• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தேத்தண்ணி வித் நிதா(2026) - ஆட்டநாயகன்

நிதனிபிரபு

Administrator
Staff member
  1. காண்டீபனை திரும்ப கொண்டு வந்ததுக்கு இறுக்கி அணைச்சு ஒரு உம்மா கன்னத்துல

மிக்க மிக்க நன்றியும் அன்பும்மா

  1. குழந்தை மாதிரி அக்கா நீங்க 😍 அதை எழுத்திலும் காட்டலாமே அக்கா 🥰 எப்போ பார் Feeeel Gooooood எழுதி எங்கள எல்லாம் இப்படி சிரிக்க வெச்சுட்டே இருக்கலாமா🫣 So plz consider.. One Just feel good. Next your style Feel feel good 🤭 டீல் ஓகே 🤝

ஹாஹா மிக்க நன்றிமா. ஆனா என்னை குழந்தை மாதிரி எண்டெல்லாம் நம்பாதீங்க. நான் கொஞ்சம் பொல்லாதவளும்தான்.

ஆனா நீங்க சொன்ன ஃபீல் குட் கட்டாயமா யோசிக்கிறேன். இப்ப கொஞ்ச நாள்களா அப்பிடியான கதைகளும் எழுதோணும் என்கிற ஆசை எனக்கும் இருக்கு.

  1. நான் ஆரெண்டு கண்டுபிடிங்கோ பார்க்கலாம்..???

எனக்கு தெரியாதே


  1. உங்களுக்கான எனதுஅன்பு எனது குடும்பத்திற்கு இனையான எனது நிகழ்வுடன் மகிழ்வுடன் கவிதாபாஸ்கரன்

மிக்க மிக்க நன்றியும் அன்பும் சிஸ். உண்மையாவே மிகவும் நெகிழ்ச்சியா இருக்கு.

  1. ஹாய் நிதா. எனக்கு உங்க ஹீரோல செந்தூரனை மிகவும் பிடிக்கும். துளி பிழை காண முடியாத, காதலியை எதற்கும் யாருக்காகவும் விட்டுத்தராத உண்மை அன்பு அவன். அவனைப் போல ஹீரோக்கள் உங்கள் கதைகளில். திரும்ப எதிர்பார்க்கிறேன்.

கட்டாயமா அக்கா. எனக்கும் எழுத ஆசை. கரு கிடைக்கட்டும். எழுதுறேன்

  1. நீ தந்த கனவு ஆட்டநாயகனாக கதைகள் இதற்கு மூன்றாவது பாகம் வருமா ...கதிரவன் கதை எப்ப வரும் ....அடுத்த கதையாக எந்த கதை கொடுக்க போறீங்க.....எப்ப கொடுக்க போறீங்க சிஸ்

ஆட்டநாயகனுக்கு முற்று முழுதா முடிவு போட்டாச்சு. இனி வர மாட்டான். இதுவே கிட்டத்தட்ட ரெண்டு பார்ட் கதை. 70000 சொற்கள் எழுதி இருக்கிறன்.
ஆனா, கதிரவனுக்கு மாதவனுக்கு கதைகள் தனித்தனியா வரும்.

  1. 1.இந்த கேள்வி ஆட்ட நாயகன் நீங்க நினை த்த மாதிரி முழுமையான எழுத முடிந்ததா? 2. ஒரு கதை யின் கரு இதுதான் முடிவு பண்ணிய பிறகு , அதை மாற்றுவதற்கான அழுத்தம் உங்களுக்கு வந்ததா? அப்படி வந்தா? அதை எப்படி எதிர் கொள்வீர்கள?3. நீங்க மர்ம கதை முயற்சிக்கவில்லை 4,கதை outgoing சமயத்தில் வாசகரின் எதர்மறை கருத்துகளுக்கு, உங்களின் மனநிலை என்னவாக இருக்கும்5.திரும்ப ஆன்டிஹீரோ கதை எப்போ வரும்

