சின்னா 'தி ரோமியோ' - 15

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 39

Member
Nov 30, 2025
76
59
18
Chennai
சின்னா - 15

வாசலில் கால் வைக்க கால்களில் சின்னதாய் நடுக்கம்.

உணர்வுகள் இன்னமும் உடலோடுதான் இருக்கிறது என்பதையே அந்த நடுக்கம்தான் காட்டிக்கொடுத்தது.

வீரம் செறிந்தவன், முதல் முறையாக ‘தனக்கு தைரியத்தைக் குடு இறைவா’ என மனதார வேண்டினான்.

கடைசியாக அரிவாளுடன் இந்த வீட்டிற்குள் நுழைந்தது நினைவிலாடியது.

கிட்ட தட்ட ஆறு மாதங்கள் கடந்து தன் மாமனின் வாசலைத் தாண்டி முதல் அடியை எடுத்து வைத்தான் சின்னா!

எதிர்ப்பட்டார் மரகதம். ஆறு மாதங்களிலயே சோர்ந்து அதீத மூப்பாய் தெரிந்தார்.

அவரது பெண் சொன்னதை செய்து காட்டியிருந்தாள். பெற்றோரை கிட்ட சேர்க்கவும் இல்லை. அவளும் வரவில்லை. அதில் முற்றிலும் உடைந்திருந்தார்.

கண்களால் வரவேற்பாய் பார்த்ததோடு சரி. அவனிடம் பேசும் திராணியற்றிருந்தார்‌.

“உன்னை இந்தக் கோலத்தில பார்த்திடக்கூடாதுன்னுதான் என் பொண்ணு தானா நெருப்புக்குள்ள தவம் இருக்கா. தயவு செஞ்சி அவ வேள்விய கேள்விக்குறியாக்கிடாதப்பா"

கணவரின் உயிரைக் காப்பாற்ற கடைசியாக அவன் காலைப் பிடித்துக் கெஞ்சியது நினைவிலாடியது.

“நீ ஜெயிக்கணும்னு அவ தோத்துட்டா" அவனது கால்களிலயே முட்டிக்கொண்டு அழுதது இன்னமும் இரணமாய் அவனது நெஞ்சில். கண்ணை இறுக மூடித்திறந்தான். உடல் அனலாய்க் கொதித்தது.

எத்தனை தூக்கமற்ற இரவுகளை இப்படி நெருப்புடன் கடந்திருப்பான்.

எத்தனை முழு இரவுகளை அந்த கிணற்றின் திண்டில் படுத்தும் நீரில் மூழ்கியும் அவள் நினைவலைகளை விரட்ட போராடியிருப்பான்.

இரவு முழுவதும் நீரில் மூழ்கிக்கிடந்து வெற்றுடம்புடன் மொட்டை மாடி நெல்காயவைக்கும் திண்டில் மதியம் உச்சி வெயில்வரை உணர்வற்றுக் கிடப்பவனை திலகவதிவந்துதான் கண்ணீருடன் கூட்டிச் சென்றிருப்பார். இன்று அவள் வந்திருக்கிறாள் என்று கேட்டபோது சகலமும் ஆடியது.

அவளை பார்க்கவே கூடாதென்றுதான் இரவுவரை பல்லைக் கடித்திருந்தான்.

ஆனால் இன்று அவள் இருக்கும் கோலம்!

தன்னையறியாமல் கால்கள் அவனை இழுத்து வந்திருந்தது.

எலும்பும் தோலுமாக உருக்குலைந்து கட்டிலில் படுத்திருந்தாள் அவன் பார்த்து பார்த்து வளர்த்த பைங்கிளி.

‘என்னுடைய அன்பாவா இது?’ பாண்டி வந்து சொன்னபோதுகூட இவ்வளவு உருக்குலைந்திருப்பாள் என அவன் எண்ணவில்லையே!

கழுத்தெலும்புகள் துருத்திக்கொண்டு, இமைகள் மூடியிருக்க அங்கு அழகிய மான்விழிகள் இருந்ததற்கான அடையாளமின்றி பார்க்க பார்க்கவே அவனுக்கு தாளவில்லை.

