அத்தியாயம்: 15
“Pick me up here." என்று செம்மொழி பூங்காவின் லோகேஷனை ஆகாஷிற்கு அனுப்பிவிட்டு, அங்குள்ள கல் மேஜையில் அமர்ந்து, இரவு நேரத்து அலங்கார மின் விளக்கின் அழகை ரசித்துக்கொண்டிருந்தான் வர்மா. அவனுக்கு இன்றைய நாள் மிகவும் நிறைவானதோர் உணர்வைத் தந்திருந்தது.
"இது வடிவா இருக்கு, கட்டமும் கோடுமாய் டிசைன் உங்கட கலருக்கு சூட் ஆகும்." என்று ஒவ்வொரு டி-சர்ட்டாக அவன் மேல் வைத்து அழகு பார்த்தவளின் மதி முகம், கண்களை விட்டுச்செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்தது. இனிய பொழுதுகள் அவை. அதை அசைபோட்டபடி அமர்ந்திருக்க,
அவன் சொன்ன இடத்திற்கு வந்த ஆகாஷ், வர்மாவிற்கு கால் அடித்தான்.
"இங்க!." என்றபடி வந்து பைக்கை வாங்கிக்கொண்டான்.
"இங்க என்னடா பண்ற? இது செம்மொழி பூங்கா... காதலர்களுக்கான இடம். காதலி கூட உக்கார வேண்டிய இடத்துல, சிங்கிளா உக்காந்து என்ன பண்ணிட்டு இருக்க?" என்றான் கேலியாக.
"ஹாங்... வருங்காலத்துல வந்து உக்கார இடம் பிடிச்சி வைக்க வந்தேன்." என்றான் நக்கலாக.
"இந்த நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. வானதி கூட போனியே! சாப்பிங் முடிஞ்சதா? எங்க! காட்டு." என்றவனை வெறும் கையோடு இருந்த வர்மா விழி இடுங்க பார்த்து முறைத்தான்.
"ஒன்னும் வாங்கலயா! இல்ல வாங்கி வச்சது பின்னாடி வருதா? ஓ!! கடையையே வாங்கிட்டியா அந்தப் பிள்ளைக் குடுத்த காசுல! ஏதாவது சொல்லு டா!" எனத் தோளை உளுக்க,
"நாலஞ்சி கடை போனோம். எதுவும் செட்டாகல." என்றபோது அதிர்ந்துதான் பார்த்தான் ஆகாஷ்.
"எது செட்டாகலயா! ஒரு மணி நேரமா அந்தப் பிள்ளை கூட சுத்திருக்க டா! ஒரு டி-சர்ட் கூடவா கண்ணுல சிக்கல."
"இல்ல. எனக்குப் பிடிச்ச மாதிரி எதுவும் அமையல.." என்றான் இறக்கமற்று. இதே வார்த்தையைக் கூறித்தான் வானதியையும் கடுப்பேற்றி இருந்தான்.
"ப்ளாட்பாம் கடைல நாலு சட்டை ஆயிரம் ரூபாய்க்குத் தாராண்டா. முழுசா மூவாயிரம் குடுத்துச்சி அந்தப் பிள்ளை. அதை அப்படியே வாங்கி எங்கிட்ட குடுத்திருந்தா உனக்கு ஒரு வர்ஷத்துக்குத் தேவையான டி-சர்ட்ட வாங்கி அடுக்கிருப்பேன். நீ என்னடான்னா சின்ன வயசுல பாஸ் பாஸ் விளையாடுற மாதிரி, காச ஒருத்தர் கைல இருந்து இன்னொருத்தர் கைக்கு குடுத்து குடுத்து விளையாண்டு, கடைசில ஒன்னுமே வாங்காம வந்திருக்கீங்க." என்று வளவளத்தபடி வந்தான்.
