• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தீஞ்சுவை மலர் -23

STN20

Member
Staff member



தீஞ்சுவை மலர் -23


"இல்ல என்னோட தங்கச்சிக்கு காதல் எதுவும் வந்துருச்சா?"

இயல்பாக இருந்தவள் முகம் சட்டென மாறியது.

"நாங்க எல்லாரும் உன்னோட பதிலுக்காக காத்திருக்கோம் மலர் ." அக்காவின் முகத்தில் ஒரு தீவிரம்.

"நான் என்ன பதில் சொல்லணும் ?"

"கதிர் பத்தி?"

"கதிரைப் பத்தி பேச என்ன இருக்கு? "

"உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன தான் நடக்குது மலர்? உங்களுக்கு இருக்கற ரிலேஷன்ஷிப் பத்தி நீ சொல்லித்தான் ஆகணும் "

"ரிலேஷன்ஷிப்னா உறவு முறையா?"

அமைதியாக இருந்தாள் பெரியவள்.

"அவர் இப்ப என்னோட வீட்டுக்கு எதிர்வீட்டுல இருக்கற ஒரு சக மனிதர். நாங்க ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்திகிட்டதுக்குக் காரணம் மனிதாபிமானம் தான். "

"நீ எப்படியோ ஆனா கதிரை பார்த்தா உன்கிட்ட மனிதாபிமானதுல பழகர மாதிரி தெரியல "தோளை குலுக்கினான் தீபக்.

ருஇ"உன்னோட கண்ணை பார்த்து புரிஞ்சுக்க ஆரம்பிச்சுருக்காரு. அது உனக்கு காதலா தெரியலையா?"

"யாருக்கு இந்த காதல் வேணும் திவி. காதல்ங்கறது ஜஸ்ட் கண்ணுல பார்த்து உதட்டை நெருங்கி கட்டில்ல முடியறதா? உனக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. மாமா எந்த ஒரு இடத்து லை யாவது உன்னை விட்டுக் கொடுத்து பேசியிருக்காரா? அதுதானே காதல். இவள் எனக்கானவன்னு எல்லா இடங்களிலும் காட்ட வேண்டியிருக்கு திவி . எல்லாரும் என்னை பார்த்து பைத்தியம்னு அவங்க வீட்டு ஆளுங்க சொன்னபோது எனக்காக ஒத்தை வார்த்தை பேச மாட்டாரான்னு அவர் முகத்தை பார்த்து எத்தனை நாள் ஏங்கியிருக்கேன் தெரியுமா ? இவ என்னோட மனைவின்னு காட்டணும். காதல் காமம் ரெண்டுமே இருக்குனு எல்லாருக்கும் காட்டணும். முதல்ல எனக்கு அந்த விஷயங்கள் புரியலை. செல்வி வீட்டுக்காரரு காட்டினாரு .வெற்றி புரிய வைச்சான். எல்லா இடங்களிலும் என்னோட மனைவி இப்படி அவ அப்படின்னு ஒரு காபி போடற விஷயத்தைக் கூட பெரிசா காட்டுவான் . நான் எவ்வளவோ நாட்கள் பசி தூக்கம் இல்லாம அந்த வீட்டுக்காக உழைச்சு கொட்டியிருக்கேன். என்னோட நகை அத்தனையும் செல்விக்குத் தான் கொடுத்தாங்க. எனக்குன்னு ஒரு வார்த்தை பாராட்டுதல் கிடைச்சதில்ல . இருந்துட்டு போகட்டும் .. ஒரே ஒரு இடத்துல உனக்காக நான் இருக்கேன்னு கணவன் வந்து நிக்கலன்னா அது என்ன ரிலேஷன்ஷிப் திவி ?எனக்கு காதல், காமம் ரெண்டுமே வேணும் திவி . சந்யாசவாழ்க்கைக்காக கல்யாணம்ங்கற பந்தம் ஏற்படுத்திக்க வேண்டிய அவசியம் இல்ல. "

"சாரி மலர்.. நாங்க ஏதோ'

"நான் யாரையும் குறை சொல்ல விரும்பல. ஒரு வேலை நானும் அவரும் ஒண்ணா சேர்ந்து ., அவர் தம்பி, தங்கை என்னை பார்த்து சொல்லக் கூடிய வார்த்தைகளை என்னால இனிமே தாங்கிக்க முடியாது.நம்ம அம்மா அப்பாவை சேர்த்து தான் சொல்லறேன். இனி என்னால மத்தவங்களுக்காக பாரம் சுமக்க முடியாது. ப்ளீஸ் எல்லாரும் புரிஞ்சுக்கோங்க" கண்களில் கண்ணீர் வரவில்லை. நிச்சயம் ஒரு தெளிவு இருந்தது. குரலிலும் எந்த தடுமாற்றமும் இல்லை. இது இவள் இப்போது எடுத்த முடிவு இல்லை. ரொம்ப நாட்களாக யோசித்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறாள் . புரிந்துக் கொண்ட தீபக்

"நீ எந்த முடிவு எடுத்தாலும் நான் எல்லாரும் உனக்குக் கூடவே நிப்போம் மலர்" என்று தோளோடு அனைத்துக் கொண்டான்.

"நான் கொஞ்ச நேரம் மாடில தனியா இருந்துட்டு வரேன் . ப்ளீஸ் "

"பத்து நிமிஷம் தான் உடனே வந்திரனும்" கண்டிஷனோடு சொல்லி அனுப்பினான் ஆரிவ். இவள் வெளியில் வந்து மாடிக்கு செல்லவும் ஏதோ ஒரு சிறு குழந்தை மாடியில் இருந்த சுவற்றின் இடுக்கில் புகுந்து சன் ஷேடில் குதிக்க முயற்சித்துக் கொண்டிருந்தது, இவள் ஓடி செல்வதற்குள் குதித்து விட்டாள் . குதிக்கும் வரை பயம் தெரியாதவள் குதித்த பிறகு உதடு பிதுக்கி அழ ஆரம்பித்தாள் .

மெதுவாக எம்பி குழந்தைக்கு ஒன்றும் ஆகிவிடாதவாறு தூக்கி விட்டாள் மலர். மலரின் கைகளில் தன்னுடைய குழந்தை அழுதுக் கொண்டு நிற்பதை பார்த்த செல்விக்கு அத்தனை ஆத்திரம். குழந்தையை காணவில்லை என்று அவள் தேடி வரவும் எதேச்சையாக இந்த காட்சியைப் பார்த்து விட்டு என்ன எதுவென்று விசாரிக்காமல் குழந்தையைப் பிடுங்கி கொண்டவள், "என் பிள்ளையை என்னடி பண்ண? ராட்சசி நாங்க எங்க போனாலும் எங்களை நிம்மதியா விடவே மாட்டியா? என்று பளீரென மலரின் கன்னத்தில் அறைந்து விட்டாள் . அங்கே வந்து நின்ற கதிரை விழி விரித்துப் பார்த்த மலர், அவள் அடித்த இடத்தில கை வைத்துக் கொண்டு வேகமாக சென்று விட்டாள் . இதுதான் உன் இலட்சணம் அவள் விழிப்பு பார்வை சொல்லிவிட்டது . தன்னுடைய குடும்பத்தை மட்டுமே யோசித்துக் கொண்டிருந்த கதிர் இப்போது இல்லையே. மனைவியின் பார்வை ஊசி முள்ளாக நெஞ்சைக் குத்தியது.

"என்னாச்சு செல்வி?" அவன் பேசிக் கொண்டிருந்தது மட்டுமே மலரின் காதில் விழுந்தது. வீட்டுக்குச் சென்றவள் அமைதியாக யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. நடந்த விஷயத்தை அறிந்த கதிர் தங்கையை அடித்ததோ மனைவிக்காக பேசிய எந்த விஷயமும் மலருக்குத் தெரியாது.

"ஏன் செல்வி இதுவே காவ்யாவா இருந்தா இப்படி அடிச்சுருப்பியா?"

"என்ன அண்ணா புதுசா இருக்கு பேச்சு?"

