அத்தியாயம் 05
சுதாகரன் வீட்டினுள் நுழையவும் ருத்ரகாளியாக முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் அவன் காதல் மனைவி கீர்த்தனா.
'போச்சு போ.. இவ நிக்கிற போஸ பாத்தா ரத்த பலி எடுக்காம விட மாட்டா போலயே.. வாதாடி ஜெயிக்க ஏலாது தடாலடியா கால்ல உழுந்துடுவோமா!...' என்று மனதில் நினைத்தவன்
"கீத்து சாப்பிட்டயா?..."என்று அன்பாக கேட்க
"என்னதான் நடக்குது சுதாப்பா?..." என்று கீர்த்தனா அழுத்தமாக கேட்க
"என்னாச்சு.. எத கேட்குற...?" என்று எதுவுமே தெரியாது போல் அவன் கேட்க
"ஓஹோ! நான் எதப் பத்தி கேட்கிறேன்னு உங்களுக்கு தெரியல.. இத நான் நம்பனுமா?..." என்று கேட்க
அவளை நெருங்கி அணைத்தவன், அவள் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டு "கீத்து நீ வாகீயோட விஷயத்த கேட்கிறன்னு தெரியுது.. அத சொல்லனும்னா மூணு மணி நேரம் வேணும்.. இப்போ ரொம்ப களைப்பா இருக்கு நாளைக்கு விடிஞ்சதும் விலாவரியா எல்லாமே சொல்றேன்.. பசிக்குதுடி..." என்று அவன் சிணுங்க
கணவன் பசி என்றதும் கோபத்தையும் சிந்தனைகளையும் தள்ளிவைத்தவள் "சரி வாங்க சாப்பிட..." என்று அழைத்தும், அவன் அவளை விடாமல் இருக்க
"என்ன?.. விடுங்கப்பா.. சாப்பாடு எடுத்து வைக்கணும்..." என்று சொல்ல
"அஞ்சு நிமிஷம் டி..." என்று குழைவாக சொல்ல,
அவள் இதழ்களில் மெல்லிய புன்னகை "களைப்பா இருக்குன்னு சொன்னீங்க..." என்று கேட்க
"இப்போ இல்ல.. புள்ளைங்க சத்தமே இல்ல.. நித்திரையா?..." என்று கேட்க
"ஓம்.. ரெண்டு பேரும் எட்டு மணிக்கே நித்திர..." என்று கீர்த்தனா சொல்ல
அவளது கழுத்து வளைவில் இருந்து முகத்தை எடுத்து, அவள் முகம் கண்டவன் "என்னடி அதிசயம்.. நேரத்துக்கு நித்திர கொண்டுட்டாங்க..." என்று கேட்க
"அண்ணா வாங்கிட்டு வந்த பொம்மையளோட மதியம் பூராவும் ஒரே விளையாட்டு.. கொஞ்ச நேரம் கூட படுக்கல.. அதான் இருட்டவும் பகல் முழுதும் கூத்தடிச்ச களைப்புல படுத்து நித்திர ரெண்டு பேரும்... என்றவள்
அவனை தன்னை விட்டு விலக்கி, திரும்பி, அவன் முதுகில் கையை வைத்து தள்ளியவள் "போங்க.. போய் மேல் கழுவி விட்டு வாங்க..வேர்வ நாத்தம்..." என்று சொல்ல
திரும்பி மனைவியை மெல்லிடையோடு கையை போட்டு தன்னுடன் நெருக்கியவன் "ஏன்டி என் வேர்வ மணம் புடிக்கும்னு சொல்லுவ.. இப்ப நாத்தமா?..." என்று தன் மூக்கால் அவள் நாசி நுனியை சீண்டி கேட்க
"பிடிக்காம தான் இப்டி உங்கள ஓட்டிட்டு நிக்கிறனா..." அவளும் அவன் சட்டை பொத்தான்களை கழட்டிக் கொண்டே சொல்ல
"பின்ன என்னடி..." கேட்டபடி சட்டையை கழட்டி அவள் தோளில் போட
"அதுக்காக இப்டியே படுக்க ஏலாதுப்பா போய் மேல் கழுவிட்டு வாங்க..." என்று அவனை விரட்டிவிட்டாள்.
