STN - 77
New member
அத்தியாயம் 10
அறைக்குள்ளேயே இருக்க அழுப்பாக இருந்த காரணத்தினால், வீட்டின் பின்பக்கமாக இருந்த வழியால் வெளியே வந்த விஷ்வசாஹரனோ நீச்சல் தடகத்தின் அருகில் தான் நின்றிருந்தான். அப்போதுதான் சரத்தும் ஆத்தியாவும் பேசியபடியே அங்கு வந்து சேர்ந்திருந்தனர். அவன் இருட்டான பகுதியில் நின்று கொண்டிருந்த காரணத்தால் அவன் அங்கு நின்றிருந்ததை இருவருமே கவனித்திருக்கவில்லை. அவனும் அவர்கள் பேசுவதை கேட்டப்படியே ஆத்யாவை அழுத்தமாக பார்த்தவாறு நின்றிருந்தான்…
அப்போதுதான் சரத்திற்கு தொலைபேசியில் அழைப்பு வந்ததும், ஆத்யா ஷாலினி பறவைகள் கூட்டை பார்க்க செல்லும் ஆசையில் கீழே கவனிக்காமல், கால் இடறி நீச்சல் தடாகத்தினுள் விழுந்ததும் நடந்தேறி இருந்தது, அவளையே பார்த்துக் கொண்டிருந்த விஷ்வாசாஹரன் இப்படி ஒரு நிகழ்வை சற்றும் எதிர்பார்த்து இருக்கவில்லை, ஒரு நொடி அவனே உறைந்து விட்டான் என்று தான் கூற வேண்டும், ஆனால் அடுத்த நோடியே அவன் எதை பற்றியும் யோசிக்காது நீச்சல் தடாகத்தினுள் பாய்ந்து தன்னவளை தன் இரு கைகளினாலும் தூக்கி காப்பாற்றி இருந்தான்…
சரத்தின் அலறல் சத்தத்தில் அனைவரும் பதறி அடித்துக் கொண்டு வெளியே வர, அங்கு அவர்கள் கண்ட காட்சியில் அனைவரும் உறைந்து விட்டனர்…
நீருக்குள் மயங்கிய நிலையில் இருந்த ஆத்யா ஷாலினியை தூக்கியபடி வெளியே வந்துக் கொண்டிருந்த சாஹரனையே அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் “ஐயோ ஆதி…” என பதறியபடி அவர்களை நோக்கி அனைவரும் வேகமாக வந்திருந்தனர்…
ஆனால் சாஹரனோ இது எதையும் கவனிக்காமல் தன்னவளை கைகளை ஏந்தியப்படி நீருக்குள் இருந்து வெளியேறி வந்தவன், அங்கு இருந்த புற்தரையில் அவளை படுக்க வைத்து பெண்ணவளின் கன்னத்தை வேகமாக தட்டி “ஹேய் இங்க பாரு…” என அவளை எழுப்ப முயற்சி செய்தான்…
ஆனால் ஆத்யாவிடமோ எந்த விட அசைவும் இருக்கவில்லை, சுற்றி நின்ற அனைவரும் பதட்டமாக பார்த்துக் கொண்டிருக்க, அவள் அதிகளவான நீரை குடித்திருந்ததாலும், திடீரென நீருக்குள் விழுந்த அதிர்ச்சியினாலும் ஆழ்ந்த மயக்கத்திற்குள் சென்றிருந்தாள்…
“சரண்…” என சத்தமாக கத்தியவன் “உடனே டாக்டருக்கு போன் பண்ணி வர சொல்லு…” என்று கூறி இருக்க, சரணும் அவசர நிலை புரிந்து உடனே வைத்தியருக்கு அழைத்து அவசரமாக வீட்டிற்கு வர சொல்லி இருந்தான்…
வைத்தியரும் அவர்களின் குடும்ப வைத்தியர் என்பதாலும் அவர்கள் வீட்டிற்கு அருகிலயே இருந்ததாலும் ஐந்தே நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்திருந்தார்…
