அத்தியாயம் 13
சாஹரனின் அறையை விட்டு வெளியே வந்தவளோ, நேராக மாடிப்படியில் பதட்டமாக கீழே இறங்கி வந்திருக்க, அப்போது வீட்டின் வாசலில் இருந்து “ஆதி கா…” என கத்திக்கொண்டே அவளின் இரு அன்பு தங்கைகளான சாண்விக்காவும் சாத்விகாவும் ஓடி வந்து அவளை இரு பக்கமும் இறுக்கமாக அணைத்துக் கொண்டிருந்தனர்…
“ஹேய் சாண்வி, சாத்வி எப்படி இருக்கீங்க? என தன்னை வந்து அணைத்த இருவரையும் தானும் அணைத்து கொண்டவள், அவர்களின் தலையை வருடியப்படியே கேட்டிருந்தாள்…
“நாங்க ரொம்ப நல்லா இருக்கோம் கா,” என இருவரும் ஓரே நேரத்தில் கூறியிருந்தனர், அப்போது சாண்வியோ ஆத்யாவை பார்தது “அக்கா அப்புறம் எக்ஸாம்ல நாங்க ரெண்டு பேரும் நல்ல ரிசல்ட் எடுத்து பாஸ் பண்ணிட்டோம்…” என சந்தோஷமாக கூறியிருந்தாள்…
அதைக் கேட்டு ஆத்யா ஷாலினியும் அவர்களை பார்த்து சந்தோஷமாக சிரித்துக் கொண்டாள், இவர்களின் சத்தம் கேட்டு விஷ்வ சாஹரனை தவிர்த்து அனைவரும் முன் கூடத்திற்குள் வந்திருக்க, அங்கு வந்த மகாலட்சுமியோ சாண்விகாவையும் சாத்விக்காயும் பார்த்து “அட இது நம்ம சாண்வி, சாத்வியா எவ்ளோ பெருசா வளந்துட்டாங்க, சின்ன வயசுல பார்த்தது…” என இருவரையும் பார்த்து கூறியிருந்தார்…
அவர்களோ அவரைப் பார்த்து “ஆன்ட்டி எப்படி இருக்கீங்க?” என கேட்டபடி அவரின் அருகில் வந்து அணைத்துக் கொண்டனர், “வாங்க வாங்க எல்லாரும் உள்ள வாங்க…” என விஸ்வநாதனும் அங்கு வந்து சித்ரா, ராஜேந்திரன் மற்றும் சாண்விகா, சாத்விகா என அனைவரையும் வரவேற்று உள்ளே அழைத்து சென்றிருந்தனர்…
அப்போது அங்கிருந்த இரு ஜோடி விழிகள் ஒன்றை ஒன்று யாரும் அறியாத வகையில் பார்த்துக்கொள்ள, அங்கிருந்த யாரும் அதை சரியாக கவனித்திருக்கவில்லை…
சித்ராவும் ராஜேந்திரனும் இன்று வந்தது என்னவோ ஆத்யா ஷாலினியிடம் இந்த திருமணத்தைப் பற்றி சொல்லி அவளிடம் சம்மதம் வாங்கும் நோக்கத்துடன் தான், இதை அங்கிருந்து சிறியவர்கள் யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை…
அதே சமயம் விஸ்வேஸ்வரனும் இன்று தான் சாஹருடன் இதைப் பற்றி பேசுவதற்காக எண்ணி இருந்தார், இப்படி பெரியவர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் ஒவ்வொரு யோசனை செய்து வைத்திருக்க, சிறியவர்களோ இதைப் பற்றி அறியாது சந்தோஷமாக சிரித்து பேசியபடி அமர்ந்திருந்தனர்…
அப்படியே அனைவரும் ஒன்றாக அமர்ந்து காலை உணவையும் முடித்தவர்கள், மதிய உணவையும் பேசிய படியே சமைத்து அதையும் சாப்பிட்டு முடித்திருந்தனர்…
இப்போது மாலை நேரம் நெருங்கியிருக்க, அப்போதுதான் விஷ்வேஸ்வரன் அங்கிருந்த சித்ராவிடமும் ராஜேந்திரனிடமும் கண்களை காட்டி இருந்தார். திருமண விடயத்தை பற்றி பேச சொல்லி, அவர்களும் இரவே கிளம்புவதாக இருக்க, இதை இப்போதே பேசி விடுவது தான் சரியான தோன்ற, ஆத்யாவை அவளின் அறைக்குள் தனியாக அழைத்து சென்றிருந்தனர்…
