நயவனின் நயவள் இவளோ - 15

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113

அத்தியாயம் 15

“என்ன?” என்றாள்.

“ஒன்னும் இல்லை.” என்றான் அஸ்வின்.

“ஓகே.” என்றாள்.

“நீ எப்போ போவன்னு கேளு? இன்னும் ஏன் இங்கே இருக்கன்னு கேளு‌?” என்றான்.

“...” அவனின் கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.

“நான் போகணும்.” என்றவள் ரோஜா இருக்கும் அறை நோக்கி சென்றாள்.

“ரோஜா… உங்க பேக் எடுத்துக்கிட்டா, வேனை அனுப்பிடுவேன்.” என்றாள் அனன்யா.

ரோஜா ராஜேஷை இடம், “போய் பேகை எடுத்துட்டு வாங்க.” என்றாள்.

“ரோஜா… உங்க கார் வர்கலாலே இருக்கு.” என்றாள் அனன்யா.

“டிரைவர் கிட்ட சொல்லிட்டேன் அனன்யா. அவர் இங்க தான் ஓட்டிட்டு வராரு.” என்றாள் ரோஜா.

“ஓகே. நான் இங்க பக்கத்தில் இருக்க ஹோட்டல்ல தான் தங்குறேன். ஏதாவது வேணும்னா கால் பண்ணுங்க.”

“ஓகே அனன்யா.”

ராஜேஷ் வந்துவிட அனன்யா‌ வெளியே வந்தாள்.

அனன்யா, வேனில் இருந்த தன் பைகளை எடுத்துக் கொண்டவள் அவரிடம், “அண்ணா… எவ்வளவு செலவுனு கணக்கு செய்து வைங்க. நான் வர்கலா வந்ததும் மீதி பணம் தரேன்.” என்றாள் அனன்யா.

“ சரி மா” என்று அவரும் சென்றுவிட்டனர். அனன்யா வெளியே வர, அஸ்வின் வெளியே நின்றான்.

அவனை பார்த்தவளுக்கு சிரிப்பு தான் வந்தது. “என்ன ஊருக்கு திரும்பி போக மனசு வரலையா? கேரளாவை அவ்வளவு பிடிச்சிருக்கா? எனக்கும் கேரளாவை அவ்வளவு பிடிச்சி போச்சு‌‌.”என்றாள்.

“இல்லை உன் விட்டு போக மனசு வரலை. உன்னை அவ்வளவு பிடிச்சி போச்சு” என்றான்.

“நீங்க ஊருக்கு போங்க. பத்து நாளில் எல்லாம் சரியாகிவிடும்.” என்றாள் அனன்யா.

“சரி வா. நான் உன்னை ஹோட்டல்ல விட்டுட்டு போறேன்.” என்றான் அஸ்வின்.

“இங்கிருந்து வாக்காபிள் டிஸ்டன்ஸ் தான் நானே போயிடுவேன்.”

“சும்மா… வா அனன்யா. உன்னை நம்பி நான் கேரளாவே வந்திருக்கேன். என்னை நம்பி பக்கத்தில் இருக்க ஹோட்டலுக்கு என்கூட வர மாட்டியா?”

அவள் அவன் வண்டியின் பின் பக்கம் ஏறிக் கொண்டாள். அஸ்வினும் அவளோடு பின் பக்கம் ஏறிக் கொண்டான்.

டிரைவர் மியூசிக் ப்ளேயரை ஆன் செய்ய,

“ராஜ ராஜசோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம்
நீ தான் பூவே
காதல்தீவே
மண் மீது சொர்க்கம்வந்து பெண்ணாக ஆனதே
உல்லாச பூமி
இங்கு உண்டானதே”

என்று பாட ஆரம்பித்தது.

இருவருமே புன்னகையோடு பார்த்துக் கொண்டனர். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

ஹோட்டல் வந்துவிட‌, அனன்யா இறங்கிக் கொண்டவள், “தேங்க்ஸ் அஸ்வின்.” என்றாள்.

