• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

துணை - 16

STN - 95

New member
தந்தை கேட்ட கேள்விக்கு “பிடிக்கல” என்று குருமூர்த்தியை கண்டு கண்கள் சிவந்து எழுந்தவள் “பிடிக்கல பிடிக்கல.. ஏன்னா நீங்க சொன்ன பிரசன்னாவ கட்டிக்கிட்டா.. அவனுக்கு பொண்டாட்டியா மட்டுமில்ல அவன் அப்பனுக்கு வப்பாட்டியாவும் போன மாதிரி.. அந்த கிழட்டு மூதிக்கு நான் வப்பாட்டியா போகணுமா சொல்லுங்க” என்றவள் தந்தையின் சட்டை பற்றி “சொல்லுங்க வப்பாட்டியா போகட்டுமா” என்று காலியாக மாறியிருந்தாள்.

இதில் உண்மை அறிந்த கீதாராணியை தவிர மற்றவர்கள் அவளின் பேச்சில் திகைப்பிலிருக்க, அவரோ வாயை பொத்தி அழுதார்.

அதன் சத்தம் கேட்டு, அவர் புறம் திரும்பியவள் “நீ எதுக்கு அழுற அத்தமா.. நம்ம அழுது முடிச்சாச்சு இனி அடிக்கணும்.. சொல்லுறேன்ல அழாத” என்று குருமூர்த்தி சட்டையை பிடித்து இழுக்க,

“ஏய்” என்று பிரசன்னாவை அடக்கியவள் “அடங்குடா நீ பாஞ்சிட்டு வர.. உன் அப்பன் யோக்கியன் இல்ல.. ரேபீஸ்ட்” என்க,

அவளின் பிடியிலிருந்த தன் சட்டையை விடுவித்தவர் “அந்த குடும்பம் சொல்லுறத நம்பி என்மேல பழி போடுறியா.. நான் ரேபீஸ்ட் சொல்லுற அதுக்கு ஆதாரம் இருக்கா” என்றவரை மூச்சு வாங்க முறைத்தவள், ஆடவர்களுக்கு கண்ணை காட்ட,

காலச்சக்கரத்தை வைத்து சில உண்மைகள் அறிந்த மூவரும் அதைவிட்டு வெளியே வர முடியாமல் உள்ளம் குமரிக்கொண்டிருக்க, அதிலும் அவள் கண்ணசைவின் அர்த்தம் உணர்ந்து குருமூர்த்தியை நாற்காழியில் இழுத்து கட்டி வைத்து அப்படியே நிற்க,

மறுபடியும் தன் தந்தையின் சட்டையை பற்றிய சம்யுக்தா “உன் நண்பன் ஆதாரம் கேக்குறான்யா ஆதாரம்.. ஆதாரமே நான் தான எப்படியா கொடுப்பேன்.. ப்ரெண்ட் பொண்ணு தனக்கு பொண்ணு மாதிரி பாக்காம என்ன கதற கதற ரேப் பண்ணினான்யா.. சொல்லு உனக்கும் ஆதாரம் வேணுமா..” என்று அவர் சட்டையை விட்டு

“ஆம்பளைங்கள வெறுத்தன்.. என் பெத்த அப்பன் நீ அன்பா கட்டிபிடிச்சா கூட அந்த கருமம் தான்யா ஞாபகம் வருது.. இதோ இருக்கானே நீ சொன்ன தகுதியில்லாதவன்.. அவன பத்து வருஷமா காதலிச்சி இப்போ அவன் பொண்டாட்டியாகியும் என்னால அவன்கூட குடும்ப நடத்த முடியாது.. அப்படியும் நான் வேணும் என் காதல் வேணும் சொல்லுவான்.. அவன பாத்து என்ன கட்டிக்க தகுதியில்லன்னு சொல்லுற.. இதோ கொலகாரி பட்டம் கட்டினியே.. உன் தங்கச்சி என்ன இந்த கிழட்டு கபோதிகிட்டயிருந்து காப்பாத்த வந்து..

