அத்தியாயம் 01
கருங்கொடிதீவு கண்ணகி அம்மன் கோயில் வளாகம். ஐயா அம்மனுக்கு அர்ச்சனை செய்து தீபாராதனை காட்ட, அம்மன் சன்னதி முன்பு பயபக்தியுடன் கைகூப்பி நின்றனர் தேவராசா ஜெயந்தி தம்பதியினர்.
பூஜை முடிய சில்வர் தட்டில் பழங்கள், தேங்காய், வெற்றிலை பாக்கு, பூக்கள் இருக்க, அதற்கு மேல் கல்யாண பத்திரிக்கை இருந்தது. மணமகன் பிரதீபன், மணமகள் நிராளினி.
அந்த தாம்பலத்தை எடுத்து வந்து தேவராசாவிடம் ஐயா நீட்ட, அதை இரு கைகளால் தொட்டு கும்பிட்டு, தன் மகளின் திருமணம் எந்த இடையூறும் இன்றி இனிதே நடைபெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, வங்கிக் கொண்டனர்.
சந்தன பொட்டு, குங்குமம் வைக்கப்பட்டு மங்களகரமாக இருந்த தன் மகளின் திருமண அழைப்பிதழை எடுத்து ஆசை தீர பார்த்தார் ஜெயந்தி. "பாத்தது போதும் வா!.. அந்த கெரியன் சிடுசிடுனு இருப்பான்..." என்றவாறு முன்னே நடந்தார் தேவராசா.
கோயில் வாசலில் கருப்பு நிற காரில் அமர்ந்து இருந்தான் அவரின் முதல் வாரிசு நிரஞ்சன். தங்கையின் திருமண அழைப்பிதழை முதல் முதலில் கோயிலில் பூஜை செய்து வாங்க வேண்டும் என்று சொல்ல, பெற்றவர்களை அழைத்து வந்தவன் உள்ளே செல்லவில்லை.
அதற்காக கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்று சொல்லிவிட முடியாது. அதேசமயம் நீண்ட நேரம் நடக்கும் பூஜையை பக்தியுடன் பார்க்கும் பொறுமையும் இல்லை, அதனால் கார்லயே அமர்ந்து விட்டான்.
பெற்றவர்கள் வந்து காரில் ஏறிக்கொள்ள, அவன் பொழுதை ஆக்கிரமித்து இருந்த ஃபோனை ஓரமாக வைத்து விட்டு காரை எடுத்தான். பெற்றவர்களை வீட்டில் விட்டவன் நேராக சென்றது உதயம் சூப்பர் மார்க்கெட்டிக்கு தான்.
தேவராசா காலத்தில் ஒரு சாதாரண ஹோல்சேல் கடையாக ஆரம்பித்து, அவர் அதை இரண்டு மாடி கட்டிடமாக பெரிதாக்கி, கருங்கொடிதீவு மார்கெட் என்றால் உதயம் ஹோல்சேல் கடைதான் என்று பெயர் சொல்லும் அளவிற்கு மெருகேற்றி இருந்தார்.
கருங்கொடிதீவில் இருக்கும் பெரிய கடையில் இருந்து சிறிய கடை வரை உதயத்தில் தான் பொருட்கள் வாங்கி விற்றனர். அதிகப்படியான வருமானத்தை மரமில் அரிசிமில் என்று வாங்கி போட்டு தொழிலை விரிவு படுத்தினார்.
நிரஞ்சன் வளர்ந்த பிறகு ஹோல்சேல் கடையை தன்வசமாக்கிக் கொண்டான். கட்டிடத்தை நான்கு மாடியாக உயர்த்தி, இரண்டாக பிரித்து ஒரு பகுதி (ஹோல்சேல்) மொத்த விற்பனைக்கும், மற்றைய பகுதியை சூப்பர் மார்க்கெட்டாகவும் மாற்றி அமைத்தான்.