“அவ்வளவு தானா அனன்யா.”

“பாய்.” என்றவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

அவனின் வண்டி செல்ல. கண்ணை துடைத்துக் கொண்டே உள்ளே சென்றாள் அனன்யா.

குளித்து, உடை மாற்றிக் கொண்டு வெளிவந்த அனன்யா, ஒரு காஃபி மட்டும் இன்டர்காம் மூலம் வரவலைத்தாள்.

காஃபி உள்ளே போக, கொஞ்சம் தெம்பு வந்தது. “வீட்டுக்கு போனதும் எல்லோரும் மெசேஜ் போடுங்க.”என்று குரூப்பில் மெசேஜ் அனுப்பினாள் அனன்யா.

‘காலை பொழுது எவ்வளவு அழகா இருந்தது ஈவினிங் இப்படி ஆகும்னு நினைக்கலை. என்னோட முதல் அனுபவமே இப்படி முடியும்னு நினைக்கலை’ என்று யோசித்துக் கொண்டே தூங்கி போனாள் அனன்யா.

காலையில் தாமதமாகவே எழுந்தவள், ஃபோன் பார்க்க, அவளுக்கு பத்து முறைக்கு மேல் ஒரு நம்பரில் இருந்து கால் வந்திருந்தது‌.

“ச்சை‌… ஹாஸ்பிடல்ல இருந்தப்ப ஃபோனை சைலன்ட்ல போட்டு இருக்கேன் அதுக்கு அப்புறம் அதை மாற்றவே இல்லை போல்.” என்று பேசியவள், அந்த நம்பருக்கு கால் செய்தாள்.

“ஹலோ யார் பேசுறது?” என்றாள்.

“மேடம் நாங்க xxx ஏஜென்சியில் இருந்து பேசுறேன். உங்களை மீட் பண்ண முடியுமா?”

“என்ன விஷயம்?”

“மேடம் ப்ளீஸ் நேரில் பேசிக்கலாம்.” என்றனர்.

“சரி பத்து மணிக்கு இந்த ரெஸ்டாரண்டுக்கு வாங்க.” என்றாள் அனன்யா.

குரூப்பில் எல்லோருமே சென்றுவிட்டதாக மெசேஜ் செய்திருந்தனர். பதில் அனுப்பிவிட்டு, குளிக்க சென்றாள்.

சரியாக நேரத்துக்கு ரெஸ்டாரன்ட் சென்றவள், அதன்பின் அவர்களோடே ஹாஸ்பிடல் வந்தாள் அனன்யா.

“ரோஜா…”

“வாங்க அனன்யா.”

“உன்னை பார்க்க அந்த ஏஜென்சி ஓனர் வந்திருக்கார்.” என்றாள்.

“வாங்க. என்ன விஷயம்?” என்றாள் ரோஜா.

“மேடம்… உங்களுக்கு காம்பன்சேஷன் தர ரெடி‌. எங்க ஏஜென்சி பற்றி தப்பா சோசியல் மீடியாவில் போடாதீங்க.” என்றார்.

“தப்பு என்மேல தான். எனக்கு எந்த காம்பன்சேஷனும் தேவை இல்லை.” என்றாள் ரோஜா.

அவர் அனன்யாவை பார்த்து, “மேடம்… நீங்க பெரிய சோசியல் மீடியா இன்பிளுயன்சரா இருக்கீங்க. உங்களுக்கு பணம் தரேன் மேடம்.” என்றார்.

“நான் தான் முன்னாடியே சொல்லிட்டேனே சார். தப்பு உங்க மேல் இல்லை அதனால், நான் இந்த இன்சிடென்ட்டை பற்றி எந்த வீடியோவும் போட மாட்டேன். எனக்கு எந்த பணமும் தேவை இல்லை. பாதிக்கப்பட்டவங்க கிட்ட கேட்க சொன்னேன். அவங்களும் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. இந்த பிரச்சினையை இத்தோடு விட்டுங்க.” என்றாள்.

“உங்க கூட வந்தவங்க…” என்று அவர் ஆரம்பிக்கும் போதே.

“அவங்களாலையும் உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது. வேற யாராவது வீடியோ போட்டால், நான் பொறுப்பாக முடியாது. என்னை சார்ந்தவர்கள் யாரும் போட மாட்டாங்க.”

“ரொம்ப தேங்க்ஸ் மேடம்.” என்றவர் சென்றுவிட்டார்.

“அவரே பணம் தரேனு சொல்லும் போது ஏன் வேண்டாம்னு சொல்றீங்க?” என்றான் ராஜேஷ்.

அவனை கோபமாக முறைத்தாள் ரோஜா.

“ரோஜா… எப்போ டிஸ்சார்ஜ் பண்றதா சொன்னாங்க?” என்றாள் அனன்யா.

“இப்போ டாக்டர் வந்து பார்த்த பின் டிஸ்சார்ஜ் பண்ணுவாங்கன்னு சிஸ்டர் சொன்னாங்க.”

“ஓகே நான் வெளியே வைட் பண்றேன்.”

அனன்யா குரூப்பில், “ரோஜா கீழே விழுந்த விஷயம் பற்றி சோசியல் மீடியாவில் ஷேர் செய்ய வேண்டாம். ஏஜென்சி ஓனர் வந்து பேசினார். தப்பு ரோஜா மேல் தான் என்பதால் ரோஜாவும் காம்பன்ஷேசன் வேண்டாம்னு சொல்லிட்டாங்க.அதனால் ஏஜென்சியை பற்றி யாரும் பேச வேண்டாம்.” என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாள்‌.

டாக்டர் ரோஜா நன்றாக இருக்கிறாள் என்ற சொன்ன பின் ஒரு மணி நேரத்தில் அனைத்து வேலைகளையும் முடிந்து, ரோஜா காரில் ஏறினாள்.

“ஓகே பாய் ரோஜா. டேக் கேர்.” என்றாள்.

“தேங்க்ஸ் அனன்யா பாய்.” என்றாள்.

பஸ் ஸ்டாப் வந்து நின்ற அனன்யா பத்து முறை திரும்பி பார்த்துவிட்டாள்‌.

'ஏன் தான் திரும்பி பார்க்கிறேனோ' என்று யோசித்தவள், திருவனந்தபுரம் பஸ் வர, அதில் ஏறிக் கொண்டாள்.

ஹெட் போனை காதில் மாட்டிக்கொண்டவளின் எண்ணமோ, ‘நான் ஆரம்பத்தில் இருந்தே தனியா தான் இருந்தேன். அப்போ இல்லாத தனிமை உணர்வு, இன்னைக்கு அதிகமா இருக்கு. ஏன் தான் இந்த ட்ரிப் ஆர்கனைஸ் செய்தேனோ' என்று யோசித்தாள்‌.

திருவனந்தபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்துவிட. கீழே இறங்கியவள், ஜூஸ், ஸ்னாக்ஸ் வாங்கிக் கொண்டு வர்கலா பஸ் ஏறினாள்.

'இந்த உணர்வு இரண்டு நாளில் சரியாகிடும். வர்கலா போயிட்டா எல்லாம் பழையபடி மாறிவிடும்.’ என்று நினைத்தாள்.

ஜூஸ் குடித்து முடித்தவள் ஜன்னலில் சாய. அவள் மனமோ, ‘அஸ்வின் இருந்தா, அவன் தோளில் சாய வைத்திருப்பான்.’ என்று நினைத்தது.

நேராக உட்கார்ந்து தலையில் கை வைத்துக் கொண்டாள் அனன்யா.

பின்னால் உட்கார்ந்திருந்த யாரோ ஒருவர், “பியூட்டி ஃபுல்” என்று சொல்ல.

தலையில் அடித்துக் கொண்டவள், மீண்டும் ஹெட்போனை மாட்டிக்கொண்டாள்.

பாட்டு அவளை அமைதிப்படுத்தியது. இரண்டு மணி நேர பயணத்திற்கு பின் வர்கலா வந்துவிட, நிம்மதியாக மூச்சு விட்டாள் அனன்யா.

அவள் எப்போதும் தங்கும் ஹாஸ்டல் சென்றவள், மதிய உணவை முடித்துக் கொண்டு, அறைக்கு வந்தவள் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு. குளித்து விட்டு வெளியில் வேன் டிரைவரை பார்க்க சென்றாள்.

அவர் தந்த செலவு கணக்கு சீட்டை சரி பார்த்த அனன்யா, மீதி பணத்தை தந்துவிட்டு மீண்டும் ஹாஸ்டல் வந்தாள்.

ட்ரிப்பிற்கு ஆனா மொத்த செலவு கணக்கையும் சரி பார்த்தாள்.

ட்ரிப் வந்தவர்கள் அட்வான்ஸ் ஆக கொடுத்த பணத்தை கழித்து விட்டு அதன் பின் ஆன செலவிற்கான கணக்கை வாட்ஸ் அப்பில் அனுப்பினாள்.

இரவு உணவை முடித்துவிட்டு அறைக்கு வந்த அனன்யா சோசியல் மீடியாவை ஒரு பார்வை பார்த்தாள். அவள் எதிர்பார்த்ததோடு அதிக வியூஸ் வந்திருந்தது.

அதுவும் ஈஸ்வர் டிரோன் மூலம் எடுத்த வீடியோஸ் எல்லாம் அதிக வியூஸ் போயிருந்தது. கமெண்ட் செக்‌ஷன் முழுக்க, அடுத்த ட்ரிப் எப்போது?, எங்களையும் கூட்டிபோங்க? என்பதாக தான் இருந்தது.

'இந்த ட்ரிப்பை விட்டே நான் இன்னும் வெளிவரலை. அதுக்குள் அடுத்த ட்ரிப்பா. இதைப் பற்றி நாளைக்கு போடும் வீடியோவில் சொல்ல வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டாள்.

அப்போது அவள் ஃபோன் இசைத்து. எடுத்து காதில் வைத்தவள், “ஹலோ” என்றாள்.

“பியூட்டி எப்படி இருக்க?”

“நாம நேற்று தான் பார்த்தோமே. அதுக்குள்ள எப்படி இருக்கன்னு கேட்குற ஹரிஷ்.”

“நாம பார்த்து ஒரு நாளைக்கு மேல் ஆகுது. ஐ மிஸ் யூ சோ மச். என்னால் உன்னை பிரிய முடியலை, அதான் வரும்போது சரியா கூட பாய் சொல்லலை.” என்றான ஹரிஷ்.

“ஐ டூ மிஸ் யூ ஹரிஷ். ரொம்ப லோன்லியா பீல் பண்றேன்.”

“கொஞ்ச நாள்ல சரியாகிவிடும் பியூட்டி. நீ வர்கலா போயிட்டீயா?”

“வந்துட்டேன்.”

“அந்த ராங்கி ஆன்ட்டி கிளம்பிட்டாங்களா?”

“ஹரிஷ்…”

“பின்ன என்ன பியூட்டி அவங்க ரொம்ப ஆட்டிட்யூடா இருந்தாங்க. அவங்க என்னமோ மகாராணி மாதிரியும், நாம அவங்களுக்கு சேவகம் செய்ய வந்தவர்கள் போலையும் நடந்துக்கிட்டாங்க.”

“அந்த இன்சிடென்ட்க்கு பிறகு ரொம்ப மரியாதையா தான் நடந்துக்கிட்டாங்க‌.”

“சாவை பார்த்துட்டு வந்த பின் தான் மரியாதை வருது.”

“சரி இனி அவங்களை பற்றி பேச வேண்டாம்.” என்றாள்‌.

“சரி..‌. நீ எப்போ சென்னை வர.”

“இப்போ வர பிளான் இல்லை.”

