• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நின் மத்தம் : 24

STN - 57

New member
காலை அவள் எழுந்து வர அவளின் முகப்பூரிப்பை வைத்து தன்னுடைய பிள்ளைகள் வாழ்வை தொடங்கி விட்டார்கள் என்பதை புரிந்து கொண்டார்கள்..

" கடவுளே இனி ஆவது என்னுடைய பிள்ளைங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்" என்று சுசிலா மனம் உருகி வேண்டி அவளை வீட்டில் விளக்கேற்ற சொன்னார்.

அவளும் அவர் முகத்தை பார்க்க கூச்சப்பட்டு கொண்டே விளக்கை ஏற்றி பூஜை நடத்தினாள்.

மீனாட்சி எழுந்து வரும்போது தன் மகள் பூஜை நடத்தியதை பார்த்து ஏதோ உலக அதிசயம் போல் பார்த்து நின்றார்.

"என்ன மீனாட்சி அப்படி பார்க்கிற" என்று கேட்டதற்கு, "என் பொண்ணு எவ்வளவு மாறிட்டா அண்ணி எங்களுக்கு அப்புறம் அவளுக்கு யாரும் இல்லன்னு நினைச்சேன் இப்போ அவளுக்கு துணையாக மாப்பிள்ளை இருக்கார்.

அதை நினைச்சு ரொம்ப சந்தோஷமா இருக்குது அண்ணி நீங்க அன்னைக்கு பொண்ணு கேட்டு வரும்போது நாங்க பொறுமையா கேட்காம இருந்திருந்தால் இன்னைக்கு என்னோட பொண்ணோட வாழ்க்கை நல்லா இருந்திருக்காதுன்னு தோணுது ரொம்ப நன்றி" என்று கையெடுத்து கும்பிட்டார்.

அதில் பதறியவர் "ஐயோ கையை கீழ இறக்குங்க மீனாட்சி நா பொண்ணு கேட்டு வந்து என்னோட பையனோட மொத்த விஷயத்தையும் தெரிஞ்சும் உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்ததுக்கு நான் தான் நன்றி சொல்லணும் நன்றி சொல்லிட்டு இருந்தா வாழ்க்கை முழுக்க சொல்லிட்டு இருக்கனும் அதை விட்டு நம்ம பேர பசங்க வருவாங்க அது கொஞ்சுவதற்கு ரெடியா இருப்போம். " என்று கூறினார்.

"சரிங்க அண்ணி நாங்க அப்படியே எங்க வீட்டுக்கு கிளம்பும் வந்து ரொம்ப மாசம் ஆச்சு" என்றார்.

" அதெல்லாம் முடியாது உங்களுக்கும் அங்க போனா தனியா இருக்கணும் நானும் இங்க தனியா தான் இருக்கேன் இங்கே இருக்கலாம். அதுதான் அண்ணா வீட்லிருந்து தானே வேலை பார்க்கிறார் " என்று சொல்லவும், " சரிங்க அண்ணி அப்ப அந்த வீட்டு வாடகைக்கு விட்டுட்டு இருந்துக்கலாம்" என்று முடிவெடுத்து விட்டனர்.

அதன்பின் செந்தூரன் வேக வேகமாக இறங்கி வர பூஜையறையிலிருந்து ஆர்த்தி தட்டு கொண்டு வந்த விழி அவன் அழகில் அப்படியே மெய் மறந்து நின்று பார்க்க அவன் என்ன என்பது போல் தன் புருவத்தை உயர்த்தி கேட்டான்.

அவளோ நான் வராமல் எதற்கு டிரஸ் பண்ணிட்டு வந்த முத்தம் கூட தரவில்லையே என்று முறைத்து நின்றாள்.

அவன் தன் கையை உயர்த்தி பார்த்துவிட்டு, "அம்மா எனக்கு ஒரு எமர்ஜென்சி வேலை இருக்கு நான் சீக்கிரமா போகணும் " என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டான்.

