- காண்டீபனை திரும்ப கொண்டு வந்ததுக்கு இறுக்கி அணைச்சு ஒரு உம்மா கன்னத்துல
மிக்க மிக்க நன்றியும் அன்பும்மா
- குழந்தை மாதிரி அக்கா நீங்க
அதை எழுத்திலும் காட்டலாமே அக்கா
எப்போ பார் Feeeel Gooooood எழுதி எங்கள எல்லாம் இப்படி சிரிக்க வெச்சுட்டே இருக்கலாமா
So plz consider.. One Just feel good. Next your style Feel feel good
டீல் ஓகே 
ஹாஹா மிக்க நன்றிமா. ஆனா என்னை குழந்தை மாதிரி எண்டெல்லாம் நம்பாதீங்க. நான் கொஞ்சம் பொல்லாதவளும்தான்.
ஆனா நீங்க சொன்ன ஃபீல் குட் கட்டாயமா யோசிக்கிறேன். இப்ப கொஞ்ச நாள்களா அப்பிடியான கதைகளும் எழுதோணும் என்கிற ஆசை எனக்கும் இருக்கு.
- நான் ஆரெண்டு கண்டுபிடிங்கோ பார்க்கலாம்..???
எனக்கு தெரியாதே
- உங்களுக்கான எனதுஅன்பு எனது குடும்பத்திற்கு இனையான எனது நிகழ்வுடன் மகிழ்வுடன் கவிதாபாஸ்கரன்
மிக்க மிக்க நன்றியும் அன்பும் சிஸ். உண்மையாவே மிகவும் நெகிழ்ச்சியா இருக்கு.
- ஹாய் நிதா. எனக்கு உங்க ஹீரோல செந்தூரனை மிகவும் பிடிக்கும். துளி பிழை காண முடியாத, காதலியை எதற்கும் யாருக்காகவும் விட்டுத்தராத உண்மை அன்பு அவன். அவனைப் போல ஹீரோக்கள் உங்கள் கதைகளில். திரும்ப எதிர்பார்க்கிறேன்.
கட்டாயமா அக்கா. எனக்கும் எழுத ஆசை. கரு கிடைக்கட்டும். எழுதுறேன்
- நீ தந்த கனவு ஆட்டநாயகனாக கதைகள் இதற்கு மூன்றாவது பாகம் வருமா ...கதிரவன் கதை எப்ப வரும் ....அடுத்த கதையாக எந்த கதை கொடுக்க போறீங்க.....எப்ப கொடுக்க போறீங்க சிஸ்
ஆட்டநாயகனுக்கு முற்று முழுதா முடிவு போட்டாச்சு. இனி வர மாட்டான். இதுவே கிட்டத்தட்ட ரெண்டு பார்ட் கதை. 70000 சொற்கள் எழுதி இருக்கிறன்.
ஆனா, கதிரவனுக்கு மாதவனுக்கு கதைகள் தனித்தனியா வரும்.
- 1.இந்த கேள்வி ஆட்ட நாயகன் நீங்க நினை த்த மாதிரி முழுமையான எழுத முடிந்ததா? 2. ஒரு கதை யின் கரு இதுதான் முடிவு பண்ணிய பிறகு , அதை மாற்றுவதற்கான அழுத்தம் உங்களுக்கு வந்ததா? அப்படி வந்தா? அதை எப்படி எதிர் கொள்வீர்கள?3. நீங்க மர்ம கதை முயற்சிக்கவில்லை 4,கதை outgoing சமயத்தில் வாசகரின் எதர்மறை கருத்துகளுக்கு, உங்களின் மனநிலை என்னவாக இருக்கும்5.திரும்ப ஆன்டிஹீரோ கதை எப்போ வரும்
1.ஆட்டநாயகனில் நடுவில் சின்ன மாற்றம் செய்தேன். ஆனா எனக்குப் பிடிச்ச மாற்றம்தான் அது. அப்படி மாற்றியதால்தான் அதை வாசித்தவர்களுக்கும் எழுதிய எனக்கும் இந்த திருப்தி கிடைச்சிருக்கு என்று நினைக்கிறேன். அது என்ன எண்டு கேட்டுடாதீங்க, ப்ளீஸ். சோ, மனதுக்கு நிறைவா பிடிச்ச மாதிரி எழுதி முடிச்சிருக்கிறன்
2.நீ தந்த கனவுக்கு அழுத்தம் வந்ததுதான். ஆனாலும் முடிவை நான் மாத்த இல்ல. அதே நேரத்தில நான் நினைச்சதுதான் சரி எண்டு இருக்கிறதும் இல்லை. என் மனமும் ஒப்பி, இதை மாற்றினால் நன்றாக வரும் என்று என் மனமே சொன்னால் மாத்துவேன். ஆட்டநாயகனில் அப்படி ஒரு மாற்றம் செய்தேன்.
