அத்யாயம் -3
யார் என்ன சொன்னாலும் இல்ல என்னப் பேசிக் கொண்டாலும் தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முதலில் சில நாட்கள் கடந்துச் சென்றவள் பின்னாளில் காதில் இயர் போட் வைத்துக் கொண்டு பாடல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டாள்.
இவள் இந்தக் கல்லூரியில் யோகா ஆசிரியை . முழு நேரமாக இல்லை. பகுதி நேரமாக. யோகா மட்டும் இல்லை. மற்றபடி பெண்களின் உடல் ஆரோக்கியம் பேணுவது தொடர்பாகவும் வகுப்புகள் நடத்துவாள். ஊட்டச்சத்து நிபுணர் ஆக படித்தவளுக்கு அது ஒன்றும் கஷ்டமான விஷயம் இல்லையே .
இவள் யோகா சொல்லிக் கொடுக்க தினமும் அந்த கல்லூரிக்குச் சென்று வந்துக் கொண்டிருக்கிறாள். கதிர், புது வேதியியல் பரிசோதனைக்கு கூடம், இன்னும் சில இடங்களுக்கு வேலை செய்ய காண்ட்ராக்ட் எடுத்துத்திருந்தான். அவன் இப்போது பில்டிங்க் காண்ட்ராக்டர் .வேலை விஷயமாக கல்லூரிக்கு வந்த போது தான் அவன் இவளைக் கண்டு கொண்டான். பார்ப்பான் . தினமும் பார்ப்பான். கண் முழுவதும் பரவசம் இருக்கும். அவள் உருவத்தை அப்படியே மனதில் நிரப்பிக் கொள்வான். என்ன நிற ஆடை? அதற்கு ஏற்ற குட்டிக் கம்மல். தோளோடு வெட்டப் பட்ட முடிக் கற்றைக்கு ஏற்ற பட்டர் ப்ளை கேட்ச் கிப் அவள் காலின் நிறத்துக்கு ஏற்ற சாக்லேட் நிற செருப்பு வரை அத்தனையும் பார்த்துக் கொள்வான். ஆனால் எதுவும் பேச முயற்சிக்கவில்லை. பின் தொடரவோ இல்லை வேறு எந்த விதத்திலோ அவளை அவன் நெருங்கவில்லை. தொந்தரவு செய்யவில்லை. "எப்படி இருக்க?" கேட்டது கூட இல்லை. ஏன் இயல்பாக ஒருவரைப் பார்த்தால் வரும் புன்னகை கூட வெளிக் காட்டியது இல்லை. அதனால் இவளும் எதுவும் கண்டுக் கொள்ளவில்லை. எத்தனையோ பேர் தெருவில் செல்கிறார்கள். உடன் பயணிக்கிறார்கள்.அவர்களை பற்றி எல்லாம் எப்படி எந்த எண்ணமும் இல்லையோ அப்படியே இவனையும் கடந்து விடலாம். கொஞ்ச வாரங்கள் தானே என்று நினைத்தாள் தான். இருப்பினும் அத்தனை எளிதில் அவனை கடந்துவிட முடியுமா என்ன ? அவனைப் பார்த்த அன்றே ஆரிவிடம் தெரிவித்துவிட்டாள். எந்த பிரச்சனை வந்தாலும் இப்போது அவன் தானே அவளுக்கு எல்லாம்.
கதிரின் குணமும் அவளுக்குத் தெரியும். அவன் கோபக்காரன் . முரடன். அவன் குடும்பம் தாண்டி எதுவும் யோசிக்கத் தெரியாதவன். இப்போது எதற்காக தினமும் வந்து நிற்கிறான்? என்னை பார்ப்பதற்கா?
ஆரிவுடன் கலந்து பேசும்போது, உனக்கு ரொம்ப பயமா இருக்குன்னா ஒரு போலீஸ் கம்பளைண்ட் கொடுத்திடலாம் . என்ன சொல்லற?"
"இல்ல அதெல்லாம் வேணாம்?"