நான் ஏத்துக்க வேண்டிய கொலைபழிய தப்பே பண்ணாம அண்ணன் மகன்னு எனக்காக பழி ஏத்துக்கிட்டு ஜெயிலுக்கு போன என் அத்தமா கொலகாரியா.. இல்ல உன் பொண்ணு நான் தான் கொலக்காரி” என்க,

அவள் அடுத்தடுத்து கூறிய அதிர்ச்சியில் மொத்த குடும்பமும் நெஞ்சில் வலி வராத குறையாக அமர்ந்திருக்க,

அப்போதும் ஆவேஷம் குறையாத சம்யுக்தா தன் தோழி தேவிபிரியாவை இழுத்து வந்து “அந்த நாசபோனவன் உன் நண்பன் பீத்திக்கிட்டியே.. நட்புன்னா என்ன தெரியுமா.. இதோ என் பங்கு தான்யா.. நான் சிரிச்சா சிரிப்பா நான் அழுதா அவளும் அழுவா நான் செத்தா கூட செத்து போயிடுவாயா..

இப்போ சொல்லு எது நட்பு.. நான் பத்து வருஷம் சுமந்த வலி என்னன்னு கூட தெரியாமலே அவளும் வலிய அனுபவிச்சு.. நான் முகம் வாடினாலே தோள் கொடுப்பா.. எனக்காக இந்த ஊருக்கு வர ஆசையிருந்தும் பத்து வருஷம் இங்க கால வைக்கல.. இதோ நிக்குறான்ல என் புருஷன் தம்பி விக்கி அவன காதலிக்குறா.. இப்போ என்னால குடும்ப நடத்த முடியாதுன்னு தெரிஞ்சி சந்தோசமா அவன கட்டிப்பா நினைக்க” என்றதுக்கு புன்னகைத்து தலையாட்டியவள்

“இல்ல எனக்காக சந்தோசமா வாழுற மாதிரி நடிக்க வேணா செய்வா.. அவனும் ஒன்னும் குறைஞ்சவன் இல்ல தன்ன பெத்தவங்க சாவுக்கு காரணமானவன் பக்கத்துல இருந்தும் எதுவும் செய்யல.. கேட்டா அத்தமா ஃபேமிலிக்கு நிம்மதியில்லாம போயிடுமா.. அப்புறம் அவன் அண்ணன் காதல்ல பிராப்ளம் வர கூடாதாம்

அப்புறம் சுப்புப்பா ரேவதிமா அவங்களுக்கு எனக்கு எந்த வித சொந்த சம்மந்தமும் இல்ல.. ஆனா பெத்த பிள்ளை மாதிரி பாத்துக்கிட்டாங்க பத்து வருஷம் அங்கயிருக்க போய் தான் இதோ உன் முன்னாடி உசுரோட நின்னு பேசிட்டு இருக்கேன்.. ஆனா சொந்த மாமான்னு நம்பின என்ன அவன் சிறழிச்சிட்டான்.. இவன் எங்க என் சுப்புப்பா டார்லிங் இவங்களாம் எங்க.. அவங்ககிட்ட ஒவ்வொரு தடவயும் பாதுகாப்பா தான் ஃபீல் பண்ணினேன்

பத்து வருஷம் என்ன பெத்த அம்மா பாட்டி விஜியத்தன்னு.. என் குடும்பமிருந்தும் தனியா இருந்தேன் அதுக்கு காரணம் உங்க நட்பு தான்..

இதோ என் தங்கச்சி எனக்காக பத்து வருஷம் ஏங்கி சடங்கு கூட தள்ளி வச்சிருக்கா.. இப்படி ஒவ்வொருவருத்தரும் அனுபவிச்ச வலி எல்லாத்துக்கும் உங்க நட்பு தான்பா காரணம்” என்று கூறும் போதே ஶ்ரீநிதி மயங்கியிருக்க, சம்யுக்தா தான் அவளை தாங்கி தண்ணீர் தெளித்து விழிக்க வைத்திருந்தாள்.

ஆனால், அவளோ தமக்கையை கட்டி கொண்டு குலுங்கி அழுதாள்.

அதில் பதறிய சம்யுக்தா “என்னாச்சிடாமா”
என்ற தன்னிடம் தங்கை கூறியதை கேட்டு,

ருத்ரகாளியாக எழுந்த சம்யுக்தா குருமூர்த்தியின் கன்னத்திலே கோவம் தீர அடித்து “யோவ் என் தங்கச்சிய கூட நீ விட்டு வைக்கலயா” என்று மண்டியிட்டு கதறி அழுதவள் “இவனால என் விஜி அத்தைய என் கையால தள்ளிவிட்டு பாவியாயிட்டனே” என்று தலையில் அடித்து கதறியவளை கீதாராணி மற்றும் தேவிபிரியா தான் அணைத்து கொண்டனர்.

விஷ்வநாதனோ இடி விழுந்த போல் அமர்ந்திருக்க, தேவாவும் கூட இறுகி போய் தான் நின்றிருந்தான்.

சம்யுக்தாவின் நிலை அனைவருக்கும் வலிக்க அவளை சூழ்ந்து கொண்டு தேற்ற முயன்றனர்.

கீதாராணி தான் “பப்பு இதுல உன் தப்பு இல்லடா.. அது தெரியாம நடந்தது”

“இல்ல எப்படியும் நான் தான தள்ளிவிட்டன்.. இதோ இந்த கையாள தான தள்ளிவிட்டேன்” என்று தரையில் குத்தி காயப்படுத்தி கதறி கொண்டிருக்க,

“என் நிலைக்கு காரணம் நீ இல்லடா ஜம்மு குட்டி” என்று படியிறங்கி மொத்தமாக வந்த விஜிதாவின் குரல் கேட்டு கன்னத்தை தொட வந்த கண்ணீர் கூட உறைந்த நிலையில் அதிர்ந்து விழித்திருந்தார்.

அவரோ மருமகளின் அருகில் வந்து எழுப்பிவிட்டு “ஜம்மு குட்டி இந்த அத்தய கட்டி பிடிக்க மாட்டியா” என்றதும் “அத்த” என்று தாவியணைத்து கொள்ள, மருமகளை அணைத்தப்படி சகோதரின் கையையும் பற்றி நின்றார்.

பின் தன்னையே பார்த்திருந்த தேவி ஶ்ரீநிதியை கண்டு “மாகாராணி ரெண்டு பேரும் கூப்பிட்டா தான் கட்டி பிடிக்க வருவியளோ” என்றதும் புன்னகைத்தவர்கள் விஜித்த என்று அணைத்து கொண்டார்கள்.

அதன் பின் மூவரையும் தன் கை வளைவில் வைத்த விஜிதா அண்ணன் புறம் வந்து “அண்ணன்” என்று அழைக்க,

அதில் உணர்வற்று பார்த்தவரிடம் “என்ன பத்து வருஷமா படுக்கைல வச்சது கீதாவோ ஜம்மு குட்டியோ இல்ல.. என் கழுத்துல தாலி கட்டின புருஷன் உன் நண்பன் தான்.. என்ன கொன்னுட்டு பழிய கீதா மேல போடுறது தான் பிளான் ஆனா கோமா போயிட்டேன்..” என்றதும் அவ்விடம் காவலர்கள் வந்து குருமூர்த்தியை பிடிக்க,

அப்போதும் திமிர் குறையாதவர் “சார் இவங்க சொன்னத நம்பி என்ன அரெஸ்ட் பண்றீங்களா.. எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கா” என்றதும் விக்கியோ “இந்தாங்க சார்.. இந்த பென்டிரைவ்ல எல்லா ஆதாரமும் இருக்கு” என்று ஆதாரத்தை கொடுக்க, நேற்று விக்கி பற்றிய காலச்சக்கரத்தில் இருந்த ஆதாரம் இதுவேயாகும்.

அதில் நால்வரின் இதழ்களும் உண்மை வென்ற திருப்தியில் அவரை பார்த்து ஏளனமாக சிரிக்க, அவரின் முன் சென்று தேவிபிரியாவின் தோழியில் கைப்போட்ட சம்யுக்தா “பங்கு.. அதான் நம்ம அரலூசு அதிகாரி இந்த பென்டிரைவ இந்தாளு கிட்ட கொடுத்தார் தான.. பின்ன எப்படிடி உன் ஆளுகிட்ட பென்டிரைவ்?”

“ஒருவேளை என் மாமனார் பீரி பிளான் பண்ணியிருப்பாரோ” என்று சிரித்துவிட்டு குருமூர்த்தியை பார்த்த தேவிபிரியா “புரியல தான.. சஸ்பென்ஸ்லயே ஜெயில் போய் சாவு.. கூட்டிட்டு போங்க சார்” என்றதும் அவரை காவல் அதிகாரிகள் இழுத்து சென்றனர்.

அதன் பின் வினிதா மற்றும் கீதாராணி இடையே பொத்தென்று பெண்ணவள் அமர்ந்திருக்க, அப்போது தன் அன்னையின் காலடியில் அமர்ந்த பிரசன்னா “என்ன மன்னிச்சிடுங்கமா அந்த ஆள் சொன்னத நம்பி நான் பத்து வருஷம் ஏமாந்துட்டன்”

“மன்னிப்பு என்கிட்ட இல்ல.. என் தங்கச்சிட கேளு” என்றதும் கீதாவின் காலை பிடித்தவன் “ஐ ஆம் சாரி கீதாமா.. சாரிடா தேவா” என்க,

“உன் தப்பு என்ன இருக்கு விடுடா” என்று இருவரும் அவனின் தப்பை மன்னித்து அணைக்க,

வீடே சோகம் நிறைந்திருக்க, சம்யுக்தாவின் அருகில் வந்த தேவா “யுதா.. நீ நடந்தத முழுசா கொட்டல
உன் ஆழ் மனசுல புதைஞ்சி இருக்கிறத வெளிய சொல்லு” என்றதை கேட்டு கடந்த கால நினைவுகளை மொத்தமாக கொட்ட தொடங்கினாள்.
***
ரூபாவதி தன் கணவரை இழந்து அவரின் சொத்தை வைத்து தன் மூன்று செல்வங்களையும் படிக்க வைத்து நல்ல நிலமைக்கு கொண்டு வந்திருந்தார்.

அதிலும் விஷ்வநாதன் விஜிதா கீதாராணி அன்பாக ஒற்றுமையாக ஒருத்தரை ஒருத்தர் விட்டு கொடுக்காதவர்கள்.

விஷ்வநாதனிற்கு இரு தங்கைகள் மேலுமே பாசம் அதிகம், அதிலும் கீதாராணி கடைக்குட்டி என்பதால் அண்ணன் அக்கா இருவருக்குமே அவர் செல்ல பிள்ளை.

திருமணமென்ற அத்தியாயம் வரும்வரை மூவரின் அன்பும் குற்ற அருகில் போல் பெருக்கெடுத்து தான் ஓடி கொண்டிருந்தது.

தமையனாக இரு தங்கைகளையும் கரை சேர்க்கும் கடமையாற்ற எண்ணியவர், இருவருக்கும் இந்த பாகுபாடின்றி ஒரே மேடையில் கல்யாணத்தை வைக்க திட்டமிட்டு மாப்பிளையும் பிடித்து விட்டார்.

இரு மாப்பிளையுமே அவரின் தோழர் தான், ஆனால் ரகுநாத் கல்லூரி முடித்து வேலையை நோக்கி சற்று இருவருக்குள்ளும் சில காலம் பேச்சு வார்த்தை குறைந்து விட்டதில்ஸ் அவர்களை விட குருமூர்த்தியும் விஷ்வநாதனும் தீவிர நண்பர்கள் மற்றும் தொழில் துணை என்று மிகவும் நெருக்கமாக இருந்தனர்.

அதன் விளைவே அவரை தன் சிறிய தங்கைக்கும், ரகுநாத்தை பெரிய தங்கைக்கும் பேசி முடித்திருந்தார்.

ஆனால் அவர் எதிர்பார்க்காத விதமாக அண்ணின் கல்லூரி நண்பரான ரகுவும் கீதாவும் உயிருக்கு உயிராக காதலித்தார்கள்.

விஷ்வநாதன் தங்கையை கட்டிக்கொள்ள கேட்கவும், நண்பன் கூறிய செய்தி படி “என் ஒரு தங்கைக்கு குருமூர்த்தியை கொடுக்கிறேன்.. நீ இன்னொரு தங்கையை கட்டிக் கொள்கிறாயா” என்று அவர் கேட்கவும் கீதாவை தான் கேட்கிறாறோ என்று நினைத்து சந்தோசமாக சம்மதம் கூறியிருக்க, நிச்சயம் போது தான் தெரிந்தது உண்மை.

அதனால் வேறுவழியின்றி திருமணம் தினத்தன்று இருவரும் மண்டபத்தை விட்டு ஓடி போய் திருமணம் செய்து வீட்டிற்கு மாலை கழுத்துடன் வந்து நிற்க, அவ்வேளையில் தான் குருமூர்த்தி விஜிதா மண்டபத்திலிருந்து வந்திருக்க, அவர்களை கண்ட விஷ்வநாதன் அசிங்கமாக பேசி விரட்டி விட, அவரும் சிறு வயதில் பெற்றோரை இழந்து உடன் பிறந்த தம்பியுடன் இருந்தார் ரகுநாத்.

அவரின் தம்பி கோபிநாத் அண்ணன் அண்ணிக்கு துணையாக இருக்க வேண்டுமென்று தானே அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து ஆராத்தி எடுத்து வரவேற்றார்.

ரகுநாத் பொறியியல் வேலையில் இருக்க, கோபிநாத் கடின உழைப்பால் காவல் அதிகாரியாகி இருந்தான்.

இதில் அவருக்கும் தொல்லியல் துறை வேலையை சேர்ந்த பாக்கியலக்ஷ்மி என்பவருக்கும் காதல் வயப்பட்டு விட, பெண்ணவள் வீட்டினர் சம்மத்துடனும் கோபிநாத் சகோதரன் சம்மத்துடனும் அண்ணன் திருமணம் முடிந்த,

ஆறு மாதம் முடிந்த நிலையில் இவர்களுக்கும் திருமணம் நடந்து, நால்வருமே ஒன்றாக ஒரே வீட்டியில் வாழ்ந்தனர். இதில் பாக்கியலக்ஷ்மியை திருமணம் முடிந்து வேலைக்கு செல்ல கூடாது என்று கூட, தடை விதிக்காததால் அவரும் மூவரையும் புரிந்து அன்பாக நடந்து கொண்டார்.

அதற்கு மறுமாதம் கீதா கர்ப்பம் தரிக்க, அடுத்த இருபது நாள் இடைவெளியில் பாக்கியவும் கர்ப்பம் தரித்தார்.

இச்செய்தி அறிந்து விஜிதா மற்றும் ரூபாவதி வந்து இரு பெண்களையும் பார்த்து கொண்டு செல்ல, அவ்விடயம் குருமூர்த்தி காதுகளில் எட்டி அவர் விஷ்வநாதன் காதிலும் கடித்து வைக்க,

முதலில் அன்னை தங்கை கடிந்தவர், அவர்கள் அடுத்தடுத்தும் கேட்காமல் சென்றதில் ஏதோ பண்ணட்டும் என்று அதன் பிறகு இவ்விஷயத்தில் தலையீடவில்லை என்றாலும் கீதா நல்ல படியாக குழந்தையை பெற்றெடுக்க வேண்டுமென்று கடவுளை வேண்டி கொண்டார் பாசக்கார அண்ணன்.

அதற்கு அடுத்த மாதம் விஜிதா வாந்தி எடுத்து நல்ல செய்தி கூறியிருந்தார்.

