நயவனின் நயவள் இவளோ - 10

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113

அத்தியாயம் 10

போட்டில் உட்கார்ந்துக் கொண்டே வெளியே வேடிக்கை பார்த்தனர்.

“பியூட்டி… ரொம்ப பெயின்னா இருந்தா. வா ஹாஸ்பிடல் போகலாம்.”

“நடு ஏரில இருந்துட்டு நீ எப்படி அவள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போவ?” என்றான் அஸ்வின்.

பல்ப் வாங்கிய கடுப்பில் பல்லை கடித்த ஹரிஷ்ஷை பார்த்து சிரித்த அனன்யா, “இது சின்ன காயம் தான்.”

“அப்புறம் ஏன் சாரு கைய பிடிச்சி கூட்டிட்டு போகாமா தூக்கிட்டு வந்தாரு?” என்றான் ஹரிஷ்.

“அப்போ கொஞ்சம் பெய்னா தான் இருந்தது. என்னால நடக்க முடியலை, அதான் தூக்கினார். இப்போ பேண்ட் எய்ட் போட்டதும், வலி பெருசா இல்லை.” என்றாள்.

அனைவரும் போட்டுக்கு வந்துவிட்டனர், ராஜேஷ், ரோஜாவை தவிர அனைவரும் அனன்யாவை நலம் விசாரித்தனர். போட்டும் கிளம்பியது, கொஞ்ச தூரம் சென்ற பின் அனன்யா எழுந்து நிற்க.

அஸ்வின் மற்றும் ஹரிஷ் எழுந்து நின்றனர். 'இவனுங்களோடு ஒரே இம்சை டா' என்று மனதில் நினைத்த அனன்யா.

படகை ஓட்டிக் கொண்டிருந்தவரின் அருகில் செல்ல போக, இருவரும் அவளின் கையை இருபக்கம் நின்றுக் கொண்டு பிடிக்க வர.

“இல்லை வேண்டாம், நானே நடப்பேன்.” என்றவள் போட் ஓட்டுபவரிடம்,

“ஸ்பீடு போட் ரெடியா அண்ணா.”

“வந்ததும் சொல்றேன் மா.” என்றார் அவர்.

ஐந்து நிமிடத்தில் ஸ்பீடு போட் வந்துவிட‌. லைஃப் ஜாக்கெட் போட்டுக் கொண்டு அனைவரும் ஸ்பீடு போட்டில் ஏறினர்.

பதினைந்து நிமிடம் படகு நல்ல வேகத்தில் செல்ல. இவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். ரோஷிணியும் கனியும் மட்டும் பயத்தில் கத்தினர். மற்றவர்கள் ரைடை கொண்டாடினார்கள்‌.

முன்பு இவர்கள் வந்த போட் அருகில் வந்து நின்றது. எல்லோரும் இறங்கினர், ரோஷிணி வாந்தி எடுக்க, அவளுக்கு உதவினான் ஹரிஷ்.

“உனக்கு ஜூஸ் வாங்கிட்டு வரேன்‌‌.” என்று கிச்சன் சென்றான் ஹரிஷ்.

ரோஷிணியிடம் லெமன் ஜூஸை நீட்டினான்.

“குடிச்சிட்டு நீ போய் ரெஸ்ட் எடுங்க ரோஷிணி” என்றாள் அனன்யா.

“ஓகே” என்றாள்.

கொஞ்ச நேரத்தில் மாலை நேரத்து டீயும், வெங்காய பக்கோடாவும் வந்தது. அதை முடித்துக் கொண்டு, அனைவரும் ஓய்வெடுக்க அறைகளுக்கு சென்றனர்.

அனன்யாவும் மாடி ஏறி, வேடிக்கை பார்ப்பது போல் உட்கார்ந்துக் கொண்டாள்.

அவள் முன்பு செஸ்ஸோடு வந்து உட்கார்ந்தான் ஹரிஷ்.

“பியூட்டி செஸ் விளையாட தெரியுமா?”

“யாரை பார்த்து செஸ் விளையாட தெரியுமான்னு கேட்குற. நான் ஒரு புரோ பிளேயர் தெரியுமா?” என்றாள் பெருமையாக.

“அப்போ வா ஒரு ஆட்டத்தை போடுவோம்.” என்றவன், காயின்ஸை அடிக்கினான்.

