அத்தியாயம் 2
“ஹாய் காய்ஸ் நீங்க எல்லாம் கேட்டுக் கொண்டதால் வர்கலாவுக்கு ஒரு ட்ரிப் ஆர்கனைஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கேன். டென் டேஸ் இன் அண்ட் அரௌண்ட் வர்க்கலா. சீரியஸா ட்ரிப் வர விரும்புறவங்க மட்டும் வாட்ஸ் அப்ல டெக்ஸ்ட் பண்ணுங்க. மத்தவங்க எங்களை யூடியூப்ல ஃபாலோ பண்ணுங்க” என்று தன் வீடியோவை முடித்து இருந்தால் அனன்யா.
அவள் நினைத்தது போல் அதிகமான பாலவர்ஸ் அவளிடம் விபரங்கள் கேட்டு இருந்தனர்.
அவள் தயாராக வைத்திருந்த பிடிஎஃப் ஃபைலை அனைவருக்கும் அனுப்பினாள். அதில் பத்து நாட்கள் பார்க்க போகும் இடங்கள், தங்கும் இடம், வண்டி வாடகை, அவளின் வேலைக்கான பணம் போன்ற தகவல்கள் தெளிவாக இடம்பெற்றிருந்தது.
ஒரு வாரம் ஓடி இருந்தது. பணம் அனுப்பியவர்களின் விபரங்களை தனியாக எடுத்து வைத்திருந்தாள். சிலர் முழு பணம் அனுப்பி இருந்தனர், சிலர் ஆன்லைன் பிராட் பயத்தில் பாதி பணம் அனுப்பியிருந்தனர்.
“ஹாய் காய்ஸ் ஃபைனலி நம்ம வர்கலா ட்ரிப் கமிங் ஃப்ரைடே நைட் ஆர் சாட்டர்டே மார்னிங் ஸ்டார்ட் ஆகப்போகுது. இது என்னோட ஃபர்ஸ்ட் ட்ரிப் ஆர்கனைஸ் என்பதால் டென் மெம்பர்ஸ் தான் ஆட் பண்ணி இருக்கேன். இதோட சக்சஸ் பொறுத்து ஃப்யூச்சர்ல நிறைய பேரோடு அடிக்கடி இப்டி பிளான் போடுறேன்.
இப்போ நம்ம ட்ரிப் ல என்னோடு சேர்ந்து வர்கலா சுற்று பார்க்க போகிறவங்களோட நேம் சொல்றேன்.
நியூ மேரிட் கப்பல் மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராஜ், மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஜெய் அவங்களோட ட்வின்ஸ் தேவ், தியா, ட்ரிப்பை ஃபன்னா கொண்டு போக காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் ஈஸ்வர், ரோஷினி, ஹரிஷ், தீபக், ஸ்வாதி.
என்ன மாதிரியே ஒரு சோலோ ட்ராவலர். ஒரு சேஞ்சுக்கு நம்மளோட ஜாயின் பண்றாரு மிஸ்டர் அஸ்வின்.
சோ டோட்டலி டென் மெம்பர்ஸ் வித் டூ கிட்ஸ். இனி ட்ரிப் ல என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்க, என்னோட கனெக்ட்டாகி இருக்க, என்னோட சேனல் சோலோ ட்ராவல் வித் அனன்யாவை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க டியர்ஸ். பாய் பிரண்ட்ஸ்.”
பதினைந்து பேர் அமரக்கூடிய மினி வேன் ஏற்பாடு செய்தாள். வெள்ளி இரவு பத்து மணிக்குள் வருபவர்களை மட்டும் இவள் சென்று பிக்கப் செய்வதாக முடிவு செய்யப்பட்டது.
மற்றவர்கள் வர தாமதமாகும் என்று அனன்யாவிற்கு மெசேஜ் அனுப்பியிருக்க. மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராஜ் ஒன்பது மணி போல் ஹோட்டலிற்கே நேராக வருவதாக தகவல் தந்திருந்தனர்.
அனன்யா சரியான நேரத்திற்கு அங்கு சென்று அவர்களை வரவேற்க காத்திருந்தாள்.
மிஸஸ் ராஜ் தாங்கள் ஹோட்டல் வந்துவிட்டதாக மெசேஜ் அனுப்ப. அனன்யா கையில் பூங்கொத்தோடு முகத்தில் புன்னகை என்னும் ஒப்பனையோடு அவர்களை வரவேற்க கதவருகில் சென்றாள்.