"என் லவ்வா ?" அவளின் பதிலில் கடுப்பானான்
" அரி ப்ளீஸ் இந்த மாதிரி பேசாத "
"வேற எப்படி பேசனும்? இத்தனை நாள்ல எங்க இருந்தான்னு கூட தெரியாது. விவாகரத்து ஆகிடுச்சு. இப்ப எதுக்கு தினம் தினம் வந்து நிக்கறான். சரி. வந்தான். எதுக்கு வந்து நிக்கறான்னு ஏதாவது காரணத்தை வெளிப்படையா பேசணுமில்ல? இப்படி தினம் தினம் முகத்தை கொண்டு வந்து காட்டிகிட்டே இருந்தா? என்னிக்காவது திடீர்னு ஆசி ட் வீசிட்டா? முரடன்னு வேற சொல்லற "
"நீ சொல்லறது எல்லாம் சரி தான். ஆனா இப்போதைக்கு அவர் எதுவும் பிரச்சனை பண்ணல. ஆசிட் அடிக்கற அளவுக்கு எல்லாம் மோசமானவரு இல்ல. ஏதாவது பிரச்சனை வந்தா பார்த்துக்கலாம். இன்னிக்கு நாம போலீசு அது இதுன்னு போயிட்டு பின்னாடி உனக்கு எதுவும் பிரச்னை வர்க் கூடாது. நீ இப்ப புதுசா கிளினிக் வேற ஓபன் பண்ண வேண்டும் . அவசர பட வேண்டாம் .
மலர் சொல்வதும் சரிதான் இப்போதைக்கு நாம் எதுவும் அவசர பட வேண்டாம். மலர் சொன்னது சரிதான். கதிரால் அவளுக்கு எந்தப் பிரச்சனையும் வரவில்லை.
அன்று வழக்கம்போலவே ஒன்றாக கண்ணால் அவன் இருப்பை பார்த்து விட்டு எனக்கென்ன என்பது போல கடந்து சென்று விட்டாள் மலர். இனி அவர்கள் இருவரும் எப்போது பார்க்கப் போகிறார்களோ.
என் முகம் பாரேன். நாய் குட்டி கால் அருகில் ஓடி ஓடிவந்து குதித்து என்னைக் கொஞ்சு என்று கேட்பது போல அவன் முகம் பார்த்து அவனின் கடைக் கண் பார்வைக்காக நாட்கள் இல்லை இரண்டு ஆண்டுகள் ஏங்கிக் கிடந்தவள் இப்போது அவளின் பார்வை கூட தன் மீது சரியாக படராதுப் போனது அவனின் நெஞ்சில் ஆழமாக பதிந்து விட்ட காயம் . அவள் வந்து முத்தங்களால் அவனுக்கு ஒத்தடம் கொடுத்தால் தீரலாம். நடக்குமா ?
கல்லூரியில் இருந்து அடுத்த சில நிமிட நடைதான் பேருந்து நிலையத்திற்கு. மற்ற பெண்கள் வந்திருந்தாலும் இவள் வழக்கம் போலவே யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக தனியாகவே இருந்தாள் . அவளின் இந்த ஒதுக்கம் புதியது இல்லை. அவனால் அவள் பழகிக் கொண்டது. ஏன் ?
வந்து நின்றவளுக்கு உடனே பேருந்து வரவும் அவசரமாக ஏறிக் கொண்டாள். போட்டிருந்த ஷால் மாட்டி சரியாக பாலன்ஸ் பண்ண வராமல் பேருந்தில் இருந்து பட்டென கீழே விழவும் பேருந்து கிளம்பவும் சரியாக இருந்தது.
"மலர்" கத்திக் கொண்டே இவர் ஓடி வர , வேறு ஒருப் பெண் சட்டென தாங்கிப் பிடித்தவள் பார்த்தபோது பின் தலையில் கை வைத்து லேசாக கண்ணை மூட ஆரம்பித்தாள்.
அதற்குள் அங்கே கூட்டம் கூடி விட்டது. அவசரமாக அங்கே வந்த ஆட்டோவில் அவளையும் ஏற்றிக் கொண்டு ஒரு பெண் உடன் செல்ல இவனும் தன் பைக்கில் பின் தொடர்ந்தான்.
நொடியில் உடல் நனைந்து விட்டது. கண்ணீர் கண்களை மறைத்தது.
அருகே இருந்த மருத்துவமனைக்குச் செல்ல ரொம்ப நேரம் ஆகவில்லை.
இவளை அனுமதித்து விட்டு வந்த செவிலியர் அவளை பற்றிய விஷயங்களை கேட்டார் .
"நீங்க யாரு? அவங்களுக்கு சொந்தமா? "
"ஆமா ! நான் இவளுக்குக் கணவர் "
'இதை சொல்ல எனக்கு என்ன உரிமை இருக்கிறது? நீதிமன்ற வளாகத்திற்குச் சென்ற கவனத்தை நொடியில் மீது மருத்துவமனைக்கே கொண்டு வந்து விட்டான்.
"அவங்க ஏதாவது மெடிசன்ஸ் எடுத்துக்கராங்களா? அலர்ஜி ஏதாவது இருக்கா? என்ன ப்ளட் குரூப் ?"
நர்ஸ் கேட்ட எந்த கேள்விக்கும் விடை தெரியாமல் நின்றிருந்தான் அவன் . இரண்டு வருடங்கள்-இருபத்து நான்கு மாதங்கள் உடன் இருந்தவள். அவளைப் பற்றி இவனுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.
அதுவே திருமணம் ஆகி வந்த இரண்டாம் வாரம் அவனுக்கு வைரல் பீவர் வந்த போது அவனைப் பற்றி அவன் உடல் பற்றி அத்தனையும் அவள் அறிந்துக் கொண்டுவிட்டாள். எப்போது அவனுக்கு பசிக்கும்? அவனை விட அவளுக்குத் தெரிந்திருந்தது. அவனுக்கு என்ன வேண்டும்? முகம் பார்த்து செய்தாள் . பார்த்துப் பார்த்து செய்தாள் . அதுவே அவளுக்கு உடல் நலமில்லாத போது அவளை தான் கண்டுக் கொள்ளவே இல்லை. அப்போது உறுத்த வில்லை. இப்போது மனம் காரி துப்பியது. விட்டால் நர்ஸும் காரி துப்பி இருக்கலாம். நல்ல வேளை எதுவும் செய்யவில்லை.
அவன் முழிப்பதைப் பார்த்து விட்டு நர்ஸு, "அவங்க செல் போன் இருக்கா? அவங்க வீட்டுல வேற யாராவது ? அதுவும் இவனுக்குத் தெரியாதே ! நர்ஸ் அவள் ஹாண்ட் பாகில் இருந்து அவள் போன் எடுத்து ஹோம் என்று இருந்த எண்ணுக்கு அழைத்தாள். லாக் பட்டேர்ன் , நம்பர்? இப்படி எல்லாம் கேக்காதீங்க. எமெர்ஜெண்சி காலிங்கில் இருந்து தான் எடுத்துக் கொண்டார் .
நர்ஸுக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் ஆரிவிடமிருந்து அவர்களுக்கு கிடைத்து விட்டது., உடன் தன்னுடைய மருத்துவ விவரங்களையும் அவள் சேமித்து வைத்திருந்தாள் . ஆரிவ் சொன்ன விஷயங்களும் அவள் சேமித்து வைத்திருந்த விவரங்களும் ஒன்றாக இருந்தது.
நர்ஸிடம் போனில் பேசியவன் வேகமாக சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி விட்டு எத்தனை விரைவாக வர முடியுமோ அத்தனை வேகமாக வந்து சேர்ந்தான்.
முதலுதவி செய்து இப்போது நார்மலாக படுத்திருந்தாள் மலர்.
அவள் தலைக் கோதி மெதுவாக அழைத்தான் விழி!
அவனின் அழைப்பில் சடக்கென தலை நிமிர்ந்தான் அவள் கணவன். விழி! எத்தனை அழகானப் பெயர் . அவளுக்குப் பிடித்த பெயர். "என்னை விழின்னு கூப்புடுவீங்களா?" தன் விழி நோக்கி எத்தனை ஏக்கத்துடன் கேட்டாள் .
"சீ லூசு. எது என்ன பேரு விழி சுழின்னு! "கிண்டலடித்தவன் மறந்தும் அவள் பெயரை விழி என்று அழைத்ததில்லை. ஏன் ! அவளுக்குப் பிடித்த பெயர் என்பதாலா?
கணவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்க ஆரிவ் மனதில் அந்த கணவன் தான் சுற்றிக் கொண்டிருந்தான்.
கணவன் என்று ஒரு கேரக்டர் எதற்காக இத்தனை நாட்கள் கழித்து வந்து நிற்க வேண்டும்? இதே தான் யோசனையாக இருந்தது ஆரிவிற்கு . அவள் கண்விழித்து நார்மலாக இருக்கிறாள் என்று கேட்டதும் தான் உயிரே வந்தது.
