சிற்ப பாவை - 14
அந்த எளிய உணவோடு அன்று இரவு இனிதே முடிந்தது.
சண்டை நடக்கும் இடத்திற்கு ஆனந்தி அவசரமாக ஓடி வந்தாள். மகனின் நிலை கண்டு துடித்து போனார்.
"வாசவி! நீ பண்ணிட்டு இருக்கிறது கொஞ்சம் கூட சரியில்லை... கதவைத் திறம்மா!" என்று கதவைத் தட்டினாள். அதற்குள் வாசவியின் குடும்பத்தாரும் அங்கே வந்துவிட்டனர்.
"ஆனந்தி! உன் புள்ளை ஒரு நாளாவது உருப்படியா புருஷனா இருந்திருக்கானா? தினமும் சண்டை, வம்பு... இதுல உன் பிள்ளைக்கு குடிப்பழக்கம் வேற இருக்கு! இதையெல்லாம் மறைச்சு ஏமாத்தி என் பொண்ணு கழுத்துல தாலி கட்ட வச்ச?" என்று வாசவியின் அம்மா தெருவே கேட்கக் கத்தினாள்.
"என் புள்ளை குடிக்கிறானா?" என்று ஆனந்தி அதிர்ச்சியில் உறைந்து மகனைப் பார்த்தாள்.
பிரனேஷ் ஒரு கசப்பான சிரிப்பை உதிர்த்தான்.
"இவ கொடுக்கிற டார்ச்சர்ல நான் குடிச்சிட்டு வீட்டுக்கு வர்றதே பெரிய விஷயம்! ஒரு நாள் கூட நிம்மதியா ஒரு மனுஷனை வாழ விட மாட்டாங்க. வெளியில சொல்ல அசிங்கமா இருக்கு... பொண்ணா பெத்து வச்சிருக்கீங்க? பிசாசைப் பெத்து வச்சிருக்கீங்க!" என்று ஆத்திரத்தில் பொரிந்து தள்ளினான்.
னைவரையும் எரித்து விடுவது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு, தன் பைக்கை எடுத்துக்கொண்டு, அந்த இருட்டில் புயலென கிளம்பிச் சென்றான். அவன் பின்னே எஞ்சியது எள்ளும் வசையும் மட்டுமே.
வாழ்வே ஒரு பாழடைந்த சூனியமாகிப் போனது போன்றதொரு உணர்வு பிரனேஷிற்குள் ஊடுருவியது. "உன்னைப் பிடிக்கவில்லை" என்று முகத்திற்கு நேராகச் சொன்னவள், இருளின் நிசப்தத்தில் மட்டும் ஒரு தீராத விடியலை போல அவனைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தாள். அப்போது மட்டும் என்னை பிடித்ததா? இல்லை அந்த சுகத்திற்கு மட்டும் தான் நானா? அவன் அருவருப்பின் உச்சத்தில் நின்றான்.
அவள் தரும் அந்தத் துயரம் கொஞ்சமா நஞ்சமா? வெளியே யாரிடமாவது சொல்ல நினைத்தாலே அவனுக்கு உடல் கூசியது, கூனிக் குறுகினான்.
விதி அதன் போக்கில் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்க, இங்கே ஆனந்தியின் வீட்டில் ஒரு பெரும் போர்க்களமே நடந்து கொண்டிருந்தது.
தன் அக்கா, தங்கை எனச் சொந்த பந்தங்கள் அனைவருக்கும் போன் செய்து அலறினாள் ஆனந்தி.
ஆனால், "தொலைவில் இருக்கிறோம், இப்போதைக்கு வர முடியாது" என்று ஒவ்வொருவரும் கையை விரித்தபோது, அவளுக்குள் இருந்த ஆத்திரம் எரிமலையாய் வெடித்தது.
"நாசமாப் போயிடுவீங்க... நல்லாவே இருக்க மாட்டீங்க! மண்ணோடு மண்ணாப் போயிடுவீங்க!" சாபங்கள் சொற்களாக அல்ல, நெருப்புக் குழம்பாக அவள் வாயிலிருந்து வெளிவந்தன.