அவனும் "சரிடி துரத்தாத..." என்றவன் துவாயுடன் சென்று குளித்துவிட்டு வந்தான்.
அதன் பின் கணவன் மனைவிக்கான நேரமாக, உணவின் படையலின் பின் உணர்வின் படையிலாக சென்றது.
******
இங்கோ வாகீஷன் ஒரு வாய் உணவை நிராளினியின் வாயில் திணிக்க போராடிக் கொண்டிருந்தான்.
மற்றைய அறையில் கீழே பாயில் படுத்திருந்தவளை பூப்போல கைகளில் அள்ளிக் கொண்டு வந்து, அவர்களுக்கான அறை என அவன் முடிவு செய்து இருந்த அறையில், அப்போது தான் வாங்கி போட்ட கிங் சைஸ் கட்டிலில், தன்னவள் மென் தேகம் நோகாமல் மென்மையாக அவளை தாங்கிக் கொள்ள வேண்டும் என்று அவன் பார்த்து பார்த்து வாங்கிய மெத்தையில் அவளை கிடத்தினான்.
அவளிடம் இருந்து தூக்கத்திலும் சிறு முனகல்.
வரும்போது வாங்கி வந்திருந்த இடியாப்ப கொத்து பார்சல், தண்ணீர், ஷின் மாத்திரை என்று அனைத்தையும் அருகில் இருந்த ஸ்டூலில் வைத்தவன்,
நிராளினியை தயக்கமாக, முதுகில் கையை கொடுத்து தூக்கியவன், கட்டிலில் தான் அமர்ந்து கொண்டு, தன் நெஞ்சில் அவளை சாய்த்து கொண்டான்.
உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடி மறைந்து, இதயம் தாறுமாறாக துடித்தது. நிராளினி ஒரு பக்கமாக சாய்ந்து இருக்க, தன் இடது மார்பில் அவளை தாங்கி இருந்தவன், தன்னுள் இப்படி ஒரு மாற்றம் உண்டாகும் என்று எதிர்பார்க்கவில்லை.
அவன் அணிந்து இருந்த ஷர்ட்டின் முதல் இரு பட்டன்கள் திறந்து இருக்க, பெண்ணவள் இழுத்து விடும் சூடான மூச்சுக்காற்று ஆடவன் வெற்று மார்பில் சுருண்டு கிடந்த முடிகளை முத்தமிட்டு, சிலுப்பி விட்டது.
விழிகளை மெதுவாக மூடி அந்த ஏகாந்த தனிமையையும், அந்த இதமான உணர்வுகளையும் ஆழ்ந்து அனுபவித்தான்.
அவன் இழுத்து விட்ட உஷ்ண பெருமூச்சு, அவள் உச்சி முடிகளை ஒதுக்கிவிட்டு சென்றது. இப்படி ஒரு பொழுது எப்போது கிடைக்கும் என்று ஏங்கிக் கிடந்தவன் தான், ஆனாலும் முழுதாக ரசிக்க முடியவில்லை.
அவளாக அவன் மார்பில் சாயவில்லையே, மயக்கத்தில் இருப்பவளை இவனாக சாய்ந்து கொண்டான். இதில் காதலின் அறுசுவை எங்கிருந்து கிடைக்கும்.
அவளாக அவன் கண் பார்த்து, காதலில் கிறங்கி, அவன் மார்பில் தானாக சாய்ந்து கொள்ள வேண்டும் எப்போது நடக்கும் தெரியவில்லை.
