அத்தியாயம் 02
அடித்து எறியப்பட்ட அந்த பைல் நேராக வந்து அங்கு நின்றிருந்தவன் முகத்திலயே வந்து மோதி கீழே விழ அதை பாவமான முகத்துடன் எடுத்தவன், பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி விட்டு தனது இடத்தில் சென்று அமர்ந்து அதில் இருக்கும் பிழைகளை சரி பார்க்க ஆரம்பித்திருந்தான்...
அவனுக்கு பக்கத்தில் இருந்த அவன் சகோதரனான விஷ்வசரத்தோ "என்னடா மறுப்படியும் பல்ப் பா... " என்று இதழ்களில் அடக்கப்பட்ட புன்னகையுடன் வினாவ, "ஏன்டா இவரு இப்டி இருக்காரு நாம எப்டி இருக்கோம் ஜாலியா எப்பவும் சிரிச்ச முகத்தோட அவரு மட்டும் ஏன்டா எப்பவும் உம்முனு இருக்காரு, எதுக்கெடுத்தாலும் எரிச்சி எரிச்சி விழுறாரு ஒரு இரண்டு வார்த்தை கூட மென்மையா பேச தெரியல,இவரு நம்ம அண்ணனு சொன்ன பச்ச குழந்த கூட நம்பாது... " என ஆதங்கமாக தனது தமயனை பற்றி பொரிந்து தள்ளினான் விஷ்வசரண்...
சரத்தோ "ஏதோ புதுசா நடக்குற போல பொலம்பாம வேலைய பாருடா டேய், மறுப்படியும் அண்ணா வெளியே வந்தாரு நீ காலி டி... " என அவனது வாயை அடைத்திருக்க, சரணும் அதை கேட்டு கப் என வாயை மூடியவன் விட்ட வேலையை பார்க்க ஆரம்பித்திருந்தான்...
அச்சமயம் எம்.டி என பலகையால் அழகாக பொறிக்கப்பட்டிருந்த அறைக் கதவை வேகமாக திறந்துக் கொண்டே வெளியேறி இருந்தான், ஆறடி உயரத்தில், மாநிறத்தில் பார்க்கும் பெண்களை சுண்டி இழுக்கும் உடலமைப்புடனும், வாசிகராமான முக அமைப்புடன் அவர்கள் இருவரும் இவ்வளவு நேரமாக பேசிக் கொண்டிருந்த அவர்களின் தமையனான விஷ்வசாஹரன் நம் கதையின் கதாநாயகன்…
கருப்பு நிற கோட் சூட் அணிந்திருந்தவன், முகமோ பாறையாக இறுகி இருக்க, கண்களிளோ முன்னால் உள்ளவர்களை தூளைத்தெடுக்கும் கூர்மை இருக்க, இதழ்களோ புன்னகையை கண்டு பல வருடங்கள் ஆகியது போல இறுகி காணப்பட்டது...
அவன் அறையை விட்டு வெளியே வந்ததுமே அங்கு சல சல வென பேசிக் கொண்டே தங்களது வேலையை பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் சட் என பேச்சை நிறுத்தி விட்டு மரியாதை நிமிர்த்தமாக எழுந்து நிற்க, அந்த இடமே அவன் அங்கிருந்து வெளியேறும் வரை குண்டூசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு மயான அமைதியாக மாறிவிட்டது. அவனோ யாரையும் பார்க்காது விறுவிறுவென அங்கிருந்து வெளியேறி விட, அவன் செல்லும் வரை அவனையே பார்த்திருந்த அனைவரும் அவன் வெளியேறி சென்றதும் பெருமூச்சுடன் தங்களது இடத்தில் அமர்ந்து தத்தமது வேலையை கவனிக்க ஆரம்பித்திருந்தனர்…
இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சரணோ "பார்த்தியா டா இவரு நம்மல மட்டும் இல்ல எல்லாரையும் பயமுறுத்தி தான் வைச்சி இருக்காரு... " என்று கூறவே, அவன் கூறியதற்கு சரத்திடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. அதை கவனித்தவன் திரும்பி பார்த்த அடுத்த நொடியே தன் தலையிலடித்துக் கொண்டான் "அந்த சின்சியர் சிகாமணி கூட பிறந்தவன் தானே நீயும் அவர மாதிரி தான் இருப்ப, நான் தான் மாறி தெரியாம இங்க வந்து பிறந்து தொலச்சிட்டேன்..." என தனக்குள்ள முணுமுணுத்தப்படி தனது வேலை கடுப்பாக செய்ய ஆரம்பித்திருந்தான், சரத்தோ தனது வேலையே தனது தலையாயே கடமை என்பது போல் தன் சகோதரன் கூறியதை கூட கவனிக்காமல் தனது வேலையிலேயே கவனமாக இருந்தான்…
விஷ்வசாஹரனோ அவனுடைய ‘விஷ்வாடெக் இன்டர்நேஷனல் ஸப்ட்வேர் கம்பெனி’ ஐ விட்டு வெளியே வந்தவன், நேராக சென்றது என்னவோ அதற்கு பக்கத்திலேயே அமைந்திருந்த அவனுடைய ‘விஷ்வாடெக் அகாடமி’ கல்லூரியின் ஆபிஸ் அறையிற்குள் தான்…
உள்ளே நுளைந்தவனுக்கு முதலில் கண்களுக்கு தெரிந்தது என்னவோ, கண்களில் கண்ணாடி போட்டு, நேரத்தியாக கோட் சூட் அணிந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த விஷ்வநாதன் தான். அவர் தான் விஷ்வாடெக் அகாடமியின் டிரெக்டரும் சாஹரன், சரத், சரன் ஆகியோரின் தந்தையும் ஆவார்…
நேராக தன் தந்தையின் முன் வந்து நின்றவனோ “நாளைக்கு தானே நியூ ஸ்டுடென்ட்ஸ் இன் டெக்? எனக்கு அதுல சில டீடெயில்ஸ் தெரிஞ்சாகணும் சோ அதுக்கு உங்களோட பைல் வேணும்…” என தான் வந்த விடயத்தை நேரடியாக கூறினான்…
“நாளைக்கு இன்டெக் ஆக போற ஸ்டூடண்ட்ஸோட பர்சனல் டீடைல்ஸ், அப்புறம் யாருக்கு யாருக்கு ஹாஸ்டல் போது, யாருக்கு யாருக்கு ஸ்காலர்ஷிப் போகுது, இப்டி நிறைய பைல்ஸ் இருக்கு சாஹரா. உனக்கு எல்லாமே வேணுமா? இல்ல இதுல ஏதாச்சும் ஒன்னு தான் வேணுமா?” என அவனைப் பார்த்து கேள்வியாக நோக்கினார்…
“இல்ல பா எனக்கு நாம லாஸ்ட் டைம் வச்ச ஆப்டிடீயூட் எக்ஸாம்ல டாப் ஃபைவ் அடிச்ச ஸ்டூடண்ட்ஸ் ஓட டீடைல்ஸ் மட்டும் தான் வேணும், முக்கியமா அதுல யாருக்கு ஹாஸ்டல் என்ட் ஸ்காலர்ஷிப் போகுது அப்படிங்கற டீடைல்ஸ் தான் வேணும் அதுக்கு தான் பைல் கேட்கிறேன்…” என தனக்கு என்ன தேவை என்பதை கூறினான்…
“இதுல வழக்கம் போல டாப் பைவ் அடிச்சதுல ஸ்காலர்ஷிப் அண்ட் ஹாஸ்டல் சேர்ந்து போறது மூன்று பேருக்கு தான் ஒன்னு அர்ஜுன் அடுத்தது பிரியா அடுத்தது நிவேதா…” என்றார்…
“ஓகே நெக்ஸ்ட் ஸ்காலர்ஷிப் யார் யாருக்கெல்லாம் போகுது இப்ப சொன்ன மூணு பேர விட்டுட்டு மத்தவங்கள சொல்லுங்க…” என அடுத்த கேள்வியை கேட்டான்…
“இவங்க இல்லாம இன்னும் அஞ்சு பேருக்கு ஸ்காலர்ஷிப் போகுது சுந்தர், ரவி, சினேகா, சுதர்ஷன் கடைசியா ஆத்யா ஷாலினி…” என அவன் கேட்டதுக்கு பதில் கூறினார்…