அவர்களை பாரத்ததும் அனன்யாவின் புன்னகை இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. கண்கள் கலங்க தயாராக இருந்தது. மற்றவர்களுக்கு காட்சி பொருளாக விரும்பாத அனன்யா கஷ்டப்பட்டு தன்னை சமன் செய்து கொண்டு, “ வெல்கம் டு வர்கலாமிஸ்டர் அண்ட் மிஸஸ் ராஜ். ஐ எம் அனன்யா, யூவர் கைடு” என்றாள்.
“ஹாய் அனன்யா, மைசெல்ப் ரோஜா. ஷி இஸ் மை ஹஸ்பண்ட் ராஜேஷ்.”
“நைஸ் டு மீட் யு. ஃபோன்ல பேசும் போது ராஜ்னு சொன்னீங்க, அதான் கொஞ்சம் கன்பியூஸ் ஆகிட்டேன்.” என்றாள் அனன்யா.
“நான் இவரை செல்லமா கூப்பிடும் பேரையே எப்பவும் என்னை மறந்து எல்லா இடத்திலும் யூஸ் பண்ணிடுறேன். நான் தான் இவருக்கு சர்ப்ரைஸா இந்த ட்ரிப்பை ஏற்பாடு செய்தேன்.” என்றாள் ரோஜா.
'முழு பெயரை சொல்லி இருந்தால், உங்களை இந்த ட்ரிப்பில் சேர்த்திருக்கவே மாட்டேன்.’ என்று மனதில் நினைத்தவள் வெளியே, “ ஓகே காய்ஸ் நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. இவர் உங்களை ரூமிற்கு கூட்டிட்டு போவார்” என்றவள் அவர்களுக்கான கீயை தந்துவிட்டு வெளியே சென்றாள்.
ராஜேஷ் தான் அவளை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
'அனன்யாவை இந்த டிரஸ்ல அதுவும் வர்க்கலால பார்ப்பேன்னு எதிர்ப்பார்க்கவே இல்லை. முன்னாள் காதலி ட்ரிப் கைடு பண்ண, மனைவியோடு ஹனிமூன். என் எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது.’ என்று நினைத்தவன் மனைவியோடு லிஃப்ட் ஏறினான்.
கண்ணீரை சிமிட்டி வெளியே தள்ளியவள், இருட்டில் பாதை தடுமாற வெளியே வந்தாள்.
இந்த ஹோட்டலில் பீச் வியூ டின்னர் ஏரியா இருந்தது. அங்கு சென்று அமர்ந்தவளின் மனம் அந்த அரபிக் கடல் போல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. இரவில் கடலின் அலையை பார்க்கவே பயமாக இருந்தது.
அனன்யாவின் மன நிலையும் அதே போல் பயங்கரமாக இருந்தது.
‘இந்த ட்ரிப்பை கேன்சல் பண்ணால் நல்லா இருக்கும்’ என்று அவள் நினைத்த மறு நிமிடமே தலையை உலுக்கி, “ என்னை நம்பி தான் மற்றவர்கள் வந்திருக்காங்க. அவங்களுக்காக நான் இந்த ட்ரிப்பை நல்ல படியாக முடிக்கணும்.” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
கடலை பார்த்துக் கொண்டு இருந்தவளின் மனம் நிதர்சனத்தை யோசிக்க ஆரம்பித்தது, ‘அம்மாவும் லவ் மேரேஜ் தான் பண்ணாங்க. ஆனா அவங்களை வயித்துல ஒரு குழந்தையோடு அந்த ஆள் விட்டுட்டு போயிட்டான். அம்மா அப்போ எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க. அவங்க நினைத்திருந்தாள் எனை தூக்கி போட்டுட்டு போயிருக்கலாம். அவங்க அப்படி செய்யலையே. எனக்காக தான் வாழ்ந்தாங்க.
அவங்களை நினைக்கும் போது என்னோடு இந்த காதல் ஒரு வருடம் தானே. நான் எந்த தப்பும் செய்யலையே. அவன் தான் என்னை ஏமாற்றி வேறு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான். அவனே குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கும் போது. நான் ஏன் அவனுக்கு பயந்து ஓடனும். இதுவரைக்கும் ஓடுனது போதும்.’ என்று முடிவெடுத்தாள்.
