• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

thanga then mozhi

Active member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்: பூவிழி நேசம்
நாயகன்: இளஞ்செழியன்
நாயகி: பூவிழி
நம் நாயகி குடும்பம் சூழ்நிலையில் தட்டுத்தடுமாறி டாக்டர் தம்பதிகள் உதவியுடன் செவிலியராகி ஒரு மருத்துவமனையில் பணிபுரிகிறார் அங்கு சிகிச்சைக்காக வரும் பரமானந்தரை பார்க்கும் போது தன் மனதிற்க்கு இனியவனான இளஞ்செழியனின் தகப்பன் என்று தெரிந்து மருத்துவ உதவிக்காக அவருடைய வீட்டில் தங்க செல்கிறாள்😍😍😍
இளஞ்செழியன் திருமணம் ஆகி வெளிநாட்டில் மனைவியுடன் வசித்து வந்தாலும் அவனின் வீட்டில் அவனுடைய உறவுகளுடன் வாழ்ந்தே தன் வாழ்க்கையை கழித்து விடலாம் என்று எட்டு வருட காதலை மனதில் பூட்டி வாழ்கிறாள்🫂🫂
இதை எதுவும் அறியாத இளா தாயகம் திரும்ப அதற்கு பிறகான கதையே பூவிழி யின் நேசம் உண்மையில் இப்படி கூட காதலர்கள் இருப்பார்களா அவன் கிடைக்க மாட்டான் என்று தெரிந்தும் அவனை தவிர மற்றவரை ஏற்க்காத நெஞ்சம் செம்ம ❣🥰🥰🥰




பரமு அப்பா இரண்டு ஆண் பிள்ளைகள் இருந்தும் ஆதரவற்ற வண்ணம் திரை எடுத்து வளர்த்த விதம் மனித உருவில் கடவுள் 👏👏👏👏🙏🙏🙏


தான் எடுத்து வளர்க்கும் குழந்தை என்று தெரிந்ததும் வானகனுடனான காதலை மனதில் புதைத்து கொள்வது எல்லாம் காதல் சுயநலமில்லாத அன்பு❣❣❣



பரிபூரணன் பரிதி இரண்டு பேரும் இளாவுக்கு நல்ல அண்ணன் அண்ணி தான் ❤❤
பத்மினி அம்மா இசை விழி என்று எல்லா கேரக்டரும் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் 👏👏👏👏





இளா மட்டும் காதலில் குறைந்ததா எட்டு வருடங்களாக சுரபிக்காவே வாழ்ந்து எவ்வளவு துன்பம் வந்தாலும் அவளை காண காத்துக் கிடந்தது என்று அவர்கள் காதலை காப்பாற்ற போராடி உள்ளனர்💕💕💕இறுதிவரை இப்படி சுரபி அவனுக்கு கல்யாணம் ஆகலைன்னு தெரியாமல் பச்சை புள்ளையா இருக்காலே 🤣🤣🤣🤣
காதலில் காத்திருப்பதும் சுகமே❣❣❤❤❤❤❤❤❣❣❣
நல்ல எதார்த்தமான காதல் கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰 🥰 💐 ❤
 

thanga then mozhi

Active member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்: என்னோடு தான் கண்ணாமூச்சி
நாயகன்: ராகவன்
நாயகி: யுகபிரணிதா
நாயகி யுகா தன் தாய் மாமன் வீட்டில் மதுரையில் வளர்ந்து வருகிறாள்அவளின் மாமன் சங்கரின் மகனான ஆகாஷ் அவள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார்❤❤❤
எதிர்பாராத விதமாக அவளின் வேலையை கோயம்புத்தூருக்கு மாற்றல் செய்கிறார்கள் அவளின் அலுவலக நிர்வாகம் அங்கு போக மிகவும் தொடங்குகிறாள் அவளின் பாட்டி பவுனம்மாள் வேறு அவளை கட்டாயபடுத்தி செல்ல வலியுறுத்துவது மட்டும் அல்லாமல் அந்த ஊரில் சில உறவுகள் இடம் அவளை சேர்த்து வைக்க முயற்ச்சிக்கிறார் இதற்கு என்ன காரணம் என்பதே கதையின் கரு ❤❤🧡🧡




ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்ய ஆதரிக்கும் இந்த சமூதாயம் ஒரு பெண் இரண்டாம் திருமணம் செய்தால் அவர்களை நிம்மதியாக வாழ விடாமல் தடுக்கும் அதே திருமணத்தில் கருவுற்றால் அதற்க்கும் அந்த பெண்ணையே தூற்றும் சமூகம் இது 😥🥺🥺🥺
பூவரசம் நல்ல கணவன் நல்ல தகப்பன் இவ்வுலகில் வாழ கொடுத்து வைக்கவில்லை 🥺🥺🥺🥺

மாணிக்கம் பூர்வாக்கிட்ட நீங்க நல்ல விதமாக நல்ல தகப்பனாக நடந்து கொண்டாலும் குழந்தையின் மனதை இன்னும் கொஞ்சம் முதிர்ச்சியும் கையாண்டு இருக்கலாம் பூர்வா யுகாவை அடித்தது சரியே ஆனால் அவளின் விருப்பத்திற்க்கு வீட்டில் இருந்து வெளியேற விட்டிருக்க கூடாது🥺🥺🥺🥺🥺

சுசீலா 🥺🥺🥺🥺🥺 பள்ளி கல்லூரி விடுதியில் இது போல் பெண்களுக்கு பெண்களே வன்கொடுமை செய்கின்றனர் சுசீலா இப்படி ஒரு கோழைத்தனமான முடிவை எடுத்திருக்க வேண்டாம் இந்த ஐஸ்வர்யா போன்ற கேவலமான ஜென்மங்கள் ஐ சட்டம் சும்மா விடக்கூடாது😥😥😥
பவுனம்மாள் தாய் கிழவி மேல் ஃபர்ஸ்ட் கோவமா வந்துச்சு யுவாவை திட்டிக் கிட்டயே இருக்கேன்னு அது அவ அவளோட கூட்டில் சேர கோவமாக பாசத்தை காட்டும் சூழ்ச்சினு அப்பறம் தான் தெரிஞ்சது 😍😍😍😍
ராகவன் எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் யுவாவை விட்டுட்டார் ஜீவன் ❤❤❤❤
தான் தாயாகிய பிறகுதான் தாய்மையின் பாதுகாப்பு உணர்வு புரிகிறது யுவாவுக்கு 😍😍😍
கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிய பட்டாம்பூச்சியை அமுக்கி புடிச்சு கல்யாணம் கட்டி அம்மாவாக்கி ஆஃப் பண்ணிட்டான் இந்த ராகவன் நல்ல கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰 🥰 💐 ❤
 