“என்ன சித்தி எதுக்கு என்னை தனியா இரண்டு பேரும் கூட்டிட்டு வந்தீங்க?” என அவள் யோசனையாக அவர்களை பார்த்து கேட்டாள்…
“ஆதி நான் சுத்தி வளச்சி பேச விரும்பல, உன்கிட்ட நேராவே விஷயத்துக்கு வரேன். சித்தப்பாவும் நானும் என்ன சொன்னாலும் நீ கேப்ப தானே? நாங்க எது பண்ணாலும் அது உன் நல்லதுக்கா தான் இருக்கும்னு நீ நம்புற தானே?” என அவளிடம் பீடிகையாக கேட்டிருந்தார்…
ஆத்யாவோ தன் சித்தி பேசுவது எதுவும் புரியாமல் யோசனையாக அவரைப் பார்த்தவள். தன் சித்தப்பாவை பார்த்து “என்ன சித்தப்பா ஏன் சித்தி இப்படி பேசுறாங்க? என்ன ஆச்சு? என புரியாமல் வினாவினாள்…
அவரோ அவளை நெருங்கி வந்து அவளின் கையைப் பிடித்து அங்கிருந்த கட்டிலில் அமர வைத்தவர், அவளின் தலையை வருடியப்படியே “சித்தி கேட்டதுக்கு பதில் சொல்லு குட்டிமா, நீ எங்கள நம்பர தானே? நாங்க எது பண்ணாலும் அது உன் நல்லதுக்குன்னு உனக்கு நம்பிக்கை இருக்கு தானே?” என அவரும் அதே கேள்வியை தான் அவளை நோக்கி வீசியிருந்தார்…
“என்னாச்சு உங்க ரெண்டு பேருக்கும்? எதுக்கு இப்படி பேசிட்டு இருக்கீங்க? நான் உங்க ரெண்டு பேரையும் நம்பாம வேற யார நம்ப போறேன்? என் நல்லத உங்கள விட வேற யாரு யோசிச்சிட போறாங்க? நீங்க இரண்டும் பேரும் எது சொன்னாலும் நான் கேட்பேன்…” என அவர்களை பார்த்து அழுத்தமாக கூறியிருந்தாள் பெண்ணவள்…
“அப்போ ஆதி ஏன் எதுக்குன்னு கேட்காம, நாங்க காட்டுற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிப்பியா? என அவளின் தலையில் குண்டை தூக்கி போட, அவர் ‘மாப்பிள்ளை’ என சொன்ன அடுத்த நொடி அவள் மனக்கண்ணில் ஒரு நொடி விஷ்வசாஹரன் தான் தோன்றி மறைந்தான்…
அவளோ அவர்களை அதிர்ந்து பார்த்தவள் “கல்யாணத்தை பத்தி எல்லாம் எதுக்கு இப்போ பேசுறீங்க?” என அதிர்ச்சியாக அவர்களை பார்த்து கேட்க, “நாங்க உனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டோம், அவன நீ கல்யாணம் பண்ணிப்பியா?” என சித்ரா அவளை பார்த்து அழுத்தமாக கேட்டிருக்க, ஆத்யா ஷாலினிக்கோ ஒரு நொடி என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை…
“சித்ரா எதுக்கு இப்படி தெளிவில்லாம பேசுற, யாரு மாப்பிள்ளைனு தெளிவா அவ கிட்ட சொல்லலாம். அதுக்கப்புறம் யோசிச்சு அவ ஒரு முடிவு சொல்லட்டும், உனக்கு இதுல விருப்பம் இல்லனாலும் நீ அதை நேரடியா சொல்லலாம் குட்டிமா, உனக்கு நிராகரிக்குறதுக்கான முழு உரிமையும் இருக்கு…” என அவளிடம் கூறியவர், “சாஹரன் தம்பி தான் மாப்பிள்ளை. உனக்கு அவர கல்யாணம் பண்ணிக்க இஷ்டமா? என அவளிடம் கேட்க, அவன் பெயரை மாப்பிள்ளை என்று கேட்ட நொடி அவள் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் உணர்ந்தாள் பெண்ணவள்…
அவர்கள் இருவரிடமும் அவள் என்ன பதில் கூறுவது என தெரியாது முழிக்க, “சொல்லு ஆதி…” என சித்ராவும் அவளிடம் கேட்டாள்…