வீடு செல்லும் என்று எதிர்பார்த்த பைக், ஒரு showroom-மில் நிறுத்தப்பட,
"இங்க எதுக்குடா வந்திருக்க?" என்ற கேள்வியுடன் இறங்கினான் ஆகாஷ். பைக்கை ஒரு கடையாளிடம் ஒப்படைத்துவிட்டு கடைக்குள் செல்ல,
"பைக்க சர்வீஸ் விடப் போறியா!" என்றபடி பின்னாலேயே சென்றான்.
கடை முழுவதும், புது மாடலில் அனேக இரு சக்கர வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருக்க, வர்மா கடையாளிடம் ஒரு வண்டியைக் காட்டி விவரம் கேட்டான்.
"சார், அந்த வண்டி *** ஆகும். நீங்க குடுத்த வண்டி கண்டிசன் நல்லாத்தான் இருக்கு. இன்ஜினும் ஸ்மூத்தாத்தான் இருக்கு." என்றார் மேலாளர்.
வர்மா பேசியதை வைத்து bike-ஐ exchange செய்யப் போகிறான் என்பது புரிந்தது.
"புது பைக் வாங்கப் போறியா!"
"ம்..."
"ஏன் மச்சான்? இது உன்னோட பாட்டி குடுத்தது. ஞாபகர்த்தம் அது இதுன்னு சொல்வ. இப்ப அதை விக்கப் போறேன்னு சொல்றே! எதுக்கு டா?"
"வானதிக்கு அந்த பைக் பிடிக்கல."
"என்னது?"
"கடைக்குப் போகணும். வான்னு சொன்னா ஏறமாட்டேன்னு சொல்லிட்டா. நடந்தே போனோம்."
"அது தான் தெரிஞ்ச கதையாச்சே."
"ரொம்ப தூரம் அவளால நடக்க முடியல. டயர்டாகிட்டா. நாளைக்கும் இதேமாதிரி நடந்தா அவளுக்குக் கால் நோகும்."
"நாளைக்குமா?"
"ம்... டி-சர்ட் வாங்க வேண்டாமா!"
"அதுக்காக எவனாது பைக்க மாத்துவானா! அதுவும் நல்லா இருக்குற பைக்க! ஒரு டி-சர்ட் வாங்க உனக்கு எத்தனை நாள் தேவைப்படுது?."
"குறைஞ்சது ஒரு வாரம்."
"எது ஒரு வாரமா!!! டேய் அநியாயம் டா. என்னோட பைக் சும்மாத்தான இருக்கு. வேணும்னா அதை எடுத்துக்க."
"ஒரு வாரம் மட்டும் அவகூட இருக்கணும்னா இரவல் பைக்கே ஓகே தான். ஆனா லைஃப் லாங் அவகூட டிராவல் பண்ணணும்னா அவளுக்கு சௌகரியப்படுற மாதிரி ஒன்னு வேணும்."
"மச்சான்!!! இப்ப... நீ... சொன்னது உண்மையா... நீ வானதியா??"
"லவ் பண்றேன் மச்சான்." என்றதும் வேகமாக வந்துஅணைத்துக் கொண்டான் ஆகாஷ்.
"நிஜமாவா டா சொல்ற... நீ... நீ... எப்படி டா? எப்ப இருந்து?" என உணர்ச்சிவசப்பட்டவனை அடக்கி,
"எதுவா இருந்தாலும் வீட்டுக்குப்போய் பேசுவோம்." என்றான். வீடு வந்துசேரும் வரை ஆகாஷ் பேசவே இல்லை.
வந்ததும் முதலில் கேட்ட கேள்வி, "எப்ப வந்தது மச்சான் காதல்? அதுவும் கரிகாலன் தங்கச்சி மேல எப்படிக் காதல் வந்தது?" என்றது தான்.
"ம்ச்... அவளோட பேரு வானதி. கரிகாலன் தங்கச்சின்னு சொல்லாத." என்றவன் உள்ளுக்குள், 'அவள் என் நதி. எனை மட்டுமே சேரும் நதி.' என்று சொல்லிக்கொண்டான்.