இப்படியே இருவருக்கும் சீமந்தம் நடத்திருக்க, தான் வரவில்லை என்றாலும் அனைத்தையும் அன்னை தங்கையிடம் கொடுத்துவிட்டு இருந்த இடத்திலே ஆசி வழங்கியிருந்தார் விஷ்வநாதன்.

அதன் பின் விஜிதாவிற்கு அண்ணுடன் இணைந்து சீமந்தம் நடத்திருக்க, தங்கைகள் இருவரையும் விஜிதா அழைத்திருந்ததால் இருவரும் தங்கள் கணவன்மார்களுடன் இணைந்து கலந்து கொண்டிருக்க, விஷ்வநாதனும் அவர்களை எதுவும் கூறவில்லை.

ஒருவழியாக மூவருக்கும் அடுத்தடுத்து குழந்தை பிறந்துவிட்டது.

தேவா பிறந்து பத்து நாளில் விக்கியும்
அதற்கு மறுமாதம் பிரசன்னா என்று மூன்று நாயகர்களும் உதித்திருந்தனர்.

ரூபாவதி தான் பாவம் இரு வீட்டிற்கும் மாறி மாறி அலைந்து மூன்று தாய்மார்களையும் பார்த்து கொண்டார்.

பின் குழந்தைகள் மூவரும் ஒன்றாக தான் விளையாடி வளந்தனர்.

இவர்கள் மூன்று வயதை எட்டிருக்க, விஷ்வநாத்திற்கு அபிராமியை பார்த்து கட்டி வைக்க, பெண்களுடன் பெண்களாக அவரும் இணைந்து கொண்டார்.

இதில் கீதாராணி வீட்டிற்கு வந்தாலும் அண்ணன் இல்லாத நேரமாக தான் இருக்கும்.

அதுவும் அவர் காதை அடைந்தாலும் கண்டு கொள்ளாமல் கடந்து சென்று விடுவார்.

இப்படியிருக்க ஆறு மாதத்தில் அபிராமியும் கர்ப்பம் கொண்டு, சம்யுக்தாவை பெற்று எடுத்தார்.

அப்போது பசங்கள் நான்கு வயதை தொட்டிருந்தனர்.

தேவா விக்கி இருவரும் ராமர் லக்ஷ்மணன் போல் அண்ணன் எங்க சென்றாலும் விக்கி அவனுடன் சுற்றி திரிவான்.

இருவரையும் அழைத்து கொண்டு அவர்கள் பெற்றோரும் அபிராமியையும் மருமகளையும் பார்க்க வந்திருக்க, சம்யுக்தாவை கையில் ஏந்தி சிறுவர்களிடம் காட்டிய ரூபாவதி “டேய் தேவா.. உன் வருங்கால பொண்டாட்டிடா” என்றிருந்தார்.

அதுவும் விஸ்வநாத்தின் மூத்த மருமகன் என்ற முறையில், ஆனால் அவனுக்கு என்ன புரிந்ததோ குட்டி சம்யுக்தா கையை பிடித்து கன்னத்தில் முத்த மழை பொழிந்தான்.

அன்னை கூறியதை கேட்டு தங்கை தயக்கமாக அண்ணனை ஏறிட, அவரோ சாதரணமாக தான் இருந்தார்.

ஒருவேளை அவருக்கும் அப்படியொரு எண்ணம் இருந்திக்க கூடுமோ என்னவோ அது கடவுளுக்கே வெளிச்சம்.

அதன் பின் விஷ்வநாதன் இல்லாத நேரம் இரு ஆண் பிள்ளைகள் உடன் கீதா மருமகளை காண வந்து விடுவர், போகும் வரை மருமகளை கீழே இறக்கி விட மாட்டார்.

அதோடு தேவா மற்றும் விக்கி விஜிதா அபிராமியுடன் நன்றாக ஒட்டிக் கொண்டார்கள். இதில் பிரசன்னாவும் அவர்களுடன் தான் விளையாடுவான்.

- துயர் தொடரும்..
 
Top Bottom