இருவரும் மிகவும் கவனமாக விளையாடினர். ஒரு இடத்தில் ஹரிஷ் தவறு செய்ய, அனன்யா அந்த விளையாட்டில் ஜெயித்துவிட்டாள் அனன்யா.

“கொஞ்ச அசால்டா விளையாடிட்டேன். இன்னொரு மேட்ச் விளையாடலாம் வா பியூட்டி.” என்றான் ஹரிஷ்‌.

இந்த முறை ஆட்டம் ரொம்ப நேரம் சென்றது. கடைசியில் டிராவானது.

“இப்போ என்னோடு விளையாடு.” என்றான் அஸ்வின்.

அவனோ ஐந்தே நிமிடத்தில் அவளுக்கு செக் வைத்தான். 'விளையாட்டில் மட்டும் இல்லை உனக்கும் சேர்த்து தான் செக்.’ என்பது போல் அவளை பார்த்தான்.

கோபத்தில் பல்லை கடித்தவள், “இன்னொரு மேட்ச்.” என்றாள்.

“நான் ரெடி.”

இந்த முறை அனன்யா கஷ்டப்பட்டு பத்து நிமிடங்கள் தாக்குபிடித்தாள். ஆனால், ஜெயித்தது அஸ்வின் தான்.

“ஹரிஷ்… நீ எப்படியாவது அஸ்வினை தோற்கடி.” என்றாள் அனன்யா.

'உன்கிட்டையே ஜெயிக்க முடியலை. இதில் உன்ன ஜெயிச்சவர்கிட்ட நான் எப்படி ஜெயிக்க முடியும்? இருந்தாலும் பியூட்டி உனக்கு என்மேல் இவ்வளவு நம்பிக்கை இருக்க கூடாது.’ என்று மனதில் நினைத்தவன். அஸ்வினோடு விளையாட ஆரம்பித்தான்.

படுக் கேவலமாக தோற்று போனான் ஹரிஷ்.

“இன்னொரு மேட்ச் விளையாடலாமா?” என்று கேட்டான் அஸ்வின்.

“நோ….” என்றவன் ஓடியே விட்டான்.

“செஸ் கேம்ல ஜெயிக்கணுனா ராணியை திறமையா கையாளணும். செஸ்ல மட்டும் இல்லை நிஜத்திலும் ராணிக்கு தான் பவர் அதிகம். ஒரு ராஜாவுக்கு ராணி மட்டும் நல்லா அமைந்துவிட்டால் போதும் ராஜ்ஜியத்தையே காப்பாற்றிவிடலாம். இந்த ராணி நினைத்தால் இந்த ராஜாவையும் வாழவைக்க முடியும்.” என்றான் அஸ்வின்.

‘இப்படி கூட காதலை சொல்ல முடியுமா’ என்று தான் தோன்றியது அனன்யாவிற்கு இருந்தும்,

“உனக்கு வேறு வேலையே இல்லையா?”

“நான் இங்கு வந்ததே இந்த வேலையை பாக்க தான்.” என்றான் அஸ்வின்.

அவள் தலையில் கை வைத்துக் கொண்டாள்‌. அவள் அருகிலே சற்று தள்ளி படுத்தவன், அவனின் ஃபோனில் பாடலை ஓட விட்டான்,

“ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம்
நீ தான்
பூவே
காதல் தீவே
மண் மீது சொர்க்கம்
வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி இங்கு
உண்டானதே”

அவனின் ஃபோனை வேகமாக எடுத்த அனன்யா, பாட்டை நிறுத்தினாள்.

“ஃபோன்ல ஆஃப் பண்ணா என்ன? நானே பாடுவேன்.” என்று அவன் பாட ஆரம்பிக்க. உண்மையிலே அழகாக தான் பாடினான்.

ஆனால், அனன்யா, “இப்போ நீ பாடுவதை நிறுத்தலைனா. உன்னோட ஃபோனை ஏரில தூக்கி போட்டுடுவேன்.” என்றாள்.

“ நோ அனன்யா” என்றவன், வேகமாக அவனின் ஃபோனை வாங்க முயற்சித்தான்.

“நான் தர மாட்டேன். நீ என்னை கோபப்படுத்திட்டே இருக்க, கண்டிப்பா உன்னோட ஃபோனை கீழே போட போறேன்.”

அவளின் கையை பிடிக்க வந்தவன், தடுமாறி அவள் மேல் விழுந்தான்.

அவள் பயத்தோடு அவனை பார்த்த ஒரு நொடியை தனக்கு சாதகமாக மாற்றியவன், அவள் கையில் இருந்த ஃபோனை எடுத்துக் கொண்டான்.

அவளிடம், “சாரி அனன்யா… தெரியாமா தான் விழுந்தேன். இந்த ஃபோனில் இருக்கும் டேட்டா எனக்கு ரொம்ப முக்கியம். என்கிட்ட பேக் அப் கூட இல்லை. இல்லைனா உன்னோட கோபம் போக தூக்கி போட்டுக்கோன்னு சொல்லி இருப்பேன்.” என்றான்.

'நீ என்ன பைத்தியமா' என்பது போல் தான் அவனை பார்த்தாள், காரணம் அவன் வைத்திருந்தது லேட்டஸ்ட் மாடல் ஐபோன்.

“நான் ரூமுக்கு போறேன்.” என்றவள் எழுந்து செல்ல.

அஸ்வினோ கையை தலைக்கு முட்டு கொடுத்து, ராஜா ராஜா சோழன் பாட்டை ஹம்மிங் செய்தான்.

அவனை திரும்பி பார்த்தாள் அனன்யா. அவன் புருவத்தை உயர்த்தி என்ன என்பது போல் கேட்க.

அவளோ கண்களாலே, ‘நீ திருந்தவே மாட்டியா?’ என்று கேட்க.

அவனும் இல்லை என்று தலையை ஆட்டினான்.

கொஞ்ச நேரம் படுத்தவள், அப்படியே தூங்கிவிட்டாள். எட்டு மணி போல் அவளுக்கு அழைப்பு வர, எழுந்துக் கொண்டாள்‌.

போட் ஓட்டுநர் தான் அழைத்திருந்தார். இரவு உணவை டைனிங் டேபிளில் எடுத்து வைத்துவிட்டனர். படகில் இருந்தவர்களும் டைனிங் ஏரியா செல்வதாக சொன்னார்.

“ஓகே” என்றவள் காலை கட் செய்தாள்.

இரவு நேரங்களில் படகை ஓட்ட மாட்டார்கள்‌. எதாவது ஒரு ஸ்டாபில் போட்டை நிறுத்தி, கட்டி வைத்து விடுவர். போட்டில் வந்தவர்கள் மட்டும் அறையில் படுத்துக் கொள்வர்.

இரவு உணவு தயாராக இருப்பதை குரூப்பில் செய்தாள்.

அனன்யா சாப்பிட போகிறாளா என்று தன் அறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அஸ்வின். சரியாக அவள் சாப்பிட உட்கார்ந்த போது வந்து இணைந்துக் கொண்டான் அஸ்வின்.

“அனன்யா அக்கா வந்தா தான் அஸ்வின் அண்ணா சாப்பிட வருவாங்க போல” என்றான் தீபக்.

அஸ்வினை கோபமாக பார்த்தாள் அனன்யா.

“நான் எதுவும் சொல்லல. சொன்னது தீபக் தான்.” என்றான் அஸ்வின்.

சாப்பாடே முக்கியம் என்று முதல் ஆளாக வந்த ஹரிஷ் இன்னும் சாப்பிட்டு முடிச்சபாடு இல்லை. அங்க நடக்கிற எந்த பேச்சும் அவன் காதில் கூட விழவில்லை.

ஒருவழியாக ஹரிஷ் சாப்பிட்டு வர, எல்லோரும் அங்கு உட்கார்ந்திருந்தனர்.

“கொஞ்ச நேரம் டான்ஸ் ஆடலாமா?” என்றான் ஈஸ்வர்.

“நைட் நேரம், இங்கு பக்கத்தில் வீடுங்க இருக்கும், அவங்களை தொந்தரவு செய்ய கூடாது.” என்றாள் அனன்யா.

“யாராவது நல்லா சாப்பிட்டு டான்ஸ் ஆடுவாங்களா? நாம ஏன் யூநோ (UNO) விளையாடக் கூடாது.” என்றான் ஹரிஷ்.