"வானதி, கரிகாலன் தங்கச்சி தான!" என்றவனை முறைத்து எதுவோ சொல்லவர,
"டைவர்சன் ஆகாத மச்சான். விசயத்தை சொல்லிடு. இல்லன்னா எனக்கு நெஞ்சே வெடிச்சிடும். எப்படி உனக்கு வானதி மேல காதல் வந்தது?" என்க, அவனிடம் நடந்த அனைத்தையும் கூறி முடித்தான் வர்மா.
"என்னைப் பாத்து Hate செய்றேன்னு சொன்னா மச்சான். அப்ப அவளோட கண்ணுல அப்படி ஒரு வெறுப்பு. அவளுக்கு எம்மேல காதல் இருந்திருக்கு. எப்படி வந்தது? ஏன் அதை மறந்து இப்ப வெறுக்குறான்னு தெரியல?" என யோசனையுடன் சொல்ல, ஆகாஷிற்குத்தான் திக்கென்றிருந்தது.
ஆகாஷ், "அவ உன்னை hate செய்றா!"
"ம்... நான் அவள love பண்றேன்." என்றவனை என்ன சொல்வது.
காதலித்தவள் காரணமில்லாமலா வெறுப்பாள்! அதிலும் இவனுக்கும் கரிகாலனுக்கும் ஆகாது என்பது தெரியும். ஏன் குடும்பமே சிதறிக் கிடக்கிறது. அப்படி இருக்க, யாரை? எப்படிச் சமாளித்து? இவனின் காதலைக் கைக்கூட வைப்பான். ஆகாஷிற்கு நம்பிக்கை வரமறுத்தது. அதனால் வர்மாவின் காதலுக்கு நம்பிக்கையை வளர்க்காது,
"நீயே சொல்ற காதலிச்சா!" எனும்போதே...
"இப்பவும் என்னைக் காதலிக்கிறா மச்சான்." என்றவனுக்கு அன்றைய இரவு அவள் தந்த முத்தமும், தன் நலனை ஆராய லிஃப்டில் அவள் பார்த்த பார்வையும் நினைவிற்கு வந்து சிலிர்ப்பைத்தந்தது.
"எது வச்சி இவ்வளோ உறுதியாக சொல்ற?" என்றவனின் முன் கடிதங்களைப் பரத்தி வைத்தான்,
"உனக்கு ஏதாவது தெரியுதா?" என்ற கேள்வியுடன்.
கடுப்பான ஆகாஷ், "போடாங்..." என்றுவிட்டு எழ, அவனிடம் வானதியிடம் இருந்து எடுத்து வந்த சின்சான் பொம்மையையும் கடிதத்தில் உள்ள ஸ்மைலி பொம்மையையும் காட்டினான். ஆகாஷிற்கு எந்த ஒற்றுமையும் தெரியவில்லை.
"இந்த லெட்டர்ஸ் நான் சென்டர்ல இருக்கும் போதிருந்தே வருது. இந்த வீட்டுக்கும் வரும், சம் டயம் ஆபிஸ்க்கும் வரும். நான் மும்பைல இருந்தபோதும் வந்தது. நீயே சொன்ன மாதிரி என்னை நல்லாத் தெரிஞ்ச யாரோ தான் இதை அனுப்பிருக்கணும்."
"வானதி தான் உம்மேல இருக்குற காதலால இதெல்லாத்தையும் அனுப்புறான்னு சொல்ற."
"ஏன் இருக்ககூடாது. இதோ பாரு. இது நாலு மாசத்துக்கு முன்னாடி வந்தது. இது இந்த வாரம் வந்தது. இதுல இருக்குற ஒன்னு, இதுல இல்ல. என்னென்னு சொல்லு பாப்போம்." என்று கண்டபடி உலறியவனை,
"டேய்… இதெல்லாம் சிறுவர் மலர்ல வர்ற ஆறு வித்தியாசம் கண்டுபிடி விளையாட்டு மாதிரி இருக்கு.”
