• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தீஞ்சுவை மலர் -04

STN20

New member
Staff member
அத்யாயம் -4



நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா ?

கேட்ட ஆரிவின் உடல் மொழி எதையோ உணர்த்த அமைதியாக தன்னுடைய இரு கைகளாலும் அவனின் இடக்கரம் பற்றிக் கொண்டாள் மலர். அவள் கை சில்லிட்டிருந்தது. அவளின் நெஞ்சு படபடப்பு ஆரிவிற்கு நன்றாய் புரிந்தது. அவள் பயப்படக் கூடாது. அமைதியாக அவளின் கரங்களை தன்னுடைய கைகளுக்குள் அடக்கிக் கொண்டான் ஆரிவ். சில நொடிகள் அவர்களின் இணைந்திருந்த கைகளில் கதிரின் பார்வை அழுத்தமாய் பதிந்தது .

"நான் இவள் கணவர்" சொல்ல தான் ஆசை . வாங்கி இருந்த விவாகரத்து சொல்ல விடவில்லை போலும். அமைதியாக நின்றான் கதிர்.

"நீங்க கதிர் வேலு தானே!" ஆரிவ் தான் கேட்டான் .

"ம்!" பெருமூச்சுடன் ஆமோதித்தது அவன் குரல்.

"நீங்க இது வரைக்கும் அவளுக்கு நிறையவே செஞ்சுடீங்க. ப்ளீஸ் ! போதும். அவ எனக்கு உயிரோடவாவது வேணும் "கையெடுத்துக் கும்பிட்டான் ஆரிவ் .

அவளுடைய இந்த நிலைக்கு தான் தான் காரணம். கதிருக்குப் புரிந்தது. இருப்பினும் அவளை அப்படியே விட்டு விட்டு செல்ல மனம் வரவில்லை.அவள் அருகில் சென்று அமர்ந்துக் கொண்டான் கதிர் . இது வெளி இடம். எந்த ஆபத்தும் கிடையாது. அமைதியாகவே இருந்தாள். அவள் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டவன் அடுத்த நிமிடம் எழுந்து சென்றுவிட்டான். அவன் கண்ணீர் சூட்டை அவளால் உணர முடிந்தது. அவன் சாய்ந்திருந்த இடத்தில சில கண்ணீர் துளிகளும் இருந்தன.

கணவன் மனைவிக்கு இடையில் வர விரும்பாதவன், அமைதியாக கை கட்டி பார்த்திருந்தான் ஆரிவ்.

அதுவுமில்லாமல் அவன் ஒரு மன நோய் மருத்துவர். அவனால் கதிரை பார்த்த நிமிடம் கதிரின் எண்ணங்கள் புரிந்துக் கொள்ள முடியவில்லை என்றாலும் , உடல் மொழியை வைத்து ஓரளவாவது புரிந்துக் கொள்ள முடியும் இல்லையா ?

இவன் மருத்துவன் என்பதால் அப்போதே அனுப்பி விட்டார்கள். தலை அடிபடுவதற்கு முன் இவள் கையை வைத்துக் கொண்டதால் பெரிய காயம் எல்லாம் எதுவும் இல்லை. எதற்கும் இருக்கட்டும் என்று ஸ்கேன் செய்து பார்த்து விட்ட்டார்கள். ஒன்றும் இல்லை. பின் தலையில் தான் லேசாக இரத்தம் வந்திருந்தது. இருப்பினும் அந்த அதிர்வைக் கை தாங்கி கொண்டதால் எலும்பில் அடி. அது ஆற சில வாரங்கள் ஆகும்.

கதிர் அப்போது அந்த இடம் விட்டு சென்றிருந்தாலும் உடையை தாண்டி தெரிந்த அவனின் கண்ணீர் சூடு அவளை ஏதோ செய்துக் கொண்டிருந்தது . உரிமை உள்ளவன்தான். வெட்டினரின் அறிவுரைப் படி இவள் மீது தனக்கு எந்த உரிமையும் வேண்டாம் துன்று நீதிமன்றம் சென்றவன். இருப்பினும் ஏனோ இவளால் அவனை உதாசீனப் படுத்த முடியவில்லை. வளர்ப்பு என்று காரணம் சொல்ல மாட்டேன். அவளுடைய இயல்பு அதனால் அவனை அவள் உதாசீனம் செய்ய முடியவில்லை.

