• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

thanga then mozhi

Active member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
நாயகன்: அகிலன்
நாயகி:சௌமிகா
நம் நாயகி சௌமிகா அம்மா கமலா அப்பா சிவநாதன் தம்பி விக்ரம் என்று சிறு குருவிக்கூட்டில் வாழ்ந்து வர பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி படிப்பிற்க்காக அம்மா கமலாவின் அக்கா சகுந்தலா அவர்களின் வீட்டிற்கு வேறு ஒரு உயிர்க்கும் செல்கிறாள்😍😍😍

பெரியம்மா சகுந்தலா வுமன் பெரியப்பா ரவீந்திரன் இருவரும் தன் பெற்ற பிள்ளை போன்று பாசமாக பார்த்து கொள்கின்றனர் ❤❤❤
சகுந்தலா அம்மாவின் சிறு வயதில் இருந்தே தோழியாக வரும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பத்மாவதி அம்மாவின் பழக்கம் ஏற்படுகிறது பத்மா அம்மாவின் மகனே நம் நாயகன் அகிலன் ❤❤❤சௌமி அகிலனை கண்டதும் காதல் கொள்கிறாள்😍😍
அதை அகிலனிடமும் கூற விரிவுரையாளராக இருக்கும் அகிலன் சௌமியின் காதலை உதாசினமாக எண்ணி அவளை தவிர்க்கிறான் இனி என்ன என்பதை கதையில் தெரிந்து கொள்ளலாம் 🥰 🥰 💐
சௌமி காதலை அகிலன் கண்டுகொள்ளாதது ஓவர் ஆட்டிட்டுயூட் பாய்😡😡😡
சௌமி எதற்க்கும் அலட்டிக்கொள்ளாத பெண்ணாக மனதை கவர்கிறார்❤❤❤
அழகிக்கு பார்க்கும் பெண்களை எல்லாம் பத்மா அம்மாவிடம் குறைகூறி நிறுத்தும் இடம் சிறுபிள்ளைத்தனமான எண்ணம் 🤣🤣🤣
அகிலன் திருமணம் பிறகு சௌமியின் நிராகரிப்பு உனக்கு வலிப்பது போல் தான் அவளுக்கும் இருக்கும் 😡😡
சிறு பெண் உனக்காக அம்மா அப்பா என்று குடும்பத்தை விட்டு வந்தவள் அவளை அடிப்பது தவறல்லவா🥺🥺🥺
நல்ல எதார்த்தமான குடும்ப கதை ❤ 🧡 🧡 போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰 🥰
 

STN-124

New member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
அசோகவனத்தில் ராமன்
நாயகி: ஆத்மிகா கண்ணபிரான்
நாயகன்: சித்தார்த்
நம்ம நாயகி பெரிய தொழில் அதிபர் கல்யாணம் காதல் இதுல எல்லாம் நோ இண்ட்ரஸ்ட் ஆனால் ஹார்மோன் ரியாக்ஷனுக்கு மதிப்பளித்து எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்னு ஆண்களை தேவைக்கு ஏற்ப பணம் கொடுத்து யூஸ் பண்ணிப்பாங்க இப்படி ஒரு கதையை எழுதுன எழுத்தாளர்க்கு வாழ்த்துக்கள் 💐 ❤ 🧡 ஏன்னா ஆண்கள்தான் ப்ளே பாயா இருக்கனுமா பொண்ணுங்களும் இருப்பாங்க அப்படி என்றாலும் எந்த இடத்திலும் முகம் சுழிக்கும் அளவு இல்லாமல் ஜாலியா படிக்கிற அளவு எழுதிய எழுத்தாளரின் கற்பனை🔥🔥🔥
கதைக்கு வருவோம் சித்து பையா செம்ம அழகன் வாழ்ந்து கெட்ட குடும்பம் இவன் அழகுத் மயங்கி லவ்ஸ்னு தாண்டி என்கிற நந்தினி சுத்துது
நம்ம தலைவி கம்பெனி கல்லாவுல கை வச்சு சித்தருக்கு உதவி பண்ண பட்சி வசமா சிக்கி கிச்சு இந்த சூழ்நிலையில் சித்துவ ஆத்மி பார்த்து அழகுத் மயங்கி ஒன் ஃபைட் ஸ்டார்ட் கேட்க மானம் தான் முக்கியம் அப்படினு சித் மறுப்பிங் எதிர்பாராத சிக்கலில் சித் தங்கச்சி பானு ஆத்மி கிட்ட சிக்க நம்ம சித் கற்பு ஆத்மியால் களவாடப்பட்டது சாரி இரண்டு பேரும் சேர்ந்து வாழ தளவாட இல்லை கன்னன் கழிஞ்சிங் அதுக்கப்புறம் இருக்கும் கதை விறுவிறுப்பாக நகர்கிறது 💕 💕 💕
தாய் கிழவி நீ எல்லாம் அரசியலுக்கு வர வேண்டி ஆள் நல்லா ஜாலியான கதை மா சூப்பர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥰 🥰 💐 ❤
அழகான விரிவான விமர்சனம். மிக்க நன்றிமா❤❤❤
 