"ம்ச்..." என்று உச்சுக்கொட்டி சோர்வுடன் அமர்ந்தவன்,
"என்னைப் பாத்தா பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா?" என்க, ஆம் எனத் தலையசைத்தவன், வர்மாவின் தீவிர முகபாவனையைப் பார்த்து மிரண்டுதான் போனான். அவன் ஒரு விடயத்தில் உறுதியாக நின்றால் உயிரைக்கூட தர தயங்கமாட்டான். பிடிவாதக்காரன். ஆதலால் காகிதங்களை ஆராய்ந்தான்.
அவனுக்கும் ஒரு வித்தியாசம் தெரிந்தது.
"இதுல ஹார்ட் மிஸ்ஸிங்." என்று சுட்டிக்காட்டினான். வர்மாவின் முகத்தில் ஒளி வந்தது.
"Purple heart..." என்றான் இமை மூடி சிலகித்தபடி.
"எப்ப இருந்து மிஸ்ஸாகுதுன்னு பாத்தியா?" என்றதும் ஒவ்வொன்றாக பிரித்தவன், "மூணு மாசமா மிஸ்ஸாகுது." என்றான் ஆகாஷ்.
"அதாவது நதி நம்ம ஆஃபிஸ் வந்து சேந்த மறு வாரத்துல இருந்து."
"அப்படி சொல்லக்கூடாது. நீ அந்தப் பிள்ளைய திட்டினதுல இருந்து."
"எஸ்... எம்மேல இருக்குற கோபத்துல பர்பிள் ஹார்ட்ட விட்டிருக்கா!" என்றபோது புன்னகை அரும்பியது வர்மாவிற்கு. அவனின் உள்ளங்கையில் கீறியது முதல் ஓட்டுநர் அட்டையை எடுத்து வைத்தவரை அனைத்தையும் ஆகாஷிடம் சொல்லிமுடிக்க,
"வர்மா... இதெல்லாம் உன்னோட யுகமா... கற்பனையா இருந்தா..." என்று தயக்கத்துடன் இழுக்க,
"நிஜம் டா..."
"இல்லடா... எதையும் உறுதி படுத்தாம மணல் கோட்டை கட்டுனா நீ மறுபடியும் ஏமாந்து போய்டுவா டா." என்றான் அக்கறை தொனிக்கும் குரலில். அதை உணர்ந்தவன், ஆழமாக மூச்சை இழுத்துவிட்டான்.
"என்னோட உன் மனசு சொல்லு ஆகாஷ். I am in love with her. அவளுக்குள்ள நான் இருக்கேன். எனக்கான காதல் அவக்கிட்ட இருக்குறதா நான் ஃபீல் பண்றேன். என்னை ஏன் வெறுக்குறான்னு தெரியல. கண்டிப்பா நான் அதைக் காதலா மாத்தி, என்னை லவ் பண்ண வைப்பேன்." என்றுவிட்டு எழுந்துசென்றான்.
நண்பனின் யூகம் சரியா தவறா என்று தெரியாது. ஆனால் வானதி அவனுக்கு ஏற்ற ஜோடி. அவனின் காதல் வெற்றி பெற்று அவன் நன்றாக இருக்கவேண்டும் என்று மனமார வேண்டிக்கொண்டான் இறைவனை.
பாதம், சுள் சுள் என்று வலி எடுத்தது. ஊசியை வைத்து குத்தியதுபோல் இருந்த பாதத்தைப் பிடித்து அழுத்தி மசாஜ் செய்தபடி வர்மாவைத் திட்டிக்கொண்டிருந்தாள் வானதி.
"பாவி மகன். கால் நோவ நோவ என்ன நடக்க வச்சிட்டான். ஒரு பனியனுக்கு இத்தனை தூரம் மெனக்கிடுற இவன் சரியான விசரானாத்தான் இருப்பான். காட்டான்...." என்று முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள்.
