STN - 77
New member
அத்தியாயம் 12
இப்படியே ஒரு வாரம் கடந்திருக்க, அன்று ஞாயிற்றுக்கிழமை. இந்த ஒரு வாரத்தில் அந்த அளவுக்கு பெரிதாக எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்கவில்லை. அவரவர் அவரவரின் வேலைகளை பார்த்தபடி தான் இருந்தனர். ஆத்யா ஷாலினியோ காலையில் நேரத்துடன் எழுந்து, மகாலட்சுமிக்கு ஏதேனும் உதவிகள் செய்துவிட்டு, அவள் காலேஜிற்கு கிளம்பி சென்றுவிடுவாள்…
மீண்டும் காலேஜ் முடிந்து மாலை வீட்டிற்கு வந்து மகாலட்சுமி உடனே நேரத்தை செலவிடுபவள், இரவு அனைவருடனும் அமர்ந்து உணவருந்தி விட்டு தூங்கிவிடுவாள். இதுதான் இந்த ஒரு வாரமாக அவளின் வழக்கமாக இருந்தது…
இன்னொரு பக்கம் சாஹரனோ கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தான் என்று தான் சொல்ல வேண்டும். ஆம் காலையில் நேரத்துடனே எழுபவன் ஆத்யா ஷாலினி அறையை விட்டு வெளியே வரும் முன்னே உணவு அருந்திவிட்டு நேரத்துடனே ஆபிசுக்கு கிளம்பிடுவான். அதே போல் இரவில் அனைவரும் தூங்கிய பிறகு தான் அவன் வீட்டிற்கு வருவான்…
சொல்லப்போனால் இந்த ஒரு வாரமாக மகாலட்சுமியை தவிர்த்து அந்த வீட்டில் அவனை யாருமே பெரிதாக பார்த்திருக்கவில்லை. சரணும் சரத்தும் கூட அவனை ஆபீஸில் காண்பதோடு சரி, அதற்கு பிறகு அவனை காண்பது அறிது தான்…
அதே போல் ஆத்யா ஷாலினியும் அவன் கிளம்பி விட்டானா என பார்த்து விட்டு தான் காலையில் அறை விட்டே வெளியே வருவாள், அதே போல் இரவில் அவன் வருவதற்கு முன்னே சாப்பிட்டு விட்டு நேரத்துடனே உறங்க சென்று விடுவாள்…
இப்படி மாறி மாறி கண்ணாமூச்சி விளையாட்டு ஆடிக் கொண்டிருந்தவர்களின், விளையாட்டை முடித்து வைப்பதற்காகவே விடிந்தது ஞாயிறு கிழமை…
இன்று தன்னுடைய சித்தியும் சித்தப்பாவும் முக்கியமாக அவளின் தங்கைகள் வருவார்கள் என நினைத்து சந்தோஷமாக இருந்த ஆத்யாவோ அவ்வீட்டில் பட்டாம்பூச்சியாக தான் சுற்றி திரிந்தாள்…
“என்ன ஆதி இன்னைக்கு ஓரே குஷியா இருக்க போல? முகம் அவ்வளவு பிரகாசமா இருக்கு…” என அவளை கூப்பிட்டு விஷ்வநாதன், மகாலட்சுமி, சரத் மற்றும் விஷ்வேஸ்வரன் என அனைவரும் விசாரித்து இருந்தனர். ஏன் என்றால் அவளின் முகம் அவ்வளவு பிரகாசமாக இருந்தது…
இன்று லீவ் நாள் என்பதனால் விஷ்வசாஹரன் உட்பட அனைவருமே வீட்டில் தான் இருந்தனர். சாஹரனுக்கு வேறு வழியும் இருக்கவில்லை, அன்று வீட்டில் இருந்தாக வேண்டிய கட்டாயம் தான்…
ஆனால் இன்னும் அவன் எழுந்து வெளியே வந்திருக்கவில்லை, அவன் மட்டும் அல்ல சரண், சரத் கூட எழுந்து இருக்கவில்லை. லீவ் நாள் என்பதனால் மூவரும் இழுத்து போர்த்தி தூங்கிக் கொண்டிருந்தனர்…
“என்ன லஷ்மி மா, எப்பவும் எல்லாரும் நேரத்தோட எழுந்துருவாங்க, இன்னைக்கு என்ன இப்டி தூங்கிறாங்க…” என புரியாமல் அவரிடம் கேட்டாள் பெண்ணவள்…
“இது வழக்கமா நடக்குறது தான் ஆதி, சண்டேனாலே மூனு பேரும் இப்டி தான் இழுத்தி போர்த்திட்டு தூங்குவாங்க, மதியம் ஆகும் அவங்க எழுந்து வர மாட்டானுங்க…” என அடுப்பில் இருந்த சாம்பாரை கிண்டியப்படியே அவளின் கேள்விக்கு பதில் கூறினார்…
“ஓஓ அப்டியா சரி சரி, லஷ்மா இன்னைக்கு எனக்கும் லீவு தானே அதனால இன்னைக்கு எல்லாருக்கும் நானே சமைக்கட்டா?” என அவரின் அருகில் வந்து அவரின் தோளில் தன் நாடியை பதித்த படியே கேட்டாள் ஆத்யா ஷாலினி…
“ஆதி இன்னைக்கு உன் சித்தப்பா, சித்தி, சாண்வி, சாத்வினு எல்லாருமே வருவாங்க, அது இல்லாம இன்னைக்கு வீட்டுல வேற எல்லாரும் இருக்காங்க, சோ நிறைய சமைக்கணும். உன்னால தனியா எப்படி முடியும். நீ ஹெல்ப் பண்ணு நாம இரண்டு பேரும் சேர்ந்தே சமைக்கலாம்…” என மறுப்பாக கூறியிருந்தார்…
“அய்யோ லஷ்மி மா எனக்கு ஏற்கனவே இப்படிலாம் சமைச்சு நல்ல பழக்கம் இருக்கு, அதலாம் பிரச்சினையே இல்ல. நீங்க ஹெல்ப் பண்ணுங்க, கொஞ்ச நேரத்துல மாலா அக்காவும் வந்துருவாங்க, எனக்கு அது போதும்…” என அவரை சமாதானம் செய்ய முயற்சித்தாள்…
(மாலா அவ்வீட்டிற்கு வேலைக்கு வரும் பெண்மணி…)
“சரி சரி அது மதிய சாப்பாட்டுக்கு தானே அத அப்போ பார்த்துக்கலாம், இப்போ டிபன் ரெடி ஆகிருச்சி, காபியும் ரெடி நான் டிபன் எடுத்து வைக்குறன் நீ போய் எல்லாருக்கும் காபி கொடுத்துட்டு வா…” என அவளின் கையில் காபி தட்டை திணித்திருந்தார்…
ஆத்யாவோ ஒரு கணம் காபி தட்டை பார்த்து விட்டு தன் முன் நின்ற மகாலட்சுமியை கேள்வியா நோக்கினாள்…
“என்ன பார்க்குற? ஏன் இத்தன கப் வைச்சு இருக்கேன்னா? அது என் மூனு பிள்ளைங்களுக்கு சேர்த்து போய் எல்லாரையும் எழுப்பி விடு…” என அவர் கூறி இருக்க, அதை கேட்ட பெண்ணவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்துக் கொண்டது…
“என்னது நான் அவங்கள எழுப்பி விடனுமா? சரத் கூட ஓகே, ஏன் சரண் கூட எழுப்பிருவேனா, ஆனா சா…” என இழுத்தவள் சொல்ல வந்ததை விழுங்கி விட்டு “அவர எப்டி நான் போய் எழுப்ப, நான் இப்போ போய் எழுப்பினா, என் மூச்சு மேலயே இந்த காபிய ஊத்துவாரு…” என பயந்தப்படியே மகாலட்சுமியை பார்த்துக் கூறினாள்…
அதைக் கேட்டு மென்மையாக சிரித்துக்கொண்ட மகாலட்சுமியும் அவளின் கன்னம் கிள்ளி “என் தங்கம்ல போய் தாத்தாக்கும் என் புருஷனுக்கும் இந்த காபியை கொடு, அப்படியே அவங்க மூணு பேருக்கும் காபி கொடுத்து எழுப்பி விடுடா. இன்னும் கொஞ்ச நேரத்துல உன் சித்தப்பா, சித்தி, பசங்கனு எல்லாரும் வந்துருவாங்க, எனக்கு இங்க நிறைய வேலை இருக்கு, ப்ளீஸ் எனக்காக போ ஆதி மா…” என அவளிடம் கெஞ்சி கேட்டிருக்க, அவர் இவ்வாறு கேட்ட பிறகு அவள் எப்டி மறுப்பாள், தயக்கமாகவே காபி தட்டை தூக்கிக்கொண்டு முன் கூடத்திற்கு சென்று இருந்தாள்…
அங்கு விஷ்வநாதனோ டிவியில் செய்தி பார்த்துக் கொண்டிருக்க, தள்ளி இருந்த கதிரையில் அமர்ந்து விஷ்வேஸ்வரன் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார்…
முதலில் விஷ்வேஸ்வரன் அருகில் சென்றவள் “தாத்தா காபி…” என அவரின் முன் தட்டை நீட்ட அவரோ நிமிர்ந்து அவளை பார்த்து சிரித்துக் கொண்டே காபியை எடுத்தவர்…
ஒரு கணம் காபி தட்டை பார்த்துவிட்டு, நிமிர்ந்து அவளை பார்த்தவர் “என்ன இத்தன காஃபி?” என யோசனையாக கேட்டார்…
அதற்கு ஆத்யாவோ இதழ்களை சுழித்தப்படியே “உங்க மருமகளுக்கு அவங்க மகானுங்க மூணு பேரையும் நான் இப்ப எழுப்பி விடணுமாம், அவங்களுக்கு கிச்சன்குள்ள வேலை இருக்கிறதால என்னை எழுப்பி விட சொல்லிட்டாங்க, அதுதான் அவங்களுக்கும் சேர்த்து இத்தன காப்பி…” என குரலில் ஏற்றத்தாழ்வுடன் கூறியிருந்தாள்…
அவரோ அதை கேட்டு அவளை பார்த்து நக்கலான சிரிப்புடன் “ஆல் த பெஸ்ட் ஆதி…” என கூறி இருக்க, அவரின் நக்கல் அறியாதவளா அவள் சின்ன வயதில் இருந்து பார்க்கின்றாளே, “உனக்கு வயசு ஆனாலும் இன்னும் இந்த நக்கல் விட்டு போகலல, ஒரு நாளைக்கு இருக்கு உனக்கு…” என விஷ்வேஸ்வரனை முறைத்துக் கொண்டே பெண்ணவள் கூறி இருந்தாள்…
அவள் அப்படி தான் சில வேளைகளில் அவருடன் விளையாட்டாக வா, போ என பேசுவாள், அவரும் அவளுக்கு குறையாத விளையாட்டுடன் அவளிடம் வாயாடுவார்…
“அட போடி யாருக்கு வயசு ஆச்சு, நான் இன்னும் யங் மென் தான்…” என பெருமையாக கூறினார்…
“க்கும் நினைப்பு தான்…” என தோளில் நாடியை இடித்துக் கொண்டவள் அங்கிருந்து அகன்று விஷ்வநாதனுக்கும் காபி கொடுத்தவள், அடுத்தது நேராக சென்றது என்னவோ சரத்தின் அறைக்கு தான் முதலில் ஆபாத்து இல்லாத இடத்தில் இருந்து ஆரம்பிப்போம் என் நினைத்தவள், அவன் அறையை தான் தட்டியிருந்தாள்…
அறை தட்டும் சத்ததில் அவனும் தூக்க கலக்கத்தில் கண்களை கசக்கியப்படியே, வந்து கதவை திறந்தவன் அங்கு நின்ற ஆத்யாவை ஆச்சரியமாக பார்த்தான்…
“ஹேய் ஆதி என்ன இந்த பக்கம்…” என கேட்டப்படியே அவள் நீட்டிய தட்டில் இருந்து காபி கப் ஒன்றை எடுத்துக் கொண்டவன் “குட் மார்னிங்…” என சிரித்தப்படியே கூறியிருந்தான்…
அவளும் தன் நண்பனை பார்த்து சிரித்தவள் “குட் மார்னிங் சரத், லஷ்மி மா தான் உங்க எல்லாரையும் காபி கொடுத்து எழுப்ப சொன்னாங்க, சீக்கிரம் குளிச்சு கீழ சாப்பிட வரட்டாம்…” என கூறியவள் அங்கிருந்து அடுத்ததாக சரணின் அறைக்கு தான் சென்றிருந்தாள்…
அவளோ அவன் அறைக்கு முன்னால் சென்று கதவை தட்ட கையை உயரத்திய சமயம் பட்டென கதவு திறந்துக் கொண்டது, அதை பார்த்து ஒரு கணம் பயந்தவளோ இரண்டடி பின்னால் சென்றிருக்க, அங்கு குளித்து முடித்து தயாராகி வெளியே வந்த சரணோ தன் அறைக்கு முன்னால் வந்து நின்ற தன் தோழியை புருவம் சுருக்கி பார்த்தான்…
அவளோ கையில் இருக்கும் காபி தட்டை அவனின் முன் நீட்டியவள் “லஷ்மி மா காபி கொடுக்க சொன்னாங்க…” என அவனின் முகத்தை பார்த்து கூறினாள்…
ஆனால் அவனோ அவளை பார்க்காது வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் நீட்டிய காபியை எடுக்க கையை நீட்டி இருக்க, அவளோ அதை அவன் எடுக்காதவாறு விலக்கி பிடித்திருந்தாள்…
அதை பார்த்தவன் இப்போது ஆத்யாவை முறைக்க, அவளோ கொஞ்சமும் அசராது “இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்டியே மூச்ச தூக்கி வச்சுட்டு இருக்க போற சரண்? அப்டி என்ன பண்ணிடேன் னு இத்தன வருஷமா என்கூட பேசமா இருக்க?” என கோபமாக அவனை பார்த்து கேட்டாள்…
அவனோ “நான் எங்க பேசம இருந்தேன், என்கூட பேசாதவங்களோட பேசாம இருந்தேன், அவ்வளவு தான்…” என கூறியவன் அந்த தட்டில் இருந்த இரண்டு காபி கப்பில் ஒரு கப்பை எடுத்து விட்டு, “நீ அந்த காபிய யாருக்கு கொடுக்க வந்தியோ, அத கொடுக்கமா போறது தான் நல்லது…” என கூறியவன் அவளை தாண்டி சென்றிருந்தான்…
ஆத்யாவோ “போட லூசு பயலே உன்கிட்ட வந்து பேசுனேன் பாரு என்னை எதால அடிக்குறதுனு எனக்கே தெரில…” என ஆரம்பத்தில் அவன் பேசியது புரியாத கடுப்பில் அவனை திட்டியவள், இப்போது அவன் செல்லும் வழியை திரும்பி பார்த்து “நீ சொல்லுறத நான் கேக்க போறது இல்ல, இந்த காபி கொடுக்க தான் போறேன்…” என வீம்பாக அவனை பார்த்துக் கூறியவள் விறுவிறுவென சாஹரனின் அறையை நோக்கி சென்றுவிட்டாள்…
அவள் செல்லும் வரை அவளையே பார்த்திருந்த சரணோ, அவள் சென்றதும் இதழ்களிற்கு இடையில் தோன்றிய குறுநகையை மறைத்தப்படியே கீழ் இறங்கி சாப்பிடுவதற்காக சென்றிருந்தான்…
இங்கு சரணிடம் தைரியமாக பேசிவிட்டு வந்திருந்தாலும் இப்போது சாஹரனின் அறைக்கும் முன் வந்து நின்றவளிற்கு கைகால்கள் எல்லாம் நடுக்கம் கண்டது, ஆத்யாவின் கையோடு சேர்த்து அவளின் கையில் இருந்த தட்டும் ஆட்டம் காண, “அய்யோ எவ்வளவு தைரியமா இருந்தலும், இவர நினைச்சா மட்டும் எங்க இருந்து தான் இந்த பயம் வருதோ தெரிலயே…” என தனக்கு தானே புலம்பிக் கொண்டவள் அறைக் கதவை சத்தமே வாரது தட்டி இருந்தாள்…
சத்தமே வராது தட்டினால் எங்கிருந்து உள்ளிருப்பவனுக்கு அது கேட்க போகிறது, “அய்யோ பேசமா அவர் கதவ திறக்கலனு சொல்லி காபி திறம்ப கொண்டு போயிறலாமா? இல்ல வேணா வேணா அப்றம் தாதா, சரண், லஷமி மா னு எல்லாரும் என்னை பார்த்து சிரிப்பாங்க, உள்ள என்ன பூதமாக இருக்கு, காபி தானே குடுத்துட்டு போயிரலாம்…” என தனக்கு தானே ஆறுதல் கூறிக் கொண்டவள், கதவை தட்ட, அவள் கைப்பட்ட நொடி அவன் அறை கதவு சட்டென திறந்துக் கொண்டிருந்தது…
அதில் பதறி “முருகா முருகா நான் எதுமே பண்ணல…” என சத்தமாக கண்களை மூடியப்படி பேசியவளோ, எந்த அசைவும் இல்லாது போக ஒற்றை கண்ணை மட்டும் திறந்து பார்த்திருந்தாள்…
அங்கு அறையோ வெறுமையாக காட்சியளிக்க, இப்போது இரு கண்களையும் நன்றாக திறந்து சுற்றும் முற்றும் பார்த்தவள் “எங்க யாரையும் காணும், ஒரு வேல வீட்ல இல்லையோ…” என யோசித்தப்படியே ஒரு கணம் தயங்கியவள் மெதுவாக அறைக்குள் சென்று அறையை விழிகளினால் துலாவி பார்த்தாள்…
உள்ளே யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லாது இருக்க, சரி கிளம்பலாம் என திரும்பி செல்ல எத்தனித்தவளின் கைகளை பிடித்து சுழற்றி பக்கத்தில் இருந்த சுவரில் அவளை சாற்றி தன் கைகளை அவளுக்கு இரு பக்கமும் அணையாக போட்டப்படி அவளை முறைத்து பார்த்தப்படி நின்றிருந்தான் விஷ்வசாஹரன்…
நொடியில் நடந்தேறி நிகழ்வில் பெண்ணவள் உறைந்து விட்டாள், அவள் கைகளில் இருந்த தட்டு கீழே நழுவி விழ போக அதற்கு முன் அதை ஒற்றை கையால் பிடித்த சாஹரனோ பக்கத்தில் இருந்த மேசையில் அதை வைத்திருந்தான்…
ஆத்யா ஷாலினியோ அவனை விழி விரித்து பார்க்க, அவனோ அவளை ஒரு கணம் உறுத்து விழித்தவன் மெதுவாக அவளின் முகம் நோக்கி குனிந்திருந்தான்…
அதை பார்த்த பெண்ணவளுக்கோ அன்று சமயலறையில் அவன் அவளை முத்தமிட்ட கனவு நினைவுக்கு வர, தன் கண்களை இறுக்க முடியப்படி சுவருடன் சுவராக ஒன்றியவளோ “முருகா முருகா முருகா…” என பயத்தில் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டாள்…
சாஹரனோ சற்று நிமிர்ந்து அவளையும் முணுமுணுக்கும் அவளின் இதழ்களையும் ஒரு கணம் பார்த்தவன், அவளின் காதின் அருகில் குனிந்து “இன்னொரு தடவ என் ரூம்குள்ள பெர்மிஷன் இல்லாம வந்த, நீ கனவுல கண்டது எல்லாம் நிஜத்துலயும் நடக்கும்…” என அவளின் காதில் தன் கர்ஜிக்கும் குரலில் கூறியவன் அவளை விட்டு விலகி நின்று விட்டான்…
அவன் கூறியதை கேட்டு பட்டென கண்களை திறந்துக் கொண்டவளோ அவனை பார்த்து இதழ்கள் தத்தியடிக்க, “இனி உங்க ரூம் பக்கமே வர மாட்டேன்…” என உள் சென்ற குரலில் கூறியவள் அவனின் அறையை விட்டு ஓரே ஓட்டமாக ஓடி வெளியே வந்திருந்தாள்…
தொடரும்…