வாங்க, வாங்க மாப்பிள்ளைங்க எங்க காணலை?”
தங்கைகள் இருவரையும் கோயம்புத்தூரில் ஜவுளிக்கடை வைத்திருக்கும் குடும்பத்தில் அண்ணன், தம்பியான முத்துவேல், தங்கவேல் இருவருக்கும் கட்டி கொடுத்திருந்தார், ஆரம்பத்தில் கோயம்புத்தூரில் இருந்தார்கள்.
அண்ணன், தம்பியின் ஒற்றை தங்கை மாலதி துபாயில் செட்டிலாயிருக்க, அப்பாவை இழுந்து தனித்திருந்து அம்மாவை தன்னுடன் துபாய்க்கு கூட்டி சென்றுவிட்டாள். சுந்தரிக்கும் பெண்ணுடன் இருப்பதற்கே பிரியம் இருக்க, மகன்களும், மருமகள்களும் சரியென்று விட்டனர்.
அதற்கு பின், அண்ணன் தனியாய் இருப்பதை தாளாது, தங்களது கணவன்களிடம் பேசி தங்களது ஜாகையை கிணத்துக்கடவிற்கு மாற்றிக் கொண்டனர் அக்கா தங்கை இருவரும்.
ஆரம்பத்தில் ஒரே வீட்டில் தான் அனைவரும். பின் பிள்ளைகள் தலையெடுக்க, அருகிலிருந்த குடும்ப நிலத்தில் பெண்கள் இருவருக்கும் தனி வீடு கட்டிக் கொண்டு அங்கே குடியேறி இருந்தனர்.
“இரண்டு பேரும் நேத்து சரக்கு எடுக்க போயிட்டு லேட்டாத்தான் வந்தாங்க அண்ணா, கொஞ்சம் லேட்டா வாங்கன்னு சொல்லிருக்கு” என்ற கவிதா,
“அண்ணி எங்கண்ணா?” எனும் போதே,
“வாங்க, வாங்க ரெண்டு பேரும். இருங்க டீ எடுத்துட்டு வரேன்.” என்றபடி அடுக்களை சென்றார் அவ்வீட்டின் தலைவி பூர்வா.
அவரின் முகத்தை பார்த்த, அக்கா தங்கை இருவரும் திரும்பி அண்ணனை பார்க்க,
“நேரத்துல இருந்து, இப்புடித்தான் இருக்கா அமைதியா ஆனா முகம் மட்டும் சந்தோசத்துல பூரிச்சுப் போயிருக்கு” மாணிக்கம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, டீயுடன் வந்திருந்தார் பூர்வா.
“இன்னும் கிளம்பலையா பூர்வா அண்ணி நீங்க?” விமலா கேட்க,
“கிளம்பிட்டேன், கிளம்பிட்டேன் அண்ணி நீங்க டீயை குடிங்க, நான் வந்திடுறேன்” என்றபடி அறை நோக்கி சென்றிருந்தார்.
“ராகவ் எங்கே கவிதா? நேத்து நைட்ல இருந்து பாக்க முடியலையே அவனை.”
“பொள்ளாச்சிக்கு தேங்காய் லோடு ஏத்த போய்ருக்காண்ணே.”
மாணிக்கத்தின் குடும்ப தொழில் தேங்காய் விபரம். கோவையில் பிரசித்திப்பெற்ற “தென்னைவனம் கொப்பரை மில்” இவர்களதாகும்.
ராகவ் எனப்படும் செந்தில்ராகவன் கவிதாவின் புதல்வன். அப்பாவின் ஜவுளிக்கடையில் ஆர்வமில்லாது, குடும்ப தொழிலில் மாமனோடு கைகோர்த்திருந்தான். முன்னர் தேங்காய் வியாபரம் மட்டுமே கொண்டிருந்தவர்கள், இவன் வந்ததும் சுத்தகரிப்பட்ட தேங்காய் எண்ணெய் வியாபாரத்தை கையிலெடுத்து தனியாக ஆரம்பித்திருக்க, கொஞ்சம் கொஞ்சமாய் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்தது அந்நிறுவனம்.
மாணிக்கத்தின் விழிகள் சுவரில் மாட்டப்பட்டிருந்த அந்த போட்டோவை இதோடு நூறாவது முறையாக பார்த்திருக்கும். எத்தனை தடவை பார்த்தாலும் முதல் தடவை பார்ப்பது போல்தான் அவரது முகம் பிராகாசிக்கும்.