அவளோ அவளை எரிக்கும் பார்வை பார்த்தாள். அவன் கண் அடித்து விட்டு வந்தான்.

அலுவலகத்திற்கு வந்தவன் இளங்கோவை அழைத்தான்.

" சொல்லு மச்சான் அந்த டெண்டர் போச்சுன்னு ரொம்ப வருத்தமா இருக்கா டா" என்றான்.

"எனக்கு இந்த டெண்டர் போனது ஒகே டா ஆனா அவனை அடியோடு அழிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன் டா இனிமே போட்டி இல்லை... "

"என்னடா பண்ணப் போற" என்றான்.

அவன் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு பிளாங்க் செக் என்கிட்ட கொடுத்தான் அது ஞாபகம் வேலையில இருக்கான்னு மட்டும் செக் பண்ணுடா அவனோட பேங்க் அக்கவுண்ட்ல எவ்வளவு அமௌன்ட் இருக்கோ அத அந்த செக்கில் ஃபுல்லா போட்டு நம்ம டெபிட் பண்ணிடறோம்... "

"டெபிட் பண்ணி என்னடா பண்ண போற"

" டெபிட் பண்ணி ப்ராப்பரா அனாதை ஆசிரமங்களுக்கு டிடி எடுத்து அனுப்பிச்சு விடலாம்டா. அவன் காசு நமக்கு வேண்டாம் ஆனா அவன் வாஷ் சூட் ஆகணும்" என்றான்.

"இத்தனை வருஷம் அவனை போட்டி போட்டு முந்தி போனா போதும்னு நினைச்ச இப்ப மட்டும் ஏண்டா அவனை அழிக்க வேண்டும் " என்று நினைக்கிறாய் என்றான்.

"எல்லா அப்பாக்களுமே தான் கஷ்டப்பட்டாலும் தன்னுடைய பசங்க நல்லா இருக்கும்னு நினைப்பாங்க தான் தப்பு பண்ணாலும் அது தன்னோட பசங்க வரைக்கும் போகாமல் இருக்க நினைப்பாங்க

ஏன்னா தன்னோட பசங்க ஒழுக்கம் இல்லாம இருக்கக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக தான் எப்பவுமே அந்த ஆளு என்னை பத்தியும் என்னுடைய உணர்வுகளை பத்தியும் கவலைப்படாம அவனோட சுகத்துக்கு இருந்தானோ அப்பவே நான் அழிச்சிருக்கணும் அந்த அறிவு எனக்கு அப்ப இல்ல இப்பதான் அது வந்து இருக்கு திரும்பவும் அதே தான் பண்ணிட்டு இருக்கான் அதனால அவன் அழியும்னும் டா அதுக்கு என்ன வழி என்றது மட்டும்தான் நான் பாக்கணும்..."

"சரிடா பிளாங் செக்ல இருக்கற அமௌன்ட் எல்லாம் எடுத்து டெபிட் பண்ணிடுவ மீதி சொத்து எல்லாம் என்ன பண்ணுவ" என்றான்.

" ரிஜிஸ்டர் ஆபீஸ் வர சொல்லு அவன் பெயரை சொல்லி அவன் யார் யார் பேர்ல என்னென்ன பத்திரம் எப்ப பிரிஜிஸ்டர் பண்ணி இருக்கிறான் என்பதை பாரு அப்படி பார்த்து அவர்களை விலைக்கு வாங்கி அந்த சொத்துல எல்லாம் நம்ம எடுத்துக்கலாம்" என்றான்.

"இது நல்ல ஐடியாடா" என்று சொல்லி இருவருமாக அவன் சொன்ன விவரங்களை பார்க்க எல்லாமே அவனுக்கு சாதகமாக அமையவில்லை...

ஆனால் இதைப் பற்றி விசாரிக்கும் போது அவன் சென்னையில் ஒரு காட்டுப் பகுதியில் போதைப்பொருள் குடோன் வைத்திருப்பது தெரிய வந்தது.

