STN - 77
New member
அத்தியாயம் 17
ஆத்யாவோ பின்னால் இருந்தவாறு விஷ்வ சாஹரனை இறுக்கி அணைத்து இருக்க, அவளின் கண்ணீரு அவனின் பின் சட்டையை தொப்பலமாக நனைத்திருந்தது. அவனோ அதற்கு மேல் பொறுக்க முடியாதவனாக தன் கையை பின்னே கொண்டு சென்று அவளின் கையைப் பிடித்து இழுத்து தன் முன் கொண்டு வந்து அவளை நிறுத்தினான்…
அவளோ அப்போது நிறுத்தாது அழுதுக் கொண்டிருக்க, அவளின் முகம் தாங்கி கண்ணீரை துடைத்து விட்டவன். “இப்போ எதுக்கு இப்டி அழுதுட்டு இருக்க?” என அதட்டலாக கேட்டப்படியே அவளின் கண்ணீரை துடைத்து விட்டான்…
“நான் ஒன்னும் உங்க மாதிரி ஜடம் இல்ல, எல்லா எமோஷனும் காட்டுவேன், அழுக வந்த அழுவேன், கோபவம் வந்த கோபப்படுவேன்…” என மூக்கை உறிஞ்சியப்படியே அவனை பார்த்து கோபமாக கூறினாள்…
“யாரு நான ஜடம்?” என ஒற்றை புருவம் உயர்த்தி அவன் கேட்க, அவளோ “ஆமா நீங்க ஜடம், லவ்வ கூட வாய் திறந்து சொல்ல தெரியாத ஜடம், இத என்கிட்ட எப்போவோ நீங்க சொல்லி இருந்தா, நான் இவ்வளோ கஷ்டப்பட்டு இருக்க மாட்டேன்…” மீண்டும் அழுதுக் கொண்டே அவன் மார்பில் கையால் ஓங்கி அடித்தப்படி கூறயவள், அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்…
“ஆமா நான் கிட்டத்தட்ட நீ சொல்ற போல ஜடம்தான். ஆனா உன்கிட்ட நான் எப்பவுமே ஜடமா இருந்ததில்லை, என் எல்லா எமோஷனையும் பார்த்த ஒருத்தினா அது நீ மட்டும் தான். நான் சிரிச்சு பார்த்து இருக்க, இதோ இப்போ நீ அழுறய பார்த்து என் கண்ணும் கலங்குது, சோ அழுறதையும் பார்த்திருக்க, அப்புறம் என் லவ்வையும் பார்த்து இருக்க…” என குனிந்து அவள் காதுகளில் ரகசியமாக கூறினான்…
அவளோ அவன் கூறியதை கேட்டு சட்டென அவனை விட்டு விலகியவள் “எது லவ்வ பார்த்திருக்கனா? யோவ் போயா, டைரிய வச்சு லவ் சொல்றதுதான் உங்க ஊர்ல லவ்வோ?” என அவர் மூக்கை உறிஞ்சப்படியே அவனைப் பார்த்து கோபமாக கேட்டாள்…
சஹரனோ சிவந்திருந்த அவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன் “மேடம மட்டும் அப்டியே என்கிட்ட வந்து ஐ லவ் யூ ன்னு முட்டி போட்டு ப்ரொபோஸ் பண்ணிங்க பாருங்க…” என நக்கலாக தன்னவளை பார்த்து கேட்டான்…
“நான் எப்படி வந்து உங்ககிட்ட லவ் சொல்றது? நீங்க ஆரம்பத்திலிருந்தே என்னை புடிக்காத போலத்தான் இருந்தீங்க, உங்களுக்கு பார்த்தாலே எனக்கு பயம், அப்படியே நான் வந்து சொல்றதுனாலும் நீங்க அறைஞ்சிடிங்கனா நான் என்ன பண்ணனு பயந்து தான் சொல்லல, ஆனா உங்களுக்கு என்ன பிரச்சனை சார் நீங்க ஏன் உங்க லவ்வ என்கிட்ட சொல்லல? அவ்ளோ ஈகோவா நான் சொன்னா தான் சொல்லுவீங்களா?” என கோபமாக அவனை பார்த்து கேட்டாள்…
ஆத்யா ஷாலினியை மீண்டும் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டவன், “ஆமா நீ சொல்றதும் ஒரு வகையில் சரிதான் ஈகோ தான். ஆனா அதே நேரம் என சிட்டுவேஷனும் லவ்வ சொல்லுற போல இருக்கல, நான் உன்ன லவ் பண்ண ஆரம்பிச்ச நேரம் உனக்கு பதிமூன்னு வயசு தான் இருக்கும், அப்ப நான் எப்படி வந்து என் லவ்வ உன்கிட்ட சொல்றது? அப்புறம் இரண்டு வருஷம் கழிச்சு மேடம் என்ன பண்ணீங்கனு நினைவிருக்கா?
என்னை அண்ணனுக்கு கூப்பிட்டு கடுப்பு ஏத்தி விட்டீங்க, எங்க அங்கேயே இருந்தா என்ன அண்ணன்னு கூப்பிட்டே கொன்னுடுவியோன்று பயந்து அங்கிருந்து கிளம்பிட்டேன், அது இல்லாம மேடம் வேற சந்தேகப்பட்டு என்னை வீட்டுல போட்டு கொடுத்தீங்க, அந்த கடுப்பு வேற, அது தான் உனக்கு என்னை புடிக்காதுன்னு நினைச்சு நான் லவ்வ சொல்லலமலே அங்க இருந்து வந்துட்டேன், அப்றம் திரும்ப நீ இங்க வந்த அப்றம் என்னை கண்டாலே ஒளிஞ்சு ஓடுன, அப்போ எனக்கு எப்டி தெரியும் நீ லவ் பண்ணுறது? நீ ஒரு சின்ன க்ளூ குடுத்து இருந்தா கூட, இதோ இப்ப சொன்ன சொன்ன போல உடனே நானும் என் லவ்வ சொல்லி இருப்பேன்…” என விளக்கமாக கூறினான்…
“சரி போதும் போதும் உங்க விளக்கம். ஆனா ரோட்ல வச்சு நீங்க ஒரு பொண்ணுக்கு கிஸ் பண்ணத பாத்து நான் எப்படி கடுப்பானேன் தெரியுமா? அந்த கோவத்துல தான் உங்களை வந்து அண்ணான்னு கூப்பிட்டேன். இதுல நீங்க வேற என்னை பல்ல உடைபேனு திட்டுனிங்க, அந்த கடுப்புல எல்லார்கிட்டயும் உங்களை போட்டு கொடுத்துட்டேன்…” என அவளும் தன் பக்கம் இருந்து விளக்கம் கூறினாள்…
அவனோ தன்னை அணைத்திருந்தவளின் தோளை பிடித்து தன்னை விட்டு விளக்கியவன், அவளின் கன்னம் பற்றி அவளின் கண்களை ஆழமாக பார்த்தவன் “நான் உன்ன தவிர, இந்த மனசுக்குள்ள வேற எந்த பொண்ணுக்குமே இடம் கொடுத்தது இல்ல, அன்னைக்கு நீயும் சரணும் பார்த்தது தற்செயலா நடந்த ஒரு ஆக்ஸிடெண்ட், அந்த ரோட்ட பார்க்காம க்ரோஸ் பண்ண ட்ரை பண்ணினா சோ நான் அவள காப்பாத்த இழுத்த வேகத்துல என் லிப்ஸ் அவ கன்னதுல பட்டுறிச்சு அவ்வளவு தான்…” என அன்று என்ன நடந்தது என பத்து வருடம் கழித்து இப்போது விளக்கம் கூறி இருந்தான்…
ஆத்யாவும் அதை நினைத்து சிரித்தவள் “இத பத்து வருஷத்துக்கு முன்னாடி சொல்லி இருந்தா இவ்வளவு பிரச்சின வந்து இருக்காதுல…” என அவனை பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டே கேட்டாள், அவனும் மென்மையாக சிரித்துக் கொண்டவன் “என்ன மா பண்ண உன் வருங்கால புருஷனுக்கு கொஞ்சம் ஈகோ அதிகம், அது எப்டி நீங்க எல்லாரும் நம்பாம கேக்கலாம்குற கோவத்துல அப்டி பண்ணிடேன்…” என அவளின் கன்னம் கிள்ளி கூறி இருந்தான்…
அவள் கூறிய விதத்தில் ஆத்யா ஷாலினியோ வாய் விட்டு சிரித்து விட்டாள்…
“சரி வா நாம கேக் சாப்பிட்டு கிளம்பலாம்…” என அவளை அழைத்துக் கொண்டு அந்த குடிலுக்கு வந்திருந்தான்…
“சரி கேக் வெட்டி ஊட்டி விடு…” என கூற, அவளோ அவனை யோசனையாக பார்த்தவள் “நான் தான் வீட்ல வைச்சே ஊட்டி விட்டேனே?” என கேட்டாள்…
“சரி பரவால இன்னொரு தடவ ஊட்டி விட…” என அவன் வற்புறுத்த, அவளும் சரி என்ற விதமாக இன்னொரு கேக் துண்டை வெட்டி அவனின் இதழ்களின் அருகில் நீட்டி இருந்தாள்…
அவனோ அதை சாப்பிடாது அவளின் கையை பிடித்து தடுத்தவன, “இப்டியா ஊட்டி விட சொன்னான்…” என கோபமாக கேட்டான்…
ஆத்யாவோ புரியாமல் “வேற எப்டி?” என யோசனையாக அவனை பார்த்துக் கேட்டாள், விஷ்வ சாஹரனோ அதற்கு பதில் கூறாது அவளின் இதழ்களை அழுத்தமாக பார்க்க, அவன் கூற வருவது அப்போது தான் புரிந்தது பெண்ணவளுக்கு, அதிர்ந்து கண்களை விரித்தவளோ “என்ன விளையாடுறீங்களா? இதுலாம் கல்யாணத்துக்கு அப்றம் தான்…” என பதட்டமாக அவனே பார்த்து கூறி இருந்தாள்…
அவளோ அவளை ஒரு கணம் மேல் இருந்து கீழாக பார்த்தவன், “என்ன ஏதோ புதுசா கிஸ் பண்ண போற போல, பில்டப் பண்ணுற? அது தான் ஏற்கனவே பண்ணி இருக்கோமே…” என சாவகாசமாக கூற, அவனை கூறியதை கேட்டு பெண்ணவளோ “என்ன?..” என்று அதிர்ந்து விழித்தப்படி அவனை பார்த்தாள்…
விஷ்வ சாஹரனோ “என்ன மறந்துட்டீயா? அது தான் கிச்சன்ல வைச்சு உன்ன கிஸ் பண்ணினனே…” என கூலாக கூறினான்…
ஆத்யா ஷாலினியோ அதை கேட்டு பேய் அறைந்தாற் போல் அவனை அதிர்ந்து பார்த்தவள், “அப்போ அது என் கனவு இல்லையா?” என நா தத்தியடிக்க கேட்டிருந்தாள்…
“இன்னுமா அத கனவுனு நினைச்சுட்டு இருக்க?” என நமட்டு சிரிப்புடன் கேட்டவன், “சரி அது கனவு இல்ல நிஜம்னு இப்போ ப்ரூப் பண்ணுறேன்…” என கூறியவன்…
ஆத்யா ஷாலினியின் கையில் இருந்த கேக்கை தன் இதழ்களால் கவ்வி எடுத்தவன், அடுத்த நொடி அவளின் இதழ்களுடன் தன் இதழ்களை பொருத்திக் கொண்டான்…
பெண்ணவள் சுதாரித்துக் கொள்ள முதலே அவன் அவளின் இதழை அடைத்திருக்க, அவளின் உடலில் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது, அந்த உணவுகளை தாங்க முடியாது அவனின் சட்டை காலரை தன் இரு கைகளாலும் இறுக்கி பிடித்து கசக்க ஆரம்பித்து விட்டாள்…