“பியூட்டி நான் பாராசெய்லிங் பண்ணவே இல்லை.” என்றான் வருத்தமாக.

“அதுக்கென்ன அடுத்த ட்ரிப்க்கு நீயும் வா, உன்னை பாராசெய்லிங் கூட்டிட்டு போறேன்‌.” என்றாள்‌.

“ட்ரிப்பிற்கு வரேனோ இல்லையோ உன்னை பார்க்க கண்டிப்பா வருவேன்.” என்றான் ஹரிஷ்.

“வா ஹரிஷ். சரி இப்போ தூக்கம் வருது பாய்.” என்றாள் அனன்யா.

காலையில் நிதானமாக எழுந்த அனன்யா, சாப்பிட்டுவிட்டு ஊரிலிருந்து எடுத்து வந்திருந்த அழுக்கு துணிகளை எடுத்தாள். அப்போது அவள் கண்ணில் பட்டது அவள் பிறந்தநாள் அன்று போட்டிருந்த உடை.

'ஹரிஸ்ஸும், அஸ்வினும் என் பிறந்தநாள் அன்னைக்கு என்னென்ன ஆர்ப்பாட்டம் செய்தாங்க. இப்படி ஒரு தடவை கூட நான் ஸ்பெஷலா ஃபீல் பண்ணது இல்லை‌.’

தலையை தட்டி நிஜத்திற்கு வந்தவள், துணைகளை துவைக்க எடுத்து சென்றாள்.

வேலைகளை முடித்தவள் வெளியே போக விரும்பவில்லை. அமைதியாக பேட்டில் படுத்திருந்தாள். அவள் இப்படி சோர்ந்ததே இல்லை. அவள் மனதை படிக்க ஆரம்பித்தாள்,

'நான் ஏன் இப்படி இருக்கேன்? எனக்கு என்ன பிரச்சினை? இதில் இருந்து நான் வெளியவந்தே ஆகணும்‌. நான் தனிமையா உணர காரணம் மற்றவர்களா? இல்லை அஸ்வினா?’

டிரஸ்ஸை மாற்றிக் கொண்டு வெளியே சென்றாள் அனன்யா. சவுத் கிளிப் கஃபேவிற்கு சென்றாள். தனக்கான காஃபியை ஆடர் செய்து, கடலை பார்த்துக் கொண்டிருந்தாள்‌.

காஃபியை குடித்தவளுக்கு அஸ்வினோடு நிகழ்ந்த நிகழ்வே ஞாபகத்திற்கு வந்தது.

'ஒரு வாரம் போகட்டும் அனன்யா. பின் எதுவாக இருந்தாலும் முடிவு செய்யலாம்.’ என்ற பின் தான் அவள் மனம் அமைதியானது.

அனன்யாவிற்கு கால் வந்தது. “மேடம்… நாங்க xxx ரிசார்ட்ல இருந்து கால் பண்றேன். நீங்க எங்க ரேசாட்ல உங்க ட்ரிப் குரூப்பை தங்கவைத்தீங்கனா, உங்களுக்கு கமிஷன் தரோம்.”

“பணம் மட்டும் என்னோட குறிக்கோள் இல்லை. என்னை நம்பி வரவங்களுக்கு நான் நல்ல அனுபவத்தை தரணும் அவ்வளவு தான்.”

“மேடம் எங்க ரிசார்ட்டுக்கு ஒரு முறை வந்து பாருங்க. உங்களுக்கு பிடிச்சா மேற் கொண்டு பேசலாம்.”

“உங்க டீடைல்ஸ்ஸ மெயில் ஐடிக்கு அனுப்புங்க சார். ஒரு நாள் வந்து ரிசார்ட்டை பார்த்துடுறேன் அப்புறம் முடிவு செய்துக்கலாம்.” என்றாள் அனன்யா‌.

இது போல் யாருமே இதற்கு முன் அவளை தொடர்பு கொண்டதில்லை.