வழக்கம்போல் அவள் தலைக்கு அடியில் மரமல்லி மலர்களை ஓசைப்படாமல் வைத்தான்.

அதைப் பார்த்த மரகதம் குலுங்கி அழ,

“ச்சூ” என்று அவள் தூக்கம் கலையாமல் வாயில் விரல்வைத்து மிரட்டியவன் கண்களிலும் கண்ணீர்.

அவனின் இந்தப் பழக்கத்திற்காக மரகதம் கடிந்துகொள்ளாத நாட்களே இல்லையே!

“பொம்பளை பிள்ளைமேல இவ்ளோ ஆசை வைக்காதடா. காலேஜ் போற பிள்ளை நாளைக்கு எதனான்னா உன்னால தாங்க முடியாது"

தினமும் அவள் தூங்கியதும் மலர்களை பரப்புபவனை கடிந்துகொள்வார் மரகதம்.

"காலைல எழும்போது இந்த வாசனை இல்லனா அந்த நாளே நல்லா இல்லன்னுவா’த்த…

தலைலதான அவளை வைக்க விடாம பண்ணீங்க. பாருங்க எங்க கல்யாண மேடை முழுசா இந்தப்பூவால அலங்கரிக்கிறேன்” என்று தன் அத்தை சொல்ல வருவதையே புரிந்துகொள்ளாமல் அவரை வெறுப்பேற்றிச் செல்வான்.

அவர் எச்சரித்தை அன்றே கேட்டிருக்க வேண்டுமோ?

அவள் தோற்றம் கண்டு தாளாமல் வெளி திண்ணையிலே பொத்தென்று விழுந்தான்.

அதற்குமேல் முடியாது தலையைப் பிடித்துக் கொண்டவன் சத்தம் வராது குலுங்கிக் குலுங்கி அழதவன் எவ்வளவு நேரம் அழுதானோ! அவன் தோள்களில் உயிர்ப்பற்று விழுந்தது அவள் கரம்.

அவசரம் அவசரமாய் கண்களை துடைத்துக்கொண்டு “தூங்கலையாடா” என்றான்.

“உன் தோளில படுத்துக்கட்டா மாமா” என்றவள் பதில் சொல்லும் முன்னே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

வந்ததிலிருந்து தாய்தந்தை என்ன முயன்றும் பேசாதவள் பேசினாள்.

"நான் தூங்கி ஆறுமாசமாச்சி மாமா" என்றாள். வெளிறிய விழிகளில் கண்ணீருக்கும் பஞ்சம் போலும்…

"ஏன்டா" என்றான் ஆதூரமாய்.

"ஒருநாளும் அவன் என்னை கண்மூடி தூங்க விட்டதே இல்ல மாமா... இராவெல்லாம் விடிய விடிய …” என்றவளுக்கு அதற்குமேல் வார்த்தைகள் வரவில்லை.

“இராவுல எம்மேல துணிபட்டே எவ்ளோ நாளாச்சி தெரியுமா மாமா...

எனக்கு என் உடம்பே மரத்துப் போச்சி மாமா..." என்றாள் உணர்வற்று.

மகள் சொல்வதைக் கேட்டிருந்த மரகதம் கண்ணீருடன் முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டார்.

சொன்னவளின் கண்களில் துளி கண்ணீர் இல்லை. குரலில் விரக்தி மட்டுமே.

நெஞ்சில் குமுறிய எரிமலைகள் வெடித்துச் சிதற அதன் அக்கினிப் பிழம்புகள் அவன் கண்களில் கிளை பாய்ச்ச இறுகிப் போய் அமர்ந்திருந்தான் சின்னா.

முயன்று தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன் தயக்கமாய் தன் கண்மணியை ஏறிட்டான்.