அங்கு வந்தவர் ஆத்யாவை பரிசோதித்து விட்டு “தண்ணீ ரொம்ப அதிகமா குடிச்சி இருக்காங்க…” என சொல்லி அவளின் வயிற்றை அமுக்கி உள்ளிருந்த நீரை வெளியேற்றியிருந்தார், பிறகு சாஹரனை பார்த்து “இவங்கள ரூம்குள்ள படுக்க வச்சுருங்க, என்ட் டிரஸ் எல்லாம் சேஞ்ச் பண்ண சொல்லுங்க, ரொம்ப வெட்டா இருக்காங்க, கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க விட்டா அவங்களே எழுந்துருவாங்க, ஷீ இஸ் பெர்பெக்ட்லி ஆல் ரைட்…” என கூறியவர் இரண்டு மாத்திரைகளை எழுதி கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்…
சாஹரனோ கொஞ்சமும் யோசிக்காது அவளை தன் இரு கைகளில் பூப்போல் ஏந்தி கொண்டவன், கீழே இருந்த விருந்தாளி அறைக்குள் அவளை படுக்க வைத்திருந்தான்…
எல்லாரும் அவளை சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருக்க, சாஹரனோ ஒரு கணம் அனைவரையும் திரும்பி பார்த்தவன், “அது தான் டாக்டர் சொல்லி இருக்காருல அவள ரெஸ்ட் எடுக்க விட சொல்லி, எதுக்கு எல்லாரும் இங்கயே இருக்கீங்க, கிளம்புங்க…” என அனைவரிடமும் கூறிவிட்டு அவனும் அங்கிருந்து சென்று விட்டான்…
அவன் கூறுவதும் தான் சரி என உணர்ந்த அனைவரும் வெளியேறி விட, மகாலட்சுமியும் சித்ராவும் மட்டும் அங்கிருந்து ஆத்யாவின் உடைகளை மாற்றிவிட்டு வெளியே வந்திருந்தனர்…
சரண், சரத் மற்றும் சாஹரன் என மூவரும் தங்களது அறைக்கு சென்று விட, முன்கூடத்திற்கு இருந்த மற்றவர்களை பார்த்து, “நான் சொன்னத இப்போ நம்பறீங்களா? அவன் ஆத்யாவ லவ் பண்றான். இப்போ இல்ல சின்ன வயசுல இருந்தே…” என விஸ்வேஸ்வரன் அவர்களை பார்த்து கூறினார்…
“ஆமாப்பா நான் சாஹரன இப்படி பார்த்ததே இல்ல, அவளுக்கு ஒன்னுனதும் ஒரு மாதிரி துடிச்சு போயிட்டான்…” என ஆச்சரியமாக கூறினார் விஷ்வநாதன்…
அதே எண்ணம் தான் மற்ற மூவருக்கும் கூட இருந்தது, ராஜேந்திரனும் ஒரு கணம் ஆழ்ந்து யோசித்தவர் “நாங்க கூடிய சீக்கிரம் எங்களோட முடிவ சொல்றோம்…” என கூறி இருந்தார்…
“ரொம்ப லேட் ஆயிடுச்சு நாம வேற கிளம்பனும், ஆத்யாவுக்கும் இன்னும் மயக்கம் தெளியல, இப்ப என்னங்க பண்றது?” என தன் கணவரை பார்த்து யோசனையாக கேட்டார் சித்ரா…
அதைக் கேட்டு விஸ்வேஸ்வரனோ, “அதுக்கு என்ன ஆத்யாவும் நல்லா ரெஸ்ட் இருக்கட்டும் இப்ப எழுப்ப வேணாம், நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கு இங்க தங்கிட்டு நாளைக்கு கிளம்புங்க…” என கூறினார் பெரியவர்…
