• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தகிக்காதே குளிர்நிலவே..!(27)

STN46

New member
தனது உடைகளை எல்லாம் பெரிய பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் இளமாறன்.

“என்ன இளா…? எங்க கிளம்பிட்ட? “ என்றபடி வந்தார் ஆதிசேஷன்.

“ வேலைக்கு தான்…”

“வேலைக்கா? நீ..யா?என்ன வேலை..?” என திகைத்தார்.

அவரைப் பார்த்து எள்ளலாக சிரித்தவன், ” நான் என்ன பண்றேன்..ஏது பண்றேன்? சாப்ட்டேனா? தூங்கினேனா? என் வாழ்க்கையில என்ன நடக்குது? ஏது நடக்குதுன்னு என்னைக்காவது ஒரு நாள் நின்னு கேக்க உங்களுக்கு நேரம் இருந்துருக்கா?ம்ம்ச்..விடுங்க…உங்க கிட்ட பேசி பிரயோஜனம் இல்லை. தாத்தா கிட்ட இருந்து பொறுப்புகளை வாங்கணும், அதிகாரத்தை வாங்கணும் . இது மட்டும் தான் உங்க ரெண்டு பேருக்கும் தெரியும். என்னோட தேவைகளையும் ஆசைகளையும் என்னைக்குமே நீங்க கேட்டதும் இல்லை. தேவையை அறிஞ்சு நடந்துகிட்டதும் இல்ல…” என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே மந்தாகினி உள்ளே நுழைந்தார்.

“என்ன இளா…எங்க கிளம்பிட்ட?” என்றபடி சோஃபாவில் அமர்ந்தார்.

ஒரு பெருமூச்சுடன் அவரைப் பார்த்தவன், “வேலைக்கு தான் போறேன். திரும்ப வர்றதுக்கு ஆறு மாசம் ஆகும் “ என்றபடி தோள்பையை மாட்டிக்கொண்டு வெளியேறினான்.

“ என்னங்க..?என்ன சொல்றான் இவன்.? "என புரியாமல் மந்தாகினி கேட்க ஆதிசேஷனும் தெரியவில்லை என்பது போல தோளைக் குலுக்கினார்.

இருவரும் இணைந்து வெளியே வர மாறவர்மனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான் இளமாறன்.

அப்போது திடீரென சலசலப்பு ஏற்பட அனைவரும் திரும்பினர்.

கடும் வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்த சுகன்யாவை வேலையாட்கள் சில பேர் தூக்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்.

“ என்னாச்சு….” என பதறியபடி இளமாறன் அவர்களருகே சென்றான் .

“ சுகன்யா மேடத்துக்கு திடீர்னு வயித்து வலி அதிகமாகிடுச்சு …ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போகணும்…” என அங்கு வேலை செய்யும் பெண் இத்தாலிய மொழியில் கூறினாள்.

தோள்பையை கீழே போட்டுவிட்டு அவளை கையில் ஏந்தியபடி மகிழுந்தை நோக்கி ஓடினான்.

வீட்டில் பணிபுரியும் இரு பெண்களை உதவிக்கு அழைத்துக் கொண்டவன் மருத்துவமனைக்கு மகிழுந்தை வேகமாக செலுத்தினான்.

மந்தாகினி, ஆதிசேஷன் மற்றும் மாறவர்மன் அவனது செயலைக் கண்டு திகைத்து நின்றனர்.

அவளை பரிசோதித்த மருத்துவர்கள் அவளது கர்ப்பப்பையிலிருக்கும் ஃபைப்ராய்டு கட்டி வீங்கிக் கொண்டு வருவதால் உடனடியாக கட்டியோடு கர்ப்பப்பையையும் சினைப்பையையும் அகற்ற வேண்டும் என்று கூறினார்.

அவள் இத்தனை நாட்கள் வலியை பொறுத்துக் கொண்டிருந்தே பெரிய விடயம் எனவும் இனியும் தாமதித்தால் உடல்நிலை கவலைக்கிடமாகி விடும் என்று தெரிவித்தனர்.

இரு வருடங்களுக்கு முன்பே கர்பப்பையை எடுக்க வேண்டும் என எச்சரிக்கை செய்ததையும் நினைவு கூர்ந்தனர்.

அவள் உடல்நிலையில் அலட்சியம் காட்டியதை கண்டு கடிந்து கொண்டனர்.

அப்போது தான் இளமாறனுக்கு நினைவுக்கு வந்தது. இரு வருடங்களுக்கு முன்பு அவள் வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்த போது மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பரிசோதனை செய்து விட்டு வந்ததையும் அதன் பிறகு அவளது உடல் நலம் பற்றி விசாரிக்க மறந்து திருமணம் செய்து கொண்டதையும் நினைவுப்படுத்தி கொண்டான்.

திருமணம் செய்து கொண்ட பிறகே அவள் தன்னை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்தது என்ற உண்மை உரைத்தது.

“ஒகே டாக்டர் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆப்ரேஷன் பண்ணிடுங்க…” என்றான்.

“ டூ டேஸ்க்கு டேப்ளட்ஸ் தர்றேன்…அந்த கோர்ஸ் முடிஞ்சதும் ஆப்ரேஷன் பண்ணிடலாம்..அப்பறம் அவங்களுக்கு ரிலேடிவ்ஸ் யாராவது இருக்கிறார்களா? சில விஷயங்கள் அவங்க கிட்ட சொல்லணும்…” என்றார் மருத்துவர்.

“ அவங்களுக்கு ரிலேடிவ்ஸ் யாரும் கிடையாது. அவளோட ஹஸ்பண்ட் தான் நான். என் கிட்டயே நீங்க எதுவா இருந்தாலும் சொல்லலாம்..” என்றான்

அவனது பதலில் திகைத்து நின்றார் மருத்துவர். ஏனெனில் வீர ராஜசிம்மருடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.

அவரது குடும்பத்தைப்‌ பற்றி நன்கு அறிந்தவருக்கு இந்த திடீர் திருமணம் சற்று அதிர்ச்சியாக இருந்தது.

அதை பற்றி மேலும் தோண்டித் துருவ விரும்பாமல் “ ஐ யம் சாரி டூ சே திஸ். கர்ப்பப்பையோட ஓவரிஸூம் சேர்த்து எடுக்குறதுனால அவங்களுக்கு தாம்பத்தியத்துல ஈர்ப்பு வர்ற வாய்ப்பு ரொம்பவே குறைவு தான். அவங்களால குழந்தையும் பெத்துக்க முடியாது . அவங்க உடல்நலத்தோட மனநலத்தையும் நல்லா இருக்குற மாதிரி பாத்துக்கணும். சுருக்கமா சொன்னா அவங்கள ஸ்பெஷல் கேர் எடுத்து பாத்துக்கணும். மூட் ஸ்விங் அதிகமா இருக்கும். தாழ்வு மனப்பான்மை வரலாம். ஆப்ரேஷன் ஆனதுக்கு அப்பறம் கன்சல்டேஷனுக்கு ரெண்டு மூணு தடவை வந்துட்டு போகும் மாதிரி இருக்கும்.கம்ப்ளீட் பெட் ரெஸ்ட் ல இருக்கணும்.” என்று அவனிடம் கூறினார்

இளமாறனின் மனம் ‌ஒன்றும் ஒன்றும் இரண்டு என சரியாக கணக்கிட்டது.

சுகன்யா தன்னிடமிருந்து விலகிச் சென்ற காரணத்தை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

பொறுப்பின்றி அவளது உடல்நலத்தை கேட்டறியாமல் விட்ட தன் மீதே கோபமாக வந்தது.

பாரதிக்கு அழைத்தவன் சுகன்யாவிற்கு உதவியாக இருக்குமாறு கூறிவிட்டு கப்பற்படை உயரதிகாரிகளை சந்தித்து தனது கடற்பயணத்தை ரத்து செய்தான்.

கடலில் ஆறு மாதம் துறைமுகத்தில் ஆறுமாதம் என்றிருக்கும் அவனது பணி.

துறைமுகத்தில் இருந்து கொண்டே பணியை தொடர்ந்து கொள்வதாக கூறி விட்டு வந்து விட்டான்.

அடுத்த இரண்டு நாட்களில் சுகன்யாவிற்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.

பாரதி அவளருகேயிருந்து நன்றாக கவனித்துக் கொண்டாள்.

அரண்மனைக்கு வந்த இளமாறன் அனைவரையும் அழைத்து தான் சுகன்யாவை இரு வருடங்களுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டதாக கூறி அதிரச் செய்தான்.

மந்தாகினியோ மயக்கமே போட்டு விழுந்து விட்டார்.

ஆதிசேஷனுக்கும் மகன் மீது அத்தனை கோபம். ஆனால் அனைவரின் முன்னிலையிலும் வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. பல்லைக் கடித்து கொண்டு இருந்தார்.

வீர ராஜசிம்மரோ ஒன்றும் பேசவில்லை அமைதியாக இருந்தார்.

“ நம்ம இருக்குற வசதிக்கு எங்கெல்லாமோ சம்மந்தம் பண்ணனும்னு நினைச்சிட்டு இருநதேன்…நீ என்னடான்னா இப்படி என் தலையில் மண்ணள்ளி போட்டுட்டியே…!” புலம்பித் தள்ளினார்.

“சும்மா ஊர் சுத்திட்டு இருக்குற உங்க பையனுக்கு ஜமீன் வீட்டுலயா பொண்ணு எடுக்க முடியும் …?” என விஜயராணி நேரம் பார்த்து வார்த்தையை விட “ கொஞ்சம் சும்மா இருக்கீங்களா…! அவன் ஒண்ணும் வெட்டியா இல்ல… மாறீனா மிலிட்டரே(இத்தாலிய கடற்கரை) ல நல்ல பதவியில தான் இருக்கான். சும்மா அவனை மட்டந்தட்டிடே இருக்காதீங்க . “ என்றான் அழுத்தமாக.

இந்தத் தகவல் அனைவருக்குமே புதிது தான்.

அவன் எப்போது வருவான் எப்போதும் செல்வான் என யாருமே பெரிதாக கவலைப்பட்டதேயில்லை.

எப்போதும் அவனைச் சுற்றிலும் பெண்கள் கூட்டம் இருந்து கொண்டேயிருப்பதினால் அவனைப் பற்றி பெரிதாக நல்ல அபிப்பிராயம் யாருக்கும் இல்லை . வீர ராஜ சிம்மருக்கு உட்பட.

“இப்ப என்ன பண்ணனும் இளமாறா..?” என்றார் வீர ராஜ சிம்மர்.

“ அவளுக்கு இப்ப கொஞ்சம் உடம்பு சரியில்லை..அவ நல்லா ஆனதும் முறைப்படி அவளை கல்யாணம் பண்ணிக்குறேன். அவ தான் என்னோட மனைவி..இதுல எந்த மாற்றமும் இல்லை…” என உறுதியாக கூறிவிட்டு சென்றான்.

மருத்தவமனையில கண்மூடி படுத்திருந்த சுகன்யாவின் அருகில் வந்தவன் நாற்காலியை இழுத்துப் போட்டு அவளருகே அமர்ந்திருந்தான்.

சிறிது நேரத்தில் கண்விழித்தவள் எதிரே அமர்ந்திருந்த இளமாறனை பார்த்தாள்..

அவளது கரங்களை தன்னுடைய கரங்களுக்குள் பொத்தி வைத்துக் கொண்டவன் , "உன்னோட உடம்பு இல்லாம என்னால வாழ முடியாதுன்னு நினைக்கிறியா சுகன்யா? அது தான் எனக்கு தேவைன்னா அடாவடியா உன்னை எப்பயோ அடைஞ்சிருக்க முடியும். எனக்கு தேவை நீ மட்டும் தான்…இப்ப தாம்பத்தியமும் குழந்தையும் இல்லன்னா என்ன? காலம் முழுசும் சின்ன சின்ன முத்தம், ஆதரவா மடி சாய்ஞ்சிட்டே நிறையா பேசி , தூங்கும் போது உன்னை இறுக அணைச்சுட்டு இருந்தா போதும் எனக்கு. நமக்கான உலகத்துல நாம மட்டுந்தான் இருக்கப்‌போறோம். யாரும் ‌வந்து நம்ம உலகத்தை எட்டிப் பார்க்க போறதில்லை. எனக்கு நீ உனக்கு நான அது போதும். இந்த உலகத்துல எத்தனையோ குழந்தைகளுக்கு அப்பா அம்மா இல்லாம இருக்கு…நீ எவ்வளவு குழந்தைக்கு ஆசைப்படுறியோ.. அவ்வளவு குழந்தைங்களை நாம‌ தத்தெடுத்துக்குவோம். நம்ம விஷயத்தை வீட்டுல சொல்லிட்டேன். உடம்பு சரியாகி வா…நமக்கான வாழ்க்கையும் நேரமும் நிறைய இருக்கு. வாழ்ந்து பாத்துடலாமே… ஏன் இப்படி பண்ணுன? எதுக்காக பண்ணுனன்னு கேட்கப் போறதில்லை…ஆனா நீ இருந்தா மட்டுந்தான் என் வாழ்க்கை உயிர்ப்போட இருக்கும். இந்த ஒரு காரணம் உனக்கு உறுத்துதுன்னு எனக்கு நீ நல்லது பண்றதா நினைச்சு என்னை உயிரோட வதைச்சிட்டு இருக்க. படிச்சவ தான நீ கொஞ்சமாவது ப்ராக்டிக்கலா யோசி..” என்றவன் அவளின் முகம் பார்த்து நின்றான்.

அவளோ அமைதியாக இருந்தாள்.

“இவ்வளவு தம் கட்டி பேசிருக்கேன்…என்னை ஹஸ்பண்டா ஏத்துக்க கொஞ்சமாவது கன்சிடர் பண்ணலாமே மேடம்…” என அப்பாவியாக அவன் கேட்க,
கண்ணீருடன் அவளிதழில் புன்னகை விரிந்தது. அதில் ஆயிரம் அர்த்தங்கள்.

இளமாறனின் நேசம் அசைக்க முடியாததாய் ஆழமானதாய் அவளுள் இறங்கியது.

அரண்மனை மேல்தளத்தில் உள்ள பால்கனியில் மாறவர்மன் முன்பு நின்றிருந்தாள் பாரதி.

"என்ன விஷயம்?" என்றான் கடுமையான குரலில்.

அவனது கடுமையில் அவளது மனம் சோர்ந்து தான் போனது.

கண்களில் காதல் வழிய பேசும் மாறவர்மனை எதிர்பார்த்திருந்தவளுக்கு அவனது மாற்றம் ஏமாற்றத்தை அளித்தது.

தன் மனப்போக்கை நினைத்து திகைத்தவள், அவனது கேள்விக்கு பதில் கூறாமல் அமைதியாக நின்றிருந்தாள்.

" உன் கிட்ட தான் கேக்குறேன்...என்ன விஷயம்? வாயைத் திறந்து சொல்லு.." என்றான் அதட்டலாக.

அதில் அவளது தேகம் தூக்கி வாரிப் போட தனது உள்ளங்கையை விரித்தாள்.

அதில் தேவியின் திருமாங்கல்யம் இருந்தது.

அதிர்வுடன் அவளைப் பார்த்தான் மாறவர்மன்.
 
Last edited:
Top Bottom