வானதி, தெரு முனையில் இருக்கும் கடைக்குச் செல்வதாக இருந்தால் கூட சைக்கிள்தான். இல்லையேல் அவளுக்குச் சேவை செய்ய அண்ணன் தம்பியென இரு ஆண்கள் இருக்கின்றனரே! ஆதலால் கால் நோக நடந்து பழக்கமில்லை.
அத்தோடு அவளுக்கு உடைகளின் மீது பிரியமும் கிடையாது. மானம் காக்கும் அளவுக்கு இருந்தால் போதும் என்ற எண்ணம் ஈஸ்வரி சகோதரிகள் தரும் பழைய உடைகளை அணியும் போதே உண்டாகியிருந்தது.
இதையும் மீறி அவளை அழைத்தாள். ஒரே ஒரு கடை. அதுவும் பக்கத்தில் இருக்கும் சிறியகடை தான் செல்வாள். உத்திரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் ஏதாவது ஒன்று. அது சுடிதார், மிடி, ஜீன்ஸ், புடவை என்ற பாகுபாடு பார்க்காது எடுத்துக்கொண்டு வந்துவிடுவாள்.
ஆண்டாள்தான், "வேற கடை பாக்கலாம் வானும்மா. இங்க டிசைன் நல்லாவே இல்லை." என்று அணத்துவார்.
"பிடிக்கல எண்டால் வேற கடைக்கு போகலாம் பெரியம்மா. ஆனால் நான் வர இல்ல. நீங்க வாங்கி வாங்க. எதை வாங்கி வந்தாலும் எனக்கு ஓகே தான்." என்று எவ்வித குறையும் சொல்லாது வாங்கிகொள்ளும் ஒருவகையான வாழைப்பழ சோம்பேறி. அவளைப்போய் இந்த ஒருவார காலமும் கடை கடையாய் இழுத்துச்சென்றிருக்கிறான்.
அத்தனை கடை, அனேக டி-சர்ட்.... எதுவுமே பிடிக்கவில்லை என்று சொல்லும் போது, எரிச்சல் தாங்காது, அவன் கொடுத்ததை அவன் முகத்தில் தூக்கி எறிந்துவிடும் அளவிற்கு கோபம் ஏறும்.
அதுமட்டுமா...
"என்ன ஸ்பெஷல் நதி?" என்று மத்திய உணவின் சமயம் அவளின் தோழிகளுடன் சேர்ந்துகொள்வது,
ஆகாஷின் மரியாதை கலந்த பார்வை,
"எனக்காக, வர்மா சார் கூட இன்னைக்கு ஹார்பர் வரைக்கும் போய்ட்டு வாரியா வானு." என்று எதாவது காரணங்கள் சொல்லி அவனின் முன்னாலும், பின்னாலும் அழையவிடும் மமதியின் செயல், எல்லாம் கோபம் கோபமாய் வந்தது.
"அவட்ட என்ன கதச்சி வச்சிருக்கான் எண்டு விளங்கல! ரெண்டு பேரும் விசித்திரமான நடந்து கொள்றாங்க.” என்றவள் கோபத்தில் தொம்மென நிலத்தில் வைக்க, வலியில் “ஸ்... ஆ... அம்மா..." என்று கத்திவிட்டாள்.
"வானும்மா சுடு தண்ணில கல்லுப்பு போட்டு எடுத்திட்டு வந்திருக்கேன். இதுல கால வை. இதமா இருக்கும்." என்று சிறிய பாத்திரத்தில் வெந்நீரை எடுத்து வந்தார் ஆண்டாள்.
"கால் வலிக்கிற அளவுக்கு என்ன பண்ண வானுக்கா?" என்றே வம்பிழுத்தான் பார்த்திபன். அவள் வாய்த்திறக்கும் முன்,
ஆண்டாள், "நீ சும்மா இரு பார்த்திபா. அவளே கால் வலின்னு கதறுறா. நீ கேலி பண்ணிட்டு." என்று தைலயம் தேய்த்துவிட, பார்த்திபனைப் பார்த்து அழகு காட்டினாள் வானதி.