“சூப்பரா இருக்கும்” என்றாள் ரோஷிணி.

“சரி நான் போய் கார்ட்ஸ் எடுத்துட்டு வரேன்.” என்றான் ஹரிஷ்.

“அமெரிக்காவில் நிறைப பேர் இந்த விளையாட்டு விளையாடுவாங்கனு தெரியும். ஆனா, எனக்கு விளையாட தெரியாதே.” என்றாள் அனன்யா.

“கார்ட்ஸ் எடுத்துட்டு வந்துட்டு எப்படி விளையாடுறதுனு சொல்றேன்.” என்றான் ஹரிஷ்.

“ஒவ்வொரு பிளேயருக்கும் 7 கார்டுகள் தரப்படும்.

உங்க முறை வரும்போது, மேல் இருக்கும் கார்டின்: அதே நிறம் (Color) அல்லது,
அதே எண் (Number) அல்லது,
அதே Action Cardஐ கீழேப் போடலாம்.

அப்புறம் நிறைய ஆக்சன் கார்டுகள் இருக்கும் - ஸ்கிப் (Skip), ரிவர்ஸ்(reverse), ட்ரா ப்ளஸ் டூ(draw +2), வைல்ட்(wild), வைல்ட் பிளஸ் போர்(wild ,+4) இருக்கு. அதை விளையாடும் போது சொல்றேன்.

உங்க கையில் 1 கார்டு மட்டும் மீதமிருந்தால் "UNO!" என்று சொல்ல வேண்டும்.
சொல்ல மறந்தால், மற்றவர்கள் கவனித்தால் 2 கார்டுகள் அபராதமாக எடுக்க வேண்டும்.

முதலில் அனைத்து கார்டுகளையும் முடித்த பிளேயரே அந்த விளையாட்டை ஜெயித்தவர்.” என்றான் ஹரிஷ்.

“ஓகே விளையாடலாம்” என்றாள் அனன்யா.

“சரிவாங்க மாடியில் போய் விளையாடலாம்.” என்றான் ஹரிஷ்.

அனன்யாவின் இரு பக்கமும் அஸ்வின் மற்றும் ஹரிஷ் உட்கார்ந்துக் கொண்டனர்.

“நான் வேற இடத்துக்கு போறேன்” என்று அனன்யா எழ போக.

“ஹே! உனக்கு இன்னும் முழுசா விளையாட தெரியாது. இரண்டு ஆட்டம், எப்படி விளையாடுறதுன்னு, நான் சொல்லித் தரேன்.” என்றான் ஹரிஷ்.

அதன்பின் அவளும் அங்கே அமைதியாக உட்கார்ந்துக் கொண்டாள்.

இருவரும் சொல்லி தரேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு, அவளின் கார்ட்ஸ் முழுவதையும் பார்த்தனர்.

ஹரிஷ் வேண்டும் என்றே அஸ்வினுக்கு பிளஸ் டூ, ப்ளஸ் போர் கார்டு போட வைக்க.

அஸ்வினும் ரிவர்ஸ் கார்டு போட்டு, ஆட்டத்தை ஹரிஷ் பக்கம் திருப்பிவிட்டு. அனன்யாவிடம் பிளஸ் போர் கார்டு இருந்தால் தன்னிடம் உள்ள பிளஸ் போர் கார்டையும், அவளிடம் உள்ள பிளஸ் போர் கார்டையும் சேர்த்து எட்டு கார்டுகளை ஹரிஷிற்கு தருவான் அஸ்வின்.

அதே அவளிடம் பிளஸ் போர் கார்டு இல்லை என்றாள் ரிவர்ஸ் கார்ட் போட்டு, ஆட்டத்தை ஈஸ்வர் பக்கம் திருப்பி விடுவான். அதாவது அஸ்வினுக்கு வலது பக்கம் உட்கார்ந்திருந்தான் ஈஸ்வர். அதன்பின் ஈஸ்வருக்கு பிளஸ் போர் கார்டு போடுவான்.

“அண்ணா…. இருந்தாலும் இது டூ மச். அனன்யா அக்காவுக்கு இதை நீங்க போடக்கூடாதாண்ணே?. எப்ப சான்ஸ் கிடைக்கும்னு வைட் பண்ணி ரிவர்ஸ் கார்டு போட்டு, எனக்கு பிளஸ் போர் போடுறீங்களே நியாமா?” என்றான் ஈஸ்வர்.

