• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தமிழ் - 7

Vishakini

Moderator
Staff member
கண்ணம்மா.

அத்தியாயம் 7.

நிலவனின் பார்வை மலரினியின் இடது கையில் அழுத்தமாக மையம் கொண்டது.
அவளது கையில் ஆங்காங்கே கீறல்கள் தென்பட்டன.விரல்கள் லேசாகச் சிவந்து தடித்திருந்தன.

"என்ன இது? எத்தனை அதிர்ச்சியைத்தான் தாங்குவது?"தனது ஒட்டு மொத்த ஆற்றலும் நீர்த்துப் போய்விட்ட நிலையில்,நிலவனின் நெஞ்சம் துவண்டது.ஒருவிதப் பரபரப்புடன் நிலவனின் கண்கள் வேகவேகமாய் மலரினியை ஆராயத் துவங்கியது. அவ அவளது பிஞ்சு கழுத்தில் ஆங்காங்கே திட்டுத் திட்டாகப் புலப்படுவது என்பதை ஆராயவேண்டி, மலரினியை
நோக்கி முன்னேறத் துவங்கிய நிலவனின் கால்கள், செவிலியரின் அழைப்பில் அப்படியே நின்றது.

"சார் நீங்க போய் வெளிய வெயிட் பண்ணுங்க.இப்போ போலிஸ் உங்களப் பாக்க வருவாங்க.
மலரினி போட்டிருக்கிறத் துணி நகையெல்லாம் இன்னும் கொஞ்சநேரத்துல உங்கக் கைக்கு வரும்." என்றவர் நிலவனை வெளியே செல்லப் பணித்துவிட்டுஇன்னும் இரண்டு தாதியருடன்
உள்ளே சென்றார்.

"இல்ல" எதையோ சொல்லவந்த நிலவன் இம்முறையும்மருத்துவமனை உதவியாளர் ஒருவரால் வெளியேற்றப்பட்டான்.அப்போதுதான் நிலவனுக்கு மின்னல் வெட்டியது.

பொதுவாக இறந்தவர்களைஅவர்களது உறவினர்கள் மருத்துவமனையினை நெருங்கிக் கொண்டிருப்பதுஉறுதியாகும் சமயம்,பெரும்பாலும் அவசரச் சிகிச்சைப்பிரிவிலேயே வைத்திருப்பார்கள்.அது நடைமுறையில் இல்லாத மருத்துவமனைகளில், முறையான பரிசோதனைக்குப் பின்னர் உடலானது நேரடியாகபிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டு பாதுகாக்கப்படும்.

மலரினியின் விடயத்தில்இம்முறைக் கடைப்பிடிக்கப்படவில்லை.மாறாக அவளது உடல்
மருத்துவமனையின் கடைசி பகுதியில் அமைந்திருக்கும் தனியறை ஒன்றில்தா வைக்கப்பட்டிருக்கிறது.அதோடு மருத்துவர் மற்றும் செவிலியரின் உரையாடல்கள்
முறையற்றதாகவே தெரிந்தது.

மலரினியின் மருத்துவப் பின்னணியை முறையாக இவனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளாத மருத்துவரின் மெத்தனப் போக்கிலும்,அவனைக் கேள்வியெழுப்பவே விடாமல் உடற்கூறாய்வினை மேற்கொள்ளக் காட்டியத் துரிதத்திலும், மலரினியின் மரணம் இயற்கையானது இல்லை என்பதைப்பெரும் வலியுடன் உணர்ந்துகொண்டான் நிலவன்.
ஆரம்பத்திலிருந்துஅங்கிருந்த ஒவ்வொருவரும்கண்களாலேயே கதைத்துக் கொண்டதைக் கவனித்திருந்தானே;

அவனது இதயம் தொடுத்த வினாக்களெல்லாம்சதியென்ற ஒற்றைப் புள்ளியில் வந்து நிற்க, இறுகிப்போனான் நிலவன். குழந்தையின் இடது கையில் தென்பட்ட கீறல்கள் ஒருவேளை நகைக்கிரல்களோ?அவளது கழுத்தில் கூடகருநிறத் திட்டுக்கள் புலப்பட்டதா?அப்படியென்றால் அவனது ஆசைமருமகள் வக்ரம் பிடித்தஅரக்கர்களால் சிதைந்து போனாளா? ஐயோ ஐயோ வேணா உள்ளம் வெம்பிச்சுருண்டது.

மலரினியின் இந்நிலைக்குக் காரணமானவர்களைக் கொன்றுபோடும் ஆவேசம் பிறந்தது நிலவனுக்கு. நேரத்தைக் கடத்தாமல், அங்கிருந்தக் காவலர்களிடம் இது இயற்கை மரணம் இல்லைதிட்டமிட்டு நிகழ்த்தப்பட்டக் கொலை என்று வாதிட்டான்.

"எத வச்சு மலரினியோட இறப்புத் திட்டமிட்டுச் செய்யப்பட்டக் கொலைன்னு தீர்மானிச்சீங்க நிலவன்?" எனக்கேட்டக் காவல்துறை ஆய்வாளரிடம்தன் மனதில் தேங்கிக் கிடந்த அத்தனை ஐயங்களையும்ஒன்றுவிடாமல் எடுத்துரைத்தான் நிலவன்.

"சார் மலரினிக்கு உடல்நிலை சரியில்லன்னு பள்ளி நிர்வாகத்தால எனக்குத் தகவல் அளிக்கப்பட்ட எஅதுதான் எனக்குள்ள குழப்பத்தை விதைத்தது.அந்த இலக்கத்திலிருந்து எனக்கு வந்திருந்த அழைப்புலமலரினிக்கு நடந்ததை ஒருவித இயந்திரகதியில சொல்லிட்டு
நான் பேசுவதற்கான சின்ன அவகாசத்தைக் கூடத் தராம அழைப்புத் துண்டிக்கப்பட்டிருச்சு.
திரும்பவும் அந்த எண்ணுக்குஅழைக்க நான் முயற்சி செஞ்சபோது, அந்த எண் இயக்கத்திலேயே இல்லை என்கிற தகவல்தான் கிடைத்தது.உடனே என்கிட்ட இருந்த பள்ளி நிர்வாகம் சார்ந்த
எல்லாத் தொலைபேசி எண்களுக்கும் அழைப்பு விடுத்துப் பார்த்துட்டேன். இம் ஹிம்
ஒருத்தரையும் தொடர்புகொள்ள முடியல. பள்ளியில இருக்கிறச் சமயம் மாணவர்களுக்கு ஏதாவது நடந்தால், பாதிக்கப்பட்டவங்கள அவங்களோட குடும்பத்துக்கிட்டப்
பாதுகாப்பா ஒப்படைக்கவேண்டிய முழுப் பொறுப்பும்அந்தக் கல்வி நிறுவனத்துக்கு இருக்கு. அது அவங்களோட கடமையும் கூட.எங்கப் பாப்பாவோட விஷயத்துல இது நடக்கல. அந்தப் பெயர் தெரியாத இலக்கத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்ததோட சரி பள்ளி நிர்வாகத்தினர்தான் பாப்பாவக் கொண்டுவந்து இங்க அனுமதிச்சாங்க அப்படிங்கிறதுமே எனக்குக் கிடைச்சச் செவிவழித் தகவல்தானே தவிர இதுவரநிறுவனத்தைச் சார்ந்த யாரையும் நான் பாக்கல.என்கிட்டயும் யாரும் வந்து எந்தவொரு விளக்கத்தையும் சொல்லல. ' என்றவன் ஒரு ஆழ்ந்த மூச்சை வெளியிட்டுவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.

பொதுவா இறந்தவங்களஅவசரச் சிகிச்சைப் பிரிவிலோ இல்லாட்டா பிணவரையிலையோதான வச்சிருப்பாங்க?இங்க இதுவும் முரணா நிக்குது.வழக்கத்துக்குமாறா எதுக்காக மலரினியை மட்டும் தனியரையில வச்சிருக்கணும்?பாப்பாவோட கார்டியன் நான்:அவளக் கிட்ட இருந்து பார்க்கவும்அவ சம்பந்தப்பட்டத் தகவல்களைத்தெரிஞ்சுக்கவும்மருத்துவமனைத் தரப்பிலிருந்து
எதற்காக மறைமுகமா மறுப்புத் தெரிவிக்கணும்?எல்லாத்தையும்விட மலரோட இடது கையில
நிறைய கீறல்கள் இருந்தது.அவளோட கழுத்துலயும் என்னவோ கருப்பு நிறத்தில் திட்டுத் திட்டா தெரிஞ்சது.அது என்னன்னு பாக்கப்பாப்பாவோட பக்கத்துல நான் நெருங்குறச் சமயம், வலுக்கட்டாயமா என்னை இழுத்துக் கொண்டுவந்து வெளியே விட்டுட்டாங்க."என்றவனின் குரலும்,முகமும் ஒருங்கிஇறுகிக் கிடந்தது.

"சோ இதையெல்லாம் வச்சுமலரிநீயோட மரணம் இயற்கையானது இல்லங்குற முடிவுக்கு வந்துட்டீங்க;ரைட்?" என்ற ஆய்வாளரின் கேள்விக்குத், தன்னிடம் எஞ்சியிருந்தக் கொஞ்சநஞ்சப் பொறுமையையெல்லாம் ஒன்றுதிரட்டி, முயன்று வரவழைக்கப்பட்ட நிதானத்தோடு வார்த்தைகளைக் கோர்த்தான் நிலவன். "நான் இத்தனை சொல்லியும் அதையெல்லாம் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாம, இதோ இப்ப நீங்க கேக்குறீங்களே இந்த அர்த்தமற்றக் கேள்வியும் நடந்தது கொலைதான் என்று இன்னும் இன்னும் ஆணித்தனமா நம்பவைக்குது.'
என்றவனின் பேச்சில் தன்னையும் மீறி நிலவனை மெச்சுதலாகப் பார்த்தார் ஆய்வாளர். பின்னே அவரது எண்ண ஓட்டத்தையும் ஓரளவு கணித்திருக்கிறானே:

ஆய்வாளரின் பாவங்கள் ஒவ்வொன்றையும் நிலவனின் விழிகள் தவறாமல் படம்பிடித்துக்கொண்டன.மலரினியின் உடைமைகள் அனைத்தும் நிலவனின் கைகளில் ஊழியர் ஒருவரால் ஒப்படைக்கப்பட்டன.அவற்றையும் தீவிரமாக ஆராய்ந்தான் நிலவன்.
சீருடையில் மைப் பட்டக் கரையிருந்தது. அவன் இவ்வளவு வாதிட்டும் சற்றும் அசையமறுத்தக்
காவலர்கள், இனியும் அவனுக்கு உதவி செய்வார்கள் என்று நம்பும் நிலையையெல்லாம் அவன் எப்போதோ கடந்துவிட்டிருந்தான்.

"இனி என்ன?" என்ற கேள்வி அவன்முன்னே விஸ்வரூபம் எடுத்துநின்றது.பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தத் துளியும் விரும்பவில்லை அவன்.அவனுக்கு என்னவோ வலுவாகப் பின்னப்பட்டிருக்கும் மர்ம முடிச்சுகளின் அங்கமாகவே மலரினியின் உடல் புலப்பட்டது. 'எப்படி இந்த மர்ம முடிச்சுகளையெல்லாம் அவிழ்க்கப்போகிறான்" "என்ன செய்து உண்மையைக் கண்டறியப் போகிறான்" 'எவ்வாறு அவனது மருமகளுக்கு நியாயம் செய்யப் போகிறான்?" எல்லாவற்றிற்கும் மேலாக வசந்தன் மீரா;

"நீங்கள் பெற்ற பெண்ணரசி, கயமையின் கோரப் பசிக்கு இறையாகிவிட்டாள் என்பதை எப்படிச் சொல்லப் போகிறான்?" "முதலில் அவர்களால் இதைத் தாங்கிக்க் கொள்ளமுடியுமா?"
மலரினி இல்லாத மலர் இல்லத்தை நிலவனால் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியவில்லை. தலையைப் பற்றிக் கொண்டு அப்படியே சுவரோடு சுவராக ஒண்டித் தரையில் அமர்ந்தான் நிலவன்.

மலரினியின் உடலை மலரில்லத்திற்கு அனுப்பிவைத்துவிட்டுக், கடைசி வாய்ப்பாகக்
காவல்துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்துத் தன் மருமகளுக்கு இழைக்கப்பட்ட
அநீதியை வெளிச்சத்திற்க்கு கொண்டுவர உதவும்படி மன்றாடினான். அவர்களுமே
நிச்சயம் இந்த வழக்கிற்கு நியாயம் தேடித் தருவதாக வாக்குறுதியளித்தனர்.
இந்த வழக்கினைத் தங்களது கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டுவந்து தீர விசாரிப்பதாகவும், பின்னப்பட்டிருக்கும் சூழ்ச்சி வலைகளையெல்லாம் தகர்த்தெறிந்து நீதியை நிலைநாட்டுவோம் என்றும் உறுதி கூறினர்.

ஆனால் அவர்கள் அவனிடம் மேற்கொள்வதாகச் சொன்ன நடவடிக்கைகள் அத்தனையும் வெறும் கண்துடைப்பு என்று தெரியவந்தபோது, இந்தச் சமூகத்தை,
அதனைத் தாங்கிப் பிடிக்கும் சட்டத்தை, அதனூடய சீர்த்திருத்த முறைகளையெல்லாம் அறவே வெறுத்தான் நிலவன்.

கிழிச்சல்கள் நிறைந்தச் சட்டையொன்றைக் கொண்டுவந்து, இதை அணிந்துகொள்:உன் மானத்தை இந்தக் கிழிந்தச் சட்டை பாதுகாக்கும்.என்பதை ஒத்ததுதான் இந்தச் சமூகம் சொல்லும் சட்ட ஒழுங்காகத் தெரிந்தது.சட்டத்தைக் காக்கவேண்டியமுக்கியப் பொறுப்பினை வகிப்பவர்கள் புலித்தோல் போர்த்திய நரிகளாகவே நிலவனுக்குத் தோற்றமளித்தனர்.

காவல்துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்துவிட்டு,மலரில்லம் திரும்பிய நிலவன்,அந்தக் கட்டடத்தைப் போலவே முற்றும் முழுதாக உயிரைத் தொலைத்திருந்தான்.முகப்பு வாயிலிலேயே நிலவனுக்காகக் காத்துக் கொண்டிருந்த செந்தமிழ்,தன்னவனைக் கண்டதும் ஓடிச் சென்று அவனது கைகளைப் பற்றிக் கொண்டாள் .

"நிலவன் நடக்கிற எதையுமே என்னால நம்பமுடியாம இருக்குப்பா. மாமா என்னென்னவோ சொல்றாங்களே அதெல்லாம் உண்மையா? அப்போ இனி குட்டிய;" அதற்குமேல் பேசமுடியாமல் அவளது நா உளர்ந்துபோயிற்று. ஒருகணம் கண்களை இறுக மூடித் திறந்தவன் ஆமாம் என்பதாக ஒரு தலையசைப்பை மட்டும் செந்தமிழுக்குத் தந்துவிட்டு, அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் நிலவன்.

கொண்டவரின் தழுவல் தந்தக் கதகதப்பில்அவனது விழிகள் மெல்லமெல்ல உடைப்படுத்தன.
தன்னை அணைத்திருந்தவரின் கைகளில் ஓடிய நடுக்கத்தை உணர்ந்த செந்தமிழ் அவனைத் தேற்ற முனைந்தாள்.

"நீங்க அழவேண்டிய நேரம் இது இல்ல நிலவன். என்னவாவது செஞ்சு இனி குட்டியோட இறப்புக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிங்க. அந்த மிருகங்கள் கையில மாட்டினபோது,
இனி குட்டி எப்படியெல்லாம்துடிச்சாளோ; இம் ஹிம் விடக்கூடாது நிலவன்;அவங்க யாரையும் சும்மாவே விடக்கூடாது.வாங்க ஆகவேண்டியதைப் பார்த்துட்டு, மிச்சத்த நிதானமா தெளிவா யோசிச்சுச் செயல்படுத்துவோம்.

அங்க எல்லோருமே என்ன செய்யறதுன்னு தெரியாமத் திணறிப்போய் நிக்கிறாங்க:
மீராவையும் வசந்தன் அண்ணாவையும் கண்கொண்டு பாக்க முடியல.மாமா அப்படியே இடிஞ்சுபோய் உட்கார்ந்துயிருக்காரு.அத்தை, ஆச்சி, பாட்டி எல்லாருமே விலைகுறைந்து போய் இருக்காங்க.நாமளும் உடைந்துபோயிட்டா எப்படி சொல்லுங்க?"என்றவள் ஆதரவாக அவனது தலையை வருடிக் கொடுத்தாள்.

அவளது தோள்வளைவில் தனது முகத்தைப் புதைத்திருந்தவனும் மெல்ல நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.நிலையில்லாமல் அலைபாய்ந்த நிலவனின் கண்மணிகள்,அவனது பரிதவிப்பைச் சொல்லிற்று.

"நமக்குப் பிடிக்குதோ இல்லையோ வாழ்க்கை நமக்கு எதைத் தந்தாலும் அதையெல்லாம் சமாளிச்சுப் போகத்தான் வேண்டியிருக்கு.அதோட நீங்க செய்யவேண்டியமிகப்பெரிய கடமைக்கு உங்க உணர்வுகள் கூட தடையா நிக்கக் கூடாது.இதுல கண்ணீருக்கு மட்டும் விதிவிலக்கு இருக்கும்னு நினைக்கிறீங்கறா?உங்களோட உணர்வுக்குவியல்களையெல்லாம் ஒன்றுதிரட்டி,மலரினிக்கு நடந்தத வெளிய கொண்டுவரதுல வேகம் எடுங்க.அதத்தான் நம்ம இனிக்குட்டியும்உங்ககிட்ட இருந்து எதிர்பாப்பா.சோ வர்ற எல்லாத்தையும் நாம சமாளிச்சுத்தான் ஆகணும். எல்லாத்தையும் சேர்ந்து சமாளிக்கலாம்." எனக் கூறியவள் தனது சேலை முந்தானையால் அவனது கண்களைத் துடைத்துவிட்டாள்.

எதையோமுடிவு செய்தவனாகசெந்தமிழின் கையைப் பிடித்துக் கொண்டு உள்ளே நடந்தான் நிலவன்.அவனதுஎண்ண ஓட்டத்தைப் படிக்க வில்லை வண்ணம்,அவனது முகம் நிர்ச்சலனமாக
இருந்தது.
 
Top Bottom