• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

குழல் யாசிக்கும் புயலே - 16

Vishakini

Moderator
Staff member
புயல் 16

"டேய்! ஏண்டா சிஸ்டரை அப்படிப் பேசின? பாவம் கண்ணெல்லாம் கலங்கிப் போய், மன்னிப்பு கேட்டுட்டுப் போறாங்கடா! போடா போ! போய் சமாதானப்படுத்து" என்று அவனைத் தள்ளாத குறையாக அவசரப்படுத்தினான் ஆதித்யா.

"ப்ச்! எதுக்குச் சமாதானப்படுத்தணும்? அவ உன்னை பேசினது தப்பு! அதுக்காகத் திட்டினேன்" என்றவன், ஆதித்யா சலிப்பாக நெற்றியைத் தேய்ப்பதைக் கண்டதும்,
"உன்னைப் பற்றி என்ன தெரியும் அவளுக்கு அப்படிப் பேச? பணக்காரங்க எல்லாரும் தப்பானவங்களா? காதல்ன்ற பேருல ஏமாத்தத்தான் நாம பிறந்து இருக்கோமா? நாமெல்லாம் உண்மையா காதலிக்க மாட்டோமா?"

"என்னமோ வாசுகி மேல இவளுக்கு மட்டுமே அக்கறை இருக்கிற மாதிரி பேசுறா! அந்த அக்கறை நமக்கு இருக்காதாடா! நீ வாசுகி மேலே உயிரே வச்சிருக்கன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்! ஏதோ ஒரு நாள் பார்த்திட்டு அவளுக்கு நல்லது பண்றது போல பேசுறதைக் கேட்கும்போது எனக்கு இன்னமும் கோபக்கோபமா வருதுடா," எனக் கையை முஷ்டியாக இறுக்கினான்.

"டேய் டேய் போதும் நிறுத்துடா!" என அவனை அடக்கியவன், அவனைத் தன் பக்கம் திருப்பி, "எனக்குமே அவங்க சொன்னதுமே கோபம் வந்துச்சுதான். ஆனா ஒரு விஷயம் அப்பத்தான் எனக்கு உறைச்சது" என்றதும் அவனை ஏறிட்டான் பிருத்வி.

"என்ன அது?"

"ஆர்யாங்கா! வித்யூவால பாதிக்கப்பட்டு இருக்காங்க! அம்மா, அப்பா, பாட்டி யாரும் கூட இல்லாத சூழ்நிலையில குழந்தையை வயித்துல சுமந்திட்டுத் தனியா தவிச்சிட்டு இருந்தாங்க. இப்போ நீ மட்டும் இல்லைன்னா அவங்க நிலைமையைக் கொஞ்சம் நினைச்சுப் பாருடா!" என்றதும் அவன் அமைதியாக அவனது பேச்சைக் கவனித்தவாறு நின்றான்.

"ஒரு பக்கம் வித்யூ, இன்னொரு பக்கம் அந்த ஆள்னு டார்ச்சரை அனுபவிச்சிருப்பாங்க! இதெல்லாம் தாங்க முடியாமத்தான தற்கொலை பண்ணிக்கப் போனாங்க! நீ இல்லைன்னா அவங்க எலும்புகூடக் கிடைச்சிருக்காதுடா;
ஆர்யாங்கா, பணக்காரன் ஒருத்தனால பாதிக்கப்பட்டு இருக்கா! அவங்களைப் போல வாசுகியும் என்னால ஏமாந்திடக் கூடாதுன்னு நினைக்கிறாங்க, அதுல என்னடா தப்பு இருக்கு...! நம்ம அனுபவத்தை இன்னொருத்தர்கிட்ட சொல்லி எச்சரிக்கை செய்றது போல என்கிட்ட அப்படிப் பேசிருக்காங்க, இதுல என்னடா தப்பு! இப்போதான் அவங்க என்னையும், நான் அவங்களையும் பார்க்கிறோம்... பார்த்த உடனே என்னைப் பற்றிப் புரிஞ்சிடுவாங்களா?? போடா!" என்றான்.

பிருத்விக்கும் அவன் சொன்னது புரியத்தான் செய்தது. நண்பனைச் சொன்னதும் அவசரப்பட்டுவிட்டான்.

"ஒரு விஷயம் பாரேன். அவங்க என்கிட்டதான் பேசினாங்க. வாசுகிகிட்ட போய் எச்சரிக்கை செய்யல! அந்த விதத்துல அவங்க என்னை நல்லவனாத்தானே நினைச்சிருக்காங்க! ப்ளீஸ் டா, கோபப்படாம அவங்ககிட்ட போய் பேசு, சமாதானம் செய் போ," என்றான்.

"ம்ம்... சரி! அவ பேசினது உன்னை ஹர்ட் பண்ணியிருந்தா சாரிடா!"

"ப்ச்! அதெல்லாம் ஒண்ணுமில்லை," என்று தோளைக் குலுக்க, அவனிடம் விடைபெற்றான் பிருத்வி. அவன் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யா திரும்ப, அங்கே அழுகையும் கோபமுமாக நின்றிருந்தாள் வாசுகி.

'என்ன இவ இப்படி நிக்கிறா? ஒருவேளை பேசினதைக் கேட்டிருப்பாளோ!' என்று அவளது ஹியரிங் மெஷினைக் காதில் மாட்டியிருந்ததைக் கண்டு கலக்கமுற்றான்.

"நீ இன்னமும் கிளம்பலையா வாசுகி? கிளம்பு நேரமாச்சு," என்று சமாளிக்க,

"இத்தனை நாள் அப்படி ஒரு எண்ணத்தோடதான் என்கிட்ட பேசி இருக்கீங்க, பழகியிருக்கீங்களா நீங்க?" என அவன் முன்னே வந்து அழுகையோடு கேட்டாள் அவள்.

"எந்த எண்ணத்தோட?" என நாவைச் சுழற்றி, புருவம் உயர்த்தி நக்கலாகக் கேட்க, கொஞ்சம் தடுமாறினாள் அவள்.

"அ... அதான் கா... கா..." எனத் திணற,

"என்னம்மா காக்கா வேணுமா?"

"சார்..." எனக் கடுப்பாக,

"இங்க யாருமே இல்லை சுகி, என்னை ஆதின்னு கூப்பிடலாம்" என்றான்.

"இல்ல, நீங்க எனக்குச் சார் மட்டும்தான். உங்க மேலே இருக்கிற மரியாதையைத் தாண்டி எனக்கு எந்த எண்ணமும் இல்லை... நீங்களும் என்னை ஒரு ஸ்டாப்பா மட்டுமே பாருங்க! அதைத் தாண்டி உங்களுக்கு எந்த எண்ணமும் வேண்டாம்," என்று அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க, அவளது கையைப் பற்றினான்.

"நான் என்ன நினைக்கணும்னு நீ சொல்லக் கூடாது சுகி! உன்னை நான் மனசாரக் காதலிக்கிறேன். உன்னை பார்த்த உடனே உன் மேலே எனக்குக் காதல் வந்திருச்சு! சாவைத் தவிர வேற எதாலயும் எனக்குள்ள இருக்கிற என் காதலை அழிக்க முடியாது! புரிஞ்சுக்கோ!" என்றவனின் விழிகளில் வழிந்த காதல் அவளைக் காந்தம் போல ஈர்த்தது.
சட்டெனச் சுதாரித்தவள் அவ்விடம் விட்டு வேகமாக நடந்தாள். அவளைப் பின்தொடர்ந்தவன் வண்டி நிறுத்தம் அருகே வந்து, அவள் வண்டியை எடுக்க இவன் முன்னே வந்து நின்றான்.