“விளையாட்டில் இதெல்லாம் சாதாரணம் ஈஸ்வர்.” என்றான் அஸ்வின்.

“கடவுளே… அடுத்த பிறவியில் என்னை அழகான பெண்ணா பிறக்க வை.” என்றான் ஈஸ்வர்.

“டேய் பேசாம விளையாடு டா.” என்றான் தீபக்.

அனன்யாவிற்கு ஆட்டம் புரிய ஆரம்பித்தது. அவளே விளையாட ஆரம்பித்தாள். இருந்தும் இருவரும் அவளின் கார்டை பார்த்தனர்.

ஹரிஷ் செய்வதை தான் அஸ்வின் கவனித்துக் கொண்டிருந்தான், அவனும் அதே போல் அஸ்வினை தான் பார்த்தான்.

நேரம் போவதே தெரியாமல், சண்டையோடு விளையாடிக் கொண்டிருந்தனர். வெட்டு, குத்து தான் நடக்கவில்லை அந்த அளவிற்கு யூநோ விளையாட்டில் சண்டை தான் வரும்.

கடைசியில் தீபக் தான் வெற்றி பெற்றான்.

“இந்த விளையாட்டு ரொம்ப சுவாரசியமா இருக்கு. அதோட கவனமா விளையாடணும் போல. சரி சரி ரொம்ப நேரமாச்சு தூங்க போகலாமா?” என்றாள் அனன்யா.

“இரு ஒரு நிமிஷம்.” என்ற ஹரிஷ், லைட்டை நிறுத்துவிட்டு கீழே சென்றான்.

“ஏன் லைட்ட ஆஃப் பண்ண?” என்று அனன்யா கேட்டுக் கொண்டே இருக்க, அவன் ஓடி விட்டான்.

லைட் போட எழுந்த அனன்யாவின் கையை பிடித்து கீழே உட்கார வைத்தான் அஸ்வின்.

அவனை திரும்பி அனன்யா பார்க்க. அவனும் அவளை தான் பார்த்தான். இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டது. அப்போது சரியாக ஹரிஷ் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கேக் எடுத்து வந்தான்.

இருவரின் கண்களும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பளபளத்தது.

“ஹாப்பி பர்த்டே அனன்யா…” என்ற ஹரிஷ் அவள் முன்பு கேக்கை நீட்டினான்.

அஸ்வின் மீது இருந்த பார்வையை விலக்கிக் கொண்டவள்.

“எதுக்கு அதெல்லாம்” என்றாள் அனன்யா.

“ஃபர்ஸ்ட் கேண்டிலை ப்லோ பண்ணிட்டு, கேக் கட் பண்ணு. அப்புறம் பேசிக்கலாம்.” என்றான் ஹரிஷ்.

அவளும் வேறு வழி இல்லாமல், கேக்கை கட் செய்ய, அவளுக்கு கை தட்டி, பிறந்த நாள் பாட்டு பாடினர்.

எல்லோருக்கும் கேக் கட் செய்து தந்தால் அனன்யா. அனைவரும் அவளுக்கு தனிதனியாக வந்து பிறந்த நாள் வாழ்த்து சொன்னார்கள். கஷ்டப்பட்டு சிரித்தாள் அனன்யா.

எல்லோரும் சென்றுவிட்டனர். அஸ்வின், ஹரிஷ், அனன்யா மட்டுமே இருந்தனர்.

அனன்யா கால்களில் முகத்தை மறைத்துக் கொண்டிருந்தாள். “நாங்க ட்ரீட் கேட்க மாட்டோம். நீ ஏன் ஃபீல் பண்ற?” என்றான் ஹரிஷ்.

வேகமாக எழுந்தாள், ஹரிஷ் ஒரு நொடி பயந்து பின்னால் போக, அஸ்வின் அவளை நேராக பார்த்தான்.

அஸ்வின் அருகில் சென்ற அனன்யா, அவனின் சட்டையை பிடித்து, “எங்க அம்மாவை தவிர வேற யாருக்கும் என் பிறந்தநாள் தெரியாது. உனக்கு எப்படி தெரிந்தது?” என்றாள் கோபமாக.