அவர்கள் இருவரும் தயங்க, “ஆமா அப்பா சொல்லுறது தான் சரி. இப்போ ரொம்ப லேட் ஆகிடுச்சி, பஸ்லாம் கிடைக்காது, இன்னைக்கு இங்கேயே தங்கிருங்க…” என மகாலட்சுமியும் விஷ்வநாதனும் வற்புறுத்த அதற்கு மேல் மறுக்க முடியாது அவர்கள் சரி என கூறிவிட்டனர்…
ஆத்யாவுக்கு மயக்கம் தெளியாத காரணத்தினால், அவளை தவிர்த்து அனைவரும் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்டனர்…
ஆனால் ஒருவன் மட்டும் இரவு உணவு கூட சாப்பிடாது, அந்த இருள் நிறைந்த வானில் ஒளி வீசிக்கொண்டிருந்த நிலவையே வெறித்துப் பார்த்தபடி மொட்டை மாடியில் நின்றிருந்தான்…
வேறு யாரு விஷ்வசாஹரன் தான், அவளை வெறுக்கிறான் தான், அதே சமயம் அவளின் மேல் இருக்கும் காதலும் அப்படியே தான் இருக்கிறது என்பதை இன்று உணர்ந்துக் கொண்டான், தன் மனநிலையை தன்னாலயே புரிந்துக் கொள்ள முடியாது தடுமாறி போய் நின்றிருந்தான் ஆண்மகனவன்…
அவன் எப்போது ஆத்யாவை பார்த்தானோ அப்போதிலிருந்தே அவளை காதலிக்க ஆரம்பித்து விட்டான். சிறுவயதில் இருந்தே அவளை அவனுக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தான்…
ஒன்று அவனுடைய குணம் அது எதையும் வெளியே காட்டிக் கொள்ள மாட்டான், இன்னொன்று அவளின் வயது, அவன் அவளின் மேல் காதல் வயப்பட்ட இருந்த சமயம் அவள் சிறிய பெண் அல்லவா, அவளிடம் தன் காதலை எப்படி கூற முடியும், அதனால் அவன் அமைதியாக இருக்க வேண்டிய நிலைதான்…
அப்படி இருக்கும்போது தான் ஆத்யா அவனைப் பற்றி வீட்டில் கூறியதும், அவனை அண்ணா என்று அழைத்ததும் நடந்தேறி இருந்தது, இரண்டுமே அவன் மனதை ஆழமாக பாதித்து விட்டது. அவள் எப்படி தன்னை அண்ணா என்று அழைக்கலாம் என்கிற கோபமும், அவள் ஏன் தன்னை நம்பவில்லை என்கிற கோபமும் சேர்ந்து அவளின் மேல் அவனுக்கு வன்மமாக மாற்றம் பெற்றிருந்தது…
அதற்கு மேல் அவளை பார்த்துக் கொண்டு அங்கே இருக்க முடியாது என்று தான் அவன் இந்த ஊருக்கே வந்திருந்தான்…
சாஹரனோ தான் அவளை மறந்து விட்டதாக இவ்வளவு நாளாக நினைத்துக் கொண்டிருக்க, இன்றைய நிகழ்வு உணர்த்தி விட்டது. எத்தனை வருடங்கள் ஆனாலும் அவன் மனதில் இருந்து அவளை அசைக்க முடியாது என்று, அவனின் ஷாலினியோ அவன் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தாள்…
ஆம் அவன் ஷாலினி தான், அது அவன் மட்டும் மறைந்த, அவனுக்கு மட்டும் தெரிந்த அவனுடையவளுக்கு அவன் வைத்த செல்ல பெயர். அவளை எல்லோரும் ஆத்யா அல்லது ஆதி என அழைக்கும் சமயத்தில் அவனுக்கு மட்டும் அவளை ஷாலினி என்று தான் அழைக்க தோன்றும், ஆனால் இது நாள் வரை அவளை அப்படி ஒரு நாள் கூட அழைத்தது இல்லை…