“சித்தி அது வந்து நானே இந்த கல்யாணத்துக்கு ஓகே சொன்னாலும், அவர் இதுக்கு ஓகே சொல்ல மாட்டாரு, நீங்க எப்படி இந்த முடிவெடுத்தீங்க?” என அவள் யோசனையாக அவர்கள் இருவரையும் பார்த்து கேட்டிருந்தாள்…
அதற்கு ராஜேந்திரனோ “இங்க பாரு குட்டிமா, நீ உனக்கு விருப்பம் இருக்கா, இல்லையான்னு மட்டும் சொல்லு. இந்த விஷயம் இந்த வீட்ல இருக்க பெரியவங்க எல்லாருக்குமே தெரியும். விஷ்வேஸ்வரன் சார் கூட இப்போ சாஹரன் தம்பிகிட்டே இதை பத்தி பேச தான் போயிருக்கார். நாங்க உன்கிட்ட பேசுற போல இப்ப அவரும் சாஹரன் தம்பிகிட்ட பேசிட்டு தான் இருப்பாரு…” என கூறியிருந்தார்…
ஆத்யா ஷாலினிக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை, அவளுக்கு விஷ்வ சாஹரனை மிகவும் பிடிக்கும் ஆனால் இதற்கு அவன் ஒத்துக் கொள்வான் என்கிற நம்பிக்கை அவளுக்கு துளியும் இல்லை. ஏனென்றால் அவள் நினைத்திருந்தது என்னவோ அவனுக்கு இவளை சுத்தமாக பிடிக்காது என்று தான்…
ஆனால் பெண்ணவளோ சாஹரனின் மனதில் அவளின் மேல் இருக்கும் அளவு கடந்த காதலை அறிந்திருக்கவில்லையே, அதனால் சில நிமிடங்கள் யோசித்தவள் ஒரு முடிவெடுத்தபடி தன் சித்தியையும் சித்தப்பாவையும் நிமிர்ந்து பார்த்தாள்…
“நீங்க இரணடு பேரும் சொல்லி என்னைக்குமே நான் உங்க பேச்ச தட்டுனது இல்லை. என் சித்தியும் சித்தப்பாவும் எது பண்ணாலும் அது என் நல்லதுக்காக மட்டும் தான் இருக்கும் னு நான் நம்புறேன். அவர் இந்த கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டா, எனக்கும் இந்த கல்யாணத்துல மனப்பூர்வமான சம்மதம்…” என தன் முடிவை அவர்களிடம் கூறி இருந்தாள்…
அவள் கூறியதை கேட்டு ராஜேந்திரனுக்கும் சித்ராவிற்கும் அவ்வளவு சந்தோஷம். அவர்களின் முகம் புன்னகையில் விரிய, “ரொம்ப சந்தோஷம் டா…” என அவளிடம் கூடியவர்கள். அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தனர், இந்த விடயத்தை அனைவருக்கும் சொல்லும் பொருட்டு…
இதே சமயம் விஷ்வ சாஹரனின் அறைக்குள் அமர்ந்திருந்தார் விஷ்வேஸ்வரன்…
அவனோ தன் தாத்தாவை கேள்வியாக நோக்கி கொண்டிருக்க, அவரோ ஆண்மகனவனை ஒரு கணம் நிமிர்ந்து அழுத்தமாக பார்த்தவர், “நாங்க எல்லாரும் சேர்ந்து உனக்கு ஆத்யாவ கல்யாணம் பண்ணி வைக்கலாம் முடிவு பண்ணி இருக்கோம். உனக்கு சம்மதமா?” நேரடியாக அவனிடம் விஷயத்தை கூறிருந்தார்…
அதைக் கேட்டு அவனோ தன் தாத்தாவை புருவம் சுருக்கி பார்த்தவன் “என்ன விளையாடுறீங்களா? இதுக்கு அவ ஒத்துக்கவே மாட்டா…” என அவன் தன் விருப்பம் என்னவென்று கூறாது, ஆத்யாவை பற்றி கூறினான்…
“சாஹரா நான் உன்கிட்ட கேட்ட கேள்வி உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமானு மட்டும் தான். அதுக்கு மட்டும் பதில் சொல்லு…” என அழுத்தம் திருத்தமாக அவனிடம் கூறியிருந்தார்…
இப்போதுதான் புரிகிறது, சாஹரனுக்கு இந்த அழுத்தம், கோபம், ஈகோ இதெல்லாம் எங்கிருந்து வந்தது என, எல்லாம் அவன் தாத்தாவிடம் இருந்து அவனுக்கு வந்தது தான்…
அவனும் அதே குறையாத அழுத்தத்துடன் அவரைப் பார்த்தவன், “அவளுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இருந்தா, எனக்கும் சம்மதம்…” என ஆத்யா ஷாலினி எப்படி தன் விருப்பத்தை கூறியிருந்தாளோ, அதேபோல் அவனும் கூறியிருந்தான்…
இப்போது விஷ்வேஸ்வரனின் முகம் புன்னகையில் விரிய, “இது போதும் கூடிய சீக்கிரமே உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம்…” என அவனிடம் கூறியவர், அவனையும் கையோடு அழைத்துக் கொண்டு வெளியே வந்திருந்தார்…
அங்கு அப்போதுதான் விஷயம் கேள்விப்பட்டு சரண், சரத் மற்றும் சாண்விகா, சாத்விகா என அனைவரும் பதற்றமாக அமர்ந்திருக்க, விஷ்வநாதனும் மகாலட்சுமியும் கூட இருவரும் என்ன பதில் கூறி இருப்பார்கள் என்ற யோசனையுடன் தான் அமர்ந்திருந்தார்கள்…
அச்சமயம் சரியாக சித்ராவும் ராஜேந்திரனும் ஆத்யாவை அழைத்துக் கொண்டு வர, விஷ்வேஸ்வரனும் சாஹரனுடன் அங்கு வந்து சேர்ந்திருந்தார்…
வந்தவர்களை அனைவரும் கேள்வியாக நோக்க, சித்ராவோ புன்சிரிப்புடன் “ஆதி ஓகே சொல்லிட்டா…” என்று கூறினார்…
அதை கேட்டு சாஹரனோ சட்டென்று திரும்பி ஆத்யாவை பார்த்தான், அதே போல் வாயெல்லாம் புன்னகையாக விஷ்வேஸ்வரனும் “சாஹரனும் ஓகே ன்னு சொல்லிட்டான்…” எனக் கூறியிருக்க, அவ்வளவு நேரமும் கீழே குனிந்து கொண்டிருந்த ஆத்யா ஷாலினியோ வெடுக்கென நிமிர்ந்து சாஹரனை அதிர்ந்து பார்த்திருந்தாள்…
இருவரின் விழிகளும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ள, அவ்விழிகளில் பல கோர்வையான உணர்வுகள் குழப்பம், அதிர்ச்சி, காதல் என எல்லா உணர்வுகளும் கலந்து காணப்பட்டது…
சாஹரனோ அங்கு சிரித்துப் பேசிக் கொண்டிருந்த அனைவரையும் ஒரு கணம் அழுத்தமாகப் பார்த்தவன். தன் தாத்தாவை நோக்கி திரும்பி “நான் ஒரு நிமிஷம் தனியா பேசணும்…” என அவரிடம் கூறியிருந்தான்…
“என்ன ண்ணா இப்பதானே தாத்தாவோட தனியா பேசிட்டு வந்த, அதுக்குள்ள மறுபடி என்ன பேச போற?” என சரத் கேட்க, சாஹரனோ அதைக் கேட்டு தன் தம்பியை திரும்பி முறைத்து பார்த்திருந்தான்…
அவனுக்கோ எல்லோரின் முன்பும் ஆத்யா ஷாலினியின் பெயரை சொல்லி அழைக்க கூட முடியவில்லை. அப்படி இருக்க சட்டென திருமணம் என்பதை அவனாலே ஏற்றுக் கொள்ள முடியாத போது, பெண்ணவளின் மனநிலை எப்படி இருக்கும் என்று புரிந்து கொண்டவனோ, அவளிடம் கேட்க வேண்டிய சில கேள்விகளை கேட்டுவிட்டு இந்த திருமணத்துக்கு சம்மதம் சொல்லலாம் என நினைத்தான்…
“டேய் சும்மா இருடா…” என தன் மகனை அதட்டிய மகாலட்சுமிக்கு அவன் என்ன கூற வருகிறான் என்று நன்றாகவே புரிந்தது. “நீ ஆதிய கூட்டிட்டு போய் பேசிட்டு வாப்பா…” என அவனிடம் கூறியிருக்க, அவனும் ஆத்யாவை ஒரு கணம் அழுத்தமாக பார்த்தவன் அங்கிருந்து விறுவிறுவென வெளியேறி தோட்டத்தின் பக்கம் சென்றிருந்தான்…