priyasrikanth

New member
""என்னோடுதான் கண்ணாமூச்சி"" குடும்பம் சார்ந்த நல்ல கதை😍😍.. மறுமணம் செய்யும் போது பெரியவர்களின் மனநிலை மட்டும் பார்க்காமல் குழந்தைகளோட மனநிலை அவர்களை வளர்க்கும் முறையையும் சரியா செய்ய நினைக்கனும்..
யுவாவுக்கு இதுதான் பிடிக்குமுனு மணிப்பா நினைச்சு செய்யப் போக அதுவே பிரிவுக்கு காரணம் ஆகிடிசாசு.. பூர்வா வை பற்றி என்ன சொல்ல யுவாவுக்கு தாயா அவங்க தோற்றுப் போயிட்டாங்கனுதான் சொல்லுவேன்.. சாதாரணமாவே இரண்டாவது குழந்தை பற்றி யோசிக்கும் போது முதல் குழந்தை வளர்ப்பை சரியா செய்யவும் நினைவு வச்சிக்கனும்.. ஆனா இவங்க அப்படி இல்ல... யுவா பண்ணது தப்பாவே இருந்தாலும் அந்தளவுக்கு அவ மனநிலையை மாற்றியது இவங்களோட சரியில்லாத கவனிப்பும் சரியா கவனிக்கிறோமூனு நினைச்ச மணிப்பாவோட வளர்ப்பும் தான் காரணம் 🙄🙄
ராகவன், யுகாவை அழகா புரிஞ்சி சரியா அவளை கவனிச்சு நடந்ததால்தான் சொல்லாமலேயே இவங்க காதல் அழகா வளர்ந்தது🥰🥰🥰
பூவப்பா கொஞ்சமே கொஞ்சம் வந்தாலும் கதை முழுவதும் மனசுல தொடர்ந்து வந்தார்💜💜💜💜💜
இடையில் ஒரு சின்ன கேஸ் வருது.. அதில் வரும் இன்ஸ்பெக்டர் தமிழ் சூப்பர் 💕💕💕💕.. அவருக்கும் ஜவுளி ஓனர் பொண்ணுக்குமா தனி கதையை விரைவில் வருமுன்னு எதிர்பார்க்கிறேன் டா💕💕💕💕💕💕
பெருசா twist, suspense, திருப்பம் இல்லாத கதை தான்... ஆனா அழகான கதை💙💙💙💙💙
கதையை இன்னும் சுவாரஸ்யமாக்கும் விஷயங்கள் ஏதாவது சேர்த்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்☺
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் டா💐💐💐💐💐💐
 

STN - 50

New member
Staff member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர்: புது மங்கல சௌபாக்கியம்
நாயகன்: நித்திக் சரண்
நாயகி: வெண்ணிலா
நம் நாயகன் சரணின் கீழ் நாயகி வெண்ணிலா வெண்ணிலாவின் வலக்கை இடக்கை நட்புகளான சரண்யா தேவி அபிஷேக் மூவரும் பேங்க்கில் வேலை செய்கின்றனர் ❤❤❤❤
சரணுடன் வெண்ணிலா அதிகமாக பேசி பழகியது இல்லை ஆனால் வச்சிட்டு வாங்காமல் சைட் அடிப்போம் சந்தோஷமா இருப்போம்🤩🤩🤩🤩
சரண் வெண்ணிலாவிடம் ஒரு உதவி கேட்டு அவளை அழைத்து கொண்டு உயிருக்கு போராடும் தனது தாய் யசோதா மற்றும் மாமா அத்தை சந்திரமோகன் லாவண்யா தன் காதலி மாமன் மகள் சரணின் பாப்பூ சாருலதா முன்பு தாலி கட்டி மனைவியாக ஏற்றுக் கொள்கிறான்❣❣❣😡





நம்ம வெண்ணிலா அதிர்ச்சி ஆகனும்னு ஆனா அவ ஆகலை அதுக்கு பதில் சாரு வாட்டர் பால்ஸை ஓபன் பண்ணிக்கிட்டே ஓடி போறா எதுக்கு இந்த சரண் தாலி கட்டுனான் லவ்வாங்கி உட்பட பாப்பூ ஏன் வாட்டர் பால்ஸ் ஓபன் பண்ணா இதை எல்லாம் கதையை படிச்சு தெரிஞ்சுக்குங்க 🥰🥰🥰🥰





வெண்ணி நீ ஒரு பண்ணி(punny) , அழகான முயல் குட்டி போல திருதிரு துறுதுறு 🫂🫂🤩🤩



யசோதா மம்மி நீங்க சாருவை மருமகளா ஏத்துக்கொள்ளாததுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கும்னு எதிர் பார்க்கலை🫂🫂🫂🫂🥺🥺



