• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தமிழ் - 25

நிதனிபிரபு

Administrator
Staff member
செந்தமிழ்

பதிவு எண்: STN89.
கண்ணம்மா.

அத்தியாயம் 25.
"சொல்லுங்க செந்தமிழ்;
சட்டத்துக்குப் புறம்பான முறையில எதுக்காக இத்தனக் கொலைகளச் செஞ்சீங்க?
இந்த வழக்குச் சார்ந்தக் கோப்புகள ஆறாயும்போது நீங்க செஞ்ச விஷயங்கள் எங்களப் பதைபதைக்கவைக்குது.
சட்டத்தின் வரையறைப்படி ஒரு மனிதனுக்கு
இன்னொரு உயிரப் பறிக்கிற அதிகாரம் கிடையாது. தற்காப்புக்காகச் செய்யப்படும் கொலைகள் அது வேற.
நீங்க பண்ணின அத்தனையும் வன்முறைச் செயல்கள்.
நீங்கமட்டுமில்லாம
இன்னும் சிலர ஒன்றுதிரட்டி அவங்கள உங்கப் போக்குக்கு உடன்படவச்சிருக்கீங்க.
வன்முறைக் குற்றவாளி
அப்படிங்கற சொல்லுக்குக் கூட
உங்களோட செயல்கள் பொருந்தல. அதையும் தாண்டியதாயிருக்கு நீங்க ஆற்றியக் குற்றங்கள். நீங்க எத்தன விளக்கங்கள் கொடுத்தாலும்
நீங்க நிகழ்த்தியக் குற்றங்களோட வீரியம் கொறையப்போறதில்ல.
எனினும் எத்தனப் பெரியக் கொலபாதகனா இருந்தாலும்
அவன் சார்ந்த விடயங்களப்
பேச, அவனுக்குத் தேவையான இடைவெளிய வழங்கணும் என்பது சட்டத்தின் நியதி.
கூடவே எங்களுக்கும் சில குழப்பங்கள் இருக்கிறதால
உங்களப் பத்தி நீங்க முழுமையா விவரிக்க இந்த நீதிமன்றம்
உங்களுக்கான நேரத்த வழங்குது. எந்த ஒளிவுமறைவும் இல்லாமல் அனைத்தையும்
நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவீங்கன்னு நம்புறோம்."
என்ற நீதிபதி செந்தமிழைப் பேசப் பணித்தார்.
இத்தனைக்குப் பின்னும் முகமலர்ச்சியுடன் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் செந்தமிழைக் கண்டு அங்கு கூடியிருந்த அனைவரும் வியந்தனர்.
அங்கிருந்த ஒருவராலும்
அவளைக் குற்றவாளியாகப் பார்க்கமுடியவில்லை. அவளது முகத்தில் குடிகொண்டிருந்தத் தீட்சன்யம்
அவர்களைப் பலவாறாக யோசிக்கவைத்தது.
நீதிபதியின் உத்தரவிற்கேற்பக்
கீற்றுச் சிரிப்புடன் பேசத் துவங்கினாள் செந்தமிழ்.
"மதிப்பிற்குரிய நீதி அரசர்களே;
இந்த நொடிவரச் சமூகத்தின் பார்வையில நான் நிகழ்த்திய வன்முறைக் குற்றங்கள்
என்னோடப் பார்வையில
மிகச்சரியான செயல்முறைகள்தான்." என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியவள் தொடர்ந்து பேசினாள்.
"இந்த வழக்குச் சார்ந்த விசாரணைகள் தொடங்கினதுலயிருந்து என்னுடைய செய்கைகள் சட்டவிரோதமானவை
அப்படிங்கறதத்தான் எல்லோருமே வலியுறுத்துறீங்க.
சரி உங்கக் கருத்துக்கே நானும் உடன்படுறேன். என்போன்ற சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும்
குற்றவாளிகளச் சட்டம் தண்டிச்சே தீரும்னா
ஓட்டைகள் நிறைஞ்சு கிடக்கிற அந்தச் சட்டத்த யாரு தண்டிக்கிறது? பாக்கப் பளபளப்பாத்
தெரியுற எல்லாத்தையும் நம்மளால தங்கம்னு சொல்லிடமுடியாதே? அது உண்மையான தங்கமா இல்ல புற அழகுக்காகப் பூசப்படும் தங்கமுளாமானு
அந்தப் பொருள உரசிப் பார்த்தாதானே தெரியும்?
வெறும் பொருட்களுக்குமட்டும் இது பொருந்தாது. மனிதனோட வாழ்வியலுக்கும் அவன நெறிப்படுத்த உதவும் சமூகச் சட்டத்திட்டங்களுக்கும் கூட
இது பொருந்தும் இல்லையா?
என்னப் பொறுத்த அளவுல
சட்டத்தின் ஓட்டைகளானது வெகு
நேர்த்தியா தங்கமுளாம் பூசப்பட்டு
மக்களின் பார்வையிலிருந்து மறைக்கப்படுது.
சட்டத்தத் தாங்கிப் பிடிக்கவேண்டிய பொறுப்புல இருக்குறவங்களே அவங்களோட சுயநலத்துக்காக இந்தச் சட்டத்தத்
தங்களோட கைப்பாவையாக்குறதெல்லாம் சரி;
இதே சட்டத்தால நொறுக்கப்பட்டு
வாழ்வியலத் தொலைச்ச நாங்க
அந்தச் சட்டத்த எதிர்த்து வெகுண்டெழுந்தா தப்பு.
இது என்னவிதமான மனநிலை! எனக்குச் சத்தியமாப் புரியல.
அல்லது உங்களோட சட்டத்தின் நியதி இப்படித்தான் ஒருதலைபட்சமா விடயங்கள அணுகுமா?"; என்று கேட்டாள் எள்ளலாக. ஒருகணம் அங்கிருந்த எவராலும்
அவளது கூற்றை மறுத்துப் பேசமுடியவில்லை. அவள் சொல்வதிலும் உண்மை உள்ளதே? கறிகாலனுக்குத்தான்
சலனமே இல்லாமல் தனது கருத்துக்களை முன்வைக்கும்
செந்தமிழின் ஆளுமையைக் கண்டு ஆத்திரம் பெருகியது.
குற்றவாளிக் கூண்டில் ஏறிய பின்னும் எதற்காகவும் அவளது தலை தாழவில்லையே?
தன் எதிரே நேர்ப் பார்வையுடன் நிமிர்ந்துநின்று பேசிக் கொண்டிருக்கும்
செந்தமிழின் பற்களைத் தட்டியெடுக்கும் வேட்கைப் பிறந்தது
அவனுக்கு. நேராகக் குத்திட்டுநிற்கும் பெண்ணவளின் முதுகெலும்பினை உடைத்தெரியும் ஆவேசம் தோன்றியது.
குற்றம் செய்த நெஞ்சமாகிற்றே?
குறுகுறுக்காமல் இருக்குமா?
"உங்களோட இந்தக் கருத்தின்மூலமாக நீங்க என்ன சொல்ல வரீங்க செந்தமிழ்? இல்லாட்டா எத உணர்த்த நினைக்கிறீங்க?
சுத்திவளைக்காம சொல்ல விரும்புறத நேரடியாச் சொல்லுங்க." என்றார் ஆண் நீதிபதி.
"நான் சுத்திவளச்சுப் பேசல யுவர் ஆனர். உங்கமுன்னாடி நான் குற்றவாளியா முத்திரக் குத்தப்பட்டு நிற்கிறேன்னா
அதுக்கான ஆரம்பப்புள்ளி
இந்தச் சட்டம்தான். அதுல நிறைந்திருக்கிற ஓட்டைகள்தான். எல்லாத்துக்கும் மேல
சட்டத்தத் தங்களோடக் கைக்குள்ள வச்சுக்கிட்டுச்
சாமானியர்களோட வாழ்க்கையச் சீரழிக்கிறச் சில கேடுகெட்டக் குள்ளநரிக் கூட்டங்களாலதான்
நான் எனக்கான பாதைய வகுத்தேன். எனக்கு அம்மா அப்பா கிடையாது. எனக்காகக்
குடும்பம்னு ஏதும் இருக்குதானும்
தெரியல. பிறந்ததிலிருந்தே
நான் ஒரு அனாதையில்லத்தில்தான் வளர்ந்தேன். எனக்குன்னு பெருசா எந்த எதிர்பார்ப்புகளும் இருந்ததில்ல. தமிழன்னை மட்டுந்தான் எனக்குக் கடவுள் ஆசான் வழிகாட்டி எல்லாமே.
எனவே தமிழ் இலக்கியங்களப் பற்றுகோலாப் பிடிச்சுக்கிட்டு வாழ்க்கையின் போக்குலதான் நானும் வாழ்ந்தேன். ஒருவித நேர்கோட்டில் போய்க்கிட்டிருந்த என்னோட வாழ்க்க
அந்த ஒரு நாள்ல மொத்தமாத் தடம்புரண்டுச்சு. அன்னைக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையிலதான் நான் என்னோட நிலவனப் பார்த்தேன். இல்லயில்ல
என் நிலவனோட அருகாமைய உணர்ந்தேன். " அவ்வளவுநேரமும் சீற்றத்தை உள்ளடக்கி
நிதானத்துடன் பேசிக் கொண்டிருந்தவள், நிலவன் என்ற பெயரை உச்சரிக்கும்போது மட்டும் முகம் மலர்ந்தாள்.
காதல் என்ற ஒற்றை வார்த்தைக்குள் நிறைந்துகிடக்கும் உணர்வுப் புதையல்கள் எத்தனை எத்தனை? அப்போ எனக்குப் 17 வயசு. அந்தன்னைக்கு வழக்கத்தவிடச் சீக்கிரமாவே வகுப்புகள் முடிஞ்சிருச்சு. நானும் உடனடியாப்
பள்ளியிலிருந்து கிளம்பிட்டேன்.
நான் வேல பாக்குற
அலுவலகத்த நோக்கி நடக்கத் தொடங்கினேன். அந்த இடம் பள்ளிக்கூடத்திலிருந்து கொஞ்சம் பக்கந்தான்.
நான் தங்கியிருந்த அனாதையில்லத்துக்கு இந்த அலுவலகத்தத் தாண்டிதான் போகணும். பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு அறநாய்த் திகழ்கிற வெண்கோளோட
உதவியாளர் நானும் ஓரளவு எல்லா இடங்களுக்கும் தனியாவே போயிட்டுவரப் பழகத் தொடங்கின சமயம் அது.
எங்க இல்லத்துல வளர்ரக் குழந்தை
தனக்குப் 15 வயசு நிறைவுற்றதும்
கொஞ்சங்கொஞ்சமாத்
தனக்கான தேவையத் தானே பூர்த்தி செய்யப் பழகிக்கணும்.
இல்லமே தனது பொறுப்பில் வளரும் பிள்ளைகளுக்குப்
பக்கத்துல இருக்கும் கடைகள்லயோ அலுவலகங்கள்லயோ சின்னச்சின்னப் பகுதிநேர வேலைய ஒழுங்குப்படுத்தித் தரும். அந்த வேலையின்மூலமாக் கிடைக்கிற வருவாய வச்சுத்தான்
பிள்ளைகள் தங்களோட செலவுகளப் பாத்துக்கணும்
அப்படிங்கிறது நான் வளர்ந்த இல்லத்தின் எழுதப்படாத விதி. என்னையும் விடுதிக்கும் பள்ளிக்கும் மையத்திலிருந்தக்
கடை ஒன்னுல டெலிபோன் ஆப்ரேட்டராச் சேர்த்துவிட்டாங்க எங்க வார்டன். இயல்பிலேயே நான் ஒரு தனிமைவிரும்பி.
அதனாலேயே எனக்குன்னு பெரிய நட்பு வட்டங்கள் கிடையாது. நான் என் படிப்பு
என் வேலை, என் தனிமை
என்னோட புத்தகங்கள்
என என்னோட வாழ்க்க ரொம்ப நல்லாவே போய்கிட்டிருந்துச்சு அந்த நாள்வர."
என்று கூறிய செந்தமிழின் அகக்கண்ணில் அவளது வாழ்வின் இருண்டப் பக்கங்கள் அணிவகுக்கத் துவங்கின.
அன்று சனிக்கிழமை.
வழக்கத்தைவிடத் தனக்கான சிறப்பு வகுப்புகள் விரைவாகவே நிறைவுற்றதில், செந்தமிழ் தான் பகுதிநேரமாக வேலை பார்த்துவரும் அலுவலகத்திற்கு
உடனே செல்லநினைத்தாள்.
குறித்தநேரத்தைவிடக் கூடுதலாக ஓரிரு மணிநேரங்கள்
வேலை பார்த்தால் 50 ரூபாய்க் கூட கிடைக்குமே! இப்படியே கிடைக்கும் நேரங்களிலெல்லாம் தொடர்ந்து கூடுதலாக வேலை பார்த்துக், கிடைக்கும் பணத்தைச் சேமித்து இரண்டுமாதத்தில்
பள்ளியின் தமிழ் மன்றத்தால் திட்டமிடப்பட்டிருக்கும் கலைப் பயணத்திற்குச் செல்லவே
அதிகநேரத்திற்கு வேலை செய்யத் துவங்கியிருந்தாள் செந்தமிழ்.
பள்ளி வளாகத்தைவிட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே பெரிய பெரிய இடி முழக்கங்களுடன்
அதிகன மழைக் கொட்டத் துவங்கியது. நொடியில் தொப்பலாக நனைந்திருந்தாள் செந்தமிழ். இடி என்றாலே அவளுக்குப் பெரும் பயம்.
சூறைக்காற்றின் வேகத்தில்
ஒழுங்காக நடக்கமுடியாமல் தள்ளாடினாள் பெண்
அலுவலகத்திற்குச் செல்ல அவள் குறைந்தது ஐந்து நிமிடமாவது நடக்கவேண்டும்.
பள்ளியைக் கடந்து பாதிதூரம் வந்தாகிவிட்டது என்றநிலையில்
லேசான பயம் பிறந்தது செந்தமிழுக்கு.
"என்ன பாப்பா இப்படிக் கொட்ற மழையில நிக்கிற?
அடிச்சு ஊத்துற மழையப் பார்த்தா அது சீக்கிரம் நிக்கும்போல தோணலத் பாப்பா. இது ஒரு சின்னவீடுதான்.
இப்படி வந்து உள்ள உட்காரு.
மழ நின்னவுடனே கிளம்பிடலாம் சரியா?"
என்று வினா தொடுத்தவாறு
அவளது கையைப் பற்றி
அந்தப் பழைய கட்டடத்திற்குள்
அவளை அழைத்துச் சென்றுகொண்டிருந்தவன், தனது பசிக்கு
இறையொன்று கிடைத்துவிட்டதில் அகம் மகிழ்ந்துபோனான்.
நாசிக்கு நுகரும் திறனைக் கொடுத்து,
நுகரும் அந்தத் திறனைக் கொண்டே பொருட்களின் தன்மையை மனிதன் உணர்ந்துகொள்ள வழிவகை செய்த இறைவன், மானிடனின் உள்ளக் கிடங்கினை நுகர்தளின் வாயிலாகவே
பகுத்தறிந்து உணரும் திறனைத் தந்திருந்தால், அழகு எது அழுக்கு எது என்று புரியாமல்
நரம்பில்லாத நாக்கானது
தனது ஆதாயத்திற்காகப்
பாரபட்சமின்றித்
தனக்கேற்றவகையில் சுற்றிச் சுழன்று தேனில் துய்த்த வார்த்தைகளைமட்டும்
உதிர்ப்பதைவைத்து,
எத்தனை நெஞ்சங்கள்
தனது திறனையுமீறி
சுயநலப் பேய்களின் நலனுக்காக ஓயாமல் சிந்தித்து, ஓடாய்த் தேய்ந்து பாசம் என்னும் மாயக் கயிற்றில் கட்டுண்டு
விஷநாகங்களுக்குப் பால் வார்த்ததும், தேவைகளனைத்தும் தீர்க்கப்பட்டநிலையில் நெஞ்சில் சிறிதும் ஈறமின்றி அவை நேரம்பார்த்து விஷத்தைக் கக்கிக்
கொத்துவதைத் தாளமாட்டாமல் துடித்துத் துவள்வதும் நிகழ்ந்திருக்காதே!
தனக்கு உதவுவதுபோல் வேடம் தரித்துத், தன்னைக் கைப்பிடித்துக் கூட்டிச்செல்லும் மூர்க்கனின்
சகதிகள் நிறைந்த உள்ளத்தை அந்தச் சிறுமியால்
உணரமுடியாமலேயே போனது.
அவளும் அந்த அறக்கனை நம்பி அந்த வீட்டிற்குள் சென்று அமர்ந்தாள். முழுதாக இரண்டு மணி நேரங்கள் கடந்தும்
மழை ஓயவில்லை.
மழையில் முழுதாக நனைந்திருந்ததால்
குளிரில் செந்தமிழின் கை கால்களெல்லாம் நடுங்கத் துவங்கின. காதைப் பிளந்த இடிச் சத்தம்வேறு செந்தமிழைப் பயம் கொள்ளவைத்தது.
அச்சத்தில் கண்கள் கலங்க "அங்கில் எங்க இருக்கீங்க?
எனக்கு ரொம்பப் பயமாயிருக்கு.
ஏதாவது பேச்சுக் குடுங்களேன்.
கரண்ட் எப்ப வரும்?
சுத்திலும் ரொம்ப இருட்டா இருக்கு. என்றாள் திக்கித் திணறி. “இதோ வந்துட்டேன் பாப்பா. பேச்சுதானே கொடுக்கணும்? தாராளமாக் கொடுத்திடலாமே?
எனக் கூறியவனின் குரல் அந்த அறையில் நாராசமாக எதிரொலித்தது. குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த செந்தமிழுக்கு அவனது குரல் பேதம் பிடிபடாமல் போனதுதான் விதியின் விளையாட்டு போல. விதியானது விளையாட
இத்தகைய அப்பாவிப் பெண்களின் வாழ்க்கையாக் கிடைத்தது?
வீட்டையே உலுக்கிய இடிச் சத்தத்தில் செந்தமிழின் உடல் தூக்கிப் போட்டது. தன்னையும் மீறி அந்த நரியின் கைகளுக்குள் சென்றிருந்தாள் செந்தமிழ். ஒரு பாதுகாப்பு அறநாய் அவள் அவனை எண்ணியிருக்க, அந்த மூர்கனும் சூழ்நிலையைத் தன்வசமாக்கி அவளைத் துயிலுறிக்கத் துவங்கியிருந்தான்.
அவனது செய்கையில் திடுக்கிட்டு நின்றாள் செந்தமிழ். அவளுக்கு உலகமே தலைகீழாகக் கவிழ்வதுபோலத்
தோன்றியது. “அங்கிள் என்ன செய்றீங்க? இப்படியெல்லாம் என்னத் தொடாதீங்க. இது ரொம்பத் தப்பு. “ போன்ற செந்தமிழின் அத்தனை அரற்றல்களும்
கனமழையின் போர்வைக்குள் புதைந்துபோயின.
எதிர்பாராமல் நடந்தத் திடீர் துன்புறுத்தலில் துவண்டுபோனாள் செந்தமிழ்.
அந்த அறக்கனிடம் எவ்வளவோ கெஞ்சினாள், தன்னை விட்டுவிடச் சொல்லி கைகூப்பிக் கதறினாள். தனது நகங்களால் அவனது முகத்தைப் போட்டு
பிராண்டினாள். தனது கால்களால் அவனை எட்டி உதைத்தாள்.. அவனிடமிருந்து விடுபட செந்தமிழ் பிரம்மப்பிரயதனப்பட்டும்
அவன் அசரவில்லை.
கிடைத்திருக்கும் இறையை
வேட்டையாடிவிடும் வேகத்தில்
அந்தப் பிஞ்சு உடலைச் சிதைத்தான். தன் இஷ்டத்திற்கெல்லாம் ஆடிவிட்டுச், சோர்வில்
செந்தமிழின் மார்பில்
முகம் புதைத்திருந்தவனின் முடியைக் கொத்தாகப் பற்றி இழுத்த செந்தமிழுக்கு எங்கிருந்துதான் அத்தனை வேகம் வந்ததோ; அந்தக் கைகளுக்கு எப்படித்தான் பலம் வந்ததோ; அந்த வக்கிரம்பிடித்தவனைத் தன்னிடமிருந்து விளக்கித் தள்ளியவள், அவனது உயிர்நாடியை மிதித்தாள்.
செந்தமிழின் இந்தத் திடீர் தாக்குதலை எதிர்பாராதவன்
வலியில் அலறிக்கொண்டே
கோபம் கொப்பளிக்க அவளைத் தாக்கத் துவங்கினான். அறைக்குள்ளேயே செய்வதறியாமல் ஓடிக்கொண்டிருந்த செந்தமிழ்
தனது காலைப் பதம் பார்த்தக்
கண்ணாடிக் குப்பியை அவளது
முடியைப் பற்றி இழுத்துக் கொண்டிருந்தவனின்மேல் வீசினாள். அது சரியாக அவனது நெற்றியைப் பதம் பார்த்தது. அவன் தடுமாறிக்
கீழே சரிந்த அந்தக் கணத்தைப் பயன்படுத்திக், கதவினைத் திறக்கமுயன்றாள் செந்தமிழ்.
கதவின் உட்புறமும்
பூட்டுயிடப்பட்டிருந்ததால்
கையறுநிலையில் நின்றாள் அவள். அந்நிலையிலும்
செந்தமிழின் இதயம்
தினமும் அதிகாலையில்
அவள் உச்சரிக்கும் தமிழன்னையின் கவிதையை
உச்சரித்து அந்தத் தமிழன்னையிடமே தன்னைக் காக்கச் சொல்லி யாசித்தது.
தமிழன்னையின் அரவணைப்பு செந்தமிழைத் தழுவிக் கொண்டதாலோ என்னவோ பதற்றமடையாமல் நிதானமாக
அந்த இடத்தை அவதானிக்கத் துவங்கினாள்.
அப்போதுதான், தான் இருப்பது
முழுமையாகக் கட்டப்படாத ஒரு வீட்டில் என்பதைப் புரிந்துகொண்டாள் செந்தமிழ்.
இருட்டில் எதுவும் அவளது கண்களுக்குப் புலப்படவில்லை.
செய்வதறியாது கண்ணீருடன் நின்றிருந்த செந்தமிழின் காதுகளை நிறைத்தது
கதவு தட்டும் ஓசை . அவ்வளவுநேரமும் வலியில் அனத்திக் கொண்டிருந்தவன்,
மின்னல்வேகத்தில்
அவளைத் தூக்கிச் சென்று
பின்வாயிலைத் தாண்டியிருந்தப் புதர்களுக்கிடையில் வீசினான்.
அதற்குப் பின்னான நிகழ்வுகள் செந்தமிழின் நினைவுகளில் சரிவறப்பதியவில்லை. எனினும்.
தன்னை வியாபித்திருந்த
ஸ்பரிசம் ஒன்றை அவளால் நன்றாகவே உணரமுடிந்தது...
 
Top Bottom