அத்தியாயம் 03
கடற்கரையில் நின்றிருந்தனர் வாகீஷனும் சுதாகரனும். ஆர்ப்பரிக்கும் அலைகளை விட வேகமாக வாகீஷனின் இதயம் குருதியை உள் இழுப்பதும் வெளியேற்றுவதுமாக இருந்தது.
குழம்பிய மனதை ஆற்றுப்படுத்த, விரல்களுக்கு இடையில் புதிதாக முளைத்த ஆறாம் விரலில் தீயை மூட்டி, வாயில் வைத்து உள் இழுத்து புகைக்காற்றை வெளியிட்டான் சுதாகரன்.
கடல் அலைகள் கொஞ்சி விளையாட கால்களை குத்தகைக்கு விட்டிருந்த வாகீஷன், சுதாகரன் இழுத்து விட்ட புகையின் நறுமணத்தில் அவனை திரும்பிப் பார்த்து, வேகமாக அருகில் வந்து, அவன் ஆறாம் விரலை பிடிங்கி மணலில் போட்டு நசுக்கினான்.
"டேய் ஏன்டா? டென்ஷனா இருக்கேன்னு இழுத்தேன்.. ஒன்னே ஒன்னு தான் இருந்துச்சு..." என்று சுதாகரன் கவலைப்பட, கையை நீட்டி பொறு என்பது போல் சைகை செய்தவன்,
சற்று தள்ளி நின்ற ஐஸ் வண்டியின் அருகில் சென்று, இரண்டு நெக்டோ ஐஸ் வாங்கி வந்து, ஒன்றை சுதாகரனிடம் நீட்டி "இந்தா.. எனக்கும்தான் டென்ஷனா இருக்கு.. ஆனா சிகரெட் பிடிக்க மாட்டேன்.. ஏன்?.. எல்லாம் அவளுக்காக.. அவளுக்கு பிடிக்காதே.. அதான் சிகரெட் அடிக்க தோணும் அடிச்சது இல்ல.. சாராயம் குடிக்க தோணும் குடிச்சது இல்ல.. ஏன்னா..."
"அவளுக்கு பிடிக்காது.. அதுதானே..." என்று முடித்து வைத்தான் சுதாகரன்.
அவன் நீட்டிய ஐஸை வாங்கிக் கொண்டு "சரிதான்.. இப்ப இத சிகரெட்னு நினைச்சுக்கணுமா..."
"ம்ம்.. இத்தன வருஷமா நானும் அப்டித்தான் நினைப்பேன்..."
"எல்லாம் என் நேரம் டா..." என்றவன் ஐஸை சாப்பிட்டான்.
வாகீஷனும் ஐஸை முழுதாக வாயினுள் திணித்து பின் மெதுவாக வெளியே இழுத்து என்று சுவைத்தவாறு, கடற்கரை மணலில் அப்படியும் இப்படியுமாக நடந்தான்.
"மச்சான் ஏதோ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்டா.. அந்த புள்ள உன்ன கழட்டிவிட ஏதோ சொல்லி இருக்கு.. நீயும் அதையே புடிச்சிட்டு தொங்கி இருக்க.. சரி விடு.. கெட்டதுலயும் ஒரு நல்லது போல இப்போ நீ நல்லா இருக்க..."
"சரி விடவா!.. எதவிட அவளையா? விட்டா செத்துருவேன் டா..."
"டேய் வாகீ என்னடா!..."
"உண்மையாதான்டா.. அவ வேற ஒருத்தனுக்கு சொந்தம் என்றத என் காது கேட்டு மூளைக்கு கொண்டு போறதுக்கு முன்ன, என் இதயமும் மூளையும் வேலை செய்யாம போயிருக்கும்..." என்றவன் குரலில் உறுதி இருந்தது
"சரி இப்ப என்ன பண்றது?..." என்று சுதாகரன் கேட்க
கையில் இருந்த ஐஸை மொத்தமாக வாயில் திணித்து இழுக்க, குச்சி மட்டும் வந்தது. வாயை நிறைத்த ஐஸை துப்பியவன் ஐஸ் குச்சியை மாற்றி மாற்றி வாயில் வைத்தவாறு யோசித்தான்.
"அவள தூக்கலாம் மச்சான்..."
"நீ டூ லேட்.. நான் கேட்ட உடனே சொல்லுவேன்னு எதிர்பார்த்தேன்..."