வேகமாக அவர்கள் அருகில் வந்த ஹரிஷ், “அனன்யா… நான் தான் இந்த ஏற்பாடு பண்ணேன்.” என்றான்.

“இல்லை… கண்டிப்பா இவன் தான் இந்த ஏற்பாடை செய்து இருப்பான்.” என்றாள்.

“இல்லை… நான் தான்.” என்றான் ஹரிஷ்.

“உனக்கு என் பிறந்தநாள் தெரிய வாய்ப்பே இல்லை. இங்கு இருக்கிற இவனை தவிர வேற யாருக்கும் தெரியாது. நான் எங்கேயுமே என் பிறந்தநாளை குறிப்பிட மாட்டேன்.” என்றாள்.

“அப்போ அஸ்வினுக்கு மட்டும் எப்படி தெரியும்னு நீ நினைக்கிற?” என்றான் ஹரிஷ்.

“இவனுக்கு தெரியும் என்று தான் என் மனசு சொல்லுது. அதான் அவன் கிட்ட கேட்கிறேன். நானும் தான் அவனுக்கு எப்படி தெரியும் என்று கேக்கிறேன்?” என்றாள்.

“இங்க பாரு அனன்யா. உன்னோடு வீடியோவில் யாரோ உன் ஸ்கூல் ப்ரெண்ட் ரதி, ‘இன்னைய வீடியோவில் தேதியை போட்டு, ஹாப்பி பர்த்டே டூ யூ அண்ட் மீ' என்று கமெண்ட் பண்ணி இருக்காங்க. இதை பார்த்து தான் இன்னைக்கு உனக்கு பிறந்த நாள்னு எனக்கு தெரியும், அதான் உனக்கு சர்ப்ரைஸா கேக் வெட்ட ஏற்பாடு பண்ணேன்” என்றான் ஹரிஷ்.

அஸ்வின் மேல் சாய்ந்த அனன்யா, “எங்க அம்மா இருக்கும் போதே பிறந்தாள் கொண்டாட மாட்டேன். ஏன் இப்படி செய்தீங்க. இன்னைக்கு என் கூட எங்க அம்மா கூட இல்லை.” என்றவள் அழ ஆரம்பித்தாள்.

அவளை கொஞ்சம் அழவிட்டவன் பின், “உங்க அம்மா இல்லைன்னு யாரு சொன்னா?” என்றான் அஸ்வின்.

அழுவதை நிறுத்தி அவனை பார்த்தாள்‌ அனன்யா.

“அவங்க ஆத்மா உன் சந்தோஷத்தை பார்க்க உன் கூட தான் இருக்கும். உனக்கு நல்ல வாழ்க்கை அமையும் வரை உங்க அம்மா ஆத்மா உன்னை விட்டு எங்கும் போகாது.

இப்பவும் நீ கேக் கட் பண்ணதை பார்த்து உங்க அம்மா ஆத்மா சந்தோஷப்பட்டிருக்கும். நீ பிறந்த நாள் கொண்டாடதப்போ உங்க அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க?”

அவன் சொன்னது உண்மை தான். ஒவ்வொரு வருடமும் அவளின் அம்மா அவளை பிறந்தநாள் கொண்டாடி சொல்லி கெஞ்சுவார். ஆனால், இவள் கொண்டாட மாட்டாள். அதனால், பதில் ஏதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றாள் அனன்யா.

“நீ பிறந்ததை நினைத்து உங்க அம்மா, ஒரு நாள் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டாங்க. எல்லா அம்மாவும் அப்படி தான் நினைப்பாங்க. இனிமேலாவது பிறந்தநாள் கொண்டாடு உங்க அம்மா ஆத்மா சந்தோஷப்படும். எதுவா இருந்தாலும் காலையில் பேசிக்கலாம். இப்போ போய் தூங்கு.” என்றான் அஸ்வின்.
 

Author: Vishakini
Article Title: நயவனின் நயவள் இவளோ - 10
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Magizh kutty

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
கண்டு பிடிச்சிட்டா அனன்யா.....
ஆனாலும் கேடிங்க ஏதேதோ சொல்லி தப்பிச்சிட்டாங்க.....