நாளை அவள் கண் விழித்ததும் காலில் விழுந்தேனும் அவள் காதலை பெற்று விட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டவன்,
அரை தூக்கத்தில் இருந்தவளின் கன்னத்தில் "நிரா!.. நிரா..." என்று மெதுவாக தட்ட
"ம்ம்..." என்று அவளும் முனக, இடியாப்ப கொத்தை கொஞ்சம் கொஞ்சமாக, குருவிக் குஞ்சுக்கு ஊட்டுவது போல் ஊட்டியவன், அவள் மெல்லாமல் இருக்கும்போது கன்னத்தில் தட்டி என்று, பத்துவாய் உண்ண வைப்பதற்குள் ஒருபாடு ஆனாது வாகீஷனுக்கு.
பின் தண்ணீர் பருக கொடுக்கும் முன் மாத்திரை ஒன்றையும் கொடுத்து, தண்ணீர் பருக வைத்து, அவள் செவ்விதழை ஈரக் கையால் தென்றல் போல ஒற்றி எடுத்தான்.
மீண்டும் உடலில் மின்னல் வெட்டியது போல் ஜீவ்வென்ற உணர்வு. அவளை தன்னோடு அணைத்து பிடித்து இருந்த இடது கையில் அழுத்தத்தை கொடுத்து, தன்னுடன் மேலும் நெருக்கிக்கொண்டான்.
விழிகளை தாழ்த்தி அவள் மதிமுகத்தை பார்த்தான். நெஞ்சில் சுல் என்ற வலி, தன்னவளை தானே துன்பப்படுத்துவான் என்று அவன் கனவிலும் நினைத்தது இல்லை.
அவளின் ஒற்றை வார்த்தைக்காக சுதாகரனை தவிர வேறு யாருக்கும் தன் காதலி யார் என்று சொன்னது கிடையாது. அவளை பார்வையால் கூட தொந்தரவு செய்யக் கூடாது, தன் பெயர் கூட அவளை சங்கடப்படுத்தக் கூடாது என்று தானே கண்காணாத தேசம் சென்றான்.
இந்த எட்டு வருடங்கள் அவன் பட்ட கஷ்டங்கள், சேர்த்த செல்வங்கள் அனைத்தும் அவளுக்காக தானே.
அவள் முகத்தில் மகிழ்ச்சியை மட்டுமே பார்க்க வேண்டும், அவளின் சின்ன முகசூழிப்பை கூட தாங்க முடியாது என்று இருந்தவன், இன்று அவளின் விருப்பமே இல்லாமல் அவளுக்காக அவன் உருவாக்கிய காதல் கோட்டைக்கு கடத்தி வந்து விட்டான்.
தன் பிரியமானவள் அனுமதியே இல்லாமல் அணைத்து தன் நெஞ்சில் சாய்த்து வைத்திருக்கின்றான். இது எதுவும் அவன் ஆசைப்பட்டு செய்யவில்லை.
அவளை மீண்டும் பார்க்க போகும் அந்த நொடி...
அவன் அவளை தொடும் முதல் தொடுகை...
அவள் நாணத்தோடு விழி தாழ்த்தி நின்று இருக்க...
இவன் தயக்கமாக தன் கரம் நடுங்க, அவள் தளிர் விரல்களைப் பற்றிக் கொள்ளும் தருணம்...
இப்படித்தான் கற்பனை செய்து வைத்திருந்தான்.
ஆனால் இன்று நடந்தது வேறு. மெதுவாக தன் மார்பில் அவள் முதுகு உரச, சரித்து படுக்க வைத்தவன் அவள் தலையை தடவி, முன் உச்சியில் பட்டும் படாமல் இதழ் ஒற்றி எடுத்து "சொரிடா செல்லம்..." என்றவன் வெளியே வந்து ஹாலில் சோஃபாவில் படுத்துக்கொண்டான்.
இரவு உணவும் அவன் உண்ணவில்லை. மனதில் கலக்கம், குழப்பம், குற்ற உணர்ச்சி என்று நிரம்பி இருக்க பசி எப்படி வரும்.
