சின்னா - 5
“காடு வா வா ‘ங்க’ சின்னா என் சிங்காரக் கண்ணான்னு சுத்திப்புட்டு வாயைப்பாரு. சேட்டைப் புடிச்ச கிழவீங்களா!” என்ற மணிகண்டன் பாட்டிகளின் வாயிலிருந்து தப்பித்து, ஒரே ஓட்டமாக உள்ளே ஓடி அரவிந்தனுடன் ஒட்டிக் கொள்ள, எழுந்த மெலிதானப் புன்னகையை மறைத்துக் கொண்டான் அரவிந்தன்.
“சிரிக்கிறீங்களா? இந்நொரு தரம் இந்த ஊருக்குள்ள காலெடுத்து வச்சா கேளுங்க சார்” சிறுபிள்ளையாய் முறுக்கிக் கொண்டவனைக் கண்டு மேலும்தான் புன்னகை வந்தது.
தூசி தும்பில்லாமல் வெகு சிரத்தையாக நிர்வகிக்கப்பட்ட சின்னாவின் அறையிலிருந்து ஒரு துரும்பும் கிடைக்கவில்லை.
ஒரு மேஜை மீது குறிப்பிட்ட நாளிதழ் மற்றும் கலைந்துக் கிடக்க அதைப் புரட்டினான் அரவிந்தன்.
“சின்னுவோடது அதைத் தொடாத"
நிகிலனின் தோளிலிருந்த வாண்டு, அரவிந்தனை முறைத்து கண்ணை வேறு உருட்டிக்காட்டியது.
‘பச்ச புள்ளையக் கூட தன் பக்கம் இழுத்து வச்சிருக்கிறாரே இந்த மனுஷன்’ நினைத்த அரவிந்தன்,
“உனக்கும் சின்னா தானா" என்றான் மெல்லிய முறுவலுடன்.
“சின்னாக்கு அப்படிக் கூப்பிட்டாதான் பிடிக்கும் சார்” என்ற நிகிலன், “இவளுக்கு மட்டும் சின்னு. னா வராது” என்றான்.
அவன் அறியாதது மகளை அப்படிக் கூப்பிடப் பழக்கியதே சின்னாதான் என்பது.
“அதான் அகரன் முதல் ஆயாவரை சின்னான்னு கூப்பிடுறாங்களா" என்ற மணிகண்டனை அரவிந்தன் முறைத்தான்.
‘இப்படியே அடிக்கடி முறைச்சிட்டு இருந்தா இந்த கேஸ் முடியறதுக்குள்ள சாரோட கண்ணு இரண்டும் வெளில வந்துடும்’ மணிகண்டனின் வாய் அடங்கினாலும் மனது அடங்குவேனா என்று பகடி பேச,
ஒரு ஓரமாய் மாதக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அதே பத்திரிக்கை அடுக்குகளை மணிகண்டன் புரட்டுவதுபோல் போய் நின்றுகொண்டான்.
“அதைத் தொடாத சொல்றேன்ல. பெரிய பூச்சி கடிக்கும்”
மீண்டும் தன் தகப்பனின் தோளிலிருந்து நிமிர்ந்த அன்பிலரசி,
மணிகண்டனை தன் சின்னக் குரலில் எச்சரித்தது.
கூடவே, “பிச்சி பிச்சி" என்று தன் குட்டி ஆட்காட்டி விரலை நீட்டி பத்திரமும் காட்ட,
“லேடீஸ் எல்லாத்தையும் டெரர் பீஸா மாத்தி வச்சிருக்கார் சார், அந்த மனுஷன். வாங்க சார் போவோம்” என்ற மணிகண்டன் அரவிந்தனை இழுத்துக்கொண்டு வெளியில் வந்திருந்தான்.
“இல்ல, இவ எல்லாத்தையும் கலைச்சி போட்ருவான்னு சின்னா…” என்று கூடவே வந்த நிகிலன்,
“பேப்பரைக் கலைச்சா மட்டும் சின்னாக்கு பிடிக்காது. கோபம் வந்திடும்" என்று முடித்தான்.