"அன்பா குட்டி நீ மாமாவ நினைச்சிட்" என்றவன் மேற்கொண்டு கேட்க முடியாமல் தவிக்க,

உடனேயே "நான் உன் வளர்ப்பு மாமா" என்றாள் அவள்.

ஒருவேளை தன்னை நினைத்துக்கொண்டு கணவனின் தொடுகையை ஏற்க முடியாமல் தவிக்கிறாளோ என்றவன் நினைத்துத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டது.

"முதல்ல உன் நினைப்பு இருந்துச்சிதான். இல்லன்னு சொன்னா அது பொய் மாமா. ஆனா இது நானே எடுத்த முடிவுதானே!

போகப்போக இதுதான்‌ என்புருஷன். இவன்தான் என் வாழ்க்கைன்னு என்னை முழுசா தயார்படுத்திக்கிட்டுதான் கோயில்லருந்து வெளிய காலடியே எடுத்து வச்சேன்" என்றாள்.

"பின்ன என்னடா" என்றவனின் குரல் கனிந்திருந்தது.

"அவன் ஒரு செக்ஸ் அடிக்ட் மாமா. அது இல்லாம அவனால இருக்கவே முடியாது.

கல்யாணத்துக்கு முன்னாடியே நித்தம் ஒரு பொண்ணுகூட” என்றவள் முதல் முறையாய் கேவினாள்.

"அருவருப்பா இருக்குமாமா.. இங்கப் பார் இந்தக் கை ச்சீ… இந்தக் கால் ச்சீ" என்றவள் திடிரென ஒவ்வொன்றாய் நகத்தால் வெறி கொண்ட மட்டும் பிராண்ட, தடுத்து தன்னுள் சுருட்டிக்கொண்டான்.

அவனது நெஞ்சில் புதைந்து, "நம்ம தேன்மதிக்கு மாதிரி என் உடம்பும் கழுத்துக்கு கீழ மரத்துப் போய்டாதா மாமா" என்றதும் அவன் உறைந்து நிற்க, தன் உடலையே பிடுங்கிப் போடுவதுபோல் கீறிக்கொண்டு கதறி அழுதவளை கண்ணீர் வழிய தாய்க்கோழியாய் மேலும் அரவணைத்துக் கொண்டான் அவளது மாமன்.

"என்னால முடியல மாமா... ஒவ்வொரு பாகமும் இரணமா வலிக்குது மாமா…

கேவலம் இந்த உடம்புக்காக என் பிள்ளைய வயித்துலயே கொன்னுட்டான் மாமா" என்று தன் அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு கதறி துடித்தவளில் அவன் உறைந்து நிற்க, மரகதம் "அய்யோ அம்மா" என வாய்விட்டே கதறி தலையிலடித்துக் கொண்டார்.

அந்நேரம் அங்கு வந்தார் மீனாட்சியம்மாள். அன்பிலரசி கணவனின் தாய். அவர்தான் அன்பிலரசியை வலுக்கட்டாயமாய் இங்கு அழைத்து வந்தது.

“அண்ணி அவங்க சின்னதுல…” என்றார் மரகதம் பதறி. சின்னாவின் அணைப்பில் தன்னைமறந்து ஒடுங்கியிருப்பவளைக் கண்டு அவர் தவறாக எண்ணிவிடக் கூடாதே!

"தாய்ப்பறவை அரவணைப்புக்கும் ஜோடிப்புறா அணைப்புக்கும் வித்தியாசம் தெரியாதவ இல்லடி நான்” என்றார் அவர் பெருந்தன்மையாக.

“உன் புருஷன் மட்டும் நேரடியா என்கிட்ட வந்து பொண்ணு கேட்டிருந்தா இந்தக் கல்யாணத்தையே நடக்க விட்டிருக்க மாட்டேன்டி" என்றவரில் மரகதம் அரண்டார்.

‘அன்னைக்கு உடல்நிலை சரியில்லை அவரால் இவ்வளவுதூரம் வரமுடியாது’ என்று அவன் மட்டும் கல்யாணத்தன்று வந்து நின்றது எல்லாம் பொய்யா!