"உன்கிட்ட எப்படிச் சொல்றதுன்னு தவிச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா இப்போ நீயே தெரிஞ்சுக்கிட்ட, கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு," என நெஞ்சைத் தடவியவன்,
"இனி எனக்கு உன் பதில்தான் வேணும். உன் பதில்ல மட்டும்தான் என் வாழ்வும் சாவும் இருக்கு," என்றதும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"உடனே பதில் சொல்ல வேண்டாம் சுகி! டைம் நிறையவே எடுத்துக்கோ! உனக்காக, உன் பதிலுக்காகக் காத்திருப்பேன்," என்றவன்,

"ஆனா ஒண்ணு! ப்ளீஸ், உனக்குக் காது கேட்காத விஷயத்தை நான் பெருசாவே எடுத்துக்கலை, அதை மட்டும் காரணம் சொல்லிட்டு வந்திடாதே! பிளஸ் பணம், தகுதி அதையும் காரணம் சொல்லாதே, என்னால அக்செப்ட் பண்ணிக்க முடியாது. காரணம் அது ஒரு பெரிய விஷயமே இல்லை எனக்கும் என் ஃபேமிலிக்கும்.
இந்த ரெண்டைத் தவிர வேற எந்த வேலிட் ரீசன் சொன்னாலும் நான் அக்செப்ட் பண்ணி உன்னை விட்டுப் போயிடுறேன். இல்லைன்னா உன்னை டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டே இருப்பேன்... பிகாஸ் ஐ லவ் யூ! ஐ கான்ட் லிவ் வித்தவுட் யூ! யோசிச்சு நல்ல முடிவா சொல்லு பேபி," என்று அவளது கன்னத்தைத் தட்டிவிட்டு அங்கிருந்து சென்றான்.
காதல் பாரத்தை இறக்கிவைத்த மகிழ்ச்சியில் அவன் பறக்க, இவளோ அதனைச் சுமந்தபடி அங்கிருந்து நகர முடியாமல் தவித்தாள்.

இருவரும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் பயணித்தனர். சாளரம் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாலும், அவ்வப்போது விழியின் விளிம்பில் வழியும் நீரைத் துடைக்க அடிக்கடி கைகளை உயர்த்துவதைக் கண்டு, அவள் இன்னமும் அழுகையை நிறுத்தவில்லை என்று உணர்ந்து மெல்லிழைத் தாளை (Tissue paper) நீட்ட, அவளோ கண்டுகொள்ளவில்லை. மீண்டும் அதே இடத்தில் வைத்துவிட்டுச் சாலையில் கண்களைப் பதித்தான்.

இல்லமும் வந்துவிட, மகிழுந்து (Car) நின்ற நொடியே வேகமாக இறங்கி உள்ளே சென்றாள். கூடத்தில் இவர்களுக்காகக் காத்துக் கொண்டிருப்பது போல அங்கே மௌலி அமர்ந்திருக்க, கண்களைத் துடைத்துக்கொண்டு மெதுவாக நடந்து வந்தாள்.

"வாம்மா! ஹவ் இஸ் யுவர் டே?" சிரிப்புடன் வினவினார் மௌலி.

"நல்லா இருந்தது அங்கிள்," என்றவளின் முகம் பொலிவில்லாமல் இருக்க,

"என்னம்மா ஏன் உன் முகம் வாடிப்போயிருக்கு? உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையாமா? அவன் எதுவும் உன்னைச் சொன்னானா?" என அக்கறையுடன் வினவினார்.

"அதெல்லாம் இல்ல அங்கிள்! கொஞ்சம் டயர்டா இருக்கு! கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும் அங்கிள்!"

"சரிம்மா, சாப்பிட்டியா?"

"சாப்பிட்டேன் அங்கிள், நீங்க?"

"ஆச்சுமா! சரி நீ போய் ரெஸ்ட் எடு," என்றார். அவள் மேலே ஏறியதும் இவன் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

"குட் ஈவினிங் பா! இன்னைக்கு நீங்க ஆபீஸ் போலியா? இந்நேரம் நீங்க இங்க இருக்க மாட்டீங்களே!" எனச் சிரித்தபடி அருகே வந்தான்.

"போலப்பா! வித்யூ, பிரணவி கல்யாணத்துக்குத் தேதி குறிக்கணும்னு சொல்லிட்டாங்க!"

"நல்ல விஷயம் தானேப்பா! அதை ஏன் இவ்வளவு சோகமாகச் சொல்றீங்க? எந்த டேட்ல பா பிக்ஸ் பண்ணியிருக்காங்க?"