STN-124

New member
#அசோகவனத்தில் ராமன்
#கதை விமர்சனம்

எப்போதுமே புலி தானே மானை வேட்டையாடி பார்த்து இருப்போம் இங்க ஒரு அழகான மான் சூழ்நிலை கைதியான புலியை வேட்டையாட விரும்புவதும் அதன் விளைவுகளும் நிகழ்வுகளும் தான் கதைக்களம்...

ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் ஒழுக்கம் முக்கியம். அதை அந்த அந்த நேரத்து நியாயம்னு என்னால சமரசம் செய்து கொள்ள முடியலை நீ தப்பு தான் ஆத்மி அந்த இடத்தில... ஆனாலும் அதை பெருசா நினைக்க வேண்டியவனே அவள் காதலை மட்டுமே பெருசா நினைக்கும் போது ஆத்மி யோட ஒழுக்கத்தை மற்றவர்கள் விமர்சிக்க முடியாது நினைக்கிறேன்...

இந்த கதையை நீங்க கொடுத்த விதம் 👏 சவாலான முயற்சி பாராட்டுக்குரியது...

காட்சிகள் முகம் சுளிக்கும் படி இல்லை ஆனால் ஆத்மி நிறைய இடத்தில எனக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தா🤨 நாம வளர்ந்த வாழுற சூழ்நிலை இதையெல்லாம் பார்க்க வைக்கல அப்படிப்பட்ட ஆண்களையும் அருவருப்பான தானே பார்ப்போம் அதனால வித்தியாசமா தான் தோணுச்சு...நிறைய எதார்த்தம் நிறைந்த கருத்துகளை உவமைகளா சொல்லி இருக்கீங்க அதெல்லாம் வாசிக்க நல்லா இருந்தது.

எனக்கு லீலாவதி கதாபாத்திரம் தான் ரொம்ப பிடிச்சிருக்கு.. அவங்க dialogue onnu

"நீங்க நினைக்கிறது எப்போதும் நானாக முடியாது.நான் நினைக்கிறது தான் நான்"👏👏இது போல நிறைய இடங்கள்👌... எனக்கு ஆத்மி சித்தார்த் விட லீலாவதி தான் அற்புதம் தோணுச்சு அருமையான கதாபாத்திர வடிவமைப்பு...

சித்தார்த் அம்மா கதாபாத்திரம் உயிரோட இல்லை கதையில ஆனா அவங்க தாக்கம் அதிகம் அருமை👏...

சிக்கலான கதைக்கரு அதில் பெண்ணியம் பேசி நியாயப்படுத்தாமல் அதை நீங்கள் இயல்பா நகர்த்தி கொண்டு போன விதம் அருமை உங்கள் எழுத்தின் முதிர்ச்சி தெரியுது 👏..

ஆனால் ஆத்மி போல சந்திரன் போல ஆணோ பெண்ணோ நிச்சயம் அப்படி மனம் போன திசையில் வாழ்வு வேணாம் அழகல்ல.... நம்மளை தாழ்த்தி சொல்லும் போது கூட தலை நிமிர்ந்து தாங்கிக்க முடியும் தப்பு செய்ததால்..நாம் செய்த தவறோட விளைவு நம்மை சேர்ந்தவர்களையும் நிழலா தொடரும் அது பெரிய வேதனை அதுதான் இங்க ஆத்மிக்கான தண்டனையா பார்க்கிறேன்...ரைட்டர் சிஸ் உங்கள கண்டுபிடிச்சுட்டேன் நினைக்கிறேன்🤔.

வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 💐 💐
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக உன்னிப்பாக கவனித்து உள்வாஙகி விமர்சனம் பகிர்ந்திருக்கிறீர்கள். மிக்க நன்றிமா❤❤❤
 

STN-124

New member
அசோவனத்தில் ராமன் கதையும் வித்தியாசமானது தான். ஆண் தான் தனது விருப்பம் தன் உணர்வை தீர்த்து வேற ஒருவருடன் செல்வது கல்யாணத்தில் விருப்பம் இல்லாமல் இருப்பது என்று நடக்கும் ஆனால் இங்கு ஹீரோயின் அந்த வகையை சார்ந்தவள்.ஹீரோவை பார்த்ததும் பிடிக்க. சித்தார்த் வேற ஒருத்தி காதலிக்க அவள் ஹீரோயின் வேலை பார்க்க கையாடல் விசயமாக மாட்டும் ஒருநாள் வந்தால் கடன் எல்லாம் அடைத்து விடலாம் என்க அவன் இருக்கிற பணத்தை கொடுத்து மன்னிக்க சொல்ல காதலும் விலகி போகிறது. திரும்ப தங்கை தன் காதலனுக்கு பரிசாக ஹீரோயின் வாட்ச் கொடுக்க அந்த பிரச்சினையில் மாட்டி அவளுடன் இணையும் போது அவளுக்கு அவன் மேல் காதல் வர சித்தார்த் வெளியே வர தங்கை காதலன் பார்க்க பிரேக்கப் ஆக ஊட்டி போக அங்கே லீலா சித்தார்த் காதலிக்க தங்கை வேலைக்கு போக சித்தார்த் பாட்டி தான் அரண்மனை வைத்திருக்க . ஹீரோயின் அவன் நினைவாக குழந்தை பெற அவளும் வளர திரும்ப சந்திக்க தங்கை காதல் வெற்றி பெற உதவ சித்தார்த் ஹீரோயின் உறவு தெரிய வர அவள் வளர்ப்பு அவள் தந்தை எல்லாம் தெரிய சித்தார்த் அவளை பிடிக்க சில பிரச்சனைகள் வரும் தான். ஹீரோயின் காதல் சூப்பர் தான். ஹீரோ சூப்பர். மொத்தத்தில் கதையின் முடிவு சூப்பர். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
ஏற்கனவே பதிவிட்ட விமர்சனங்கள் பழைய சைட்டோடு சென்றுவிட்டனவே என்று வருந்தினேன் சிஸ். ஆனால் உங்களைப் போன்ற தீவிர வாசகர்கள் கதையை ஞாபகம் வைத்து மீண்டும் கருத்து பகிர்வது மிக உற்சாகமளிக்கிறது எனக்கு. மிக்க நன்றி சிஸ்❤❤❤
 

STN-124

New member
#அசோகவனத்தில்_ராமன்….

#கௌரிஸ்ரிவ்யூ…..

இந்த தலைப்பு தான் முதலில் கவர்ந்தது🥰🥰🥰🥰…..

அது என்ன அசோகவனத்தில் ராமன்???? Usually அதில் சீதை தானே சிறை இருந்தாங்க…இல்ல இல்ல சிறை வைக்க பட்டாங்க🤔🤔🤔🤔🤔….

இங்க என்னடா ராமனை சிறை வெச்சிட்டாங்களா🧐🧐🧐🧐🧐….

அப்ப தான் ஆன்டி ஹீரோயின் கதைன்னு இருந்தது….

பொதுவா எனக்கு ஆன்டி ஹீரோயின் கதை ரொம்பவே பிடிக்கும்…..

அதே போலவே இதும் ரொம்ப பிடிச்சது…..

விரசம் இல்லாம கதை சொன்ன விதம்👏👏👏👏👏👏

அழகான பெண்களுக்கு தான் பாதுகாப்பு இல்லாம இருக்குனு பார்த்தா…..

அழகான ஆண்களுக்கு….முக்கியமா ஒழுக்கத்தை உயிரா நினைக்கற ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்ல தான் போல 🤷🤷🤷🤷🤷

ஆத்மி கிட்ட நந்து பணத்தை எடுத்து, தப்பான கணக்கு காட்டி ஏமாத்தா நினைக்க…

அது ஆத்மிக்கு தெரிஞ்சிருது…..

நந்து பணத்தை எடுத்தர்கான காரணம் தன் காதலன் ஓட தங்கை கல்யாணத்துக்கு உதவ தான்….

அவளோ லவ்வா அப்படினா அதற்கு பதில் இல்ல தான்….

சித்துவின் அழகில், அது தனக்கே சொந்தம் ஆகனும்னு பேராசையில் தான் நந்து அவனை லவ் பண்றதை போல நடிக்கற…..

நந்து இப்படி தான் பணத்தை கொடுத்தான்னு சித்துக்கு தெரியாது…..

அப்பறம் அதை சொல்ல…. சித்துக்கு தோன்றின ஒரே விஷயம் அந்த பணத்தை எப்படியும் ஆத்மிகிட்ட கொடுத்தரனும்னு தான்…..

ஆன அதுக்குள்ள ஆத்மிக்கு நந்து ஓட திருட்டு தனம் தெரிய வந்து இருக்க….

எதர்ச்சிய சித்துவை பார்த்த ஆத்மி அவனை அடைய நினைக்க….அவன் மறுக்க….

அது மட்டும் இல்லாம, சித்துவின் குணமும் பிடித்து போகுது ஆத்மிக்கு…..

அது காதல் அப்படின்னு அவள் உணரும் முன்னே எல்லா அனர்த்தங்களும் நடந்து முடிய….

சித்துவும் காணாமல் போயிட்டான்….

இனி காதலை உணர்ந்த ஆத்மியின் நிலை?????

சித்து ஓட அப்பா ராஜ பரம்பரையை சேர்ந்தவர்….சித்து புதுசா போன இடமும் அரண்மனை தான்….

சித்து ஆத்மியின் காதலை உணர்வனா?????

இது தான் மீதி கதை…..

“இரட்டை ரோஜா” படத்தில், ஆண்கள் எல்லாம் பெண்கள் போலவும், பெண்கள் எல்லாம் ஆண்கள் போலவும் வரும்…..

அது போல…இங்க ஆத்மி ஆன்டி ஹீரோ பண்ற “எல்லா” வேலையும் தான் செய்யறா…..

ஆன இது புதுசா இருக்குன்னே 🤩🤩🤩🤩….

கதை நல்லா இருந்தது ரைட்டர் ஜி…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

புதுமைக்கு நீங்கள் வழங்கும் ஆதரவு அளப்பரியது சிஸ்❤ இது போன்ற ஆக்கப்பூர்வமான விமர்சனம் என்னை போன்றவர்களை மேலும் இதுபோல் வித்தியாசமாய் சிந்திக்க ஊக்கும். மிக்க நன்றி சிஸ்❤❤❤
 
#மகுடம்_சூட்டும்_காதல்…
#கௌரிஸ்ரிவ்யூ….

பொலிடிகல் ஸ்டோரி 🥰 🥰 🥰 🥰 🥰…..

விஸ்வநாதன் ஓட ரைட் ஹேன்ட் கர்ணா…..அவருக்கு CM சீட் மேல ஆசை…ஏன் வெறினே சொல்லலாம்….

அதுக்காக அவர் பண்ணாத தப்பே இல்ல….

இப்ப தலைவரா இருக்கற விருசாலி ஓட பெரியப்பாவை எப்படியும் தூக்கிட்டா….அந்த பதவி இவருக்குனு நினைச்சி காய் நகர்த்த…..

இவர் போட்ட சதி திட்டம் இவருக்கே சதி பண்ணிட்டு….

தொக்க விருசாலி கிட்ட மாட்டிக்கிட்டார்…..

விருசாலிக்கு கர்ணா மேல செம்ம லவ்….அவனை வெச்சி அவளை மடக்க நினைக்க…..

அவனுக்கே வாழ் நாள் செக் வெச்சிட்டா🔥🔥🔥🔥🔥…..

இதில் விஷ்வா….கோவம் ஆக….கர்ணா என்ன செய்தான்????

காதல் அவனுக்கு மகுடம் சூடியதா????

இல்ல விசுவாசம் வென்றதா????

இது தான் மீதி கதை…..

கர்ணா…பேருக்கு ஏத்த மாறி நல்லவன்….பட் சேர்ந்த இடம் தான் சரி இல்ல😒😒😒😒

அப்படின்னு சொல்ல தான் நினைச்சேன்….பட் இவனும் கெட்டவன் தான்😏😏😏😏….

தப்பான வேலை செய்யறவன் தான் கெட்டவன்னு இல்ல….

தனக்காக, தன் காதலுக்காக ஒருத்தி தன் சுயமரியாதையை கூட இழக்கற அளவுக்கு ஆன பெண்ணை…..

நீ முக்கியம் இல்ல…. என் அண்ணனும், அவன் கிட்ட நா காட்டற விசுவாசமும் தான் முக்கியம்னு சொல்ற எவனும் நல்லவன் இல்ல ரைட்😒😒😒😒😒…..

விஸ்வநாதன்….கர்ணா பெற்றோரை இழந்து நின்னப்பா தூக்கி வளர்த்துக்குகாக அவன் வாழ்க்கையையே வாழ விடாம பண்ண…..

அது இந்த லூசுக்கு சுத்தமா புரியல….

விருசாலி…..இவ தான் கதைக்கு ஹீரோ, ஹீரோயின் எல்லாம்….

அந்த லூசு பய கர்ணாவை காதலிக்கறதில் இருந்து, கல்யாணம், அவன் தவறும் இடத்தில் எல்லாம் அவனை தாங்கி நின்று….

இவள் செய்தது எல்லாம்🫰🫰🫰🫰🫰

ஆன கர்ணா அப்படி பேசியும் இவனை மன்னிச்சது 😳😳😳😳😳…..

சரி அவளே மன்னிக்கும் போது நமக்கு என்ன😒😒😒😒…..

அர்ஜுன் - சுபா….இவங்க காதலும் நல்லா இருந்தது……

கதை களம் ரொம்ப சூப்பர்….விறுவிறுப்பா போச்சி…..

பட் குட்டியா இருக்கு கதை…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

E%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.481/
ரொம்ப நன்றி சிஸ்டர்..
 

STN - 94

Member
Staff member
Nithani Prabu அவர்களின் தளத்தில் நடக்கும் செந்தூரம் போட்டிக்கதைகள்
#STN_94
"பாவையின்றி பார்வையில்லை"
ரிஷிவர்மன்.. குயில் ஓசை எஃப் எம் யில் ஆர் ஜே வாக இருக்கிறான். இவன் குரலிலும் இவன் கொடுக்கும் மோட்டிவேஷன் ஸ்பீச்சிலும் மயங்கி பாக்காமலே இவன் மீது காதல் கொள்கிறாள் நிருஷிகா.
தாய் மைதிலியின் மேல் கோபத்தில் இருக்கிறாள். தந்தையின் இறப்பிற்கு பிறகு தாயின் பாசம் அனைத்தும் இவளுக்கே கிடைக்க இவள் பத்தாவது படிக்கும் போது அன்னையின் இரண்டாவது திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை இவளால். அன்னையின் கணவனான தேவராஜன் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறாள் அத்துடன் அன்னையையும் வெறுக்கிறாள். மைதிலிக்கு புவன் புவனா என இரட்டை குழந்தைகளும் பிறக்கிறது அவர்களை நிரு தன் சகோதர சகோதரியாக ஏற்றுக் கொண்டாளா என்பது அவளுக்கே வெளிச்சம். தன் தனிமையான நேரங்களில் காதில் ஒலித்த குரலுக்கு சொந்தமானவனை தேடி செல்கிறாள் நிருஷி ஆனால் அவளை சந்திக்க மறுக்கிறான் ரிஷி. பெரும் போராட்டத்திற்கு பிறகு ரிஷியின் நண்பன் கதிர்மாறனின் துணையுடன் ரிஷியை சந்திப்பவள் அவள் காதலை கூறுகிறாள். பார்வை இல்லாமல் இருக்கும் ரிஷி அதை ஏற்க மறுக்கிறான் ஆனால் பின்னாளில் அவன் மனது மாறுகிறது. ரிஷியின் பார்வை போனதற்கான ஃப்ளாஷ் பேக் மற்றும் மைதிலி தேவராஜன் காதல் பிளாஷ் பேக் அனைத்தும் அருமை.
கதிர்மாறனின் முடிவு ஏற்றுக் கொள்ள முடியவில்லை இவன் நண்பன் மேல் வைத்திருந்த பாசம் வேற லெவல் 👏
அஸ்வின் சிறிது நேரமே வந்தாலும் அருமையான கதாபாத்திரம் 🥰
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰
Good luck 🥰🌹
Thank you so much sis 🙏🙏🙏🙏 yarum namma storyku review podalanu pathtu irundhen. Unga review parthadhum happy :love::love::love::love: you made my day
 
Top Bottom