அதை இருவரும் எப்படி வேரோடு அழித்து அவனை சாய்ப்பது என்ற முனைப்போடு வேலைப் பார்த்தனர் .

அதே நேரம் வரதனுக்கும் அவன் தன் சொத்து விவரங்களை பற்றி விசாரித்தது தெரிய வர அவனுக்கு அழைத்து, " என்ன நீ வச்ச பொறியில நான் சிக்கில போல, இப்ப கூட ஒன்னும் இல்லை நீ எடுத்து இருக்க அந்த கவர்மெண்ட் காண்ட்ராக்டர் என்கிட்ட கொடுத்துடு நான் என் சொத்துல பாதி உனக்கு குடுத்துறேன் எனக்கு அப்புறம் அந்த சொத்து எல்லாம் உனக்கு தானே கண்ணா!" என்று சிரித்தார்.

"நான் எடுத்திருக்க கவர்மெண்ட் கண்ட்ராக்ட் விட நீ எடுத்து இருக்கிற அந்த பிரைவேட் ஸ்கூல் காண்ட்ராக்ட் பெருசு இல்ல அப்புறம் ஏன் நீ அதுக்கு நிக்கிற " என்று கேட்டான்.

"அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாதுடா" என்றார்.

அது அவனுக்கும் தெரியும் ஏனென்றால் அவருக்கு லாபம் முக்கியம் இல்ல இவன் விழுந்தாக வேண்டும் என்ற முனைப்பு அவ்வளவு அதை நினைத்து சிரித்தவன் அந்த போதை பொருளில் எப்படி இவரை மாட்டி விடுவது என்று யோசித்தவன், மீண்டும் அவருக்கு அழைத்தான்.

அவர் அழைப்பை காதில் வைத்து "அதிசயமா இருக்கு நீ என்னை கூப்பிட்டு இருக்க " என்றார்.

"அந்த கூடுவாஞ்சேரி" என்று அவன் சொல்லும்போதே இந்த பக்கம் அவருக்கு உதரல் எடுத்து, " என்ன என்ன கூடுவாஞ்சேரி" என்று தடுமாறினார்.

இந்த பக்கம் அவன் சத்தமாக சிரித்து "அந்த கூடுவாஞ்சேரி விஷயத்தை நான் போலீஸ்ல சொல்லக்கூடாதுனா உன் பினாமி பேரில் உன்னோட சொத்து மொத்தமும் என் பெயருக்கு மாத்தணும் இரண்டு மாசத்துல" என்று சொல்லி போனை வைத்து விட்டான்.

இளங்கோ இதை பார்த்து, " என்ன மச்சான் இப்படி சொல்லிட்ட" என்றான்.

"இல்லடா அவனையும் அழிக்கணும் அவனை மாட்டிவிடும் அதுதான் என்னோட இந்த பிளான் கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகும் பாரு அவனா அந்த போது கூட இருந்து வெளியே வராமல் சிக்க வைக்கணும் " என்று சொன்னான்.

அவன் போனை வைத்ததும் இந்த பக்கம் இருந்த வரதனுக்கு கை கால்கள் எல்லாம் நடுங்கி வேர்வை ஆறாக ஊற்றியது.

அவருடைய இந்த சொத்துக்களை விற்றால் கூட மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம் ஆனால் போதை பொருளில் அவருக்கு வரும் வருமானம் இதை காட்டிலும் மும்மடங்கு ஆயிற்றே அதை எப்படி அவர் விட்டுக் கொடுப்பார்.

இந்த விஷயத்தில் கைதானால் வாழ்க்கை அவ்வளவு தானே!! கைதானாலும் வெளியே வர முன்னேற்பாடுகள் அவர் பல செய்து வைத்துள்ளார் தான் இருந்தாலும் ஏதோ ஒரு நடுக்கம் வர, தன் உதவியாளருக்கு அழைத்து

தன் சொத்து விவரங்களை குறித்து விசாரித்தார்.

அவரும் அதை பற்றி எல்லா விவரங்களை அக்கு வேறு ஆணி வேராக எல்லாவற்றையும் சொல்ல அப்போதுதான் அவருக்கு புரிந்தது தான் எவ்வளவு சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறோம் என்று,

இது அத்தனையும் அவனிடம் கொடுக்க வேண்டுமா? என்று யோசித்தவர் ஒரு போலி பத்திரத்தை தயாரித்து அதில் அவனுக்கு எல்லா சொத்துக்களையும் எழுதி வைப்பதாக ஒப்புக்கொண்டு கையெழுத்தும் போட்டு அவனிடம் கொடுப்பதற்காக அவன் அலுவலகத்திற்கு வந்து காத்திருந்தார்.

இப்போதும் அவர் எப்போதும் அணைத்து அழைத்துவரும் அந்த பெண்மணியை அழைத்து வந்திருந்தார் ஆனால் இந்த நிமிடம் அவனுக்கு அவரைப் பார்த்து வெறுப்போ அல்லது கோவமோ அருவருப்போ எதுவும் இல்லை மாறாக ஒரு களிப்பு தான் வந்தது.

அவர்களை சாதாரணமாக அமர வைத்து, உபசரித்து தேநீர் காபி எல்லாம் கொடுத்து சொத்துக்களை வாங்கி கைகுலுக்கி அனுப்பி வைத்தான்.

அவர் நினைத்து வந்தது வேறு ஏன் இன்று காலை அவனுக்கு அழைத்து தான் வருவதாக சொல்லும்போது கூட, "என்னை பேஸ் பண்ணி தயாரா" என்று நக்கலாக தான் கேட்டிருந்தார் "நீங்க வாங்க எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் " என்று சொல்லித்தான் அவனும் அவரை வரவழைத்திருந்தான் இந்த மாற்றம் அவருக்கே ஒரு புதிய செந்தூரனை காட்டியது.

வெளியே வரும்போது அந்த பெண்மணி "ஏங்க எல்லாம் சொத்தையும் அவனுக்கு கொடுத்துட்டீங்களே அப்ப என்னோட நிலைமை" என்று கேட்டார்.

அவர் அதற்கு "அமைதியா வாடி" என்று முணுமுணுத்து அழைத்துச் சென்று காரில் ஏறி அமர்ந்தவுடன், " அந்த சொத்து எல்லாம் போலி பத்திரம் டி அதை எடுத்துட்டு போய் அவன் விற்கவும் முடியாது அடமானம் வைக்கவும் முடியாது இப்படி செஞ்சா அவன் பத்திர மோசடியில் தான் சிக்குவான்" என்று சொல்லி சிரித்தார்.

தனக்கு அவன் பின்னே வைத்திருக்கும் ஆப்பு தெரியாமல்...

அவர் மகன் ஆயிற்று தாய் எட்டடி பயந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பது தெரியாமல் போய்விட்டது அவர் இப்படியெல்லாம் செய்வார் என்பது தெரிந்தால் அந்த ரெஜிஸ்டாரை முதலில் பேசி வைத்து அவர் போலி பத்திரம் தயாரிக்கும் விஷயம் தெரிந்து எல்லாவற்றையும் நல்ல பத்திரமாகவே மாற்றி எழுதி வாங்கிக் கொண்டு ஒரு சாதித்த திருப்தியில் இருந்தான்.

இந்த வேலைகளை எல்லாம் முடித்து வீட்டுக்கு வரவே இரண்டு நாட்கள் ஆக மான் விழி அவனிடம் கோவித்துக் கொண்டு பேசவே இல்லை, அவளிடம் கெஞ்சும் நேரம் அவளுக்கு நடந்ததை நினைத்து நெஞ்சமே ஒரு நிமிடமே நின்று விட்டது.
 
Top Bottom