'இந்த ட்ரிப் என்னை புரொபஷனலா ஒரு ஸ்டெப் உயர்த்தி இருக்கு போல.’ என்று நினைத்துக் கொண்டாள்.

மறுபடியும் அவளின் ஃபோன் இசைத்தது. இந்த முறை கவின் அழைத்திருந்தான்.”ஹலோ கவின் எப்படி இருக்கீங்க?”

“நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?”

“நான் நல்லா இருக்கேன்.”என்றாள்

“ட்ரிப் எல்லாம் நல்லபடியா முடிந்ததா?”

“நல்லபடியா முடிய வேண்டியது, கடைசி நாள் மட்டும் ஒரு பிரச்சினை நடந்தது.”

“என்ன பிரச்சினை?”

“ரோஜா பாராசெய்லிங் செய்யும் போது மேலே 100 அடியில் இருந்து கீழே கடல்ல விழுந்துட்டாங்க” என்றவள் சுருக்கமாக நடந்ததை சொன்னாள்.

“ஒரு விஷயம் செய்யும் போது இதுமாதிரி பிரச்சினை வரத்தான் செய்யும். நாம தான் தைரியமா அந்த பிரச்சினையை சரி செய்து, வெற்றியை நோக்கி போகணும்.

இந்த விஷயத்தை சரியா கையாண்டிருக்க. இனி நீ அடுத்தக் கட்டத்திற்கு போகும் போது, இன்னும் பெரிய பிரச்சினை வரும், அதையும் இது மாதிரி சரியா கொண்டு போகணும்.” என்றான்.

“ஓகே கவின். அப்புறம்?”

“நீ தான் சொல்லணும்.”

“வேற எதுவும் இல்லை கவின் கால் கட் பண்ணவா?”

“ஒரு நிமிஷம் அனன்யா‌.”

“என்ன கவின்.”

“எப்பவும் கால் கட் பண்றதுக்கு முன்னாடி ஒன்னு கேட்பீயே?”

“என்ன கேட்பேன்?” என்றவளுக்கு நிஜமாகவே எதுவும் ஞாபகம் வரவில்லை.

“உங்க அம்மா பார்த்த பையன் வந்தாங்களானு.”

“ஆமா கவின். இன்னைக்கு ஏதோ யோசனையில் இருந்துட்டேன்.”

“ஒரு பையன் வந்தார். உங்க அம்மா இறந்த விஷயம் அவருக்கு லேட்டா தான் தெரிந்ததாம், அப்போ அவரு வேலை விஷயமா வெளிநாட்டில் இருந்தாராம்‌. இப்போ தான் வேலை முடிந்து இந்தியா வந்தாராம். வந்ததும் உன்னை தான் பார்க்க வந்திருக்காரு.

நான் நீ கேரளா போயிருப்பதா சொன்னேன். மும்பையில் முக்கியமான வேலை இருக்காம், அதை முடிய ஒரு வாரம் ஆகுமாம். முடிந்ததும் அவரே உன்னை பார்க்க கேரளா போறதா என் கிட்ட சொன்னார். உன் நம்பர் கொடுத்திருக்கேன்.”

“அப்படியா கவின் ஓகே. நான் பார்த்துக்கிறேன். பாய்”

'அம்மா எனக்காக தேர்ந்தெடுத்த பையன் என்னை பார்க்க வரார். அம்மா என்கிட்ட கடைசியா கேட்டது இவரை கல்யாணம் செய்துக்க தான். நானும் அவருக்காக தான வைட் பண்ணேன். ஆனா இந்த விஷயம் ஏன் எனக்கு இப்போ சந்தோஷம் தரமாட்டேங்குது ?’ என்ற கேள்விக்கு பதிலைத் தான் அவளுள் தேடுகிறாள்.
 

Author: Vishakini
Article Title: நயவனின் நயவள் இவளோ - 15
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: Magizh kutty

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
அட அது அஷ்வின் தான் அனன்யா....
இந்த கவின் யாருனு இன்னும் சொல்லவே இல்லையே