“தாய் இருக்காளேன்னுகூட பார்க்காம நித்தம் ஒருத்திய வீட்டுக்கு கூட்டிட்டு வரவனுக்கு எவன்டி பொண்ணு குடுப்பா?” என்றார் அவர் ஆதங்கமாய்.

மீனாட்சி கருணாகரனுக்கு தூரத்து உறவுமுறையில் அக்கா. ஒருமுறை கருணாகரனின் வாழைத்தார் ஏற்றிச்சென்ற சரக்கு லாரி நடுவழியில் பழுதாகிவிட அன்பிலரசியின் கணவன்தான் ஆபத்திற்கு உதவியிருந்தான்.

இரண்டு மூன்று லாரிகள் வைத்திருந்தவனுக்கு தொழிலே ஊரில் விவசாயிகளிடமிருந்து சரக்குகளை ஏற்றி வேவ்வேறு ஊரின் சந்தைகளில் சேர்ப்பதுதான்.

சின்னாவைப்பற்றி தெரிந்தவர்கள் யாரும் துணிந்து பெண்கட்ட வரமாட்டார்கள் என்று நினைத்த கருணாகரனின் நினைவில் வந்தது அவன் அன்று செய்த உதவிதான். உடனே நேரில் சென்று எல்லாவற்றையும் சொல்லியே பேசி முடித்துவிட்டார்.

அவனது தாயைச் சந்திக்க கேட்டவரிடம் அவர் உறவினர் வீட்டில் ஓய்வெடுப்பதாகச் சொல்லி தானே பேசிவிடுகிறேன் என்றதும், சின்னாவுக்கு முன் திருமணத்தை முடித்துவிட வேண்டுமென்ற வெறி கண்ணை மறைக்க, ஒப்புக்கொண்டிருந்தார் கருணாகரன்.

“பிள்ளை இரத்த வெள்ளத்துல துடிக்கக் கிடக்க, வேற சிரிக்கிய அவ கண்ணுமுன்னாடியே உள்ள கூட்டிட்டுப் போனவனை என்னாலயே மன்னிக்க முடியாதுத்தா" என்றார் தாளாமல்.

தன் மாமனின் நெஞ்சில் விம்மி அடங்கிக் கொண்டிருந்தவளை ஆதூரத்துடன் பார்த்திருந்தார். இத்தனை நாட்களில் அவள் அழுதும் அவர் பார்த்ததில்லை. சிரித்தும் அவர் பார்த்ததில்லை.

அவளது உணர்வுகள் அவனிடம் மட்டுமே உயிர்கொண்டன!

மருமகள் தான் முழுகாமல் இருப்பதாகச் சொல்ல சந்தோஷத்தில் கோவிலுக்குச் சென்றிருந்தார் மீனாட்சி.

அதையே வீட்டிற்கு வந்த கணவனிடமும் அவள் தயங்கியபடி சொல்ல, "ச்சீ கருமம் புடிச்சவள, எத்தனை தடவைடி உன் கருவ கலைக்கிறது” என்றவனில் துனுக்குற்று சுவரோடு சாய்ந்தாள்.

முதல்முறை கரு தானாகக் கலையவில்லையா?

“கண்ட கருமத்தையும் யூஸ் பண்ண எனக்கு புடிக்காதுன்னுதான உன்னைய மாத்திரையப் போடச் சொன்னேன்… போடலையா நீ?” என்றவன்,

“இரு போனதடவை மாதிரியே மருந்து வாங்கிட்டு வரேன் பாலில கலந்து குடிச்சிடு” என்றுவிட்டு அவன் வெளியேற அதிர்ச்சியில் சிலையாக நின்றிருந்தாள் அவள்.

அரைமணி நேரத்தில் திரும்பி வந்திருந்தான் அப்போதும் அவள் அதே இடத்திலேயே சமைந்திருக்க, “இந்தா இதைக்குடி” என்று குப்பியை நீட்டினான்.