"சரி வா!..." என்று வாகீஷன் முன் நடக்க,
"இப்பவே வா?..." என்று சுதாகரன் கேட்க
"இப்போ நீ லேட்டு..." என்று சொல்ல
"சரிதான்..." என்ற சுதாகரன் வேனில் வந்து ஏறி "என்ன பிளான்?..." என்று கேட்க
"என்ன பிளான்..போறோம், தூக்குறோம்..அவளுக்காக நான் கட்டுன வீட்டுல கொண்டு போய் வைக்கிறோம்..."
"என்ன போறோம் தூக்குறோம்.. அவ இந்நேரம் வீட்ட போயிருப்பா..."
"இல்லடா.. அவசர வேலையா வேற எங்கேயோ போறதா சொன்னா.. வீட்டுக்கு போயிருக்க வாய்ப்பு இல்ல.. அப்டியே போயிருந்தா தங்கச்சிய வெச்சு ஃபோன் போட்டு வெளியே வர வெச்சு தூக்குவோம்..." என்று வாகீஷன் சொல்ல
"சரிதான்..." என்று கேட்டுக் கொண்டான் சுதாகரன்.
"தங்கச்சிக்கு ஃபோன் பண்ணி நிரா எங்கனு விசாரிக்க சொல்லு..." என்று சொல்ல
அவனும் மனைவிக்கு ஃபோன் போட்டு, ஏன் எதற்கு என்று ஈரக் கொலையை அறுக்காமல் நிரா எங்கே என்று மட்டும் கேட்டுச் சொல்லுமாறு சொல்ல, இரண்டு வசவு நாலு திட்டுடன் சரி என்று ஒத்துக் கொண்டவள், பத்து நிமிடங்களில் மீண்டும் அழைத்து பியூட்டி பார்லரில் இருப்பதாக கூற, சரியென இருவரும் வண்டியை அந்த இடத்தை நோக்கி செலுத்தினர்.
"மச்சான் நிரா வெளிய வந்ததும் ஃபாலோ பண்ணு.. அவ வீட்டுக்கு போறதுக்கு முன்ன தூக்கணும்.. நான் அதுக்குள்ள வீட்ட போயிட்டு வாரேன்.. நான் வர சுனங்கினா எப்டியாவது அவள மடக்கி வை.. இன்னைக்கு மிஸ் ஆக கூடாது..." என்று சுதாகரனிடம் சொல்லிவிட்டு
வீதியில் வந்த ஆட்டோ ஒன்றில் ஏறி தன் வீட்டிற்கு வந்தான். அவன் தாய் திலகம் "எங்கப்பா போன.. சாப்பிடவும் இல்ல.. வா சாப்பிட..." என்று அழைக்க
"இல்லம்மா எனக்கு வேணா.. அலையடிவேம்பு விட்டு சாவிய தாங்க..." என்று கேட்க
அதை எடுத்துக் கொடுத்தவர் "வயரிங் வேல நடக்குது.. பாத்து கவனம்..அந்த வீட்டுக்கு விளக்கேத்த மருமகள் வருவாள்னு சொன்னியே எப்ப வருவா?..." என்று கேட்க
"அவள தூக்கத்தான் போறேன்..." என்று முணுமுணுத்தவன் "சீக்கிரமா வருவா..." என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறி, மீண்டும் ஆட்டோ பிடித்து சுதாகரன் இருக்கும் இடம் வந்து சேர்ந்தான்.
"என்னடா இன்னும் வரலையா?..." என்று கேட்க
"இல்லடா..."
"சரி.. அப்போ பக்கத்துல இருக்கிற பாமஸில ஷின் டேப்லெட் ஒரு கார்ட் வாங்கி வா..." என்று சொல்ல
"எதுக்குடா...?"
"வாங்கி வாடா..." என்று சுதாகரனை அனுப்பி வைக்க, அவனும் வாங்கி வந்தான்.
கையில் வாகீஷன் ஒரு பை வைத்திருக்க, "என்னடா இது?..." என்று சுதாகரன் கேட்க
"தங்கச்சியோட ஷோல் டா..."
"அடப்பாவி!..." என்று சுதாகரன் வாயில் கையை வைக்க
நிராளினி பியூட்டி பார்லர் இருந்து வெளியேறி, வீட்டை நோக்கி புறப்பட்டாள். அவளை பின்தொடர்ந்தனர் இருவரும். மெயின் ரோட்டை கடந்து, அவள் ஒரு குறுகலான வழியாக சென்று, அவள் வீடு இருக்கும் மெயின் ரோட்டுக்கு செல்ல வேண்டும்.