“லே நிகிலா! ஒருவேளை சின்னா பசுபதி கோவிலுக்கு போயிருக்குமோ!"
அவர்கள் வெளியில் வரவும் நிகிலனிடம் தன் சந்தேகத்தை விசாரணையாய் பெரியாத்தா தொடர, “இங்க யார் விசாரிக்க வந்தான்னே தெரியல” என்று சத்தமாகவே புலம்பினான் மணிகண்டன்.
அதைக் கண்டுகொள்ளாத அரவிந்தன், “எங்க இருக்கு அந்தக் கோவில்?" என்று தன் காரியத்தில் கண்ணானான்.
“எவடி இவ. சின்னாதான் வருஷக் கணக்கா அங்கப் போறதே இல்லையே!" என்று இடித்தார் இரத்தினம்.
"சின்னாவோட சொந்த ஊர்னு ஒருதடவை சொல்லி இருக்கார்" என்றான் நிகிலன்.
"சொந்த ஊரா? அது கோவில் இல்லையா! ஏ இராசாத்திங்களா, உங்களுக்கு முன்னமே தெரியும்ல, எதையும் முதல்லயே சொல்ல மாட்டீங்களா?” என்று பாய்ந்தான் மணிகண்டன்.
இதோ அடுத்தடுத்த நாட்களில் அரவிந்தனும் மணிகண்டனும் பசுபதி கோவிலை நோக்கிய தங்களது பயணத்தைத் தொடர, அவர்களது வாகனம் ஊர் எல்லையில் நிறுத்தப்பட்டது.
“லே, மணி! வரச்சொல்லிப்போட்டு நைசா கிளம்புற பார்த்தியா!” என்ற பெரியாத்தா கையில் பெரிய கட்டைப் பையுடன் ஜீப்பில் ஏற முற்பட, திகைத்தான் அரவிந்தன்.
‘எல்லாம் உன் வேலையா?’ அரவிந்தன் முறைக்கவும் “சார்" என்று அலறினான் மணிகண்டன்.
“சத்தியமா சார்! கிழவி ஏதோ கோர்த்து விடுது. நம்பாதீங்க" என்றவன் தலையில் கை வைக்க,
“நேற்று நீதான பசுபதிகோவில் போறோம்ன. அதுக்குள்ள மறந்துட்டியா. என்ன போலீசோ போ!” என்று மணிகண்டனை விரட்டிய பெரியாத்தா,
“இவன வச்சி எப்படி சமாளிக்கற தம்பி! நேற்று வரச்சொல்லிப்புட்டு எப்படி நடிக்கிறான் பாரு" என்று அரவிந்தனிடமும் போட்டுக் குடுக்க,
"சார், சத்தியமா இல்ல. நேற்று இதுதான் வாய புடுங்கிச்சி. ஏதேச்சையா போறோம்னு சொன்னேன். இப்படி கிளம்பி வரும்னு எனக்குத் தெரியாது சார்” என்றான் அப்பாவியாய்.
அவனை கொஞ்சமும் சட்டை செய்யாத பெரியாத்தா, “ஏய் என்னடி சில கணக்கா நிக்க! வந்து ஏறுவியா?" என்றார் பார்வதி பாட்டியிடம்.
“ஏய் சரசா! விரசா வா!" என்று பார்வதி பாட்டி கூக்குரலிட தூரத்தில் ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தார் சரஸ்வதி பாட்டி.
இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று அரவிந்தன் திகைத்து முடிக்கும் முன்,
“லே தள்ளுலே!" என்று பெரியாத்தா ஒரு இடி இடித்ததில் வெளியில் வந்து விழுந்தான் மணிகண்டன்.
பெருமூச்சொன்றை இழுத்து விட்ட அரவிந்தன், மணியை முறைத்து விட்டு, “பாட்டி! இப்படில்லாம் வரக்கூடாது. உங்க சின்னாவ கண்டுபிடிச்சி தர வேண்டியது என்னோட பொறுப்பு" என்ற பொறுமையாய்ச் சொல்லிப் புரிய வைக்க முயல,
“காசி இராமேஷ்வரம்தான் போக முடியல. பசுபதி கோவிலாவது பார்த்திடறோம் விடப்பா! என்றார் பார்வதி.