பளீரென்று தங்கையின் கன்னத்தில் அறைந்தவன்,

"ஆமாம் எல்லாமே புதுசுதான். அவ என் பொண்டாட்டி . இனி இன்னொரு தரம் அவகிட்ட ஏதாவது வம்பு பண்ண.,தொலைச்சுருவேன் " விரல் நீட்டி மிரட்டுவது கதிர் அண்ணனா ? நம்ப முடியாதவள்,

"அண்ணா இப்படி பேசறது நீயா? அவ என்ன உன்னை முந்தானைல முடிஞ்சு வச்சுகிட்டாளா "

"சீ! வாயை மூடு .எப்பப் பார்த்தாலும் இதையே பேசிகிட்டு. யாராவது இதே வார்த்தையை வெற்றிகிட்ட கேட்டுருக்கீங்களா ? கொஞ்சமாவது படிச்சவ மாதிரியா பேசற நீ? நீ உன் புருஷனை முந்தனைல முடிஞ்சு வைச்சுக்கும்போது அவ புருஷனை அவ முந்தனைல வச்சுக்கிட்டா என்ன தப்பு? எப்ப பார்த்தாலும் அம்மா கூடவே இரு. தனியா விட்டுடாதன்னு எல்லாரும் சொல்லி சொல்லி நானும் அவளும் வாழ வேண்டிய வயசுல.. எவ்ளோ நாள் அவ அழுதிருக்கா தெரியுமா?"

கண்கள் சிவந்து கண் கலங்க,

"முதல்ல வீட்டுக்கு வா" என்று குழந்தையுடன் வீட்டுக்குச் சென்று விட்டான். தன் அண்ணா மனதில் இத்தனை ஏக்கங்களா ? யோசித்துக் கொண்டு சில நிமிடங்கள் நின்றவள், பிறகு வீடு வந்து சேர்ந்தாள் . குழந்தையிடம் விவரம் கேட்டவன் மலர் வீட்டில் பெல் அடித்தான். கதவைத் திறந்த ஆரிவை கண்டுக் கொள்ளாதவன் அறையில் அமர்ந்து கொண்டிருந்தவளைக் கட்டிக் கொண்டான்.

"ரொம்ப தாங்ஸ் மலர் . நீ எவ்ளோ பெரிய ஆபத்துலேர்ந்து குழந்தையை காப்பாத்தியிருக்க தெரியுமா?அவ தான் எங்களுக்கு உசுரு.`" அவள் கைகளில் முகம் புதைத்துக் கூறி கொண்டிருந்தவனிடம் இருந்து கைகளை விலக்கிக் கொண்டாள் .

"அவளைத் தொந்தரவு பண்ணாதீங்க ப்ளீஸ்" என்று வாயிலை ஆரிவ் காட்டவும் அமைதியாக சென்று விட்டான்.

இது உடைந்த கண்ணாடி தான். ஒட்ட வைக்க முடியுமா என்ற சந்தேகம் கதிருக்கு இப்போது வந்தது. மனைவியின் முகத்தை ஒரு முறை திரும்பப் பார்த்தவன் அமைதியாக வீட்டுக்குச் சென்று விட்டான்.

மலர் வேலைப் பார்க்கும் கல்லூரியில் விழிப்புணர்வு முகாமுக்கான நாள் வந்தது. அங்குப் பேச யமுனா தன்னை பல விதங்களிலும் தயார் செய்துக் கொண்டாள். அது பெண்களின் உடல் நலம் பற்றிய நிகழ்வுகளுக்காக பல மருத்துவர்களும் வந்திருந்தார்கள். பெண்களின் உடல் நலம் என்றுபி பேசும் போது அவர்களின் மார்பகங்கள் பற்றி தான் இவள் பேச வேண்டும். எப்படியெல்லாம் பராமரிக்க வேண்டும், புற்று நோய் எப்படி கண்டறிவது? உள்ளாடைகளை எப்படி அளவு பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்? வயதிற்கு வரும்போது எத்தகைய உடல்மாற்றங்கள் வரும், மாதாந்திர நாட்கள், அது தவிரவும் எப்படி உள்ளாடைகளைநன்றாக சுத்தம் செய்வது வெயிலில் உலர்த்துவது என்று பலருக்கும் தெரிந்த விஷயாமாகவே இருந்தாலும் அதில் இன்னும் கூடுதலான தகவல்களோடு எந்த விதமான பயமும் தயக்கமும் இல்லாமல் தங்குத் தடையின்றி பேசினாள் . அவளை அத்தனைக்கும் தயார் செய்தது ஆரிவ் தான் என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வாழ் நாளில் முதல் முதலாக தான்துயை முகத்தை காட்டினாள். அதில் பயம் இல்லை. பெருமிதம் தான் இருந்தது. அவளின் நடை உடை உடல் மொழி அத்தனையும் அத்தனை சரியாக இருந்தது. விழா முடிந்ததும் ஒரு நினைவுப் பரிசும், சால்வையும் கொடுத்தார்கள். தன்னுடைய உரையை முடிக்கும் தருவாயில் ஆரிவுக்கு நன்றி சொன்னபோது அவள் கண்களில் அந்தக் கண்ணீர் தேங்கி நின்றது.

அவன் நினைத்தது போலவே அவளுக்கென்று ஒரு அங்கீகாரம் இனி கிடைத்து விடும் என்று எண்ணியவன் அவளைப் பார்த்தபோது நேரிடையாகவே விஷயத்துக்கு வந்தான். அவன் இப்படி நேரடியாக பேச மற்றொரு காரணம் அவனின் பெற்றோர் தான். முதலில் எல்லாம் திருமணம் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தவர்கள் இப்போது மலர பற்றியும் தவறாகப் பேச ஆரம்பித்தார்கள் . இனியும் இந்த விஷயத்தை தள்ளிப் போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

"யமுனா என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?"

"டாக்டர் " புரியாமல் விழித்தவளிடம் எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சுருக்கு என்று ஆரம்பித்து மலரைப் பற்றிய விஷயங்களையும் கூறினான்.

"மலர் எப்பவும் நம்ம கூடத்தான் இருப்பா. நீயோ உன்னை சார்ந்தவங்களோ அவளை ஒரு வார்த்தைக் கூட தப்பா பேஸக் கூடாது என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தபோதே அவன் இதழில் அழுந்த ஒரு முத்தம் வைத்தாள் .

"ஹே! என்ன இது ?" ஆனந்த அதிர்ச்சியில் மிதந்தவனுக்கு விளக்கம் கொடுத்தாள் .

"இது ரொம்ப நாள் ட்யூ. மலர் தான் உங்க மனைவின்னு நினச்சு ரொம்ப கஷ்டப்பட்டு என்னை அடக்கிகிட்டேன். இனிமே எல்லாம் அப்படி இருக்க முடியாது. "

"அஹாங் "

"டாக்டர் எல்லாருமே என்னை என் தோற்றத்தை என் வேலையை கேலி செய்தபோது எனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்த உங்களுக்கு என்னால் முடிஞ்ச சின்ன பரிசு. எங்கிட்ட இது தான் கொடுக்க முடியும். பணம் காசு எதுவும் இல்ல " உணர்ச்சி மிகுதியில் சொல்லிக் கொண்டிருந்தவளிடம்,

"இந்த சின்ன பரிசு எல்லாம் எனக்கு வேணாம்" என்று தன்னுடைய முத்திரையில் அவளிடமிருந்து பெரிய பரிசுகளை வாங்கிக் கொண்டான்.

மலர்அடுத்த சில நாட்கள் ரொம்ப அமைதியாக இருந்தாள் . ஏதோ ஒரு பெரிய விஷயத்தை முடிவு செய்யப் போகிறாள் புரிந்து விட்டது ஆரிவுக்கு.

என்ன சொல்லப் போகிறாள்....

அவளிடமே கேட்டபோது, நன் கொஞ்ச நாளைக்கு வெளில தங்கலான்னு பாக்கறேன் ஆரிவ்.

"எங்க?"

"கேன்சர் நோயாளிகளை பார்த்துக் கொள்ள வாலன்டியர்ஸ் வேணுமாம். அதன் கொஞ்ச நாளைக்கு..அவங்க கூட போய் இருக்கலானு .."

முறைத்தவனிடம்,

"கொஞ்ச நாள் தாண்டா. கல்யாண விருந்து சாப்பிடத்தான் வந்துருவேனே'

எத்தனையோ சொல்லிப் பார்த்தார்கள். அவளுக்கென்று ஒரு ஸ்பேஸ் தேவைப் படுகிறது. சென்று விட்டு வரட்டும். ஓகே சொல்லி விட்டான் ஆரிவ்.
 
Top Bottom