செந்தமிழ்
பதிவு எண்: STN89.
கண்ணம்மா.
அத்தியாயம் 26
நிலவன் பொறியியலில் தனது முதுகலை பட்டயப் படிப்பினை மேற்கொண்டிருந்தச் சமயம் அது .
கல்லூரி முடிந்து தனது இருசக்கரவாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக்
கொண்டிருந்தான் நிலவன்.
வாகனநெரிசலைக் கருத்தில் கொண்டு சாலைவழிப் பயணத்தைத் தவிர்த்த நிலவன்,
வீதிகள் இணையும் சுற்றுப்பாதையில் வாகனத்தைச் செலுத்தினான். அடித்து ஓய்ந்திருந்த மழையின் உபயத்தால் சற்றே பள்ளமான இடங்கள் சகதிமயமாகக் காட்சியளித்தன. எத்தனைக் கவனமாக வாகனத்தைச்
செலுத்தியபோதும், அவனது
வாகனச் சக்கரங்கள் சேற்றில் சிக்கிக்கொண்டன. சகதியிலிருந்து தனது இருசக்கரவாகனத்தை வெளியே நகர்த்த
நிலவன் தீவிரமாகப் போராடிக்கொண்டிருக்கையில் முனகள் சத்தம் ஒன்று அவனது கவனத்தைத் திசைத் திருப்பியது.
விடாமல் கேட்டுக்கொண்டிருந்த
அனத்தல் ஒளியைவைத்து
அது ஒரு பெண்ணின் குரல்தான் என்பதைக் கண்டுகொண்ட நிலவன், தன் கூர் விழிகளால் சுற்றுப்புறத்தை நோட்டம் விட்டான். சற்றுத் தொலைவில் மண்டிக் கிடந்தப் புதர்களுக்கு மத்தியிலிருந்தே அந்த முனகல் சத்தம் வெளிவருவதை உணர்ந்த நிலவன், பதற்றத்தோடு அங்கு விரைந்தான். புதர்களுக்கிடையில் ஏதோ அசைவதுபோல் இருந்தது நிலவனுக்கு.
புருவ முடிச்சுகளுடன்
புதர்ச் செடிகளை விளக்கிப் பார்த்தவனின் இதயம் அவன் கண்டக் காட்சியில் ஒருகணம் நின்று துடித்தது. அங்கு குற்றுயிரும் கொலையுயிருமாய்
ரத்தத்துளிகளுடன் அரைமயக்கநிலையில் கிடந்தப் பெண்ணைக் கண்டவனின் உள்ளம் நொறுங்கிப் போனது.
அவள் கிடந்தக் கோலம் நிலவனை நிலையிழக்கச் செய்தது. உடனே தனது சட்டையைக் கழற்றிய நிலவன்
அந்தப் பெண்ணினறுகில் அமர்ந்து அவளுக்கு அதனை அணிவித்தா .
செந்தமிழின் உடலை நிறைத்திருந்த ரத்தக் காயங்கள் ஒவ்வொன்றும் நிகழ்ந்தேறிய அவலத்தினை அச்சொட்டாக
நிலவனுக்கு எடுத்தியம்பியது.
தன் கண்ணெதிரே கலைந்த ஓவியமாய்க் கிடக்கும் பெண்ணைக் காணக் காண நிலவனின் உள்ளம் செய்வதறியாது
தரையில் விழுந்த மீனாகத் தத்தளித்தது. எண்ணற்றக் கேள்விகளும், குழப்பங்களும் நெஞ்சத்தில் தொக்கி நின்றபோதும் செந்தமிழின் உடல்நலன் ஒன்றே பிரதானமாக இருக்கத்,தன்னை
ஒருவாராகச் சமாளித்துக் கொண்டவன், செந்தமிழைத் தூக்கிக்கொண்டு
நண்பன் ஒருவனின் உதவியுடன்
தான் ஏற்பாடு செய்திருந்த மகிழுந்தில் தங்களது குடும்ப மருத்துவரின் இருப்பிடத்திற்கு விரைந்தான்.