வீட்டிற்கு வந்தவன் அவளை மெதுவாக சாய வைத்து தொலைக்காட்சியைப் போட்டான் ஆரிவ் . தொலைக் காட்சியில் விவகாரத்தை கொண்டாடலாமா வேண்டாமா என்ற தலைப்பில் ஏதோ ஒரு நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருந்தது. அதை அவன் பார்க்கவில்லை. வந்தவன் நேரே குளித்து விட்டு தனக்கும் அவளுக்கும் இரவு உணவு செய்யப் போனான். அந்தத் தலைப்பு பார்த்தவளுக்கு ஏனோ தன்னுடைய நினைவுகள் அலை மோதத் தொடங்கின. வேண்டாம் என்று ஒதுக்க முயற்சிக்கும் நினைவுகள். என்ன முயற்சி செய்தாலும் இந்த சமூகம் ஏதோ ஒரு விதத்தில் எதையாவது நினைவுபடுத்திக் கொண்டே தான் இருக்கிறது. எங்கிருந்தோ வரும் வத்த குழம்பு வாசம். சுட்ட அப்பளம் போட்டு? இவளுக்கு நாவில் எச்சில் ஊரும். கணவனுக்குப் பிடிக்காது. அதனால் அவனுடன் இருந்த இரு வருடங்கள் தனக்குப் பிடித்தது எதுவுமே பிடிக்காமல் போனது தான் மிச்சம். மசால் தோசை. அத்தனை பெரிய குடும்பத்திற்கு செய்து விட்டு அசதியில் தான் எதுவுமே உண்ணாமல் உண்ணப் பிடிக்காமல் படுத்துக் கொண்ட நாட்கள்.

"நீ சாப்டியா ?" கணவனோ இல்லை அவன் குடும்பமோ கேட்டதில்லை.

இதோ ஆரிவ் கடுகு தாளித்துக் கொண்டிருக்கிறான். முதன் முதலாக சமைக்கப் போன போது லேசாக கடுகு சிந்தியத்திற்கு அபசுகனம் என்று மாமியார் கத்திய கத்தல். தானாகவே இன்று நினைவுக்கு வரத் தொடங்கின. இன்று என்றில்லை. கடந்த சில வாரங்களாக இப்படித் தான் சென்றுக் கொண்டிருக்கிறது.

தொலைக் காட்சி பார்த்துக் கொண்டே மனதிற்குள் பட்டிமன்றம் நடத்தியவளுக்கு விவகாரத்து தனக்கு கொண்டாடப்பட வேண்டிய விஷயம் தான் என்ற முடிவுக்குத் தான் வந்தாள். கண்களின் ஓரம் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.

தன்னுடையது திருமணம் தோல்வியில் முடியக் காரணம் யார்? நானா? இல்லை. ஆனால் பெற்றவர்கள் அப்படிதான் சொன்னார்கள். மற்றவர்களும் அப்படியேத் தான் சொன்னார்கள். எப்போதுமே திருமணம் தோல்வியில் முடிந்தால் பெண்கள் தான் கைக் காட்டப் படுகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களும் அதையேத் தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் பெத்த பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்கற அப்பா கூட எப்படி இருக்க முடியும்? ஒரு பெண் கேட்டார். சரிதானே. இன்னும் இதை விட மோசமாக எப்படி நடந்துக் கொள்ள முடியும்?



"ஆம்பிளைங்கன்னா கொஞ்சம் அப்படி இப்படித் தான் இருப்பாங்க வீட்டுல இருக்கற பொம்பளைங்கத் தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்."இது அம்மா.

" அப்பா இல்லாத பிள்ளை. இந்த அளவுக்கு வீட்டுப் பொண்ணை கட்டிக் குடுத்து உடம்புக்கு முடியாத அம்மாவையும் பார்த்துகிட்டு சும்மாவா? எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது. மூத்தவ ஓடிப் போனதுக்கு மறு வார்த்தை பேசாம உன்ன ஏத்துக்கிட்டாரு. இல்லன்னா நம்ம குடும்ப மானம் மரியாதை என்ன ஆகி இருக்கும்? நீதான் எல்லாத்தையும் அனுசரிச்சுப் போகணும்"

இது அப்பா.

"எப்ப பாரு நாயி மாதிரி அலைய முடியுமா? ஏதோ புருஷன் பொண்டாட்டின்னா எப்பவோ ஒரு நாள் ஒண்ணா இருப்பாங்க . எப்ப பாரு இதே நினைப்பா? " கணவன் அருகில் ஆசையாக அமர்ந்த போது மாமியார் சொன்ன வார்த்தைகள். எண்ணங்கள், கொடுமைகள், பட்ட கஷ்டங்கள், துன்பங்கள், விஷம் ஏ(ற்)றிய வார்த்தைகள் வரிசைக் கட்டி நிற்கிறது தான். அதற்குள் ஆரிவ் வந்து முட்டுக் கட்டைப் போட்டு விட்டான் துன்பங்களுக்குள் மூழ்கி முத்து எடுக்க முடியவில்லை.

இவளுக்கு ஹார்லிக்ஸ் கொண்டு வந்தவன் அவசரமாக டீவியை அனைத்து விட்டு இவளை தோளில் சாய்த்துக் கொண்டான்.

"எதுவும் நினைக்காத!"

அவனுக்கோ "நீ ஒரு மருத்துவன்" மூளை சொல்லிக் கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் ஒரு மருத்துவனாக அவளை அவனால் கையாள முடியவில்லை.

"ஆரிவ் ! என்ன கல்யாணம் பண்ணிக்கிறாயா?"

அவனிடம் அவள் தான் வந்து கேட்டாள். அவளின் திருமணத்திற்கு முன்பு .

"ஏய் ! என்ன இது நான் உன்கிட்ட அந்த மாதிரி எண்ணத்துல பழகவே இல்லை. தெரியாதா உனக்கு? எனக்குன்னு நிறைய கனவுகள் இருக்கு. இன்னும் மேல் படிப்பு படிக்கணும். வெளி நாடு போகணும். ப்ளீஸ் புரிஞ்சுக்கோ "

"அது இல்லடா. அக்கா நல்லா படிச்சுருக்கா. அவ வேற ஒருத்தரை காதலிக்கறா . தெரிஞ்சும் அவளுக்கு வேற ஒரு மாப்பிள்ளையை பார்த்துருக்காங்க. அவங்க வீட்டுல இவளை வேலைக்குப் போக கூடாதுன்னு சொல்லிட்டாங்க . ரொம்ப கெடு பிடியான ஆளுங்களா இருப்பாங்க போல. ஒரு வேளை அக்காவுக்கு அடுத்து எனக்கும் இதே மாதிரி ஒரு மாப்பிள்ளையை பார்த்துட்டா? அக்காவுக்கு இருக்கற தைரியம் எல்லாம் எனக்கு இல்லடா. எங்கையோ போய் மாட்டி விட்டுருவாங்களோன்னு பயமா இருக்குடா. அதுக்கு நீயே என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா நானும் என்னோட கேரியர் பாக்கலாம்.நீயும் ஹயர் ஸ்டடீஸ் பண்ணலாம். அதான்."

என்ன சொல்லி இருப்பான் ஆரிவ் ...

"சீ லூசு! ஏன் நெகட்டிவா யோசிக்கற? கதிர் அப்பாவும் உங்க அப்பாவும் சின்ன வயசுலேர்ந்தே ரொம்ப பிரண்ட்ஸ். உங்க அப்பாவுக்கு கதிர் அப்பா நிறைய ஹெல்ப் பண்ணி இருக்காங்க. எதிர் பாராம அமைஞ்சது இந்த சம்பந்தம். உனக்கும் அதே மாதிரி தான் பாப்பாங்கன்னு ஏன் நினைக்கற? உனக்கு உன்ன கண்ணுல வச்சு பார்த்துக்கற மாப்பிளை வருவார். ஒரு வேளை உனக்கு ஏதாவது சரியா இல்லன்னா நான் வந்து நிப்பேன். எங்க இருந்தாலும். சரியா? அத்தை மகனாய் உற்ற நண்பனாய் அன்று சொன்னவன் தான், இப்போது தன்னைப் பற்றிய எந்த நினைவும் இல்லாமல் மலருக்காகவே வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். தான் செய்த தப்பை நினைத்து இன்று சிலுவை சுமந்தாலும் அவனைப் பார்த்து அவனே பயந்து ஓடிக் கொண்டிருக்கிறார். அவளுக்கு நான் தான் துரோகம் செய்து விட்டேன் என்ற குற்ற உணர்வுக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கிறான் . அதிலிருந்து தப்பிக்கும் வழி தான் தெரியவில்லை .

