தழலை அணைக்கும் அமுதகமே - 14

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 77

Member
Jun 4, 2026
23
51
13
அத்தியாயம் 14

ஆத்யாவோ பேச்சு வராமல் அவர்கள் இருவரையும் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்க, சரத்தை கட்டி பிடித்திருந்த சாத்விகாவோ நிமிர்ந்து பார்த்த சமயம், அவளின் அக்கா அவர்களை வெறித்து பார்த்துக் கொண்டிருப்பது தெரிய, பதறிக்கொண்டு அவனிடம் இருந்து விலகி நின்று இருந்தள் பெண்ணவள்…

“அக்கா…” என சொல்லியபடி அதிர்ச்சியாக அவள் பார்க்க, அதே அதிர்ச்சி தான் ஆத்யா ஷாலினிக்கும், “அக்காவா? என்ன சொல்ற? என கேட்டபடி சரத் அவள் பார்வை சென்ற இடத்தை திரும்பி பார்க்க, அங்க நின்ற ஆத்யாவை பார்த்து அவனுமே அதிர்ந்து விட்டான்…

அவள் அதிர்ச்சி எல்லாம் ஒரு கணம் தான். அடுத்த நிமிடம் அது முறைப்பாக மாற்றம் பெற, அவர்கள் இருவரையும் நோக்கி வந்தவளோ “என்ன நடக்குது இங்க?” என கோபமாக கேட்டிருந்தாள்…

“அக்கா நான் இல்ல க்கா இவர் தான், வேணாம் வேணாம்னு சொல்ல சொல்ல கேட்காம, என்னை கூட்டிட்டு வந்து கட்டிப்பிடிச்சார்…” என பதற்றத்தில் சாத்விகா உளற, “அடியே என்னடி ஏதோ நான் உன்னை வலுக்கட்டாயமாக கட்டி பிடிச்ச போல சொல்ற?” என அதிர்ந்து போய் தன் காதலியை திரும்பி பார்த்தான் சரத்…

அவர்கள் இருவரும் பேசுவதை மாறி மாறி பார்த்தவள், “என்ன தான் நடக்குது இங்க? எனக்கு ஒண்ணுமே புரியல, உங்க ரெண்டு பேருக்கும் எப்படி ஒருத்தர ஒருத்தர் தெரியும்?” என அவள் புரியாமல் கேட்க, சரத்தோ தன் பின்னங்கழுத்தை வருடிக் கொண்டே “அது தான் உனக்கே தெரியுமே ஆதி, சின்ன வயசுல இருந்தே தெரியுமே…” என அவன் கூறினான்…

ஒரு அவளோ தான் தோழனை கூறியதை கேட்டு அவனை கோபமாக முறைத்து பார்த்தவள் “என்ன நக்கலா? எனக்கு அது தெரியாது பாரு, நாம தான் யாருமே பத்து வருஷமா சந்திக்கல தானே, அப்போ எப்படி உனக்கு சாத்விய இப்போ தெரியும்?” என கேட்க அவனோ திரும்பி சாத்விகாவை பார்த்திருந்தான்…

“அக்கா அது வந்து…” என தன் அக்காவின் பக்கத்தில் வந்து அவளின் கையை பிடித்து சாத்விகா பேச, ஆத்யாவோ தன் தங்கையின் கையை தட்டி விட்டவள் “என்னை சமாதானப்படுத்த பார்க்காதே, மரியாதையா என்ன நடக்குதுன்னு சொல்லு…” என கோபமாக தன் தங்கையிடம் கேட்டாள், அவளுக்கோ இருக்கும் பிரச்சினையில் இது வேற என்கிற எரிச்சலும் கடுப்பும் தான்…

“சரி நான் சொல்றேன் ஆனா நீ இப்டி கோபப்படாத, நீ என்கிட்ட இப்டி கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை…” என உள் சென்ற குரலில் தன் அக்காவை பார்த்து கூறியவள் “நான் போன வருஷம் ஐடி கேம் ஒன்னு போயிருந்தேன் நினைவிருக்கா உனக்கு?” என கேட்டாள்…

அதைக் கேட்டு ஆத்யாவோ “ஆமா நினைவிருக்கு…” என கூற, “அப்பத்தான் இவர அங்க பார்த்தேன். இவரும் அங்க வந்திருந்தார். பார்த்ததும் பிடிச்சி இருந்ததால சும்மா பேசுனோம், பேசன அப்றம் தான் ஒருத்தருக்கு ஒருத்தர் யாருன்னே தெரிஞ்சது. அதுல இன்னும் நெருக்கமா பேச ஆரம்பிச்ச நாங்க, எப்ப லவ் பண்ண ஆரம்பிச்சோன்னே தெரியல க்கா, இப்போ வர சின்சியரா லவ் பண்ணிட்டு இருக்கோம். ப்ளீஸ் கா இப்ப போய் இத பத்தி அம்மா கிட்ட சொல்லிடாத, அம்மா என்னை கொன்றுவாங்க…” என பயந்தபடியே தன் அக்காவின் கையை ப் பிடித்து கெஞ்சி கேட்டாள்…

சரத்தும் அதே போல் “ஆமா ஆதி இப்போ சொல்ல வேணாம். உனக்கும் அண்ணாக்கும் கல்யாணம் முடிஞ்சதும், இந்த விஷயத்தை வீட்ல ஓபன் பண்ணலாம்னு இருக்கேன். இப்ப சொன்னா தேவையில்லாத பிரச்சினை தான்…” என அவன் கூற, பெண்ணவளோ அதை கேட்டு மனதுக்குள் அதிர்ந்து விட்டாள்…

“எது எங்க கல்யாணம் முடிஞ்சு அப்புறமா? நான் கல்யாணத்தை நிறுத்துற ஐடியாவுல இருந்தா, அதுக்கும் ஆப்பு வைக்கிறாங்களே…” என தன் மனதுக்குள் புலம்பியவள், அவர்களைப் பார்த்து என்ன கூறுவது என்றே தெரியாது. “என்னமோ பண்ணுங்க…” என்றபடி அங்கிருந்து வந்து விட்டாள்…

இப்போது அவளுக்கு திருமணத்தை கூட நிறுத்த முடியாத நிலை தான். எங்கே திருமணத்தை நிறுத்த போய் அது தன் தங்கை மற்றும் தோழனின் வாழ்க்கைக்கு பிரச்சினையாக வந்துவிட்டால் என்ன செய்வது என யோசித்தவளோ, நடப்பதே நடக்கட்டும் என அனைத்தையும் இறைவன் தலையில் போட்டவள் யாரிடமும் எதுவும் கூடாது, சம்மதம் கூறியது கூறியதாகவே இருக்கட்டும் என முடிவெடுத்தவள் அமைதியாக இருந்து விட்டாள்…

அதே சமயம் இங்கு சாஹரன் வீம்புக்கு என அவளிடம் பேசிவிட்டு வந்திருந்தாலும் இந்த திருமணத்தை நிறுத்தும் நோக்கத்துடன் தான் அங்கிருந்து வந்திருந்தான்…

அவன் மனதில் தான் ஆத்யா ஷாலினியின் மேல் அளவு கடந்த காதல் இருக்கிறது அல்லவா, எல்லோரிடமும் தழலாக தகிப்பவன் தன்னவள் என்று வந்து விட்டாள் மட்டும் எங்கிருந்து தான் தணிந்து விடுகிறானோ தெரியவில்லை, அவனை அணைய செய்து விடுகிறாள் பெண்ணவள்…

இப்போதும் தன்னவளுக்கு பிடிக்காத திருமணத்தை அவள் செய்ய கூடாது என்ற நோக்கத்துடன் தன் தாத்தாவை தேடித் தான் வந்திருந்தான்…

அவன் கோபகாரன் தான், ஈகோ பிடித்தவன் தான், அவனின் காதல் அவளைக்கு புரியவில்லை என அவளின் மேல் கோபமும் உள்ளவன் தான். ஆனால் பிடிக்காத பெண்ணை திருமணம் செய்யும் அளவிற்கு மனிதாபிமானம் இல்லாதவன் இல்லை…

அவன் இப்போது நினைத்தால் கூட ஆத்யா ஷாலினியை திருமணம் செய்ய முடியும் தான். ஆனால் உண்மையான காதல் கொண்ட மனமோ தன் துணையின் சந்தோஷத்தை அல்லவா விரும்பும், இப்போது அதே நிலை தான் விஷ்வ சாஹரனுக்கும், அவனின் சந்தோஷத்தை விட தன்னவளின் சந்தோஷமே முக்கியமாக பட, இத்திருமணத்தை நிறுத்தும் நோக்கத்துடன் தன் தாத்தாவை தேடி சென்றிருந்தேன்…

“தாத்தா உங்க கிட்ட பேசணும்…” என அவரின் அறைக்குள் வந்தவன், அவரின் முன் வந்து நின்றிருந்தான்…

விஷ்வேஸ்வரனோ தன்னிடம் பேசுவதற்காக வந்த தன் பேரனை யோசனையாக நோக்கியவர் “என்ன பேசணும் சொல்லு…” என யோசனையாக வினாவினார்…