சொந்தத்தில் காதலித்து சொத்து வெளியே போகாது என்ற எண்ணத்தில் கல்யாணமும் செய்து அதனால் குழந்தை குறையாக பிறந்தால் காதலித்து கைபிடித்து மனைவியை கொடுமை செய்வது எப்படி நியாயம் 🥺🥺🥺அதையே அவரின் பிள்ளையும் செய்வான்னு தாய் அந்த பிள்ளை முன்னாடி பேசலாமா😥😥😥




அபி சரண்யா என்னடா நடக்குது இங்க இங்குண்டு ஒரு தனி லவ் ட்ராக் ஓட்டியிருக்கானுங்க ❣❣❣❣
இந்த சிடுவனுக்குள்ளேயும் இவ்வளவு பெரிய காதல் மன்னன் ஒளிச்சு இருந்துருக்கான்😍😍😍
சாரு உன் மனசை நீ புரிஞ்சு உன் மாமா மேல் நீ வச்சது தகப்பன் போன்ற அன்புனு புரிஞ்சுக்க இந்த பிரிவு உதவியிருக்கு😍😍
தாம்பத்யத்தில் ஆண் என்ன பெண் என்ன குறையாத காதல் இருந்தால் போதும் இருவரும் என்றும் பல்லாண்டு காலம் வாழ்க 💐💐💐💐
நல்ல எதார்த்தமான கலகலப்பான கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰 💐 💐 ❤
ரொம்ப நன்றிகள் சகி 😍😍 உங்க விலைமதிப்பில்லா விமர்சனதுக்கு ❤
 

priyasrikanth

New member
உந்தன் நெஞ்சில் உயிராக கதை ரொம்ப அருமையா இருந்தது😍😍😍... நான் படிச்ச கதைகளை வச்சு சொல்றேன் கதை ஆரம்பிக்கும்போது ஒரு ஊரோட slang ல பேச ஆரம்பிப்பாங்க ஆனா போகப்போக சாதாரண பேச்சு நடைக்கு கதை வந்திடும்.. இல்லைனா பெரியவங்க பேசுங்க சிறியவர் நடை முறை தமிழில் பேசுவாங்க .. ஆனா இந்த கதையில் சிறியவர்கள் வரை எல்லாரும் கடைசி வரை அதே பேச்சு நடையில் பேசி கதையை கொண்டு பௌன எழுத்தாளருக்கு பாராட்டுக்கள் 🥰🥰🥰🥰..
கதை ஆரம்பிக்கும் போது ஹீரோவுக்கு ஹீரோயின் மேல் லவ் இருக்கு ஆனா இல்லை என்ற மாதிரி போகும்.. அவனோட கோபத்தை பார்த்திட்டு அப்படி என்னதான்மா நீ சொன்னனு கதைகுள்ள போய் ஹீரோயினை கேட்டுட்டு வயலாமுனு கூட தோணுச்சு 😛😛😛
கல்யாணி ஒன்னும் சொல்றதற்கு இல்ல.. அவங்க இருந்த கடுப்பு கோபம் இதை தவிர வேற எதுவும் வரல.. அவங்க பேச வாயை திறந்தாலே அவ்வளவு கோபம் வந்தது😏😏😏😏
ராஜேந்திரன் இவரெல்லாம் என்ன ஜென்மமுனே தெரியல 😡😡😡😡😡.. கடைசி வரை திருந்தாத திருந்தினாலும் பிரயோஜம் இல்ல😡😡😏😏😏
திகழ், இனிகிட்ட காதலை சொன்ன தருணம் ரொம்ப அழகா இருந்தது😍😍😍😍😍😍இரண்டு பேரோட பேச்சு செயல் எல்லாம் அவ்வளவு அழகு🥰🥰🥰🥰
இளையவர்களின் பெயர்கள் ரொம்ப அழகா வித்தியாசமா இருந்தது 💕💕💕💕💕💕
எழுத்தாளர் past ஐ present ஆ காட்டி கதையை ஆரம்பிச்சு இருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும்.. கண்டிப்பா பொங்கல் வந்திருக்கும் தான் 😂😂😂😂
ஆனா என்ன தான் முடிவுனு பொறுமையா காத்திருந்து படிக்கிற நிறைய பேருக்கு கதை பயங்கர சுவாரஸ்யமா இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்ல 💜💜💜💜
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் டா💐💐💐💐💐💐
 

priyasrikanth

New member
என் ஆழ்மனம் நீயாக கதை சூப்பர் 😍😍😍... குரு அருமையான கதாபாத்திரம்.. எதையும் பொறுமையா தெளிவா யோசிச்சு பண்றான்... அட்சு அந்த வயசுல சூழ்நிலையில் அதைத்தான் அவளால செய்ய முடியும்.. ஆனாலும் அவனை எந்த இடத்திலேயும் மறக்கல🥰🥰🥰
அவளுக்கா குரு பண்ண விஷயங்கள் க்யூட்😍😍😍.. இவங்களுக்கு என்ன உறவு என்னப் பண்ணானு கதையை படிச்சு தெரிஞ்சிக்கோங்க.. நான் சொன்னா சுவாரஸ்யம் போயிடும்..
சபா பக்கம் நியாயமான காரணங்கள் இருந்தாலும் பூரி சொன்ன மாதிரி பாதிகப்பட்ட அட்சு அவளை புரிந்து கொண்டது இவன் புரிந்து கொள்ளாதது ரொம்ப தவறு.. என்னப் பண்றது காதல் கொண்ட மனசு அவனை மன்னிச்சு ஏற்றுக்கொண்டது.. ஆனா டக்குனு எல்லாம் ஏற்றுக்கொள்ளளல.. வச்சு செஞ்சிட்டு தான் ஏற்றுக் கொண்டாள்😂😂
ரோஷன்😡😡😡கேடு கெட்டவனுக்கு அம்மா சப்போர்ட் வேற😡😡😡
அழகான கதை.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் டா💐💐💐💐💐💐
 

Kalai Karthi

Active member
என் ஆழ்மனம் நீயாக கதை அருமை. ஹீரோயின் அட்சயா படிப்பை முடித்து வேலைக்கு போக அங்கே குருவை சந்திக்க பார்த்தது போல் இருக்கே என்று நினைக்க குருவுக்கு ஏதோ மாதிரி இருக்க நமக்கும் முன்னாடியே தெரிந்தவங்களா?என்பதை கேள்வியோடு பயணிக்க. இரண்டு எபி போன பிறகு தெரிகிறது என்ன உறவு என்று தெரிந்ததும் கொஞ்சம் ஷாக் கொஞ்சம் மகிழ்ச்சி. குரு அச்சு இடையே காதல் உரிமை உணர்வு கோபம் கலந்து பயணிக்க இருவரும் ஒருவரையொருவர் நினைத்தபடி இருக்க பிறகு கல்யாணம் பிரச்சினை வந்தாலும் அவர்களின் எண்ணங்கள் அன்பாக இருக்க வரும் பிரச்சினை களைந்து வாழ்க்கை சந்தோஷமாக குழந்தை நட்பு உறவுகளோடு சுபம். வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்.
 

Kalai Karthi

Active member
உந்தன் நெஞ்சில் உயிராக கதை அருமை. இந்த கதையும் சஸ்பென்ஸ் கலந்தே ஆரம்பிக்கிறது. திகழின் உணர்வு காதல் பாசம் பொறுமை கோபம் அழகாக கொண்டு போயிருக்கேங்கே. திகழ் வீட்டில் உறவுகளை ஏற்க மனம் தடுமாறுகிறது.திகழ் தன்அப்பாவால் தன்னுடைய குடும்பம் காதல் மற்றும் மற்றவர்களின் உணர்வுக்கு அடங்கிய வாழ்க்கை வாழ்ந்து பின்னர் தெரிந்து காதல் தோல்வி அடைந்து மனம் உறவுகளை ஏற்க தடுமாறி பின்னர் காதலியின் உணர்வு அதற்கான சூழ்நிலை புரிந்து அவளை ஏற்றுக் கொள்வது சூப்பர். முடிவு அழகு. கல்யாணி ராஜேந்திரன் தவிர்த்து மற்றவர்கள் சூப்பர். வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்.
 

Gowri Karthikeyan

Active member
#மகேந்திரனின்_மதிவதனியிவள்…..
#கௌரிஸ்ரிவ்யூ……

முன் ஜென்ம கதை❤❤❤❤❤

வடிவேல், ராமச்சந்திரன் & தர்மராஜ் மூணு பேரும் பிரெண்ட்ஸ் 🤩🤩🤩🤩🤩🤩

இதில் திக் பிரெண்ட்ஸ் வடிவேல் & ராமு….ரெண்டு பேர் பிள்ளைகளுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ரொம்ப ஆசை….

வடிவேல் பொண்ணு நம்ம மதிவதினி, ராமு பையன் தீரன்🥰🥰🥰🥰🥰…..

மதியும் இவங்க கம்பெனிலா ஜூவல் டிசைனரா இருக்கா….ஆன தீரனுக்கு அவ திறமை மேல பெருசா நம்பிக்கை இல்ல…..

மதி தீரனை பார்த்து லைட்டா மதி மயங்கினாலும்….தீரன் ஓட தீ சொற்கள் அதை வளர விடாம பண்ண….

ரெண்டு பேருக்கும் எப்பவும் ஒத்து போகாது….

அதனால் தர்மா பையன் மகேன்க்கு அவளை கேட்க…வடிவேலும் மதி கிட்ட கேட்க….

மகேனை அவளுக்கும் பெருசா மறுக்க காரணம் இல்லாததால் ஓகே சொல்லிட்டா…..

மகேனும் அது போலவே…..

ஆன வேணாம்னு சொன்ன பிறகு…ஏனோ தீரனுக்கு மதியை விட்டு கொடுக்க முடியல…..

மதி மேல வெச்சி இருந்தா பொய் பிம்பங்கள் உடைய இல்லைனா தன்னையே இந்தனை நாள் உணராத காதல் எல்லாம் இப்ப பொங்கி வர…..

இப்ப மதியை எப்படி தன் திருமதி ஆக்கிகளாம் என தீவிர திங்கிங்லா தீரன்…..

மகேனுக்கும் அவனின் காதலியை எப்படி கை பிடிப்பது என வெயிட்டிங்…..

வதனி கல்யாணத்துக்கு சரி சொல்லி இருந்தாலும்….ஏனோ இப்ப மனம் தீரன் மேல தீரா காதல் கொள்ளுவது குறித்து ஷாக்கிங்…..

இப்படி மூணு பேரும் ஒருவொரு நிலையில் இருக்க….

மகேன் & தீரனுக்கு தங்களின் முன் ஜென்ம ஞாபகங்கள் வரிசையா வர…..

மதி யாரின் திருமதி ஆனாள்?????

மகேன் காதல் யார்???

தீரனின் தீவிரத்தில் விளைந்தது?????

முன் ஜென்ம ஞாபகம் வர காரணம்?????

இது தான் மீதி கதை…..

தீரன்….அகம்பாவியா இருந்தவன் காதலை உணர்ந்ததும் அவனின் மாற்றம்❤❤❤❤❤…..

முன் ஜென்மத்திலும் சரி இப்பவும் சரி அவனின் காதல் ரொம்ப cute🥰🥰🥰🥰🥰….

மகேன்…. தீரனின் தீரா காதலை சேர்த்து வைக்கவே பிறவி எடுத்தவன் எனினும்….

இவன் பண்ற தில்லாங்கடியில் மாட்டிட்டு முழிப்பது என்னவோ தீரன் தான்….அப்பவும், இப்பவும்🤭🤭🤭🤭🤭….

