• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தகிக்காதே குளிர்நிலவே...!(22)

STN46

New member
அத்தியாயம் -22

தூக்கம் வராமல் அறைக்குள்ளேயே நடந்து கொண்டிருந்த நந்தினி சலிப்புடன் கீழே இறங்கி வந்தாள்.

இரவு நேர மதியின் வெளிச்சத்தில் இதமான காற்று அவளது மேனியை தழுவிச் சென்றது.

துப்பட்டாவை தோளைப் சுற்றி போட்டுக் கொண்டு சற்று தொலைவிலிருந்த முல்லை பந்தலுக்கடியில் போடப்பட்டிருந்த கல்மேசையில் அமர்ந்தாள்.

அவளது யோசனைகள் எங்கெங்கோ பயணித்து கடைசியாக அருண்மொழியிடம் வந்து நின்றது.

கோடிக்கணக்கான சொத்துக்களை ஆள்வதற்கு தகுதியிருந்தும் தந்தையும் பாட்டனும் சேர்த்து வைத்த சொத்தை உரிமை கொண்டாடாமல் சாதாரண வாழ்க்கையை வாழப் பழகி , ராஜ பரம்பரையை சார்ந்தவன் என எந்த இடத்திலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எதார்த்தமாக இருந்த அருண்மொழி அவளது கண்முன்னே வந்து போனான்.

முன்பு தவறென்று தோன்றியதெல்லாம் இப்போது ஆச்சர்யமாக தோன்றியது.

திரையரங்கத்தில் சட்டையை கழட்டி விட்டு விசிலடித்து நடனம் ஆடியதும், நண்பனின் காதலுக்காக அடி வாங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதும் , போதை மயக்கத்தில் சுயநினைவு இல்லாத தன்னை மகிழுந்தில் ஏற்றிக் கொண்டு வந்து வீட்டில் விட்டதும் நினைவு கூர்ந்தவளுக்கு இதழோரம் மெல்லிய சிரிப்பை வரவழைத்தது.

சாதாரணமாக சிரித்தாளா? அல்லது ரசித்து சிரித்தாளா அவளுக்கே வெளிச்சம்.

அவனின் பழைய குறும்புடன் பேசும் விழிகளையும் , எப்போதும் துறுதுறுப்பாக ஏதாவது செய்து அவளிடம் திட்டு வாங்கும் அருண்மொழியையும் திரும்பவும் காணவே முடியாதா என்ற ஏக்கம் மனதில் படர்ந்து முகத்தை வாடச் செய்தது.

பாரதியின் விஷயம் நந்தினிக்கு இன்னும் முழுமையாக தெரியாததால் அவளது மனம் அலைப்பாயந்து கொண்டிருந்தது.

'உண்மையிலேயே பாரதியை திருமணம் செய்து கொண்டு விட்டானா?’ என்ற கேள்வி மூளையை அரித்துக் கொண்டிருந்தது‌.

'இதற்குதானே ஆசைப்பட்டாய்.. பிறகு ஏன் தவித்து மறுகுகிறாய்?’ என ஒரு புறம் மனம் வாதிட்ட போதும் மறுபுறம் பாரதியுடன் அருண்மொழி இணைந்து நடந்து வந்ததை ஏற்க முடியாமல் மனம் தவித்து தான் போனது.

“ ம்ம்ச்..என்ன இது…?” என மனதின் குழப்பத்தை எண்ணி முணுமுணுத்தவளருகே, ” எது என்னது?” என்றபடி வந்தமர்ந்தான் அருண்மொழி.

அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவன் பால் தாவி ஓடும் மனதினை கட்டுக்குள் வைக்க திணறி தான்‌ போனாள்.

அப்போது தான் ஒன்று அவளுக்கு உரைத்தது. தன்னை போலவே தான் இவனுக்கும்‌ உணர்வுகள் ஆர்ப்பரித்திருக்கும். இவன் மட்டும் எப்படி மனதினை கட்டுக்குள் வைத்திருந்தான்? என்ற கேள்வி மேலோங்கியது.

கேட்க நினைத்தவற்றையெல்லாம் உரிமையாக அவனிடம் கேட்கும்‌ நிலையில் அவளில்லையே …எனவே அமைதியாக இருந்தாள்.

“ ஹலோ..மேடம்…தூங்காம‌‌ இங்க வந்து என்ன ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்க.?” என்றவனின் குரலில் கேலி இருந்ததோ என்ற சந்தேகத்துடன் அவனைப் பார்த்தாள்.

அவனோ சாதாரணமாக தான் இருந்தான். .

“ புது இடம் தூக்கம் வரல…அதான் சும்மா இப்படியே கொஞ்ச நேரம் காலாற நடந்துட்டு வரலாம்னு…” என்றிழுத்தாள்.

“ உங்களுக்குன்னு கொடுத்திருக்குற இடத்துல இருங்க. தேவையில்லாம எல்லா இடத்துக்கும் வர்றதை இதோட நிறுத்திக்கோங்க..என்ன புரிஞ்சுதா?” என்றான் சற்றுக் கடுமையுடன்.

அவனது அழுத்தத்தில் சற்று மிரண்டு தான் போனாள்.

மலங்க மலங்க விழித்தவளை ஒரு பார்வை பார்த்தவன், “ ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி இறந்த போன தேவியோட ஆவி…இங்க தான் சுத்திட்டு இருக்குறதா சொன்னாங்க…சோ…பீ கேர் ஃபுல்…சீக்கிரம் போய்‌ தூங்குங்க” என்று கூறிக்கொண்டு இருக்கும்போதே, "அய்யோ..! பாம்பு…” என்று அலறியவள் அவனை தன் புறமாக இழுத்தாள் .

இருவரும் நிலைதடுமாறி புல் தரையில் விழுந்தனர்.

அருண்மொழியின் மீது நந்தினி விழுந்திருந்தாள்.

இருநாகங்கள் சீறிக்கொண்டு அவர்களை நோக்கி வர,” ஐய்யோ…! அருண்…” என்றவள் அவனோடு சேர்ந்து உருண்டாள்.

“பயமாயிருக்கு அருண்…” என்றவள் அவனோடு இன்னும் ஒன்றினாள்.

மெல்ல அவளை தன்னிடமிருந்து விலக்கிவிட்டு எழுந்து கொண்டான்.

அவனின் முதுகுபுறம் மறைந்து கொண்டவளுக்கோ உடல் நடுங்கத் தொடங்கியது.

கிட்டத்தட்ட ஆறடி நீளத்தில் இரு ராஜ நாகங்கள் சீறிக்கொண்டிருந்தன.

அவனது பரந்து விரிந்த முதுகில் முகத்தை வைத்து அழுத்திக் கொண்டே, “ பாம்பை ‌விரட்டுங்க..ப்ளீஸ்…! பாம்பு….பயமா இருக்கு…” என்று பயத்தில் உளறினாள்.

அருண்மொழி மெதுவாக அவளுடன் பின்னோக்கி நகர. நாகங்களும் அவர்களை நோக்கி மெல்ல ஊர்ந்தன.

ஒரு கணம் திகைத்தவன் நந்தினியின் துப்பட்டாவை பிடித்திழுத்து அதை வேறு திசையில் எறியவே நாகங்கள் இப்போது திசை மாறிச் சென்று விட்டன.

ஆறடி ஆண்மகனும் இரட்டை நாகங்களை கண்டு பதறி தான் போனான்.

யோசனையுடன் நின்றிருந்தவனின் தோளினைத் தொட்டாள் நந்தினி.

நீண்ட வருடங்களுக்கு பிறகு பெண்ணவளின் ஸ்பரிசம் அவனுள் அடங்கியிருந்த உணர்வுகளை தட்டியெழுப்பியது.

மெதுவாக அவள் புறம் திரும்பியவன் ,” சொல்லுங்க” என்றான்.

பதட்டத்தில் “ கொஞ்சம் கெஸ்ட் ஹவுஸ் வரைக்கும் வர்றீங்களா?” என்றாள் மொட்டையாக.

“ வாட்…?” என்றான் .

“ இல்ல…அது வந்து…தனியா போக பயமாயிருக்கு..அதான் கூட துணைக்கு…” என்றபடி அவனது முகத்தை பார்த்தாள்.

“ எதையும் தெளிவா சொல்ல மாட்டீங்களா? எனக்கு எல்லாமே தப்புத் தப்பா கேக்குது…இப்படி நைட் நேரத்துல பேசிட்டு இருக்குறது தெரிஞ்சா என் வொய்ப் ரொம்பவே கோபப்படுவாங்க.. சீக்கிரம் வாங்க .” என்றபடி அவன் நடக்க அவன் பின்னே நடந்தாள் நந்தினி.

சிறிது நேரம் மௌனம் இருவரிடமும்.

அருண்மொழியின் யோசனை முழுவதும் நாகங்கள் எவ்வாறு வந்துது என்பதிலேயே இருந்தது.

அவனது முகத்தை பார்த்தபடியே நடந்து வந்தாள்.

அவள் ஏதோ கேட்க நினைப்பதும் பின்னர் தயங்குவதுமாக இருப்பதை கண்டு கொண்டவன் அவளை திரும்பிப் பார்க்காமலேயே,” ஏதாவது என் கிட்ட கேட்கணுமா?” என்றான்.

தன்னை திரும்பிப் பாராமலேயே தனது எண்ணவோட்டத்தை அறிந்தவனை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை நந்தினியால்.

இருப்பினும் மனதிலிருப்பதை கேட்டு விட்டால் நிம்மதியாக இருக்கும் என நினைத்தவள் தயக்கத்துடன், “ வொய்ப் மேல் ரொம்ப பாசமோ? குழந்தைங்க இருக்காங்களா” என்றாள்.

சட்டென்று அவனது நடை நின்றது.

கேள்வி கேட்டுக்கொண்டே நடந்தவள் அவன் திடீரென நின்றதை கவனியாமல் அவன் மீது மோதி நின்றாள்.