அவரும் பெருமூச்சுடன் குறித்த தேதியைச் சொல்ல, அவனும் குறித்துக் கொண்டான்.

"சந்தோஷமான விஷயம் தானேப்பா, ஏன் சோகமா இருக்கீங்க?"

"எப்படிப் பிருத்வி சந்தோஷமா இருக்கச் சொல்ற? உன்னை ஒரு ஆளா மதிக்காம, உன்கிட்ட ஒரு வார்த்தை கேட்காம, அவங்க இஷ்டத்துக்கு எல்லாத்தையும் செய்யறது வலிக்குது பிருத்வி! ஒரு அண்ணனா நீ உன் தங்கச்சி கல்யாணத்தை முன்ன நின்னு செய்யணும்... இதெல்லாம் நீ இருந்து செய்ய வேண்டிய கடமை! ஆனா உன்னை ஒதுக்கி வச்சுச் செய்யறது தப்புப்பா! என்னால அவங்ககூடப் பேச முடியலைப்பா! உன்னைப் பற்றிப் பேசினாலே கோபப்படுறா உன் அம்மா! உன் சித்தப்பா, சித்தியும் கூட அப்படித்தான் இருக்காங்க! இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ!" என வருத்தம் கொள்ள,

"அப்பா! வீட்டுல நல்ல விசேஷம் நடக்கப்போகுது, அதைச் சந்தோஷமா தொடங்கி வைக்கிறதை விட்டுட்டு எதுக்குப்பா ஃபீல் பண்றீங்க? நான் முன்ன நின்னு செய்யலன்னா என்ன, நானும் கல்யாணத்துல கலந்துக்கத்தான் போறேன்பா! கல்யாணத்துக்காக அவங்க சந்தோஷமா செய்யும்போது ப்ளீஸ் என்னை முன்னிறுத்தணும்னு அவங்ககிட்ட வாதாடாதீங்கப்பா! பிரணவி கல்யாணம்பா, எந்தச் சிறு விஷயத்துல கூட அவளுக்குச் சுணக்கம் இருக்கக் கூடாது. ப்ளீஸ் அவங்க ஹாப்பியா பண்ணட்டும், என் பெயரைச் சொல்லி ஸ்பாயில் பண்ணாதீங்க! உங்ககிட்ட கேட்கிறது இது ஒண்ணுதான் ப்ளீஸ் பா," என அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினான்.

"ஆனா பிருத்வி!"

"பா ப்ளீஸ் நான் சொல்லிட்டேன். அதுக்கு மேலே எதையும் யோசிச்சு எனக்காகப் பேசாதீங்க! பிரணவி ஹாப்பினஸ்தான் முக்கியம்," என்று அழுத்திவிட்டுப் போனான்.
அறைக்குள் நுழைய அங்கே அவள் இல்லை. பால்கனியில் அவளது உடை காற்றில் அசைவதைக் கண்டவன், தன்னைச் சுத்தம் செய்யக் குளியலறைக்குள் நுழைந்தான்.
அவளோ வானத்தை வெறித்தவண்ணம் இருந்தாள். அவள் செய்த ஒரு தவறு எங்கு சென்றாலும் துரத்துவது போன்ற எண்ணம்.

நம்பிக்கை வைத்து ஒருவனிடம் தன்னைத் கொடுத்ததன் பலனாக, ஏமாற்றத்தோடு வயிற்றில் உயிரைச் சுமக்கும் நிலையிலும், ஏமாற்றியவனை விட ஏமாந்தவளை மட்டுமே குற்றம் சாட்டும் இந்த உலகம். அவளைத்தானே துரத்தித் துரத்தி வார்த்தைகளால் அடிக்கிறது இந்தச் சமூகம்! இன்றைய காலத்தில் ஏமாற்றியவனின் மனசாட்சி அவனை ஒண்ணும் சொல்வது இல்லை போல... சந்தோஷமாக இருக்கிறான். ஏமாந்த அவளுக்குத்தான் எத்தனை கஷ்டங்களும் துன்பங்களும்! அன்றே இறந்து தொலைத்திருக்கலாம் என்று தோன்றியது.

"ஐ ஆம் சாரி ஆர்யா," எனப் பின்னிருந்து குரல் கேட்டதும் திரும்பிப் பார்த்தாள்.

பிருத்விதான் மன்னிப்புக் கேட்டு நின்றான்.

விரக்திச் சிரிப்புடன், "நீங்க ஏன் மன்னிப்பு கேட்கிறீங்க?! உங்க ஃப்ரெண்ட்டையும் அவரோட காதலையும் தப்பா பேசினது நான் தானே! என் மேலேதான் தப்பு, நீங்க மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை," என்று அங்கிருந்து நகர்ந்தவளின் கையைப் பற்றித் தன் முன்னே நிற்க வைத்தான்.
"ப்ச்! ரியலி சாரி! என் ஃப்ரெண்ட் சொன்னதும், அதுவும் அவனை வித்யூவோட கம்பேர் பண்ணினதும் கோபம் வந்துடுச்சுமா! சீரியஸ்லி அவன் காதல் உண்மையானது. கூட இருந்து பார்த்ததால எனக்கும் தெரியும். சோ! நீ ஏமாந்திடாதீங்கன்னு சொல்லும்போதே ஹார்ஷா நடந்துக்கிட்டேன். இட்ஸ் மை மிஸ்டேக். அவனைப் பத்தித் தெரியாத நீ, வாசுகி மேலே உள்ள அக்கறையிலதான் சொல்லியிருக்க. பட், நான் அதைப் புரிஞ்சுக்க முன்னமே வார்த்தைகளை விட்டுட்டேன், சாரிமா," எனக் கெஞ்சினான்.

அவனை விழிவிரித்துப் பார்த்தாள்.

"என்னம்மா என்னாச்சு?"

"ஒன்னுமில்ல! ஏன் இத்தனை முறை சாரி கேக்குறீங்க! இது புரிதல் இல்லாம நடந்தது தானே விடுங்க," என்றாள்.

"நீ சொல்றது சரிதான், மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்தான். ஆனா நான் விட்ட வார்த்தைகள் ரொம்பத் தப்பு! அது உன்னை எவ்வளவு ஹர்ட் பண்ணிருக்கும்னு உன்னோட கண்ணீரைக் கண்டதும் புரிஞ்சுக்கிட்டேன். அதுக்குச் சாரி சொன்னா பத்தாது. அதையும் தாண்டி எனக்கு நீ என்ன பனிஷ்மென்ட் கொடுத்தாலும் நான் அக்செப்ட் பண்ணிக்கிறேன். பட் ப்ளீஸ் அழாத ஆர்யா! கொடு! என்ன பனிஷ்மென்ட் கொடுத்தாலும் ஓகே! கொடு," என்று பிடிவாதத்துடன் நிற்பவனைக் கண்டு உதட்டில் லேசாகச் சிரிப்பு உதித்தது.

சற்று முன் அவளிருந்த மனநிலையை மெல்ல மாற்றிவிட்டான்.

"சொல்லுங்க மேடம், என்ன பனிஷ்மென்ட் கொடுக்கப் போறீங்க?" எனக் கைகட்டி நின்று கேட்டிட, கிளுக்கெனச் சிரித்தாள்.

"அப்பாடி சிரிச்சுட்டீங்க! ரொம்ப தேங்க்ஸ் மேடம்," என்றான்.

"ஆனா இன்னும் பனிஷ்மென்ட் கொடுக்கலையே சார்!" என்றாள் குறும்பாக. சட்டென அவன் முகம் அஷ்டகோணலாக மாற, வாய் விட்டே சிரித்தாள்.

அவள் சிரிப்பைக் கண்டவனுக்கு நெஞ்சிலுள்ள பாரம் மெல்லக் குறைந்தது... அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், சட்டென "ஆர்யா" என்று அழைக்க, அவள் அவனைப் பார்த்த நேரம் அவளை இழுத்து அணைத்திருந்தான்.

எதிர்பாராத அணைப்பில் திகைக்க, அவளை நெஞ்சோடு இறுக அணைத்து இதயத்தின் ஓசையைக் கேட்கச் செய்தான்.
 
Top Bottom