இலங்கையின் பிரபல்யமான பூட் சிட்டியும் சதோஷவும் இருக்க, நிரஞ்சன் அந்த இரண்டையும் கலந்தது போல் ஆடம்பரமாகவும் வசதியாகவும், தரமான பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்ய, உதயம் சூப்பர் மார்க்கெட் ஒரு வருடத்துலயே மிகவும் பிரபலமானது.
நிரஞ்சன் தேவராசா ஜெயந்தியின் மூத்த வாரிசு. வயது 29. ஒலுவில் யுனிவர்சிட்டியில் பி . ஏ டிகிரி முடித்து விட்டு அரசாங்கம் தரும் வேலையை எதிர்பார்க்காமல் தந்தையின் தொழிலை திறன் பட நடத்தி வருகிறான். அவனுக்காக லாவண்யா என்ற பெண்ணை பேசி முடித்தாயிற்று.
அவனோ தனது ஒரேயொரு தங்கை நிராளினியின் திருமணம் முடிந்த பிறகு தான் தனது திருமணம் என்று கூறி விட்டான்.
நிராளினி சாந்தமான அழகி, பௌர்ணமி நிலவு போல் பாலில் மஞ்சள் கலந்த தேகம். சுருள் கேஷம் ஆனால் இடைவரை நீண்டு தொங்கியது, வட்ட முகம் நீண்ட பெரிய கண்கள், செம்பவள இதழ்கள் சிரிக்கும் போது தானாக விழும் கன்னக்குழி அளவான உடல்வாகு, அமைதியான பெண்மயில்.
நிராளினியும் நன்கு படித்து முடித்து, இப்போது விவேகானந்தா வித்தியாலயத்தில் தமிழ் ஆசிரியையாக பணி புரிகின்றாள். வயது 26 , பெற்றவர்களே வரன் பார்த்து பிரதீபனை முடிவு செய்தனர். அவர்கள் எதிர்பார்ப்பிற்கும் வசதிக்கும் சற்று பொருந்தி போனது அவன் தான்.
கல்முனை நீதி மன்றத்தில் லாயராக பணி புரிகின்றான். படித்த வசதியான நாகரீகமான எந்த கெட்ட பழக்கவழக்கங்களும் இல்லாத நல்லவன், பிரதீபன் நிராளினி இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்த்து பிடித்து போக, நாள் பார்த்து திருமண வேலைகள் துவங்கி இருக்க, இன்று திருமண அழைப்பிதழும் வந்து விட்டது.
இன்னும் ஒரு மாதத்தில் திருமணம். இனி சொந்த பந்தம், நண்பர்கள், அயல் அட்டை எல்லோருக்கும் அழைப்பிதழ் வைக்க வேண்டும்.
பாடசாலை முடிந்து தனது ஸ்கூட்டியில் வந்து இறங்கினாள் நிராளினி. உள்ளே வந்த மகளிடம் "வாடி!.. முகத்த கழுவிட்டு வா!.. டீ ஊத்துறன்..." என்றார் ஜெயந்தி.
சரி என்று தலையாட்டி விட்டு உள்ளே சென்று, அணிந்து இருந்த புடவையை கழட்டி போட்டவள் வீட்டில் போடும் குடை வெட்டு சட்டை ஒன்றை போட்டுக் கொண்டு, கையில் ஃபோனுடன் வெளியே வந்து, டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டாள்.
ஜெயந்தி பால் தேநீருடன் சாக்லேட் கேக் துண்டுகளும் கொண்டு வந்து கொடுத்தார். பாடசாலையில் கற்பிக்கும் நேரம் ஃபோன் பாவிக்க மாட்டாள். எதுவாக இருந்தாலும் இடைவேளை நேரம் எடுத்து பார்ப்பாள்.
அதன் பின் வீட்டிற்கு வந்த பிறகுதான். இப்போது புலனியில் தனக்கு வந்த குறுஞ்செய்திகளை பார்த்துக் கொண்டு, தேநீரை வறண்ட தொண்டைக்கு இதமாக அருந்தினாள்.
"நிராளி கல்யாண காட்டு வந்துட்டு.. பாக்குறியா?..." என்று ஜெயந்தி கேட்க
"ஓம்.. எங்க எடுத்துட்டு வாங்க?..." என்றாள். அவளும் பிரதீபனும் தேர்வு செய்த அழைப்பிதழ் தான். ஆனால் தனது பெயரையும் தன்னவனாக வரப்போறவனின் பேரையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல்.
அந்த காட்டை ஏற்கனவே நிரஞ்சன் ஃபோட்டோ எடுத்து அனுப்பி இருந்தான். அவளும் இடைவேளையின் போது மென்புன்னகையோடு பார்த்தாள் தான். ஆனாலும் நேரில் கையில் தொட்டு, கண்களில் நிரப்பி கொள்வதைப் போல் வராதே.
ஜெயந்தி திருமண அழைப்பிதழை எடுத்துக் கொடுக்க, ஆசையாக கையில் ஏந்தி திறந்து பார்த்தாள். தங்க நிறத்தில் பச்சை வண்ணத்தில் பிள்ளையார் படம், சுற்றிலும் பச்சை நிறத்தில் பட்டு சாரியின் வேலைப்பாடு போல் வெல்வெட் துணியால் டிசைன்.
உள்ளேயும் அதே போன்ற வேலைப்பாடு, மணமகன் பிரதீபன், மணமகள் நிராளினி என அவர்கள் பட்டத்தோடு பெரிதாக ஜொலித்தது அழைப்பிதழ். ஆசையாக அதை வருடினாள்.
ஜெயந்தியோ "உனக்கு தேவையான காட்ட இப்பவே எடுத்து வச்சுக்க.. பிறகு போதாம வந்துடும்..." என்று சொல்ல, சரி என்று தலையாட்டியவள் சிறு புன்னகையுடன் தனது அறைக்கு சென்று பிரதீபனுக்கு மெசேஜ் அனுப்பினாள்.
(ஓய் லாயர் சேர் எனக்கு அத்தானாக தயாரா) என்று கேட்க
அவனது அலுவலகத்தில் இருந்தவன் அவள் மெசேஜை பார்த்துவிட்டு (ஓம் டீச்சர்.. நீங்க எனக்கு மச்சாளாக தயாரா) என்று கேட்டான்.
உடனே கல்யாண அழைப்பிதழை அவனுக்கு அனுப்பி (தயார் தான்னு ஊருக்கே சொல்லப் போறேன்) என்றாள்.
அவனும் (காட் எனக்கும் கிடைச்ச.. பாத்ததும் இப்பவே தாலி போடணும் போல தோணுது..) என்று அனுப்பி இருந்தான்.
(ஊர கூட்டி தாலி போடாம.. தனியா போட்டு தள்ளிட்டு போக பார்க்கிறீங்களோ..) என்று அவள் அனுப்ப
(என்ன கதைக்கிற விசர் கதை.. படிச்சவ தானே நீ.. தள்ளிட்டு போறன்னா என்னன்னு தெரியுமா..) என்று அவன் கோபமாக அனுப்ப
(சொரி சொரி நான் அப்படி கதைக்கல..பகுடிக்கு சொன்னேன்) என்று நிராளினி அனுப்ப
அவனுக்கும் புரிந்தது சட்டென சூடான தன் குணத்தை நொந்து கொண்டவன் ஃபோனில் அழைத்திருந்தான். அழைப்பை ஏற்றவள் பேசவில்லை, அழுகை வரும் போல இருந்தது.
"ஹலோ டீச்சர்!..." என்றான் முயன்று மென்மையாக
அவள் விசும்ப "நிராளி சொரி.. அவசரப்பட்டுட்டேன்.. கதைடி..."
"ம்ம் சொல்லுங்க..." என்றாள் குரலில் சுருதியே இல்லாமல் இது எப்போதும் நடப்பது தான் நிராளினியால் பிரதீபனிடம் இலகுவாக பேச முடிவதில்லை.
இவள் சாதாரணமாக உதிர்க்கும் வார்த்தைகளை கூட தீவிரமாக எடுத்துக் கொண்டு சட்டென கோபப்படுவான், பின் சமாதானம் செய்வான்.