இதில் காமம் இல்லை, காதல் இல்லை இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை. இவர்களுக்குள் எந்த தப்பான எண்ணமும் இல்லை. நெஞ்சம் நிமிர்த்தி சொல்லுவேன் இந்த கதாபாத்திரங்களை உருவாக்கியதற்கு. ஆரிவ் இவளை கட்டிக் கொள்வான். நெற்றியில் முத்தமிடுவான் ஏன் ஒரே கட்டிலில் கூட அவளுக்கு அருகில் படுத்துக் கொண்டு அவளை தூங்க வைப்பான்.

அவளுக்கு அவன் வேண்டும். அவனின் அணைப்பு அன்பு எல்லாம் வேண்டும். இருப்பினும் அதில் நிச்சயம் அதைத் தாண்டிய எந்த பாலியல் உணர்வும் இருவருக்குமே வந்ததில்லை. தன்னுடைய கணவனுடன் அவள் உறவுக் கொண்டது என்னவோ சில தடவைகள் தான். ஏங்கி இருக்கிறாள். கணவனின் அன்புக்கு, அணைப்புக்கு காதல் , காமம் எல்லாவற்றிற்கும் தான். அவனின் ஒற்றை முத்தம் கூட அவள் உடல் மொத்தத்தையும் சிலிர்க்க வைக்கும். அவள் ஏங்கியபோதும், ஏன் வெளிப்படையாகவே கேட்ட நேரங்களில் கூட அவளுக்குக் கிடைக்கவில்லை. அதற்காக எல்லாம் அவளால் அவன் இடத்தில கட்டிலில் வேறு ஒரு ஆணை வைத்து நினைக்க முடியவில்லை.

வளர்ப்பு ஒழுக்கம் எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். காதலும் காரணமாக இருக்கலாம்தானே!

இதே எண்ணம் கதிருக்கும் இருந்திருக்குமா? இருந்திருந்தால் அவன் மேட்ரி மோனியில் வேறு பல பெண்களைப் பார்த்திருப்பானா?

"இங்க பாருப்பா கதிர் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் அவளையே நினைச்சுகிட்டு உக்காந்திருக்க முடியும்? ஏதோ உங்க அப்பாவோட தோழர். பெரியப்பா சொன்னாங்களேன்னு அந்த குடும்பத்துல பொண்ணு எடுத்துட்டோம். நல்ல பொண்ணு. பெரியவ ஒடிப் போய் சின்னவளை கட்ட வேண்டியதாப் போச்சு. நீயும் ஒன்னும் அவ கூட ஆஹா ஓஹோன்னு குடும்பம் நடத்தலை . பொண்ணா அது. ராட்சசி. எந்நேரமும் வீட்டுல கத்திக்கிட்டு. அப்பப்பா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளும் அவ இருக்கும் போது நரகம் தான் .

'அம்மம்மா! அவ இருக்கும்போது என்னால எங்கையாவது நம்ம வீடு தானேனு வந்து ரெண்டு நாள் தங்க முடிஞ்சுதா இல்ல. சரி நம்ம வீடு தானேன்னு உரிமையா என்னால ஏதாவது சாமான் புழங்க முடிஞ்சுதா? அங்க அவரோட தங்கச்சி வந்து எப்படி உரிமையா அந்த ஊஞ்சல்ல உக்காந்துகிட்டு என்னைய வேலை வாங்குவாத் தெரியுமா ? நான் எங்க?

அம்மா, செல்வி , பெரியம்மா என்று மூவரும் தான் பேசிக் கொண்டிருந்தார்கள். இல்லையில்லை. அவனின் முன்னாள் மனைவி பற்றி அக்கு வேறு ஆணி வேறாக குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள் .



தொடரும்.....
 
Last edited:
Top Bottom