கண்ணம்மா.
அத்தியாயம் 20.
இருவருமாகச் சேர்ந்தே இரவு உணவைச் சமைத்து உண்டனர்.சமையலறையை ஒதுங்கவைத்துவிட்டு நிலவனைத் தேடிச் சென்றாள் செந்தமிழ்.வீட்டுச் சாளரங்களுக்குத் திரைச்சீலைகளைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்தான் நிலவன்.
"நிலவன் வரிங்களா கொஞ்சநேரம் வீட்டச் சுத்தி நடப்போம்? சாப்பிட்டவுடனே படுத்தா நல்லாயிருக்காதே." எனக் கேட்டாள் பெண்.
"நடக்கலாம் எங்கேயும் போகவேணாம். எங்கூட வா செந்து."என்றவன், அவளது தோளில் கையைப் போட்டுக்கொண்டு பின்வாயிலை நோக்கிச் சென்றான்.
அவன் பின்கதவைத் திறந்தமாத்திரத்தில் ஆச்சரியத்தில் கண்களை விரித்தாள் செந்தமிழ்.நிலவொளியின் ஆதிக்கத்தில் அந்த இடமே ரம்யமாகக் காட்சியளித்தது. நுரையீரலை நிறைத்த மலர்களின் மகரந்தம் மங்கையின் மனதை மயக்கியது.
வழக்கம்போல "நிலவன்!"என்று கணவனின் பெயரை வியப்புமேலிட உச்சரித்தாள் காரிகை.
"என்ன செந்து நல்லாருக்கா?"எனக்கேட்டான் நிலவன் விரிந்தச் சிரிப்புடன்.
"ரொம்ப ரொம்ப அழகாயிருக்குப்பா. கண்ணையும் கருத்தையும் களவாடுது." என்றாள் அவனது தோளில் சாய்ந்துகொண்டு.
"சரி சரி இங்கேயே நின்னா எப்படி செந்து? வா கிட்டப் போய்ப் பார்க்கலாம்." என அந்தக் குட்டிப் பூந்தோட்டத்திற்குள் தன்னவளைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றான் நிலவன்.
"இது மல்லி! இது ரோஜா; இது செம்பருத்தி! இது கனகாம்பரம்: அப்புறம் இது சாமந்தி."
என ஒவ்வொரு பூச்செடிகளையும் அவளுக்குக் காண்பித்துக் கொடுத்தான். செந்தமிழும் பூக்களையெல்லாம் ஆசையுடன் தொட்டுப் பார்த்தாள்.
சற்றுத் தள்ளி அமைக்கப்பட்டிருந்த முல்லைப் பந்தளிடம் செந்தமிழை அழைத்துச் சென்றான் நிலவன்.
"இது முல்லைப் பந்தல் செந்து. இப்பதான் செடியெல்லாம் வளர ஆரம்பிக்குது. இன்னும் ஒரு நாலுமாசத்துல முழுப் பந்தல் உருவாகிடும். ஏதோ எனக்குத் தெரிஞ்சவகையில ஓரளவுக்கு இந்தத் தோட்டத்தத் தயார் பண்ணியிருக்கேன். மேற்கொண்டு என்ன செடியெல்லாம் வைக்கலாம்னு நீ யோசிச்சுச் சொல்லு நம்ம அதையும் செஞ்சிடலாம்."
என்றான் இளமுறுவளோடு.
செந்தமிழுக்குப் பேசவே வரவில்லை. வார்த்தைகளனைத்தும் தொண்டையிலேயே சிக்குண்டதுபோல் ஒரு மாயை. தன் மனதை வெளிப்படுத்துகிறவளாகக் கணவனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள் பெண்.
மனைவியானவள் தானாக முன்வந்து அவனுக்குத் தந்திருக்கும் முதல் அணைப்பு.
என்ற நினைப்பே ஆடவனைப் பரவசத்தில் ஆழ்த்தியது. ஒருவித நிறைவுடன் துணைவியின் கைகளுக்குள் அடங்கிநின்றான் நிலவன்.
நொடிகள் கரைந்தோட, செந்தமிழை அப்படியே நகர்த்திக் கொண்டுபோய்த் தோட்டத்தின் நடுவில் வீற்றிருந்த மர ஊஞ்சலில் அமர்த்தினான்.தன்னை மறந்து நிலவனிலேயே லைத்திருந்தவள், ஊஞ்சலின் அசைவில்
"நிலவன் என்னப்பா இது?என்ற மெல்லியக்கூவலுடன் கணவனின் சட்டையைப் பற்றிக் கொண்டாள்.
"ஒன்னுமில்ல செந்துமா ஊஞ்சல்தான். நீ ஒழுங்கா உட்கார்ந்து கம்பியைப் பிடி நான் ஆட்டிவிடுறேன்." எனச் சொல்லிக்கொண்டே ஊஞ்சலை ஆட்டிவிடத் துவங்கினான்.
செந்தமிழ் சற்று இயல்புக்கு வந்ததும்,கொஞ்சம் தள்ளி அவளுக்கு எதிர்த் திசையில் சென்று நின்றுகொண்டான். அவள் கட்டியிருந்தச் சேலை காற்றுடன் கதைபேசப்,
பெண்ணவளின் முடிக்கற்றைகள் நிலையில்லாமல் அலைபாய,,தத்தையவள் அணிந்திருந்த அணிகலன்களின் சிஞ்சுத ஒலி புதிதாய் இசை மீட்ட
மலர்களுக்கிடையில் பூந்தேராய் அசைந்தாடும் தன் மலர்க் கொடியை மையலுடன் ஏறிட்டான் நிலவன்.
திருமணமான இந்த மூன்றுமாதங்களில் நிலவனும் நிறையவே மாறியிஇருந்தான்.
ஓய்வறியாமல் உழைப்பின் பின்னாலேயே ஓடித் திரிந்தவன், நீண்டநாட்களுக்குப் பிறகு வாழ்வின் சுவையை ருசித்துப் பார்த்தான். நிலவன் என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக் கொண்டு அவனை ஒட்டுமொத்தமாக வசியம் செய்துவிட்டாளே அவனது செந்து.
"இதுக்குப் பேருதான் வெட்கமா நிலவன்?"பக்கவாட்டில் நின்று தன்னை உற்றுப் பார்த்துக்கொண்டே குறும்புடன் வினவியவளை இழுத்துத் தன்முன் நிறுத்தினான் ஆடவன்.
கணவனின் விழிவீச்சைத் தாழாமல் தத்தையின் தலை தன்னாலேயே தரைநோக்கித் தாழ்ந்தது. தங்களுக்கிடையே இருந்த இடைவேளியைக் குறைத்து செந்தமிழை நெருங்கினான் நிலவன்தழைந்திருந்தத் தையலின் எழில் வதனத்தைக் கைகளில் ஏந்தினான். பட்டாம்பூச்சியாய் விழிகள் படபடக்க நிலவனை நேராகப் பார்க்கமுடியாமல் தவித்தாள் பெண். அவனது பார்வையும் கரைகாணாக்காதலுடன் பாவையைத்தான் வட்டமிட்டது.
"மலைமுகடும் முகிலுதடும் நாளெல்லாம் கூடும்போது கறைநுதலும் அலையிதழும் வாழ்வெல்லாம் கூடும்போது!
கிளையிலைமேலே மழையெனவோ, மழலையின் நாவில் முளையெனவோ, கிழியதன் மூக்கில் கனியெனவோ,
சிலையுடல் மூடும் பனியெனவோ? எதுபோல நான் இதழ்க் கூடிட?" என வினா தொடுத்து
முகத்தை உறசிச் சென்ற ஆணவனின் சுவாசக் காற்றுப் பெண்ணவளைச் செயலிழக்கவைத்தது.
"இவருக்குமட்டும் எப்படித்தான் சூழலுக்கேத்தமாதிரிப் பாட்டுவரிகள் கிடைக்குதோ தெரியல."என்றெண்ணி அந்நிலையிலும் வியந்தாள் செந்தமிழ்.
செந்தமிழின் மென்பஞ்சு கன்னங்களை விரல்களால் நிமிண்டினான் நிலவன்.
கணவனின் விரல்கள் ஏற்படுத்தியக் குறுகுறுப்பில் நாணம் மீதுற "நிலவன்."என்ற காரிகையின் பூவிதழ்கள் காளை அவனின் வசமானது.
இந்தக் காதலர்களுக்குத் தனிமை கொடுக்கவேண்டி நிலாமகள் வெட்கத்துடன் விடைபெற்றுச் செல்லத் தனது நிலவுப் பெண்ணைக் கரங்களில் ஏந்திக்கொண்டு
செந்நிலா முற்றத்திற்குள் சென்றுமறைந்தான் நிலவன்.
அன்று வெள்ளிக்கிழமை. பெரியவீட்டில் மீராவுக்கு உடைகளை மடிக்க உதவிக் கொண்டிருந்தாள் செந்தமிழ். இரண்டு குழந்தைகள் என்றாகிவிட்டப் பிறகு மீராவுக்கு அவர்களைக் கவனிக்கவே நேரம் சரியாக இருந்தது. ஆகையால் வீட்டிலிருந்தே
அலுவலகப் பணிகளை மேற்கொள்ளத் தகுந்த ஆயத்தங்கள் செய்து, நிலவனின் உதவியுடன் தொய்வின்றித் தொழிலைக் கவனித்துவருகிறாள்..
இதற்காகவே பகல் பொழுதுகளில் பெரியவீட்டிற்கு வந்து மீராவுடன் இணைந்துகொள்வாள் செந்தமிழ்.அன்றும் அப்படித்தான். தெய்வானை ஆச்சியும் பர்வதம் பாட்டியும் கூட மீராவின் அறைக்குவந்து இவர்களுடன் பேச்சுக் கொடுத்தவாறே கீரையை ஆய்ந்துகொண்டிருந்தார்கள்.
அச்சமயம் திடீரெனக் கூடத்தில் நின்றவாறு செந்தமிழை விடாமல் அழைத்துக் கொண்டிருந்தான் நிலவன். கணவனின் குரல் கேட்டு செந்தமிழ் எழுந்துசெல்ல முயற்சிக்க, அவளைத் தடுத்துவிட்டார் தெய்வானை ஆச்சி.
"டேய் நிலா எதுக்கு இப்படி நடுக்கூடத்தில் நின்னு அவளோடப் பேர ஏலத்துக்கு விட்டுகிட்டிருக்க? அவல்லாம் உள்ள வேலையா இருக்கா. அதனால இப்ப அவள நீ பார்க்கமுடியாது. என்ன வேணும்னு என்கிட்டச் சொல்லு. வரவர இந்தக் கல்யாணமான பசங்களுக்குப் பெரியவங்கல்லாம் கண்ணுக்கே தெரியமாட்டேங்குறாங்க." என நீட்டி முழங்கினார் பர்வதம் பாட்டி.
அவரது பேச்சில் அறைக்குலிருந்தப் பெண்களுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது.
"ஆச்சி அவர் பாவம். நான் போறேனே." என்றாள் செந்தமிழ் தவிப்பாக.
"இவவொருத்தி; எப்பப் பாரு காலச் சுத்துன நாய்க்குட்டியாட்டம் அவன் பின்னாடியே போய்க்கிட்டு." என்று அலுத்துக்கொண்ட தெய்வானை ஆச்சி, "கொஞ்சநேரம் இரு. வெளியில என்னதான் நடக்குதுன்னு பார்ப்போமே." என்றார் அவளது தோளைத் தட்டி.
"பாட்டி நீங்கவேற நிலைமை புரியாம வம்பிழுத்துக்கிட்டு; முதல்ல செந்து எங்கன்னு சொல்லுங்க." என ஒருவிதப் படபடப்புடன் வினவியவன், தன்னை மரித்துக் கொண்டுநின்ற பர்வதம் பாட்டியை பிடித்து மெத்திருக்கையில் அமரவைத்துவிட்டு, பர்வதம் பாட்டியின் பார்வையை வைத்து வேகமாக மீராவின் அறைக்குள் நுழைந்தான்.
உள்ளே வந்த நிலவனைக் கண்டு எழுந்துநின்ற செந்தமிழின் கையைப் பிடித்துக் கொண்டு வெளியே சென்றான். இதற்கிடையில் வீட்டுப் பெண்களின் கேள்விகளனைத்தும் காற்றில் கரைந்தன.
"எங்கப் போறோம் நிலவன்?"எனக்கேட்ட செந்தமிழின் கேள்விக்குக் கூடப் பதில் சொல்லவில்லை அவன்.சிறிதுநேரத்திலேயே மருத்துவமனையொன்றின் முன்பு நிலவனின் மகிழுந்து நின்றது. முதலில் மகிழுந்தைவிட்டு இறங்கிய நிலவன், செந்தமிழின் பக்கக் கதவைத் திறந்துவிட்டான்.அவள் இறங்கவும்,அவளை அணைத்தவாறுமருத்துவமனைக்குள்நுழைந்தான் நிலவன்.
ஒன்றும் புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் செந்தமிழ். அடுத்த சில நொடிகளிலேயே தங்களது குடும்ப மருத்துவரின்முன் அமர்ந்திருந்தனர் இருவரும்.
"உங்களோடச் சந்தேகத்துக்குஇவங்கள செக் பண்ணித் தீர்வு கண்டுபிடிச்சிடலாம் நிலவன்." என்று நிலவனைப் பார்த்துக் கூறிய மருத்துவர்,செந்தமிழை ஒரு பெண் செவிலியருடன் அனுப்பிவைத்தார். முறையான பரிசோதனைகளுக்குப் பிறகுஅறைக்கு அழைத்துவரப்பட்டாள் செந்தமிழ். கணவனின் அருகில் அமர்ந்தவள் அவனது கையைப்பற்றிக் கொண்டாள்.
நிலவனும் பெண்ணவளின் கரத்தைத் தட்டிக் கொடுத்தான்.பரிசோதனையின்போதே ஓரளவுக்கு விடயத்தை யூகித்திருந்தாள் பெண்.ஒருவித இனியத் திகைப்புஅவளது மனம் முழுவதையும் வியாபித்தது. அவள் இதைப் பற்றியெல்லாம் சுத்தமாக யோசிக்கவேயில்லை.நிலவனுக்கும் செந்தமிழுக்கும் திருமணமாகிக் கிட்டத்தட்ட ஏழுமாதங்கள் கடந்திருந்தன.இத்தனை நாட்களில் பர்வதம் பாட்டி ஓரிருமுறை இது குறித்து விசாரித்திருக்கிறாரே தவிர,பெரிதாக இதைப் பற்றி அவளிடம் தோண்டித் துருவவில்லை. எனவே இவளும்நிலவனின் அரவணைப்பில்,
சுற்றத்தாரின் உடனிருப்பில்வாழ்க்கையின் நகர்விற்கேற்பவாழ்ந்துகொண்டிருந்தாள்.
ஆனால் இது அவள் முற்றிலும் எதிர்பாராதவொன்று? இப்போது அனைத்தும் சரியாக இருந்துவிடவேண்டும் என்று ஆவல் கொண்டாள் பெண்.மனதின் பதற்றத்தைப் போக்கத்,
தமிழன்னையை நினைவில் நிறுத்தி ஒவ்வொருநாளும்அதிகாலைப் பொழுதினில்
அவள் சொல்லும்தமிழன்னையின் கவிதையைமனதோடு சொல்லிக் கொண்டாள். செந்தமிழ் எதிர்பார்த்ததைப் போலவே அந்தக் கவிதை அவளைத் திடப்படுத்தியது.
சற்றுநேரத்தில் செந்தமிழின் பரிசோதனை அறிக்கைகள் வந்துவிட அவைகளை ஆராய்ந்த மருத்துவர், செந்தமிழ் கருவுற்றிருப்பதை உறுதி செய்தார்.
"மிஸ்டர் நிலவன் உங்க மனைவியோட வயித்துல இப்போ ரெண்டு குழந்தைங்க வளர்ந்துட்டிருக்காங்க.அவங்க உருவாகி சரியா 60 நாட்கள் ஆகுது. நான் சொல்ற ஆலோசனைகளையெல்லாம் கவனமாக் கேட்டு, அவங்கள நல்லாப் பாத்துக்கோங்க."
எனக்கூறியவர், அவர்களிடம் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துவிட்டு, செந்தமிழுக்குச் சில வழிமுறைகளையும், ஆலோசனைகளையும்கற்பித்தப் பின்னர், செந்தமிழுக்கான மாத்திரை மருந்துகளையும் எழுதிக் கொடுத்து இருவரையும் அனுப்பிவைத்தார். மகிழுந்துக்குள் ஏறிய மறுகணம் நிலவனின் இறுகிய அணைப்பிற்குள் இருந்தாள் செந்தமிழ்.
பெண்ணவளும் கணவனின் நெஞ்சில் முகம் புதைத்தால்.யாரும் ஒருவார்த்தைப் பேசவில்லை. வார்த்தைகளைத் தாண்டிய மௌனம் இருநெஞ்சங்களின் எண்ண அலைகளையும் மற்றவரிடம் கடத்தியது. செந்தமிழ் கருவுற்றிருக்கும் செய்தியைக் கேட்டு, வீட்டினர் அனைவரும் ஆனந்தத்தில் திளைத்தனர்.
"குழந்தை பிறக்கிறவரைக்கும் தமிழ் எங்கக் கண் பார்வையிலேயே இருக்கட்டுண்டா அப்புறமா வேணும்னா உங்க வீட்டுக்குப் போய்க்கோங்க."என்று அமுதவல்லி எத்தனைச் சொல்லியும் செவிமடுக்கவில்லை நிலவன்.
அன்றுமாலையே தன் செந்து உடன் செந்நிலா முற்றத்திற்கு வந்துவிட்டான்.
"நான் இதச் சுத்தமாக் கவனிக்கவேயில்ல நிலவன்.நீங்க எப்படி?" எனப்பூந்தோட்டத்து ஊஞ்சலில் கணவனின் மார்பில் சாய்ந்தபடி,கேட்டவளின் முகம் குங்குமமாகச் சிவந்துபோனது.
தாய்மையின் பூரிப்பில் மிளிர்ந்த மனைவியை ரசித்துப் பார்த்த நிலவன்,அவளது நெற்றிமுட்டி,
'ஐயா எப்பவும் கணக்குலப் புலி."என்றான் மிடுக்காக.
எப்போதும்போல 'நிலவன்."என்று அவள் உச்சரித்த அவனது பெயரில் பொய்க் கோபமும் வெட்கமும் சேர்ந்து வெளிப்பட்டன.என்று நிலவனின் கையின்மேல் தன் கையை வைத்து, அவனுடன் தன் வாழ்க்கைப் பயணத்தை செந்தமிழ் துவங்கினாளோ,அன்றிலிருந்து இருவரும் ஒரு செம்மையான வாழ்வையே வாழ்ந்தனர். இருவருக்கிடையிலும் சின்னச் சின்ன முறண்பாடுகள் இருந்ததுதான்.இருப்பினும் இந்த முறண்பாடுகள்தானே இல்லறத்தின் மகத்துவத்தை ஒவ்வொரு தம்பதியினருக்கும் கற்றுக் கொடுக்கின்றன?தங்களால் முடிந்த அளவில்ஒருவர் மற்றவரை அடிமுதல் முடிவரை புரிந்துகொள்ள முயன்றனர். எல்லாச் சூழல்களிலும் மற்றவரின் தேவையறிந்து செயல்பட்டனர்.அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்தனர்.எல்லாவற்றிற்கும் மேலாகத்தனக்கான இணையை முற்றும் முழுதாக, அவர்தம் இயல்பு மாறாமல் அப்படியே தங்களது உயிரறைக்குள் வரித்துக் கொண்டனர்.நான் என்ற சொல்லிலும்ஒன்றாகிப் போன இரண்டு இதயங்களே நீக்கமற நிறைந்திருந்தனர்.
அதற்குப் பிறகான நிலவனின் நாட்கள் தன் செந்து உடனும்அவனது வயிற்றில் வளர்ந்துகொண்டிருக்கும் அவனருமைச்செல்வங்களுடனும் இனிமையாகவே கழிந்தன.
பிள்ளைகளுடன் உரையாடி அவர்களுக்கு முத்தம் கொடுக்காமல் நிலவன் ஒருநாளும் உறங்கியதேயில்லை.தாய் அன்பு என்றால் என்னவென்றே அறியாமலிருந்த செந்தமிழுக்கு
அந்தநாட்களில் நிலவனேத் தாயாகிப் போனான். அவளது செயல்களை வைத்து அவளுக்குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்துச் செய்தான்.
அப்படி அவளுக்கு அனைத்துமாக இருந்தவன், இருவருமே ஆவலுடன் காத்திருந்த அந்தவொரு நாளில் அவளுடன் அவன் இல்லை. அவன் எங்கு சென்றிருக்கிறான் என்று அறிந்துகொள்ளவும் முடியவில்லை எதுவாகினும் நிலவன் என்ற ஒருவனே செந்தமிழின் ஆதாரம்.
இன்றளவும் அவனது அந்த அளவற்ற நேசந்தான் அவனவளைப் புன்னகைக்க வைக்கிறது. அவனது பெயர் ஒன்றுதான் அவளின் பற்றுக்கோளாகவும் இருக்கிறது.இன்றுவரை அவளும் காத்திருக்கிறாள் தன்னவனுடன் இணையப் போகும் அந்தவொரு நாளுக்காக.
நினைவுகளின் தாக்கத்தில்
செந்தமிழின் விழிகள் மூடியிருந்தன. ஆனால் அவளது மனமோ விழித்துக்கிடந்து கணவனிடம் எப்படியேனும் தன் உணர்வுகளைக் கடத்திவிடஓயாமல் முயன்றுகொண்டிருந்தது.
"திடீர் மாற்றம்." என்ற குறுஞ்செய்தி அக்குழுவினரைக் குழப்பமுறச் செய்தது. "ஏதும்இடறா?" என வினா தொடுக்கப்பட்டது. "சூழலின்பொருட்டு." என்று பதிலளிக்கப்பட்டது. "திட்டம்?" "க:ன்தநாசிஞ்வா. உ: ம்யநாதவே. ஞ: ம்கங்லிரதந்சு..." என்று விளக்கப்பட்டது. அந்த விளக்கத்தில் திருப்தியுற்றக் குழுவினர், தங்களின் அடுத்தக்கட்ட நகர்விற்குத் தயாராகினர்…