• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

நிதனிபிரபு

Administrator
Staff member
#நிலவின்_அக_ஒலி_விமர்சனம்
மொத்தமே 12 அத்தியாயங்கள் தான் ஆனால் அதற்குள் அழகான காதல் இருக்கு, சஸ்பென்ஸ் இருக்கு, காமெடி இருக்கு, குடும்பப் பிரச்சினை இருக்கு, சமூகம் சார்ந்த சிந்தனைனு எல்லாமே இருக்கு
❣️
❣️

கதையின் நாயகன் ஏசிபி அகரன்
😍
😍
இவரின் அதிரடி நடவடிக்கை,பேச்சு ,செயல்பாடு எல்லாவற்றிலும் நம் நாயகி நிலா விழுறதுக்கு முன்னமே நான் விழுந்து டேன்
முக்கியமா மதுரனுடனான இவனது காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடி தான்
🤣
🤣
நல்லா வாய்விட்டு சிரித்தேன்
நிலா மூத்த பொண்ணா இரண்டு தங்கைகளுக்கு அக்காவா அவளின் பொறுப்புணர்ந்து நடந்துக்கிறது ஆகட்டும் அப்பா செய்த தப்புக்காக அவளெடுத்த முடிவாகட்டும் அதில் அவள் உறுதியா நின்னது ஆகட்டும்
படிப்பு வேலை குடும்ப சுமைனு அவளின் நிலைபாட்டை அழகா சொல்லீருக்கீங்க எனக்கு நிலா பொண்ணை எல்லாமாகவும் ரொம்ப பிடித்தது
மதுரன் குருவிடம் மாட்டிக்கிட்டு முழிப்பது நல்லா இருந்தது
🤣
எப்படியோ ப்ளான் பண்ணி ஏசிபியை நிலாவோடு கோர்த்துவிட்டுடே மேன் நீ
தீஷி கடை குட்டி
💞
சுட்டி பெண் நல்லா இருக்கு இவளின் வெளிபடையான பேச்சும் செயல்களும்
♥

செல்வகுமார்
😡
தங்கமா வீட்டுல மூனு பொண்ணுங்க நல்ல பொண்டாட்டி வெச்சு வாழ தெரியல
🥶
உன்னால அவங்க அசிங்கபட்டு நின்னது தான் மிச்சம்
குரு தேவ் சைகோ தான் இவன் உனக்கு நிலா கேட்குது
வினோதினி அம்மாவா பொண்ணுங்க வாழ்வை நினைச்சு கணவனை வீட்டுல சேர்த்துக்கிட்டாங்க புரியுது ஆனாலும் அவங்க சேர்த்துக்கிட்டது தப்பு தான். இப்படி பட்டவரை அப்பானு முன்னிருத்தறதுக்கு பதில் பொண்ணுங்களுக்கு அப்பா இல்லை காணாம போய்டாருனு சொல்லீருக்கலாம்
நிலா பொண்ணும் ஏசிபியும் அனைத்து வாசகர்களின் அக ஒலியாகி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்



Shafna Rangarajan
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
#நிலவின்_அக_ஒளி….
#கௌரிஸ்ரிவ்யூ…..
போலீஸ்+லவ்+குடும்ப கதை
❤️
…..
எல்லாமே சேர்ந்த ஒரு மாஸ் கதை
🤩
…..
ஆரன்…. ஏசிபி….சரியான வாயாடி
🤣
….ஆன பட்ட கமிஷனர் கூட அவன் கிட்ட பம்பி தான் பேசுவார்
😅
😅
….ஊரு பட்ட வாய்
🤩
…..
அவளோ வாய் இருந்தாலும்…. சைக்கோ கில்லரா கூட லெப்ட் ஹேன்ட்லா சமாளிக்க தெரிஞ்ச தீரன் இவன்
🥰

மதுரன் கூட இவன் காம்போ
😅

இவனோட நிலா பெண் கிட்ட மட்டும்
🤭

நிலா…..அப்பா சரி இல்லாம போன அந்த குடும்பத்தில் மூத்த பெண்ணா இருந்து எல்லாம் செய்தவ…..
இவளோட அந்த ஓட்டத்துக்கும், உள்ளே அழுத்தின இத்தனை நாள் அழுத்தத்துக்கும்…..
இனி இளைப்பாற ஆலமரமா ஆரனும், அவன் காதலும்
❤️

மதுரன்….அமைதியா இருந்த இவனையும் ஆரன் போலவே வாயாடிய மாத்தின பெருமை நம்ம ஹீரோ சார்க்கு தான்
😅

“ போற இடத்தில் எல்லாம் என்னை விட்டுட்டு நீ போய் உன் வேலையை பாருனு சொன்ன நா என்ன தூர்வாரற வேலையா பார்கிறேன்….உடனே உட்கார்ந்து குழி பறிக்க”.....
இதை நினைச்சி இன்னும் கூட சிரிச்சிட்டே இருக்கேன்……
இப்படி நிறைய கான்வோ இருக்கு
🤣

அதும் அந்த குரு கூட மதுரனை விட்டுட்டு ஆரன் மட்டும் ஹனிமூன் கொண்டாட போய்விட …..
மதுரன் அவனுக்கு போன் போட்டு அழுர சீன் எல்லாம் பங்கம்
🤣
……
எப்படியோ சகலை ஆகிட்டான் ஆரன் கூடவே
🤩

வினோ…..சூழ்நிலை கைதி…. தன் பெண்களுக்குனு பார்த்து பார்த்து அவங்க கிடையே தப்பா பேர் வாங்கி நிற்கும் தாய்
🥺

அதை தவிர கூட இருக்கும் போதே துரோகம் செய்த கணவனை ஒன்னும் காதலால் கூட்டி வரல…..
குரு
😬

கதை ரொம்ப குட்டியா போச்சி ரைட்டர்….
இன்னும் நிறைய இருக்கும்னு நினைச்சேன்…..
ஆரன் & மதுரனை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன்
🤧

Story literally close to my heart
❤️

I suggest all readers & writers to read this story
🥰
…..
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி
💐


Gowri Karthikeyan
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
""நிலவின் அக ஒலி "" கதை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சியிருந்தது
😍
.. காதல் கதையா, குடும்ப கதையா, திரில்லர் கதையா, போலீஸ் கதையானு கேட்டா இது எல்லாம் சேர்ந்த கதைனு சொல்லலாம்
🥰
... ஹீரோ ஆரன்
💕
இவனை பற்றி என்ன சொல்றதுனு தெரியல.. ரொம்ப ரொம்ப பிடிச்சது... இவனோட டயலாக் எல்லாம் செம
😂
... இவனுக்கும் இவனோட அசிஸ்டன்ட் மதுவுக்குமா காம்போ வேற லெவல்
😂
... இவனுக்கும் நிலாவுக்குமான காம்போ காதல் காதலை தவிர வேறு இல்லை
😍
... வினோதினி இவங்களை பற்றி சொல்ல ஒண்ணுமே இல்லை.. இவங்கள இவங்க செயலை பிடிக்கல.. கோபம் தான் வந்தது
😡
😏
😏
... செல்வக்குமார் இவனெல்லாம் என்ன ஜென்மமுனு தோணுச்சு
😡
.. வெட்கமே இல்ல நிலா வீட்ல இருந்தான்
😡
... தீஷி, சந்திரா பொறுப்பான நல்ல பெண்கள்
💜
... குரு
😡
... அழகான கதை
🩷
.. சீக்கிரமா முடிஞ்சிடிச்சேனு தோண வச்சக்கதை... நிலவின் அக ஒலி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் டா
💐


Priya Srikanth
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
#தேன்_நாட்டு_பைங்கிளி_விமர்சனம்
தேன் நாட்டு பைங்கிளி வானதிக்கும் தென் நாட்டு சூரியன் அருள்மொழிவர்மனுக்குமான காதல் தான் கதை
❤

இலங்கையில் பிறந்து வளர்ந்த வானதி பெற்றோர்கள் மறைவிற்கு பின் வேறு வழி இன்றி தமிழக பிரயாணம்.
✈️

இந்த இடத்தில் அவளை சீதையாகவும் கரிகாலனை இராவணனாகவும் உருவகப்படுத்தினது நல்லா இருந்தது
❤

அவளை மீட்க்கும் இராமனை சந்தித்தாளா? காவியத்தில் இராமன் ஏக பத்தினி விரதன் ஆனால் இவளின் இராமன்? கதையில் ,எதிர்ப்பார்க்காத திருப்புமுனைகளுடன் அழகாக
😍

இந்த கதையில் எனக்கு மிகவும் பிடித்தது லவ்-ஹேட் ரிலேசன்சிப்
😍

வித்தியாசமாவும் நல்லாவும் இருக்கு
♥

காதலை குழி தோண்டி புதைத்து வைத்து வெறுப்பை மட்டும் காட்டும் நம் நாயகியின் அனலை அணைக்க வழி தெரியாமல் சற்றும் மொழி
🤣
இறுதியில் காதலுக்கு உயிர் கொடுத்தானா என்பதை சிறப்பாக சொல்லிருக்கீங்க
❣️

வானதியின் கதாபாத்திரம் அருமை எனக்கு மிகவும் பிடித்தது
💜

வானதி கரிகாலனின் மோதலும் பாசமும் மிகவும் அழகு
😍

தன்னையும் தன் தமையனையும் இழிவுபடுத்துவோருக்கு பாரபட்சம் பார்க்காமல் திருப்பிக் கொடுப்பது அட்டகாசம்
😍

வானதியின் காதலும் பழி உணர்ச்சியும் வெறுப்பும் அக்கரையும் வேற மாதிரி
👌
முக்கியமா தகுதியில்லைனு சொல்லி சுத்தலில் விட்டது
🤣

கரிகாலன் பெற்றோருக்கு நல்ல மகன்
❤
தனக்கு இளையவர்களை பாதுகாப்பதிலும் வழிநடத்துவதிலும் மனசை கவர்ந்திட்டான்
😍
இவனுக்கு ஒரு தனி கதை எழுதுனா நல்லா இருக்கும்
❣️

அருள்மொழிவர்மன் பெயர் மட்டுமல்ல வானதி விழி வழியாக இவனை பார்க்கும் போது அழகன் இவன்
🥰
நம்மால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை
முக்கியமாக காதல் வயப்பட்டப்பின் அவனின் செயல்கள் ஒவ்வொன்றும் இரசிப்புக்குறியவை
ஒரு டீசர்ட்க்கு ஒரு வாரமா அடேய் அவளுக்காக புது வாகனம் மாற்றுவது, கடிதத்திற்க்காக காத்திருப்பது எல்லாம் எப்படி இருந்த மொழி இப்படி ஆகிட்டான் தருணங்கள்
வெண்மதி அருமையான அம்மா நல்லா இருக்கு இவர் வரும் காட்சிகள் அனைத்தும்
என் மனதிற்க்கு கொஞ்சம் நெருடலான விஷயங்கள்,
சின்ன சின்ன எழுத்துப்பிழைகள்
ஜெய் என்ன ஆனான் அவனைப் பற்றி இறுதியில் ஒரு வரியிலாவது குறிப்பிட்டு இருக்கலாம்
மாறன் யாரை திருமணம் செய்ய போகிறானு மொழிக்கு எப்படி தெரியாமல் இருக்கும் ? தெரிந்திருந்தால் அவன் தன் காதலி யாரு என்று தன் தாயிடமோ அல்லது அண்ணனிடமோ சொல்லிருக்கலாம் அல்லது அவனுக்கு அந்த மணப்பெண் யாரு என்று தெரியவில்லை என்றால் ஏன் என்று தக்க காரணம் சொல்லிருக்கலாம் .
அதை தவிர்த்து எதார்த்தமான கதாபாத்திரப் படைப்புகளுடன் அழகான கதை
தேன் நாட்டு பைங்கிளி அனைவரின் மனதிலும் இடம் பிடித்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Shafna Rangarajan
 

நிதனிபிரபு

Administrator
Staff member
#இது_காதல்_காவியம்…..
#கௌரிஸ்ரிவ்யூ.,...

நாயகி மீரா….இந்த பேரு வெச்சாதல என்னவோ காதல் கை கூடியும், சில காரணங்களால் காதலனுக்காக காத்து இருக்கும் நிலை
🥺


பிறந்ததும் தாயை இழந்து வாடும் மீராவை அரவணைக்க அப்பா இருந்தாலும்…..

பெண் பிள்ளைக்கு தாய் வேண்டிய அவசியத்தை உணர்ந்து கமலம் பாட்டி இன்னொரு கல்யாணம் செய்து வைக்க…..

ஆரம்பத்தில் நல்லா போன வாழ்க்கை…..அவ சித்தி மீராவை சிறிது ஒதுக்க….

மீரா முற்றிலும் ஒதுங்கி போறா…..

கமலா பாட்டிக்கு தான் தானே வினையை இழுத்து வைத்து விட்டோமோனு அதிக கவலை…..

தாய் இல்லைனாலும்….அவளோட கல்வி தந்த நிமிர்வும், தன்னம்பிக்கையும் அவளை எங்கேயும் சோர்ந்து போக விடல….

அது அவளின் தேடலிலும் தேங்கி நிற்க விடல……

அவளின் தேடலும், காதலுமே அவளின் காதலன் ரொஷானை கொண்டு வந்து சேர்த்துட்டு…..

ரொஷான்….அதிகமா பேசாம….பார்வையில் அன்பை தந்து இருக்கான்…..

கதை ரொம்ப நல்லா இருந்தது ரைட்டர்
❤️


போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி
💐


Gowri Karthikeyan
 

நிதனிபிரபு

Administrator
Staff member
#இரண்டற_கலந்தனவே….
#கௌரிஸ்ரிவ்யூ…..

ஆர்க்கிடெக் ஆதி & ஆர்டிஸ்ட் மிருதுளா ரெண்டு பேரும் பார்த்தும் பிடிச்சி போக…..

பழக பழக காதலும் செய்யறாங்க
🥰
.

ஆதி வீடு பணக்காரங்க…. மிரு வீடு அப்பர் மிடில் கிளாஸ்…..

இதிலேயே செம்ம கிளாஷ் ரெண்டு பேரு வீட்டுக்கும்…..

சோ தனியா வந்து கல்யாணம் பண்ணிக்காராங்க…..

ரெண்டு வீட்டுக்கும் செம்ம ஷாக் அப்படினாலும்….இவங்க காதலும் ஒருத்தர் மேல ஒருத்தர் வெச்சி இருக்கற அன்பும் எங்கேயும் சோர்ந்து போக விடல……

இப்படியே நல்லா போய் இருந்தா வாழ்க்கை நல்லா இருந்து இருக்கும்……

ஆன எதிர் பாரா விதமா மிருவின் இழப்பு
🥺


குழந்தை ஓட தனித்து நிற்கும் ஆதியின் நிலை என்ன இனி?????

அது தான் மீதி கதை…..

ஆதி….அன்பான காதலன், கணவன், அப்பா….. மிரு மேல உள்ள அன்பில் அவன் செய்யும் செயல்கள்

பாவமா இருந்தது…..

மிரு…..எவளோ கஷ்டம்
🥺
….ஆதி தவிக்கும் போது எல்லாம் இப்படி பண்ணிட்டாலேனு கோபம் தான் வந்தது…..

மதி …… மிரு இடத்தில் இவளை வைக்க முடியலனாலும் ஓகே தான்….

ஏங்க ரைட்டர் ஏன் இப்படி
🥺


கதை நல்லா இருந்தது…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி
💐
 

thanga then mozhi

Active member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026 நிலவின் அக ஒளி
நாயகன்: ஆரோன் சர்வேஸ்வரன்
நாயகி: லஷ்மி நிலாயினி
நல்ல வாயாடன் ஹூரோ அடேய் உனக்கு வாய் வலிக்காதா அந்த புள்ளை என்னமோ உருகி உருகி லவ்ஸ் உட்புற அளவுக்கு என்ன எல்லாம் பேசுற ..
மதுரன் டேய் உன் காதலை காப்பாத்த ஆரனை குடி வச்ச அவன் அவன் காதலை பிக்கப் பண்ணிட்டான் டால்ஸ்🤣🤣🤣🤣
கதையில் தங்க மாடத்தி ஏம்மா எப்புடி மா இந்த உன்னை வச்சு இம்புட்டு வருஷம் மேச்சிங்க🤣🤣🤣
செல்வகுமார் ரஞ்சனி இரண்டு பேரும் பண்ண துரோகம் அதுக்கான பலனே உங்கள் நிலை
வினோதினி எந்த காலத்தில் கருத்துக்கணிப்பு அப்பா இல்லைனா பொண்ணுங்க கல்யாணம் பண்ண முடியாதா😏😏😏
படிப்பை கொடுத்தா போதும் அவங்க வாழ்க்கையை நடத்த தன்னம்பிக்கை தானா வரும்
குருதேவர் காமெடி பீஸ்னு பார்த்தா டெரர் பீஸா வந்து நிக்கிறியேடா நீ மெண்டல் எல்லாம் இல்லை வெவரமா 74 கொலை பண்ண சைக்கோ😡😡😡😡
நம்ம சமூதாயத்தில் இதுதான் பெரிய பிரச்சினை நம்ம போட்டோ தப்பான முறையில் நம் மொபைலுக்கு வந்தா வீட்டில் சொல்லி பிரச்சினையோட ஆழத்தை கண்டுபிடிக்கலாம் தூண்டிவிட்டா தற்கொலை பண்ணிக்குவிங்களா சரியான கோழைகள்😡
கேரக்டர் நேம் எல்லாம் வித்தியாசமான பெயர் லஷ்மி நிலாயினி இனிய சந்திரா தீஷிதா சுபி தங்க மாடத்தி ஆரன் சர்வேஸ்வரன் 🥰🥰🥰🥰 சூப்பர் நல்ல விறுவிறுப்பான கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰 🥰 💐 💐 ❤ ❤
 

thanga then mozhi

Active member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
அசோகவனத்தில் ராமன்
நாயகி: ஆத்மிகா கண்ணபிரான்
நாயகன்: சித்தார்த்
நம்ம நாயகி பெரிய தொழில் அதிபர் கல்யாணம் காதல் இதுல எல்லாம் நோ இண்ட்ரஸ்ட் ஆனால் ஹார்மோன் ரியாக்ஷனுக்கு மதிப்பளித்து எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்னு ஆண்களை தேவைக்கு ஏற்ப பணம் கொடுத்து யூஸ் பண்ணிப்பாங்க இப்படி ஒரு கதையை எழுதுன எழுத்தாளர்க்கு வாழ்த்துக்கள் 💐 ❤ 🧡 ஏன்னா ஆண்கள்தான் ப்ளே பாயா இருக்கனுமா பொண்ணுங்களும் இருப்பாங்க அப்படி என்றாலும் எந்த இடத்திலும் முகம் சுழிக்கும் அளவு இல்லாமல் ஜாலியா படிக்கிற அளவு எழுதிய எழுத்தாளரின் கற்பனை🔥🔥🔥
கதைக்கு வருவோம் சித்து பையா செம்ம அழகன் வாழ்ந்து கெட்ட குடும்பம் இவன் அழகுத் மயங்கி லவ்ஸ்னு தாண்டி என்கிற நந்தினி சுத்துது
நம்ம தலைவி கம்பெனி கல்லாவுல கை வச்சு சித்தருக்கு உதவி பண்ண பட்சி வசமா சிக்கி கிச்சு இந்த சூழ்நிலையில் சித்துவ ஆத்மி பார்த்து அழகுத் மயங்கி ஒன் ஃபைட் ஸ்டார்ட் கேட்க மானம் தான் முக்கியம் அப்படினு சித் மறுப்பிங் எதிர்பாராத சிக்கலில் சித் தங்கச்சி பானு ஆத்மி கிட்ட சிக்க நம்ம சித் கற்பு ஆத்மியால் களவாடப்பட்டது சாரி இரண்டு பேரும் சேர்ந்து வாழ தளவாட இல்லை கன்னன் கழிஞ்சிங் அதுக்கப்புறம் இருக்கும் கதை விறுவிறுப்பாக நகர்கிறது 💕 💕 💕
தாய் கிழவி நீ எல்லாம் அரசியலுக்கு வர வேண்டி ஆள் நல்லா ஜாலியான கதை மா சூப்பர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰 🥰 💐 ❤
 

thanga then mozhi

Active member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
செம்புலப்பெயல் நீர்
நாயகன்: பாரி அலவன்
நாயகி: கயல்விழி
கயல்விழி கங்கு குழந்தை பிறக்கிறது குழந்தையின் அப்பா பாரி ஆனால் பாரி இது தன் குழந்தை இல்லை என்று சத்தியம் செய்யாத குறை மாரிக்கு ஏற்கனவே இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கின்றனர் மனைவி இறந்து விட்டார் கயலின் குழந்தைக்கு யார் தகப்பன் இதுவே கதைக்களம்🥰🥰
மூத்த தலைமுறையில் இருந்து கதையின் கரு ஆரம்பம் ஆகிறது ஒற்றை பிள்ளையான சேயோன் குடும்ப தொழிலை துறந்து தனக்கான அடையாளமாக கட்டுமான துறையில் சாதிக்க அத்தை மகளான காஞ்சனா வை திருமணம் செய்து பாரியை பெற்றெடுக்கிறார்
சிறு வயதில் இருந்தே பாரிக்கு மலர் மீது பாசம் காதலாகி இருவருக்கும் பெற்றோர்கள் முன்னிலையில் ஆடம்பரமாக கல்யாணம் நடைபெறுகிறது அவர்களின் காதலுக்கு பரிசாக இரட்டை சுட்டி ஆண் மகவுகளை மலர் என்று சந்தோஷமான வாழ்வில் இடியாக மலரின் விபத்து 😥😥😥
மலரின் இழப்பை ஈடு செய்ய முடியாத நிலை குழந்தைகளை பெற்றோரின் கவனிப்பில் லண்டன் அனுப்பி விட்டு உள்ளூரில் தொழிலே கதி என்று இயந்திர வாழ்க்கை வாழும் பாரி😔😔😔
அவ்வூருக்கு வி ஏ ஓய்வாக வரும் கயல்விழி அச்சு அசலாக மலரை போலவே இருக்க பாரியின் மனம் தடுமாறுகிறது அதன் பிறகான கதைக்களம் படிக்க சுவாரசியமாக உள்ளது 😞 😥
வள்ளி மணி தம்பதிகள் பெண் பிள்ளைக்கு அரச பதவியில் அமர வைத்து ரசிப்பது பெற்றோர்களின் பொறுப்பின் சாராம்சம்👏👏👏
மீனாட்சி சிறுவயதில் இருந்தே பார்த்து வளர்ந்த பெண் மீது சொல்லும் குற்றச்சாட்டு தானும் பெண் என்று மறந்த நிலை இவளின் தவறுக்கு கதிர் உதாசீனம் சரியே ஷாலினி நீ செய்த செயல் பாரியின் வாழ்க்கையை புரட்டிப் போட்டதோடு அநியாயமாக ஒரு பெண்ணின் பாவமும் 😡😡😡
நல்ல வித்தியாசமான முயற்சி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰 🥰 💐 💐
 

thanga then mozhi

Active member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
குழலில் காற்றாகினால்
நாயகன்: அமரவர்மன்
நாயகி:திலோத்தம்மா
நம் நாயகன் சிறு வயதில் பட்டாம்பூச்சியாக வளம் வரும் வயதில் பெற்றோர்கள் உடன் எதிர்பாராத வெடிவிபத்தால் பார்வை குறைபாடு ஏற்படுகிறது அந்த விபத்தில் பெற்றோரையும் இழந்து நிற்க சில நல்ல உள்ளங்களின் உதவியுடன் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்கிறான் அங்கு கிடைக்கிறது உயிர் நட்பு படித்து தன்னம்பிக்கை உடன் இருவரும் குயில்களின் கூடாரம் எனும் மியூசிக்கல் க்ரூப்பில்இணைந்து தொலைக்காட்சி மற்றும் யூட்யூபில் இசை வீடியோக்கள் பதிவிறக்கி அவர்களுக்கென்று ஒரு புகழையும் தொழிலையும் ஏற்படுத்தி கொள்கின்றனர்...
புல்லாங்குழல் வித்தகனாகிறார் நம் நாயகன் அமர் அவரின் திறமையை ரசிக்கும் நம் நாயகியின் ரசனை காதலாகி காதல் அவரின் எதிர் வீட்டில் குடி வரும் அளவுக்கு வளர்கிறது 🥰🥰🥰
நம்ம நாயகி பெற்றோர்கள் இல்லாமல் மாமனின் அரவணைப்பில் வளர்ந்து படித்து தனக்கென சுயமரியாதையுடன் தனித்து வாழும் பெண் 💓 💓 💓 💓
அமர் அவனின் அழகுக்கும் புகழுக்கும் பணத்திற்க்கும் மயங்கி அவனை சுற்றி வரும் பெண்களை அலட்சியமாக கடந்து செல்ல திலோவின் காதலையும் உதாசீனப் படுத்துகிறான்
திலோவின் காதல் வென்றதா அமரின் அலட்சியத்துக்கு காரணம் என்ன என்பதை கதையில் தெரிந்து கொள்ளலாம் 🥰 💐 💐
இளங்கோ ரஞ்சனி காம்போ செம்ம சூப்பர் இரண்டு பேரும் நல்ல மனம் கவர்ந்த ஜோடி 🥰🥰
கண்பார்வை குறைபாடு தெரிந்தும் கிலோ தனது காதலில் உறுதியாக இருந்து அமரனை கைப்பிடிப்பது உண்மைக் காதல் என்றும் தோன்றாது💓💓
தாயில்லா நாயகனுக்கு தாயாக தாரமாக தாங்கி தன் உயிரை ஊதியமாக தியாகம் செய்து ஒளி கொடுக்கும் திலோவின் தாய்மை நெகிழ்வான தருணம் 🥺🥺🥺🥺
திலோவின் காதலுக்கு நிகரான அமரனின் திடம் காதல் மிகவும் அழகான ஓவியம் என்பதன் உதாரணம் ❤ 🧡 🥰 💐 நல்ல கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰 🥰 💐 ❤ 🧡
 
Top Bottom