அதை யூகித்த வகிஷன் வேறு வழியால் வேகம் எடுத்து, அவள் வர இருக்கும் குறும்பாதையை நோட்டமிட்டவாறு வந்தான். அந்த தெருவில் பெரிதாக ஆட்கள் நடமாட்டம் இல்லை. எந்த வீட்டிலும் சிசிடிவி கேமரா இல்லை என்பதை குறித்துக் கொண்டான்.
"என்ட கெஸ் சரினா.. அவ இதாலதான் வருவா.. தூக்க சரியான இடம்..." என்று சொல்ல
"டன்!.." என கையை தூக்கி காட்டினான் சுதாகரன். இருவருக்குமே சற்று பயம்தான். உடல் உதறல் எடுத்ததுதான், ஆனாலும் ஒரு குருட்டு நம்பிக்கை எல்லாம் சரியாக வரும் என்று.
நிராளினியும் அந்த குறுக்கு தெருவில் தான் வந்தாள். அவளை கண்டுகொண்டதும் வாகீஷன் சுதாகரனுக்கு கண்ணைக் காட்ட, அவனும் தலையசைத்து விட்டு வேனில் இருந்து கீழே இறங்கி நின்றான்.
அவன் வேனில் இருந்து இறங்கும்போது நிராளினி கண்டு கொண்டாள். "என்ன சுதாண்ணா இங்க...' என்ற யோசனையுடன் வர
கையை நீட்டி அவளை நிறுத்தி இருந்தான் சுதாகரன். அப்போதும் பாடசாலைக்கு வந்தான், இப்போதும் வீடு செல்லும் பாதையை வழிமறிக்கின்றான். எதுவும் முக்கியமான விஷயமோ என்று எண்ணியவள் "சுதாண்ணா என்ன ஆச்சு? ஏதும் முக்கியமான விஷயமா?..." என்று கேட்க
"ஓம், கொஞ்சம் கதைக்கோணும் நிராளி..."
"சொல்லுங்கண்ணா..." என்று சொல்லி அவன் முகம் பார்க்க,
வேனுக்குள் இருந்த வாகீஷன் கணநேரத்தில் கதவை திறந்து, இடையோடு ஒரு கைப்போட்டு, மற்ற கையால் வாயை பொத்தி, வாகனத்தில் ஏற்றி இருந்தான்.
நிராளினியின் ஸ்கூட்டியை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு சுதாகரனும் உள்ளே ஏறினான்.
"ம்ம்ம்.. என்.. வி..விடு.. காப்..." நிராளினி அவனிடமிருந்து விடுபட எவ்வளவு போராடியும், வாகீஷனின் பலத்தின் முன் முடியாமல் போனது.
உள்ளே வந்த சுதாகரனிடம் "ஷோல எடுத்து கையையும் காலையும் கட்டுடா..." என்று சொல்ல
அவனும் அவசர அவசரமாக துப்பட்டாவை எடுத்து நிராளினியின் காலை முதலில் கட்டினான். அவள் திமிறி, வாகீஷனை அடித்து, சுதாகரனை காலால் ஏத்தி, எதுவும் பயன் அளிக்கவில்லை.
"நிரா! அமைதியாக இரு.. இல்ல கிஸ் அடிச்சிடுவேன் பாத்துக்க..." என்று வாகீஷன் விரட்ட, கண்களை அகல விரித்து தன் திகைப்பையும் பயத்தையும் வெளிப்படுத்தினாள் பெண்ணவள்.
அவன் கூறியதை கேட்டு அவன் முகத்தையே உருத்து விழிக்க, 'என்னத்த அப்டி குறுகுறுன்னு பாக்குறா...' என்ற யோசனையுடன் வண்டியில் இருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்தவன் திடுக்கிட்டான்.
அவன் சாப்பிட்ட ஐஸ்சின் சிகப்பு நிற சாயம் உதட்டில். "ஐயையோ அது ஐஸ்பழத்தோட சாயம்.. நான் ஆரையுமே கிஸ் அடிக்கல.. உன்கிட்ட கூட விரட்ட தான் சொன்னேன்..." என்று பதறி அடித்துக் கொண்டு விளக்கம் கூறினான்.
சுதாகரனோ "ரொம்ப முக்கியம்.. இன்னும் கடத்தவே இல்ல அதுக்குள்ள கிஸ் அடிப்பானாம்..." என்று திட்டிக்கொண்டு காலை கட்டி முடித்தான்.
சுதாகரன் கையையும் கட்டி விட, அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் நிராளினி. அவள் பார்வையின் பொருள் உணர்ந்தவன் "மன்னிச்சிடும்மா.. என் சொந்த தங்கச்சியா இருந்தாலும் இதத்தான் செய்வேன்.. உன் வீட்ட பாத்து இருக்குற மாப்பிள்ளைய விட என் மச்சான் உன்ன நல்லா பாத்துப்பான்.. முக்கியமா காதலோட..." என்று சொல்ல
இன்னும் நீ மாறலயா என்பது போல் வாகீஷனைப் பார்த்தாள் நிராளினி. இனி என்ன நடக்கப் போகின்றது என்பது புரிந்தது. எதுவும் செய்ய முடியாத நிலை, அவளுக்கு அழுகை தான் வந்தது. வாகீஷனை விட சுதாகரன் செய்த துரோகம் வலித்தது.
மற்றும் ஒரு துப்பட்டாவை கையில் எடுத்து சுதாகரன் வாயையும் கட்டலாம் என்று சொல்ல "அதுக்கு முதல பாமசில வாங்குன டேப்லெட் ரெண்டு எடு..." என்று சொல்ல
என்ன மாத்திரை என்று அரண்டாள் நிராளினி. அவள் பயம் புரிந்தவனாக "அது ஷின்.. நித்திர வரும் அவ்ளவுதான்.. பயப்படாத..." என்று அவளுக்கு விளக்கமும் கொடுத்தான்.
சுதாகரன் மாத்திரையை எடுக்க, அவள் கத்தாதவாறு தாடையை வாகீஷன் பிடிக்க, சுதாகரன் வாயில் மாத்திரையை போட்டு தண்ணீரையும் ஊற்ற, நிராளினி கீழே துப்பாதவாறு வாயை இறுகப் பொத்திக் கொண்டான் வாகீஷன்.
வேறு வழியில்லாமல் அவளும் விழுங்க வேண்டியதாய் போனது.
"மச்சான் நீ ஸ்கூட்டிய கொண்டு போய் வீட்ட விட்டுவிட்டு வா..." என்று சொல்ல
சரி என்று தலையாட்டிய சுதாகரன் வண்டியிலிருந்து இறங்கி நிராளினியின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு, அந்த வீதியின் இரு பக்கமும் இருந்த மெயின் ரோடு வழியாக செல்லாமல் இடையில் இருந்த குறுக்கு சாலையில் சென்றான்.
நிராளினியின் கண்களில் நிக்காமல் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. அது அவள் வாயை பொத்தி இருந்த வாகீஷனின் கையையும் நனைத்தது.
"குளராத நிரா.. உன்ன கஷ்டப்படுத்த நான் இதச் செய்யல.. உன்ன சந்தோஷமா வச்சுக்கணும்.. உன்னோட சேந்து நானும் சந்தோஷமா இருக்கணும்.. அதுக்கு உன்ன கண் கலங்காம பாத்துக்கணும்னு தான் இத்தன வருஷம் கஷ்டப்பட்டேன்.. நீ குளர்னா எனக்கு நோகுது நிரா..." என்று சொல்ல
இவன் புரிந்து தான் பேசுகின்றானா! இவன் செய்யும் இச்செயலின் வீரியம் அவனுக்கு புரிகின்றதா. அவளை காணவில்லை என்ற அடுத்த நொடி அவள் தந்தையும் அண்ணனும் என்ன செய்வார்கள், இவனை கண்டுபிடித்தால் கொன்று போட்டுவிட்டு தான் மறு வேலை பார்ப்பார்கள்.
இவன் ஆற்றும் வினையின் எதிர்வினை பற்றி யோசிக்காமல் காதல் என்று பிதற்றுகின்றானே என்று எரிச்சலாக தான் வந்தது அவளுக்கு.
அவனை இப்போது தான் ஊன்றி பார்க்கின்றாள். ஆறடிக்கும் சற்று அதிகமாகவே இருப்பான், நல்ல உயரம். கருப்பு என்று இல்லாமல் பொதுவான நிறம், அடர்ந்த கேசம், அழகாக திருத்திய மீசை தாடி, உருண்டு திரண்ட உடற்கட்டு,
அவன் அவளை பிடித்து இருந்த பிடியே சொன்னது அவன் வலிமையை. ஆனாலும் உடல் முழுவதும் வியர்வையில் நனைந்து இருந்தது. இன்னும் இன்னும் வியர்வை பூக்கள் அரும்பி ஆறாக அவன் உடலில் இறங்கிக் கொண்டு தான் இருந்தது.
பயத்தினாலா! பயந்தவன் எதற்கு இந்த ஈன செயலை செய்ய வேண்டும். அவள் வாயை பொத்தி இருந்த அந்த கையிலும் சிறு நடுக்கத்தை உணர முடிந்தது.
திமிறிக் கொண்டு அழுதவள் அமைதியாகிவிட, கட்டியிருந்த அவள் கைகளில் பார்வையை வைத்திருந்தவன், விழிகளை உயர்த்தி அவள் விழிகளை பார்த்தான்.
அவள் மனதின் கேள்வி விழி வழி தெரிந்ததுவோ என்னவோ, தன்னை குனிந்து பார்த்துவிட்டு "பயத்தினால ஒன்னும் இல்ல.. உன்ன தூக்கணும்னு முடிவு பண்ணதுமே எல்லாத்துக்கும் துணிஞ்சிட்டேன்..." என்றவன் நிறுத்தி
"இதப்பத்தி யோசிக்கல..." என்று சொல்லி அவளைக் காட்ட,
விழிகள் சுருக்கி பார்த்தவள் அப்போதுதான் உணர்ந்தாள். அவனின் ஒருகை அவள் தோளை சுற்றி அவனுடன் இறுக்கி இருக்க, மற்ற கை வாயை பொத்தி இருந்தது.
அத்தனை கலக்கத்திலும் அவள் விழிகளால் அவனை எரிக்க, 'கண்ணையும் கட்டி இருக்கலாம்.. கண்ணாலேயே கத்தி வீசுறா...' என்று எண்ணியவன்
"ஒரு பொம்பள புள்ளைய.. அதுவும் விரும்புனவள முதல் தடவ தொடுறேன்.. அதான் என்னையும் மீறி வேர்த்துக் கொட்டுது..." என்றான் அவளை பார்க்காமல்.
அவள் விட்டு விலக பார்க்க, "ஸ்சூ.. சும்மா இருடா..." என்று இன்னும் நெருக்கி அணைத்து கொண்டான்.
இதற்கிடையில் சுதாகரன் நிராளினியின் ஸ்கூட்டியை வீட்டில் விட்டு விட்டு, மெயின் ரோட் வரை ஆட்டோவில் வந்தவன், அங்கிருந்து நடந்து வந்து சேர்ந்தான்.
சுதாகரன் வண்டியை எடுக்கவும் நிராளினி கைகட்டை அவிழ்க்க இரண்டு கைகளையும் அழுத்தி, இழுத்து முயற்சிக்க, அவள் பொன்மஞ்சள் நிற கை சிவக்க தொடங்க,
"கைய ஏன்டா இவ்ளவு டைட்டாக கட்டி இருக்க..." என்று நண்பனிடம் காய்ந்தவன்
"அசைக்காம இரு நிரா..." என்று அவளிடமும் சிறு அதட்டல் போட்டான்.
"ஹா வேணும்னா கை கட்ட அவுத்து விடவா..." என்று சுதாகரன் கேட்க
"ஒன்னும் வேணாம்.. ஆனா குளரிட்டே இருக்கா.. கை வேற சிவந்து போச்சு..." என்று வாகீஷன் கவலைப்பட
"சரி, நான் வேன நிராளி வீட்ட திருப்புறேன்..இறக்கி விட்டுடலாம்..குளறாம இருப்பா..." என்று கடுப்பாக சொன்ன சுதாகரன்
"கடத்தினா குளறாம குத்தாட்டமா போடுவா.. மூடிட்டு வரல அவ வீட்டுக்கு வேன விட்டுடுவேன்..." என்று சுதாகரன் சொல்ல
வாயை மூடிக் கொண்டான் வாகீஷன்.இப்போது நிராளினிக்கு தூக்கம் தூக்கமாக வந்தது.இருந்தும் தூங்காமல் தலையை சிலுப்பி கண்களை விரித்து முழித்து இருந்தாள்.
எந்த வழியால் செல்கின்றனர் என்று கவனித்த வண்ணம் வந்தாள்.
அவள் எதிர்பார்த்தது என்னவோ கடத்திக் கொண்டு ஊரை விட்டு செல்வார்கள் என்று. அதுதானே வழக்கம். ஆனால் வண்டி ஊரினுள் சென்று ஆலை வடிவமைப்பு பகுதியில் ஒரு வீட்டில் நின்றது.