சாஹரனின் இதழ்களிற்குள் இருந்த கேக்கோ கொஞ்சம் கொஞ்சமாக ஆத்யாவின் இதழ்களிற்கு இடம் மாற ஆரம்பிக்க, இதழ் முத்தத்தின் சுகத்தில் இருவரின் விழிகளும் ஒன்றாக மூடிக் கொண்டன…
நீண்ட நெடிய முத்தமதில், பெண்ணவள் மூச்சுக்காக போராட, அதற்கு பிறகு தான் மனமே இல்லாது அவளின் இதழ்களுக்கு விடுதலை அளித்திருந்தான் விஷ்வ சாஹரன்…
அவளோ அவனை விழி விரித்து அதிர்ந்து பார்க்க, அவனோ அவளின் இடையை பிடித்து தன்னுடன் நெருக்கிக் கொண்வன் அவளின் காதுகளை நோக்கி குனிந்து “அன்னைக்கு நீ போட்டு இருந்த என் சேர்ட்ல உன்ன பார்த்தப்போ செம்மயா இருந்த, அப்டியே உன்ன தூக்கி சாப்பிடனும் போல இருந்துச்சு அது தான் என்னையே அறியாம உன்ன கிஸ் பண்ணிடேன், சோ நீ நம்ம கல்யாணம் முடிஞ்ச நைட்டும் என் அந்த சேர்ட்ட தான் போட்டுக்கனும்…” என ரகசியமாக அவளின் காதில் கிசுகிசுப்பாக கூறி இருந்தான்…
அவன் கூறிய விதத்தில் பெண்ணவள் கன்னம் மட்டும் அல்ல அவளின் உடல் முழுதும் வெட்கத்தில் தக்காளி பழம் போல் சிவந்து விட்டது…
அவனின் மார்பில் கை வைத்து தள்ளியவோ “ச்சி நீங்க இப்டிலாம் பேசுவீங்கனு நான் எதிர்பார்க்கவே இல்ல…” என கீழே குனிந்தப்படி கூறியவளுக்கோ வெட்கம் தாளவில்லை, மண்ணுக்குள் புதைந்து விடலாம என அவள் யோசிக்கும் அளவிற்கு அவளை வெட்கப்பட வைத்திருந்தான்…
விஷ்வ சாஹரனோ தன்னவளின் வெட்கத்தை ரசித்தப்படியே “இதுக்கே இப்டினா இன்னும் நிறையே இறுக்கே…” என கூறிய அவன் குரலும் முகமும் இருக்கமாக இருந்தாலும் அவன் கூறிய விதத்தில் குறும்பு கூத்தாடியது…
பெண்ணவளோ “அய்யோ போதும் இதுக்கு மேல இங்க இருந்தா சரியா இருக்காது, வாங்க கிளம்பலாம், பொறுக்கி பய…” என அவனுக்கு திட்டியப்படியே அவனை அங்கிருந்து அழைத்து சென்று விட்டாள்…
விஷ்வ ஷாஹரனும் ஆத்யா ஷாலினினயை வீட்டில் விட்டவன் தன் வீட்டிற்கு வந்து சேரவே நல்லிரவாக ஆகி விட, வீட்டிற்கு வந்ததுமே நன்றாக தூங்கி விட்டான்…
இருவரின் மனதில் இருந்த அனைத்து சலனங்களும் நீங்கி இருக்க, இப்போது தான் பொண்ணு, மாப்பிள்ளைக்கான கலையே அவர்களின் முகத்தில் வந்திருந்தது…
தொடரும்…