கண்ணை துடைத்தவள் நிமிர்வாக உட்கார்ந்தாள், சரியாக அவளின் ஃபோன் இசைத்தது, “ ஹலோ கவின்” என்றவளின் குரலிலே தெளிவு தெரிந்தது.
அவளிடம் பல நாட்கள் கழித்து தெளிவை உணர்ந்தான் கவின், “ அனன்யா… எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன். நீங்க?”
“நல்லா இருக்கேன். உனக்கு எதுவும் பிரச்சினையா?”
“இருந்தது. ஆனா, இப்போ இல்லை. நீங்க எப்படி எப்பவும் நான் கஷ்டப்படும் போது சரியா கால் பண்றீங்க?”
“எல்லாம் காதல் படுத்தும்பாடு”
“என்ன எதுவும் கேட்கவில்லை?”
“ஒன்னும் இல்லை. உன்னோட அன்பிக்கு அவ்வளவு சக்தி இருக்கு. பல மையில் தூரத்தில் நீ இருந்தாலும், ஐ கேன் பீல் யூ”
“தேங்க்ஸ் கவின். எனக்குன்னு இந்த பெரிய உலகத்தில் நீ இருப்பதே பெரிய பலத்தை தருது. ஓகே அன்பரே. இப்ப ஒரு பிரச்சனையும் எனக்கில்ல. ட்ரிப் மெம்பர்ஸ் எல்லாருக்கும் ரிமாண்ட் மெசேஜ் போடணும்.கொஞ்சம் நா பிஸி.அப்புறம் ப்ரியாகிட்டு கால் பண்றேன் கவின். ”என்று கவனிடன் உரையாடலை முடித்தாள்.
உடனே வாட்ஸ் அப்பை திறந்தவள், வர்கலா ட்ரிப் என்ற குரூப்பை திறந்தாள். அதில், “டுமாரோ மார்னிங் 9 ஏ எம் கெட் ரெடி டு கோ டு ஜடாயு எர்த் சென்டர். வேன் வில் பி வெயிட்டிங் இன் பார்க்கிங் ஏரியா டு பிக்கப் யூ” என்ற மெசேஜை அனுப்பியிருந்தாள்.
அந்த மெசேஜை பார்த்த பின் தான் இருவரின் மனம் அமைதியானது.
“ஐ வில் ஜாயின் நியூ டைரக்ட்லி அட் ஜடாயு எர்த் சென்டர்” என்று மெசேஜை அஸ்வின் அனுப்பியிருந்தார்.
“ஓகே அஸ்வின்” என்று பதில் தந்திருந்தாள் அனன்யா.
*****
காலையில் சொன்ன நேரத்திற்கு சரியாக தயாராகி வேன் அருகே வந்து நின்றாள் அனன்யா.
முதல் ஆளாக மிஸ்டர் அண்ட் மிஸஸ் ராஜ் வந்திருந்தனர். ரோஜா அங்கிருந்த பூச்செடிகளின் முன் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்க. அனன்யாவை பார்த்தக் கொண்டே மனைவியின் கவனம் கலையாமல் அவளை நெருங்கினான் ராஜேஷ்.
ஒரு நொடி தயங்கினாலும், அவனை தைரியமாக எதிர்கொண்டாள் அனன்யா.
“உன்னை… நான் இங்கு எதிர்ப்பார்க்கவே இல்லை அனு” என்றான் ராஜேஷ்.
அவனிடம் பதில் சொல்ல அனன்யா விரும்பாததால், அமைதியாக இருந்தாள்.
“நீ இந்த மாதிரி டிரெண்டியா டிரஸ் பண்ணி நான் பார்த்ததே இல்லை. அதுவும் தனியா வேற ஸ்டேட்க்கு வந்து ட்ரிப் ஆர்கனைஸ் பண்ணுவன்னு கனவில் கூட நினைத்ததில்லை. எப்போ பாரு அம்மா… அம்மான்னு சொல்லிட்டே இருப்ப. இப்போ என்ன உங்க அம்மா இல்லைனு, உன் இஷ்டத்துக்கு இருக்கீயா.”