அழகிய மெரூண் வண்ண பட்டு பாவடை சட்டையில், இரட்டை குடுமியில் மல்லிகைப் பூ சூடி, பச்சை கல் வைத்த குட்டி ஜிமிக்கி அணிந்து, ஒருவரின் கைகளில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தாள் பிரணிதா. பற்கள் தெரிய தூக்கி வைத்திருந்தவரின் கழுத்தை இறுக கட்டி கொண்டிருந்தவளின் முகத்தில் தான் எத்தனை சந்தோசம்!
நேரம் வேகமாய் நகர்ந்திருக்க, காலை உணவை சீக்கிரம் முடிக்க வைத்து, அனைவரையும் ரயில்வே ஸ்டேசனுக்கு இழுத்துக் கொண்டு சென்றிருந்தார் மாணிக்கம்.
இன்னும் அரைமணி நேரத்தில் வண்டி கோயம்புத்தூர் சென்றுவிடும் என அறிவிப்பு வர, தயாராகி எழுந்தமர்ந்த பிரணிதாவின் உடலில் ஒருவித நடுக்கம் தோன்றியது.
மகிழ்ச்சியா? கோபமா? வருத்தமா? கலவையான உணர்வுகள் அவளை அலைகழிக்க ஆரம்பித்ததுடன், வேண்டாத காட்சிகள் கண்முன் என அழுந்த கண்களை இறுக மூடிக் கொண்டவளின் விழியோரம் நீர்த்துளி.
இன்னும் பதினைந்து நிமிடங்களில், கோயம்புத்தூர் ஸ்டேசன் சென்று விடும் என அடுத்த அறிவிப்பு வர, பயணிகள் அனைவரும் எழுந்து நின்றிருந்தனர்.
****************
“என்ன அண்ணே, விலையை ஓரேடியா ஏத்துறீங்க? எப்பவும் போடுற ரேட்டுக்கே தேங்காய் லோட் ஏத்துங்க.” வழக்கமாய் தேங்காய் வாங்கும் தோப்பு உரிமையாளரிடம் பேசிக் கொண்டிருந்தான் செந்தில்ராகவன்.
“என்னப்பா செய்றது? வேலைவாசி எல்லாம் ஒரேடியா ஏறுதே!”
“எப்பவும் போடுற ரேட்டுக்கே போடுங்க, அடுத்த தடவை மாமாட்ட பேசிட்டு தகவல் சொல்றேன்.” என்றவன், ஆட்களை கொண்டு தேங்காய்களை ஏற்ற ஆரம்பித்திருந்தான். அவனின் அழைப்பேசி அழைக்க, எடுத்தவன்,
மறுபுறம் பேசியதை அமைதியாக கேட்டவன்,
“ஓஹோ! மதுரை அரசி கொங்குநாட்டுக்கு வந்தாச்சா?” எனக் கேட்டு அழைப்பை துண்டிந்திருந்தான்.
*******************
ரயில் மெல்ல தனது வேகத்தை குறைக்க, ஸ்டேசன் கொஞ்ச நேரத்தில் வந்துவிடும் என்பதை உணர்ந்தவள், தனது பயண பொதிகளை எடுத்துக் கொண்டு தயாராகினாள்.
ரயில் மொத்தமாக தனது இயக்கத்தை நிறுத்தி விட்டிருக்க, இறங்குவதற்கு வந்தவளின் முன் இரண்டு பெரியவர்கள் இறங்கிட, பொறுமை காத்து நின்றவளின் விழிகளில் விழுந்தான் நிரஞ்சன்.
‘இவன் எங்கே இங்க?’ என நினைத்தவளுக்கு அவன் யாரையோ தேடும் பாவனை பிடிபட, ஒருநொடி யோசித்தவள், சட்டென திரும்பி அவள் இருக்கைக்கே சென்றமர்ந்துக் கொண்டவள், மெல்ல ஜன்னலின் புறம் எட்டிப் பார்க்க, அதிர்ந்து தான் போனாள்.
மாணிக்கத்தின் மொத்த குடும்பமும் அங்கே நின்றிருப்பதைக் கண்டு!
அவள் எந்த பெட்டியில் இருக்கிறாள் என்பது வரை தெரிந்து வைத்து வந்திருக்கின்றனர் என்றால், இது யாரு வேலையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை அவளிற்கு.
“கிழவி, வேலையை காட்டிடிச்சு” பவுனம்மாளை திட்டியவள், இப்போது அவர்கள் கண்ணில் படாமல் எப்படி செல்வது என யோசிக்க ஆரம்பித்தவளுக்கு, அது சாத்தியமா? என தோன்றிவிட்டது.