“ஓகே எப்பவும் போல டோட்டலி எட்டு பேருக்கு ஸ்காலர்ஷிப் என்ட் மூணு பேருக்கு ஹாஸ்டல் ஓகே தேங்க்ஸ் பார் த டீடைல்ஸ் பா…” என வந்த வேலையை முடித்தவன் அங்கிருந்து கிளம்பே எத்தனிக்க அவனை தடுத்திருந்தது அவனின் தந்தையின் குரல்…
“சாஹரா…” என தயக்கமாக அவனை அழைத்தார் விஷ்வநாதன்…
“என்னப்பா சொல்லுங்க?” என செல்ல எத்தனைத்தவன் தந்தையின் குரல் கேட்டு தந்தையை கேள்வியாக நோக்கினான்…
“அது வந்து ஒரு ஸ்டுடென்ட் கிட்ட இருந்து ரிக்வெஸ்ட் ஒன்னு வந்து இருக்கு, அதுதான் அத பத்தி உன்கிட்ட பேசலாம்னு கூப்டேன், எனக்கு தெரியும் நீ இந்த விஷயத்தில் எல்லாம் எவ்வளோ ஸ்டிரிக்ட் ஆக இருப்பேனு, இருந்தாலும் உன்கிட்ட இதை சொல்லாம இருக்க முடியல, நான் சொல்றதை கேட்டுட்டு உன்னால பண்ண முடியுமா இருந்தா மட்டும் இதை கொஞ்சம் கன்சிடேர் பண்ணு…” என தயங்கி தயங்கி அவனிடம் புதிராக பேசினார்…
“சொல்ல வராத ஸ்ட்ரெயிட்டா சொல்லுங்கப்பா எனக்கு நிறைய வேலை இருக்கு, டோன்ட் வேஸ்ட் மை டைம்…” என கடினமான குரலில் தன் தந்தையை பார்த்து கூறினான்…
அவரோ பெருமூச்சை ஒன்றை இழுத்து விட்டவர் “அது ஒன்னுமில்ல பா டாப் பைவ்ல இருக்கிற ஸ்டூடண்ட்ஸ்ல போர்த் பிளேஸ்ல இருக்க ஆத்யா ஷாலினி னு ஒரு பொண்ணுகிட்ட இருந்துதான் இந்த ரிக்வெஸ்ட் வந்திருக்கு, அவளுக்கு அப்பா,அம்மா, கூடப்பிறந்தவங்கனு யாருமே இல்லையாம் சோ செலவுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்காம் அதனால எக்ஸ்ராவா அவளுக்கும் ஹாஸ்டல் ரூம் ரெடி பண்ணி தர முடியுமான்னு ரிக்வஸ்டா கேட்டு இருக்கா, இதை நீ கொஞ்சம் கன்சிடர் பண்ணலாமே…” என தான் சொல்ல வந்ததை ஓரே மூச்சாக சொல்லி முடித்தார்…
அவர் கூறியதை கேட்டவன் முகமோ நொடியில் இறுக, தன் தந்தையை அழுத்தமாக பார்த்தவன் “அப்பா உங்களுக்கே தெரியும் நான் இந்த விஷயத்திலலாம் எவ்வளவு ஸ்ட்ரிக்டா இருப்பேனு, என்னால எந்த ரூல்ஸையும் பிரேக் பண்ண முடியாது. எப்டிடீயூட் எக்ஸாம்ல டாப் த்ரீ வரவங்களுக்கு மட்டும்தான் ஸ்காலர்ஷிப்பும் ஹாஸ்டலும் அதுக்கு கீழ இருக்க அஞ்சு பேருக்கு ஸ்காலர்ஷிப் மட்டும் தான். இதுதான் இது நாள் வர இங்க ரூல்ஸா இருக்கு யூ நோ தட் வெரி வெல் சோ ஐ டோன்ட் கேர் யாருக்கு அப்பா அம்மா இருக்கு இல்லங்கிறது என்னால இந்த ரூல்ஸ் பிரேக் பண்ண முடியாது…” என அழுத்தம் திருத்தமாக தன் தந்தையை பார்த்து கூறினான்…
“சாஹரா அதெல்லாம் சரி தான்பா, ஆனா நமக்கு தான் இதுவரையும் இப்படி எந்த ரிக்வெஸ்ட் வந்ததில்லல? படிக்க கஷ்டபடுற பிள்ளைக்கு ஹெல்ப் பண்றதால நாம எதுவும் குறைஞ்சு போயிட மாட்டோமே, நம்மகிட்ட தான் நிறைய ஹாஸ்டல் ரூம் அவைலபிளா இருக்குல்ல ஒரு ஆளுக்கு எக்ஸ்ட்ராவா கொடுக்கிறதுல என்னப்பா பிரச்சனை வந்துர போகுது?” என அவனைப் பார்த்து தன்மையாக கேட்டார்…