"என் மகனை இப்படி அக்மார்க் குடிகாரனா ஆக்கி வச்சிருக்கே... நீ எல்லாம் நல்லா இருப்பியா?" என்று தன் மருமகளைப் பார்த்துக் கண்டபடி வாய்க்கு வந்தபடி அர்ச்சித்தாள்.
ஆத்திரம் தாளாமல் அவனுடைய துணிமணிகளையும் பொருட்களையும் வாரிச் சுருட்டிக் கொண்டு, அவமானப்பட்ட பூனை போல அங்கிருந்து கிளம்பி வீடு வந்து சேர்ந்தாள்.
வீட்டுக்கு வந்ததும் ஆவேசத்துடன் தொடப்பத்தை எடுத்துக்கொண்டு மகனைத் தேடினாள். ஆனால் அவன் அங்கு இல்லை.
அந்த வீட்டின் வெறிச்சோடிய மூலை ஒன்றில் முடங்கி அமர்ந்து, சொல்லொணாத் துயரத்தில் விம்மி விம்மி அழத் தொடங்கினாள் ஆனந்தி.
'பேராசை பெரு நஷ்டம்' என்பதற்குத் நான் ஒரு நடமாடும் உதாரணமோ? என்று அவள் மனம் குமுறியது. மகனின் வாழ்க்கை சிதைந்து நாசமாகி போகுமோ என்ற பயம் அவளை மரணப் பிடியாய் இறுக்கியது.
"எப்படியாவது இந்த வாழ்வைச் சரி பண்ணியாகணும்… அந்த நொடியிலும் அவர்களை பிரிக்க வேண்டும் என்று அவர் மனம் சிந்திக்கவில்லை." அவளது வைராக்கியமான முடிவாக இருந்தது.
"அண்ணன் மட்டும் இப்போது ஆரோக்கியமாக இருந்திருந்தால், நிலைமையே வேறாக இருந்திருக்கும். அவராக இருந்தால் பிரனேஷை அதட்டி, உருட்டி அடக்கி இருப்பார்."
இத்தனை காலம் அண்ணனைத் திரும்பிப் பார்க்காதவள், தனக்கொரு பிரச்சனை என்ற போது தான் அவரைத் தேடினாள். இப்போது அவரிடம் சென்று உதவி கேட்கவும் முடியாது, உதவி செய்யும் நிலையில் அவரும் இல்லை. அவர் நோயுற்று தவித்தபோது ஒரு முறை கூட சென்று பார்க்கத் தோன்றாத அந்த மனசாட்சியற்ற கணங்கள் இப்போது அவளைச் சுட்டெரித்தன.
அதே சமயம், மறுபுறம் நகை... தன் வாழ்வைச் செதுக்கிக் கொண்டிருந்தாள். ஆன்லைன் மூலமாக அவள் தேடிய வேலைகள் அவளுக்கு ஒரு புதுத் தெம்பைத் தந்தன. தமிழ் புரூப் ரீடிங் வேலை அவளுக்குப் பாக்கெட் மணியாக உதவியது. அவளது குரல் வளம் ஒரு தெய்வீக வசீகரத்தைக் கொண்டிருந்தது. அதனால் முன்னணி யூடியூப் சேனல்களில் 'வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட்' வேலைக்காகத் தன் குரல் மாதிரிகளை அனுப்பி, வாய்ப்புக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
தன்னை நினைத்துத் தனக்கே ஆச்சரியமாக இருந்தது நகைக்கு. அருகில் இருப்பவரிடம் பேசவே நாக்கு குழறித் தவிக்கும் அந்தப் பழைய பேதை எங்கே? இன்று முகம் தெரியாத மனிதர்களிடம் கூடத் தொலைபேசியில் அத்தனைத் தெளிவாக, கம்பீரமாக உரையாடுகிறாள். கூச்சமோ, தயக்கமோ அவள் நிழலில் கூட இல்லை.
ஆண்மகன் போன்ற அந்த கணீரென்ற குரலில் அவளது ஆளுமை மிளிர்ந்தது. தனக்கென்று சுய சம்பாத்தியம் உருவானால் அங்கே தைரியம் அதிகமாகும்.
கடைசியில் ஒரு சேனலில் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் எழுதிக் கொடுக்கும் ஸ்கிரிப்டை தன் உணர்ச்சிகரமான குரலில் பதிவு செய்து அனுப்பினாள். ஒரு மணி நேரத்திற்கு 400 ரூபாய் என்று பேசப்பட்டது.
அவளது தெளிவான உச்சரிப்பும், வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கும் அந்தப் பாங்கும் நேயர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பத்து நாட்களில் பதினைந்து வீடியோக்கள்! அவளது குரலுக்காகவே அந்தச் சேனலின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை எகிறியது.
அவளது அருமையை உணர்ந்த சேனல் நிர்வாகம், அவளைத் தக்க வைத்துக் கொள்ள ஒரு மணி நேரத்திற்கு 1500 ரூபாய் என ஊதியத்தை உயர்த்தியது.
நகையின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் உழைத்தாலே ஒரு கௌரவமான தொகை கிடைத்தது.
தன் வேலை நேரம் போக தன் குடும்பத்திற்காக பணத்தை எப்படி சம்பாதிப்பது என்று யோசித்து செயல்பட்டால். அதே நேரம் அவளையே அவள் மீட்டெடுத்தாள்.
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஆடியோ பதிவுகளை அனுப்பி வந்தாள்.
அடுத்த மாதம் எப்படியாவது ஊருக்குச் செல்ல வேண்டும் என்று ஏங்கினாள். ஆனால் சக ஊழியர் ஒருவருக்கு விடுமுறை தேவைப்பட்டதால், நகைக்கு உடனடியாகக் கிளம்ப முடியவில்லை.
தன் தாயிடம் போனில் பேசினாள், "அம்மா, இந்த மாசம் வர முடியல... அடுத்த மாசம் கண்டிப்பா வந்துடுவேன், லீவ் கன்பார்ம் ஆகிடுச்சு, ட்ரெயின் டிக்கெட்டும் புக் பண்ணிட்டேன்."
"சரிம்மா... ஒன்னும் பிரச்சனை இல்லை. அப்பா இப்போ அப்படித்தான் இருக்காரு... நீ நிதானமா வா, நாங்க பார்த்துக்கிறோம்" என்றார்கள் வீட்டினர்.
ஆனால் பிரனேஷின் வாழ்க்கை ஒரு பெரும் சுழலில் சிக்கி சீரழிந்து கொண்டிருப்பதை அவளிடம் அவர்கள் சொல்லவே இல்லை.
நகையின் உள்ளுக்குள் ஒரு தீராத பயம் எரிந்து கொண்டிருந்தது. அப்பாவைப் பார்க்கப் போகும் அந்தத் தருணம், ஒருவேளை அவர் வாழ்வின் கடைசி நொடியாக மாறி விடுமோ என்ற அச்சத்தில் ஒவ்வொரு நிமிடத்தையும் கடத்தினாள்.
எத்தனை நாள்தான் தள்ளிப் போட முடியும்? தந்தையைக் காண வேண்டும் என்ற துடிப்பு அவளுள் மேலோங்கியது.
வலியும் விதியுமாக அவள் ஊருக்குக் கிளம்பினாள். மணிப்பூரின் குளிர் கால சமா பொருட்களாக ஸ்வெட்டர், ஸ்கார்ஃப், தொப்பிகள் எனத் தன் தாய் மற்றும் தங்கைகளுக்காகப் பரிசுகளைச் வாங்கி சுமந்து கொண்டு ரயிலில் ஏறி அமர்ந்தாள்.
தான் வருவதைப் பற்றி குடும்பத்தாருக்கு சொல்லவில்லை. அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும் என்று மௌனம் காத்தாள்.
மூன்று நாட்கள் நீண்ட பயணம். முதல் நாள் முழுவதும் தன் பணியிடத்திலிருந்து எடுத்து வந்த சப்பாத்தியைச் சாப்பிட்டே பசியைத் தண்த்துக் கொண்டாள்.
இரண்டாம் நாள் ஒரு பருக்கை கூட உட்கொள்ளவில்லை. மூன்றாம் நாள் காலையில் வெறும் இரண்டு இட்லிகள். கையில் இருக்கும் ஒவ்வொரு ரூபாயையும் தன் குடும்பத்திற்காகச் சேமிக்க வேண்டும் என்ற பிடிவாதம் அவளிடம் இருந்தது.
தமிழ்நாட்டின் மண்ணில் கால் பதித்ததும் அவளது கண்கள் தானாகவே பனித்தன. ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது! உலகின் எத்தனை கோடிகளை சம்பாதித்தாலும், தான் பிறந்த மண்ணில் கால் வைக்கும் போது கிடைக்கும் அந்தச் சுகம் கோடி பொன்னையும் விட மேலானது.
தன் லக்கேஜ்களை சுமந்து கொண்டு ஊருக்குச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள். பட்டினி கிடந்து அவள் சேமித்த பணத்தில், தன் தங்கைகளுக்காக விதவிதமான தின்பண்டங்களை வாங்க மறக்கவில்லை.
மாலை நேரத்து மங்கலான வெளிச்சத்தில், அவர்கள் குடியிருப்புக்கு முன்னால் ஓர் ஆட்டோ வந்து நின்றது. ஒருபுறம் பெண்கள் குடங்களுடன் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்க, மறுபுறம் ஆண்கள் டீக்கடையில் அமர்ந்து உலக அரசியல் பேசிக் கொண்டிருந்தனர். ஆட்டோ வந்து நின்றதும், உள்ளே இருப்பது யார் என்று அனைவரும் ஆவலாகப் பார்த்தனர். ஆனால் இறங்கிய பெண்ணை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை.
"யார்ரா இந்த பொண்ணு? புதுசா இருக்கு!" - அந்தப் பகுதி இளைஞர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.
"ஆள் பார்க்க லட்சணமாத்தான் இருக்கா... ஆனா நம்ம ஏரியா முகம் இல்லையே? பேண்ட், சட்டை போட்டுக்கிட்டு யார் வீட்டுக்கு வந்திருக்கா?"
"டேய்... ஏதோ நம்ம ஏரியா பொண்ணு மாதிரியும் தெரியுது, ஆனா இப்படி எல்லாம் இங்க யாரும் டிரஸ் பண்ண மாட்டாங்களே?" என்று அவர்கள் குழம்பிப் போய் விவாதித்துக் கொண்டிருக்கும் போதே...
கீழ் வீட்டில் குடியிருக்கும் அந்தப் பாட்டி, "நகை... எப்படி இருக்கேடா?" என்று சத்தமாகக் கேட்க, அந்த இடமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது.
"என்னது... நகையா? இதுவா நகை?" - அங்கிருந்தவர்கள் நம்ப முடியாமல் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தனர்.
நீண்ட கூந்தல், உடல் முழுவதையும் மறைக்கும் சுடிதார், எப்போதும் குனிந்த தலை... இதுதான் அவர்களின் நினைவில் இருந்த நகை.
ஆனால் இன்று? நவீன 'பாப் கட்டிங்', கச்சிதமான ஜீன்ஸ் பேண்ட், அதற்கு மேல் ஒரு பனியன், தோளில் இருபுறமும் பைகள், கையில் ஒரு பேக்... நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை என ஒரு புதிய மனுஷியாக அவள் நடந்து வந்தாள்.
யாராவது அருகில் சென்றாலே பயந்து ஒதுங்கும் அந்தப் பழைய நகை எங்கே?
இன்று தன்னைச் சுற்றி இத்தனை கண்கள் குறுகுறுவென்று பார்ப்பதை, தன் சட்டையில் ஒட்டியிருக்கும் தூசியைத் தட்டுவது போல அலட்சியம் செய்துவிட்டு கம்பீரமாக முன்னோக்கி நடந்தாள்.