“இந்த கல்யாணத்தை நிறுத்திறலாம் தாத்தா…” என அவன் தலையில் இடியை இறக்கி இருந்தான் விஷ்வ சாஹரன்…

அதைக் கேட்டு அதிர்ந்து எழுந்து நின்றவரோ “என்ன சொல்ற? இப்பதானே சரின்னு சொன்ன, அதுக்குள்ள வந்து கல்யாணத்தை நிறுத்த சொல்ற? என்னதான் நினைச்சுட்டு இருக்க உன் மனசுல?” என கோபமாக அவனை பார்த்து கேட்டார்…

சாஹரனோ அதற்கெல்லாம் அசராதவன் “ஆமா நான் சரின்னு சொன்னேன் தான், அவ இதுக்கு விருப்பமில்லை என்று சொல்வா நினைச்சு அப்படி சொன்னேன், ஆனா அவளும் விருப்பம்னு சொல்லுவான் நான் எதிர்பார்க்கவே இல்லை…” என கூறினான்…

“இல்ல எனக்கு புரியல? அப்படின்னா இந்த கல்யாணம் நடக்குறதுல உனக்கு விருப்பம் இல்லையா?” என அவர் யோசனையாக அவனை பார்த்து கேட்க, அவனோ ஒரு பெருமூச்சு விட்டவன் “தாத்தா உங்களுக்கே தெரியும் எனக்கு ஆத்யாவ ரொம்ப பிடிக்கும்னு, நான் அவளை காதலிக்கிறேன் தான் ஆனா அதுக்காக அவள என்னால கல்யாணம் பண்ண முடியாது. பிடிக்காத பொண்ண எப்படி வற்புறுத்தி கல்யாணம் பண்ணி வைப்பீங்க நீங்க? என அவன் கோபமாக கேட்டான்…

“டேய் லூசு பயலே என்னடா உளற? ஆத்யாவுக்கு உன்ன பிடிக்கலைன்னு யாரு சொன்னா?” என அவர் அவனை முறைத்துக் கொண்டே கேட்க, இப்போது குழம்பி போனது என்னவோ விஷ்வ சாஹரன் தான் “என்ன தாத்தா சொல்றீங்க? என புரியாமல் வினாவினான்…

“நான் இதை உன்கிட்ட சொல்ல கூடாதுனு நினைச்சேன் ஆத்தியாவே உன்கிட்ட அவ வாயால் இத சொல்லணும் நினைச்சேன், ஆனா இப்போ எனக்கு வேற வழி இல்ல சொல்லி தான் ஆகணும்…” என்றவர், அவனே தன் பக்கத்தில் அமர வைத்து “நீங்க எல்லாரும் அங்க என் வீட்டில் இருந்து கிளம்புன அப்புறம் ஆத்யா என் வீட்டுக்கு அடிக்கடி வருவா, அவ அப்டி அங்க வார நேரமெல்லாம் அவள் பேசுற ஒரே விஷயம் நீயா தான் இருப்ப, நீ எப்படி இருக்க? இன்னும் அவ மேல கோவமாவா இருக்கியானு? என்கிட்ட அடிக்கடி கேட்டுட்டே இருப்பா. நானும் அவ ஏதோ ஆரம்பத்துல நீ கோவமா போனதால கேட்கிறானு தான் நினைச்சேன், ஆனா இல்ல அதுல ஏதோ வித்தியாசம் இருந்துச்சு, அத அவகிட்ட கேட்டு விசாரிச்ச போது தான் சொன்னா, அவளுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்னு…” என அவன் என் தோள்தொட்டு கூறியிருந்தார்…

தன் தாத்தா கூறியதை கேட்ட விஸ்வ சாஹரனுக்கோ அதிர்ச்சி, அவன் இதை சற்றும் எதிர்பார்த்து இருக்கவில்லை. அவளுக்கு தன் மேல் பிடித்தம் இருக்கும் என்பது அவன் யோசித்தே பார்த்திராத ஒரு விடயம்…

அச்சமயம் அவர்கள் இருக்கும் அறை கதவு தட்டும் சத்தம் கேட்க, விஷ்வேஸ்வரனோ யோசனையாக “உள்ள வாங்க…” என அழைத்திருந்தார்…

அங்கு வந்திருந்தது என்னவோ சித்ராவும் ராஜேந்திரனும் தான். அவர்களைப் பார்த்த சாஹரனும் “வாங்க உள்ள வாங்க…” என அழைக்க, அவர்களோ “உங்கள தான் தம்பி தேடிட்டு இருந்தோம், உங்க அம்மா தான் சொன்னாங்க நீங்க உங்க தாத்தாவோட ரூம்ல இருக்கீங்கனு, அதான் உங்களை பார்த்து பேசிட்டு போலாம்னு வந்தோம்…” என ராஜேந்திரன் கூறியிருந்தார்…

“வா வா ராஜேந்திரா உக்காரு, நீயும் உள்ள வாமா சித்ரா…” என அவர்கள் இருவரையும் அழைத்து அங்கிருந்து இருக்கையில் அமர கூறினார் விஷ்வேஸ்வரன்…

அவர்களும் வந்து அமர விஷ்வ சாஹரனோ “சொல்லுங்க என்ன விஷயம்? என யோசனையாக அவர்களைப் பார்த்து கேட்டான்…

ராஜேந்திரனோ தயக்கமாக “தம்பி நான் பேச போற விஷயத்தை கேட்டு தப்பா எடுத்துக்காதீங்க, சராசரியா ஒரு பொண்ண வச்சுட்டு இருக்க எல்லா அப்பா அம்மாவுக்கும் இருக்க ஒரு கவலை தான்…” எனக் கூறினார்…

சாஹரனோ புருவ முடிச்சுடன் அவர்கள் இருவரையும் பார்த்தவன், “இல்லை அப்படி எல்லாம் எதுவும் இல்ல, நீங்க சொல்ல வந்தத, தயங்காம சொல்லுங்க…” என அவர்களிடம் கூறியிருந்தான்…

சித்ராவோ “உங்களுக்கும் ஆதிக்கும் இடையில இத்தனை வருஷமா எவ்வளவு பிரச்சனை வேணா இருந்திருக்கலாம். ஆனா இப்போ உங்களுக்கு மனைவியாக போறவ அதனால அதெல்லாம் மறந்துட்டு எங்க பொண்ண நீங்க நல்லா பாத்துப்பீங்கனு எங்களுக்கு நீங்க வாக்கு தரணும், உங்க கோபத்தை நாங்களுமே பார்த்திருக்கோ அது தான் எங்களுக்குள்ள ஒரு சின்ன பயம். எங்க ஆதியோட வாழ்க்கை சந்தோஷமா அமையாதோனு, அவ சின்ன வயசுல இருந்தே அவ அப்பா, அம்மா இறந்ததுலே இருந்தே ரொம்ப கஷ்டப்பட்டுடா, ஆனா இதுக்கு அப்றம் அவ சந்தோஷமா இருக்குனும் னு நினைச்சு தான் இதப்பத்தி பேச வந்தோம், தப்பா எடுத்துக்காதீங்க தம்பி…

ஆத்யாக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்னு எங்களுக்கு இரண்டு நாளைக்கு முன்னாடி தான் தெரியும், அவளை இப்போ உங்களுக்கு பிடிக்கலனாலும் கல்யாணத்துக்கு அப்புறம் கண்டிப்பா அவளோட காதல் பார்த்து உங்களுக்கே அவள பிடிச்சுரும்னு எங்களுக்கு நம்பிக்கை இருக்கு, இருந்தாலும் எங்க பொண்ணு நல்லா இருக்கணும்ங்குறதுக்காக தான் இப்டி வந்து பேசிட்டு இருக்கோம், வேற எதும் இல்ல…” என நீளமாக பேசியவர் தன் கையில் மறைத்து வைத்திருந்த, ஆத்யா ஷாலினி ஒரு டைரியை எடுத்து அவனின் முன் நீட்டிருந்தார்…

அது ஆத்யா ஷாலியினியின் பொக்கிஷங்களில் ஒன்று. அதை யாரையுமே அவள் பார்க்க விடமாட்டாள், இங்கு அவள் வந்த சமயம் ஏதோ ஒரு நினைவில் அவள் அதை அங்கே அவள் வீட்டிலேயே விட்டு வந்திருந்தாள். ரெண்டு நாளைக்கு முன் ஆத்யாவின் அறையை சுத்தம் செய்ய சென்ற சித்தாவின் கையில் தான் இந்த டைரி கிடைத்திருந்தது. எடுத்து திறந்து படித்து பார்த்தவருக்கோ அதிர்ச்சி உருகி உருகி அத்தனை காதல் கவிதைகள். அனைத்துமே அவள் விஷ்வ சாஹரனுக்கு எழுதி இருக்கிறாள் என அப்பட்டமாக தெரிந்தது…

இதை பார்த்த பிறகு தங்கள் எடுத்த முடிவு எந்த வகையிலும் பிழைத்து விடவில்லை என சந்தோஷம் கொண்டனர். எங்கே அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இருக்காதோ என தயக்கமாக யோசித்தபடி தான் அவர்கள் கிளம்ப இருந்தனர். ஆனால் இதை பார்த்த பிறகு அவளின் மனம் புரிந்துவிட, திருமணம் நிச்சயமாக நடந்துவிடும் என அவர்கள் புரிந்து கொண்டார்கள்…

ஆனால் அவர்களுக்க் அப்போதிருந்த யோசனை என்னவோ விஷ்வ சாஹரன் தான், தங்கள் பெண் அவனை இந்த அளவுக்கு காதலிக்கும் போது, இங்கு அவன் மனநிலை எந்த அளவுக்கு இருக்கிறது என அவர்களுக்கு தெரிந்தாக வேண்டும் பார்க்க வேண்டும் அதற்கு தான் விஷ்வ சாஹரனை தேடி வந்திருந்தனர்…

ஒரு கை தட்டினால் மட்டும் சத்தம் வராதே, இரு கைகள் ஒன்றாக சேர்ந்து தட்டினால் தனியே சத்தம் வரும், இரு பக்கமும் காதல் இருந்தால் தானே அந்த வாழ்க்கை நிலைக்கும், அவர்களுக்கோ சாஹரனுக்கு ஆத்யாவை பிடித்து இருக்கிறதா என தெரிந்தாக வேண்டிய கட்டாயம் இருக்க, அதை தெரிந்து கொள்வதற்காக அவனிடமே வந்து விட்டனர்…

சித்ரா நீட்டிய டைரியை மெதுவாக வாங்கியவனோ, அதன் முதல் பக்கத்தை திறந்து பார்க்க, அதில் ‘என் மனதை கொள்ளை கொண்ட என்னுடைய சாஹரனுக்கு’ என எழுதி கீழே ஆத்யா ஷாலினி விஷ்வ சாஹரன் என இருவரின் பெயரையும் சேர்த்து ஒன்றாக எழுதியிருந்தாள் பெண்ணவள்…

அதிலேயே அவனுக்கு அந்த டைரியின் உள்ளுக்குள் என்ன இருக்கும் என புரிந்துவிட, அதை பிறகு வாசித்துக் கொள்ளலாம் என எண்ணி, அதை தனது பேன்ட் பக்கெட்டில் வைத்துக் கொண்டவன், இப்போது நிமிர்ந்து தன் முன் தன்னை கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்த சித்ராவையும் ராஜேந்திரனையும் தீர்க்கமாக பார்த்தான்…

“அவ என்னோட ஷாலினி. அவ கண்ணுல இருந்து ஒரு நாளும் என்னை எதுக்குடா கல்யாணம் முடிச்சோம், காதலிச்சோம்னு நினைச்சு கண்ணீர் வராது…” என அவர்கள் பார்த்து உறுதியாக, எந்த பதிலை எதிர்பார்த்து வந்தார்களோ அதே பதிலை கூறி இருந்தான்…

அவர்கள் இருவருக்கும் சாஹரன் கூறியதை கேட்டு மனம் நிறைந்து விட்ட உணர்வு தான். “இது போதும் தம்பி, இனி இந்த கல்யாணத்தை சந்தோஷமா நடத்தலாம்…” என சிரித்தப்படி கூறியவர்கள் அங்கிருந்த சாஹரனிடமும் விஷ்வேஸ்வரனிடமும் விடைபெற்று சென்றனர்…

அவனோ இப்போது திரும்பி விஷ்வேஸ்வரனை பார்த்தவன் “தேங்க்ஸ் தாத்தா. நீங்க மட்டும் இந்த கல்யாணம் ஏற்பாடு பண்ணி இருக்கலனா, என் காதலும் ஷாலினியோட காதலும் கடைசி வர மனசோடையே புதைஞ்சு போயிருக்கும்…” என நெகிழ்வாக அவரை பார்த்து கூறியவன், தன் தாத்தாவை இறுக்கமாக கட்டி அணைத்து விட்டு அந்த அறையில் இருந்து சிறிய புன்னகையுடனே வெளியேறி இருந்தான்…


தொடரும்…
 

Author: STN - 77
Article Title: தழலை அணைக்கும் அமுதகமே - 14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,289
379
83
Chennai
அவன் ஷாலினியாமே❤️❤️❤️❤️❤️
அப்பறம் ஏன் மேன் அன்னைக்கு அந்த பிள்ளையை அப்படி அடிச்ச பாவம்.....
 
  • Love
Reactions: STN - 77