சிறுவயதில் பல இன்னல்கள் வந்தபோதிலும் தன்னோடு இருந்தவர்கள்...
துன்பங்களுக்கு நடுவே கிடைத்த சிறு இன்பத்தையும் ஒன்றாகக் கொண்டாடியவர்கள்...
எனக்கு நீ, உனக்கு நான் என்று ஒருவருக்கு ஒருவர் துணையாக நின்றவர்கள்...
தோழனாகத் தோள்கொடுத்த தோழன்...
காதல் கவி பேசிய காதலி... இருவரும் இன்று துரோகிகளாகக் கண் முன்னே!
இதை வாழ்வின் விந்தை என்பதா? இல்லை சதி என்பதா?
தோள் அணைத்துத் தட்டிக்கொடுத்த கரம் ஒன்று, என் முதுகில் குத்தியது என்றால்!
ஒரு காலத்தில் என் காயம் கண்டு கலங்கிய கண்கள், இன்று என் குருதியைச் சலனமின்றி வெறித்துப் பார்க்கின்றன!
என் கைவளைவில் நின்று, எதிர்காலக் கனவுகள் பற்றி ஆயிரம் கதைகள் பேசியவள்...
இன்று என் எதிரியின் கைவளைவில் நின்று, என்னை எதிரியாகப் பார்த்து நிற்கிறாள்!
உடலில் பட்ட காயத்தை விட, இதயத்தில் பட்ட காயம் ரணமாக வலிக்கிறதே!
எதிர்த்து சண்டையிடவோ, தன் உயிர் காக்கவோ தோன்றவில்லை இந்த நொடி...
இத்தனை காலமும் புன்னகை என்னும் போர்வைக்குள் ஆயுதம் மறைத்து நின்றவர்களின் உண்மை முகம் இதயத்தின் உள் நின்று குத்திக் கிழிக்கிறதே!
துரோகம்... துரோகம்... நம்பிக்கை துரோகம்!