அவனை பார்த்தவள் அவசரமாக எழுந்துக் கொண்டாள்.
"ஆரிவ் !"
"ஏய் இரு! " அவசரமாக அவளைத் தாங்கியவன் தலையணை சரிப்படுத்தி அவளை அமரவைத்தான். அருகில் தான் கதிர் வேலு அமர்ந்திருந்தான். அவளும் அவனைக் கண்டுக் கொள்ளவில்லை. தன்னவள் இன்னொருவனின் கை வளைவில் . தன்னால் எதுவும் செய்யமுடியாது . கோபம் இல்லை. ஆனால் வருத்தம் இருந்தது. கையில் இருந்த பொக்கிஷத்தை தவறவிட்ட வருத்தம்.
"இந்த ரெண்டு வருஷத்துல ஒரு தடவை கூட என்னை நீங்க லவ் பண்ணவே இல்லையா?"
நீதிமன்றம் வாயிலில் கண்களில் குளம் கட்டிய நீருடன் அவனிடம் அவள் கேட்ட கேள்வி. எத்தனை அலட்சியமாக பதில் சொல்லியிருந்தான் .
உதடு வளைத்து ஏளனமாக இல்லை என்றவனுக்கு இப்போது மட்டும் என்ன?
நாம் எல்லாருமே ஏதேதோ சந்தர்பத்தில் வாழ்க்கையில் பல பாடங்களை கற்றுக் கொள்பவர்கள் தான். வாழ்கை கற்றுத் தரும் பாடம் இனிமையாக இருக்காது. அதிலும் தனிமை தரும் பாடம்?
"இப்ப எப்படி இருக்கு?" மனைவியின் கண்களை பார்த்துக் கேட்டவனுக்கு கண்கள் குளமாகி இருந்தது.
ஏதோ ஒரு சொல்ல முடியாத இல்லாமை. இயலாமை !
மலர் அழுத்தமாக அவன் முகம் பார்த்தாள். பதில் சொல்ல முடியவில்லை. ஆரிவ் முகம் பார்த்தாள்.
"இப்ப கொஞ்சம் ஓகே." ஆரிவ் தான் பதில் சொன்னான்,
"அவ சொல்லட்டுமே!" கேட்ட கணவரோ கெஞ்சல் பார்வை பார்த்தான்.
இப்போதும் வாயில் வார்த்தை வரவில்லை. பயத்துடன் அவள் தன்னைப் பார்த்ததை கண்டுக் கொண்டவன்,
"இல்ல! அவளால பேச முடியாது." என்றான் ஆரிவ் .
அவனுக்கோ கதிர் மீது அத்தனை கோபம். அடங்கிக் கொண்டான். இது கோபம் காட்ட, சண்டை போடும் இல்லை. ஒரு மருத்துவனுக்குத் தெரியாதா? எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று. அதுவும் இல்லாமல் கதிரின் உடல் மொழியும் மருத்துவனின் மூளையை யோசிக்க விடவில்லை.
"நோ! அவளுக்கு பேச முடியும். எனக்குத் தெரியும். நீ என்னை அவாய்ட் பண்ணறீயா?" குரலில் காட்டம் இருந்தாலும், மறு புறம் கெஞ்சலாகத் தான் இருந்தது.
அவனைப் பார்த்த அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவன் காதலித்ததில்லை. அவள் விரும்பினாள். அக்காவுக்காகப் பார்த்த கணவன், தன்னுடைய வருங்கால மாமா மட்டுமே மனதில் நினைத்தவளுக்கு அவன் கையால் தாலி வாங்கிக் கொண்டதும், இவன் தான் இனி என் வாழ்வு முழுமைக்கும் என்று ஏற்றுக் கொண்டு, அவனையே விரும்ப ஆரம்பித்தாள்.
கணவனை கணவனாக ஏற்றுக் கொண்டவள், காதலனாகவும் ஏற்றுக் கொண்டாள் . அதனால் தானோ என்னவோ இப்போதும் அவனைப் பார்த்ததும் மனதில் ஒரு சிறு வலி. ஒரு அதிர்வு.
"இவ்ளோ உரிமையா வந்து நிக்கறீங்க? நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா? "

Last edited: