• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

zeenath Sabeeha

New member
Nithani Prabu அவர்களின் தளத்தில் நடக்கும் செந்தூரம் போட்டி கதைகள்.
#STN113
இரண்டற கலந்தனவே
மிருதுளா... ஓவியம் வரைவதில் அலாதி விருப்பம் கொண்டுள்ள அதையே தொழிலாகவும் எடுத்திருக்கும் மிருதுவான பெண்.
ஆதித்யா.. கட்டடக்கலை நிபுணன்.. சற்று கோபக்காரன்.. இருவருக்கும் முதல் சந்திப்பு ஒரு கபேயில். அன்றிலிருந்து இருவருக்கும் இடையில் ஒரு மெல்லிய ஈர்ப்பு. அது படிப்படியாக காதலாகிறது. ஆதித்யா வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவன் இவர்களின் காதலுக்கு மிகுந்த முட்டுக்கட்டையாக இருக்கிறார் அவன் தந்தை ராஜசேகர் மிருதுளாவின் குடும்பம் ராஜசேகரின் வசதியை பார்த்து பயந்து இவர்கள் காதலை எதிர்க்கிறார்கள். இருவரும் வீட்டை விட்டு வந்து திருமணம் முடித்து தங்களுக்கான சிறு கூட்டில் வாழ்கிறார்கள் அங்கும் இடையூறு கொடுக்கிறார் ராஜசேகர்.
இரவோடு இரவாக தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்ள பயணிக்கிறார்கள் ஊட்டியை நோக்கி. அங்கு இவர்களுக்கு மகிழ்ச்சியான காலம் தொடங்குகிறது.
ஆனால் அங்கும் இவர்களை சோகமே தொடர்ந்து வருகிறது அது என்ன என்பது கதையில்.
வெண்மதி இவர்கள் வாழ்வில் முக்கிய அங்கம் வகிப்பவள் அவள் யார் என்பதும் கதையில்..
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰
Good luck 🥰❤
 

Gowri Karthikeyan

Active member
#நான்_அறிய_நீ…..
#கௌரிஸ்ரிவ்யூ….

கொஞ்சும் இலங்கை தமிழில் அழுத்தமான பெண்ணின் கதை❤❤❤❤❤❤.,...

வீட்டுக்கு தலைமகன்னா, அதிலும் படிக்கும் தங்கை, பொறுப்பில்லா அப்பா, அம்மா என இருந்தால்….

அந்த வீட்டின் பொறுப்பு மொத்தமும் அந்த பையனே தாங்கும் நிலையில் இருக்கும்…..

அதில் மகள்களும் விதிவிலக்கல்ல🤷🤷🤷🤷🤷🤷…..

பொறுப்பில்லா பெற்றோர் & தம்பி,சுயநல தங்கை என அவர்களின் வாழ்க்கை பிரத்தனாவை நம்பி என இருக்க…..

அதற்கு உண்டான சின்ன மரியாதையோ, வேலையை பகிரவோ யாரும் முன் வரவில்லை….

வெளியில் வேலைக்கு போய், வீட்டையும் பார்த்து களைத்து போகும் தனாவிற்கு ஒரே ஆறுதல் ரமணி அக்கா தான்….அவ கூட பணி புரிபவர்…..

சில காலமா ஏனோ ஒரு சலிப்பு மனதில் தனாவிற்கு …..

தன் காதல், தன் சந்தோஷமே பெரிது என இருக்கும் தங்கையை பார்த்து வந்த ஆழ் மன ஏக்கமாக இருக்கலாம்….

இந்நிலையில், வரோதயன் அவள் பணி புரியும் இடத்திற்கு புதிதாக பணி செய்ய வர…..

இவர்கள் முதல் சந்திப்பே ரொம்ப சுவாரசியமா இருந்தது🤣🤣🤣🤣🤣….

வராவிற்கு தனாவை பிடிக்க…. தனாவிற்கும் அவனை பிடிக்குது…..

சில இக்கட்டான சூழலில் வராவே வந்து உதவ….

தனாவிற்கு அந்த பிடித்தம் காதலாகுது….

ஆனாலும் தன் குடும்பத்தை நினைத்து அவனை ஏற்க மறுக்க…

அது மட்டுமே காரணம் இல்லை தான்….