ஆத்யா ஷாலினியோ ஒரு கணம் அங்கிருந்தவர்களை பார்த்து தயங்க, சித்ராவோ அவளின் தோளில் கையை வைத்து “போய் பேசிட்டு வா…” என அவளை அனுப்பி வைத்திருந்தார், அவளும் அவன் பின்னாலேயே அவன் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள்…
“எதுக்கு கல்யாணத்துக்கு ஓகே சொன்ன?” என அவன் தன் முன் வந்து நின்றவளை பார்த்து ஆத்திரமாக கேட்க, அவளோ கீழே குனிந்து பார்த்தபடி “நீங்க எதுக்கு கல்யாணத்துக்கு ஓகே சொன்னீங்க?” என அவனை நோக்கி அதே கேள்வியை திரும்ப வீசியிருந்தாள்…
அவளின் கேள்வியில் அவன் புருவங்களோ சுருங்கி விரிய, “நான் தான் உன்கிட்ட கேள்வி கேட்டேன், நீ என்கிட்ட கேள்வி கேட்காத, எதுக்கு கல்யாணத்துக்கு ஓகே சொன்ன?” என மீண்டும் அழுத்தமாக அவளை பார்த்து கேட்டான்…
அவளுக்கு அவனைப் பிடிக்கும் என்று உண்மை சொல்வதற்கு பயமாக இருந்தது. அதே சமயம் பொய் சொல்லவும் வாய் வரவில்லை…
அதனால் “நீங்க என்ன புடிக்காதுன்னு சொல்லுவீங்கன்னு நினைச்சு நான் சரின்னு சொல்லிட்டேன். ஆனா நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு நான் எதிர்பார்க்கல…” என அவனை பார்க்காது கீழே பார்த்துக் கொண்டே கூறியிருந்தாள்…
“ஓஹோ அப்போ உனக்கு என்னை பிடிக்காது அப்டி தானே…” என சாஹரன் ஒரு மாதிரி இழுத்து அவளிடம் கேட்க, அவளோ என்ன பதில் கூறுவது என்று தெரியாது அமைதியாக நின்று இருந்தாள்…
“உனக்கு என்ன பிடிக்காதுன்னு தெரிஞ்சிருந்தா எப்பவோ உன்னை கடத்திட்டு போயாச்சும் தாலி கட்டியிருப்பேனே ப்ச்…” என அவன் உச்சுக் கொண்டி கூற, அவன் பேச்சில் அதிர்ந்து அவனை சட்டென நிமிர்ந்து பார்த்தாள் ஆத்யா ஷாலினி…
“எப்போ இந்த சாஹரன ரிஜெக்ட் பண்ணணும்குற எண்ணத்துக்கு நீ வந்தியோ, அப்பவே இந்த விஷ்வ சாஹரன் முடிவு பண்ணிட்டான். இந்த ஜென்மத்துல நீதான் என் பொண்டாட்டி, சோ பி ரெடி போ தெ வெட்டிங்” என கூறியவன், ஒரு கணம அவளை நெருங்கி அவளின் காதுகளை நோக்கி குனிந்தவன் “அண்ட் ஃபர்ஸ்ட் நைட்…” எனக் கூறிவிட்டு அங்கிருந்து அவன் சென்று விட்டான்…
சாஹரன் பேசிவிட்டு சென்றதைக் கேட்ட ஆத்யா ஷாலினியின் வயிற்றில் புளி கரைத்தாற் போல் இருந்தது, இவனுடனான தன் வாழ்க்கை என ஒரு கணம் யோசித்தவனுக்கு மயக்கமே வர, பேசாமல் உள்ளே சென்று அனைவரும் பிடிக்கவில்லை என சொல்லிவிடலாம் என யோசித்தவள் அங்கிருந்து செல்ல எத்தனித்த நேரம், யாரோ இருவர் கிசுகிசுக்கும் சத்தம் அவள் காதுகளுக்கு கேட்டது…
சத்தம் வந்த திசையை நோக்கி அவள் எட்டிப் பார்க்க, அங்கோ சரத்தும் சாத்விகாவும் கட்டியணைத்தபடி நின்றிருந்தனர், அதை பார்த்த ஆத்யா அதிர்ச்சியில் உறைந்து போய் நின்று விட்டாள்…
தொடரும்…

Author: STN - 77
Article Title: தழலை அணைக்கும் அமுதகமே - 13
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.