சின்னா - 15
வாசலில் கால் வைக்க கால்களில் சின்னதாய் நடுக்கம்.
உணர்வுகள் இன்னமும் உடலோடுதான் இருக்கிறது என்பதையே அந்த நடுக்கம்தான் காட்டிக்கொடுத்தது.
வீரம் செறிந்தவன், முதல் முறையாக ‘தனக்கு தைரியத்தைக் குடு இறைவா’ என மனதார வேண்டினான்.
கடைசியாக அரிவாளுடன் இந்த வீட்டிற்குள் நுழைந்தது நினைவிலாடியது.
கிட்ட தட்ட ஆறு மாதங்கள் கடந்து தன் மாமனின் வாசலைத் தாண்டி முதல் அடியை எடுத்து வைத்தான் சின்னா!
எதிர்ப்பட்டார் மரகதம். ஆறு மாதங்களிலயே சோர்ந்து அதீத மூப்பாய் தெரிந்தார்.
அவரது பெண் சொன்னதை செய்து காட்டியிருந்தாள். பெற்றோரை கிட்ட சேர்க்கவும் இல்லை. அவளும் வரவில்லை. அதில் முற்றிலும் உடைந்திருந்தார்.
கண்களால் வரவேற்பாய் பார்த்ததோடு சரி. அவனிடம் பேசும் திராணியற்றிருந்தார்.
“உன்னை இந்தக் கோலத்தில பார்த்திடக்கூடாதுன்னுதான் என் பொண்ணு தானா நெருப்புக்குள்ள தவம் இருக்கா. தயவு செஞ்சி அவ வேள்விய கேள்விக்குறியாக்கிடாதப்பா"
கணவரின் உயிரைக் காப்பாற்ற கடைசியாக அவன் காலைப் பிடித்துக் கெஞ்சியது நினைவிலாடியது.
“நீ ஜெயிக்கணும்னு அவ தோத்துட்டா" அவனது கால்களிலயே முட்டிக்கொண்டு அழுதது இன்னமும் இரணமாய் அவனது நெஞ்சில். கண்ணை இறுக மூடித்திறந்தான். உடல் அனலாய்க் கொதித்தது.
எத்தனை தூக்கமற்ற இரவுகளை இப்படி நெருப்புடன் கடந்திருப்பான்.
எத்தனை முழு இரவுகளை அந்த கிணற்றின் திண்டில் படுத்தும் நீரில் மூழ்கியும் அவள் நினைவலைகளை விரட்ட போராடியிருப்பான்.
இரவு முழுவதும் நீரில் மூழ்கிக்கிடந்து வெற்றுடம்புடன் மொட்டை மாடி நெல்காயவைக்கும் திண்டில் மதியம் உச்சி வெயில்வரை உணர்வற்றுக் கிடப்பவனை திலகவதிவந்துதான் கண்ணீருடன் கூட்டிச் சென்றிருப்பார். இன்று அவள் வந்திருக்கிறாள் என்று கேட்டபோது சகலமும் ஆடியது.
அவளை பார்க்கவே கூடாதென்றுதான் இரவுவரை பல்லைக் கடித்திருந்தான்.
ஆனால் இன்று அவள் இருக்கும் கோலம்!
தன்னையறியாமல் கால்கள் அவனை இழுத்து வந்திருந்தது.
எலும்பும் தோலுமாக உருக்குலைந்து கட்டிலில் படுத்திருந்தாள் அவன் பார்த்து பார்த்து வளர்த்த பைங்கிளி.
‘என்னுடைய அன்பாவா இது?’ பாண்டி வந்து சொன்னபோதுகூட இவ்வளவு உருக்குலைந்திருப்பாள் என அவன் எண்ணவில்லையே!
கழுத்தெலும்புகள் துருத்திக்கொண்டு, இமைகள் மூடியிருக்க அங்கு அழகிய மான்விழிகள் இருந்ததற்கான அடையாளமின்றி பார்க்க பார்க்கவே அவனுக்கு தாளவில்லை.
வழக்கம்போல் அவள் தலைக்கு அடியில் மரமல்லி மலர்களை ஓசைப்படாமல் வைத்தான்.
அதைப் பார்த்த மரகதம் குலுங்கி அழ,
“ச்சூ” என்று அவள் தூக்கம் கலையாமல் வாயில் விரல்வைத்து மிரட்டியவன் கண்களிலும் கண்ணீர்.
அவனின் இந்தப் பழக்கத்திற்காக மரகதம் கடிந்துகொள்ளாத நாட்களே இல்லையே!
“பொம்பளை பிள்ளைமேல இவ்ளோ ஆசை வைக்காதடா. காலேஜ் போற பிள்ளை நாளைக்கு எதனான்னா உன்னால தாங்க முடியாது"
தினமும் அவள் தூங்கியதும் மலர்களை பரப்புபவனை கடிந்துகொள்வார் மரகதம்.
"காலைல எழும்போது இந்த வாசனை இல்லனா அந்த நாளே நல்லா இல்லன்னுவா’த்த…
தலைலதான அவளை வைக்க விடாம பண்ணீங்க. பாருங்க எங்க கல்யாண மேடை முழுசா இந்தப்பூவால அலங்கரிக்கிறேன்” என்று தன் அத்தை சொல்ல வருவதையே புரிந்துகொள்ளாமல் அவரை வெறுப்பேற்றிச் செல்வான்.
அவர் எச்சரித்தை அன்றே கேட்டிருக்க வேண்டுமோ?
அவள் தோற்றம் கண்டு தாளாமல் வெளி திண்ணையிலே பொத்தென்று விழுந்தான்.
அதற்குமேல் முடியாது தலையைப் பிடித்துக் கொண்டவன் சத்தம் வராது குலுங்கிக் குலுங்கி அழுதவன் எவ்வளவு நேரம் அழுதானோ! அவன் தோள்களில் உயிர்ப்பற்று விழுந்தது ஒரு கரம்.
அவன் வளர்த்த பச்சைக்கிளியை உணராதிருப்பானா!
அவசரம் அவசரமாய் கண்களை துடைத்துக்கொண்டு “தூங்கலையாடா” என்றான்.
“உன் தோளில படுத்துக்கட்டா மாமா”
பதிலை எதிர்பாராது அவன் தோளில் சாய்ந்து கொண்டவளின் வெளிறிய விழிகளில் கண்ணீருக்கும் பஞ்சம் போலும்…
"நான் தூங்கி ஆறுமாசமாச்சி மாமா" என்றதில் அவன் அதிர கேட்டிருந்த மரகதத்திற்கும் அதிர்ச்சிதான்.
வந்ததிலிருந்து தான் என்ன முயன்றும் ஒற்றை வார்த்தை பேசாதவள் தன் மாமனிடம் வாய் திறந்ததே அவருக்கு பெருத்த நிம்மதியைத் தந்தது.
"ஏன்டா" என்றான் ஆதூரமாய்.
“மரத்துப் போச்சி மாமா..." மொட்டையாய் உணர்வற்றுச் சொன்னவளில் அவன் புருவங்கள் சுருங்கிற்று.
ஆறுமாதத்தில் என்ன மரத்துவிட்டது என் கண்மணிக்கு? உலகையே வெறுத்த இந்தப் பார்வை என்ன சொல்ல வருகிறது?
அவள் பேசும் கருவிழிகளில் ஆயிரமாயிரம் கதை படித்திருக்கிறானே!
அதே கருவிழிகளில் இன்று அவனாலும் ஒன்றையும் கண்டுகொள்ள முடியவில்லையே! சற்று நிமிடம் திணறித்தான் போனான்.
முயன்று தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன் தயக்கமாய் தன் கண்மணியை ஏறிட்டான்.
"அன்பா குட்டி நீ மாமாவ நினைச்சிட்" என்றவன் மேற்கொண்டு கேட்க முடியாமல் தவிக்க,
உடனேயே "நான் உன் வளர்ப்பு மாமா" என்றாள் திடமாய்.
ஒருவேளை தன்னை நினைத்துக்கொண்டு கணவனின் தொடுகையை ஏற்க முடியாமல் தவிக்கிறாளோ என நினைத்துத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டது.
"முதல்ல உன் நினைப்பு இருந்துச்சிதான். இல்லன்னு சொன்னா அது பொய் மாமா. ஆனா இது நானே எடுத்த முடிவுதானே!
போகப்போக இதுதான் என்புருஷன். இவன்தான் என் வாழ்க்கைன்னு என்னை முழுசா தயார்படுத்திக்கிட்டுதான் கோயில்லருந்து வெளிய காலடியே எடுத்து வச்சேன்" என்றாள்.
"பின்ன என்னடா" என்றவனின் குரல் கனிந்திருந்தது.
"அருவருப்பா இருக்கு மாமா.. இங்கப் பார் இந்தக் கை ச்சீ… இந்தக் கால் ச்சீ" என்றவள் திடிரென ஒவ்வொன்றாய் நகத்தால் வெறி கொண்ட மட்டும் பிராண்ட, தடுத்து தன்னுள் சுருட்டிக்கொண்டான்.
அவன் நெஞ்சினுள் புதைந்துகொண்டு கமறிய குரலில் அவள் நடந்ததைச் சொல்லச் சொல்ல அவன் கண்கள் இரத்தநிறம் கொண்டது.
மகள் சொல்வதைக் கேட்டிருந்த மரகதம் கண்ணீருடன் முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டார்.
நெஞ்சில் குமுறிய எரிமலைகள் வெடித்துச் சிதற அதன் அக்கினிப் பிழம்புகள் அவன் கண்களில் கிளை பாய்ச்ச இறுகிப் போய் அமர்ந்திருந்தான் சின்னா.
அவனது நெஞ்சில் புதைந்து, "நம்ம தேன்மதிக்கு மாதிரி என் உடம்பும் கழுத்துக்கு கீழ மரத்துப் போய்டாதா மாமா" என்றதும் அவன் உறைந்து நிற்க,
தன் உடலையே பிடுங்கிப் போடுவதுபோல் மீண்டும் கீறிக்கொண்டு கதறி அழுதவளை கண்ணீர் வழிய தாய்க்கோழியாய் மேலும் அரவணைத்துக் கொண்டான் அவளது மாமன்.
மரகதம் "அய்யோ அம்மா" என வாய்விட்டே கதறி தலையிலடித்துக் கொண்டார்.
அந்நேரம் அங்கு வந்தார் அன்பிலரசியின் மாமியார் மீனாட்சியம்மாள். அன்பிலரசி கணவனின் தாய் அவர்தான் அன்பிலரசியை வலுக்கட்டாயமாய் இங்கு அழைத்து வந்தது.
“அண்ணி அவங்க சின்னதுல…” என்றார் மரகதம் பதறி.
சின்னாவின் அணைப்பில் தன்னைமறந்து ஒடுங்கியிருப்பவளைக் கண்டு அவர் தவறாக எண்ணிவிடக் கூடாதே!
"தாய்ப்பறவை அரவணைப்புக்கும் ஜோடிப்புறா அணைப்புக்கும் வித்தியாசம் தெரியாதவ இல்லடி நான்” என்றவரின் பெருந்தன்மையில் சின்னாவின் விழிகள் நன்றியோடு ஒருமுறை நோக்கி விலகியது.
இந்த நன்றிக்கடனுக்காகவே அவரின் காலம் முழுமைக்கும் அவன்தான் அன்னமிடப்போகிறான் என்று அன்று அறியவில்லை சின்னா.
தன் மாமனின் நெஞ்சில் விம்மி அடங்கிக் கொண்டிருந்தவளை ஆதூரத்துடன் பார்த்திருந்தார் மீனாட்சி.
இந்த ஆறுமாதங்களில் அவள் அழுதும் அவர் பார்த்ததில்லை. சிரித்தும் அவர் கண்டதில்லை.
அவளது உணர்வுகள் சின்னாவிடம் மட்டுமே உயிர்கொண்டன!