“முடியாது” அவள் மறுத்துத் தலையாட்டினாள். பிள்ளை வந்தால் சரியாகிவிடுவான் என்றல்லவா அவன் இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்றதையும் மீறி உண்டாகியிருந்தாள்.

“இங்க பாரு உனக்கே தெரியும் மூணு வேளையும் எனக்கு அது இல்லாம இருக்க முடியாது. இதுல இன்னைக்கு வயித்தை தள்ளிட்டு புள்ளைன்னுவ, நாளைக்கு அது சிணுங்குதுன்னுவ வளரனும்னுவ அதுவரைல்லாம் என்னால காசுகுடுத்து போகமுடியாது” என்று அசால்ட்டாகச் சொன்னவனில் அன்றையநாளில் மீண்டும் ஒருமுறை அதிர்ந்தாள்.

அந்த நினைவே குமட்டிக்கொண்டுவர கழிவறைக்கு ஓடிச்சென்றாள். நினைக்க நினைக்கவே அருவெறுத்ததில் குடல் வெளிவந்துவிடும்போல் வாந்தி எடுக்க, அதற்குள் பாலில் மருந்தை கலந்திருந்தவன் கொத்தாக அவள் தலைமுடியைப் பற்றி தூக்கினான்.

நாடியைப் பற்றி மறுக்க மறுக்க அவள் வாய்க்குள் ஊத்தி விட, அவன் விட்டதும் வாய்க்குள் இருந்த மீதத்தை அவன் மூஞ்சிலேயே துப்பினாள்.

அவள் கன்னத்தில் ஒரு அறை விட்டவன், “நீ அன்னைக்கு ஜான்சி ராணியாட்டம் உங்கப்பன வெளுத்து வாங்கினப்பவே தெரியும் டி நீ ராங்கின்னு" என்று முகத்தில் வழிந்ததை துடைத்தெறிந்தான்.

“இதுக்குதான் முதல்முறை உனக்கு தெரியாமலே கலந்து குடுத்தேன்" என்றவன் எள்ளலாய் சிரித்தான்.

"இதுக்கே உனக்கு வாந்திவருதே! எத்தனையோ பொண்ணுங்கள தொட்டுட்டுதாண்டி உன்னையவே தொட்டேன்.

லாரி ஓட்டினமா அங்கங்க லாரிக்கு அடியில ஒதுங்கினமான்னு இருந்தவன உங்கப்பன்தாடி தேடி வந்தான்.

சொத்தையும் குடுத்து ஓசில சுகத்தையும் குடுத்தா எவனாவது வேண்டாம்னா சொல்லுவான்” என்று அரக்கனாய் சிரிக்க அன்பிலரசியின் உடல் தீப்பற்றினாற் போன்று எரிய ஆரம்பித்தது.

திடீரென கால்களுக்கிடையே இரத்தமாய் வழிந்தோட, “அவ்வளவுதான் முடிஞ்சிது. இதுக்குப் போய்…” என்றான். அவள் வயிற்றுவலியில் புழுவாகத் துடித்தாள்.

அதைச் சற்றும் கண்டுகொள்ளவில்லை அவன். “எந்தெந்த தெருவுல என் புள்ளைங்க சுத்துதுன்னு எவனுக்குடி தெரியும். ஏற்கனவே ஒருத்தி உன்புள்ளதான்னு மிரட்டிட்டு இருக்கா” என்று ஏதோ பெருமை போன்று மேலும் சிரித்தான்.

அவளருகில் வந்து குனிந்தவனின் பார்வை துடித்துக் கொண்டிருந்தவளின் மேனி மீது இரக்கமின்றி பாய்ந்தது.

"உனக்கென்னடி உடம்பு தேய்ஞ்சாலும் அங்கங்க சும்மா கின்னுன்னுதான் இன்னமும் இருக்க…

நீ எனக்கு சலிச்சி போகும்போது வதவதன்னு பெத்துக்க எவன் வேணாம்னான்” என்று அவள் கன்னத்தைப் பற்றப்போக, அந்த நிலையிலும் அவன் கையைத் தட்டிவிட்டாள்.

“பார்ரா பத்தினி தெய்வத்த! உன் மாமன் சீண்டிப் போட்டவதானடி நீ" என்றவனின் முகத்தில் காரி உமிழ்ந்தாள்.

சுவற்றோடு சேர்த்து அவள் கழுத்தை நெரித்தவன், "கொன்று போட்டா கேட்க ஆளில்லாத நாய்! உனக்கு இவ்ளோ திமிரா? இருடி உன்னை வந்து வச்சிக்கிறேன்” என்றவன் அவளை அப்படியே இரத்த வெள்ளத்தில் துடிக்கவிட்டுச் சென்றிருந்தான்.

கோவிலிலிருந்து திரும்பிய மீனாட்சி கண்டது வாயில் நுரை தள்ள உடல் ஒருபக்கமாய் வெட்டி வெட்டி இழுக்க இரத்தவெள்ளத்தில் கிடந்த மருமகளைத்தான்.

முதல் கரு கலைந்ததில், மாதங்கள் கடந்தே கருவுற்றதை சொல்லியிருந்தாள் அன்பிலரசி. அவன் கொடுத்த மருந்தில் கரு அரைகுறையாகக் கலைந்திருக்க, அவன் சொன்ன விசயம் வேறு அவள் ஆழ்மனதைப் பாதித்ததில் ஜன்னி கண்டிருந்தாள்.

எத்தனை நேரங்கள் அப்படியே கிடந்தாளோ! பதறிய மீனாட்சி தலையிலடித்துக்கொண்டு செய்வதறியாமல் கதற, முழு போதையில் ஒரு பெண்ணுடன் உள்ளே நுழைந்தான் அவள் கணவன்.

“படுபாவி கல்யாணத்துக்கப்புறம் திருந்துவன்னு நினைச்சேனே! என்னடா பண்ணித்தொலைச்ச அவள" என்று அவனது சட்டையைப் பிடிக்கப் போனவரை தாயென்றும் பாராமல் தள்ளிவிட்டான்.

“இரண்டுபேரும் ஓவரா சீன போடாதீங்கடி! அவள ஒழுங்கா கழுவித் துடைச்சி வை கிழவி இராத்திரிக்கு அவ தயாரா இருக்கணும்” என்றான் போதை தலைக்கேற…

தலையிலடித்துக்கொண்டு அவர் உதவித் தேடி வெளியேற, அவன் வேறொரு பெண்ணுடன் அறைக்குள் நுழைவதை துடித்துக்கொண்டிருந்த கண்களில் இறுதியாக வாங்கிக்கொண்டு மயக்கத்திற்குச் சென்றிருந்தாள் அன்பிலரசி.

ஆட்டோ ஓட்டுநர் உதவியுடன் மனைவியை மருத்துவமனைக்கு துக்கிச்செல்ல கவலையற்று வேறொருத்தியுடன் சல்லாபித்திருந்தது அந்த மிருகம்.

மீதமிருந்த கருவையும் சுத்தப்படுத்தி, இருநாட்கள் ஐசியூவில் இருந்தவளை மீனாட்சிதான் அவளது அன்னை வீட்டிற்கு அழைத்தார்.

அவன் செய்த எல்லா அநியாயத்தையும் தன் மாமனுக்காக பொறுத்துக்கொண்டு பல்லைக் கடித்தவளால், வேறு பெண்களின் தொடர்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அந்நிலையிலும் கழுவி இராத்திரிக்கு தயார்படுத்தி வை என்றவனின் குரலே காதில் மீண்டும் மீண்டும் எதிரொலிக்க அவளது பிடிவாதம் தகர்ந்தது.

அந்த மிருகம் களங்கப் படுத்திய அவளது உடலே அவளுக்கு பாரமாகத் தோன்ற, மறுக்க திராணியற்று பிறந்தகம் வந்திருந்தாள்.

அனைத்தையும் மாமன்‌மகள் சொல்லிமுடிக்க, உடல் இறுக அமர்ந்திருந்தான் சின்னா.

அந்நேரம் "தொப்" என்ற சத்தம் கேட்டு அனைவரும் வீட்டின் பின்புறம் ஓடிச்செல்ல அங்கு உணர்வற்றுக் கிடந்தார் கருணாகரன்.

சின்னா வருவான்...
 

Author: STN - 39
Article Title: சின்னா 'தி ரோமியோ' - 15
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

suji

Member
Aug 29, 2021
30
25
18
germany
டேய் என்னங்கடா .அடபோம்மா இவ்வளவு வீராவசனம் பேசுன பொண்ணு அவங்க அப்பாக்கு அப்போதைக்கு மண்டைய ஆட்டிட்டு அவன் மாமன்ட்ட சொல்லி இருக்கலாம். அதான் எல்லாம் கதம் கதம் என்னத்த சொல்ல
 
  • Love
Reactions: STN - 39

STN - 39

Member
Nov 30, 2025
76
59
18
Chennai
டேய் என்னங்கடா .அடபோம்மா இவ்வளவு வீராவசனம் பேசுன பொண்ணு அவங்க அப்பாக்கு அப்போதைக்கு மண்டைய ஆட்டிட்டு அவன் மாமன்ட்ட சொல்லி இருக்கலாம். அதான் எல்லாம் கதம் கதம் என்னத்த சொல்ல
அவர்தான் கல்யாணத்தையே சொல்லாம கொள்ளாம முடிச்சிட்டாரே டா...
முன்னாடியே சின்னதா உணர்ந்திருந்தாகூட அவ ஊரையே இரண்டாக்கி இருப்பா...

எல்லாம் விதின்னு சொல்ல ஆசைதான்...😀
 

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
இப்ப நிம்மதியா கருணா???
என்னயா பண்ணி வெச்சி இருக்க நீ???
ஒரு நல்லவன் கூட வா உனக்கு தெரியல....
அது எப்படி தெரியும்....நீயே இவளோ வன்மம் பிடிச்சி இத்தனை வருஷமா அமைதியா இருந்து இருக்க.....

அப்பறம் உன் கண்ணுக்கு அந்த பொறுக்கி.....தானே தெரிவான்.....
சரி நீ பிள்ளையை பெத்ததோட சரி.....அவன் அப்பா என்ன உன் காதலியைய தூக்கி நண்பனுக்கு கட்டி கொடுத்தார்?????
அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணாங்க கல்யாணம் பண்ணிகிட்டாங்க......

ஆன உன் அல்ப புத்தியால் என்ன பண்ணி வெச்சி இருக்க பாத்தியா😡😡😡😡😡😡

டேய்....சின்னா ஒரு முடிவு எடு டா
 
  • Like
Reactions: STN - 39

STN - 39

Member
Nov 30, 2025
76
59
18
Chennai
இப்ப நிம்மதியா கருணா???
என்னயா பண்ணி வெச்சி இருக்க நீ???
ஒரு நல்லவன் கூட வா உனக்கு தெரியல....
அது எப்படி தெரியும்....நீயே இவளோ வன்மம் பிடிச்சி இத்தனை வருஷமா அமைதியா இருந்து இருக்க.....

அப்பறம் உன் கண்ணுக்கு அந்த பொறுக்கி.....தானே தெரிவான்.....
சரி நீ பிள்ளையை பெத்ததோட சரி.....அவன் அப்பா என்ன உன் காதலியைய தூக்கி நண்பனுக்கு கட்டி கொடுத்தார்?????
அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணாங்க கல்யாணம் பண்ணிகிட்டாங்க......

ஆன உன் அல்ப புத்தியால் என்ன பண்ணி வெச்சி இருக்க பாத்தியா😡😡😡😡😡😡

டேய்....சின்னா ஒரு முடிவு எடு டா
சில சேர்த்து வைத்த வன்மங்கள்தான் சிலரோட வாழ்க்கையவே புரட்டி போட்டுடுது..