தானும் ஒரு தங்கையுடன் பிறந்தவன், இன்று தான் நேசித்தவளுக்கு இழைத்தது இழிவான செயல் என்று தெரியும். வெறும் நேசமாக இருந்திருந்தால் நெஞ்சம் நோக தாங்கிக் கொண்டு விட்டு விலகி இருப்பானோ என்னவோ
ஆனால் அவள் அவன் உயிர் ஆயிற்றே எப்படி விட்டுவிட, துணிந்து தூக்கி விட்டான். தவறென்றே தெரிந்து செய்து விட்டு அலட்சியமாக இருக்க முடியவில்லை.
விழிகளை இறுக மூடி தொண்டையில் அடைத்த எச்சிலை விழுங்கிக் கொண்டு தூங்க ஆரம்பித்தான்.
*******
அடுத்த நாள் காலை நிராளினியின் அழுகுரலில் ஆரம்பிக்குமா இல்லை அவளின் பயந்த பதட்டமான குரலில் ஆரம்பிக்குமா என்று யோசனையாக தூங்கியவனுக்கு காலையில் எந்த சத்தமும் கேட்கவில்லை.
இரவு வெகு நேரம் தூங்காமல் இருந்ததால் தாமதமாகவே எழுந்தான் வாகீஷன். மணி ஏழரையை தாண்டி இருந்தது, இந்நேரம் மாத்திரையின் வீரியம் முறிந்து நிராளினி கண்விழித்து இருக்க வேண்டும்.
ஆனால் அறையில் இருந்து எந்த ஓசையும் வரவில்லை. ஒருவேளை இன்னும் எழுந்து கொள்ளவில்லையோ என்று நினைத்தவன், வேகமாக சென்று அறைக்கதவை திறக்க முற்பட அது உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது.
உள்ளுக்குள் திக் என்ற உணர்வு, உள் தாழ்ப்பாள் போட்டுள்ளது என்றால் நிராளினி தானே போட்டு இருக்க வேண்டும்.
அப்போ எழுந்து கொண்டாளா? கடத்தி வந்ததால் பயத்தில் கதவை பூட்டிக் கொண்டாளா?
இல்லை அடுத்து அடுத்து நிகழ இருக்கும் விரும்பத்தகாத சம்பவங்களை எண்ணி விபரீத முடிவு ஏதும் எடுத்துக் கொண்டாளா? உள்ளுக்குள் பதை பதைத்த இதயத்திற்கு எச்சிலைக்கூட்டி விழுங்கி அடக்க முயன்றான்.
அடங்குமா அவன் இதயம், உள்ளே அடைந்து கிடப்பது அவன் இதயராணியாச்சே. மெதுவாக கதவைத் தட்டி "நி..ரா...!" என்றான்.
குரவளையைத் தாண்டி சத்தம் வருவேனா என்றது. காற்றில் கரைந்த குரல் அவன் செவிகளையே சேரவில்லை, அவளுக்கு எங்கனம் கேட்கும்.
முயன்று தன் பதற்றத்தையும் பாசத்தையும் ஒன்று கூட்டி "நி..ரா நிரா! கதவ திற..." என்று அழைக்க
உள்ளே தரையில், கட்டிலின் காலில் சாய்ந்து அழுது கொண்டிருந்தவள் காதில் கேட்டாலும் பதில் வினை ஆற்றவில்லை.
அவள் தான் தன் வாழ்க்கையின் விதி மாறியதில் இடிந்து போய் அமர்ந்து இருந்தாளே. காலையில் 6:00 மணி போல் நிராளினிக்கு முழிப்பு தட்டியது.
கண்களை திறக்க முடியவில்லை சோர்வாக இருந்தது, தலை வின் வின் என வலித்தது. உடலை தூக்க முடியாத அளவுக்கு கனத்து தெரிந்தது. இருந்தும் மூடிய விழிகளுக்குள் நேற்று பிற்பகல் நடந்தது காட்சியாய் விரிய, திடுக்கிட்டு கண் விழித்து பதறி அடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.
லேசாக தலை சுற்றியது, ஒற்றை கையால் தலையை பிடித்துக் கொண்டவள், அவசரமாக முதலில் தன்னை ஆராய்ந்தாள்.