1.ஆட்டநாயகனில் நடுவில் சின்ன மாற்றம் செய்தேன். ஆனா எனக்குப் பிடிச்ச மாற்றம்தான் அது. அப்படி மாற்றியதால்தான் அதை வாசித்தவர்களுக்கும் எழுதிய எனக்கும் இந்த திருப்தி கிடைச்சிருக்கு என்று நினைக்கிறேன். அது என்ன எண்டு கேட்டுடாதீங்க, ப்ளீஸ். சோ, மனதுக்கு நிறைவா பிடிச்ச மாதிரி எழுதி முடிச்சிருக்கிறன்

2.நீ தந்த கனவுக்கு அழுத்தம் வந்ததுதான். ஆனாலும் முடிவை நான் மாத்த இல்ல. அதே நேரத்தில நான் நினைச்சதுதான் சரி எண்டு இருக்கிறதும் இல்லை. என் மனமும் ஒப்பி, இதை மாற்றினால் நன்றாக வரும் என்று என் மனமே சொன்னால் மாத்துவேன். ஆட்டநாயகனில் அப்படி ஒரு மாற்றம் செய்தேன்.

3. மர்ம கதையா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே முமென்ட். கரு அமைந்தால் கட்டாயம் பாக்கிறேன்

4. எதிர்மறை கருத்துக்கள் : கதையின் போக்குல நான் தெளிவா இருக்கிறதால அது பெருசா என்னை பாதிக்கிறது இல்லை. இல்லையா அவங்க எந்த கோணத்தில் அதை பாக்கிறாங்க எண்டு யோசிச்சு பாத்திட்டு விட்டுடுவேன். அதுல நியாயம் இருக்கா எண்டு பாப்பேன். இல்லை எண்டு நான் நினைச்சா அதைப்பற்றி மேல யோசிக்கிறது இல்லை. இதையும் தாண்டி அதை மைண்டுக்க எடுத்தா என்னால கதை அடுத்து எழுத முடியாது.

எல்லாவற்றையும் விட முக்கிய விஷயம் அனுபவம். பெரும்பாலும் என் எல்லா கதையும் விமர்சனங்களுக்கு உள்ளாகிறதால அப்பிடியான கமெண்ட்ஸ்ஸ இயல்பா எடுக்கிற அளவுக்கு என் மனநிலை வந்திட்டு எண்டு நினைக்கிறன்

5. நீங்க கௌசிய ஆன்டி ஹீரோவா நினைச்சு இந்தக் கேள்வி கேக்கிறீங்க எண்டு நினைக்கிறன். எழுதேக்க அவன் ஆன்டி ஹீரோ எண்டெல்லாம் எனக்கு தெரியாது. பணச்செழுமைலயே வளந்து, தான் நினைச்சதை எல்லாம் நடத்தியே வாழ்ந்து, நேர்மை நியாயம் எண்டு எதையும் பாக்காத, நான் எண்டு நெஞ்சை நிமித்திக்கொண்டு நிக்கிற ஒருத்தனும், நேர்மை, நியாயம், ஒழுக்கம் என்று வாழும் ஒருத்தியும் சந்திக்கும் கதை எண்டுதான் அதுக்கு அப்ப அவுட்லைன் போட்டு வச்சேன். அவன் இப்பிடி வந்து நிற்பான் எண்டு எனக்குத் தெரியாது.

அதே மாதிரியான ஒரு மேஜிக் தானா நடக்கட்டும். அப்ப வரும்.

  1. சிசிர காண்டிபன் இருவரும் நீங்கள் எழுதியதில் இருந்து என்னை மிகப்பெரிய துன்பத்தில் தள்ளியவர்கள் ஆனால் இப்போது நிம்மதியாக மூச்சுவிடுகிறேன் .நன்றி நிதாமா

மிக்க மிக்க நன்றியும் அன்பும்மா


  1. காண்டீபனை ரொம்ப மிஸ் பண்ணுவேன் அவன் வந்தது ரொம்ப சந்தோஷம் இருந்தாலும் அவன் இவ்வளவு கஷ்டம் பட வேண்டுமா இது உண்மை கதையின் பிம்பம் என்று சொல்லி உள்ளீர்கள் இருந்தாலும் அவனுக்கு இப்படி நடந்து இருக்க வேண்டாம் கதையா இருந்தாலும் அதை நினைக்கையில் மனசு வலிக்குது🥺 நான் தான் தேன் மொழி
உண்மைதான் சிஸ். அந்த நேரம் நிறைய சிறை கைதிகளின் வீடியோஸ் பாத்து நானும் கண் கலங்கி இருக்கிறேன். என்னால அவனை சாதாரணமா கொண்டு வர முடிய இல்லை. காரணம், அவன் மாட்டிய இடம் அப்படியாகிப்போயிற்று. அதனாலதான் இவ்வளவு எழுதவேண்டி இருந்தது.