“இங்க ஹாஸ்டல் ரூம் இருக்கு இல்லங்கிறது எனக்கு பிரச்சனை இல்ல நான் ஃபாலோ பண்ணிட்டு வர ரூல்ஸ யாருக்காகவும் என்னால பிரேக் பண்ண முடியாது. அவ எப்படி வேணா இங்க வரட்டும் ஐ டோட் கேர் ஸ்காலர்ஷிப் மட்டும் கொடுப்பேன் அவ்வளவுதான். அவளால அப்படி இங்க வந்து இருந்து படிக்க முடியாலனா வராம இருக்கட்டும், எனக்கு அட்லீஸ்ட் ஒரு ஸ்காலர்ஷிப் ஆவது மிச்சமாகும், ஏழு பேருக்கு ஸ்காலர்ஷிப் கொடுத்து என் வேலையை பார்த்துட்டு நான் போய்க்கொண்டே இருப்பேன்…” என தன் தந்தையை பார்த்து எரிச்சலாக கூறியவன் அடுத்து அவர் பேச வரும் முன்னே அந்த அறையில் இருந்து விறு விறுவென வெளியேறி இருந்தான்…
செல்பவன் முதுகையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவருக்கு பெருமூச்சு ஒன்றே வெளியானது. என்ன தான் அவர் அந்த அகாடமியின் டைரக்டராக இருந்தாலும் முக்கியமான சில விடயங்களுக்கு முடிவெடுப்பது என்னவோ விஷ்வசாஹரனின் கையில் தான் இருந்தது…
விஷ்வநாதனின் குடும்பத்தில் மொத்தமாக ஐந்து பேர் தான் விஷ்வநாதன், மகாலட்சுமி விஷ்வநாதன், விஷ்வசாஹரன் மற்றும் விஷ்வசரத், விஷ்வசரன் ஆகி ஐந்து பேர் கொண்ட குடும்பமே அவர்களுடையது, அதில் எல்லாருமே மென்மையான மனம் கொண்டவர்கள் தான், யாரின் மனமும் புண்படுடாமல் நடப்பவரகளே ஆனால் இதில் விதிவிலக்காக வந்து பிறந்தவன் தான் விஷ்வசாஹரன்…
அவர்கள் நால்வரிடமும் இல்லாத கடினமும் திமிரும் அவனிடம் சேர்ந்தே இருந்தது. சிரிப்பு என்றால் என்னவென்று கேட்பவன், தன்மையாக நான்கு வார்த்தைகள் கூட பேச தெரியாதவன். தங்கள் குடும்பத்தில் இவன் மட்டும் எவ்வாறு இப்டி பிறந்தான் என்பதை அடிக்ககடி அவர்களே யோசித்துக் கொள்ளும்நிலை தான் அவர்களுடையது. அதே போல் தான் இப்போதும் யோசித்துக் கொண்டார் விஷ்வநாதன்…
என்ன தான் அவன் இந்த அளவுக்கு கடினமானவனாக இருந்தாலும் தன்னை சார்ந்தவர்கள் மீது அளப்பரிய அன்பும் பாசமும் கொண்டவன், ஆனால் என்ன அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டான் அவ்வளவு தான்…
ஆரம்பத்தில் அவனும் இவர்களை போல இல்லை என்றாலும் கொஞ்சம் மென்மையானவனாக தான் இருந்தான் ஆனால் அவனின் வாழ்வில் நடந்தேறிய சில சம்பவங்களே அவனிடம் இருந்த கொஞ்சநஞ்ச மென்மையையும் துடைத்தெறிய செய்தது. அவனும் தனக்குள் இறுகி கொண்டான்…
இப்படி உணர்வுகளை தனக்குள் புதைத்துக் கொண்டு வெளியே தீயாக இருப்பவனையும் அதே சமயம் பல வலிகளை தனக்குள் புதைத்து வெளியே சிரித்துக் கொண்டு இருப்பவளையும் விதி எனும் சதி சேர்த்து வைக்க நினைத்தால்?
தொடரும்…

Author: STN - 77
Article Title: தழலை அணைக்கும் அமுதகமே - 02
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.