அவனை கோபமாக பார்த்தவள்,” தேங்க்ஸ் என்னை ஏமாற்றி வேறு பெண்ணை கல்யாணம் செய்ததுக்கு. உன்னை மாதிரி கீழ்த்தரமான எண்ணம் உள்ளவனோடு என்னால் கண்டிப்பா வாழ்ந்திருக்க முடியாது. நான் தப்பித்தேன்.”
“ராஜ்…” என்ற ரோஜாவின் குரலில் இருவரின் பேச்சும் நின்றது.
“என்ன ரோஸ்?” என்றான் ராஜேஷ்.
“நம்ம சேர்ந்து பிக் எடுக்கவே இல்லையே”
“சரி வா நம்ம செல்ஃபி எடுத்துக்கலாம்.”
“நோ ராஜ்.” என்றவள். ஃபோன் பார்த்துக் கொண்டிருந்த அனன்யாவை பார்த்தவள், ”அனன்யா… எங்களை ஒரு ஃபோட்டோ எடுத்துதர முடியுமா.”
'முடியாது போடி' என்று சொல்ல நினைத்தாலும், அவளிடமிருந்து ஃபோனை வாங்கி ஃபோட்டோ எடுக்க தயாராக நிற்க, இருவரும் அணைப்பது, முத்தமிடுவது போன்ற போஸ் குடுக்க. அதை ஃபோட்டோ எந்தவித உணர்வுமின்றி எடுத்துக் கொண்டிருந்தாள் அனன்யா.
ராஜேஷ் அனன்யா வருத்தப்படுவாள், அழுவாள் என்று எதிர்பார்த்தான்.
இடையில்“ஹே பியூட்டி… வீடியோவை விட நேரில் இன்னும் அழகாக இருக்கீங்க” என்று உற்சாக குரலில் இடையில் நுழைந்தான் ஹரிஷ்.
“டேய்… அவங்க உன்னை விட பெரியவங்க. கொஞ்சம் அடக்கி வாசி” என்றாள் ரோஷினி.
“சோ… வாட்” என்றவன் அனன்யாவை நோக்கி கை நீட்ட.
கிடைத்த வாய்ப்பை பற்றிக் கொண்ட அனன்யாவும் ஃபோனை ரோஜாவிடம் தந்துவிட்டு, ஹரிஷ் பக்கம் திரும்பினாள்.
“ஹாய். ஐ அம் அனன்யா.”
“ஹாய் அனன்யா. ஐ அம் ஹரிஷ்.” என்றவன் அவனின் நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தான்.
“வெல்கம் டு வர்கலா. நைஸ் டு மீட் யு ஆல். சரி எல்லோரும் வண்டியில் ஏறுங்க” என்றாள் அனன்யா.
முதல் ஆளாக ரோஜா ஏறி, தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டாள்.
“எல்லோரும் வந்தாச்சா… ‘’ என்றபடி பார்த்தவளுக்கு அப்போது தான் மிஸ்டர் ஜெய் ஃபேமிலி இன்னும் வராதது தெரிந்தது.
“நைட்டே ஜெய் ஃபேமிலி ஹோட்டலுக்கு வந்துட்டதா மெசேஜ் பண்ணாரே.” என்று தனக்குள் பேசிக்கொண்டே அவருக்கு கால் பண்ண.
“ஹலோ அனன்ய்யா… சாரி நைட் லேட்டா வந்ததால் கொஞ்சம் லேட்டா தான் எழ முடிஞ்சது. டென் மினிட்ஸ்ல அங்கு இருப்போம்.” என்றார் ஜெய்.
“ஓகே ஜெய். கொஞ்சம் சீக்கிரமா வாங்க.”
“இன்னும் எவ்வளவு நேரம் வைட் பண்றது?” ரோஜா.
“டென் மினிட்ஸ் தான் மிஸ்டர் ஜெய் ஃபேமிலி மட்டும் வரணும்.” அனன்யா.
“ஒரே ஸ்வெட்டிங்கா இருக்கு” என்று அழுத்துக் கொண்டாள் ரோஜா.
டிரைவர் அருகே சென்ற அனன்யா ஏதோ சொல்ல. கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு ஏசி ஆன் ஆனது.
அனன்யா வெளியே தான் நின்றுக் கொண்டிருந்தாள். சொன்னது போல் பத்து நிமிடத்தில் அவர்கள் வந்துவிட. அவர்களை ஏற்றிக் கொண்டு வண்டி செல்ல ஆரம்பித்தது. ட்ரிப்புக்கு புக் பண்ண எல்லோரும் அவரவருக்கு பிடித்த இடத்தில் உட்கார்ந்திருப்பதை பார்த்த பின் பெருமூச்சோடு அனன்யா திரும்ப.
அவள் முன் கர்ச்சீப்பை நீட்டிக் கொண்டிருந்தான் ஹரிஷ், ” உங்களுக்கு ரொம்ப ஸ்வெட்டாகுது. இது புது கர்ச்சீப் தான்” என்றான்.
சிறு புன்னகையோடு அதை வாங்கிக் கொண்டவள், எங்கு உட்காரலாம் என்று தேடிக் கொண்டிருக்க.
“என்னோடு உட்காருங்க ப்ளீஸ்” என்றான்.
அவனின் செயல்கள் எல்லாம் விளையாட்டுத்தனம் மாறாத தம்பி செய்வது போல் இருக்க. அவன் அருகில் உட்கார்ந்துக் கொண்டாள் அனன்யா.
“அனன்யா… ஒன்பது மணின்னு சொன்னீங்க இப்போ டைம் ஒன்பது - முப்பது. முதல் நாளே இப்படியா?” என்றாள் ரோஜா.
“சாரிங்க…” என்று ஜெய்யின் மனைவி கனி ரோஜாவிடம் மன்னிப்புக் கேட்டாள்.
ரோஜா பதில் எதுவும் சொல்லாமல் மறுப் பக்கம் திரும்பினாள்.
“சாரிங்க… அனன்யா” என்றாள் கனி.
அவளை திரும்பி பார்த்தாள் அனன்யா. அவசரமாக கிளம்பி இருக்காங்க என்பதை அவரின் தோற்றத்தை பார்த்த உடனே புரிந்துக் கொள்ள முடிந்தது. வண்டியில் ஏறிய இரண்டு நிமிடத்திலே இவர்களின் இரட்டையர்கள் சரியான வால்கள் என்பதும் புரிந்து போனது அனன்யாவிற்கு.
“ட்ரிப்ல இதெல்லாம் சாதாரணம். இப்படி லேட்டாகும் தெரிந்து தான் நான் கொஞ்சம் முன்னாடியே கிளம்பிற மாதிரி டைம் சொன்னேன். ஜடாயு எர்த் சென்டர் திறக்க பத்து மணி ஆகும். நாம அதுக்கு முன்னாடியே ரீச் ஆகிடலாம். சோ நோ ப்ராப்ளம். இங்க யாரோட ட்ரிப் டைமும் வேஸ்ட் ஆகாது. சோ நீங்க கில்டியா பீல் பண்ணாம ட்ரிப் ஐ என்ஜாய் பண்ணுங்க சிஸ்டர்” அனன்யா.
அதன்பின் தான் கனியின் முகத்தில் சிறு புன்னகை தோன்ற, இயல்பாகினாள்.
அதன் பின் வேனில் அமைதி நிலவியது. அதை பொறுத்துக் கொள்ள முடியாத ஹரிஷ், “ பிரண்ட்ஸ் நாம என்ன விண்வெளியில் ராக்கெட் விடவா இஸ்ரோவுக்கு போறோம். இவ்வளவு சீரியஸா வரீங்க. ஒரு நாள் ஐவிக்கு போனாலே நாங்க என்ன ஆட்டம் போடுவோம். டேய் மச்சி பென்டிரைவ் எடு. பாட்டு போட்டா தான் வைப் மாறும்.” என்றான்.
அவன் கேட்ட பென்டிரைவை தந்த ஈஸ்வரை பிடித்துக் கொண்டான். டிரைவரிடம் தந்து விட்டு வந்தவன். பவழ மல்லி பாட்டு ஓட ஆரம்பிக்க, இருவரும் சேர்ந்து ஆட ஆரம்பித்தனர்.
பின் அவர்களோடு கனி இரட்டையர்கள் தேவ், தியா என ஒவ்வொருவராக இணைந்துக் கொண்டனர்.
அடுத்ததாக தீபக், சுவாதி, ரோஷினி இணைந்துக் கொள்ள. அந்த இடமே கலகலப்பாக மாறியது.
அனன்யா, ஜெய் - கனி எழுந்த ஆடவில்லையே தவிர, மூவரும் சீட்டில் உட்கார்ந்துக் கொண்டு உடலை லேசாக அசைத்துக் கொண்டும், மனதிலேயே ஒரு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.
இவர்களோடு இணையவும் விரும்பாது, இவர்களின் சந்தோஷத்தையும் ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் ரோஜா, “இப்படியா சத்தமாக பாட்டுப் போட்டு, அடுத்தவங்களை தொந்தரவு செய்துட்டு வருவீங்க?” என்றாள்.
அனன்யா பதில் சொல்லும் முன்.
“பியூட்டி… நான் அவங்களுக்கு பதில் சொல்லவா?” என்றான் ஹரிஷ்.
சின்ன சிரிப்போடு அனன்யா தலை ஆட்ட.
“ரோஜா ஆன்ட்டி இந்த மாதிரி குரூப்பா ட்ரிப் போகிறதே. மற்றவர்களோடு இணைந்து, விட்டுக்கொடுத்து, சமாதானமாக, புது உறவை உருவாக்கிக்க தான். ட்ரிப்ல இப்படி டான்ஸ் ஆடாமல், வேறு எங்க இப்படி என்ஜாய் பண்ண முடியும் சொல்லுங்க. இப்படி கஷ்டப்பட்டு யாரு உங்களை குரூப் ட்ரிப்க்கு வர சொன்னது? நீங்களும் உங்க ஹஸ்பண்டும் மட்டும் தனியா போக வேண்டியது தானே” என்றான்.
அவன் சொன்ன ஆன்ட்டியிலே ரோஜா கடுப்பாக உட்கார்ந்திருக்க. அதன்பின் வேறு பேச்சு பேச விரும்பாமல் ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள்.
நாகரிகம் கருதி ராஜேஷ் தான், “சாரி காய்ஸ் யூ கேரி ஆன்” என்றான்.
அதன்பின் பயணம் ரோஜாவை தவிர அனைவருக்கும் இனிமையாக சென்றது. அனன்யா சொல்லியது போல் ஜடாயு எர்த் சென்டரிக்கு சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தனர்.
கீழே முதலில் இறங்கியது அனன்யா தான். பின் ஒவ்வொருவராக கீழே இறங்கினர்.
“காய்ஸ் மேலே போக கேபிள் கார், வாக் வே இரண்டு ஆப்ஷன் இருக்கு எப்படி போகலாம்?” என்றாள்.
“இந்த வெயில்ல நடக்க முடியாது கேபிள் கார்.” என்றாள் ரோஜா.
“வாக் வே இல் போன புது அனுபவமாக இருக்கும்” என்றான் ஈஸ்வர்.
“இந்த பசங்களோடு…” என்று வாய் உள்ளே திட்டிக் கொண்டிருந்தாள் ரோஜா.
“ஓகே சைலன்ட் ப்ளீஸ். இது பப்ளிக் பிளேஸ் சோ எல்லாரும் சரியா பிகேவ் பண்ணுங்க. கேபிள் கார்ல போக விருப்படுறவங்க தனியாக லெஃப்ட் சைடு வாங்க. வாக் வேல வர விருப்படுறவங்க ரைட் சைடு வாங்க. அவங்க அவங்களுக்கு பிடித்ததிலே வாங்க, நான் டிக்கெட் வாங்கிடுறேன்.” என்றவள் எண்ணிக் கொண்டே, ‘இன்னும் ஒரு ஆள்?’ என்று யோசனையோடு திரும்ப.
அந்த இடத்தில் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
அவனின் தோற்றத்தை பார்த்ததுமே, அவளின் காதிற்குள், “ பார்ககவே நல்ல உயிரமா, அதுக்கு ஏற்ற எடையோடு, கம்பீரமா, ஃபேரி டேல் ஹீரோ மாதிரி இல்லாமல் நம்ம மூவேந்தர்களின் இளவரசர் போல் ஒருத்தன் உன் முன்னாடி வந்து நின்னா. உனக்கு கல்யாணம் பண்ணிக்க தோன்றாமல் இருக்குமா என்ன?” என்று அவள் அன்னை கவியரசியின் குரல் காதருகே கேட்டது.
Author: Vishakini
Article Title: நயவனின் நயவள் இவளோ - 2
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நயவனின் நயவள் இவளோ - 2
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.