"ம்மா... அப்பா உங்க ரெடியா இருக்கச்சொல்லி கால் பண்ணாரு." என்றபடி வந்தான் கரிகாலன்.
"என்ன விசயம் தம்பி?"
"நாராயணன் மாமா வீட்டுக்கு போகணுமாம். வானுக்கு பொருத்தம் பாக்க.” என்றதும் ஆண்டாள் புடவையை மாற்ற ஓடிவிட்டார்.
"ஜாதகப் பொருத்தமா?" என்றாள் வானதி கிசுகிசுத்த குரலில்.
"ம்..."
"மற்றது."
"திருப்தியா இருக்கு."
"என்ர கன்டிஷன்?"
"வீட்டோட மாப்பிள்ளை தான!"
"ஓம்..."
"சரின்னு சொல்லிட்டான்."
"யார் அந்த மாங்கா மடையன்?"
"உன்னோட ஆபிஸ்ல தான் வேலை பாக்குறான்." என்றதும் பளிச்சிட்ட முகம்,
"உன்னோட நாடு தான்." என்றதும் முகம் வாட்டம் காண தயாராக இருந்தது.
"ஜெய்சூர்யா... ரெண்டு நாளுக்கு முன்னாடியே அப்பாவ பாத்து உன்னைப் பொண்ணு கேட்டிருக்கான். அவனோட அப்பா அம்மாட்டயும் பேசிருக்காங்க. பொருத்தம் சரியா இருந்தா! அடுத்த வாரம் கோயில்ல வச்சி உறுதிபடுத்திடலாம்னு சொன்னாங்க."
"அட்ரா சக்க! மாமாவும் அக்காவும் ஒரே ஆபிஸ்ஸா?" எனப் பார்த்திபன் குரல் கொடுக்க,
"ஒண்டும் முடிவாகாம மாமா எண்டு உறவாட வேணாம்." என்று கத்தியவள் எழுந்து தன் அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டாள்.
அப்பொழுது அவளின் அலைபேசி சிணுங்கியது. வர்மா தான் என அறிந்து எடுக்காது இசைக்கவிட்டாள்.
சில நிமிடங்களில் அது குறுஞ்செய்தி வந்ததாகச் சொல்ல, எடுத்துப்பார்த்தாள்.
ஒரு கடையின் பெயரைச் சொல்லி, நாளை செல்லலாம் என்றிருந்தது.
மெத்தையில் பொத்தென அமர்ந்தவளின் கண்களில் மெல்லிய கோடுகள்.
சென்னைக்குள் துணி கடைகளுக்கு பஞ்சம் என்பதுபோல் அவன் காட்டும் கடைகள் எல்லாம் மாநகரின் கடைக்கோடியில் இருக்கும். மாலையில் அவளுக்காகக் காத்திருந்து, அவளின் வருகையை அறிந்து புன்னகையுடன் வரவேற்று புது பைக்கில் ஏற்றிக்கொண்டு செல்வான். செல்லும் வழியிலெல்லாம் அவன் கல்லூரி காலத்து கதையைச் சொல்வான்.
இங்கு தான் நான்... அங்கு தான் நாங்கள்... என்று அவன் பகிரும் கதைகளை உள்வாங்கியபடி, அவனுடன் செல்லும் பயணம் ரம்மியமாக இருக்கும். இடையிடையே, "ஐஸ் கிரீம்? ஜூஸ்?" என வாங்கிப் பருக வைப்பான். எதிர் எதிரே அமர்ந்து சின்ன வெட்கச் சிரிப்புடன் விழிகளால் அவனைப் பருகியவாறே தொண்டைக்குள் இறங்கும் பானம் இதயத்தைக் குளிர்விக்கும்.
அவனின் அண்மையில் சலனப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றியது. இதைத் தொடரக்கூடாது என நினைத்தவள் அவனுக்கு குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டாள்,
"it’s over." என்று.

Last edited: