அவளிடம் தனது மனம் சாய்கிறதோ என்று அவன் மூளை கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தவித்துவிட்டான்.
பின்ன அவனை அவனாலே புரிந்து கொள்ள முடியவில்லை, அதோடு குறுகிய அழைப்பு கூட எதனால் வந்ததென்ற கேள்விக்கு விடை தெரியாமல் குழம்பி நின்றவன்,
பெண்ணவள் தோள்பையிலிருந்த தின்பண்டங்களை எடுத்து சாவகாசமாக தன்னை ரசித்தப்படி சாப்பிடுவதை கண்டு பேவென விழித்து “என்னடி பண்ற.. நம்ம எதுக்கு வந்திருக்கோம்.. நீ கல்யாணமாகி மாமியார் வீட்டுக்கு வந்த போல உக்காந்து தின்னுட்டு இருக்க”
“மாமியார் வீட்டுக்கு தான வந்திருக்கேன்.. அண்ட் கல்யாணமாகுற முன்னவே வந்திட்டேன்.. இப்போவும் மாப்பிளை ஓகே சொன்னா.. இந்த மிஷன திருமதி தேவிபிரியாவா முடிக்கிறதுல எந்த ஆட்சிபனையும் இல்ல” என்று குறும்பு கூத்தாட கூறினாள்.
‘நான் என்ன கேக்குறேன்.. இவ என்ன உலருறா’ என்று முதலில் எண்ணிய விக்கியின் மண்டைக்கு பிறகு தான் அவளின் வார்த்தை அர்த்தம் விளங்க முறைத்து வைத்தான்.
அவனின் முறைப்பையும் ரசித்து தொலைத்த தேவிபிரியா “எதுக்கு விச்சுமா முறைக்குற” என்றபின் தான் அவளும் தன்னை குறுகி அழைத்திருக்கிறாள் என்று தெரிய எரிச்சலானவன் “என்ன விச்சுன்னு கூப்பிடாத”
“நீ ரியான்னு என்ன கொஞ்சமும் போது.. நான் விச்சுன்னு கூப்பிட்டா என்ன தப்பு”
“நான் இனி கூப்பிடல.. நீயும் கூப்பிடாத”
“ஓகே நீ கூப்பிடுறது உன் இஷ்டம்.. பட் மீ கூப்பிட கூடாதுன்னு யூ சொல்ல கூடாது” என்றதை கேட்டு ஆடவன் மூக்கு விடைக்க முறைக்க, அது தன்னை சுடாது என்பது போல் சாப்பிடுவதில் கவனத்தை செலுத்தினாள்.
அரைமணி நேரமாகியும் பெண்ணவள் சாப்பிட்டு முடித்திருக்கவில்லை. இதில் போர் அடிக்குது என்று கூறி திறன்பேசியில் சத்தத்தை குறைத்து வைத்து இன்ஸ்டா ரீல்ஸ் பாத்து சிரித்து கொண்டிருந்தாள்.
அதில் வெறி வந்தாலும் அவளை தனியே விட்டு செல்ல மனமில்லாத விக்கி, அதற்கு மேல் நிற்க முடியாமல் அவளைவிட்டு சற்று தள்ளி அமர்ந்து கொண்டான்.
அந்நேரம் தான் தோழி அங்க அழுத்தியதின் விளைவால் இங்கு பெண்ணவளுக்கு சத்தம் வந்திருக்க, அப்போது தான் அவளும் நேரத்தை கண்டு தீனியை நிறுத்திவிட்டு “இங்கயிருந்து கிளம்பலாம்” என்று புறப்பட,
“வந்த வேலை முடியவில்லையே” என்ற கேள்வியை அவளிடம் கேட்டதற்கு அங்கு தேவாவிடம் கூறிய அதே விளக்கத்தை கொடுத்தவிட்டு, அவனுடன் நடக்க தொடங்கினாள்.
பின் நால்வரும் வெளியே வந்து விட, விக்கியோ சகோதரனின் காயம் துடித்து விட, தேவிபிரியாவோ “எப்படி பங்கு?” என்று கேள்வியை தொடுத்து, தோழியை கூறிய பதிலை கேட்டுவிட்டு அவனின் வலியையும் விசாரித்து கொண்டாள்.