தன்மடியில் கோழிக்குஞ்சாய் நடுங்கியவாறு சாய்ந்திருந்தவளைவிட்டு
நிலவனின் விழிகள் இம்மியும் அசையவில்லை.
நெஞ்சடைக்க அவளையே விடாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைச் செய்திகளிலும்,
சமூக வலைதளங்களிலும் நிலவன் பார்த்திருக்கிறான் படித்திருக்கிறான்.
குற்றங்களை நிகழ்த்திய பாதகர்களைத் தன் ஆத்திரம் தீரமட்டும் திட்டித் தீர்த்திருக்கிறான்.
ஆனால் இன்று சீர்குலைக்கப்பட்டப்
பெண்ணொருத்தியை
நேரில் கண்ட மாத்திரத்திலிருந்து அவனது இதயம் உயிர்வலியை சுமக்கத் துவங்கியது.
ஏன் இந்த வக்கிரம்பிடித்தவர்களின் பார்வைக்குமட்டும் பெண்கள் வெறும் சதைப் பிண்டங்களாகவும் போகப் பொருட்களாகவும் புலப்படுகிறார்கள்?
தங்களைப் போலவே
இவர்களும் உயிரும் உணர்வும் கொண்ட மானுடப் படைப்புதான் என்பதை ஏன் புரிந்துகொள்ளவே மாட்டேனென்கிறார்கள்? அறம் சார்ந்த வாழ்வியலுக்கு முக்கியத்துவம் தராமல் ஏன்
அற்ப இச்சைகளுக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள்?
ஒவ்வொரு பெண்ணையும்
தவறான கோணத்தில் பார்க்கச் சொல்லும் அவர்களது அறிவு,
அவர்களைப் பத்துமாதங்கள் தன் வயிற்றில் சுமந்து, ஜனனத்திற்கும் மரணத்திற்குமிடையில் பெரும் போராட்டமொன்றை மேற்கொண்டு
தங்களை ஈன்றெடுத்ததும் ஒரு பெண்தான் என்பதை ஏன் உணர்த்தத் தவறுகிறது?
எனத் தனக்குள்ளேயே கேட்டுக் கேட்டு மாய்ந்தான் நிலவன்.
செந்தமிழ் அணிந்திருந்தப் பள்ளிச் சீருடைவேறு அவனது உள்ளத்தைப் போட்டு உலுக்கியது.
"பிறைசூடா கொஞ்சங்கூட மனசாட்சியே இல்லாம
ஏண்டா இப்படில்லாம் பண்றானுங்க? எப்படிடா வெக்கமேயில்லாம ஒரு பொண்ணத் தப்பான கண்ணோட்டத்துல பாக்கமுடியுது? பச்சிளம் குழந்தைத் தொடங்கி பாடையில போற பாட்டியக் கூட விட்டுவெக்க மாட்டங்குறாங்களே;
ஒரு பொண்ணத் துடிக்கவச்சுக் கதறவச்சுத் தன்னோடத் தேவையத் தீர்த்துக்கறதுக்குப் பதிலா அவன் நாண்டுக்கிட்டுச் சாகலாண்டா.
பெத்தத் தாயையும், கூடப்பிறந்தச் சகோதரிகளையும் மதிக்கிற ஒருத்தன் எந்தக் காலத்திலேயும்
ஒரு பொன்னத் தப்பாப் பாக்கவும் மாட்டான்.
தகாதமுறையில நடத்தவும் மாட்டான். அப்ப இவனுங்கயெல்லாம் எதுலடா சேத்தி?
இந்தப் பொண்ணு ஸ்கூல்லதான் படிக்கிறா போலடா.
இப்படில்லாம் அவளுக்கு நடக்கும்னு நெனச்சே பாத்துருக்க மாட்டால்ல?"
எனக் கேட்கும்போதே
நிலவனின் கண்களை நிறைத்தக் கண்ணீர் துளிகள் செந்தமிழின் கன்னத்தில் பட்டுத் தெறித்தன.
அந்தக் கொடிய அறக்கண் செந்தமிழின் உடலில் நிகழ்த்தியிருக்கும் கோரத்தாண்டவத்தைக்
கண்கொண்டு பார்த்தவனால்
தாளவேமுடியவில்லை.
செந்தமிழின் நிலையைப் பார்க்கப் பார்க்க நிலவனுக்குள் அந்தப் பாதகனைக் கண்டந்துண்டமாக வெட்டிப் போடும் வேட்கைப் பிறந்தது.
"டேய் நிலா இப்போ உன்னோட மனநிலை எப்படியிருக்கும்னு எனக்குத் தெரியும். முதல்ல உங்களோட ஃபேமிலி டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போயி
இவங்களுக்கான ட்ரீட்மென்ட் கொடுப்போம். இவங்க ஓரளவுக்காவுது நார்மலான பிறகுதான் என்ன நடந்துச்சுங்குற முழு விவரத்தையும் நம்மளால விசாரிக்கமுடியும். கூடவே அவங்களோட குடும்பத்துக்கும் தகவல் சொல்லணும்.
இவங்க விழுந்திருந்த இடத்த நான் நல்லாவே ஆராஞ்சு பாத்துட்டேன். அங்க அவங்க சார்ந்தப் பொருட்கள் எதுவுமே இல்ல. ஸோ இவங்க கண்முழிச்சா மட்டுந்தான்
நம்ம பர்தரா என்ன செய்யலாம்னு பாக்கமுடியும்.
அதுவரைக்கும் கொஞ்சம் நிதானமா இருடா.
நான் இந்தமாதிரி எத்தனையோ பேரப் பாத்துட்டேன்.
இதையெல்லாம் பாக்கமுடியாம நாங்கூட முன்னாடி அழுதுருக்கேன்தான்.
அப்புறம் போகப் போக
நடக்குற விஷயங்கள் ஒவ்வொன்னும் தன்னால மனசக் கல்லாக்கிடுச்சு." என்று பெருமூச்சுடன் கூறினான் பிறைசூடன்.
"அப்புறம் நீ சொன்னியே; பெத்தத் தாயையும், கூடப்பிறந்தச் சகோதரிகளையும் மதிக்கிற எவனும் ஒரு பொண்ணத் தப்பாப் பாக்கமாட்டான்னு?
இப்பல்லாம் இந்தமாதிரியான கல்ப்ரிட்ஸ்க்கு அந்த சென்டிமென்ட் லாம் இருக்குறதுல்லடா.
தங்கச்சிக் கிட்டத் தப்பா நடந்துக்குற அண்ணன், பெத்தப் பொன்னையே சீரழிச்ச அப்பான்னு நாட்டோட நிலைம ரொம்பக் கேவலமா இருக்குடா.
இதுல ஜீரணிக்கவே முடியாத விஷயமே எங்கக் காவல்துறையின் நிர்வாகமும்
இவனுங்களோட பாவச் செயல்களுக்குத் துணைபோகுதுங்கறதுதான்."
என்றான் ஆயாசத்துடன்.
வசந்தனைப் போலவே பிறைசூடனும் நிலவனின் நெருங்கிய தோழன்.
தனது சீரிய முயற்சியால்
காவல்துறைத் தேர்வில் வெற்றிபெற்றுத் தற்போது துணை ஆய்வாளராகப் பணியாற்றிவருகிறான். செந்தமிழ் சார்ந்த விடயங்களைச் சிக்கல்கள் ஏதுமின்றிக் கையாள பிறைசூடனின் உதவியை நாடினான் நிலவன். நிலவனின் கருத்தில் பிறைசூடனுக்கும் உடன்பாடு இருந்ததால் தானே நேரடியாகத் தலையிட்டு செந்தமிழைத் துன்புறுத்திய குற்றவாளியினைக் கண்டுபிடித்துத் தருவதாகத் தன் நண்பனுக்கு வாக்களித்தான். அடுத்த சில நிமிடங்களிலேயே பிறைசூடனின் மகிழுந்து குடும்ப மருத்துவரின் இல்லத்து வாயிலைச் சென்றடைந்ததால்
நண்பர்களின் பேச்சுத் தடைப்பட்டது.
செந்தமிழுக்கு மெல்லத் தண்ணீரைப் புகட்டிய நிலவன்,
பிறைசூடனின் உதவியை மறுத்துவிட்டுத் தானே அவளை
வீட்டிற்குள் தூக்கிச் சென்றான்.
அங்கே அவர்களுக்காகக் காத்திருந்த மருத்துவர், துரித கதியில் செந்தமிழுக்குச் சிகிச்சைகளை வழங்கத் துவங்கினார். செந்தமிழை
அறைக்குளிருந்தப் படுக்கையில் கிடத்திவிட்டு
வெளியே வந்துநின்ற நிலவனின் மனது நிலைகொள்ளாமல் தவித்தது.
இதுவரை முன் பின் கூடப் பார்த்திராத பெண்ணவள் என்றபோதும், அவள் கண்விழித்து ஒரு வார்த்தைப் பேசிவிட்டால் போதும் என்றிருந்தது அவனுக்கு. அரைமணி நேரம் கழித்து வெளியே வந்த மருத்துவர், நிலவனின் விழிகள் தொடுத்த வினாவைப் புரிந்துகொண்டவராகப் பேசத் துவங்கினார். “இந்தப் பொண்ண அந்த பொறுக்கி நாயி ரொம்பக் கொடூரமான முறையில ஹெராஸ்ட் பண்ணியிருக்கான். காயங்கள் எல்லாமே ரொம்ப ஆழமா இருக்கு. தன்னத் தற்காத்துக் கொள்ள அவங்க நிறையவே
போராடியிருக்காங்க
சோர்வு, அதிர்ச்சி எல்லாம் சேர்ந்துதான் அவங்கள கொலாப்ஸ் ஆகவச்சுருக்கு.
காயங்களுக்கெல்லாம் மருந்து போட்டிருக்கேன்.
இப்போ ட்ரிப்சும் ஏறிக்கிட்டுருக்கு. ஒரு மூணுநாளைக்கு அவங்க என்னோட கண்காணிப்பிலேயே இருக்கட்டும் நிலவன்.”
என்றவர் “அவங்க பேரன்ட்ஸ்க்கு தகவல் சொல்லிட்டீங்கல்ல?”
என வினா தொடுத்தார்.
“இல்ல டாக்டர் இந்தப் பொண்ணப் பத்தி வேற எந்தத் தகவல்களுமே எங்களுக்குத் தெரியல. அவங்க கண்ணுமுழிச்சதும்தான் டீடெயில்ஸ் கேக்கணும்.” என்று பதிலுரைத்த பிறைசூடனுக்குச் சரி என்பதாகத் தலையசைத்தவர், “அவங்க கண் முழிச்சதும் அவங்களப் பத்தின டீடெயில்ஸ் மட்டும் கேளுங்க . நடந்தச் சம்பவத்தப் பத்தி இன்னைக்கு விசாரிக்கவேண்டாம்.” எனக் கூறினார்.
நேரமூட்கள் உருண்டோட
மெல்லக் கண் விழித்தாள் செந்தமிழ். வடுக்கள் விளைவித்த வலியால் அவளது முகம் சுருங்கியது.
அவள் கண் விழித்ததை அறிந்த மருத்துவர் அவளைப் பரிசோதித்துவிட்டு பிறைசூடனையும் நிலவனையும் பார்க்க உள்ளே அனுமதித்தார்.
உள்ளே சென்ற நிலவன்
அங்கிருந்த நாற்காலியை படுக்கைக்கறுகிள் இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தான். பிறைசூடனும்
படுக்கையின் மறுபக்கம் சென்று நின்றுகொண்டான்.
அறைக்குள் வந்த இருவரையும் விழிகளால் தொடர்ந்து கொண்டிருந்தவள்
நிலவனைப் பார்த்து மிக மெலிதாகப் புன்னகைத்தாள்.
அவள் அந்த அறக்கனால் முட்புதல்களுக்கிடையே தூக்கி வீசப்பட்டத் தாக்கத்தால்
அவளது உடல் துவண்டு சுருண்டதே தவிர,
ஆழ்மனமானது
விழித்துத்தான் கிடந்தது. ஆனவனின் ஸ்பரிசத்தையும்
ஆத்மார்த்தமாக உணர்ந்தது.
“உங்ககிட்ட நாங்க கொஞ்சம் பேசலாமா?” என செந்தமிழிடம் கேட்டான் பிறைசூடன்.
“பேசலாம் சார்.” என்று பதிலளித்தாள் அவள்.
“ஃபைன் உங்க பேர் என்ன?
அப்புறம் உங்களோட வீடு எங்க இருக்கு? உங்க அம்மா அப்பாவ எங்களால காண்டக்ட் பண்ணமுடியுமா? இதப் பத்திலாம் கொஞ்சம் சொல்லுங்க.” என வினவிய பிறைசூடனைப் பார்த்து விரக்திப் புன்னகை ஒன்றை உதிர்த்தவள்,
“என்னோட பேரு செந்தமிழ்.”
என்ற அவளின் குரல் ஒருவித கம்பீரத்துடன் வெளிவந்தது.
“செந்தமிழ்!” சத்தமின்றி அவளது பெயரைத் தனக்குள்
சொல்லிக்கொண்ட நிலவனின் நெஞ்சத்தில் காரணமே இல்லாமல் தென்றலின் தழுவல். “எனக்கு அம்மா அப்பா கிடையாது. நான் ஒரு அனாதையில்லத்தில்தான் தங்கியிருக்கேன். தவிர ஒரு கிறிஸ்தவச் சிறப்புப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கிறேன்.
கூடவே டெலிபோன் ஆப்ரேட்டரரா ஒரு அலுவலகத்துல பகுதிநேர வேலைப் பார்க்கிறேன்.
என்றாள். அவ்வளவுநேரமும்
செந்தமிழின் இயல்பான பேச்சை எண்ணி வியந்து கொண்டிருந்த நிலவனின் மனதில் மீண்டும் பாரமேரத் துவங்கியது. அவளிலேயே அவனது விழிகள் நிலை குத்தி நின்றன. இன்னுமே
செந்தமிழின் உடலைப் பதம் பார்த்திருந்தக் காயங்கள்
நிலவனின் அகக்கண்னிலேயே நிறைந்து கிடந்தன. தன்னிச்சையாக நிலவனின் கை மேலெழும்பி செந்தமிழின் தலையைத் தடவிக் கொடுத்தது.
வாழ்வின் மிக மோசமான சூழ்நிலைகளில் எதிர்பாராத நேரம் எதிர்பார்க்காத இடத்திலிருந்து கிடைக்கும் சிறிய தோள் தட்டலுக்கு
அந்த இமயத்தையும் அசைக்கும் வல்லமை
உண்டு என்பதை நிலவனின் வாயிலாக நெஞ்சாற உணர்ந்தாள் செந்தமிழ்.
செந்தமிழை எண்ணி நிலவனின் உள்ளம் கலக்கம் கொண்டது. படைத்தவனிடம் நியாயம் கேட்டு அயர்ந்தது.
அதுசரி; கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைத்துவிட்டால்,
பிசகிய வாழ்வைத் திறுத்திவிட முடிந்துவிட்டால், அழுக்குப் பக்கங்களையெல்லாம் அழித்துவிட முடிந்துவிட்டால்
எதற்காக இந்த மனிதக் கூட்டம் மனம் நிறைய வலிகளைச் சுமந்தவாறு வாழ்வில் மாற்றம் தரும் மார்க்கம் ஏதும் புலப்பட்டுவிடாதா என்ற நப்பாசையில்,
மௌனத்தையே பதிலாகத் தருபவனின் சன்னிதியில் கண்ணீரோடு நிற்கப் போகிறார்கள்? கொடும் கசப்பொன்று தொண்டையைவிட்டு அகலமாட்டேன் என்றது நிலவனுக்கு…

Author: நிதனிபிரபு
Article Title: செந்தமிழ் - 26
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.