தழலை அணைக்கும் அமுதகமே - 18

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 77

Member
Jun 4, 2026
23
51
13
அத்தியாயம் 18

ஆத்யா ஷாலினியின் வீடும் கல்யாண கலை கட்ட தொடங்க, கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மூன்று நாட்கள் தான் இருக்க, இந் நிலையில் வீடே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது…

“அக்கா நிச்சயதார்தத்துக்கு இதுல எந்த சாரிய கட்டிக்க போற?” என கேட்டபடி அங்கிருந்த சாரிகளில் எதை தேர்வு செய்வதென எடுத்து எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள் சாத்விகா…

இன்னொரு பக்கம் சாண்விகாவோ “சாரி வேணாம் நீ நிச்சயதார்த்தத்துக்கு கவுன் போட்டுக்கோ, வித்தியாசமா இருக்கும், இப்ப எல்லாருமே அப்படித்தான் போடுறாங்க…” என அவள் அங்கிருர்த கவுன் ஒன்றை எடுத்து காட்டினாள்…

ஆத்யாவோ தன் தங்கை கூறியதை கேட்டு “அடியே சித்திக்கும் மட்டும் நீ சொன்னது தெரிஞ்சா, அடி விழும்…” என கூறினாள்…

“அதெல்லாம் அம்மா திட்ட மாட்டாங்க, நீ போட்டுக்கோ…” என அவள் கையில் இருந்த கவுனை தூக்கிக் ஆத்யாவின் கையில் கொடுக்க முனைய, அச்சமயம் அவள் தலையில் ஓங்கி ஒரு குட்டி விழுந்தது….

“ஸ்ஸ் அம்மா…” என கத்தயப்படி அவள் திரும்பி பார்க்க, அங்கு அவளை முறைத்துப் பார்த்தப்டி நின்றிருந்த சித்ராவோ “செருப்பு பிஞ்சிடும், உங்க ட்ரெண்டிங் எல்லாரும் உங்களோட வச்சுக்கோங்க, ஆதி நிச்சயதார்த்தத்துக்கு சாரி தான் கட்டணும், அதுவும் பட்டு புடவை தான் கட்டணும்…” என அங்கு சாத்விகா எடுத்து பார்த்துப் பார்த்துக் கொண்டிருந்த புடவைகளில் ஒரு அழகான பட்டுப் புடவையை வாங்கி எடுத்தவர், ஆத்தியாவின் கையில் அதை திணித்து “இதைத்தான் கட்டிக்கணும்…” என கூறியப்படி அங்கிருந்து மற்றைய வேலைகளை பார்ப்பதற்காக சென்றிருந்தார்…

சாண்விகாவோ தன் தலையை வலியில் வருடிக்கொண்டே “அம்மா வலிக்குதே, இப்படியே கொட்டுவாங்க…” என கடுப்பாக புலம்பினாள்…

அவள் வலியில் புலம்புவதை பார்த்து அவளின் இரட்டை சகோதரி சாத்விகாவோ சத்தமாக சிரிக்க ஆரம்பித்தவள், “சாண்வி தேவையா உனக்கு இது? தேவையில்லாத வேலை பார்த்த தானே, இப்ப நல்லா வாங்கி கட்டினியா?” என அவளை கேலி செய்தாள்…

அதை கேட்டு கடுப்பாகி “இங்க பாருடி போதும் ரொம்ப நக்கல் பண்ணாத அப்றம் உன் லவ் மேட்டரை வீட்டில் போட்டு கொடுத்துடுவேன்…” என ரகசிய குரலில் சாண்விகா கூறினாள்…

சாத்விகாவோ “இங்க பாருக்கா இவள…” என சிணுங்கியப்படி கோபமாகத் தன் அக்காவிடம் முறையிட்டாள்…

“அடியே சும்மா இருங்கடி எனக்கு தலை வலிக்குது, ஏண்டி இப்டி பண்றீங்க?” என அவர்களை பார்த்து கோபமாக கேட்டவள், அவர்களை இருவரையும் அறையில் இருந்து வெளியே அனுப்பி இருந்தாள்…

ஆத்யாவின் கைகள் முழுதும் மருதாணி நிறைந்து அவளின கைககளை அழகாக்கி இருக்க, பெண்ணவளோ தன்னுடைய உடைகள் அனைத்தையும் உடை பெட்டியில் மடித்து வைத்துக் கொண்டிருந்தாள்…

அச்சமயம் அவளின் அறை கதவை யாரோ தட்ட, “யாரு உள்ள வாங்க…” என கூற, மகாலட்சுமி தான் வந்திருந்தார்…

அவரை பார்த்து முகம் மலர்ந்தவளோ, “லஷ்மி மா எப்போ வந்தீங்க?” என கேட்டபடியே சட்டென எழுந்து வந்து அவரை அணைத்துக் கொண்டாள்…

“இப்போ தான் ஆதி மா வந்தேன், அய்யோ எவ்வளவு அழகாக இருக்க, அப்டியே தேவதை மாதிரி இருக்க…” என அவளிற்கு திருஷ்டி சுற்றி போட்டிருந்தார்…

அவர் கூறியதை கேட்டு வெட்டப்பட்ட சிரித்தவளோ “நீங்களும் தான் கல்யாண பொண்ணு போல ரொம்ப அழகாக இருக்கீங்க… “ என புன்னகையுடன் அவருக்கும் மாறி அவள் திருஷ்டி கழித்திருந்தாள்…

“உன்கிட்ட பேசிட்டே வந்த விஷயத்த மறந்துட்டேன் பாரு, உனக்காக சாஹரன் ஸ்பெஷலா ரெடி பண்ணு கல்யாண புடவைய தந்துட்டு போலாம்னு தான் வந்தேன்…” என அவர் கூற, சாஹரன் பெயர் கேட்டதுமே அவளின் முகம் பிரகாசமாக மாறிவிட்டது…

“அப்டியா? அப்டி என்ன ஸ்பெஷல் அந்த புடவைல?” என அவள் ஆர்வமாக அவரை பார்த்து கேட்டாள், “எங்க மா அத தான், உன் வருங்கால புருஷன் சொல்லவும் மாட்டிக்குறன், அந்த புடவைய கண்ணுல காட்டவும் மாட்டிக்குறான், பந்தகால் நட்டின அப்றம் மாப்பிள்ள பொண்ண பார்க்க கூடாதுனு சொல்லியும் கேக்காம பிடிவாதம் பிடிச்சு வந்து இருக்கான், அவன் கையால தான் அந்த புடவைய உனக்கு தரனுமாம்…” என அலுப்பாக அவளை பார்த்து கூறியிருந்தாள்…

அவர் கூறியதை கேட்ட ஆத்யா ஷாலினியின் முகம் புன்னகையை தத்தெடுத்துக் கொள்ள, “அப்பப அவரு வெளியவா இருக்காரு? நான் போய் பார்த்துட்டு வாறேன்…” என மகாலட்சுமி அவளிடம் எதோ பேச வந்ததை கூட பொருட்படுத்தாது சட்டென வீட்டிற்கு வெளியே சென்று விட்டாள்…

அங்கு விஷ்வசாகரனோ கண்களில் கண்ணாடி அணிந்து காரில் சாய்ந்து நிற்க, அவன் அருகில் சிரித்தபடி வந்து நின்றாள் ஆத்யா ஷாலினி…

தன் முன்னாள் தேவதை போல் வந்து என்றவளை கூலர்சின் வழியாக மேலிருந்து கீழாக ஒரு இன்ச் விடாது அளந்தவன், தன் கண்களில் இருந்த கண்ணாடியை மெதுவாக கழட்டியப்படியே “ப்பா செம அழகா இருக்க…” என அவளைப் பார்த்து கூறியிருந்தான் விஷ்வ சாஹரன்…

கைகள் நிறைய மருதாணியுடன், தலையை விரித்துவிட்டு அதில் மல்லிகை பூ சரம் தொங்க, புதிய சுடிதார் அணிந்திருந்தவள், புது பெண் கலையுடன் பார்ப்பதற்கு பேரழகியாக தெரிந்தாள்…

“நீங்களும் தான் கண்ணாடி எல்லாம் போட்டு செம ஸ்டைலா வந்து நிக்கிறீங்க, அது இல்லாம உங்க பிளாக் கலர் ஷர்ட விட்டுட்டு இன்னைக்கு கலர் ஷர்ட் எல்லாம் போட்டு இருக்கீங்க?” என நக்கலாக அவனை பார்த்து ரசித்தப்படியே கேட்டாள் பெண்ணவள்…