சில நிமிடங்கள் யோசித்தவள், வேகமாய் தான் அணிந்திருந்த துப்பட்டாவை கழற்றி, முகத்தில் கண்கள் மட்டும் தெரியுமாறு மாஸ்க் போல் கட்டிக் கொள்ள,
‘இப்புடி செஞ்சா உன்னை அவுங்களால கண்டுபிடிக்க முடியாது என்ன? நடுக்கடல்ல நின்னுக்கிட்ட குடிக்க தண்ணி தேடுபவன் கதையா இருக்கு உன்னோடது’ மனசாட்சி அவளை எள்ளி நகையாட, அதனை கிடப்பில் போட்டவள், ஆட்கள் வலப்புற கதவு வழியாக இறங்குவதை கண்டவள், யோசியாமல் இடப்புறம் தண்டவாளங்கள் இருக்கும் கதவு பக்கம் சட்டென குதித்திருந்தாள்.
இது வழக்கம் தான் என்பது போல், அவளிற்கடுத்து சில பயணிகளும் பின் தொடர்ந்தனர். இரண்டு தண்டவாளங்களை கடந்து, அந்த பக்கமிருந்த மூன்றாவது ப்ளாட்பார்மில் ஏறியிருந்தாள்.
வெளியேறும் வழி இரண்டாம் ப்ளாட்பாரத்தில் தான் இருக்கிறது. அவள் வலப்பக்கம் இறங்கியிருந்தாள், பிரச்சனை இல்லை, அங்கிருந்து நேரடியாக வெளியே சென்றிருக்கலாம். ஆனால் இப்போது அப்படியில்லை, படிகளில் ஏறி தான் இரண்டாம் ப்ளாட்பாரத்திற்கு செல்ல வேண்டும்.
தேவையில்லாத வேலைதான் அவளிற்கு, ஆனாலும் அவளிற்கு சரியே.
அவளிற்கு தேவை, அங்கே நிற்பவர்கள் அவளை பார்த்து விடக் கூடாது என்பதே மட்டுமே குறிக்கோள். அவள் முகத்தை பார்த்து அவர்கள் சந்தோஷப்பட கூடாது, அவளை தேடி அவர்கள் ஏமாற்றமடைவதில் சிறு திருப்தி அவளிற்கு.
லக்கேஜ்ஜை இழுத்துக் கொண்டு வேக வேகமாய் படிகளில் ஏறி கீழிறியவள், வெளியே சென்றிருந்தாள். இப்போது கேஃப் புக் செய்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை அவள்.
“அண்ணா, லட்சுமி பி.ஜிக்கு போகணும், ரேட் எவ்ளோ?” அங்கிருந்த ஆட்டோக்காரரிடம் அவளிடம் கேட்டுக் கொண்டிருக்க,
“அடடே, குண்டுமல்லி!” என்ற சத்தத்தில் திகைத்தவள், வேகமாய் ஆட்டோவில் ஏறிட முயல, ஆட்டோ கம்பியினை இறுக பிடித்து தடுத்திருந்தான் ராகவன்.
“என்ன அண்ணே எங்க வாடகையாம்?” தெரிந்த ஆட்டோகாரரிடம் அவன் விசாரிக்க,
“லட்சுமி பி.ஜிக்கு தம்பி!” என,
“ஓஹோ!” என்றவன் தாடையை தடவியவாறே அவள் திரும்புவதற்கு காத்திருக்க,
‘பிரணி, என்ன பண்ற? உன் முகம்தான் மறைச்சிருக்கே, திரும்பி யாருன்னு தெரியாத மாதிரியே மெயின்டேய்ன் பண்ணு.’
அவனை நோக்கி நிதானமாக திரும்பியவள், அவனை தெரியாத பாவனையை கண்களில் தாங்கி நிற்க,
அவளின் உத்தியை கண்டுக் கொண்டவன், பட்டென அவள் முகம் மறைந்திருந்த துப்பட்டாவை எடுத்திருக்க,
“ஹேய், என்ன பண்றீங்க?” என பதறி
அவள் பிடிப்பதற்குள் மொத்தமாய் உருவி எடுத்திருந்தான்.
“என்ன தெரியாதுல்ல உனக்கு?” என கேட்டபடி, ஆசையாய் அவள் முகம் பார்த்தவனின் விழிகள், அவள் ஜிமிக்கயில் பதிய, பச்சைகல் மின்னிக் கொண்டிருந்தது.
அவன் பேச்சிற்கு பதில் பேசவில்லை அவள்.எப்படி தெரியாமல் போகும் அவளிற்கு, அவனின் ஒற்றை அழைப்புத் தெள்ளதெளிவாய் காட்டி கொடுத்துவிட்டது அவன் யாரென்று.
அவனை முறைத்தவள் வேகமாய் அவன் கையிலிருந்த துப்பட்டாவை பிடுங்க
முயல, எந்த வம்பும் செய்யாது அவளிடம் கொடுத்தவன், அடுத்த நிமிடம் மாணிக்கத்திற்கு அழைத்திருந்தான்.
“மாமா, நீங்க உள்ள தேடுங்க, ஆளு இங்க வெளிய எஸ்கேப்பாகி வந்துட்டா, ஆட்டோ ஸ்டோண்ட் பக்கத்துல பிடிச்சி வச்சிருக்கேன். சீக்கிரம் வாங்க” என முடித்தவன்,
“கண்ணுல படக்கூடாதுன்னு ரொம்ப நேக்கா வெளிய வந்திருக்கப் போலயே குண்டு மல்லி, ப்ச் ஆனா பாவம் இந்த மாமான்கிட்ட மாட்டிக்கிட்டியே.” என பரிதாபப்படுவது போல் அவன் உச்சுக் கொட்ட,
தன் திட்டத்தை தெரிந்துக் கொண்டு அதனை தவிடுபொடியாக்கியதில் அவனை முறைத்துப் பார்க்க, அவளை அங்குலம் அங்குலமாய் அளந்தவனின் பார்வை கடைசியாய் அவள் கால் விரல்களில் ஆர்வமுடன் படிய,
மருதாணியிட்ட சிவந்த விரல்கள் என்னைப் பார் என காட்டி கொடுத்திட,
இதழ்கடையில் ரகசிய புன்னகை எழுந்தது அவனிடத்தில்.
அவனது பார்வை போகும் திசையை கண்டுகொண்டவளுக்கு, என்ன முயன்றும் அவளின் கால் விரல்களை மறைக்க முடியாமல் போயிற்று. அவனின் சிரிப்பை கண்டு கொண்ட வழுக்கு அவன் முன்ன நிற்கவே இயலவில்லை.
அவர்கள் வரும்முன் இடத்தை காலி செய்திட வேண்டும் என நினைத்து அவள் பெட்டியை தேட, அது எப்போதோ அவனின் கைகளுக்கு சென்றிருந்தது. இனி ஒன்றும் செய்ய இயலாத சூழ்நிலையில், அவனை முறைத்துப் பார்த்தவள், திரும்பிட, அவளை நோக்கி வேகமாய் ஓடிவந்தனர் ராகவனின் மொத்த குடும்பம்.
யாழினி ஓடிவந்த வேகத்தில் பிரணிதாவின் கைகளை பிடிக்க போக, பட்டென அவள் விரல்கள் தன்மேல் விழாத வண்ணம் தள்ளி நின்றுவிட்டாள் பிரணிதா. அவளது செயலில் யாழினியின் முகம், விழுந்துவிட்டது.
லேசாய் யாழினியின் விழிகளில் லேசாய் நீர்கோர்த்திட,
“சின்னப்பிள்ளை தானே, அவ கைபிடிச்சா என்னாகிடப் போகுது, உனக்கு?” ராகவன் பிள்ளையின் கண்ணீரை கண்டு எகிறிட,
“ நான் பார்த்தாலே, குழந்தைக்கு ஏதாவது ஆகிடும். அப்புடி இருக்கிறப்போ, நான் கையெல்லாம் பிடிக்கலாமா?” என்றவளின் சுருக்கென்ற வார்த்தையில் அங்கிருந்தவர்களின் முகம் கசங்கி விட்டது. அதுவும் கவிதாவின் தலை தானாக நிலம் பார்த்துவிட்டது, அந்த வார்த்தைகளை கூறியது அவரல்லவா?
அங்கே நின்றிருந்த ஒவ்வொரு நொடியும் முள்மேல் நிற்பது போல்தான் அவளிற்கு.
“அவ்ளோ தானா? இல்லை வேற ஏதும் குத்திக்காட்டனுமா?” ராகவனின் அலட்டாத குரலில், கடுகடுத்தவள் ஒருவருக்கும் முகத்தை காட்டாது திரும்பி நின்றுக் கொண்டாள்.
ஆனால், அது சாத்தியமா என்ன? அவளை தலை முதல் கால் வரை ஊடுருவியது அங்கிருந்தவர்களின் பார்வை.