“ஏ பாரும்மா. ஆத்தா,பார்வதி தாயே! சொன்னாக் கேளு! இது கவர்மெண்ட் வண்டி. உங்களை எல்லாம் கூட்டிட்டுப் போக முடியாது. மரியாதையா எல்லாம் கீழ இறங்குங்க” என்ற மணிகண்டன் பார்வதியை பிடித்து கீழே இறக்க முயற்சிக்க,
“பாரு கீருன்னா கடைஞ்சி தயிராக்கிருவேன் பார்த்துக்க" என்ற பார்வதி பாட்டி,
“உனக்கு வண்டிதான பிரச்சனை?" என்றார் விரலை நீட்டி.
திரும்பி, "லே! முருகேசு!” என்று கூவி அழைக்க, தூரத்தில் குட்டி யானைப் போன்ற வடிவிலான வாகனத்தின் முன் நின்றிருந்தவன், “என்னாத்தோ" என்று வந்து நின்றான்.
“இந்தா இந்த நீலக் கலர் ஜீப்ப தொடர்ந்து போய்யா! உனக்கு ஆறுமாசத்துக்கு சரசா காசு வாங்காம பால் ஊத்துவா" என்றவர்,
“பொல்லாத ஜீப்பு. ஏ வாங்கடி நாம அந்த வண்டில காத்தாட போவோம்” என்று இறங்க,
“காலைலயே அந்த அகரன் பைய சொன்னது சரியாதான் போச்சு. அதுக்குதேன் எதுக்கும் இருக்கட்டும்னு முருகேச இங்கன நிக்கச் சொன்னேன்" என்றார் பெரியாத்தாவும் இறங்கிக் கொண்டே.
‘எல்லாம் அவன் பார்த்த வேலையா’ என்ற அரவிந்தனோ எப்படி சொல்லிப் புரிய வைக்க என்று முழித்து நின்றான்.
மணிகண்டன் தான், "ஏய் கிழவிகளா! உங்கள வீட்ல தேட மாட்டாங்களா?” என்று எகிறிக்கொண்டுப் போனான்.
“காட்டுக்கு உரமாகிப் போக வேண்டிய வயசில நெஞ்சுரமா இருக்கச் சொன்னதே எங்க சின்னாதான். இந்தக் கிழவிங்க வீட்ல இருந்தாலும் ஒன்னுதான் இறந்தாலும் ஒன்னுதான். யாரும் தேட மாட்டாங்க!” என்ற பெரியாத்தாவின் குரல் சற்றே கரகரத்து ஒலிக்க மணிகண்டனுக்கே ஒரு மாதிரியாகிப் போனது.
அடாவடியாக மட்டுமே பார்த்து பழகியவரை இப்படிப் பார்க்க காவல் தெய்வங்கள் இருவருக்கும் சற்றே கலக்கம்தான்.
அவரே தேற்றிக்கொண்டு, “இந்தா இவதேன் புருஷன் கிடக்க வருவேன்னு ஒத்தக் கால்ல நிக்கா" என்று சரசாவைக் கைக்காட்ட,
"அதுக்கு குவாட்டர் பாட்டிலு நாலு வாங்கி வச்சிட்டுத்தான் வாறேன். அதுக்கு குவாட்டர் இருந்தா போதும். வேற குமரியும் வேண்டாம் இந்தக் கிழவியும் வேண்டாம்” என்றார் அவர்.
“பாட்டி சொன்னா கேளுங்க.." அரவிந்தன் ஏதோ சொல்ல வர,
“ஏய்யா, உன் வழில நீ போ! நாங்க எங்கிட்டும் போவோம். அது எங்கிஷ்டம்" என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார் பெரியாத்தா.
