• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

துணை - 13

STN - 95

New member
பிரசன்னாவை திருமணம் செய்துக்கொள் என்று தந்தை சொன்னதை கேட்டு கொண்ட சம்யுக்தா “கல்யாணம் தான பண்ணிக்குறேன் ஆனா பிரசன்னா இல்ல.. தேவா மாமாவ கட்டிக்குறேன்.. அதுவும் நீங்க என் பொண்ண கட்டிக்கோங்க மாப்பிளைன்னு அவன்கிட்ட சொல்லி.. என் அத்தமாகிட்டயும் சம்மதம் கேட்டுட்டு தாராளமா கல்யாணம் பண்ணி வைங்க” என்று அவர் தலையில் குண்டை சாதரணமாக இறக்கிருக்க,

மற்றவர்களுக்கும் இதுவே ஆசை என்றாலும், ஏனோ வெளிப்படையாக கேட்டு கொள்ளவில்லை. இதில் பெண்ணவளின் அதிரடி திகைப்பை கொடுத்தது.

இதில் தேவாவோ மற்றவர்களை விட அதிர்ந்து விட்டான்.

பின்ன தந்தை கேட்டதற்கு திருமணம் வேண்டாம் என்று மறுப்பாள் மட்டுமே எதிர்பார்த்திருந்தவன், அவள் தன்னை மணந்து கொள்ள சம்மதம் கூறியதோடு அவள் அடுதடுத்து கூறிய கட்டளையில் உறைந்து சிலையாகியே விட்டான்.

பிரசன்னாவிற்கோ தன் நிதி மேலிருந்த காதலை உணர்ந்ததில் சம்யுக்தாவின் பேச்சு, அவளை பாதிக்கவில்லை என்றாலும் அதற்கு அவளிட்ட கட்டளையில் ‘என் மாமா அவன்கிட்ட கெஞ்சனுமா’ என்று எண்ணியவண்ணம் பல்லை கடித்து கொண்டு மட்டுமே இருந்தான்.

குருமூர்த்தி அவளை குரூரமாக பார்த்திருக்க, மகளின் பேச்சில் அதிர்ச்சியுடன் கோவத்தில் எழுந்தவர் “என்ன பேசிட்டு இருக்க நீ.. அவன நீ கட்டிக்கணும் சொன்னதே நான் சம்மதிக்க மாட்டேன்..

இதுல அவன்கிட்டயும் அவன பெத்தவகிட்டயும் நான் போய் சம்மதம் கேப்பேனா.. அது என் உசுரு போனாலும் நடக்காது.. இங்க பாரு இந்த சடங்கு பங்ஷன் கூட உன்ன இங்க வரவச்சி கல்யாணம் பேசி முடிக்க தான்.. அதுக்காக நீ சொன்னியேன்னு எனக்கு பிடிக்கலனாலும் அந்த குடும்பத்த கூட்டிட்டு வந்து நடு வீட்டுல வச்சிருக்கேன்.. யாருக்காக உனக்காக தான்.. ஆனா நீ அப்பாவ அவங்ககிட்ட அசிங்கப்படுத்த நினைக்கிற” என்க,

அதில் புன்னகைத்தவள் “நான் உங்க பொண்ணுப்பா.. உங்க குணம் எனக்கும் உண்டு.. அப்படிருக்குற எனக்கு உங்க நோக்கம் புரியாமலா வந்திருப்பேன்..

வாட்எவர் எதுனாலும் இருந்துட்டு போகட்டும்.. நான் தேவாவ தான் லவ் பண்றேன் கல்யாணம் நடந்தா அது அவனோட தான்.. பொண்ணு இஷ்டத்த விட உங்க தன்மானம் முக்கியம் நினைச்சா இந்த விஷயத்த இதோட விட்ருங்க.. உங்க இஷ்டமில்லாமலும் நீங்க நான் சொன்னப்படி சம்மதம் கேக்காமலும் என் கல்யாணம் நடக்க விட மாட்டேன்.. ஆனா எப்போ இருந்தாலும் எனக்கு கல்யாணம் நடந்தா அது தேவா மாமாவோட மட்டும் அத மட்டும் மனசுல பதிய வச்சிக்கங்க”

“எனக்கு இதுல உடன்பாடு இல்ல.. நீ என் மருமகன் பிரசன்னாவ தான் கட்டிக்கனும்.. ரெண்டு நாள் நல்லா யோசிச்சி சொல்லுற.. பிரசன்னாவ கட்டிக்க சம்மதமெங்குற வார்த்தை மட்டும் தான் வரணும்.. அப்படினா நீ ஆசைப்பட்டவன் மூளைலயாவது இருப்பான் இல்லன்னா மொத்தமா இல்லாம பண்ணிடுவேன் என்றதை கேட்டு அதிர்ந்த கீதாராணி” வாயை பொத்தி கண்ணீர் வடிக்க, அவரின் கணவன் கைபற்றி ஆறுதல் படுத்தினார்.