மாணிக்கம் இமைகளை கூட சிமிட்டாமல் அவளை விழிகளில் நிரப்பிக் கொண்டிருந்தார். பூர்வாவோ ஒரு அடி முன் செல்ல முயல, அவரை கண்களால் தடுத்து நிறுத்தியிருந்தான் ராகவன்.
உள்ளுக்குள் எரிமலையாய் கொதித்து கொண்டிருப்பவளை தான் அவன் அறிவானே!
மாணிக்கத்தின் பார்வை அவளை உறுத்தாமல் இல்லை, இருந்தும் வீம்பாய் திரும்பாமல் நின்றவளை அவர் பார்வை இளக்காமலும் இல்லை. ஐந்து, பத்து நிமிடங்கள் பொறுமை காத்தவளிற்கு அதற்கு மேல் முடியவில்லை.
இதற்கு மேலும், அங்கிருந்தால் நிச்சயம் மாணிக்கத்தின் முகத்தினை பார்த்துவிடுவாள் என்ற பயம் அவளிற்கு எழுந்திட, லக்கேஜீம் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம், என நொடியில் முடிவெடுத்தவள் அங்கிருந்து கிளம்பி செல்ல முயல,
“அண்ணே,பி.ஜில இறங்கி விட்டிருங்க.” அவள் பெட்டியை ஆட்டோவில் வைத்துவிட்டு,
“ஏறு!” என ராகவன் கூற, எதுவும் செய்யமுடியாத நிலையை வெறுத்தவள், முகத்தை சுழித்துக் கொண்டு ஆட்டோவினில் ஏறிட, ஆட்டோ கிளம்பியிருந்தது.
“மாமா, சீக்கிரம் போய் வண்டியில ஏறுங்க. நம்மாளும் போய் ஹாஸ்டல்ல குடிவச்சிட்டு வரலாம் வாங்க.” என உடைந்த நின்ற பூர்வாவையும், மாணிக்கத்தையும் காரில் ஏற்றிக் கொண்டு ஆட்டோவை பின்தொடர்ந்தான் ராகவன்.
“பிரணிய எப்புடி பார்த்த ராகவா?” மாணிக்கம் கேட்டிட,
“நான் ஸ்டேசன்கு வெளியே வண்டிய நிப்பாட்டிட்டு இருக்கும் போதே, ஆளு வெளிய வந்துட்டா மாமா, உள்ள உங்களை தேட விட்டுட்டு தண்டவாளம் பக்கமா இறங்கி இந்தப்பக்கம் ஓடி வந்திருக்கா கேடி, உங்களை பாக்காம ஓடப் பார்த்தவள, கப்ஃபுன்னு வந்து பிடிச்சிட்டேன்.” என்றவனின் பார்வை எல்லாம் பூர்வாவின் மீதுதான். பெருகிய கண்ணீரை அடக்கியப்படி வந்தவரின் தோற்றம் அவனை வேதனைப்படுத்தியது. இருந்தும் அவனால் என்ன செய்திட முடியும் இதில்?
ஆட்டோவில் சென்று கொண்டிருந்தவளின் மனம் அனலாய் தகித்துக் கொண்டிருந்தது. இது எல்லாம் நடக்கும் என்றுதானே அவள் இங்கே வர யோசித்தது? இன்று நடக்கும் அனைத்தையும் தடுக்க வழியில்லாமல் நின்றவள் மீது அவளிற்கே கோபம் எழுந்தது.
‘கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இல்லாம, எவ்வளோ நக்கல் பேச்சு இந்த ராகவனுக்கு’ என நினைத்தவளுக்கு, அவனுடனான அவளது சிறுவயது நிகழ்வுகள் கண்முன் வர, தலையை குலுக்கி அதில் இருந்து விடுபட முயன்றவளுக்கு முடியாமல் போக, கடந்தகால நினைவுகள் அவளை அழுத்த ஆரம்பித்த வேளை, விடாது கேட்ட ஹாரன் ஒலியில் கடுப்பாகியவள் எட்டிப் பார்க்க,
பின்னால் ராகவன் வந்துக் கொண்டிருந்தவன், இவள்
தலை தெரிந்ததும் இவனும் எட்டிப்பார்த்து கையாட்டி, ஒற்றை கண்ணடித்ததில் விதிர்த்தவள், படக்கென தலையை உள் இழுத்துக் கொண்டவளின் மனம் படபடத்தது.
கார் அவளை பின்தொடர்வதை அறிந்தவள், தலையில் கைவைத்து விட்டாள் அவர்களை சமாளிக்கும் வகை தெரியாது.

Last edited: