செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
#தாமரை_இலையுள்_உறை_தண்ணீராய்.,..
#கௌரிஸ்ரிவ்யூ…..
அழுத்தமான கதைகளம்……
தமிழ்செல்வன் போலீஸ் ஆபீசர்🔥🔥🔥🔥🔥🔥…..
ரொம்ப வருஷமா பெண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றுவது, சிறு பெண்களை கடத்தி அவர்களின் அனுமதி இல்லாமல் **** செய்ய வைக்கும் கும்பலை தகுந்த ஆதாரத்தோடு பிடிக்க தன் தங்கை அரசியை அந்த கும்பலிடம் அனுப்ப……
அவளும் அண்ணனுக்கு ஏற்ற தங்கையா ஆதாரம் திரட்டி, அக்கயவர்களை பிடிக்க போன இடத்தில் நிலாவை பார்க்கிறான்…..
அவளும் அந்த நரகத்தில் இருந்து விடுபட…..தற்*கொலை செய்ய போக…..
அவளையும் அவர்களோடு மீட்டு….நிலா, அவள் தோழி சூர்யா & அவ தம்பி கார்த்தி மூவரையும் மருத்துவனையில் சேர்த்துட்டு…..
மீதி பெண்களை தமிழ் அம்மா நடத்தும் காப்பகத்தில் சேர்க்கறாங்க……
எப்படியோ பிழைத்த நிலாவும்…..ரொம்ப violent ஆகி மறுபடியும் முயற்சி பண்ண…..
அதுவும் தமிழால் தகர்க்க படுது…..
இப்படி இருப்பவளை தனியே விட பயந்து, அவன் வீட்டுக்கே கூட்டி போக…..
அங்கே அவளுக்கோ பேரதிர்ச்சி காத்திருக்கு…..
யாரை இவ்வுலகில் அதிகம் வெறுக்கிறாளோ, யாரால் அவ வாழ்க்கை இப்படி ஆனதோ அவர் அந்த வீட்டில் இருந்தால்?????
அவளின் நிலை?????
யார் அந்த நபர்?????
எப்படி இப்படி பட்ட இடத்தில் வந்து மாட்டினா?????
இனி அவ வாழ்க்கை????
அது தான் மீதி கதை……
நிலா…..இவளுக்கு இழக்கப்பட்டது எல்லாமே அநீதி தான்…..அம்மாவில் ஆரம்பிச்சு, அப்பா, அத்தை, மாமா எல்லாருமே தான்…..
இப்படி இத்தனை உறவுகள் இருந்தும் அவளை இப்படி விட்டிகளே….
அது தான் செம்ம காண்டு ஆகும்…..
அதும் இவங்க அம்மா😬😬😬😬😬😬😬…..
தமிழ்…இவன் தான் கொஞ்சம் சுத்தம் அவன் குடும்பத்தில்….. நிலாக்காக பார்த்து பார்த்து செய்வது cute 🥰 🥰 🥰 🥰……
சிவநேசன் & தெய்வா….. நேசன் ஒரு கலெக்டர்…ஆன அந்த பதவி இருந்தும் அவர் ஒன்னும் பண்ணலை🤷🤷🤷🤷🤷🤷…..
தெய்வா….இவங்க ஒரு தெய்வ தாய்…..இவங்க நியாயம் எல்லாம் வேற ரகம்…..
சொந்த தம்பி வாழ்க்கை எப்படி போனாலும்….இவங்களுக்கு ஒரு உயிரை காப்பாத்தனும்…அதும் எப்படி பட்ட உயிர் தெரியுமா….கணவன் & பிள்ளைனு விட்டு போய்….கண்ட படி ஆடிட்டு இன்னொரு பிள்ளையையும் பெத்துட்டு வரும் மாதரசியை 😏😏😏😏😏…..
அதுசரி….தம்பி வாழ்க்கை தானே…. அப்ப தானம் பண்ணுனு ஈசியா சொல்ல வரும்….இதே இவங்களுக்கு இப்படி ஒரு நிலை வந்தா அப்படி தான் இருப்பாங்களா?????
போதிய வரை இதை திட்டியதால்….அடுத்த கேரக்டர் போலாம்……
பூமா….அந்த மாதரசி இவங்க தான்…..சோ🤬🤬🤬🤬🤬🤬
சீதா…..எல்லா ப்ராப்ளம்கும் பெரிய பிள்ளையார் சுழி போட்ட மேதாவி இவங்க தான்…..தியாக செம்மல்😬😬😬😬😬
அப்படின்னு அவங்களே நினைச்சிட்டு பெத்த பெண் வாழ்க்கையை பாழ் பண்ணினத்தில் முக்கிய culprit இவங்க தான்……
இன்னும் சில கேரக்டர்ஸ் …..அவங்களுக்கு திட்றது…. ரெஸ்ட் in ஹிஸ்டரி 🤭🤭🤭🤭🤭…..
சுனிதா….எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர்….உங்களுக்கும் பிடிக்கும்னு தோணுது…..ஏன்னா…நம்ம மைண்ட் வாய்ஸ் அப்படியே அம்மணி பேசுவாங்க🫰❤❤❤❤சோ ஸ்வீட்…..
சூர்யா….அடுத்து இவளை தான் பிடிச்சது🫰🫰🫰🫰🫰…..செம்ம வில் பவர்❤❤❤❤❤❤
கதை நல்ல விறுவிறுப்பா, பரபரப்பா இருந்தது….எனக்கும் ரொம்பவே பிடிச்சது ❤ ❤ ❤ ❤ ❤ ❤
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐
லிங்க்👇👇👇👇👇
Thank you so much sis.🫂💝💖😍🥰♥️
கதையோட ஒவ்வொரு கேரக்டரை பத்தியும் என்ன ஃபீல் பண்ணிங்களோ அதை அப்படியே விமர்சனத்துல பிரதிபலிச்சு இருக்கீங்க.. ரொம்ப நன்றி டியர்♥️🥰😍💖 அழகான விரிவான விமர்சனம்.. நிலா ஒவ்வொருத்தரையும் எப்படி பார்த்தாளோ அதே போல பார்த்திருக்கீங்க.. அதில் ரொம்பவுமே மகிழ்ச்சி..நன்றி சிஸ்🥰😍🙏
 
  • Love
Reactions: Gowri Karthikeyan

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
370
83
Chennai
Thank you so much sis.🫂💝💖😍🥰♥
கதையோட ஒவ்வொரு கேரக்டரை பத்தியும் என்ன ஃபீல் பண்ணிங்களோ அதை அப்படியே விமர்சனத்துல பிரதிபலிச்சு இருக்கீங்க.. ரொம்ப நன்றி டியர்♥🥰😍💖 அழகான விரிவான விமர்சனம்.. நிலா ஒவ்வொருத்தரையும் எப்படி பார்த்தாளோ அதே போல பார்த்திருக்கீங்க.. அதில் ரொம்பவுமே மகிழ்ச்சி..நன்றி சிஸ்🥰😍🙏
Aww thanks sis ❤️
 
  • Love
Reactions: STN - 72

STN - 77

Member
Jun 4, 2026
23
51
13
#தழலை_அணைக்கும்_அமுதமே….
#கௌரிஸ்ரிவ்யூ…..
பீல் குட் ஸ்டோரி🤩🤩🤩🤩🤩…..
ஆத்யா ஷாலினி….சின்ன வயசில் பெற்றோர் இழந்து அவளோட சித்தி & சித்தப்பா வீட்டில் வளரா….
சித்திக்கு ரெண்டு பெண் பிள்ளைகள் இருக்காங்க….அவங்க மேல தான் அதிக பாசம்….
அதுக்குன்னு அவளை கொடுமை படுத்துவங்கனு இல்ல….ஏனோ அவளுக்கு இது தன் வீடு இல்ல….
அதிக சிரமம் கொடுக்க கூடாதுனு scholarshipலையே படிக்கிற…..
சித்தாப்பாக்கு நல்ல பாசம் இவ மேல….
இன்னும் மேல் படிப்பு படிச்சா….இன்னும் நல்ல வேலையில் இருக்கலாம்னு போன இடம் தான் சாகர் ஓட காலேஜ்…..
அவள் தங்கும் இடமும், scholarship லா கேட்க…..சாகர் ஓட அப்பாவும் அவளுக்கு கொடுக்கலாம்னு சொல்ல….
அவள் பெயரை பார்த்துமே வேணாம்னு சொல்லிட்டான்…..
இதனால் வீட்டில் போய் சொல்லிட்டு, அவ பிரெண்ட் மூலம் வேலைக்கு வந்த வீடும் அவன் வீடே🤭🤭🤭🤭🤭…..
அங்க அவ நிலை என்ன????
சாகருக்கு ஆதியை முன்னாடியே தெரியுமா?????
இடம் கொடுக்க மறுக்க காரணம் என்ன?????
இது தான் மீதி கதை…..
சாகர்….முறைச்சிட்டே சுத்தினாலும்…..இவன் லவ் தனி ரகம்….நல்ல இருந்தது 😁😁😁😁…..
அக்கறையை கூட அரட்டி தான் சொல்லுவான்🤭🤭🤭🤭….
ஆதி….அவனை பார்க்கும் போது எல்லாம் பம்மிட்டு எப்படி டா அவனையே லவ் பண்ணின🤩🤩🤩🤩🤩…..
ஆன உன் அறிவை கண்டு நா வியக்கேன்🤣🤣🤣🤣🤣…..
ஆதி, சரத் & சரண் friendship நல்லா இருந்தது ❤ ❤ ❤ ❤ ❤ ❤
குட்டி கதை தான் பட் cute 🥰 🥰 🥰 🥰 🥰 🥰
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐
லிங்க்👇👇👇👇👇
5%E0%AE%AE%E0%AF%87.416/
அருமையான விமர்சனம் ரொம்ப நன்றி மா 😍😍😍😍😍🥰
 
  • Love
Reactions: Gowri Karthikeyan

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
227
264
63
Hyderabad
STN-72
தாமரை இலையுள் உறை தண்ணீராய்

கதை ஆரம்பமே கதாநாயகன் அதிரடி எண்ட்ரி...தன் சொந்த தங்கையையே துருப்பு சீட்டாக்கி, சிகப்பு விளக்கு பகுதி காமூகர்களை வளைத்து பிடித்து, அங்கு சிறைப்பட்டிருக்கும் பெண்களை மீட்கும் Action Hero தமிழ்செல்வன் .
அங்கு தன் வாழ்வை வெறுத்து, தற்கொலைக்கு முயற்சிக்கும் நிலாவை(நவ்யா)காப்பாற்றும் இடத்திலிருந்து, அவள் அப்போதைய பெரிய துன்பத்திலிருந்து மட்டுமல்லாமல் அவளை எப்போதுமே பாதுகாத்து விட மாட்டானா என்பதே நம் (வாசகர்களின்)வேண்டுதலாக இருக்கும்.
ரைட்டர் அதில் ஏமாற்றாமல் ஆறுதல் அளித்தார்.தமிழ்-நிலா ஜோடி அருமை.❤️❤️ஆனால் கூடவே சுனிதாவின் அறிமுகம்.Little confusion.அரசி,சுனிதா(துடுக்குதனமான பேச்சு,செய்கைகள்),சூர்யா (வீர மங்கை-
.அழகனையே எதிர்த்த விதம் அருமை)மூவருமே எனக்கு பிடித்த characters.
மருத்துவராய் அரசி மற்றும் சுனிதாவின் சேவை,பாராட்டுக்கூரியது.
சீதா-பூமா என்னவொரு contrasting sister characters.அவள் தெற்கு இவள் வடக்கு.
சீதா இப்படி ஓவர் நல்லவளா இருக்க வேண்டாம்.அவள் நல்ல குணத்தால் அவள் மட்டுமல்லாமல்,அவள் மகள் நிலாவுக்கும் எத்தனை பெரிய துயரமும்,அநீதியும் நடந்து விட்டது.!!
பூமா இப்படி ஓவர் கெட்டவளாக மாறியிருக்க வேண்டாம்.பேராராராராசை திலகம்.பொய்யின் பின் சென்று,நல்வாழ்க்கை இழந்து திரும்பி வந்த அவள் ,தெய்வானை குடைக்குள் இருந்ததால் தான் அவள் வரை உருப்பட்டாள். சிந்துஜா பரவாயில்லை ,ஆனால் பண்பில் மட்டம் தான்.ரியா அதுவும் இல்லை.சீதாவின் சீரழிவுக்கு பூமா காரணமென்றால், நிலாவிற்கு ரியா.சரித்திரம் திரும்பியது.நல்லவை நடப்பபதில்லை .தீயவை தவறாமல் நடைபெறுகின்றன.
தமிழ் தன் காதலில் நின்று,நிலாவை விடாமல் கைபிடித்தது மனதில் நிற்கிறது.நிலா பாவம் எத்தனை கொடுமைகளை அனுபவித்து விட்டாள்.ஒட்டாமல் /பிடிப்பில்லாமல் வாழ நினைத்தவளை, அன்பு வழி காட்டி,வழி நடத்தி, தன் பிடிக்குள் கொண்டு வந்த தமிழ் அவளை வாழ வைப்பான்.(story title justified)
IAS,IPS குடும்பத்தை சேர்ந்தவர்கே இந்த நிலைமை என்றால், சமூகத்தில் மற்றவர் நிலைமையை நினைத்தால்,பயம் ஏற்படுகிறது.
ஆனால் அப்படிப்பட்ட நிலைமைக்கு சென்றவரையும், இரு கரம் நீட்டி, பரந்த மனப்பான்மையுடன் அரவணைத்தது அந்த IAS,IPS குடும்பம் தான் என்பதை பார்க்கும் போது a big 🫡 to that family.
நிலாவின் தந்தை அவளுக்கு கடைசி காலத்திலாவது அவர் வரை நியாயம் செய்ததது பாராட்டுக்கூரியது.
Story was very thrilling n good..😍😍
 
  • Love
Reactions: STN - 72

STN - 72

Active member
Staff member
Jan 20, 2026
137
164
43
Chennai
STN-72
தாமரை இலையுள் உறை தண்ணீராய்

கதை ஆரம்பமே கதாநாயகன் அதிரடி எண்ட்ரி...தன் சொந்த தங்கையையே துருப்பு சீட்டாக்கி, சிகப்பு விளக்கு பகுதி காமூகர்களை வளைத்து பிடித்து, அங்கு சிறைப்பட்டிருக்கும் பெண்களை மீட்கும் Action Hero தமிழ்செல்வன் .
அங்கு தன் வாழ்வை வெறுத்து, தற்கொலைக்கு முயற்சிக்கும் நிலாவை(நவ்யா)காப்பாற்றும் இடத்திலிருந்து, அவள் அப்போதைய பெரிய துன்பத்திலிருந்து மட்டுமல்லாமல் அவளை எப்போதுமே பாதுகாத்து விட மாட்டானா என்பதே நம் (வாசகர்களின்)வேண்டுதலாக இருக்கும்.
ரைட்டர் அதில் ஏமாற்றாமல் ஆறுதல் அளித்தார்.தமிழ்-நிலா ஜோடி அருமை.❤❤ஆனால் கூடவே சுனிதாவின் அறிமுகம்.Little confusion.அரசி,சுனிதா(துடுக்குதனமான பேச்சு,செய்கைகள்),சூர்யா (வீர மங்கை-
.அழகனையே எதிர்த்த விதம் அருமை)மூவருமே எனக்கு பிடித்த characters.
மருத்துவராய் அரசி மற்றும் சுனிதாவின் சேவை,பாராட்டுக்கூரியது.
சீதா-பூமா என்னவொரு contrasting sister characters.அவள் தெற்கு இவள் வடக்கு.
சீதா இப்படி ஓவர் நல்லவளா இருக்க வேண்டாம்.அவள் நல்ல குணத்தால் அவள் மட்டுமல்லாமல்,அவள் மகள் நிலாவுக்கும் எத்தனை பெரிய துயரமும்,அநீதியும் நடந்து விட்டது.!!
பூமா இப்படி ஓவர் கெட்டவளாக மாறியிருக்க வேண்டாம்.பேராராராராசை திலகம்.பொய்யின் பின் சென்று,நல்வாழ்க்கை இழந்து திரும்பி வந்த அவள் ,தெய்வானை குடைக்குள் இருந்ததால் தான் அவள் வரை உருப்பட்டாள். சிந்துஜா பரவாயில்லை ,ஆனால் பண்பில் மட்டம் தான்.ரியா அதுவும் இல்லை.சீதாவின் சீரழிவுக்கு பூமா காரணமென்றால், நிலாவிற்கு ரியா.சரித்திரம் திரும்பியது.நல்லவை நடப்பபதில்லை .தீயவை தவறாமல் நடைபெறுகின்றன.
தமிழ் தன் காதலில் நின்று,நிலாவை விடாமல் கைபிடித்தது மனதில் நிற்கிறது.நிலா பாவம் எத்தனை கொடுமைகளை அனுபவித்து விட்டாள்.ஒட்டாமல் /பிடிப்பில்லாமல் வாழ நினைத்தவளை, அன்பு வழி காட்டி,வழி நடத்தி, தன் பிடிக்குள் கொண்டு வந்த தமிழ் அவளை வாழ வைப்பான்.(story title justified)
IAS,IPS குடும்பத்தை சேர்ந்தவர்கே இந்த நிலைமை என்றால், சமூகத்தில் மற்றவர் நிலைமையை நினைத்தால்,பயம் ஏற்படுகிறது.
ஆனால் அப்படிப்பட்ட நிலைமைக்கு சென்றவரையும், இரு கரம் நீட்டி, பரந்த மனப்பான்மையுடன் அரவணைத்தது அந்த IAS,IPS குடும்பம் தான் என்பதை பார்க்கும் போது a big 🫡 to that family.
நிலாவின் தந்தை அவளுக்கு கடைசி காலத்திலாவது அவர் வரை நியாயம் செய்ததது பாராட்டுக்கூரியது.
Story was very thrilling n good..😍😍
அழகான விமர்சனம்.. எந்த கதாப்பாத்திரத்தையும் விட்டு விடாமல் ஒவ்வொருவரை பற்றியும் குறிப்பிட்டு ஒரு முழுமையான விமர்சனத்தை அளித்ததற்கு ரொம்ப நன்றி தங்கமே 🥰😍

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாட்டி கொடுமை அனுபவித்து திரும்ப வந்த ஒருவரை தன் குடும்பத்து நபராகவே அவர் இருந்தாலும் மீண்டும் தன் குடும்பத்தில் ஒருவராய் ஏற்பது என்பது இன்றைய சமூகத்திலும் கூட அபூர்வம் தான். அவர்கள் ஏற்கனவே அனுபவித்தக் கொடுமைக்கு மேலாக அவர்களை வார்த்தைகளாலேயே கொன்று புதைக்கும் மனிதர்களின் பிரதிபலிப்பாய் கதையில் நடமாடும் கதாப்பாத்திரங்கள் தான் ரியா சிந்து மற்றும் அழகன். 😥

மற்றபடி இந்த மூவரையும் பூமாவையும் தவிர அந்த குடும்ப நபர்களும் சுனிதாவும் ஒரு நல்ல சமூக மாற்றத்துக்கான எதிர்ப்பார்ப்புகள். அவ்வளவே..

தொடர்ந்து எல்லா அத்தியாயங்களுக்கும் கருத்திட்டு உங்கள் விரிவான விமர்சனத்தையும் அளித்ததற்கு அன்பு கலந்த நன்றிகள் கண்மணி😍🥰🤩🙏♥️
 
  • Like
Reactions: Gaya Naga

suji

Member
Aug 29, 2021
30
25
18
germany
#நிலவின் அக ஒலி
ஆரம்பம்மே அதிரடி கலாட்டா பண்ணும் ஆரன் மற்றும் மதுரன் காம்போ. இவர்கள் வர இடம் சீரியசான investigation வேலையிலும் இந்த காம்போ பண்ணும் அட்டிராசிட்டி சிரிப்புக்கு பஞ்சமில்லை.அழகாக அந்த investigation knots one by one revealed at the end.

ஆரனோட அம்மா chance illai ஆரனோட குறும்பு அவங்க அம்மாகிட்ட இருந்து inherit பண்ணி இருக்கார்.

குருதேவ் & செல்வகுமார் மாதிரி மனிதர்களை என்ன சொல்ல தெரியவில்லை.

மதுரனும் so sweet அந்த குற்றவாளியோடு இருக்கும் போது இவன் ஆரனை கால் பண்ணி புலம்பும் இடமும் அதற்க்கு ஆரனின் counter dialog செம்ம. இந்த அதிரடி ஆரனின் காதலும் அழகு.அவனின் நிலா முழிச்சமாதிரி நாமலும் இவனின் சேட்டையில் முழி பிதுங்குவது அழகு . Thoroughly enjoyed fun-filled package.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழியே .

Sujatha Karthikeyan
 
  • Love
Reactions: ஷமீம்

STN - 78

Member
Staff member
May 5, 2026
37
10
8
Canada
#என்_மன்னவன்_நீ_தானோ…
#கௌரிஸ்ரிவ்யூ…..

இதுவும் இலங்கை தமிழ் லவ் ஸ்டோரி தான்🥰🥰🥰🥰🥰….

சௌமி அவ பெரியம்மா வீட்டில் இருந்து காலேஜ் போக வரா…..

பெரியம்மா ஓட பிரெண்ட் பத்மா ஓட பையன் தான் அகிலன்….

அவனும் அதே யுனிவர்சிட்டிலா தான் லா ப்ரொப்ச்சரா இருக்கான்…..

கூடவே அடிப்படை சட்டம் பத்தி மக்கள் கிட்ட கொண்டு போய் கத்து கொடுக்கறது தான் அவன் வேலை…..

சௌமிக்கு அவனை பார்த்தும் பிடிச்சி போயிருது….

அவனோட kind behaviour பார்த்து லவ் பண்ணவும் ஆரமிச்சிரா…..

பட் அகிலனுக்கு அந்த மாறி எந்த நினைப்பும் இல்ல….

இவளும் அவன் கிட்ட காதலை சொல்ல….அவன் திட்டவட்டமா மறுக்க….

அதில் அவ தன்மானமும் சீண்ட பட….எப்படியோ ஒரு வழியா கல்யாணமும் பண்ணிக்கரா….

அகிலனுக்கு அவளில் சில கோபங்கள்…..

அது எல்லாம் தீர்ந்ததா?????

அகிலனுக்கு காதல் வந்ததா?????

இது தான் மீதி கதை….

அகிலன்….பொறுப்பான பையன்….முக்கியமா அழகான பையன்🥰🥰🥰🥰…ஆண்கள் அழகா இருந்தா கூட ஆபத்து தான் போல….

காதல், அன்புன்னு இவனை போட்டு நெருக்க தான் செய்தாங்க 🤷🤷🤷🤷

சௌமி…..அவனை காதலிக்கர வரை சரி தான்….ஆனா நீ நினைக்கற மாறி அவனும் காதலிக்கணும்னு நினைச்ச பாரு அது ரொம்ப தப்பு…..

அவன் அடிச்சது தப்பு….அதை பண்ண காரணமா இருந்த உன் செயல்???? அது சரியா???

கல்யாணம் ஆகார வரை இருந்த உன் லவ்…அப்பறம் எங்க போச்சினே தெரியல….

ஏதோ ஆசை பட்ட பொருளை அடைந்த திருப்தி தான் இருந்தது….

உன் காதலால் அவனை மாத்துவேன்னு சொன்ன….

அதை நீ செய்தாய்யா ????

அது மட்டும் இல்லாம….நீ பண்ண வேலைக்கு அவன் கோவப்பட்ட….அவனை பார்த்து பயந்து வருதா உனக்கு?????

ஏனோ இவ கேரக்டர் இப்படி தான் மனசில் இருக்கு🤷🤷🤷🤷🤷…..

சின்ன கதை தான் நல்ல இருக்கு…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

%AE%A8%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B.417/
எனது கதையை வாசித்து, அதற்கு மிகவும் அருமையான விமர்சனத்தை தந்து என்னை உற்சாகப்படுத்தியதற்கு மிகவும் நன்றியம்மா...
 
  • Love
Reactions: Gowri Karthikeyan

zeenath Sabeeha

New member
Aug 23, 2025
13
5
3
Chennai
Nithani Prabu அவர்களின் தளத்தில் நடக்கும் செந்தூரம் போட்டிக்கதைகள்
#STN24
நிழலை கடந்த காதல்
பரத்.. சசி இருவரும் நண்பர்கள்..
இவர்களின் பாண்டிங் வெகு அழகாக இருந்தது 🥰
நண்பனின் மனைவியை தன் உடன் பிறவா சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவளுக்கு அனைத்தையும் பார்த்து பார்த்து செய்கிறான் பரத்.
அவனுக்கும் ஒருதலையாக ஒரு காதல்.
மனதில் உள்ள காதலை உரியவளிடம் சேர்க்காமல் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமே இன்பமாக அவள் பயணிக்கும் அதே ரயிலில் பயணிக்கிறான் பரத். அவளுக்கு நான்கு வயதில் மகன் இருப்பதை பார்த்தவனின் மனது வேதனையில் துடித்து கண்ணீர் சிந்துகிறது கண்கள். 😔 வலியுடன் சுற்றுபவன் பின் தன் காதலியின் நிலை அறிந்து அவளுக்கு உதவுவதும் இவனின் காத்திருக்கும் அருமை 🥰👏
பிரியா.. துணிச்சல் ஆனவள். தருணின் மீது இவள் கொண்டுள்ள பாசம் அழகு 🥰
விக்ரமும் அவன் குடும்பமும் கோபத்தை தான் வர வைக்கின்றன 😡
நிறைய நல்ல கதாபாத்திரங்கள் கதையில் உலாவுகின்றது.
சசி மற்றும் ரேகாவின் காதலும் அவர்களின் குழந்தையும் குழந்தை பிறந்த நேரத்தில் கணவனும் மனைவியும் பிரிந்திருக்கும் போது அவர்களுக்கு ஏற்படும் தவிப்பும் அழகாக சொல்லப்பட்டது 🥰
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰
Good luck 🥰❤️
 

zeenath Sabeeha

New member
Aug 23, 2025
13
5
3
Chennai
Nithani Prabu அவர்களின் தளத்தில் நடக்கும் செந்தூரம் போட்டிக்கதைகள்
#STN_35
"என்னோடுதான் கண்ணாமூச்சி"
பிரணிதா.. தலைப்புக்கு ஏற்றவாறு அவளோடு அவள் ஆடும் கண்ணாமூச்சி தான் கதை.
மதுரையில் அம்மாச்சி மற்றும் மாமனின் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறாள் பிரணிதா. மகிழ்வுடன் வாழ்ந்து வந்தாலும் அவ்வப்போது அம்மாச்சியின் குத்தல் பேச்சு இவளை சில நேரங்களில் கலங்கடித்தாலும் பல நேரங்களில் அதை கண்டு கொள்ளாமல் செல்கிறாள். இவளுக்கு எப்போதும் சப்போர்ட்டாக இருக்கிறான் மாமன் மகன் பத்தாம் வகுப்பு படிக்கும் ஆகாஷ் 🥰
வேலை செய்யும் நிறுவனம் இவளுக்கு கோயம்புத்தூருக்கு மாற்றல் கொடுக்கிறது அந்த ஊரை நினைத்ததுமே நடுங்கி வருகிறது இவளுக்கு. அங்கு செல்ல கொஞ்சமும் விருப்பமில்லை கோவை என்றதுமே ஒருவனின் முகம் தான் இவள் மனக்கண் முன் வந்து செல்கிறது அத்துடன் வேண்டாத பல நினைவுகளும் சில உறவுகளும். அது என்ன..? ஏன் கோவைக்கு செல்ல மருகுகிறாள் என்பது அனைத்தும் கதையில்.
ராகவன்... சிறுவயதிலிருந்தே மாமன் மகள் பிரணிதாவின் மீது பாசம் கொண்டுள்ளவன். பிறகு அது காதலாகவும் மாறுகிறது. அனைவரிடமும் முரண்டு பிடிக்கும் இவளின் பிடிவாதம் அவனிடம் மட்டும் செல்லுபடி ஆவதில்லை அவளுக்கு மேலாக முரண்டு பிடித்து அவளை தன் வழிக்கு கொண்டு வந்து விடுவான். அப்படித்தான் பெற்ற தாயையும் உயிராக இவளை நினைக்கும் தந்தையையும் விட்டு தாய் மாமனோடு வசிக்கிறாள். வேலையின் காரணமாக தங்கள் ஊருக்கு வருபவளை ஒரே அமுக்காக அமுக்கி திருமணம் செய்து கொள்கிறான் அத்துடன் உறவுகளுடன் இணைத்தும் விடுகிறான். ராகவன். இடையில், ஹாஸ்டலில் தங்கும் இவள் உடன் தங்கும் பெண்ணின் மரணத்தால் சிக்கலில் மாட்டிக் கொள்கிறாள். அதிலிருந்தும் எப்படி வெளிவந்தாள் என்பது கதை.
மாணிக்கம், பூவரசன், பூர்வா, துரைமுருகன், திலகவதி என அருமையான கதாபாத்திரங்கள் 🥰
ராகவனின் யுகா என்ற அழைப்பும் பிரணிதாவின் ராகவா என்று அழைப்பும் அழகு 🥰❤️
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️
Good luck 🥰❤️