அவரின் பேச்சில் கோவமான சம்யுக்தா “என்ன பயம் காட்டுறீங்களா.. அதெல்லாம் உங்க அப்பாவி தங்கச்சியோட நிறுதிக்கங்க.. அடிக்கடி உங்ககிட்ட நினைவு படுத்தனும் போல நான் உங்க பொண்ணுப்பா உங்களுக்கு இருக்கிற அதே முரட்டு பிடிவாதம் எனக்கும் இருக்கும்.. என்ன சொன்னீங்க.. என் வேந்துவ இல்லாம பண்ணுவீங்களா.. அவன் நிழல கூட நீங்க என்ன மீறி அசைக்க முடியாது” என்று கத்தியவள் “பங்கு வாடி” என்று பேவெனப் பார்த்த தோழியை இழுத்து கொண்டு அறைக்குள் சென்றாள்.

அவள் சென்றும் கூட தன்னவள் பேசியதை நம்பாமல் விழி விரித்து பார்த்திருந்த தேவாவிற்கு இது கனவாக இருக்க கூடுமோ என்று கூட நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அதனை புரிந்து கொண்ட விக்கி அவனின் கையை கிள்ளி விட, வலியில் கத்தியவன் “ஏன்டா கிள்ளின”

“பின்ன நீ கனவு நினைச்சி.. அதே ரீவைண்ட் பண்ணி பாத்துட்டு இருக்க.. அங்க பாரு உன் மாமனார் முறைக்கிரார்” என்று கூறியதை கேட்டு விஷ்வநாதனை நக்கலாக பார்க்க,

அவரோ “என்னடா என் பொண்ண மயக்கிட்டன் திமிரா”

“அய்யோ மாமா.. நான் இன்னும் பெர்பார்மன்ஸ பண்ணவே ஆரம்பிக்கல.. என்ன போய் சந்தேகப்படுறியே” என்று அங்கிருந்த சோஃபாவில் கெத்தாக அமர்ந்து கண்ணில் கூலர்ஸை மாட்டிக்கொண்டு கால்மேல் போட்டு அமர்ந்தவன் “மயக்கிட்டன்னு சொன்ன பாத்தியா.. உண்மை என்னன்னா நான் உன் பொண்ண மயக்கல.. உன் பொண்ணு தான் என்ன மயக்கிட்டா” என்றப்படி,

அவர் முன் சொடக்கிட்டவன் “யோவ் பத்து வருஷம் முன்ன நான் சொன்னது நினைவுருக்கா..

இப்போ உன் பொண்ணு வாயாலயே நான் தான் வேணும் சொல்ல வச்சிட்டன்” என்று மீசையை முறுக்கி விட்டு தொடர்ந்தவன் “என் சவால்ல ஜெய்ச்சி என் அம்மாவுக்கு புள்ளைன்னு நிருபிச்சிட்டன்.. கூடவே அவ எப்போ என்ன தவிர யாரையும் கட்டிக்க மாட்டேன்னு சொன்னாளோ அப்போவே நான் அவளுக்கு புருஷன் ஆயிட்டேன்.. சோ என் சவால்ல ஜெய்ச்சி உனக்கு மருமகனா நிக்குறேன்.. நீ சொன்ன போல என் அம்மா காலுல எப்போ விழுவ” என்க,

முதலில் கோவமாக கேட்டவரின் பார்வை இறுதியாக அவன் பின்னே தெரிந்தவளை கண்டு இழிவாக மாறி “பாத்தியாமா.. அவன் சவால்ல ஜெயிக்க உன்ன பகடையா யூஸ் பண்ணிருக்கான்” என்க,

அதனை உணர்ந்த தேவா “என்ன மாமா உன் நடிப்ப என்கிட்ட விடுற பாத்தியா.. உன் பொண்ணு நிக்கான்னு.. நீ சொன்னா நான் அத நம்பி பயப்படனுமா” என்று கூறி முடித்த நொடியில் இழுத்து அவன் கன்னத்தை தன் கையால் பதம் பார்த்திருந்தாள் சம்யுக்தா.

அவளை எதிர்பாராமல் அதிர்ந்த தேவா “யுதா” என்று ஏதோ கூற வர,

அவனை கை நீட்டி தடுத்தவள் “ஏன்டா உன் சாவல்ல ஜெயிக்க என்ன யூஸ் பண்ணிக்கிட்ட தான” என்று பார்வையிலே கூறியவள்

தந்தையிடம் “இத காரணமா வச்சு.. எனக்கு மனச மாத்தி கல்யாணம் பண்ணி வைக்கலாம் நினைக்காதீங்க.. அவன் என்ன வச்சி காரியம் சாதிச்சதுக்கு அவனை என்ன பண்ணனும் எனக்கு தெரியும்.. என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்ல” என்று செல்ல போனவளின் கையை பற்றி இழுத்தவன், நொடியில் அவள் கழுத்தில் தாலியை கட்டிருந்தனான்.

அவனின் செயலில் எல்லாரும் திகைக்க, மகள் அவனிடம் கோவம் கொள்வாள் என்று எண்ணிய விஷ்வாநாதனிற்கு
அவனிடம் மகள் எதுவும் கூறவில்லை என்ற கடுப்பு ஒரு பக்கம், இதில் அவன் தாலி கட்டியதை கண்டு அதிர்ந்து விட்டார்.

‘அடப்பாவி தாலிய சட்ட பாக்கெட்லயே வச்சிட்டு சுத்திருக்கான்.. எப்போ கட்டலாம் இருந்திருப்பானோ’ என்று ஒரு போல நினைத்து வெளியே காட்டிக் கொள்ளாமல் நின்றனர் விக்கி மற்றும் பிரசன்னா.

பெண்ணவளை சுதாகரிக்க விடாமல் ஆடவன் காரியத்தை சாதித்து விட, அவளோ எதிர்பாராமல் திகைத்தாலும் நொடியில் நடந்தேறிய நிகழ்வை எதுவும் செய்ய இயலாமல், அவன் கட்டிய தாலியை குனிந்து உணர்வற்று பார்த்தவள், பின் நிமிர்ந்து ஆடவனை குற்றம் சுமத்தும் பார்வை பார்த்துவிட்டு அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

அவளை பிறகு சமாதானம் படுத்திக் கொள்ளாலாம் என்று எண்ணிய தேவா “யோவ் மாமா.. அவ என் பொண்டாட்டி சீக்கிரமே ஊரு அறிய எங்களுக்கு கல்யாணம் நடக்கும்.. அதுவும் என் பொண்டாட்டி சொன்ன போல நீ என்னடயும் என் அம்மாடயும் பேசி உன் முழு சம்மதத்தோட நடக்கும்.. அதுவரை ரெண்டு பேரும் தள்ளி தான் இருப்போம்..

ஒரு அப்பனா இருந்தா உன் ரோசத்த தூக்கி போட்டுட்டு உன் மக சொன்னத செஞ்சி எங்கள சேத்து வை.. இல்லன்னா என் ஸ்டைல்ல சேத்து வைக்க வைப்பேன்” என்று ஆடவன் மாமனாரை பார்த்து கண்ணடிக்க,

“கனவு கோட்ட கட்டாதடா.. நீ அவ விருப்பமில்லாம தாலி கட்டிருக்க.. இன்னும் ரெண்டே நாள்ல அத அறுத்து உன் மூஞ்சில வீசுவா”

“அதையும் பாக்கலாம் மாமா.. வரட்டா” என்றவன் தன் குடும்பத்தினரிடம் “எல்லாரும் நம்ம வீட்டுக்கு கிளம்புங்க₹ என்றதும் பதறிய பாட்டி அத்தைக்கு கண்களிலே “நான் பாத்துக்கிறேன்” என்று சமாதானம் செய்து விட்டு அங்கிருந்த தேவிபிரியாவின் பெற்றோரிடம் தலையசைத்து விட்டு ஆடவன் வெளியேறி விட,

அவ்வளவு நேரம் அங்கிருந்த தேவிபிரியா ‘அவன் செல்லவும் நீயும் இதற்கு உதந்தை தானே’ என்று குற்ற பார்வை வீசிவிட்டு தன் தோழியை சமாதானம் செய்ய சென்று விட்டாள்.

அதில் நொந்த விக்கி தான் ‘ஆத்தி நம்ம இன்னும் காதலையே சொல்லலயே.. பாவி பையன் இவன் பண்ற காரியத்துல காதல சொல்லும் முன்னயே ப்ரேக் அப் ஆயிடும் போல’ என்று பெருமூச்சு விட்டவன் தாய் தந்தையர் இருவரும் அவர்கள் உடமைகளை எடுத்து வந்ததில் அவர்களுடன் தானும் வெளியேறினான்.
***

தோழியை சமாதானம் படுத்த எண்ணி, தேவிபிரியா அறைக்குள் வந்திருக்க அவளோ உணர்வுகளை வெளியே காட்டாதில், அவளின் தோளை பற்றிய தேவிபிரியா “பங்கு” என்றதும், அவளை இழுத்து பெண்ணவள் இறுக்கி அணைத்தாள்.

ஆனால், துளியும் கண்ணீரும் வரவில்லை, அவளின் உணர்வுகளும் வாய் வழியாக கூட பெண்ணவள் சொல்லவே இல்லை.

இதில் அவள் உணர்வுகளை வெளியே கொட்டாமல் அவளுக்குள்ளே புதைக்க நினைக்கிறாள் என்பதை உணர்ந்த தேவிபிரியாவியும் வேதனையாக அவளின் அணைப்பை இறுக்கியிருந்தாள்.

தோழியிடம் கிடைத்த நில நிமிட ஆறுதலில் அணைப்பை விட்டு விலகியவள் “சரி தூங்கு நைட் போல இன்னைக்கு அங்க போகனும்”

“இன்னைக்கு எதுக்குடி நாளைக்கு போகலாமே” என்றவள் தோழியின் மனநிலையை கருத்தில் கொண்டு கூறினாள்.

அதில் கசந்த புன்னகையை சிந்திய சம்யுக்தா “ரெண்டுநாள்ல வந்த வேலைய முடிச்சிட்டு இங்கயிருந்து கிளம்பனும்.. யார்டயும் சொல்லிடாத போகும் போது சொல்லிக்கலாம்.. இப்போ தூங்கு” என்று படுக்கை பெண்ணவள் படுத்துகொள்ள, தோழி கூறியதை ஏற்று கொண்டு தானும் அணைத்தப்படி படுத்து கொண்டாள்.
***
இன்றும் அபிராமி அவர்களுக்கான உணவை வைத்துவிட்டு சென்று விட, இரவு பத்து பத்து பணி போல் பால்கனி பக்கம் சத்தம் கேட்டு தான் இரு பெண்களும் கண்விழித்திருந்தார்கள்.

முன்னே நின்றிருந்த இரு ஆடவர்களையும் கண்டும் காணாதது போல் இருந்து கொண்டனர்.

இதில் தேவா அவ்வறை கதவை தாழிட, தேவிபிரியாவிற்கு தெரியும் அல்லவா அவர்கள் வீட்டிற்கு சென்றது ‘பயபுள்ள வசனம் பேசிட்டு வெளியே போயிட்டு கள்ளன் போல பால்கனி வழியா வந்திருக்குங்க’ என்று இருவரையும் உள்ளுக்குள் வறுத்தப்படியே அமர்ந்திருக்க, இதில் சம்யுக்தாவிற்கு இவர்கள் பால்கனியாக ஏன் வர வேண்டுமென்று புரியாமல் குளியலறைக்குள் எழுந்து செல்ல போனாள்.

விக்கிக்கு கண்ணை காட்டிய தேவா, சம்யுக்தாவை மரித்து நிற்க, விக்கியோ தேவிபிரியாவை இழுத்து கொண்டு பால்கனி பக்கம் வந்து கதவையும் மூடிக்கொண்டான்.