என்ன சொன்னாலும் ஜீப்பை அவர்கள் பின் தொடரப் போவது உறுதியாகத் தெரிய, ஏற்கனவே பாட்டிகளின் அடாவடியை பார்த்திருந்ததாலும்ஒரு முடிவுக்கு வந்திருந்தான் அரவிந்தன்.
“நம்பி வந்ததுக்கு கடைசில இப்படி ட்ராக்டர்ல ஏற வச்சிட்டீங்களே சார்" மூக்கை உறிஞ்சினான் மணிகண்டன்.
ஆம். ஏனோ அந்த வயதில் அவர்களைத் தனியே விட பிரியப்படாத அரவிந்தன், தானும் அவர்களுடனே பயணிக்க முடிவெடுத்திருந்தான்.
பயணம் ஊர் எல்லையைத் தாண்ட, “சார், ஒரு போட்டோ கூட இல்லாம எப்படி என்னான்னு போய் தேடப் போறோம்" என்றான் மணிகண்டன்.
அதே சிந்தனையில்தான் இருந்த அரவிந்தனும் நிகிலன் வீட்டில் நடந்ததை நினைத்திருந்தான்.
நிகிலனிடம் சின்னாவின் புகைப்படம் கேட்ட போது, " எங்க கல்யாண ஆல்பத்தில இருக்கும். இருங்க சார் எடுத்திட்டு வரேன்” என்று போனவன் வெறுங்கையுடன் திரும்பி வந்தான்.
"எங்க கல்யாண ஆல்பத்தையும் காணல. ஒவ்வொரு பர்த்டேவுக்கும் எடுத்த என் பொண்ணு அன்பாவோட ஆல்பத்தையும் காணல சார்” என்றான் அதிர்ச்சியாய்.
அதே நேரம், தன் நெஞ்சில் சாய்ந்திருந்த மங்கையிடம்,
“இதோ, இதுதான் அன்பிலரசி. என் அன்புக்கே அரசி” என்று சிரித்தது கரகரத்த ஆண்குரல் ஒன்று.
பொக்கைப் பல்லும் கேக் பூசிய வாயுமாய், தன் பிறந்தநாள் ஆல்பத்திலிருந்த குட்டியைக் காட்டி, அதன் முகத்தைக் கணிவுடன் தடவியது அந்தக் கரம்.
“அப்போ நான் உன் அன்புக்கு அரசி இல்லையா மாமா?" நெஞ்சிலிருந்த மங்கை சினுங்கியது.
அந்த இளஞ் சோடிக்கு அன்று காலையில்தான் முருகனின் திருவடியில் திருமணம் நடந்தேறியிருக்க, திருமண விருந்து வெகு எளிமையாய் அநாதை இல்லத்தில் முடிந்திருந்தது.
“நீ இல்லாத நாட்களில் உயிர்ப்புடன் வச்சிருந்து என்னை உன்கிட்ட சேர்த்ததே இவதான்" என்ற ஆணின் முகத்தில் அந்தப் பிஞ்சைப் பிரிந்த ஏக்கமும் தவிப்பும்.
“உண்மைய சொல்லு மாமா! நீ தான இவளுக்கு பெயர் வச்ச..” என்று மிரட்டிய மங்கையோ,
“லவ்வர் பெயர பொண்ணுக்கு வைப்பாங்கன்னு பார்த்திருக்கேன், நீயும் என் பெயரையே இவளுக்கு வச்சிட்டியா மாமா” என்று குழந்தையாய் கிளுக்கிச் சிரிக்க,
அன்பாவென அழைக்க ஆளின்றி ஆவி ஒடுங்கிப் போனதை எப்படிச் சொல்வான் அவன்.
மௌனத்தை மொழிகளாக்கி, விடியலில் எழுந்ததால் காயாத பெண்ணின் ஈரக்கூந்தல் அவள் காதோரம் ஒதுக்கினான்.
“உன்னை ரொம்பப் படுத்துறேன்ல மாமா! நீ வேணும்னா பாப்பாக்கிட்ட திரும்பிப் போறீயா?" தன் மாமனின் கலங்கிய முகம் காணத் தாங்காது கேட்டது பாவை.
அந்தக் கேள்வி அவனை எங்கு தாக்கியதோ!
"எத்தனை தரம் சொல்லி இருக்கேன் எனக்கும் சேர்த்து முடிவெடுக்காதன்னு. திருந்தவே மாட்டியாடி நீ” கொஞ்சம் கோபம் கலந்து எச்சரிக்க, அதற்கும் வாடியது பாவை.
“ஏன் மாமா, கல்யாணத்தன்னைக்கு உன்னை விட்டுட்டு ஓடிப் போய்ட்டேன்னு உனக்கு என் மேல கோபமே வரலையா?"
அவன் நெஞ்சிலிருந்தபடியே திரும்பி அவன் முகம் பார்த்த பெரிய அன்பிலரசி, குழந்தையாய்க் கேட்க, மென்மையாய், ‘இல்லை’ என்று மறுத்துத் தலையாட்டினான் அவன்.
கோழிக் குஞ்சொன்றை அதன் தாய் சிறகை விரித்துக் காப்பது போல், ஒரு நொடி பாவையை தன் கைகளுக்குள் இறுக அணைத்து விடுவித்தவன், கண்களை ஒருமுறை இறுக மூடித் திறந்தான்.
“என்னைத் தேடாதே மாமா. நீ என்னைத் தேட முயற்சி பண்ணினாக்கூட இந்த உலகத்தை விட்டே ஒளிஞ்சிப்பேன்னு, நீ எழுதி வச்சக் கடிதம் கிடைச்சப்ப உன்னை கொல்லும் வெறி வந்துச்சிடா”
என்றவனின் முகத்தில் எள்ளளவும் அந்தக் கோபத்தின் சாயல் இல்லை.
அந்தக் கோபத்தைத் தான் அவளை இறுக அணைத்துத் தணித்துக் கொண்டான் போலும்.
மாறாக கணிவாய் நிறைந்து மங்கையையே அவன் பார்த்திருக்க,
“இல்லைன்னாதான் என் சின்னு, இந்த உலகத்தில எந்த மூலைல நான் ஒளிஞ்சிருந்தாலும் கண்டுபிடிச்சிடுமே” என்று கலகலத்துச் சிரிக்க,
தன் அன்பிலரசியின் நெற்றியோடு நெற்றி முட்டினான் சின்னா.
தன்னவள் அவளாக இருக்கும்போது மட்டுமே வரும் பிரத்யேக அழைப்பு. வெகுநாட்களுக்குப் பின் ஆழ்ந்து சுவாசித்தான் சின்னா.
“அதான் உன் மேல இருக்கக் கோபத்தைத் தீர்த்துக்க, சின்னது பெருசுன்னு இல்லாம ஊர்ல இருக்க எல்லா பொண்ணுங்களையும் ஏமாத்தினேன்” என்று சிரித்த தன் மாமனிடம்,
“அப்படியா மாமா!” என்று அதியயித்தது பெண். அதில் எள்ளளவும் அதிர்ச்சி இல்லை.
“சரி மாமா! நீ எப்படி ஏமாத்துனன்னு ஒரொருக் கதையா சொல்லுவியாம். நான் கேட்டுக்கிட்டே தூங்குவேனாம்" என்ற மங்கையோ சரிந்து சின்னாவின் மடியில் வாகாய்ப் படுத்துக்கொள்ள,
“என்னது தூங்குவியா? இன்னைக்கு நமக்கு முதலிரவு அன்புக்குட்டி" என்ற சின்னா சத்தமிட்டுச் சிரித்தான்.
"என்னைக்குமே நமக்கு முதலிரவுதானே மாமா. நான் பிறந்தன்னைக்கு நைட்டெல்லாம் தூங்காம அழுத என்னை, நீதான் மடியில போட்டுத் தட்டி தட்டி கதை சொல்லித் தூங்க வச்சியாம். அம்மா எப்போதும் சொல்லிக்கிட்டே கிடக்கும்” என்ற பெண்ணின் இமைகள் சுகமாய் மூடிக்கிடந்தது.
சின்னா வருவான்...