சட்டென்று நகர்ந்தவள் பின்னாலிருந்த சுவற்றில் மோதி நின்றாள்.

அவளருகே நெருங்கி வந்தவன் அவளுக்கு இருபுறமும் கைகளை அணைவாக சுவற்றில் பதித்து விட்டு ,” அது என்னோட பர்சனல் மிஸ் நந்தினி…அதைக் கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை…ஆனா நீங்க ரொம்பவே ஆசைப்படுறதுனால சொல்றேன் ‌கேட்டுக்கோங்க…என் வொய்ஃப்னா எனக்கு ரொம்பவே பிடிக்கும். எவ்வளவு வருஷமானாலும் அவளுக்காக மட்டும் தான் என்னோட காதலும் அன்பும். அது எப்பவும்‌‌ மாறாது. அப்பறம்‌‌ என்ன‌ கேட்டீங்க? எத்தனை குழந்தைங்கன்னா…அதுக்கு தான் என்னோட வொய்ஃப்‌ சரின்னு சொல்ல மாட்டேங்குறாளே…சரின்னு சொன்னா…எனக்கு இப்பவே கூட டபுள்…ஓகே…” என ஹஸ்கியான குரலில் கூறியவனின் சூடான பெருமூச்சு அவளது கன்னத்திலும் கழுத்திலும் பட்டு சிலிர்க்க வைத்தது.

இருவருக்கும் இடையே ஒரு இன்ச் இடைவெளி தான். அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் அருண்மொழி.

அவளுக்கு தான் அவனுடைய நெருக்கமும் பார்வையும் அந்தஸ்த்தை கொடுத்தது. .

“இன்னைக்கு என்னோட முதல் வேலையே குழந்தைக்கு ரெடி பண்ணுறது தான். நைட் ‌நேரம், ப்ளசண்ட்டான க்ளைமேட்…தோட்டத்துல இருந்து வர்ற இந்த முல்லைப் பூவோட வாசனை…. இவ்வளவு பக்கத்துல பொண்டாட்டியை வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியுமா?? இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடிட வேண்டியது தான்…நான் தொட அவ உருக…அப்படியே அவளை….” என் மோகத்தில் கண்கள் சிவக்க கூறியவனை தள்ளி விட்டுவிட்டு அழுது கொண்டே ஓடினாள் நந்தினி.

சுவற்றில் சாய்ந்து நின்றவன் அவள் சொன்ன திசையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அழுதுகொண்டே தனது அறைக்குள் நுழைந்தவளுக்கு‌ மனதே ஆறவில்லை.

சற்று நிதானித்து அவனது பேச்சினை உள்வாங்கியிருந்தாள் என்றால் அவனது வார்த்தைகளிலிருந்த முரண்பாடு புரிந்திருக்கும்.

ஏற்கனவே பதட்டத்தில் இருந்தவளின் மனம் எதையும் ஆராய்ந்து பாராமல் காயப்பட்டு தான் போனது அவனது வார்த்தையில்.

‘இதலெல்லாம் தேவையா? வலிய சென்று வலியை வாங்கிக் கொண்டு வந்துள்ளாயே..!’ என்று சாடியது அவளது மனம்.

அருகில் இருக்கும் போது தெரியாத அவனின் அருமை பிரிந்த பிறகு புரிந்தது.

மனதை சூழ்ந்திருந்த ஏக்க மேகங்கள் அவளது விழிகளில் மூலம் மழையை சொரிந்தது.

இத்தனை உயரத்தில் இருப்பவனை எள்ளி நகையாடிதும் , அழகாக கை சேர்ந்திருக்க வேண்டிய காதலை தனது அகங்காரத்திலும் , திமிரிலும் எட்டி உதைத்தது அவளது மனதை வருத்தியது.

'பாரதிக்காக தானே அவனை விட்டுக் கொடுத்தாய்…இப்போது ஏன் வருந்துகிறாய்? அத்தனை உயரத்தில் இருப்பவனை அதுவும் அடுத்தப் பெண்ணின் கணவனை மனதாலும் நினைக்கக் கூடாது' என முடிவெடுத்த பின்னர் தான் அவளது மனது சிறிது சமாதானம் ஆனது.

அழுதழுது எப்போது உறங்கினாளோ தெரியாது..

இங்கு அரண்மனைக்குள் மாறவர்வமனின் இறுகிய அணைப்பில் இருந்தாள்‌ பாரதி.

அவளது அகன்ற விழிகள் இரண்டும் அதீத பயத்தை காட்டியது.

அதற்கு நேர்மாறாக மாறவர்மனின் கூரிய விழிகள் அவளுக்கான காதலையும் மோகத்தையும் காட்டிக் கொண்டு இருக்க, அதில் திகைத்து போய் நின்றிருந்தாள் பாரதி.

அவனது கரங்கள் அவளது மேனியில் எல்லை மீறத் தயாராகிக் கொண்டிருந்தது.
 
Top Bottom