• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

நிதனிபிரபு

Administrator
Staff member
#நிலவின்_அக_ஒலி_விமர்சனம்
மொத்தமே 12 அத்தியாயங்கள் தான் ஆனால் அதற்குள் அழகான காதல் இருக்கு, சஸ்பென்ஸ் இருக்கு, காமெடி இருக்கு, குடும்பப் பிரச்சினை இருக்கு, சமூகம் சார்ந்த சிந்தனைனு எல்லாமே இருக்கு
❣️
❣️

கதையின் நாயகன் ஏசிபி அகரன்
😍
😍
இவரின் அதிரடி நடவடிக்கை,பேச்சு ,செயல்பாடு எல்லாவற்றிலும் நம் நாயகி நிலா விழுறதுக்கு முன்னமே நான் விழுந்து டேன்
முக்கியமா மதுரனுடனான இவனது காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடி தான்
🤣
🤣
நல்லா வாய்விட்டு சிரித்தேன்
நிலா மூத்த பொண்ணா இரண்டு தங்கைகளுக்கு அக்காவா அவளின் பொறுப்புணர்ந்து நடந்துக்கிறது ஆகட்டும் அப்பா செய்த தப்புக்காக அவளெடுத்த முடிவாகட்டும் அதில் அவள் உறுதியா நின்னது ஆகட்டும்
படிப்பு வேலை குடும்ப சுமைனு அவளின் நிலைபாட்டை அழகா சொல்லீருக்கீங்க எனக்கு நிலா பொண்ணை எல்லாமாகவும் ரொம்ப பிடித்தது
மதுரன் குருவிடம் மாட்டிக்கிட்டு முழிப்பது நல்லா இருந்தது
🤣
எப்படியோ ப்ளான் பண்ணி ஏசிபியை நிலாவோடு கோர்த்துவிட்டுடே மேன் நீ
தீஷி கடை குட்டி
💞
சுட்டி பெண் நல்லா இருக்கு இவளின் வெளிபடையான பேச்சும் செயல்களும்
♥

செல்வகுமார்
😡
தங்கமா வீட்டுல மூனு பொண்ணுங்க நல்ல பொண்டாட்டி வெச்சு வாழ தெரியல
🥶
உன்னால அவங்க அசிங்கபட்டு நின்னது தான் மிச்சம்
குரு தேவ் சைகோ தான் இவன் உனக்கு நிலா கேட்குது
வினோதினி அம்மாவா பொண்ணுங்க வாழ்வை நினைச்சு கணவனை வீட்டுல சேர்த்துக்கிட்டாங்க புரியுது ஆனாலும் அவங்க சேர்த்துக்கிட்டது தப்பு தான். இப்படி பட்டவரை அப்பானு முன்னிருத்தறதுக்கு பதில் பொண்ணுங்களுக்கு அப்பா இல்லை காணாம போய்டாருனு சொல்லீருக்கலாம்
நிலா பொண்ணும் ஏசிபியும் அனைத்து வாசகர்களின் அக ஒலியாகி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்



Shafna Rangarajan
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
#நிலவின்_அக_ஒளி….
#கௌரிஸ்ரிவ்யூ…..
போலீஸ்+லவ்+குடும்ப கதை
❤️
…..
எல்லாமே சேர்ந்த ஒரு மாஸ் கதை
🤩
…..
ஆரன்…. ஏசிபி….சரியான வாயாடி
🤣
….ஆன பட்ட கமிஷனர் கூட அவன் கிட்ட பம்பி தான் பேசுவார்
😅
😅
….ஊரு பட்ட வாய்
🤩
…..
அவளோ வாய் இருந்தாலும்…. சைக்கோ கில்லரா கூட லெப்ட் ஹேன்ட்லா சமாளிக்க தெரிஞ்ச தீரன் இவன்
🥰

மதுரன் கூட இவன் காம்போ
😅

இவனோட நிலா பெண் கிட்ட மட்டும்
🤭

நிலா…..அப்பா சரி இல்லாம போன அந்த குடும்பத்தில் மூத்த பெண்ணா இருந்து எல்லாம் செய்தவ…..
இவளோட அந்த ஓட்டத்துக்கும், உள்ளே அழுத்தின இத்தனை நாள் அழுத்தத்துக்கும்…..
இனி இளைப்பாற ஆலமரமா ஆரனும், அவன் காதலும்
❤️

மதுரன்….அமைதியா இருந்த இவனையும் ஆரன் போலவே வாயாடிய மாத்தின பெருமை நம்ம ஹீரோ சார்க்கு தான்
😅

“ போற இடத்தில் எல்லாம் என்னை விட்டுட்டு நீ போய் உன் வேலையை பாருனு சொன்ன நா என்ன தூர்வாரற வேலையா பார்கிறேன்….உடனே உட்கார்ந்து குழி பறிக்க”.....
இதை நினைச்சி இன்னும் கூட சிரிச்சிட்டே இருக்கேன்……
இப்படி நிறைய கான்வோ இருக்கு
🤣

அதும் அந்த குரு கூட மதுரனை விட்டுட்டு ஆரன் மட்டும் ஹனிமூன் கொண்டாட போய்விட …..
மதுரன் அவனுக்கு போன் போட்டு அழுர சீன் எல்லாம் பங்கம்
🤣
……
எப்படியோ சகலை ஆகிட்டான் ஆரன் கூடவே
🤩

வினோ…..சூழ்நிலை கைதி…. தன் பெண்களுக்குனு பார்த்து பார்த்து அவங்க கிடையே தப்பா பேர் வாங்கி நிற்கும் தாய்
🥺

அதை தவிர கூட இருக்கும் போதே துரோகம் செய்த கணவனை ஒன்னும் காதலால் கூட்டி வரல…..
குரு
😬

கதை ரொம்ப குட்டியா போச்சி ரைட்டர்….
இன்னும் நிறைய இருக்கும்னு நினைச்சேன்…..
ஆரன் & மதுரனை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன்
🤧

Story literally close to my heart
❤️

I suggest all readers & writers to read this story
🥰
…..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி
💐


Gowri Karthikeyan
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
""நிலவின் அக ஒலி "" கதை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சியிருந்தது
😍
.. காதல் கதையா, குடும்ப கதையா, திரில்லர் கதையா, போலீஸ் கதையானு கேட்டா இது எல்லாம் சேர்ந்த கதைனு சொல்லலாம்
🥰
... ஹீரோ ஆரன்
💕
இவனை பற்றி என்ன சொல்றதுனு தெரியல.. ரொம்ப ரொம்ப பிடிச்சது... இவனோட டயலாக் எல்லாம் செம
😂
... இவனுக்கும் இவனோட அசிஸ்டன்ட் மதுவுக்குமா காம்போ வேற லெவல்
😂
... இவனுக்கும் நிலாவுக்குமான காம்போ காதல் காதலை தவிர வேறு இல்லை
😍
... வினோதினி இவங்களை பற்றி சொல்ல ஒண்ணுமே இல்லை.. இவங்கள இவங்க செயலை பிடிக்கல.. கோபம் தான் வந்தது
😡
😏
😏
... செல்வக்குமார் இவனெல்லாம் என்ன ஜென்மமுனு தோணுச்சு
😡
.. வெட்கமே இல்ல நிலா வீட்ல இருந்தான்
😡
... தீஷி, சந்திரா பொறுப்பான நல்ல பெண்கள்
💜
... குரு
😡
... அழகான கதை
🩷
.. சீக்கிரமா முடிஞ்சிடிச்சேனு தோண வச்சக்கதை... நிலவின் அக ஒலி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் டா
💐


Priya Srikanth
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
#தேன்_நாட்டு_பைங்கிளி_விமர்சனம்
தேன் நாட்டு பைங்கிளி வானதிக்கும் தென் நாட்டு சூரியன் அருள்மொழிவர்மனுக்குமான காதல் தான் கதை
❤

இலங்கையில் பிறந்து வளர்ந்த வானதி பெற்றோர்கள் மறைவிற்கு பின் வேறு வழி இன்றி தமிழக பிரயாணம்.
✈️

இந்த இடத்தில் அவளை சீதையாகவும் கரிகாலனை இராவணனாகவும் உருவகப்படுத்தினது நல்லா இருந்தது
❤

அவளை மீட்க்கும் இராமனை சந்தித்தாளா? காவியத்தில் இராமன் ஏக பத்தினி விரதன் ஆனால் இவளின் இராமன்? கதையில் ,எதிர்ப்பார்க்காத திருப்புமுனைகளுடன் அழகாக
😍

இந்த கதையில் எனக்கு மிகவும் பிடித்தது லவ்-ஹேட் ரிலேசன்சிப்
😍

வித்தியாசமாவும் நல்லாவும் இருக்கு
♥

காதலை குழி தோண்டி புதைத்து வைத்து வெறுப்பை மட்டும் காட்டும் நம் நாயகியின் அனலை அணைக்க வழி தெரியாமல் சற்றும் மொழி
🤣
இறுதியில் காதலுக்கு உயிர் கொடுத்தானா என்பதை சிறப்பாக சொல்லிருக்கீங்க
❣️

வானதியின் கதாபாத்திரம் அருமை எனக்கு மிகவும் பிடித்தது
💜

வானதி கரிகாலனின் மோதலும் பாசமும் மிகவும் அழகு
😍

தன்னையும் தன் தமையனையும் இழிவுபடுத்துவோருக்கு பாரபட்சம் பார்க்காமல் திருப்பிக் கொடுப்பது அட்டகாசம்
😍

வானதியின் காதலும் பழி உணர்ச்சியும் வெறுப்பும் அக்கரையும் வேற மாதிரி
👌
முக்கியமா தகுதியில்லைனு சொல்லி சுத்தலில் விட்டது
🤣

கரிகாலன் பெற்றோருக்கு நல்ல மகன்
❤
தனக்கு இளையவர்களை பாதுகாப்பதிலும் வழிநடத்துவதிலும் மனசை கவர்ந்திட்டான்
😍
இவனுக்கு ஒரு தனி கதை எழுதுனா நல்லா இருக்கும்
❣️

அருள்மொழிவர்மன் பெயர் மட்டுமல்ல வானதி விழி வழியாக இவனை பார்க்கும் போது அழகன் இவன்
🥰
நம்மால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை
முக்கியமாக காதல் வயப்பட்டப்பின் அவனின் செயல்கள் ஒவ்வொன்றும் இரசிப்புக்குறியவை
ஒரு டீசர்ட்க்கு ஒரு வாரமா அடேய் அவளுக்காக புது வாகனம் மாற்றுவது, கடிதத்திற்க்காக காத்திருப்பது எல்லாம் எப்படி இருந்த மொழி இப்படி ஆகிட்டான் தருணங்கள்
வெண்மதி அருமையான அம்மா நல்லா இருக்கு இவர் வரும் காட்சிகள் அனைத்தும்
என் மனதிற்க்கு கொஞ்சம் நெருடலான விஷயங்கள்,
சின்ன சின்ன எழுத்துப்பிழைகள்
ஜெய் என்ன ஆனான் அவனைப் பற்றி இறுதியில் ஒரு வரியிலாவது குறிப்பிட்டு இருக்கலாம்
மாறன் யாரை திருமணம் செய்ய போகிறானு மொழிக்கு எப்படி தெரியாமல் இருக்கும் ? தெரிந்திருந்தால் அவன் தன் காதலி யாரு என்று தன் தாயிடமோ அல்லது அண்ணனிடமோ சொல்லிருக்கலாம் அல்லது அவனுக்கு அந்த மணப்பெண் யாரு என்று தெரியவில்லை என்றால் ஏன் என்று தக்க காரணம் சொல்லிருக்கலாம் .
அதை தவிர்த்து எதார்த்தமான கதாபாத்திரப் படைப்புகளுடன் அழகான கதை
தேன் நாட்டு பைங்கிளி அனைவரின் மனதிலும் இடம் பிடித்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Shafna Rangarajan
 

நிதனிபிரபு

Administrator
Staff member
#இது_காதல்_காவியம்…..
#கௌரிஸ்ரிவ்யூ.,...

நாயகி மீரா….இந்த பேரு வெச்சாதல என்னவோ காதல் கை கூடியும், சில காரணங்களால் காதலனுக்காக காத்து இருக்கும் நிலை
🥺


பிறந்ததும் தாயை இழந்து வாடும் மீராவை அரவணைக்க அப்பா இருந்தாலும்…..

பெண் பிள்ளைக்கு தாய் வேண்டிய அவசியத்தை உணர்ந்து கமலம் பாட்டி இன்னொரு கல்யாணம் செய்து வைக்க…..

ஆரம்பத்தில் நல்லா போன வாழ்க்கை…..அவ சித்தி மீராவை சிறிது ஒதுக்க….

மீரா முற்றிலும் ஒதுங்கி போறா…..

கமலா பாட்டிக்கு தான் தானே வினையை இழுத்து வைத்து விட்டோமோனு அதிக கவலை…..

தாய் இல்லைனாலும்….அவளோட கல்வி தந்த நிமிர்வும், தன்னம்பிக்கையும் அவளை எங்கேயும் சோர்ந்து போக விடல….

அது அவளின் தேடலிலும் தேங்கி நிற்க விடல……

அவளின் தேடலும், காதலுமே அவளின் காதலன் ரொஷானை கொண்டு வந்து சேர்த்துட்டு…..

ரொஷான்….அதிகமா பேசாம….பார்வையில் அன்பை தந்து இருக்கான்…..

கதை ரொம்ப நல்லா இருந்தது ரைட்டர்
❤️


போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி
💐


Gowri Karthikeyan
 

நிதனிபிரபு

Administrator
Staff member
#இரண்டற_கலந்தனவே….
#கௌரிஸ்ரிவ்யூ…..

ஆர்க்கிடெக் ஆதி & ஆர்டிஸ்ட் மிருதுளா ரெண்டு பேரும் பார்த்தும் பிடிச்சி போக…..

பழக பழக காதலும் செய்யறாங்க
🥰
.

ஆதி வீடு பணக்காரங்க…. மிரு வீடு அப்பர் மிடில் கிளாஸ்…..

இதிலேயே செம்ம கிளாஷ் ரெண்டு பேரு வீட்டுக்கும்…..

சோ தனியா வந்து கல்யாணம் பண்ணிக்காராங்க…..

ரெண்டு வீட்டுக்கும் செம்ம ஷாக் அப்படினாலும்….இவங்க காதலும் ஒருத்தர் மேல ஒருத்தர் வெச்சி இருக்கற அன்பும் எங்கேயும் சோர்ந்து போக விடல……

இப்படியே நல்லா போய் இருந்தா வாழ்க்கை நல்லா இருந்து இருக்கும்……

ஆன எதிர் பாரா விதமா மிருவின் இழப்பு
🥺


குழந்தை ஓட தனித்து நிற்கும் ஆதியின் நிலை என்ன இனி?????

அது தான் மீதி கதை…..

ஆதி….அன்பான காதலன், கணவன், அப்பா….. மிரு மேல உள்ள அன்பில் அவன் செய்யும் செயல்கள்

பாவமா இருந்தது…..

மிரு…..எவளோ கஷ்டம்
🥺
….ஆதி தவிக்கும் போது எல்லாம் இப்படி பண்ணிட்டாலேனு கோபம் தான் வந்தது…..

மதி …… மிரு இடத்தில் இவளை வைக்க முடியலனாலும் ஓகே தான்….

ஏங்க ரைட்டர் ஏன் இப்படி
🥺


கதை நல்லா இருந்தது…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி
💐
 
Top Bottom