அப்படியே சிறிது நேரம் கல்யாண கனவுகள் பற்றி பேசிவிட்டு அழைப்பை துண்டித்தனர். அதன் பின் வேலைகள் துரித கதியில் நடந்தன. இரு வீட்டாட்களும் திருமண அழைப்பிதழை ஊர் முழுதும் வைத்தனர்.
நிராளினி பாடசாலை நேரம் தவிர மற்ற நேரங்களில் தனக்கான வேலைகளை பார்த்தாள். இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டது, இரண்டு லட்சத்துக்கும் மேல் பெறுமதியான முகூர்த்தப்பட்டு, அதற்கான பிளவுஸ்சை ஆரி ஒர்க் செய்து அழகாக தைக்க வேண்டும் என்று, முன்னரே ஒரு பியூட்டி பார்லர் வைத்திருக்கும் பெண்ணிடம் கொடுத்து விட்டாள்.
நிராளினியின் மொத்த அலங்காரமும் அவர்களே பார்த்துக் கொண்டனர். 15 நாட்களுக்கு ஒரு தடவை கோல்டன் பேசியல் செய்ய வேண்டும் என்று அங்கும் சென்று வந்தாள்.
அந்த சமயம் தான் நிராளினி பிரதீபன் திருமண அழைப்பிதழ் சுதாகரன் என்பவன் வீட்டிற்கும் வந்திருந்தது. அழைப்பிதழை ஒரு நொடி புருவம் சுருக்கி பார்த்தவன் தன் மனைவி கீர்த்தனாவிடம் "இது உன்னோட படிச்ச நிராளினியா?..." என்று கேட்க
"ஓமம் அவள் தான்.. வார மாசம் கல்யாணமாம்.. காட்டு தந்துட்டு போனாள்.. எங்க செட்டுலேயே கடைசியா கல்யாணம் கட்ட போறது அவள் தான்..." என்று சொல்ல
அதைக் கேட்ட சுதாகரனுக்கு ஆத்திரத்தில் ரத்தம் கொதித்தது. மனைவியிடம் எதையும் காட்டாமல் தனியாக வந்தவன், தனது ஃபோனிலிருந்து குவைத்துக்கான அழைப்பை எடுத்தான்.
அந்த பக்கம் சிகப்பு நிற கயிறு கட்டிய ஒரு உரம் ஏறிய கை அலைபேசியை எடுத்து, அழைப்பை ஏற்றது.
தனது கணீர் குரலில் "சொல்லுடா மச்சான்.. அவள் சுகமா இருக்காளா?..." என்று தான் முதலில் கேட்டான்.
"அவள்ட சுகத்துக்கு என்ன.. சுகமா சந்தோஷமா, தன்ட கல்யாண வேலைய பார்க்கிறாள்..."
சில நிமிடம் அந்த பக்கம் மௌனம்.
சுதாகரன் காதில் இருந்த ஃபோனை எடுத்து அவன் அழைப்பில் இருக்கின்றானா என்று பார்த்துவிட்டு,
"டேய் மச்சான்..." என்று அழைக்கவும்
"அவள்.. சுகமா இருக்காள்ல்ல..." என்றான் அந்தப் பக்கம் இருந்தவன் மீண்டும்.
இம்முறை குரலில் ஒரு நடுக்கம். இப்போது சுதாகரனுக்கு கண்கள் கலங்கும் போல் இருந்தது.
அந்த பக்கம் இருப்பவனின் பேச்சு, மூச்சு எல்லாம் அவள் தானே. ஆனால் அவள் இவன் நினைப்பே இல்லாமல் திருமணத்திற்கு தயாராகி விட்டாள்.
"வாகீ!.. அவள் சுகமா இருக்காள்.. வார மாசம் அவளுக்கு கல்யாணமாம்.. கார்ட் தந்துட்டு போயிருக்காள்..." என்று அமைதியாக சொன்னான்.
விழி மூடி, தொண்டைக்குழி ஏறி இறங்க எச்சிலைக்கூட்டி விழுங்கியவன் "நான் உடனே ஊருக்கு வாரேன்.. தங்கச்சிட்ட சொல்லி அவளின்ட விருப்பத்தோட தான் எல்லா ஏற்பாடும் நடக்குதான்டு கேட்கச் சொல்லு..."
"கேட்க சொல்றேன்.. ஒருவேள அவளின்ட விருப்பத்தோட தான் எல்லாம் நடக்குதுன்டா என்ன பண்ணேலும்..."
"அதுக்கு வாய்ப்பே இல்லடா.. அவள் என்ட நிரா.. இந்த வாகீசனோட நிரா.. பாவம்டா என்னுட்ட எப்டி தொடர்பு கொண்டு சொல்றதென்டு தெரியாம தவிச்சிருப்பாள்.. வேற வழி இல்லாம தான் சம்மதம் சொல்லி இருப்பாள்.. நான் அவள் முன்னாடி போனா போதும் என்ட கைய புடிச்சிட்டு என்னோடையே வந்துருவாடா..."
"என்னமோ போ!.. நீ முதல்ல ஊருக்கு வா.. அவள் சொன்ன ஒத்த சொல்லுக்காக நாடு கடந்து போய் அனாத மாதிரி வாழுற.. அவள் இங்க சந்தோஷமா கல்யாணத்துக்கு தயாராகுறாள்..."
" டேய் நான்தான் சொல்றேனே.. கட்டாயத்துனால சம்மதிச்சிருப்பாள்.. அவள பத்தி தப்பா கதைக்காத..." என்று வாகீஷன் சொல்ல
இரண்டு நாட்களுக்கு முன் கூட சுதாகரன் பார்த்தானே, சிரித்து பேசி சந்தோஷமாக இருந்தாளே, அந்த முகத்தில் மருந்துக்குகூட வாட்டம் இல்லையே.
அதைவிட வாகீஷனிடம் தகவல் சொல்ல வேண்டும் என்று நினைத்து இருந்தால் எத்தனையோ வழிகள் உள்ளனவே. யாரிடமும் அவள் விசாரித்ததாக தெரியவில்லை. ஏன் சுதாகரனின் நண்பன் என்று தெரியுமே, தன்னிடம் கூட இந்த எட்டு வருடங்களில் எதுவும் கேட்டதில்லை.
வாகீஷன் சொல்வதை முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாவிடினும் "சரி மச்சான்.. நீ பத்திரமா ஊர் வந்து சேரு.. மத்த கதைய பிறகு பாக்கலாம்..." என்றவன் அழைப்பை துண்டித்தான்.
சுதாகரனின் அழைப்பு துண்டிக்கப்படவும், பாடசாலை கலைவாணி விழாவில் சகலகலாவல்லி மாலை பாடி கொண்டிருக்கும்போது, பள்ளி நிர்வாகத்தினால் எடுக்கப்பட்டு, முகப்புத்தகத்தில் ஏற்றப்பட்ட நிராளினியின் புகைப்படம் மின்னியது.
எப்போதும் போல் இப்பவும் அதை புதிதாக பார்ப்பது போல் அவன் கண்கள் ரசித்தது. அவன் இறுதியாக பார்க்கும்போது 18 வயதில் சின்ன சிட்டாக இருந்தவள் இப்போது 26 வயது பேரிளம் பெண்ணாக இருந்தாள்.
""உங்கட எல்லா கடமைகளையும் முடிச்சிட்டு இதே காதலோட திரும்பவும் வாங்க.. உங்களுக்காக நான் காத்திருக்கேன்..."" என்று அன்று அவள் சொன்ன அந்த வார்த்தைகள் தான் இன்று வரை அவனை உயிருடன் உலாவ ஊட்டம் அளிக்கின்றது.
அன்று அவன் அவள் மீது வைத்த அதே காதலா! அதைவிட பல நூறு மடங்கு அதிக காதலுடன் தாயகம் திரும்ப தயாரானான்.