அவனும் அதைக் கேட்டு புருவங்களை மேலேற்றி இறக்கியவன், “நான் பிளாக் கலர் ஷர்ட் தான் அடிக்கடி போடுவேனு கவனிச்சு வைச்சு இருக்கியா?” என அவன் ஆச்சர்யமாக கேட்டான்…

“நீங்கதான் என்னை கண்டுகுறது இல்ல ஆனா நான் உங்களை எப்பவுமே கவனிச்சுட்டு தான் இருந்தேன்…” என கூறியிருந்தாள்…

அதை கேட்டு அவனோ “அப்டியா நான் உன்ன கவனிச்சது இல்லயா?” என ஒருமாதிரியான நக்கல் குரலில் கேட்க, அதை புரிந்துக் கொண்டவளோ “சொலல முடியாது நீங்க பார்த்து தான் இருப்பீங்க, நீங்கதான் சரியான கேடியாச்சே…” என சிரித்தபடி தன்னவனை பார்த்து கூறி இருந்தாள்…

அச்சமயம் உள்ளிருந்த “ஆத்யா…” என அவள் சித்தியின் குரல் கேட்க, “அய்யோ போச்சு சித்தி கூப்பிடுறாங்க, வெளிய நான் உங்க கூட பேசிகிட்டு இருக்கறத பார்த்தா, நான் தொலைஞ்சேன். நீங்க ஏதோ சாரி கொடுக்க போறதா லஷ்மி மா சொன்னாங்க, அத சீக்கிரமா குடுங்க நான் உள்ள போகணும், கல்யாணத்துக்கு முதல் பொண்ணு மாப்பிள்ளை பார்க்கவே கூடாது ஆனா நீங்க அடம்பிடிச்சு வந்து இருக்கீங்கனு சொல்லுவும் தான் உங்க பார்க்க வந்தேன்…” என கூறியவள் அவனை அவசரபடுத்தினாள்…

“பொறு பொறு குடுக்குறேன், அதுக்கு முன்னாடி லாஸ்டா ஒரு தடவ கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு கிஸ் ஒன்னு குடு…” என அவன் சாவகாசமாக அவளை பார்த்து கூறினான்…

“அய்யோ என்ன விளையாட்டு இது, ப்ளீஸ் அத குடுங்க சித்த வர முன்னாடி நான் உள்ள போகனும்…” என பதற்றமாக அவனை பார்த்துக் கூறினாள்…

“அது தான் நானும் சொல்லுறேன் சீக்கிரம் ஒரு கிஸ் குடுத்துட்டு சாரிய வாங்கி போ…” என அவன் அப்போது அதே பிடியில் நிற்க, “அய்யோ எனக்கு ஒன்னும் வேணாம் நான் உள்ள போறேன், உங்களுக்கு தான் கூச்சம் இல்ல எனக்குமா இல்ல நடு ரோட்டுல வைச்சி கிஸ் பண்ண சொல்லுறீங்க…” என அவனை திட்டியப்படியே பெண்ணவள் திரும்பி செல்ல எத்தனிக்க, அதற்குள் அவளின் கையை பிடித்து தடுத்திருந்தவன் அவளின் கன்னத்தில் தன் இதழ்களை அழுத்தமாக பதித்து விட்டு தான் சாரியை அவளின் கையில் கொடுத்திருந்தா…

அவன் முத்தமிடுவான் என எதிர்பாராதவளோ அவனை அதிர்ந்து பார்த்தாள், அதை பார்த்து அவனோ “போதும் உன் முட்ட கண்ண விரிச்சது உள்ள போய் உன் மாமியார வர சொல்லு…” என கூறியப்படி காரி ஏறி அமர்ந்திருந்தான்…

அவளோ ஒரு கணம் மூடிய கண்ணாடி வழியாக தன்னவனை முறைத்து பார்த்தவள், அவன் தந்த உடை பையை தூக்கிக் கொண்டு உள்ள சென்றிருந்தாள்…

அங்கு மகாலட்சுமியோ சித்ராவிடம் பேசிக் கொண்டிருக்க அவரின் அருகில் வந்தவள், “லஷ்மி மா உங்கள அவர வர சொல்லுறார்…” என கூறி இருந்தாள்…

சித்ராவோ ஆத்யாவை முறைத்து பார்த்தவர் “ஒரு சாரி வாங்கிட்டு வாரத்துக்கு உனக்கு இவ்வளவு நேரமா?” என அவளை பார்த்து அதட்டலாக கேட்டார்…

ஆத்யாவோ “இல்ல சித்தி அது…” தயக்கமாக இழுக்க, இது தன் மகனின் வேலை தான் என அறியாதவரா மகாலட்சுமி “பரவால விடுங்க…” என கூறியவர், “அப்போ நான் கிளம்புறேன், போய்ட்டு வர்றேன் ஆதி மா…” என கூறிய்பபடி புறப்பட, சித்ராவும் ஆத்யாவை திட்ட நினைத்ததை விடுத்து மகாலட்சுமியை வழி அனுப்பவதற்காக சென்று விட்டார்…

ஆத்யாவும் மகாலட்சுமியை வழி அனுப்பி வைத்தவள் இது தான் வாய்பப்பு என தன் சித்தியின் கையில் அகப்படாது தன் அறைக்குள் நுளைந்துக் கொண்டாள்…

உள்ளே வந்தவளோ தன்னவன் கொடுத்த புடவையை திறந்து பார்த்தாள், அதை விரித்து எடுத்த பார்த்தவள் இன்பமான அதிர்ச்சி…

ஆம் அது ஒரு தங்க ஜரிகைகளாலான ஆரஞ்ச் நிற பட்டுப்புடவை, அது முழுதும் கற்களால் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்க, அதிலோ சாஹரன் ஆத்யாவும் ஆத்யா சாஹரனையும் காதலாக பார்த்துக் கொண்டிருப்பது போல் வரையப்பட்டிருந்தது…

அதை பார்த்தவள் தான் இன்பமாக அதிர்ந்திருந்தாள், அதில் அவர்களின் முகம் தத்துரூபமாக காணப்பட்டது…

தன் மேல் தன்னவன் கொண்டிருக்கும் காதலை நினைத்து அவளின் மனம் பூரித்துக் கொண்டது, அதை எடுத்து தன் அலுமாரிக்குள் பத்திரப்படுத்த வைத்தவளோ, சாஹரன் சேலை போட்டு தந்த கவரை வீச போக, அதற்கு வேறு எதோ இருப்பது போல் இருக்க என்னவென திறந்து பார்ததவளின் முகம் வெட்கத்தில் சிவந்து விட்டது…

அது என்னவென்றால் அவள் அணிந்த சாஹரனின் வெள்ளை சட்டை தான், அதை எடுத்த விரித்து பார்த்தவளோ நாணி போனாள், சேலையில் எப்படி அவர்களின் முகம் வரையப்பட்டிருந்ததோ அதே போல் இதுலும் இருவரின் உருவமும் வரையப்பட்டிருந்தது ஆனால் சேலை இருந்ததது போல் அல்லாமல் இருவரும் இதழ் அணைத்துக் கொண்டு இருப்பது போல் வரையப்பட்டிருந்தது…

அதை பார்த்து தான் பெண்ணவள் வெட்கம் கொண்டிருந்தாள், தங்களின் முதல் முத்தத்தை ஒரு நினைவாக மாற்ற எண்ணிய சாஹரன் அன்று அவள் அணிந்திருந்த அவன் சட்டையில் இவ்வாறு வரைய சொல்லி அதை அவளுக்கு கொடுத்து விட்டு சென்றிருந்தான்…

அதை யாரின் கண்களிலும் படாதவாறு தனது உடை பெட்டிக்குள் மறைத்து வைத்தவளுக்கு, அடி வயிற்றில் பட்டாம் பூச்சி பறக்கும் உணர்வு தான்…

“இந்த மனுசனுக்கு வெட்கமே இல்ல, ச்ச என்னவெல்லாம் பண்ணுறாரு…” என தனக்குள் அவனை திட்டியவளுக்கு கல்யாணத்திற்கு பிறகான இரவை இப்போது யோசித்தால் கூட உடலில் மின்சாரம் பாய்வது போல் இருந்தது, அவளின் உடம்பில் உள்ள மையிர்கள் எல்லாம் சிலிர்த்துக் கொண்டு எழுந்து நின்றது…


தொடரும்…
 

Author: STN - 77
Article Title: தழலை அணைக்கும் அமுதகமே - 18
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Love
Reactions: Magizh kutty

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online