அப்படியே நால்வரும் காட்டை விட்டு வெளியே வந்து, அவரவர் வந்த வாகனத்தை அடைந்திருக்க,
தேவா வந்த பைக்கை கண்ட விக்கி “தேவா.. உன் பைக்க இங்க மறைவா வச்சிட்டு போகலாம்.. நாளைக்கு நான் வந்து எடுத்து தரேன்” என்க,
யாருக்காவது சந்தேகம் வந்து விட்டால் விபரீதம் ஆகிடுமே என்று யோசித்த தேவிபிரியா “இல்ல யாரும் பாத்தா பிரச்சினையாயிரும்.. சோ பங்கு நாங்க வந்த ஸ்கூட்டில போகட்டும்.. தேவா மாமாவ விச்சு கூட்டிட்டு போகட்டும்.. நான் தேவா மாமா வண்டில வரேன்” என்க,
விக்கியோ “ஏய் அது புல்லட் எப்படி” என்றதை கேட்டு கண்ணடித்த பெண்ணவள் “இப்படி தான்” என்று கெத்தாக அதில் ஏறியமர்ந்து “மாமா பைக் கீ” என்றாள்.
அவன் தன் பேண்ட்டிலிருந்த வண்டி சாவியை எடுத்து அவளை நோக்கி வீச, அதனை வாவாக பிடித்து கொண்டாள்.
அதில் தலையாட்டி கொண்ட சம்யுக்தா, விக்கி விழி விரித்து நின்றதை கண்டு “எங்க ரெண்டு பேருக்கும் ஸ்கூட்டி மட்டுமில்ல புல்லட் கார் எல்லாமே ஓட்ட தெரியும்.. சோ அவ பாத்துப்பா எல்லாரும் கிளம்புங்க” என்று தன் ஸ்கூட்டியில் ஏறிக்கொள்ள,
தேவிபிரியாவின் ஒவ்வொரு செயலிலும் வியப்பை அள்ளி தெளித்த விக்கியின் மனமோ, அவளின் வண்டியில் ஏறி ஸ்டைலை நினைத்து ஏனோ அவளின் பின்னால் அமர்ந்து பயணம் செய்ய மனம் நச்சரித்தது.
அவனின் எண்ணத்தை உணர்ந்து கொண்ட தேவா தான் “அடேய்.. இன்னொரு நாள் அவகூட ரவுண்ட் போயிக்கலாம்டா.. எவ்வளவு நேரம் நிக்குறது கால் வலிக்குது வண்டிய எடுக்குறியா” என்றதும் அசடு வழிந்தவன் வண்டியை எடுத்தான்.
***
நால்வரும் வீட்டிற்கு வந்தாயிற்று, இரு வண்டிகளுக்கு முன் பத்து நிமிடம் முன்னதாகவே வந்த தேவிபிரியா, வீட்டை விட்டு சற்று தள்ளி வண்டியை நிறுத்தி காத்திருக்க, வரும் வழியில் தல அஜித் போல் புல்லட்டில் வேகமாக சென்ற தேவிபிரியாவை பைத்தியம் ‘எவ்வளவு வேகமா போறா’ என்று உள்ளுக்குள் விக்கி திட்டி கொண்டு தான் வந்தான்.
அதன் பிறகு மெல்ல வண்டியை தள்ளிக்கொண்டு மூவரும் உள்ளே வந்துவிட,
சம்யுக்தாவோ “தேங்க்ஸ்ன்னு சொல்லுறத தவிர வேற பெரிய வார்த்தை இருக்கான்னு தெரியல.. ரெண்டு பேரும் எங்களுக்காக பண்ணின பெரிய உதவியா தான் நினைக்கிறேன்.. அண்ட் உங்களுக்கு இதுனால ஏற்பட்ட சிரமத்துக்கு சாரியும் சொல்லிக்குறேன்” என்றவளின் பார்வையோ தேவாவின் மேல் படிய, அவன் காயத்தை தான் சொல்லாமல் சொல்கிறாள் என்று புரிந்து அமைதியாகவே இருந்தனர்.
மேலும் தொடர்ந்த சம்யுக்தா “நீங்க ரெண்டு பேரும் போய் தூங்குங்க.. நாங்க பைப் வழியா ஏறி போயிடுவோம்”
“ஏன் வாசல் வழியா போகலாமே” என்றதுக்கு “தேவிபிரியாவோ அது முடியாது விச்சு.. நாங்க ரூம் டோர உள்ளயிருந்து லாக் பண்ணிருக்கோம் சோ இப்படி போறது தான் சரியா வரும்” என்க,
அதனை தொடர்ந்து சம்யுக்தா “ஆமா விக்கி.. வீட்டுல யாருக்கும் தெரிய கூடாதுன்னு தான்.. இந்த வழியா வந்தோம்” என்றவள் தேவாவிடம் “ரொம்ப கால ஸ்ட்ரைன் பண்ணிக்காத.. போய் நல்லா ரெஸ்ட் எடு.. அப்புறம் விக்கி உன்னோட பிரதர மறக்காம நாளைக்கு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய் இஞ்செக்சன் போட்டுரு.. டேக் கேர்” என்றுவிட்டு தோழிக்கு கண்ணை காட்ட,
அவளும் தேவாவிடம் கூறிவிட்டு, விக்கியை பார்த்து கண்ணடித்து விடை பெற்றவள், பைப்பில் ஏறி மெல்ல முன்னேற அவளை தொடர்ந்து சம்யுக்தாவும் ஏறி கொண்டாள்.
இதனை கீழே நின்றபடி ஆடவர்கள் இருவரும் ‘குற்றாலத்துல இருக்க வேண்டியதலாம் வீட்டுல கூட்டி வச்சி வளக்குறாங்க’ என்று தலையில் அடித்து வெளிப்படையாக சிரித்து கொண்டவர்கள், அவர்கள் ஜன்னல் மூடியதும் தான் தங்களின் அறைக்குள் தஞ்சமடைந்தார்கள்.
***
நால்வருமே அசதியின் காரணமாக நன்கு உறங்கியிருக்க, பெற்றோர்களும் கூட சிறியவர்களை எழுப்பாமல் விட்டிருக்க, வெயில் முகத்தில் சுடும் போது தான் கண்விழித்திருந்தனர்.
வழக்கத்தை விட சம்யுக்தாவிற்கு, இன்று ஏனோ மனம் லேசான உணர்வு. நேற்று தேவாவுடன் கழித்தே பொழுதே காரணமாகயிருக்க கூடுமோ? என்று எண்ணுகையில் அவனிடம் உரையாடிய நேற்றைய நிகழ்வை நினைத்து மெல்ல புன்னகைத்தவளின் புன்னகை, அவன் காதலை கூறியதை நினைவுப்படுத்தி தொலைந்து சென்றது.
பின் பல் துலக்கிவிட்டு முகத்தை அடித்து கழுவி வெளியே வந்தவள், தூங்கும் தோழியையும் எழுப்பி விட்டு சிறிது நேரம் தன் அறையிலிருந்த பால்கனியின் நின்று கொண்டு வானை வெறித்து கொண்டிருந்தாள்.
அப்போது முகத்தை துடைத்தவண்ணம் அவ்விடம் சென்ற தோழியின் முக மாற்றத்தில் “என்னாச்சி பங்கு”
“நத்திங்டி.. நீ சொல்லு என்ன கதை”
“என்னடி புரியல”
“அதான் நேத்து அவன் கைய பிடிச்சதும்.. ஏதோ லிப்லாக் கொடுத்த போலவே அவன் பின்னாடியே போனியே.. என்ன சங்கடி ஒரே நாள்ல விக்கி பையன் உன்ன கவுத்திட்டான் போல.. இதுல நீ விச்சுன்னு கொஞ்சுறது” என்றதும் வெட்கம் கொண்டு புன்னகைத்த தேவிபிரியா “ஐ திங்க் ஐ லவ் ஹிம் நினைக்கேன்”
“என்னது நினைக்கியா”
“ஆமா.. அத்தமா அவன பத்தி சொல்லும் போது அவன நினைச்சி வருத்தப்பட்டன் அதோட அதுலயிருந்து அவன் சிரிப்பு தொலைஞ்சு போச்சு சொன்னாங்கல.. ஏன் தெரியல அந்த நேரம் அவன் சிரிப்ப மறுபடியும் அவனுக்கு நான் கொடுக்கணும் தோணுச்சு..
அதுலயும் நான் சொன்னதுல நம்மள பாதுக்காக்க வந்த அக்கறை பிடிச்சிருக்கு.. அதுலயும் நான் பயந்ததும் அவன் அரவணைப்பு எனக்கு பாதுக்காப்ப கொடுத்துது.. எல்லாத்துக்கும் மேல அவன் ரியான்னு கூப்பிடுறது ரொம்ப பிடிச்சுருக்கு.. டோட்டலி விழுந்துட்டன் நினைக்கிறேன்”
“என்னவோ போ.. அவன்கிட்ட இங்கயிருந்து கிளம்பிறதுக்குள்ள உன் காதல சொல்லிடு.. இல்லன்னா வேற எவளுக்காவது தார வார்த்துற போறாங்க”
“முதல நான் லவ் பண்றத கன்பார்ம் பண்ணிக்குறன்.. அவனுக்கு என்ன பத்தின எண்ணத்த தெரிஞ்சிட்டு சொல்லணும் இல்லன்னா ரெண்டு பேருக்குமே சங்கடத்த தான் கொடுக்கும்” என்று தோழியின் வார்த்தை புரியவே செய்ய, அவளை தோளோடு அணைத்தப்படி “விடு பங்கு.. எல்லாம் நல்லாதா நடக்கும்”
“சரி தான்.. ஆனா பங்கு பேசாம நீ தேவா மாமாவ கல்யாணம் பண்ணிக்க.. நானும் விச்சுவ உஷார் பண்றேன்.. நாலு பேரும் ஒன்னா ஜாலியா இருக்கலாம்ல” என்றதில் அவளை முறைத்தவள் “நடக்குற காரியத்த பேசு.. அண்ட் எனக்கு அவன் மேல அந்த மாதிரி எண்ணம் வராது.. சோ தேவையில்லாம என்ன அவன் கூட கோர்த்து விடுறதவிட்டு.. வா கீழ போய் அட்டெண்டன்ஸ் போடுவோம்” என்று அவளுடன் குடும்பத்தை காண வந்தாள்.
***
இரு பெண்களுக்கும் புன்னகையுடன் பெரியவர்கள் காலை வணக்கத்தை தெரிவித்திருக்க, அவர்களுக்கான தேனீரை கொடுத்த அபிராமி “என்னங்கடி இவ்வளவு நேரம் தூங்குறீங்க”
“என்ன பண்றது பழகிடுச்சு அபி” என்று அடித்து விட,
“அடியே அப்போ நித்தமும் இப்படி தான் கவுந்தடிச்சி தூங்குறீங்களா போறவு வேலைய எப்படிடி பாக்குறீங்க” என்றதுக்கு தேவிபிரியா “அய்யோ அபிமா ஸ்கூல் காலேஜ் போகிற மாதிரிலாம் வேலைக்கு பறந்து போக வேண்டாம்.. ஒன்பது மணிக்கு போகனும்ன்னா எட்டு மணிக்கு எழும்பி பொறுமையா தான் கிளம்புவோம்”
“என்னவோ நீங்க எந்த வித டென்ஷன் இல்லாம ஃப்ரீயா வேலை பாக்குறது கேட்க நல்லா தான் இருக்கு”
“என்ன அபிமா இப்படி சொல்லுறீங்க நாங்க தேடி கண்டுபிடிக்கிறது.. உங்களுக்கு ஃப்ரீயாவா இருக்கு”
“நான் அப்படி சொல்லலடி.. நிறைய பிள்ளைங்க தூக்கம் இல்லாம உடம்ப வருத்திட்டு வேலையே கதின்னு இருக்காங்க.. அதுக்கு நீங்க பரவாலன்னு ஒரு அம்மாவா எனக்கு நிம்மதியா இருக்கு” என்றதை கேட்டு பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டனர்.
அந்நேரம் அவ்விடம் ஆஜரான கீதாராணியின் கணவனான ரகுநாத்தை கண்ட சம்யுக்தா கண்டு காணாதது பொலிருக்க, தேவிபிரியா அவரை அணைத்து நலம் விசாரித்தாள்.
தேவிபிரியாவிடம் பேசிவிட்டு சம்யுக்தாவின் அருகில் அமர்ந்த ரகுநாத் “என்ன டார்லிங் மாமன கண்டுக்க மாட்டிக்க..”
“பேசாத டார்லிங்.. நான் உன் பேச்சு கா உனக்கு என்மேல லவ்வே இல்ல”
“அச்சோ டார்லிங்மா.. என்னடா அப்படி சொல்லிட்ட.. என் பொண்டாட்டி விட உன்ன தான் அதிகம் லவ் பண்றேன் மாமன்”
“அப்புறம் ஏன் நான் வந்து.. மறுநாள் தான் என்ன பாக்க வந்திருக்க” என்று முகத்தை திருப்பி கொள்ள, அதில் அவளை தன்னை நோக்கி திருப்பியவர் “சாரிடா டார்லிங் நேத்து நீ வர முன்னமே மார்கெட் போயிட்டு வந்தேன்.. அப்புறம் நீ தூங்கிட்ட சோ பயண களைப்பாயிருப்ப டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் சைட் வொர்க் பாக்க போயிட்டேன்.. கொஞ்சம் சைட் கெடுபிடி நைட் லேட்டா தான் வீட்டுக்கு வந்தேன்.. அதுக்குள்ள என் டார்லிங் கதவ மூடி தூங்கிட்ட அதான் ரெஸ்ட் எடுக்கட்டும் விட்டேன்”
“நீ இவ்வளவு கெஞ்சுறதுனால நம்புறேன்”
“என் செல்ல டார்லிங் லவ் யூடா” என்று மருமகளை கொஞ்ச, ரெண்டு முறை குரல் செருமும் சத்தம் கேட்ட சம்யுக்தா “என்ன அத்தமா ரெண்டு தடவ எத்தன மொடுலேஷன்ல இருமினாலும்.. எங்க லவ்வ யாரலையும் பிரிக்க முடியாது* என்று மாமனின் கை கோர்த்துக்கொள்ள,
அவளின் தலையில் செல்லமாக அடித்த கீதாராணி “ஒரு குரல் தான் என்னது.. இன்னொரு குரல்” என்று பார்வையை வேறு பக்கம் காட்டினார்.
அவர் காட்டிய திசையில் சகோதரனுடன் நின்ற தேவாவை காண, அவன் தன்னை முறைப்பதை கண்டு காணாமல் திரும்பி கொண்டாள்.
பிறகு அவன் கெந்தி நடந்து வந்ததை கண்டு பதறிய அபிராமி மற்றும் கீதாராணி “என்னாச்சிடா.. கால்ல கெட்டு போட்டுருக்க” என்ற வார்த்தையை கேட்ட பின் தான் அவனின் காயத்தை நினைவு கூர்ந்த சம்யுக்தா,
ஒருமுறை அவனின் காலை பார்த்துவிட்டு பார்வை மாற்றி கொண்டாலும் ஆடவன் அவர்களிடம் என்ன கூறுவான் என்று நினைத்திருந்தாள்.
“ஒன்னும் இல்ல அத்த.. சின்ன காயம் தான் ஒன்னும் இல்ல அம்மா” என்று இருவரையும் சமன்படுத்திய விக்கி, சகோதரனை தந்தைக்கு அருகில் அமர வைக்க,
அவரோ “எப்படிப்பா காயமாச்சு”
“ஒன்னும் இல்லப்பா.. நைட் குடோன்ல சரக்க இறக்கி வைக்கும் போது தகரம் குத்திருச்சு” என்றவனின் பார்வை சம்யுக்தாவை தொட்டு செல்ல, அதை உணர்ந்தாலும் அவன் பக்கம் பெண்ணவள் திரும்பவே இல்லை.
ஏனோ அவன் சாதரணமாக கூறினாலும் பெரியவர்களுக்கு மனது கேட்கவே இல்லை.
இப்போது அபிராமி “பாத்து கவனமா செய்றது இல்லையாடா”
“லேசா தான் அத்தை விடுங்க.. போய் காபி எடுத்து வாங்க” என்று அவரை அனுப்பி வைத்தவன், மற்றவர்களையும் சமன் செய்தான்.
அதன் பிறகு அனைவரும் வெவ்வேறு கதைகள் பேசி கொண்டிருக்க, அப்போது கேட்ட கார் சத்தம் அனைவரையும் மொளனமாக்கியது.
- துயர் தொடரும்...