அவனின் செயலில் முறைத்த தேவிபிரியா தன் கையை உதறி “எதுக்கு கதவ க்ளோஸ் பண்ற”

“அவங்க பேசிட்டு இருப்பாங்க.. நம்ம எதுக்கு டிஸ்டர்ப்பா அண்ட் நானும் உன்கிட்ட பேசணும்”

“நீ என்கிட்ட பேச என்ன இருக்கு.. சாரி நீங்க என்கிட்ட எதுக்கு பேசணும்” என்று மரியாதையாக அழைக்க,

அவளின் கோவம் புரிந்த ஆடவன் “நான் சொல்லுறது கேளேன் ரியா.. என்மேல என்ன தப்பு எதுக்கு கோவப்படுற”

“ஓ சார் என்ன பண்ணிருக்கீங்க தெரியலயோ.. அவன் உன் பிரதர் தான் அதுக்காக ஒரு பொண்ணு மனச காதல்ன்னு பேருல நோகடிக்குறான்.. அது தெரிஞ்சும் நீ அவனுக்கு சப்போர்ட் பண்ணிததும் இல்லாம என்கிட்டயிருந்து மறைச்சுருக்க”

“ஆமா தெரியும் தான்.. கடந்த கால நிகழ்வு அப்படி பண்ண வச்சுது அவன.. என்ன ஏதுன்னு என்கிட்ட கேட்காத ரியா.. ஆனா ஒன்னு அவன் தன்னோட சவால்ல ஜெயிக்க நினைச்சிருந்தாலும் அவனுக்கு சம் மேல இருக்கிற காதல் உண்மை..

இது உன்மேல சத்தியமா உண்மை.. ஆனா கடந்த கால நிகழ்வுனால அவன் உண்மை காதல கூட மறுக்க நினைச்சான்.. அவன் அறியாம அந்த காதல கண்டிப்பா சம் உணர்ந்திருப்பா”

“சோ.. அந்த காதல வெளிய கொண்டு வர தான் அன்னைக்கு குகைக்குள்ள அவங்கள தனியா விட்டுட்டு என்ன இழுத்துட்டு வந்த ரைட்” என்றவள் அவனை சரியாக கணித்து கேட்க,

முதலில் தடுமாறியவன் மறைக்க மனமில்லாமல் “ஆமா”

“ஓ.. அப்போ அவங்களுக்கு நான் இடைஞ்சலா இருக்க கூடாதுன்னு நீ என்கிட்ட கடல போட்டுருக்க.. நான் தான் எதுவுமே புரிஞ்சிக்காம இருந்துருக்கேன்”

“அவங்க டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்ன்னு உன்ன தனியா கூட்டிட்டு வந்தது உண்மை தான்.. ஆனா இப்போ” என்று கூற வந்தவனை “வேண்டாம் நிறுத்து.. எனக்கு ஒன்னு மட்டும் சொல்லு அன்னைக்கு காட்டுக்குள்ள காப்பத்த வந்தது நான் சொன்னது தான் காரணமா இல்ல.. அங்க உன் அண்ணிய பாதுகாக்க வந்ததுல போன போகுதுன்னு தான் என்ன காப்பாத்திருக்கியா” என்றவளுக்கு கண்கள் கலங்கி விட,

அதில் தானும் வலியை உணர்ந்தவன் “ஏய் பைத்தியம் மாதிரி பேசாத.. அன்னைக்கு நிஜமாவே ரெண்டு பேரையும் பாதுகாக்க தான் வந்தேன்”

“பரவால இதாவது உண்மையா இருக்கே” என்றவள் அதற்கு மேல் பேசாமல் வானை வெறிக்க,

அவளை தன்னை நோக்கி திருப்பிய விக்கி “ரியா உன் உணர்வு எனக்கு புரியுதுடி.. நான் உன்கிட்ட எல்லாம் சொல்லிருந்தா வேற மாதிரி அவங்களுக்குள்ள பிராப்ளம் வந்திட கூடாதுன்னு தான் மறைச்சேன.. ஐ அம் சாரிடி நீ வேதனைப்படுறது எனக்கும் வலிக்குதுடி.. பிகாஸ் ஐ லவ் யூ ரியா” என்று தன் காதலையும் உரைத்து விட்டான்.

அவனை புருவம் சுருக்கி பார்த்த தேவிபிரியா “லவ்வா என்ன சடனா.. நான் உன்கிட்ட பேசினாலே காண்டாதான ஆகும்.. புதுசா உனக்கு எங்க லவ் வருது”

“உன்ன எனக்கு பாத்துமே புடிச்சுது.. ஏனோ அது காதல்ன்னு புரிஞ்சிக்க பங்ஷன்ல தான் டைம் கிடைச்சுது”

“ஓகே.. ஆனா எனக்கு இது நம்புற போல இல்ல.. இதுவும் டிராமான்னா என்ன பண்ண” என்று கூறி முடிக்கவுமே அவளை இழுத்து இதழை சிறை செய்து கொண்டான்.

- துயர் தொடரும்..
 
Top Bottom