இன்னமும் விம்மி வெடித்துக்கொண்டிருந்த தன் மருமகளின் மீதான பார்வையை ஒரு பெருமூச்சுடன் மரகதத்திடம் திருப்பினார்.
“உன் புருஷன் மட்டும் நேரடியா என்கிட்ட வந்து பொண்ணு கேட்டிருந்தா இந்தக் கல்யாணத்தையே நடக்க விட்டிருக்க மாட்டேன்டி" என்றவரில் மரகதம் அரண்டு நோக்கினார்.
‘தன் அன்னைக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. அவரால் இவ்வளவுதூரம் வரமுடியாது. கல்யாணத்தை நிறுத்த வேண்டாம் என்று தன் அன்னை கேட்டுக் கொண்டதாலயே தான் மட்டும் வந்ததாகக் கல்யாணத்தன்று தனியாக வந்து நின்றது எல்லாம் பொய்யா!
மீனாட்சி கருணாகரனுக்கு தூரத்து உறவுமுறையில் அக்கா. ஒருமுறை கருணாகரனின் வாழைத்தார் ஏற்றிச்சென்ற சரக்கு லாரி நடுவழியில் பழுதாகிவிட அன்பிலரசியின் கணவன்தான் ஆபத்திற்கு உதவியிருந்தான்.
இரண்டு மூன்று லாரிகள் வைத்திருந்தவனுக்கு தொழிலே ஊரில் விவசாயிகளிடமிருந்து சரக்குகளை ஏற்றி வேவ்வேறு ஊரின் சந்தைகளில் சேர்ப்பதுதான்.
சின்னாவைப்பற்றி தெரிந்தவர்கள் யாரும் துணிந்து பெண்கட்ட வரமாட்டார்கள் என்று நினைத்த கருணாகரனின் நினைவில் வந்தது அவன் அன்று செய்த உதவிதான். உடனே நேரில் சென்று எல்லாவற்றையும் சொல்லியே பேசி முடித்துவிட்டார்.
அவனது தாயைச் சந்திக்க கேட்டவரிடம் உடல்நலமில்லாமல் அவர் உறவினர் வீட்டில் ஓய்வெடுப்பதாகச் சொல்லி தானே பேசிவிடுகிறேன் என்றதும், சின்னாவுக்கு முன் திருமணத்தை முடித்துவிட வேண்டுமென்ற வெறி கண்ணை மறைக்க, ஒப்புக்கொண்டிருந்தார் கருணாகரன்.
திருமணம் சம்மந்தமாக நடைமுறைகள் செய்யப்போய் அது துளி வெளியே கசிந்தாலும் சின்னா விட்டுவைக்க மாட்டான் என அறிந்தவராதலால் காதும் காதும் வைத்தாற்போல் கப்சிப்பென்று இருந்து கொண்டார்.
“அவனைப் பெத்த பாவத்துக்கு விஷத்தை குடுக்கத் துணிவில்லாம அலையுற நான் எப்படி மரகதம் தெரிஞ்சே ஒரு பொண்ணோட வாழ்க்கையோட விளையாடுவேன்?”
மருமகள் சொல்லாமல் விட்டதையும் மரகதம் சொல்லச் சொல்ல இடிந்து போய் அமர்ந்தார் மரகதம் என்றால் தன்னையே மன்னிக்க முடியாத குற்ற உணர்வுக்கு ஆளானான் சின்னா!
என் சோகம் பெரிதென்று என் கண்மணியை காணாமல் விட்டது தவறோ? அவள் வாழ்வில் என்ன நடந்தது என்று தெரிந்து கொண்டிருக்க வேண்டுமோ? எங்கிருந்தாலும் சந்தோசமாக இருப்பாள் என்றுதானே நினைத்திருந்தான்.
அந்நேரம் "தொப்" என்ற சத்தம் கேட்டு அனைவரும் வீட்டின் பின்புறம் ஓடிச்செல்ல அங்கு உணர்வற்றுக் கிடந்தார் கருணாகரன்.

Last edited:
Author: STN - 39
Article Title: சின்னா 'தி ரோமியோ' - 15
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.