  1. உங்களுடைய கதைகளில் நட்பு ,நண்பர்கள் பற்றி நீங்கள் எழுதுவது மிகவும் அருமையாகவும்,படிப்பதற்கு இனிமையாகவும் இருக்கிறது.இது எதனுடைய தாக்கம்?சொந்தவாழ்வில் உங்களுக்கு கிடைத்திருக்கும் நண்பர்களினாலா.?

எனக்கு ஒரு உயிர் நண்பன் இருந்தான். இண்டைக்கு அவன் உயிரோட இல்லை. பெயர் கீர்த்திவாசன். அவன் நினைவாத்தான் என் முதல் கதையில் மதிவதனியின் உற்ற நண்பனாக அந்தப் பெயரை வைத்தேன். அந்தத் தாக்கமாக இருக்கலாம்.

  1. என்னடா பெயரை heroine ஆஹ் வெச்சு எப்ப கதை எழுத போறீங்க அப்பம்மா??? 🏃🏻‍♀️

வில்லி பெயரா வச்சு எழுதுறேன் பேத்தி.

  1. நீங்க எழுதற தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும் .. ஆனா சாதாரண நடைமுறையில் அதாவது தமிழ் நாட்டில் பேசற தமிழில் கதை எழுத முடியுமானு பார்க்க ஆசை... நிறைவேறுமானு நீங்க தான் சொல்லனும்

ஏகன் கதைல டயானாக்கு தமிழ் நாட்டு பேச்சு வழக்கு எழுத மிகவும் திணறினேன். எதையாவது பிழையா எழுதி வாசகர்களின் அதிருப்திக்கு ஆளாகக் கூடாது எண்டு நினைப்பேன். ஆனா விருப்பம் இருக்கு. கரு, கதை, காலம் எல்லாம் சரியா வந்தா எழுதுறேன்.

  1. Hai mam... How are you? Aatanayagan story really awesome...especially vasu to kaandi transform chance less... Mam ipo novel competition la "STN-117 "ithu kathal kaviyam" story nala iruku...enaku inthu read panum pothu unga story mari feel achu...nalla deep pana concept..inum konjam emotions connect agi irukalam...nala story mam... Unga story epovum lively ya irukum...enoda stress buster unga writing keep going on mam...take care..

மிக்க மிக்க நன்றிமா.

  1. மேகத்தில் தொலைந்த நிலவு எழுதுறது பிரியா அக்கா தானே??? 😜


அப்பிடியா?
 

subhasai

New member
இலங்கை தமிழ் அழகு. அப்படிதான் உன்னோட கதையை படிக்க ஆரம்பித்தேன். போக போக மனசுக்கு நெருக்கமாய் ஒரு feeling. என்னோட பொண்ணு போல. எனக்கு ரொம்ப பிடிச்ச வெகு சில எழுத்தாளர்களில் நீயும் ஒண்ணு.நிறைய எழுதணும். குடும்பம், health ஐயும் பாத்துக்கணும். எந்த ஒரு செயலாலும் ஒருவரை ஈர்ப்பது எளிதில்லை. Keep rocking. 👍👍👍❤❤❤
 

நிதனிபிரபு

Administrator
Staff member
  1. Nan unga chellama vellama? yar nu kandupidingoo papom
எனக்கு தெரிய இல்லையே. கண்டுபிடிக்க செம கடினமா இருக்கு



  1. Your WhatsApp number please


உங்களுக்கு இல்லாததா


  1. ஜெர்மனியில் செட்டில் ஆகிட்டீங்க… ஆனா அங்க நிறைய நண்பர்கள் இருக்காங்களா? நாட்டுக்கு திரும்பிப் போனா வருமானம் கொஞ்சம் குறையலாம், ஆனா குடும்பம், நண்பர்கள் எல்லாம் அருகில் இருப்பாங்க. இங்க வருமானம் நல்லா இருக்கு… ஆனா அத்தனை நண்பர்கள் இல்லையென்று நினைக்கிறீங்களா?


நிறைய குடும்பங்கள் நண்பர்களா இருக்கினம்தான் இஞ்ச. ஆனா என்ன, போய் பாக்கவோ, நேரம் செலவழிக்கவோ யாருக்கும் நேரம் கிடைக்கிறது குறைய. ஏதாவது பார்ட்டி, விழாக்கள், நல்லது கெட்டதுகளில் மீட் பண்ணுவதுதான். இங்கயே இருக்கிறதுக்கும், ஊருக்கு போகாம இருக்கிறதுக்கும் வருமானம் காரணம் இல்லை. என்னை பொறுத்தவரை உழுகிற மாடு எங்கயும் உழும்.




  1. நான் உங்கள் எல்லா கதைகளும் படித்திருக்கிறேன். ஆனால் மீண்டும் மீண்டும் நான் திரும்ப படிக்கும் கதை ஏனோ மனம் தள்ளாடுதே. கெளசிகன் பிரமி என்னைக் கவர்ந்தவர்கள்.உங்கள் எழுத்துப் பயணத்தில் தத்ரூபமான வசனங்கள். Could connect with it easily un terms of narration . Do you Want to share your thoughts on this?


முதலில் மிக்க மிக்க நன்றியும் அன்பும். நீங்க சொன்னதுபோல் நிறையப்பேர் என்னிடம் அந்தக் கதையைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள். பல வாசகர்களுக்கு அந்தக் கதை கதையாக மட்டுமல்லாது, அதில் நான் வைத்த காட்சிகள், வசனங்கள், கதையை நகர்த்திய விதம், பிரேமி கௌசி இருவரையும் காட்டியது என்று நிறைய பிடிக்கும் போல.

ஆனா வித்தியாசமா, இல்ல புதுவிதமா முயற்சிஎடுத்து எழுதின உணர்வு எனக்கு இல்ல. சில கதைகள் இப்படித்தான் எழுத்தாளரே எதிர்பாரா வண்ணம் தானே தன்னை எழுதிக்கொள்ளும். எனக்கு அப்படி அமைந்த கதைகளில் அந்தக் கதையும் ஒன்று.



  1. உங்களுக்கு எது ரொம்பப் பிடிக்கும் — கதை எழுதுவதா, இல்லை மற்றவர்கள் எழுதிய கதையைப் படிப்பதா?
கதை எழுதுவதுதான். இன்னும் சொல்லப்போனால் என் வாழ்க்கையோடு ஒன்றிய ஒரு விடயம் அது. நானாக எழுதுவதை விட்டு என்றுமே தள்ளியிருக்க மாட்டேன். அந்தளவில் எழுதுவது பிடிக்கும். என்றைக்காவது என் எழுத்து நிற்குமாக இருந்தால் எழுதும் நிலையில் நான் இல்லை என்பது மட்டுமே காரணமாக இருக்க முடியும்.


அந்தளவுக்கு எழுதப் பிடிக்கும். அதே நேரத்தில் சும்மா நாயகன் நாயகி, நாலு ரொமான்ஸ் என்று எழுதப் பிடிக்காது. வாசிக்கிற ஒவ்வொரு வாசகரும் சின்னதா தன்னும் ஏதோ ஒன்றை என் கதையிலிருந்து எடுத்துக்கொண்டு போக வேணும் என்று நினைப்பேன்.

சோ எழுதத்தான் பிடிக்கும். வாசிக்கவும் பிடிக்கும்தான். இன்னுமே சொல்லப்போனால் நாம் தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தால்தான் நம் எழுத்தில் உயிரும், நாளுக்கு நாள் மெருகேற்றமும் இருக்கும். இல்லையானால் எப்போதும் ஒரு வட்டத்துக்குள் மட்டுமே நின்று சுழல்வோம்.



  1. உங்க கதை எனக்கு ரொம்ப பிடிக்கும்..படிப்பதை விட ஆடியோ நாவல் கேட்டது தான் அதிகம்.. அழுத்தம் ஆஹ் இருந்தாலும் அழுதுகொண்டே கேட்பேன்..கமலி எனக்கு பிடிச்ச கேரக்டர்.. எனக்கும் அந்த மாதிரி இருக்கணும் ன்னு ஆசை.. ஆனால் பாதி வயசு கடந்திருச்சு.செந்தூரன் கதை மிகவும் பிடிக்கும்.. ஆரணி அழுதுகொண்டே கேட்ட கதை..நீங்க பேசுற விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா..
மிக்க மிக்க நன்றியும் அன்பும். கிருபனின் அந்தக் குறும்புக்கார கமலிய எனக்கும் பிடிக்கும். ஆரணில அழ வம்சத்துக்கு சொறி.



  1. நான் ஆரெண்டு கண்டுபிடிங்கோ பார்க்கலாம்..??? 😜
அடேய்…



  1. 1. உங்கள் competition novels la இலங்கை எழுத்தாளர்களின் கதைகள் உண்டா? இருந்தால் suggest பண்ண முடியுமா? எனக்கு இப்போது எல்லாம் இலங்கை கதைகள் படிக்க ஆசையாக இருக்கிறது...


எனக்குத் தெரியாதே. ஆனா நிறையக் கதைகள் அங்க இருக்கு. எல்லாத்தையும் ட்ரை பண்ணி பாருங்க.

2. ரஞ்சன் கதை இரண்டாம் பாகம் எப்போது வரும்? (மன்னிப்பாயா காதலே எழுதும் போது எழுதிய short Novel). Actually அது ரொம்ப நல்ல அழுத்தமான கதை தான். ஆனால் ending accept பண்ண ealama pochu... 😭. கதிரவன் கதைக்கு முன்னாடி ரஞ்சன் கதை போடுங்க அக்கா.
ஆருமா ரஞ்சன்? உண்மையா எனக்கு நினைவுக்கு வருது இல்ல. சொறிமா. இல்லாட்டி சத்தியவாணி கதை சொல்லுறீங்களா? எனக்கு அந்தக் கதைக்கு மேலோட்டமா ஒரு கரு இருக்கு. அது கொஞ்சம் ஸ்ட்ரோங் ஆகட்டும் எழுதுறேன் சரியா.




  1. Hi Sis, how r u? Enaku eppavum story mudincha thum ungaloda point of view podunvinga... Yella story kum athu romba pidikum... Mannipaya kadhalae story yellarum pola niraiya unga kitta kekka thonum..but kekkala.. nenga final ah unga Pov sollum pothu satisfy agidithu... Aval Arani story laiyum ava kashtapadurathu reason sollu irupinga la... Athu lam romba satisfied. Athunalaiyea in between yethum kekka kudathu nu irupen... Enna solla nu Theriyala... Ana u kitta pesanum nu thonuthu... Love you sis...🙂
மிக்க மிக்க நன்றியும் அன்பும்மா. எனக்கும் என்ன சொல்ல எண்டு தெரிய இல்லை. மன்னிப்பாயா காதலே பெரும் அலையைக் கிளப்பிய கதைதான். கதை நாயகிக்கு தலைப்பு நாயகனுக்கு. அவன் கேக்கிற மன்னிப்புத்தான் அந்தத் தலைப்பு.


23. உண்மையில் ஆட்ட நாயகனில் ஆட்ட நாயகன் யார்? உணர்வுகளின் பிடியில் வாசகரின் கருத்துகள், குரல்கள் கேட்கும் போது உங்களின் மனநிலை

காண்டீபன்தான் ஆட்டநாயகன். கூடவே கதையும்.

எனக்கு எப்பவும் என்னோட அவங்க சொல்லுறத விட அவர்களின் குரல், அந்தத் தொணி என்னோட கதைக்கிற மாதிரியே இருக்கும். இந்தக் கவலை, மனப்போராட்டம், அழுகையோடு யாராவது கதைச்சா உண்மையாவே பயமா இருக்கும். என்ன பதில் சொல்லலாம் எண்டு பலமுறை நடப்பேன். என்னால முடிஞ்ச வரைக்கும் முழுமையான பெரிய விளக்கமா குடுப்பேன். சில நேரம் எனக்கே என்னை நினைக்க சிரிப்பா இருக்கும். 5 ரூபாக்கு கூவ சொன்னா 500 ரூபாய்க்கு கூவிக்கொண்டு நிக்கிறாய் எண்டு என்ர மைண்ட்டே என்னை கலாய்க்கும். ஆனா எப்பிடியாவது அவங்களை அதுல இருந்து வெளில கொண்டுவந்திடலாமா எண்டு பாப்பேன்.
 

Attachments

நிதனிபிரபு

Administrator
Staff member
  1. சமகாலத்தில் உள்ள இலங்கை சார்ந்த நல்ல அழகான,தரமான நாவல்களை தரும் எழுத்தாளர்களில் நீங்களும்,ரோசி அக்காவும், உஷாந்தி அவர்களும் மிக முதன்மையானவர்கள் என்று நான் கருதுகிறேன். சம காலத்தில் உங்களை கவர்ந்த இலங்கை எழுத்தாளர்கள் யாராவது உண்டா?
ஆதுரியாழ் அவான்ர ஒரு கதை வாசிச்சேன். ஊர் ஸ்லாங்கோட வடிவா எழுதுறா.



  1. ஏனோ மனம் தள்ளாடுதே ஓ ராதா நீ தந்த கனவு. ஆட்டநாயகன் போல் வேறு கதைக்கு இரண்டாம் பாகம் எழுதும் எண்ணம் இருக்கிறதா? இருந்தால் எந்த கதை?
இல்லை எண்டுதான் நினைக்கிறேன்.



  1. உங்கள் கதாபாத்திரங்கள் எங்கிருந்து வருகிறார்கள்
என்னைப் பாதிக்கிற, என் கவனத்தைப் பெறுகிற சம்பவங்களில் இருந்து.



  1. Your media/screen time per day
எட்டு மணி நேரத்துக்கு குறையாது.



  1. உங்க கதைகளைப் படிக்கும்போது, இப்படிப் பட்ட காதல், நேசம் நிஜத்துல கிடைக்குமா என்று தோணுது. இவ்வளவு நிறைய love‑u எல்லாம் story‑களுக்கான exaggeration தானே?


அப்பிடி நான் நினைக்க இல்லை. சண்டைகள் வாழ்க்கைல எந்தளவுக்கு இருக்கோ அந்தளவு அன்பும் இருக்கும் எண்டு நினைக்கிறேன். நாம நாம் நேசிக்கும் மனிதர் அன்பை மட்டுமே காட்டோணும் எண்டு நினைக்கிறது தவறு இல்லையா? உண்மையா அப்பிடி இருக்குமா இருந்தா எங்கயாவது தப்பிச்சு ஓடலாமா எண்டுதான் இருக்கும். சோ, சண்டைகளும் சமாதானங்களுமாகப் போகும் நம் நிஜ வாழ்க்கையில் இருக்கிற அன்பு இதைவிட அலாதியானது எண்டுதான் நினைக்கிறேன். சில விதிவிலக்குகள் உண்டுதான். அதையும் மறுக்க இல்லை. ஆனா அது சில என்பது என் எண்ணம்.


  1. உங்கள் comments எல்லாம் பார்த்தன் sis. அது என்ன உங்கள் முதல் கதை? யார் மதிவதனி? 2. ஏகன் கதை பெயர் என்ன? எங்கே வாசிக்கலாம்?
நேசம் கொண்ட நெஞ்சமிது என் முதல் கதை. completed novels பகுதியில் இருக்கு. அந்தக் கதையின் நாயகி மதிவதனி. அவளின் உயிர் நண்பன் வாசன்.


ஏகன் கதை நேசத்தின் இன்னொரு முகம். இப்ப ஓடியோ நாவலா இருக்கு. கேளுங்கோ.



  1. நீங்க தொடராக எழுதும். எழுதும் கதைக்கு , ஆப்லையனில் எழுதும் கதைக்கு உள்ள வித்தியாசம் உங்களுக்கு இருக்கா?
நிறைய இருக்கும். இணையத்தில் தொடரா எழுதும்போது திரும்பி போய் வாசிக்கவோ எடிட் பண்ணவோ நேரம் இருக்காது. அதுவே ஆப்லைனில் வாசிக்கிறபோது எதையும் எப்போதும் மாற்ற முடியும். நிறுத்தி நிதானமாக எடிட் பண்ணி எழுதுகிறபோது கதை நல்ல கிரிஸ்ப்பா அழகா வரும்.



  1. உங்க கதையில படிக்கும் போது ‘நிறைவான வாழ்க்கை வாழ்ந்தனர், மகிழ்ச்சி தெரிந்தது அவர்களின் முகங்களில்’ அப்படின்னு சொல்வீங்க. உங்க பார்வையில் ‘நிறைவான வாழ்க்கை’ன்னா என்ன?
பெரிய கனவுகள் இல்லாத, ஆசைகள் இல்லாத வாழ்க்கை. மனத்தில் குறைகள் இல்லாமல் கிடைப்பதை வைத்து வாழுறது.



  1. கதை ஒரு dream world. இங்க hero heroine‑ஐ easy‑ஆ தூக்கிட்டு போறான், வரான், six‑pack arms எல்லாம் வைத்திருப்பான் — இது real life‑ல நடக்கிறதா? Also அவன் அவளுக்குப் பொருத்தமான dress select பண்ணுறான்… but என் husband‑ோட taste, எனோட taste ஒருநாளும் match ஆகல. அவனுக்கு dull colors பிடிக்கும், எனக்கு bright colors பிடிக்கும். It never worked out. So நாம assume பண்ணலாமா stories are complete fantasy and imaginary world, just for entertainment… real life‑க்கு இதுக்கு சம்பந்தமே இல்லன்னு?


கதை ஒரு கற்பனை உலகம்தான். அதில் எனக்கும் மாற்றுக்கருத்தில்லை. நீங்க சொன்னதுபோல் தூக்குவது, உடம்பை வளர்த்து வைத்திருப்பது, உடை எடுத்துக்கொடுப்பது, ஏன் சாதாரணமா ரெத்தம் வந்தாலே ஆஸ்பத்திரிக்கு போகலாமா என்று கேட்பது, அளவுக்கதிகமாக உருகுவது எல்லாமே நிஜ வாழ்க்கைக்கு பொருந்தாத ஒன்றுதான்.

அதெல்லாம் அந்தக் கதையை ரசித்து வாசிக்க வைப்பதற்காக சேர்க்கப்படும் அழகூட்டிகள், அல்லது வாசனையூட்டிகள்தான் அவை. அவற்றை வாசித்ததோடு விட்டுவிட வேண்டும்.

உதாரணத்துக்கு ஒரு கடை பிரமாண்டமான பெயர் பலகையோடு, பளீரென்று மின்னும் மின் விளக்குகளோடு, கண்ணையும் மனதையும் கவரும் விதமான அழகோடும் இருக்கக் கண்டு அதனுள் செல்கிறோம். உள்ளே போய் அந்த பிரமாண்டத்தையும் வெளிச்சத்தையும் அழகையுமா அள்ளிக்கொண்டு வருகிறோம்? அந்தக் கடையில் இருக்கிற தரமான, நமக்கு பொருத்தமான, நமக்குத் தேவையான பொருளைத்தான் வாங்கி வருவோம் இல்லையா?

அதைப்போலத்தான் கதையில் சொல்லப்படுகிற கருத்தையோ, அது நமக்குச் சொல்ல வரும் பாடத்தையோ எடுக்க வேண்டும். அதனால்தான் என் கதைகள் வெறும் காதலோடு மட்டுமே நிற்கக் கூடாது என்று நினைப்பேன். என் வாசகர்கள் யோசிக்க, அல்லது தமக்காக ஒன்றை எடுத்துக்கொள்ள ஏதோ ஒன்றை நிச்சயம் வைப்பேன்.

இன்னும் சொல்லப்போனால் பெண்களுக்குப் போதுமானவரை கஷ்ட்டம் கொடுப்பேன் என்றும் சொல்லுவார்கள்.

என் கதைகளை வாசிப்பது பெண்கள். அப்படி இருக்கிறபோது அவர்களுக்கு தேவையானதை கதையில் வைப்பதுதான் சரி என்று நினைப்பேன். என்ன துன்பம் வந்தாலும் கடந்து வா, நிமிர்ந்து நில், உன்னால் முடியும், உனக்கென்று ஒரு உழைப்பை பார்த்துக்கொள், எந்த சூழ்நிலையையும் கையாள கற்றுக்கொள் என்று ஏதோ ஒன்று நிச்சயமாக இருக்கும்.

அப்படியானவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். அதைத் தாண்டி கதைகளில் வருகிற நாயகன் நாயகி எல்லாமே கற்பனை. நம்மோடு நம்மை சுற்றி வாழுகிற அம்மா, அப்பா, கணவர், உறவுகள் என்று யோசித்துப் பாருங்கள். உண்மையான நாயகர்கள் அவர்கள்தான்.



  1. உங்க home tour, garden tour video போடுங்க… நிதாவின் kitchen‑ஐ பார்க்க ஆசை
இது வேண்டாமே. வேணுமென்றால் என் கிட்சனை போட்டோஸ் எடுத்துப் போடுறன். எங்கட தோட்டமும் சம்மர் வரட்டும் காய்கறி மரங்கள் எல்லாம் நன்றாக வளர்ந்த பிறகு போட்டோ அல்லது வீடியோவா காட்டலாமா பாக்கிறேன். ஆனா எனக்கு உண்மையா இதுல விருப்பம் இல்லை. அது ஒரு அழகான செயல் இல்லை எண்டு நினைப்பேன்.



  1. A quick intro about your family, husband, kids, job etc
ஒரேயொரு கணவர்

ஒரேயொரு மகன்
ஒரேயொரு மகள்
ஒரேயொரு நிதா
கடை வச்சிருக்கிறோம். மகன் ஐடி படிக்கிறார். மகள் மருத்துவம் படிக்கிறா.



  1. நிதா மா வாழ்த்துக்கள். உமது கதைகளில்(emotional value) உறவுகளின் மதிப்பு, அவற்றின் உணர்வுகளின் சிக்கல், அவற்றை கையாண்டு கடக்கும் விதம் அருமை. கேட்பாரின்றி காதல், அழகென்ற சொல்லுக்கு அவளே போன்ற சில கதைகளில் தலைவன் தலைவி கூடல் நெகிழிச்சியாகவும் நிறைவாகவும் இருக்கும். அதே போல் இரசனையாகவும் இன்னும் கருத்தாழம் மிக்க கதைகள் புனைய தொடர வேண்டும்
மிக்க மிக்க நன்றியும் அன்பும். ரொமான்ஸ் எழுதும்போது பயமா இருக்கும். போடரை தாண்டுறேனோ எண்டு. அப்பிடி ஏதும் எண்டால் சொல்லிடுங்க.



  1. ஒரு நாளில் நீங்க எவ்வளவு நேரம் கதை எழுதுவீங்க?
மூன்று மணி நேரம்? அது சரியாக சொல்ல முடியாது. விட்டுவிட்டுத்தானே எழுதுவோம். சில நேரங்களில் முன்னாள் எழுதியதை எடிட் பண்ண, இனி சொல்ல வேண்டியவற்றை நோட் பண்ண எண்டு டைம் குறிப்பிட்டு சொல்லுறது சிரமம்.
 
Last edited:

Ananthi.C

Well-known member
நிதாம்மா..... பொன்னியின் செல்வன் போல்...உங்கள் நாட்டில் ஏதேனும் வரலாற்று காவியம் இருக்கிறதா?? அல்லது உங்களுக்கு எப்பவாவது அப்படி ஒரு காவியம் எழுத வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறதா??...

துப்பறியும் நாவல்கள் பற்றி உங்கள் அபிமானம் என்ன??
 
Top Bottom