3. மர்ம கதையா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே முமென்ட். கரு அமைந்தால் கட்டாயம் பாக்கிறேன்
4. எதிர்மறை கருத்துக்கள் : கதையின் போக்குல நான் தெளிவா இருக்கிறதால அது பெருசா என்னை பாதிக்கிறது இல்லை. இல்லையா அவங்க எந்த கோணத்தில் அதை பாக்கிறாங்க எண்டு யோசிச்சு பாத்திட்டு விட்டுடுவேன். அதுல நியாயம் இருக்கா எண்டு பாப்பேன். இல்லை எண்டு நான் நினைச்சா அதைப்பற்றி மேல யோசிக்கிறது இல்லை. இதையும் தாண்டி அதை மைண்டுக்க எடுத்தா என்னால கதை அடுத்து எழுத முடியாது.
எல்லாவற்றையும் விட முக்கிய விஷயம் அனுபவம். பெரும்பாலும் என் எல்லா கதையும் விமர்சனங்களுக்கு உள்ளாகிறதால அப்பிடியான கமெண்ட்ஸ்ஸ இயல்பா எடுக்கிற அளவுக்கு என் மனநிலை வந்திட்டு எண்டு நினைக்கிறன்
5. நீங்க கௌசிய ஆன்டி ஹீரோவா நினைச்சு இந்தக் கேள்வி கேக்கிறீங்க எண்டு நினைக்கிறன். எழுதேக்க அவன் ஆன்டி ஹீரோ எண்டெல்லாம் எனக்கு தெரியாது. பணச்செழுமைலயே வளந்து, தான் நினைச்சதை எல்லாம் நடத்தியே வாழ்ந்து, நேர்மை நியாயம் எண்டு எதையும் பாக்காத, நான் எண்டு நெஞ்சை நிமித்திக்கொண்டு நிக்கிற ஒருத்தனும், நேர்மை, நியாயம், ஒழுக்கம் என்று வாழும் ஒருத்தியும் சந்திக்கும் கதை எண்டுதான் அதுக்கு அப்ப அவுட்லைன் போட்டு வச்சேன். அவன் இப்பிடி வந்து நிற்பான் எண்டு எனக்குத் தெரியாது.
அதே மாதிரியான ஒரு மேஜிக் தானா நடக்கட்டும். அப்ப வரும்.
- சிசிர காண்டிபன் இருவரும் நீங்கள் எழுதியதில் இருந்து என்னை மிகப்பெரிய துன்பத்தில் தள்ளியவர்கள் ஆனால் இப்போது நிம்மதியாக மூச்சுவிடுகிறேன் .நன்றி நிதாமா
மிக்க மிக்க நன்றியும் அன்பும்மா
- காண்டீபனை ரொம்ப மிஸ் பண்ணுவேன் அவன் வந்தது ரொம்ப சந்தோஷம் இருந்தாலும் அவன் இவ்வளவு கஷ்டம் பட வேண்டுமா இது உண்மை கதையின் பிம்பம் என்று சொல்லி உள்ளீர்கள் இருந்தாலும் அவனுக்கு இப்படி நடந்து இருக்க வேண்டாம் கதையா இருந்தாலும் அதை நினைக்கையில் மனசு வலிக்குது
நான் தான் தேன் மொழி
- உங்களுடைய கதைகளில் நட்பு ,நண்பர்கள் பற்றி நீங்கள் எழுதுவது மிகவும் அருமையாகவும்,படிப்பதற்கு இனிமையாகவும் இருக்கிறது.இது எதனுடைய தாக்கம்?சொந்தவாழ்வில் உங்களுக்கு கிடைத்திருக்கும் நண்பர்களினாலா.?
எனக்கு ஒரு உயிர் நண்பன் இருந்தான். இண்டைக்கு அவன் உயிரோட இல்லை. பெயர் கீர்த்திவாசன். அவன் நினைவாத்தான் என் முதல் கதையில் மதிவதனியின் உற்ற நண்பனாக அந்தப் பெயரை வைத்தேன். அந்தத் தாக்கமாக இருக்கலாம்.
வில்லி பெயரா வச்சு எழுதுறேன் பேத்தி.
- நீங்க எழுதற தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் .. ஆனா சாதாரண நடைமுறையில் அதாவது தமிழ் நாட்டில் பேசற தமிழில் கதை எழுத முடியுமானு பார்க்க ஆசை... நிறைவேறுமானு நீங்க தான் சொல்லனும்
ஏகன் கதைல டயானாக்கு தமிழ் நாட்டு பேச்சு வழக்கு எழுத மிகவும் திணறினேன். எதையாவது பிழையா எழுதி வாசகர்களின் அதிருப்திக்கு ஆளாகக் கூடாது எண்டு நினைப்பேன். ஆனா விருப்பம் இருக்கு. கரு, கதை, காலம் எல்லாம் சரியா வந்தா எழுதுறேன்.
- Hai mam... How are you? Aatanayagan story really awesome...especially vasu to kaandi transform chance less... Mam ipo novel competition la "STN-117 "ithu kathal kaviyam" story nala iruku...enaku inthu read panum pothu unga story mari feel achu...nalla deep pana concept..inum konjam emotions connect agi irukalam...nala story mam... Unga story epovum lively ya irukum...enoda stress buster unga writing keep going on mam...take care..
மிக்க மிக்க நன்றிமா.
அப்பிடியா?