இவள் கல்யாணம் செய்து போன கேட்பவர் யாரும் இல்லை தான் அவள் வீட்டில்….ஆனாலும் அவர்களுக்காக இவள் பார்க்க….

அவர்களோ….அவள் பணத்தில் சுகமாக இருந்துவிட்டு….நேரம் வந்ததும் கறிவேப்பில்லையாக தூக்கி எறிய….

கசந்து போகிறது அனைத்தும்…..

இனி தனாவின் முடிவு என்ன?????

வராவின் காதலை ஏற்றாலா…என்பதே கதை…..

கதை ரொம்ப அருமையா இருந்தது ரைட்டர் ❤❤❤❤❤

எனக்கும் ரொம்ப பிடிச்சது🤩🤩🤩🤩🤩

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇👇

B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%80%E2%80%A6.424/
 

skp

Member
KANKKALUKKUL PALLI KONDEN....Naa just 3 rd epi le irunthu than padika stared pannane.... athule enne admire panna lines naa attach panniruken... super story.... sudden ah partha intha story Wednesday varaikum than irukum nu sollitange.... naa vere Monday than intha story ah padika start pannanen.....aparam nithama kitte naa request pannanen... nithama innoru naal kazhichu antha story ah remove pannikanganu... just now... fullah padichittuten... ithukave illaiku mrng ah lunch um panni vechuttu unkarthu padichen... enge remove panni vitturuvangalonu... but naa edfort pottu padichathuku... unmaiya worth aana story... enaku personal ah romba pidichu...romba unmaiya kanniyamana words pottu azhaka eduthirunkinga... I loved this story very much....
Thank you so much ma ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ உங்களுக்கு என்னோட கதை பிடிச்சதுல ரொம்ப சந்தோசம்னா வேலை எல்லாம் முடிச்சிட்டு வந்து உட்கார்ந்து படிச்சதுக்கு worth ன்னு சொன்னது போதுமென்று இருக்கு... Thank you so much ma ❤ ❤ ❤ ❤ ❤ ❤
 

Gowri Karthikeyan

Active member
#உந்தன்_நெஞ்சில்_உயிராக…..
#கௌரிஸ்ரிவ்யூ…..

கொங்கு தமிழில் cute லவ் ஸ்டோரி 🥰 🥰 🥰 🥰 🥰….

திகழ்….ஓட பாஸ்ட், காதல் பத்தி நினைச்சி ரொம்ப சோகமா இருக்கான்😒😒😒😒😒…..

அவனை மாற்ற கூடவே இருக்கான் அண்ணன் சுகிர்….

திகழை அவன் காதலை மறக்க விடாம, எப்பவும் திகைக்க வைக்கவே அவன் காதல் செந்தா பக்கத்து வீட்டில் தான் மையம் கொண்டு இருக்கு🤭🤭🤭🤭🤭…..

தினமும் அவனின் பார்வைக்காக ஏங்கி நிற்கும் பாவையை…..பார்வையால் தொடர மட்டும் செய்வான் திகழ்🤷🤷🤷🤷🤷….

திகழ் அம்மா காமாச்சியும், செந்தா அம்மா தேவிக்கும் ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்க ரொம்ப ஆசை🥰🥰🥰🥰…..

ஆக்சுவலா….இவங்க காதல், பிரிவு ஏதும் இவங்க குடும்பத்துக்கு தெரியாது….

இப்படி அம்மக்களே ஆசை பட்டும் திகழுக்கு ஏனோ செந்தாவை கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல…..

செந்தா சொன்ன வார்த்தைகள் தான் அவன் அவளை விட்டு விலகி நிற்க காரணமும்…..

அந்த சூழ்நிலை…அவளை அப்படி பேச வெச்சிட்டு…..

இப்படி இருக்க ரெண்டு பேரும் எப்படி சேராங்கா?????

இவர்களின் பிரிவுக்கு காரணம் என்ன என்பதே கதை…..

திகழ்….இவன் பாஸ்ட் கஷ்டமா தான் இருக்கு…..இப்ப வரை இருந்த ஏதும் அவனுக்கு சொந்தமில்லைனும்….ஏன் அவன் பெற்றோர் கூட….எனும் போது ரொம்ப கஷ்டமா தான் இருந்தது…..

பட்….என்ன காரணகளுக்காய் செந்தா அப்படி சொன்னா என தெரிந்தும் அவளை தண்டிப்பது எந்த வகையில் நியாயம் டா பக்கி பயலே😬😬😬😬😬…..

ஆக்சுவலா நீ ஹேப்பி இல்ல ஆகி இருக்கணும்😏😏😏😏😏…..

என்ன மேன் நீ…..

செந்தா….உண்மையா பாவம் இவ….அவன் நல்லதுக்கு சொன்னதுக்கு இவளுக்கு தான் எவளோ தண்டனை😔😔😔😔😔…..

அவனை வெச்சி செஞ்சி இருக்கலாம் டா நீ…..என்னமோ போ….

ராஜேந்திரன்…..ஒரே வார்த்தை தான்….மனுஷனா நீங்க எல்லாம்🤦🤦🤦🤦🤦🤦…..நல்லா புருஷனாவும் இல்ல, அப்பனாவும் இல்ல…..

கல்யாணி…. insecurity ஒருத்தகளை எப்படி எல்லாம் ஆட்டி வைக்கும்னு இவங்க தான் சிறந்த உதாரணம்….

கோவிந்தன்….காதல் மனைவியை போட்டு அம்மா படுத்தினா….இவரும் அமைதியா இருந்து அவங்களுக்கு ஆதரவு தராது போனதால் தான் அவங்களுக்கு இப்படி ஒரு நினைப்பே வந்து இருக்கு…..

கல்யாணி ஓட நிலைக்கு இவரும் ஒரு காரணம்…..

கதை நல்ல இருந்தது ரைட்டர் ❤❤❤❤❤❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

 

Gowri Karthikeyan

Active member
#உன் _காதலால்_என்னை_மீட்டுவிடு….
#கௌரிஸ்ரிவ்யூ…..

சஸ்பென்ஸ், டுவிஸ்ட் ஓட கதை நல்லா இருந்தது ❤ ❤ ❤ ❤ ❤

முதல் 20 எபிக்கு யார் யார் யாரை லவ் பண்றாங்க அப்படினு தெரியாது….ஏன் இது, இப்படியுமானு கதை படிக்க படிக்க நல்ல விறுவிறுப்பா இருந்தது….

ஆதித்யா குரூப்பின் இளைய தலைமுறை இந்தியா வந்ததே இல்ல….

அதே போல, அவங்க கை வைக்காத தொழிலும் இல்ல…இப்ப அவங்க கையில் எடுத்து இருக்கும் தொழில் தான் மருத்துவம்…..

அதுக்கு தான் செழியன் வந்து இருக்கான் இந்தியாக்கு…..

விஜய் - மகிழினி அண்ணன், தங்கச்சி…. construction கம்பெனி வெச்சி இருக்காங்க…

சில காலங்களுக்கு முன்னால் பெற்றோரை இழந்த இவர்கள்….இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறும் கம்பெனி…..

இவங்க தாத்தா பாஸ்கரவர்மன் துணை கொண்டு…..

இவரும் செழியன் தாத்தாவும் ஃப்ரெண்ட்ஸ்…..

சோ செழியனும் ஒரு பங்குதாரர் விஜய் கம்பெனிக்கு…..

வேலையில் ரொம்ப நேர்த்தியை கடைபிடிக்கும் மகிழையும், அதே போல வேளையில் நேர்த்தியை எதிர்பார்க்கும் செழியனையும் இணைக்கும் ஒரு புள்ளி டாக்டர் விக்ரம்…..

இவர்கள் செய்யும் தொழிலுக்கும், டாக்டருக்கும் சம்மந்தமே இல்லைனாலும் இவர்களை சேர்ப்பது விக்ரம் தான்…..

எப்படி, ஏன்?????

இது தான் முழு கதையும்…..

செழியன்…..ஆரம்பத்தில் ஏன் இப்படி இருக்கான்னு பார்த்தா….அவன் பாஸ்ட் ரொம்ப கஷ்டமா இருக்கு….

விக்ரம் - செழியன்….பாண்டிங், செழியனின் மாற்றம் எல்லாம் நல்லா இருந்தது…..

ஆன இவனின் காதல் பத்தி சொல்லபடாமலே விட்டீங்க ரைட்டர் 🤷🤷🤷🤷🤷……

மகிழினி….விஜய் முன்னால் ஹேப்பியா இருக்கற மாறி இருந்தாலும்…..இவள் ஆழ் மனமும், தோழி அச்சுவிக்கும் தான் இவளின் சோகம் தெரியுது….

இவளின் மன மாற்றம் எல்லாம் தெளிவா சொல்லபடல….

இவங்களை தவிர, விஜய், மாறன், ராஜா, அச்சு எல்லாம் இருக்காங்க கதையில்…..

விக்ரம், அவனோட கனவுகளை பத்தி தான் தெளிவா இருக்கு….

கதை ஒரு incomplete பீல் தருது …..

கதை நகர்ந்த விதம் நல்லா இருக்கு…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81.418/
 

Umayal K

Member
#தாமரை_இலையுள்_உறை_தண்ணீராய்_விமர்சனம்


5 வயது வரையில் நவ்யாவாக இருந்தவளை நிலாவாக மாற்றி , 18 வயதில் கயவர்கள் கையில் சிக்கி உடலவிலும் மனதளவிலும் பல இன்னல்களை அனுபவித்து தன்னவன் கைசேர்ந்து மீண்டும் நவ்யாவாக, அழகான மறுவாழ்வு அமைந்து வாழ்வில் எவ்வாறு முன்னேறுகிறாள் என்பதே கதை ❤


கதையின் போக்கு அருமை👌 பல எதிர்ப்பார்க்காத திரும்புமுனைகளுடன் தொய்வில்லாமல் சுவாரஸ்யமான கதை ❤


யாரு நாயகன்? யாரு நாயகி? என்று அறியவே பல அத்தியாயங்கள் கடக்க வேண்டி இருந்தது 😍


இதில் படபட பட்டாசாக சுனிதா கதாபாத்திரம் அருமை 😍 தன் மனதில் இருப்பதையும் திருமணம் மற்றும் வருங்கால கணவன் மேல் இருக்கும் எதிர்ப்பார்ப்பும் எவ்வித ஒளிவு மறைவும் இன்றி பேசுவது நல்ல கதாபாத்திர படைப்பு ❤


தமிழை போலவே நானும் ஜெகன்நாதனை பிழையாக தான் எண்ணினேன் ஆனால் தமிழுடன் சேர்த்து எனக்கும் ஒரு அறை கொடுத்து அவர் யார் என்று சொன்னது நன்றாக இருந்தது ❤ அது மட்டுமா அதற்கு பிறகான முன் கதை அனைத்தும் சற்றும் எதிர்ப்பார்க்காத திருப்புமுனை 👏


அந்த முன் கதையிலும் சரி நடப்பிலும் சரி பெரியவர்கள் செய்த பிழையால் பாதிக்கபட்டது நவ்யா, சிந்து மற்றும் ரியா 😓😓


நிலா மற்றும் சூர்யா குறித்து சிந்து, ரியா மற்றும் அழகனின் கருத்துக்கள் நம் சமூகத்தின் பிரதிபலிப்பு 😰


சூர்யா நல்ல தோழி ❤ தன் தோழிக்காக மற்றும் தனக்காக அழகனிடம் வாதிடுவது சிறப்பு 👏


நிலா அனுபவத்த கொடுமைகள் 😭😭 மனதை கனக்க வைக்கிறது 😩 மாயன் மற்றும் டில்லி 😡போன்ற ஆட்களுக்கு ஆதிகேசவனுக்கு அளித்த தண்டனை போல் அளித்திருந்தால் நல்லா இருந்திருக்கும் 😓 சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது.


கதையின் நாயகன் தமிழ்செல்வன் காவல் அதிகாரி ❤ காவலனாக மட்டுமல்ல காதலனாகவும் மனதை கவர்கிறார் ❤


நவ்யாவுக்கு கிடைத்த வரம் தமிழ் ❤ தமிழின் காதலை மற்றும் நவ்யாவின் உணர்வுகளை விவரித்த விதம் எனக்கு பிடித்திருந்தது 🤩 நவ்யாவுக்கு தமிழை போல் பாதிக்கபட்ட பெண்களுக்கும் அழகான வாழ்வு கிடைத்தால் நன்றாக இருக்கும் ❤


சூர்யா மற்றும் நவ்யா சிங்கபெண்கள் ❤😍 பாதிக்கபட்டவர்களே பலப்பல கல்லடிகளை பட வேண்டி இருக்கும் அவல நிலையில் தான் நம் சமூகம் இன்னும் இருக்கிறது வேதனைக்குறிய விடயம் 🥺🥺


தமிழின் ஆத்மார்த்தமான காதலும் புரிதலும் அவளுக்கும் அவளின் கனவுக்கும் கொடுக்கும் மரியாதையும் ❤ மெய்சிலிர்க்க வைக்கிறது 😍 handsoff to you man ❤ இந்த காதல் காவலனை மிகவும் பிடித்தது 😍


இன்னும் கதையில் அவிழ்க்கப்படாத முடிச்சுக்கள் பல உண்டு அதற்க்கான பதிலை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன் ❤


அருமையான கதை ❤


வாசகர்கள் அனைவரின் நெஞ்சிலும் தமிழுவும் நவியும் தாமரையாக மலர்ந்து நீங்கா இடம் பிடித்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍
அழகான விமர்சனம் டியர் ❤
 

Umayal K

Member
#நான்_அறிய_நீ…..
#கௌரிஸ்ரிவ்யூ….

கொஞ்சும் இலங்கை தமிழில் அழுத்தமான பெண்ணின் கதை❤❤❤❤❤❤.,...

வீட்டுக்கு தலைமகன்னா, அதிலும் படிக்கும் தங்கை, பொறுப்பில்லா அப்பா, அம்மா என இருந்தால்….

அந்த வீட்டின் பொறுப்பு மொத்தமும் அந்த பையனே தாங்கும் நிலையில் இருக்கும்…..

அதில் மகள்களும் விதிவிலக்கல்ல🤷🤷🤷🤷🤷🤷…..

பொறுப்பில்லா பெற்றோர் & தம்பி,சுயநல தங்கை என அவர்களின் வாழ்க்கை பிரத்தனாவை நம்பி என இருக்க…..

அதற்கு உண்டான சின்ன மரியாதையோ, வேலையை பகிரவோ யாரும் முன் வரவில்லை….

வெளியில் வேலைக்கு போய், வீட்டையும் பார்த்து களைத்து போகும் தனாவிற்கு ஒரே ஆறுதல் ரமணி அக்கா தான்….அவ கூட பணி புரிபவர்…..

சில காலமா ஏனோ ஒரு சலிப்பு மனதில் தனாவிற்கு …..

தன் காதல், தன் சந்தோஷமே பெரிது என இருக்கும் தங்கையை பார்த்து வந்த ஆழ் மன ஏக்கமாக இருக்கலாம்….

இந்நிலையில், வரோதயன் அவள் பணி புரியும் இடத்திற்கு புதிதாக பணி செய்ய வர…..

இவர்கள் முதல் சந்திப்பே ரொம்ப சுவாரசியமா இருந்தது🤣🤣🤣🤣🤣….

வராவிற்கு தனாவை பிடிக்க…. தனாவிற்கும் அவனை பிடிக்குது…..

சில இக்கட்டான சூழலில் வராவே வந்து உதவ….

தனாவிற்கு அந்த பிடித்தம் காதலாகுது….

ஆனாலும் தன் குடும்பத்தை நினைத்து அவனை ஏற்க மறுக்க…

அது மட்டுமே காரணம் இல்லை தான்….

இவள் கல்யாணம் செய்து போன கேட்பவர் யாரும் இல்லை தான் அவள் வீட்டில்….ஆனாலும் அவர்களுக்காக இவள் பார்க்க….

அவர்களோ….அவள் பணத்தில் சுகமாக இருந்துவிட்டு….நேரம் வந்ததும் கறிவேப்பில்லையாக தூக்கி எறிய….

கசந்து போகிறது அனைத்தும்…..

இனி தனாவின் முடிவு என்ன?????

வராவின் காதலை ஏற்றாலா…என்பதே கதை…..

கதை ரொம்ப அருமையா இருந்தது ரைட்டர் ❤❤❤❤❤

எனக்கும் ரொம்ப பிடிச்சது🤩🤩🤩🤩🤩

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇👇

B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%80%E2%80%A6.424/
நல்ல நிறைவான விமர்சனம் டியர் ❤
 
Top Bottom