மதி…தீரன் & மகேன் ரெண்டு பேருக்கும் முன் ஜென்ம நினைவு வந்து அவர்கள் மாறி இருந்தாலும்….

அந்த நினைவு இல்லா போதிலும் மதியின் காதல் உண்மையா மெய் மறக்க வைக்குது❤❤❤❤❤…..

ஒரேடியா இல்லாம அப்ப அப்ப முன் ஜென்மம் நினைவுகள் வருவது….நம்மை ஒரு பரபரப்பிலே வெச்சி இருக்கு…..

கதையும், அதை சொன்ன விதமும் ரொம்ப நல்லா இருந்தது ரைட்டர் ❤ ❤ ❤ ❤ ❤ ❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.447/
 

ShaSri

New member
#உந்தன்_நெஞ்சில்_உயிராக_விமர்சனம்


கொங்கு தமிழில் ஒரு கதையை படிக்கோணுமுனு நெம்ப ஆசைங்க எனக்கு. அந்த ஆசையை நீங்க நெறைவேத்தி வெச்சுப்போட்டீங் நெம்ப நன்றிங் அம்மணி 🙏 நெம்ப சந்தோஷமுங் 😍😍


உறவாளையும் உறவுமுறையாளையும் வார்த்தையாளையும் பிரிந்த காதலன் காதலியை பற்றிய கதை ❤ பிரிஞ்சாங்க சரி சேர்ந்தாங்களா என்னனு கதை படிச்சுப்போட்டு வாங்க 😍


எல்லா உறவும் இருக்கு ஆனால் உரிமை? உரிமை இருந்தும் இல்லாத நிலைதான் நம் நாயகன் திகழொவியனுக்கு 😍


திகழோவியன் பெயருக்கு ஏற்றது போல் அழகான ஓவியமாக இருந்திருக்க வேண்டிய அவனின் வாழ்க்கை தாய்பாசம் என்ற பெயரில் அலங்கோலமாக மாத்திடுறாங்க அன்னை கல்யாணி 😡😡


தாய் பாசம் எவ்வளவு தூய்மையானது அதை சிறையா மாத்தி. தன் சுயநலத்திற்காக சுற்றி உள்ள அனைவருக்கும் வலியை தந்து இறுதியில் என்ன சாதிச்சீங்க 😰😰


கோவிந்தனின் நேர்மை எனக்கு பிடித்தது ❤
காமாட்சி அம்மாவை பார்க்க நெம்ப பாவமா போச்சுங்க 🤧🤧😓 அண்ணா, அண்ணி நிதா குட்டி ,மணினு அத்தனையும் தங்கமான உறவுகள் ❤


ராஜேந்திரன் நாராயணன் சண்டை இயல்பானதா இருந்தது ஏன் எதுக்குனு தெரியாது ஆனால் ஆவாதுனு இருக்கவங்க நிறைய ஆட்கள் உண்டு நம்மை சுற்றி 👌


செந்தாழினி ❣❣திகழ் காதல் காட்சிகள் கவிதை மாதிரி இருந்தது ❤ நான் ரொம்ப ரசிச்சேன் ❤ ஆனால் ரொம்ப குட்டியா போச்சுங்க 😏


இறுதியா நாராயணன் செம 🤣 வானத்தை போல பாட்டை போட்டு அந்த சூழ்நிலையையே தலைகீழாக மாத்திப்போட்டீங் 👌👌
திகழின் நினைவுகளால் நெஞ்சை நிறைச்சுப்போட்டீங் ❣❣


கதை எனக்கு நெம்ப புடிச்சுப்போச்சுங் அம்மணி ❤❤


எல்லாரு நெஞ்சிலையும் இந்த கதை நல்ல தடத்தை பதிச்சு ஜெய்க்க வாழ்த்துக்களுங் அம்மணி 👍
 
Top Bottom