பின் அவள் இருக்கும் இடத்தை நிதானமாக உள்வாங்கிக் கொண்டாள். நல்ல விசாலமான அறை, பூச்சு இல்லாத சுவர்கள், அறையின் ஒரு ஓரம் கண்ணாடி கதவு பாத் ரூம் ஆக இருக்க வேண்டும் எண்ணிக்கொண்டாள்.
ஆள் உயர கண்ணாடியோடு ஆறடி உயரத்தில் மர அலமாரி,, அதன் அருகில் கண்ணாடி மேசை வேறு, நடுவில் கட்டில், அதன் அருகில் சின்ன ஸ்டூல், அதன் அருகில் காற்று குளிர்விப்பான் (Air Cooler) சாதாரண காற்றை உள்வாங்கி குளிர் காற்றை வெளி வீசிக் கொண்டிருந்தது.
அறை கதவு மூடப்பட்டு இருக்க, தன்நிலையை எண்ணி மனதில் குளிர் பரவ, விரைத்து திமித்த கால்களை மெதுவாக நிலத்தில் வைத்து, முதலில் எழுந்து சென்று கதவை திறக்க முயன்றாள்.
கதவு வெளி பக்கமாக பூட்டப்பட்டு இருக்க, இரண்டு மூன்று முறை முயன்றவள் "ச்சே!..." என்று அழுகையுடன் சலித்துக் கொண்டாள்.
பின் ஏதோ தோன்ற உள்பக்கம் தாழ்பாளை போட்டுவிட்டு, கண்களை மூடி கதவிலேயே சாய்ந்து நின்றாள்.
யார் இவன்! எட்டு வருடங்களுக்கு முன் தன்னிடம் தயங்கி தயங்கி வந்து காதலை சொன்னவன், இன்று இப்படி அதிரடியாக கடத்தி வந்து சிறை வைத்து, தன் எதிர்காலத்தை சிதைத்து விடுவான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.
அவள் அறிந்தோ அறியாமலோ, ஓர் இரவு ஒரு ஆணுடன் கழித்து இருக்கின்றாள். இதன் பின் என்னவாகும் நன்கு தெரியுமே. தன் தாய், தந்தை, தமையன் எல்லாவற்றுக்கும் மேல் பிரதீபன் அனைவரையும் நினைக்க நெஞ்சு அடைத்தது.
இதன் பிறகு அவள் எதிர்கொள்ள போகும் விளைவுகளை நினைக்க நிலை கொள்ளவே முடியவில்லை.
தளர்ந்த நடையுடன் கட்டிலின் அருகே வந்து, நிலத்தில் அமர்ந்து கண்ணீர் உகுத்தாள். ஒரு பெண்ணாக அவள் இனிமேல் எதிர்கொள்ளப் போகும் பிரச்சனைகள் சாதாரணமானவை இல்லை என்றாலும் தற்கொலை செய்து கொள்ளும் கோழையான முடிவை எல்லாம் அவள் யோசிக்கவில்லை.
*****
இங்கோ சுதாகரன் வீட்டில் மனைவியின் குறுகுறு பார்வைக்கு பதில் சொல்ல வேண்டுமே என்று 50 மில்லிலிட்டர் தேநீரை அரை மணி நேரமாக உறிஞ்சி கொண்டிருந்தான் சுதாகரன்.
கீர்த்தனாவோ பொறுமை இழந்தவள் "சுதாப்பா அந்த தேத்தண்ணீ ஆறி குளுந்து போச்சு.. தொண்டைக்க இருக்கிறத முழுங்கிட்டு விஷயத்த சொல்லப் போறேயளா, இல்ல அம்மா வீட்டுக்கு போறீங்களா!..." என்று அதட்டலாக கேட்க
'ஆஹா அடிமடியிலேயே கைய வைக்கிறாளே...' என்று மனதில் பதறியவன்
"என்னடி பொசுக்குன்னு துரத்தி விட பாக்குற..." என்று கேட்க
"கட்டின மனிசிக்கு தெரியாம கள்ள வேலை பண்ணுனா வேற என்ன செய்வாங்களாம்..." என்று விடாமல் அவள் சண்டை கட்ட
'அய்யய்யோ ஏதோ திருட்டுத்தனம் பண்றேன்னு நினைச்சு இந்த அளவுக்கு சொல்றாளே.. இவள்ட பிரண்ட கடத்த உதவி இருக்கேன்னு சொன்னா விவாகரத்து தான் போல...' என்றும் மனதில் அலறியவன்
வெளியில் பீதியை காட்டாமல் கையில் இருந்த தேநீர் குவளையை கீழே வைத்தவன், மனைவியின் கைகள் இரண்டையும் பற்றி தன் கைக்குள் வைத்துக் கொண்டவன்
"நான் உனக்கு தெரியாம என்ன செய்யப் போறேன்.. ஆனா நேத்து பண்ணுனத உன்னுட்ட உடனே சொல்ல ஏலல.. இப்போ சொல்றேன் கோபப்படாம அமைதியாக கேளு.. அதே சமயம் நம்மளும் காதலிச்சு கல்யாணம் கட்டுனோம் என்றத மனசுல வெச்சு யோசி..." என்று முதலிலேயே பலமான பீடிகை போட்டவன்
"வாகீ எட்டு வருஷமா ஒரு பெட்டைய லவ் பண்றான்னு தெரியுமில்ல..." என்று கேட்கவும் புருவம் சுருங்க ஆம் என்று தலையை ஆட்டினாள் கீர்த்தனா
பின் அவளே "அது நிராளியா?..." என்று கேட்கவும்
திகைத்த சுதாகரன் "எப்டி தெரியும்?..." என்று கேட்க
"ம்க்கும் நிராளிக்கு கல்யாணம் என்டதும் நீங்க என்னுட்ட ஃபோன் போட்டு அவள்ட சம்மதத்தோட தான் கல்யாணம் நடக்குதான்னு கேட்க சொன்னது.. அடுத்த அஞ்சாவது நாளே வாகீ அண்ணா ஊருக்கு வந்தது.. நேத்து திரும்பத் திரும்ப அதையே கேட்டு வாடிப்போன அவரோட முகாம்னு எல்லாம் எனக்கு தெரிஞ்சு தானே நடந்தது.. ஒன்னும் ஒன்னும் ரெண்டுனு கணக்கு போட தெரியாதா என்ன..." என்றவள்
தொடர்ந்து "அதுதான் நேத்து அண்ணாக்கு ஆறுதலா துணையா இருந்தீங்களா.. வாகீ அண்ணா பாவம் சுதாப்பா.. ஒரு பெட்டைக்காக இவ்ளோ பண்றாரு அந்த புள்ள குடுத்து வச்சவள்னு நினைச்சேன்.. ஆனா நிராளிக்கு குடுத்து வைக்கல போல..." என்று கவலைப்பட
"அப்போ வாகீயும் நிராளியும் ஒன்னு சேந்தா நீ சந்தோஷப்படுவியா!..." என்று சுதாகரன் கேட்க
"பிறகு அண்ணாவோட காதல நினைச்சு நானே மலச்சி போயிருக்கேன்.. அது நிராளியா இருக்குறப்போ சந்தோஷம்தான்.. ஆனா அவளும் விரும்பணுமே, அவளுக்கு அண்ணா மேல காதல் இல்லையே.. எனக்கு அண்ணாவ நினைக்கும் போதே கவலையா இருக்கு.. ஆனாலும் விரும்பாதவள கட்டாயப்படுத்தவா ஏலும், எப்டியாவது அண்ணாவ இதுல இருந்து வெளியே கொண்டு வர முயற்சி பண்ணுங்கப்பா..." கீர்த்தனா நியாயமாக பேச
சுதாகரனுக்கு நெஞ்சில் நீர்வற்றி போனது. தானும் தன் நண்பனும் பிடிக்காத பெண்ணை கடத்தி வந்த விடயம் தெரிந்தால் என்ன செய்வாளோ என்று திகிலாகவே இருந்தது.