சாஹரன் பற்றிய இன்னும் பல உண்மைகளை அவனுடைய டயரி மட்டுமே அறியும். அவனின் காதல் காவியங்கள் அனைத்தும் அதிலேயே புதைந்து கிடக்கின்றது…
அவன் வீட்டில் உள்ளவர்கள் தான் ஆத்யாவை பத்து வருடம் கழித்து சந்தித்து இருக்கின்றனன், ஆனால் யாருக்கும் தெரியாமல் அவன் ஆத்யாவை பார்த்துக் கொண்டே தான் இருந்தான்…
அவளை தங்களுடைய காலேஜில் படிக்க வைத்தது முதல் கொண்டு எல்லாமே அவன் தான் மறைமுகமாக நடக்க வைத்திருந்தான்…
ஆனாலும் அவளின் மேல் இருந்த அந்த கோபம் அப்படியே தான் இருக்கின்றது, தனக்கு பிடித்தவளுக்கு ஏன் தன்னை பிடிக்கவில்லை என்கிற ஆதங்கம் தான் அவளின் மேல் கோபமாகவும் வன்மமாகவும் மாறிவிட்டிருந்தது…
ஆனால் அவன் ஒன்றை அப்போது அறிந்திருக்கவில்லு, அவனை போலவே ஆத்யாவின் மனதினிலும் ஆழமான காதல் விஷ்வசாஹரனின் மேல் பெண்ணவளுக்கு இருக்கின்றது என்பதை…
*****
விழிகளை விரிப்பது கடினமாக இருக்க, தலையில் ஏதோ பெரிய பாரங்கல் ஒன்றை தூக்கி வைத்திருப்பது போல் தோன்ற, கடினப்பட்டு தன் விழிகளைத் திறந்து பார்த்தாள் ஆத்யா ஷாலினி…
அவளுக்கு முன் இருந்த கடிகாரம் நள்ளிரவு இரண்டு மணி என காட்டிக்கொண்டிருக்க, தான் இருந்த இடத்தை மெதுவாக விழிகளினால் சுற்றிப் பார்த்திருந்தாள்..
எங்கே இருக்கிறோம், என்னானது என்று சில நிமிடம் அவளுக்கு ஒன்றுமே புரியவே இல்லை, மெதுவாக யோசித்துப் பார்த்தவர்களுக்கு கடைசியாக அவள் நீச்சல் தடாகத்தில் இடறி விழுந்தது நினைவுக்கு வர, பதறியடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்திருந்தாள் பெண்ணவள்…
இப்போது முழுதாக அவளுக்கு அனைத்தும் நினைவு வந்திருக்க, அவளை யாரு காப்பாற்றியது, என்ன ஆனது என்று யோசிக்க முயற்சி செய்தாள்…
கனவில் ஏதோ சாஹரன் அவளை தூக்கி சென்றது போல் தோன்ற, அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்…
“ச்சே வாய்ப்பேயில்ல, அவராவது வந்து என்னை காப்பாத்துறதாவது, அதுவும் நான் விழுந்த நேரம் அங்க சரத் மட்டும் தான் இருந்தான். சோ எனக்கு தெரிஞ்சு அவன் தான் என்னை காப்பாத்திருப்பான்…” என தனக்குத்தானே பேசியவள், பெருமூச்சு ஒன்றை விட்டுக் கொண்டாள்…
பெண்ணவளின் வயிறு பசியில் கத்த, மதியமும் அவள் ஒழுங்காக சாப்பிடாததன் காரணமாக கொலை பசி எடுத்தது ஆத்யாவுக்கு, அவள் இருப்பது வேறு விஷ்வசாஹரனின் வீட்டில் என அவளுக்கு நன்றாக புரிந்து விட, இந்த நேரத்தில் எப்படி வெளியே சென்று உணவருந்துவது என யோசித்தவளுக்கு சங்கடமாக இருந்தது…
சரி தண்ணீராவது குடித்து விட்டு தூங்கலாம் என யோசித்தவளோ, தண்ணீர் இருக்கிறதா என்று சுற்று முற்றும் அறையை பார்க்க, அங்கு வெறுமையான போத்தல் மட்டும் தான் காணப்பட்டது…
“ப்ச் ரூம்குள்ள தண்ணீ கூட இல்லையே, ரொம்ப பசிக்குது இப்போ என்ன பண்ணுறது?” என யோசித்தவள், அங்கிருந்த போத்தலை எடுத்துக் கொண்டே சத்தம் போடாது மெதுவாக அறை கதவை திறந்தவள், வீட்டின் ஹாலை எட்டி பார்த்தாள்…
அங்கு யாரும் இருப்பதற்கான அறிகுறி இல்லாது இருட்டாக தான் காணப்பட்டது, இங்கே வந்த போதே எங்கு சமயலறை இருந்தது என பார்த்திருந்தவளுக்கு இப்போது யோசனை எல்லாம் இந்த இருட்டிற்குள் எப்டி அங்கே செல்வது என்று தான்…
அவசரத்திற்கு அவளின் போன் வேறு எங்கு இருக்கின்றது என தெரியாமல் இருக்க, என்ன செய்வது என ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு, அப்போது தன் உடலில் ஏதோ வித்தியாசம் இருப்பது போல் தோன்ற, சட்ட குனிந்து பார்த்தவளுக்கு தூக்கி வாரி போட்டிருந்தது…
டாக்டர் அவளின் உடையை மாற்றி விட சொல்லி விட்டு சென்றிருக்க, அவசரத்திற்கு அவளின் உடைக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை மகாலட்சுமிக்கும் சித்ராவுக்கும், அவ்வீட்டில் வேறு பெண் பிள்ளைகள் இல்லை, மகாலட்சுமியோ புடவை மட்டும் தான் அணிவார், அவளுக்கு அச்சமயம் அதை அணிந்து விடவும் முடியாது…
என்ன செய்வது என யோசித்து அந்த அறை முழுதும் அலசிய போது தான் மகாலட்சுமியின் கைகளுக்கு அகப்பட்டது அந்த உடை, விஷ்வசாஹரனின் வெள்ளை நிற சட்டை…
அவசரத்திற்கு பாவம் இல்லை என அவளுக்கு இருவரும் அதை அணிவித்து விட்டவர்கள், அங்கிருந்த பெட்சீட்டினால் அவளை மார்பு வரை போர்த்தி விட்டு சென்றிருந்தனர்…
ஆத்யா ஷாலினி காலையில் எழுவாள் என அவர்கள் நினைத்து தான், விடிந்ததுமே நேரத்துடன் அவளின் உடையை ஹாஸ்டலில் இருந்து எடுத்து வந்து விடலாம் என்ற திட்டதுடன் தான் இந்த உடையை அவளுக்கு அணிவித்தே இருந்தனர்…
இப்போது தன்னை குனிந்து பார்த்தவளுக்கு பேரதிர்ச்சி, அவள் தன் வாழ்நாளிலேயே இவ்வாறு உடை அணிந்தது இல்லை. சின்ன வயதில் இருந்தே நாகரிகமான உடைகளை அணிந்து பழகியவளுக்கு, இந்த உடையை யாரும் இல்லாத அறைக்குள் போட்டுக் கொண்டிருப்பது கூட சங்கடமாக இருந்தது…
அவள் தன் உடை எங்கே என்று அறையை சுற்றி தேட, அதுவோ ஒரு ஓரத்தில் ஈரமாக கிடந்ததது. அதை அவளால் இப்போது எடுத்து அணியவும் முடியாது, என்ன செய்வது என யோசித்தபடியே மீண்டும் அறைக்குள் வந்து கட்டிலில் அமர்ந்து விட்டாள்…
தொடரும்…